என்னோடு நீ உன்னோடு நான் - 10

#1
Chapter 10:

“அவனை கூப்பிடுவதா ஐயோ அவன் பெயர் என்னமோ சொன்னானே, இல்லை இவர்களிடம் இருந்து எப்படி தப்பிச்செல்வது என்று யோசிப்பதா” என்று அவள் முடிவெடுப்பதற்குள், அவள் என்ன செய்கிறாள் என்று திரும்பி ஆதி பார்க்க

கோவிலில் அவளை குத்த வந்த அதே ஆட்கள் வருவதை பார்த்துவிட்டு அதிர்ந்தவன், முதலுதவி கிட்டில் இருந்த சின்ன பாக்கெட் கத்தியை எடுத்துக்கொண்டு அவள் அருகே சென்றான்.

இவன் அங்கே வருவதை பார்த்த இருவரில் ஒருவன் அவனிடம் மறைத்து வைத்திருந்த இருந்த ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு நிலாவை நோக்கி சென்றான். மற்றொருவன் ஆதியை பார்த்துக்கொண்டே நெருங்கினான்.

இருவரும் பிரிந்து தாக்கப்போவதை அறிந்த ஆதி அவள் முன்னே அவளை மறைத்து பாதுகாப்பதுபோல் நிற்க இருவரும் ஓடி வந்து ஆதியை தாக்கினர்.

அவனிடம் இருந்த சிறு கத்தியால் ஒருவனை அங்கும் இன்றும் கீறிவிட்டான். அதற்குள் இன்னொருவன் அவளை நெருங்கி கட்டையால் அடிக்க முற்படும் போது ஆதி தடுக்க முயற்சிக்க மற்றொருவன் கத்தியால் ஆதியை தாக்க வந்தான்.

ஆதி குனிய, அந்த அடியாளின் கத்தி ஆதி கையை கிழித்து சென்றது. அவன் தடுமாறி கிழே விழ, அந்த நொடி இனொருவன் அவளை கட்டையால் அடிக்க ஆதியை கடந்து அவளிடம் சென்றான்.

ஆதி விழுவதை பார்த்தவள் " ஐயோ" என்று விழப்போனவனை குனிந்து தாங்க, அடிக்க வந்தவன் குறி தப்பி, தலையில் அடிப்பதற்கு பதில் அவளின் தோற்பட்டையில் அடித்தான்.

அவள் “ஆஹ்" என்று அலற. அதை பார்த்த ஆதி சுதாரித்துக்கொண்டு அந்த இருவரையும் பலமாக தாக்க முயற்சிதான். இருவரும் அவனிடம் மல்லுக்கட்டினர். அவன் கையில் ரத்தம் பீறிட்டது.

அவனிடம் இருந்த கத்தியை வைத்து அவர்களை பலமாக கீற ஒருவன் கட்டையை கிழே போட்டான்.

“அத எடுத்து அவனை அடி” என்று அவன் சொன்னதை கேட்டவள், உடனே கட்டையை எடுத்து என செய்வது என்று யோசிக்க "மண்டைல அடி" என்று கத்தினான்.

அவள் கட்டையால் தாக்க, ஆதி அந்த சின்ன கத்தியை பிரயோகப் படுத்தி இருவரையும் தாக்க, இருவரும் அங்கிருந்து ஓடினர்.

அவர்கள் ஓடியப்பின், திரும்பியவன் பதட்டமாக அவளிடம் வந்து “ஹே உன்னக்கு ஒன்னும் இல்லையே” என்று கேட்க "உங்க கைல ரத்தம்" என்று பதறினாள். அவன் மற்றொரு கையால் அதை அழுத்தி பிடித்துக்கொண்டு

“இங்க பாரு. இந்த இடம் உனக்கு அவளோ பாதுகாப்பானதா இல்ல. நீ எங்கப்போகணும்னு சொல்லு. நான் உன்ன அங்க இறக்கி விட்டுடறேன். நீ தனியா இங்க இருக்கறதெல்லாம் கஷ்டம்” என்று சொல்லிக்கொண்டு கார் அருகே போக முயற்சிதான். அந்த சண்டையில் அவர்கள் அவன் காலில் அடித்திருப்பார்கள் போல.

அவனால் நடக்க முடியவில்லை. அவள் அவன் அருகில் வந்து ஒரு கரத்தால் அவன் வலதுகையையும் இன்னொரு கரத்தால் அவன் இடையையும் பிடித்து நடக்க உதவி செய்தாள் அவள் வலியையும் பொருட்படுத்தாமல்.

“நான் இங்க முக்கியமான வேலைய வந்துருக்கேன். அந்த கிராமத்துக்கு போய் ஆகணும். பதிலா விட்டுட்டுப் போக நான் இத ஆரம்பிக்கல. அப்பறம் உங்களால அங்க அந்த க்ராமத்துலயெல்லாம் என்ன விட முடியாது” என்றாள்.

அவள் பிடியில் இருந்தவன் “வேலையா வந்துருக்கேன்னா? திரும்பவும் ஏதோ உதவி பண்ண வந்துருக்காளோ. நேத்து அங்க இன்னிக்கி இங்க. இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் சினிமால தான் பாத்துருக்கேன். ஹ்ம்ம் சான்ஸ்ஸே இல்ல. Brave and Beautiful” என்று நினைத்தவன்

“திரும்பி அவளை பார்க்க, அவன் தோள் வரை இருந்தாள். கலைந்த அவளுடைய கூந்தல். அந்த காந்த கண்கள். செவ்விதழ்கள். அழகிய அந்த முகம் அதில் சிறிய பதட்டம். நெற்றில் அங்கங்கே வேர்வை துளிகள்”

“ஒரு வேல கல்யாணம் ஆயிடுச்சோ. காலில் கட்டு போடும் போது பார்க்க தோன்றவில்லை” என்று நினைத்தவன் உடனே அவள் கால்களை பார்த்தான். மெட்டி இல்லை. ஒருவேளை வேறு மதம்?” என்று அவன் மனம் அலைபாய

"ச்ச நான் என்ன யோசிச்சுட்டு இருக்கேன். இதுக்கா இங்க வந்தேன்.” என்று தன்னை தன்னிலைக்கு கொண்டுவந்தான்.

அவள் கார் அருகே அவனை கூட்டிவர “தேங்க்ஸ். நீ அவங்களோட தனியா சண்டைப் போடறது கஷ்டம்” என்றான் காட்டன் வைத்து காயத்தை சுத்தம் செய்தவாறே. “பட் நீ கேட்ட நான் உன்கூட துணையை இருப்பேன்” என்று மனதில் நினைத்துக்கொண்டான் அவனையும் மீறி.

“என்னால தான் இந்த கஷ்டம் உங்களுக்கு இப்போ. என்ன மன்னிச்சிடுங்க” என்று சொல்லும்போது, அவன் அவளிடம் கேட்க வேண்டிய மன்னிப்பும் ஞாபகம் வந்தது.

அவன் கையில் கட்டுப்போட கஷ்டப்பட்டுக்கொண்டிருந்ததை பார்த்து “குடுங்க நான் கட்டறேன்” என்று அவள் அவனுக்கு உதவ

“எனக்காக இவளோ தூரம் உதவி பண்ணறானே. எதுக்காக இவளோ கஷ்டப்படணும். யாரோ என்ன குத்த வராங்கனு அவங்ககிட்டருந்து காப்பாத்தினான். இவன்கிட்ட உதவி கேக்கலாமா. அட்வான்டேஜ் எடுத்துக்கறேன்னு நினைச்சுக்குவானோ” என்று நினைத்துக்கொண்டு அவனை பார்க்க அவன் அவளை பார்த்தான்.

அந்த ஒரு நொடி விழிகள் பேசிக்கொண்டது.

<<<Thodarum>>>

Thank you so much for reading. Do give your feedback and keep supporting me. :)

51385375_10157238055042259_7601451352044077056_n.jpg
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top