You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


என்னோடு நீ உன்னோடு நான் - 13 & 14

#1
Chapter 13:

“நான் வீட்டுக்கு மட்டும் போன் பண்ணி சொல்லிடறேன்” என்று போன் எடுத்து டயல் செய்தாள்.

“அம்மா. எப்படி இருக்க, அப்பா நக்ஷத்திரா லாம்.... ஆமாம் மா. சிக்னல் ப்ரோப்லம் இருக்கு.... மா இரு அவகிட்ட.... சொல்லு நக்ஷத்திரா.... குர்க்ல இருந்து ஊட்டி வந்துட்டோம் அங்க வெள்ள எச்சரிக்கை வந்ததால…. ஆமா க்ளைமேட் சூப்பரா இருக்கு... சரி டி... அம்மா அப்பாட்ட சொல்லிடு... நான் சிக்னல் கிடைக்கறப்ப கூப்பிடறேன்... பை” என்று வைத்தாள்.

“அடப்பாவி என்னமா பொய் சொல்றா” என்று ஆதி மனதில் நினைத்துக்கொண்டான்.

இருவரும் மலை மேல் மெதுவாக ஏற துடங்க. அவன் “உனக்கு சுத்தமா பசிக்கலயா குக்கீஸ் கூட வேணாம்னு சொல்லிட்ட”

“அதுவா மொதல்ல வேணாம்னு சொன்னேன். எப்போ திரும்ப கேப்பிங்கனு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். செம்ம பசி” என்றாள் அவனை பார்த்து பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு.

அதை கேட்டு சிரித்தவன் “ஏதாவதுன்னா கேளு. தயங்கவேணாம்” என்று குக்கீஸ் பாக்கெட்டை நீட்டினான். “தேங்க்ஸ்” என்று அதை வாங்கிக்கொண்டு.

மலை ஆங்காங்கே மேடும் பள்ளமுமாக இருந்ததால், முன்னே சென்றவன், அவள் தடுமாறாமல் இருக்க கையை பற்றி கொண்டு, அவள் தடுமாறாமல் ஏற உதவினான்.

அவனின் அக்கறையில் அவள் மனம் மெல்ல மெல்ல அவன் புறம் சாய்வதை உணர்ந்தாள். அதை அவளால் தடுக்கமுடியாமலும், எண்ணி மகிழமுடியாமலும் அவள் மனம் தவிக்க,

“இந்தமாதிரி உணர்வுகளெல்லாம் வேணாம்னு தானே நாலு வருஷமா இருக்கேன். பிரதீப் என்ன ஏமாத்தினதே மறக்க முடியாம தவிச்சேன்”

“இவளோ நாள் கழிச்சு இதென்ன மாற்றம் எனக்குள்ள. ஆனா இவன் பிரதீப் மாதிரி இல்ல. யாருன்னேதெரியாத எனக்கு, நான் இந்த வேலைய முடிக்கணும்னு சொன்னவுடனே உதவி பண்ணனும்னு நினைக்கறான். ஆனா அவனுக்கு நான் சிறுதுளி(NGO) போறதே பிடிக்காது. நான் எந்த ஒரு சர்வீஸ்க்கு போணும்னாலும் முட்டுக்கட்டையா இருந்தான்”

“அவனுக்காக எல்லாத்தையும் வீட்டுக்குடுத்தேன். ஆனா கடைசியா என்ன ஏமாத்தினது தான் மிச்சம். ஆண்களோட சகஜமா பழகறது என்னக்கு புதுசில்ல. ஏன் வீக் எண்ட் சர்வீஸ்க்காக அவங்களோட ட்ரிப் போயிருக்கேன். ஆனா இப்போ ஏதோ ஒரு மாற்றம் எனக்குள்ள” என்று நினைக்கும்போது மற்றொரு சிந்தனையும் தலைத்தூக்கியது.

“நிலா… போதும் உன் கற்பனையை நிறுத்து. எதுக்கு இப்போ இந்த கம்பேரிஸன்”

“இதெல்லாம் உனக்கு செட் ஆகாது. இவனுக்கும் உனக்கும் ஒண்ணுமே இல்ல. அதுல உறுதியா இரு. அதுவும் இல்லாம பெரிய இடம் மாதிரி இருக்கு. உன்னால இன்னொரு பிரிவ தாங்கிக்க முடியாது”

“அதுவுமில்லாம அவன் உனக்கு உதவி பண்றான். அவளோ தான். அதுக்கு மேல ஒன்னும் இல்ல” என்று நினைவோட்டத்தில் இருந்தவளை கல் தடுக்கி தடுமாற,” ஹே பாத்து” என்றவன் அவளுடைய இரு கைகளையும் பற்றி விழாமல் பிடித்துக்கொண்டான்.

அவனின் அருகாமை, அவனுடைய கண்கள் அவளை ஊடுருவின. அந்த தீண்டலில் அவளையும் மீறி மேனி சிலிர்த்துக்கொண்டது.

“ஏதோ நெனச்சுட்டே நடந்தா இப்படி தான். மைண்ட் யுவர் ஸ்டெப். இல்லாட்டி சறுக்கி விட்டுடும்” என்றான் அவளை விடுவித்து.

“நான் ஒன்னும் நெனக்கல” என்றாள் இதழோரம் புன்னகையுடன். பதிலுக்கு புன்முறுவலிட்டு முன் நடந்தான் அவளின் கரம் பிடித்துக்கொண்டு.

“என்னென்னமோ தோணுதே அவளோட அந்த சிரிப்புல. என்னஒரு ஆழ்ந்த பார்வை. அழகான சிரிப்பு. ஏதோ விதயசமா இருக்கே எனக்கு”

“அவள முன்னாடியே பாத்திருக்கேன்னு சொல்லலாமா இப்போ. பாராட்ட கூட முடில” என்று நினைத்துக்கொண்டு

“நிலா நான் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். பட் நீ தப்ப எடுத்துக்கக்கூடாது” என்றான் சற்று தயக்கத்தோடு.

“என்ன ஒரே சஸ்பென்ஸா இருக்கு. சொல்லுங்க. நான் நினைக்கறத சொல்றீங்களானு பாப்போம்” என்றாள் புன்னைகையை உதிர்த்தவாறே.

“ஹே, நீ என்ன நினைக்கற. அத சொல்லு” என்றான் நின்று அவளைத்திரும்பிப் பார்த்து.

கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு “ஹலோ நீங்க தான் ஸ்டார்ட் பண்ணீங்க. So, நீங்க சொல்லுங்க” என்றாள் புருவத்தை மேலும் கீழும் அசைத்துக்கொண்டு.

“ஹ்ம்ம் உன்ன நான் கோவில்ல மொதல்ல பாக்கல. உன்ன முன்னாடியேப் பாத்துருக்கேன்” என்றான் அவளைப்பார்த்து அவளின் உணர்வுகளை அறிய.

“ஓ அப்படியா” என்று சின்னதாக சிரித்துக்கொண்டு. இந்த பதிலை அவளிடம் எதிர்பார்காதவன் “எதுக்கு சிரிக்கிற. எஸ், நேத்து உன்ன உதவும் கரங்கள் ஹோம்ல பார்த்தேன்” என்று நிறுத்தினான்.

“எனக்கு தெரியும்” என்றாள் தோள்களை குலுக்கிக்கொண்டு. “வாட்? உனக்கு எப்படி தெரியும். பொய் சொல்லாத” என்றான் அவசரமாக.

“வாங்க நடந்துட்டே பேசுவோம் அன் ஆதி எனக்கு இந்த வாங்க போங்கலாம் செட் ஆகல. உனக்கு ஒகே தானே நான் ஒருமைல பேசினா” என்று கண்சிமிட்டு கொண்டு கேட்க, அதை கேட்டுவிட்டு “அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு எப்படி தெரியும் அத சொல்லு” என்றான் படபடப்புடன்.

இப்போது இருவரும் அருகருகே நடந்துக்கொண்டு “நான் அந்த பொண்ணுங்கள ஹோமுக்கு கூட்டிட்டு போறப்ப ஒரு கார் எங்களை பின்தொடர்ந்தது தெரிஞ்சுது. கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஒருவேளை அந்த கடத்தல்க்காரர்களோ தோணுச்சு”

“ஹோம் போனதுக்கப்பறம் தான் கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. அவங்க கிட்ட பேசிட்டுத் திரும்பறப்ப யாரோ கதவு பின்னாடி மறஞ்சுகிட்ட மாதிரி தெரிஞ்சுது”

“வெளியே வந்தப்பறம் அந்த மறஞ்சுட்டு இருந்தவரு வெளியே யாரும் பாக்காத மாதிரி வந்தத பாத்தேன். எப்படியும் ஹோம்ல அவர விசாரிப்பாங்கனு கிளம்பிட்டேன். அந்த அவரு யாரு” என்று புருவத்தை மேலும் கீழும் உயர்த்தி புன்னகையுடன் அவனை பார்க்க

“அப்போ நீ என்னப் பாத்துட்டயா” என்று ஆச்சர்யத்துடன் கேட்க “ஹ்ம்ம். அதுமட்டும் இல்ல. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு ஹோமமுக்கு கால் பண்ணேன். உன்ன பத்தி கேட்டேன்”

“நீ என்ன தப்பாநெனச்சுட்டு அந்தப் பொண்ணுங்கள காப்பாத்தணும்னு வந்ததா இன்ச்சார்ஜ் சொன்னாங்க. சோ உன் மேல இருந்த டவுட் அப்போ போச்சு” என்றவளை பார்த்து “அப்போப் போச்சுன்னா. இப்போ என்ன என்மேல டவுட் இருக்கா?” என்று அவள் கண்களை பார்த்து கேட்க

“நீ கோவிலுக்கு வந்து என்ன இழுத்துட்டுப் போனப்ப, ஏதோ ப்ளானோட வந்துருக்கயோனு நெனச்சேன். பட் இங்கவந்தப்பறம் நீ உன்னப்பத்தி கவலைப்படாம என்ன அவங்ககிட்ட இருந்து காப்பதினப்ப சந்தேகம் சுத்தமா போச்சு” என்று சொல்லும்போது அவள் அவன் கண்கள் கலங்க,

அதை பார்த்தவன் அவளை சகஜமான நிலைக்கு கொண்டு வர “அவங்ககிட்ட இருந்து காப்பாத்தி உன்ன தூக்கிட்டு போலாம்னு வந்துருக்கேன். நான் டாக்டர் இல்ல ரவுடி” என்று அவளை பார்த்துக்கொண்டு சொல்ல

அவள் சட்டென்று சிரித்து விட்டு “நான் கொஞ்சம் வெயிட் அதிகம். தூக்கிட்டு போறது கஷ்டம்” என்றவள் "கடைசியா சொன்னயே அதுதான் ஃபேர்ஃபெக்ட். நீ ரவுடி மாதிரி தான் இருக்க” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

இருவரும் பேசிக்கொண்டே கொஞ்ச தூரம் செல்ல திடீரென வானத்தை மேகம் மூடிக்கொண்டது!!

OK-Kanmani-Stills-Images-Photos-Posters-Dulquer-Salmaan-Nithya-Menon-OK-Bangaram-Onlookers-Med...jpg
 
#2
Chapter 14:

மோகத்தால் மூடிய வானம் திடீரென மழையாய் தூர இருவரும் முழுமையாக நனையும்முன் சட்டென சிறியச்செடிகள் நிறைந்த புதரில் ஒதுங்கினர்.

“திடீர்னு மழ பெய்ய ஆரம்பிச்சுடுச்சு” என்றாள்.

“ஹ்ம்ம் இனி மேல ஏறறப்ப கொஞ்சம் கவனமா தான் ஏறணும்” என்றான்.

அவள் சிறிது நேரம் களித்துத்தான் உணர்ந்தாள் அந்த இடம் எவ்வளவு குறுகிய இடம் என்று. அவள் அவன் மிக அருகில், அவனின் இதயத்துடிப்பு கேட்கும் தூரத்தில்.

அவள் சற்றுப்பின் தள்ள முயற்சித்தும் அந்த சின்ன இடத்தில் அவளால் பின் செல்ல முடியாமல் நிற்க அந்த அருகாமை அவளைத் தன்னிலை மறக்கச்செய்தது. அவனை ஏறிட்டாள், அவன் மழையை பார்த்துக் கொண்டிருந்தான்.

“எப்போ நிக்கும்னு தெரில” என்று அவளை பார்த்த போது, அவள் சிறிது நடுக்கத்துடன் ஆடை கொஞ்சம் நனைந்திருந்ததையும் பார்த்தவன்

"ஹே நீ நனஞ்சுட்டாயா. வெயிட்” என்று அந்தச்சிறிய இடத்தில் கஷ்டப்பட்டு அவனுடைய Rucksack கழற்றி அவளிடம் தந்து தந்துவிட்டு அவன் அணிந்திருந்த ஜாக்கெட்டை களற்ற முயற்சிக்கும் போது "பரவல. ஐம் ஒகே. இப்போ எதுக்கு இவளோக் கஷ்டம்" என்றாள். அவன் கழற்றி அவளிடம் கொடுத்தான் அவள் பேசுவதைக் கேட்காதது போல்.

"நான் வேணாம்னு சொன்னேன்" என்றாள் அவனை பார்த்து. "இன்னும் நம்ப தூரமா போகவேண்டியது இருக்கு. சிக் ஆயிட்டா என்ன பண்ண. இந்தா" என்று மீண்டும் நீட்ட,

“உஃப்” என்று தலையசைத்துவிட்டு “கேட்கமாட்டல” என்று அவளின் பேக்கை (bag)அவனிடம் தந்துவிட்டு ஜாக்கெட்டை அணிந்துக் கொண்டாள்.

சில வினாடிகள்க் களித்து மழை கொஞ்சம் நின்றிந்ததை உணர்ந்தவன், அவளை பார்க்க, அவள் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய மூச்சுக்காற்று அவன் இதயத்தை வருடும் நெருக்கத்தில் அவள்.

அவளின் கூந்தலில் இருந்த மனம், அவளின் சிறு சிறு தீண்டல், அந்த வானிலை, அவள் முகத்தில் ஆங்காங்கே முத்துப்போல் மழை துளிகள். அங்கும் இங்கும் அலையும் கண்கள். அந்த திடீர் மழையின் குளிரினால் நடுங்கும் இதழ்கள், அவள் முகத்தை அப்படியே கைகளால் அள்ளிக்கொள்ள எண்ணியவன் மனதில் தடுமாற்றம் ஏற்பட சுதாரித்துக்கொண்டு

அவன் புதரின் வெளியேச்சென்று மழை நின்றுவிட்டதை உறுதி செய்துக்கொண்டு “நின்னுடுச்சு… போலாமா?” என்று அவளைக் கேட்க, அவளும் புறப்பட்டாள்.

அவன் அவள் கையை பற்றிக்கொண்டு அருகருகில் நடக்க “கவனமா ஏறணும் நிலா இனிமே. நீ வேணும்னா என் ஷூஸ் போட்டுக்கறயா. ஸ்லீப்பர் சிலநேரம் தடுக்கி விடும். அதுவும் மழை பேஞ்சுருக்கு” கேட்டான் அவளிடம்.

“இப்போ எதுவும் மாத்த வேணாம் ஆதி. நான் மேனேஜ் பண்ணிக்கறேன். நீ அடிக்கடி இப்படி ட்ரெக்கிங் போவயா” என்று கேட்டாள் அவனிடம்.

“ப்ரேக் கிடைக்கறப்ப ட்ரெக் போவேன். சிட்டி லைப்ல இருந்து கொஞ்சம் பீஸ்ஃபுல்லா இருக்கும்” என்றான்.

“ஜென்ரல் டாக்டரா நீ?” அவள் கேட்க “கார்டியாலஜிஸ்ட்” என்றான் பதிலுக்கு.

“தட்ஸ் க்ரேட்” என்றாள் ஆச்சர்யத்துடன். “உன்னப்பாத்தா சுத்தமா தெரில” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

“உன்ப்பேருக்கும் உனக்கும் கூட தான் சம்மதமே இல்ல. நிலானா அமைதியா இருக்கும். ஆனா நீ பண்றதெல்லாம் ஆப்போசிட். தப்பு நடந்தா பொங்கி எழரையே” என்று நிறுத்தி அவளைப்பார்த்து “உனக்கு பத்ரகாளினு பேரு வெச்சிருந்த கரெக்ட்டா இருக்கும்” என்றான் கண்சிமிட்டிகொண்டு.

குபீர் என்று சிரிப்பதுபோல் சிரித்துவிட்டு "இது ஜோக்கா. அடுத்த வாட்டி கொஞ்சம் நல்லா ட்ரை பண்ணு" என்றாள் நக்கலாக. “இன்னொன்னு சொல்லவா. அரிசி மூட்டைனு பேரு கூட ஒகே" என்றான் பலமாக சிரித்துக்கொண்டு.

அவள் முறைப்பதை பார்த்தவன் "ஐயோ முறைக்காத. பயமா இருக்கு" என்று மறுபடியும் அவளை சீண்டினான்.

“பட் ஐ மஸ்ட் டெல் திஸ். நீ நிஜமாலுமே கிரேட். உன்னோட வேலை மற்றும் NGO வேலை. ரெண்டையும் நீ மேனேஜ் பண்ற” என்று சொல்லிவிட்டு "இப்போ சிரிக்கலாமே" என்றவன் திரும்பி அவளின் ஒரு தோளின் மேல் கை வைத்துக்கொண்டு.

கிளுக்கென சிரித்தவள், "தேங்க்ஸ், வீக்எண்ட் சும்மா தான இருப்போம். அத ப்ரொடக்ட்டிவா(productive) ஸ்பென்ட் பண்ணலாம்னு தான்”

“நீ எப்போவாவது உதவி பண்ணிருக்கயா யாருக்காவது, உன்னோட வேலைய தவிர்த்து” என்று கேட்கும்போது தான் அவனுக்குத் தோன்றியது இதுவரை அப்படி எதுவும் செய்யவில்லை என்று.

அவள் மேல் இருந்த கையை எடுத்துவிட்டு, தோள்களை குலுக்கிக்கொண்டு "பெருசா எதுவும் பண்ணல. பட் நீ சொன்னதுக்கப்றம் தோணுது. ஏதாச்சும் பண்ணலாமேனு” என்றான்.

“ஹ்ம்ம் நம்ம நாலெட்ஜ் மத்தவங்களுக்கு யூஸ் ஆகுதுன்னா, அத நாம பண்ணோம்னா, அதைவிட ஒரு பெரிய திருப்தி என்ன இருக்க முடியும்” என்று சொல்லும்போது அவன் மனதில் “எவளோ அழகா பேசறா. அவசொல்றதுகூட கரெக்ட் தான். நான்லாம் எவளோ ஹெல்ப் பண்ணிருக்கலாம்” என்று நினைத்துக்கொண்டு

“கண்டிப்பா. என் கண்ண திறந்ததுக்கு மிக்க நன்றி” என்றான் புன்முறுவலுடன்.

“நீ மலையாளியா” என்று அவள் கேட்க "ஏன் இப்படி கேக்கற" என்றான் புருவம் சுருக்கி. "உன் ஸ்லேங் மலையாளி மாதிரி இருக்கு. அதான்” என்றாள்.

“ஹ்ம்ம் அம்மா எர்ணாகுளம். அப்பா சென்னை. லவ் மேரேஜ். சோ ரெண்டு பேரோட லாங்வேஜ் சாயலும் இருக்கும் என்கிட்ட” என்றான்.

கொஞ்சம் தூரம் எரிய பின்னர் “இங்கெல்லாம் ஈரமாயில்ல. ஒகே வா இருக்கு. மழப்பெருசா வரல போல" என்றாள். "ஹ்ம்ம் பாஸ்ஸிங் க்ளவுட்ஸ். அந்தப்பக்கம் கொஞ்சத்தூரத்துல பீச் இருக்காமே” என்றான்.

இருவரும் பேசிக்கொண்டே நடக்க, ஆசுவாசப்படுத்த ஒரு மரத்தின் அடியில் தஞ்சம் கொண்டனர். “நடக்க முடியும் தானே” என்று அவன் கேட்க "கொஞ்சம் நேரம் உக்காந்துக்கலாமே" என்றாள்.

இருவரும் உட்கார நினைக்கும் போது, அந்த அமைதியான இடத்தில் சருகுகள் மிதிபடும் சத்தம். அதைக்கேட்டு இருவரும் சற்று திடுக்கிட்டனர்!!

Thank you so much for reading. Do give your feedback and keep supporting please :)

Nithya-Menon-in-100-days-of-love-(30)8765.jpg
 
Last edited:

Sponsored

Latest Episodes

Advertisements

Top