Latest Episode என்னை மறந்தவளே 33

mila

Author
Author
#1
அத்தியாயம் 33

மீரா கண்விழித்த போது மாலை மங்கியது போல் அறை இருட்டாக இருந்தது ஜன்னல் கதவு மூடி இருக்க ஜன்னல் திரைசீலை போடப் பட்டிருப்பதாலும் வெளியே மழை கொட்டிக் கொண்டிருப்பதாலும் அறை மாலை வேலை போல் இருந்தது. அறையை சுற்றி முற்றி பார்க்க ஒன்னும் புரியவில்லை தலை வேறு கனத்து பாரமானது போல் வலிக்க ஆரம்பித்தது. தலையை தொட கட்டு போடப்பட்டிருந்தது.

மெதுவாக கண்ணை திறந்து எழுந்து அமர்ந்தவளுக்கு தான் வண்டியில் மோதியது நியாபகத்தில் வந்தது "நா எங்க இருக்கேன்" எழுந்து கதவருகில் செல்ல தெம்பில்லாதவளாக கண்ணை மூடி யோசிக்க காலேஜில் இந்த ஆண்டு இறுதி நாள் சைதன்யனை பார்த்து தன் மனதில் மறைத்து வைத்திருக்கும் காதலை சொல்லியே ஆகா வேண்டும் இன்றோடு அவன் காலேஜை விட்டு சென்று விடுவான் என அவனை காணச்சென்றாள்.

அவனை கானவென காத்திருந்தவள் மழை பொழியத் தொடங்கவே கையிலிருந்த பையை அணைத்தவாறே அவனுக்காக கட்டிடத்தின் கீழ் நனையாத வாறு நின்றிருந்தாள். இருந்தும் மழைத் தூறல் அவளை உரசிச்சென்றன.
வெகு நேரமாகியும் சைதன்யன் வெளியே வராததால் கவலையடைந்தவள் அவனை சந்திக்காது செல்ல நேரிடுமோ என அஞ்சியவளாக காத்திருக்க மழையின் குளிர் தாங்காது நடுநடுங்க ஒரு கப் காபி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என காண்டீனை நோக்கி குடை பிடித்தவாறே நடந்தாள்.


மீரா வரும் போது சைதன்யன் மழையில் நடந்த வாறே அவனுடைய பைக்கை நோக்கி கோவமாக சென்று கொண்டிருந்தான். அதை அறியாத மீரா மழையையும் பொருட் படுத்தாது குடையை மடித்தவள் தன் காதலை சொல்ல அவனிடம் ஓடினாள்.

காலேஜில் இறுதி நாள் என்பதால் நண்பர்கள் அனைவரும் சிரித்துப் பேசி கதையடித்துக் கொண்டிருக்க நவீன் ட்ரைனுக்கு டைம் ஆனதால் கிளம்ப குணால் ரேஷ்மாவை தனியாக பேச வென தள்ளிச்சென்றிருக்க கவிதா சைதன்யனை ஏக்கப் பார்வை பாத்திருந்தாள்.

காலேஜில் சேர்ந்த நாளிலிருந்து கவிதா சைதன்யனை காதலிக்க ஆரம்பித்தாள். அவனின் அலட்டலில்லா அழகும் பெண்களிடத்தில் ஒதுங்கிப் பழகும் குணமும் அவளை ஈர்க்க எப்போது காதல் வயப்பட்டால் என்று அவளே அறியவில்லை அதை அவனிடம் சொன்னால் நிச்சயமாக தன்னை ஒதுக்கி விடுவான் என அறிந்தவள் யாரிடமும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் அவனை காதலிப்பதை சொல்லவுமில்லை காட்டிக் கொள்ளவுமில்லை.
கடைசி வருடம் செல்கையில் தான் மீரா வந்து சேர்ந்தாள். அவளிடம் சைதன்யன் காட்டும் கரிசனம் மீராவின் மேல் வெறுப்பை உதிர்த்தாலும் மீராவை வார்த்தையால் சாடவில்லை. அன்பாக நெருங்கி பழக்கவுமில்லை மீராவின் கண்ணில் சில கணம் சைதன்யனின் மேல் காதல் இருப்பது போல் தோன்றினாலும் சைதன்யன் அவளை சிறு குழந்தை போல் நடத்துவதனால் அதை கருத்தில் கொள்ளவில்லை.


அவன் தன்னை என்றுமே காதலிக்கப் போவதுமில்லை. இன்று சொல்லவில்லையென்றால் என்றுமே தான் அவன் மேல் கொண்ட காதலை சொல்லப் போவதில்லை காதலை சொல்லாமல் தவிப்பதை விட சொல்லி விடுவதே போதுமானதென்று முடிவெடுத்தாள்.

சைதன்யனை நெருங்கி நின்றவளை ஒரு பார்வை பார்த்தவன் இரண்டடி தள்ளி நின்று தனது பையை கையில் எடுத்து கிளம்ப எத்தனிக்க "தனு ஒரு நிமிஷம் ஐ வாண்ட் டு டெல் யு சம்திங்" கூந்தலை ஒதிக்கியவாறே வெக்கப்பட கவிதாவை ஒரு புரியாத பார்வை பார்த்தவன் புருவம் உயர்த்தி என்ன வென கேக்க அதில் மயங்கியவள்

"ஐ லவ் யு தனு" என்று மேலே பேசமுன் கை நீட்டி தடுத்தவன் "கடைசியில் உன் புத்திய காட்டிட இல்ல பிரெண்டா பழகினா இப்படி தான் மேல வந்து விழுவியா" அவள் அவனை நெருங்கி நின்றதை சுட்டிக் காட்ட ஏதோ அவள் கேவலமான பெண்போல அவன் மேல் விழுந்ததாக அவன் பேசுவதாக எண்ணியவள் அவன் தனது காதலை எக்காலமும் ஏற்க்க மாட்டான் என்று நன்றாக தெரிந்தும் அவனை அடையும் வெரி வரவே "எவெரிதிங் பிஆர் லவ் அண்ட் வார்” என்றவள் உடனே கொஞ்சும் குரலில் “என் காதலுக்குகாக என்னையே கேட்டாலும் நா தருவேன்" மேலும் அவனை உரசியவாறே நெருங்கி நின்று கண்களில் எதிர்பார்ப்போடு கேட்டாள்.

அருவருப்பாக அவளை பார்த்தவன் "கண்ட சாக்கடைல எல்லாம் விழுந்து எந்திரிக்கிறவன் நானில்ல" சூடாகவே பதில் வர அவளை சாக்கடை என்றதும் "அப்போ அவ தான் உனக்கு பன்னீரா அவ பின்னாடியே சுத்தி கிட்டு இருக்க” எவ என்று யோசித்தவன் மீராவைத்தான் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவன்

"அவளை பத்தி பேசாத பேச உனக்கு அருகத்தையுமில்ல"என கர்ஜிக்க கேலிச் சிரிப்பினூடே " எத்தன தடவ விழுந்து எந்திரிச்ச இல்ல இல்ல எத்தன தடவ பன்னீர் குளியல்" சைதன்யன் மீராவை காதலிக்கிறானா? என்று அவளுக்கு தெரிந்தே ஆகா வேண்டி இருந்தது "தட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் " இவ்வளவு நாளும் நட்பாய் இருந்தவள் நடந்து கொண்ட விதம் சொல்லிலடங்கா கோவத்தையும் வெறுப்பையும் உண்டாக்க கதவை அடைத்தவாறே நின்றிருந்தவளை தள்ளி விட்டு வெளியேசென்றான்.

அவனிடம் தப்பாக பேசியதுமில்லாது மீராவை பத்தி தப்பாகவும் பேசியதால் எரிமலையாய் கொதித்துக் கொண்டு வெளியே வந்தவனை மீரா ஓடி வந்து பைக்கின் முன் பாய்ந்து மூச்சு வாங்க அவளை கண்டு புன்முறுவல் பூத்தவன் பணியில் நனைந்த பன்னீர் ரோஜா போல் மழையில் நனைந்திருந்தவளை அவனையறியாமலேயே ரசித்தான்.

"ஹப்பா இப்போவாச்சும் வெளிய வந்தீங்களே! எங்க உங்கள பாக்காம போய்டுவேனோனு பயந்துட்டேன்" சொல்லியவாறே மூச்சு வாங்க "அதான் பாத்திட்டியே இன்னைக்கி மூட் ஆப் நாளைக்கு பார்க்கலாம்" அவன் சொன்னது மழையின் காரணமாக காதில் விழவில்லையோ காதலை சொல்லனும் என்று வந்த பதைபதைப்பில் உணரவில்லையா என்னவோ “நாளை” என்றது கேட்காமாலையே போய் விட்டது.

"இருங்க இருங்க நா சொல்ல வந்தத சொல்லிடுறேன்" மழை தூரல் அவளின் மேல் விழ குளிரில் உதடுகள் தந்தியடிக்க அவனை காதல் பார்வை பார்த்தவளை "சீக்கிரம் சொல்லு' என்று அவசர படுத்த "சையு எனக்கு எனக்கு" என்று தடுமாற கவிதா சொன்னது நியாபகத்தில் வர "என்ன என்னை லவ் பண்ணுறியா" என்று கேலியாக கேட்டான்.
அவனை ஆச்சரியமாக பார்த்தவள் ஆமாம் என்று மேலும் கீழும் வெக்கப் புன்னைகையுடன் தலையசைக்க இவ்வளவு நேரமாக இருந்த இதம் மாற அவளை முறைத்தவன் "விளையாடாதே கியூடிப்பை"


"ஐம் ரியலி சீரியஸ் சையு ஐ ரியலி லவ் யு" இவ்வளவு நேரமும் தமிழில் பேசியவள் ஆங்கிலத்துக்கு மாற "தமிழ்ல சொன்னாலும் ஆங்கிலத்துல சொன்னாலும் ஒரே பதில் தான்" கடுப்பாகி சிடுசிடுக்க "சத்தியமாக சையு"என தலையில் கைவைத்து சொல்ல அவள் சிறுகுழந்தை போல் புரியாமல் பேசுவதாக எண்ணியவன் "போதும் நிறுத்து எத்தன பேர் கிளம்பி இருக்கீங்க ஒருத்தன் பாக்க அழகாகவும் படிச்சவனா பணக்காரனா இருந்தா போதுமே உடனே லவ் னு சொல்லிடுவீங்களோ!" அவனின் கோப முகம் அவள் மனதை சில்லிட வைத்தது
அவனின் பெயரையும் படிக்கும் காலேஜையும் மாத்திரம் அறிந்து அவனை தேடி வந்தவளிடம் இப்படி பேச சட்டென்று கண்கள் கலங்கியது அந்தோ பரிதாபம் கண்ணீரா? மழைநீரா? அவன் கண்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை போலும்


"லூசு மாதிரி பேசிகிட்டு போ போய் படிக்கிற வேலையாய் பாரு" வண்டியை கிளப்ப தொடங்க "நா என்னை செய்யணும்" காதலை புரியவைக்க என்ன செய்யணும்னு என்ற அர்த்தத்தில் அவள் அழுத வாறே கேட்க கவிதா சொன்னது தருணத்தில் நியாபகம் வந்தது விதியோ?

"என் கூட படுப்பியா? அதுக்கு கூட தயங்க மாட்டிங்களே! காதல் னு சொல்வீங்க அப்பொறம் எதுக்கும் தயாராக தான் இருக்கீங்க சரியான உசார் பாட்டிங்க டி நீங்க, பணம் வசதி இருக்குற பையன வளைச்சு போட எந்த எல்லைக்கும் போவீங்களே! அப்படி என்ன உங்களுக்கு பணத்தாசை இதுக்கு பேசாம உடம்ப வித்து பொழைங்க" தகாத பெண்களிடம் சிக்குண்டு அல்லல் படாமல் இருக்க எல்லா பெண்களையும் ஒதுக்க பரம்பரை பரம்பரையாய் அவனுக்கு சொன்ன பாடம் மீராவை ஒதுக்க வார்த்தையால் சாடி எங்கயோ எரிந்த நெருப்பை இவளின் மேல் கொட்டினான்.

காதல் என்ற வானில் சிறகு விரிக்க பயப்படும் குஞ்சிடம் பருந்து போல் வேட்டையாட காத்திருக்கிறேன் என்பதை போல் அவன் சொன்னது அந்த சின்ன இதயத்தை குத்திக் கிழிக்க கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் பெருகி அவன் விம்பமும் தெளிவில்லாது போனது
அழும் அவளை பார்த்தவன் மனம் இளக


"நாளை காலை பத்து மணிக்கு என் வீட்டுக்கு வா" என்றவன் வண்டியை கிளப்பி இருந்தான். அவன் சொன்னது பொறுமையாக பேசிக் கொள்ளலாம் என்ற அர்த்தத்தில் அவளோ அர்த்தம் கொண்டது அவளை இரையாக்க அழைப்பு விடுத்ததாக. .
அதன் பின் அவளை சந்திக்கும் சூழ்நிலை அவனுக்கு அமையவுமில்லை அவளிடம் பேசிய விதத்தை அவளின் நன்மைக்காக என்று தன்னை தேற்றுக் கொண்டான். அவளின் மீது காதல் கொண்ட அவன் மனம் இன்றைய அவளின் நிலைக்கு அவன் பேசியது தான் காரணம் என்று சொல்ல முழுதாக உடைந்தான்.
அவன் செல்வதை அழுத்தவாறே ஆணியடித்ததை போல் அந்த இடத்திலேயே நின்றவளை தொட்டது ஒரு கரம்.


திரும்பிப் பார்த்தவள் அவசர அவசரமாக கண்களை துடைத்து புன்னகைக்க முயல அவளை பார்த்து கவலையான குரலில் "நா நாலு வருசமா அவன காதலிக்கிறேன் என்னையே அவன் கிட்ட பல தடவ கொடுத்தும் இருக்கேன் ரெண்டு தடவ கருக்கலைப்புக்கு செஞ்சேன் அவன் நல்லவன் என்று ஏமாந்துட்டேன்" என்று தலையில் அடித்தவாறே கவிதா அழ பேச்சின்றி போனாள் மீரா.

"நல்ல வேல நீ தப்பிச்ச..." இன்னும் என்னவெல்லாம் சொல்ல முயன்றாலோ மீரா மயங்கிச்சரிந்தாள்.

சைதன்யன் தள்ளிச் சென்றதும் கோபத்தில் வெகுண்டு எழுந்து வந்தவள் மீரா சைதன்யனிடம் தன் காதலை சொன்னதும் அவன் மறுத்ததும் திருப்தியாக இருந்தாலும் சைதன்யன் நெருங்கி பழகிய ஒரே பெண் மீரா என்பதால் அவளை காய படுத்தவே சைதன்யனை பற்றி தவறாக பேச மீரா மயங்கியதை கண்டு பயந்தவள் சுற்றும் முறும் பார்த்து யாரும் தன்னை கவனிக்கவில்லை என்றதும் இடத்தை காலி செய்தாள்.
images (1).jpg


சைதன்யன் பேசிக் சென்றதையும் கவிதா சொன்னதை கேட்டு தன் காதல் பொய்த்துப் போனதை தாங்காது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனதோடும் மூளையோடும் போராடியவள் தாங்க முடியாமல் மூளை அதிர்ச்சியடைந்து மீரா மயங்கி விழுந்ததுதான் பகுதியளவு மறதியால் பாதிப் படைந்து எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ கண்விழித்தவள் மரத்தை சுற்றி வளையம் போல் கதிரை அமைத்திருந்த இடத்தில் அமர்ந்தவாறே விழுந்து இருக்க தான் ஏன் இங்கு இருக்கோம் என்று யோசிக்க சைதன்யனை சந்திக்க வந்தது நியாபகத்தில் வர அவனிடம் பேசியது மறந்து போய் இருந்தது கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தவள் மூன்று மணி நேரம் கடந்திருக்க "இங்கயே தூங்கிட்டேனா?" என்று குழம்பியவாறே அவன் சென்றிருப்பான் நாளை கண்டிப்பாக சந்திக்க முயற்சி செய்யவேண்டும் என்று நினைக்க

அதிக நேரம் மழையில் நனைந்தால் மேனி ஜில் என்றிருக்க ஜுரம் வருவது போல் இருந்தது. மெதுவாக நடந்தவள் சைதன்யன் பேசியது போலும் கவிதா பேசியது போலும் மாறி மாறி தோன்ற எங்கே போகிறாள் என்றறியாது கால் போன போக்கில் சென்றாள் ஒரு வளைவில் ஜுரத்தில் சுயநினைவில்லாது பாதையை கடக்க ஏதோ ஒரு வண்டியில் மோதி தூக்கி வீசப்ப பட்டாள்.

சட்டென்று கண்ணை திறந்தவளுக்கு பழையவை தெளிவாக நியாபகத்தில் இருந்தது.
மெதுவாக எழுந்து அறையின் விளக்கை போட்டவள் அறையை அலச கடிகாரத்தை பார்த்தவள் அதிர்ந்தாள் நேரம் மட்டுமில்லாது வருடம் மாதமென அது காட்ட எக்சிடெண்ட் வரை நடந்தவை நியாபகத்தில் இருக்க மற்றவை {அதன் பின் நடந்தவைகள் } மறந்து போய் இருந்தது.


கட்டில் மேசையில் தண்ணீர் கோப்பை இருக்க மட மட வென அருந்தியவள் தன்னை ஒருநிலை படுத்த கண்ணாடியில் அவளது உருவம் தெரிய அதிர்ந்தாள்.
09-1486646549-3-anika.jpg


அவளின் கழுத்தில் பொன்தாலி மின்ன அதை கையில் ஏந்தியவள் அதை அவளின் கழுத்தில் கட்டியவன் யாரென குழம்ப கதவை திறந்துட் கொண்டு ஷரப் சௌதகர் ஹாய் பாபி {அண்ணி} என்று சொல்ல பார்பி {பார்பி பொம்மை} என்று அவள் காதில் விழுந்தது விதியின் சாதியோ!
"நீங்க தான் என் கணவனா?" அப்பாவி குழந்தைப் போல் கேட்க புருவம் உயர்த்தி குரூரமாக புன்னகைத்தான் ஷரப் சௌதாகர்.
 
Last edited:

Advertisements

Top