You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


என்னோடு நீ உன்னோடு நான் - 30 & 31

#1
Chapter 30:

"ஆதி ஆதி" என்று நிலா கத்த

அதைப் பார்த்தவன் நிலாவை இழுத்து வந்தவள் அருகே சென்று "மரியாதையா விட்டுடுங்க. என்ன செய்றீங்க? மொதல்ல அவங்கள விடுங்க" என்று கத்தினான்.

அதைப்பார்த்து அங்கு வந்த சில ஆண்கள் "நீ தானா அந்த ஆளு" என்று அவனையும் பற்றிக்கொண்டு இழுத்துச்சென்றனர்.

ஆதி முனியை அருகில் வரச்சொல்லி ஏதோ சொன்னான். அவன் அதை கேட்ட பிறகு ஏதோ எடுக்க சென்றான்.

மூவரையும் தலைவர் வீட்டின் வாயிலில் நிற்கவைத்து அவரின் வீட்டின் கதவை தட்டினர்.

அவர் திறக்க "என்ன ஆச்சு ஏன் இவங்கள இப்படி கூட்டிட்டு வந்துருக்கீங்க" கேட்டார் தலைவர்.

“அய்யா இவளே அவ ஊர்ல தனியா தான் இருந்தா அவ தம்பியோட. இப்போ சொந்தம்னு பொய் சொல்லி யாரயோ ஊருக்குள்ள வெச்சுருக்கா" என்று வள்ளியின் கணவன் வள்ளியின் முடியை பிடித்தவாறே கத்தினான்.

“என்னது இவங்க வள்ளியோட சொந்தம் இல்லையா?” அதிர்ந்தார் தலைவர்.

“நாங்க விழாக்காக இன்னிக்கி வரலைனா இன்னும் என்னென்ன நடந்துருக்குமோ. நினச்சசாலே பயமா இருக்குயா” என்றான் அவள் கணவன்.

அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த ராமசாமி "மாமா நான் அப்போவே சொன்னேன். இவங்கள நம்பாதீங்கனு. நீங்க நான் சொல்றத நம்பவே மாடீங்களே. இவங்கள எல்லாம்" என்று அவன் சீறிக்கொண்டு ஆதியை அடிக்கச்செல்ல ஆதி அவனை தள்ளினான்.

“எங்க ஊரு ஆளையே அடிக்கறயா நீ” என்று ஆதியை தாக்க வர பூசாரி அங்கே வந்தார் விஷயம் தெரிந்து.

"மொதல்ல அவங்கள அடிக்கிறத நிறுத்துங்க. அவங்க எவளோ பெரிய உதவி பண்ணீருக்காங்க தெரிமா " என்று அவர் சொல்ல வர ஆதி வேண்டாம் என்பது போல தலையைத்தான்.

அதை பார்த்தவர் "இவங்களால தான் நம்ம ஊரு பசங்க ரெண்டு பேரு இப்போ உயிரோட இருக்காங்க. அத மறந்துடாதீங்க” என்று கத்தினார்.

“அதெல்லாம் இருக்கட்டும் சாமி. இவங்க எதுக்காக இந்த ஊருக்கு வந்துருக்காங்க அத சொல்ல சொல்லுங்க மொதல்ல” என்றான் ராமசாமி பூசாரியை பார்த்து.

அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த வள்ளி "அவங்க முனியரசன் அய்யாவ பாக்க வந்துருதாங்க. அவரு இவங்ககிட்ட, இந்த ஊர்ல கொஞ்ச நாளா சின்ன பசங்களுக்கு இந்த மாதிரி வலி வருதுன்னு சொல்லிருக்காரு”

“அதுனால என்னனு தெரிஞ்சுக்க வந்துருக்காங்க” என்றவள் “நான் அவருக்கு முடியாம இருக்கப்ப எதுக்கு சொல்லணும்னு, என் சொந்தகாரங்கனு சொன்னேன்” என்றாள்.

“அப்படி அவரு வர சொன்னா இவங்க ஏன் ஊர சுத்திட்டு வரணும். அவரே கூப்பிட்டு வந்துருக்கலாமே” என்று மடக்கினான் ராமசாமி.

“இவன் அன்னைக்கு கோவில்ல இல்ல, ஆனா அங்க நடந்தது தெருஞ்சுருக்கு. அதுனால தான் ரொம்ப பேசறான்” என்று பூசாரி நினைத்தார்.

“இப்போவாவது நான் பேசலாமா” என்று ஆதி திமிறிக்கொண்டு கேட்டான்.

அதற்கு ராமசாமி "நீ ஒன்னும் பேசவேணாம். எங்களையெல்லாம் நல்லா ஏமாத்தீட்ட பா. போதும் அதுவே” என்றவன் மனதில் “இவன பேச விடக்கூடாது” என்று எண்ணினான்.

“மாமா முனீஸ்வரன் கோவிலுக்கு நேரம் ஆச்சு. இவங்கள இங்க கட்டி போட்டுட்டு போய்டலாம். நாம போயிட்டு வந்து பாத்துப்போம்” என்றான்.

“அய்யா நீங்க போனீங்கன்னா அங்க கோவில்ல இல்ல இந்த ஊர்ல ஏதாச்சும் பிரச்சன வரலாம்” என்றான் ஆதி.

“என்ன புதுசா பீதி கிளப்பர. ஓ இப்போ புரிது மாமா இவங்க விழாவ நிறுத்த வந்துருக்காங்க” என்று தலைவரை ஏற்றிவிட்டான் ராமசாமி.

அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த தலைவர் "ராமசாமி நீ இரு. அந்த பையன் தெரிஞ்சோ தெரியாமலோ நமக்கு உதவிருக்கான். அவன் என்ன சொல்ல வரான்னு கேட்போமே” என்று சொல்ல

அங்கிருந்தவர்கள் “அய்யா தப்பா நினச்சசுக்காதீங்க. எங்களுக்கும் ராமசாமி சொல்றது தான் சரினு படுது. இவங்கள கட்டி போட்டுட்டு போலாம். அங்க பூஜைக்கு நேரமாச்சு” என்றனர்.

"அதுவும் சரி. விழா நிக்காம நடக்கணும். இவங்கள அந்த ஊர்க்காத்த ஆலமரத்துல கட்டிட்டு போலாம். வந்து பாத்துப்போம்" என்றார் தலைவர்.

பூசாரி என்னசெய்வதென்று தெரியாமல் ஆதியை பார்க்க அவன் கண்களாலேயே நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான்.

அங்கிருந்தவர்கள் நிலாவயும் ஆதியையும் அந்த மரத்தில் கட்டிவிட்டு வள்ளியை வீட்டில் அடைத்துவிட்டு சென்றனர்.

“ஸாரி நிலா. உன்ன தனியா விட்டுட்டு போயிருக்க கூடாது. ஆனா உன்ன கூட்டிட்டு போயிருந்தா ரிஸ்க் ஆகியிருக்கும்.” என்றான் அவளை பார்த்து.

“நீ வர நேரமான உடனே நான் பயந்தே போய்ட்டேன் உன்ன ஏதோ பண்ணீட்டாங்களோனு” என்றாள் கண்ணீர் மல்க.

“ஆல் ஒகே ஒன்னும் இல்ல. பூசாரி பொண்ண அவர் வீட்ல விட்டுட்டேன்” என்றான்.

அவள் அவனை பார்த்து சிறிதாக புன்னைகைத்துவிட்டு “நம்ம நினச்சச மாதிரி நடந்துச்சா?” என்று கேட்க “ஹ்ம்ம்” என்று அவன் இடுப்பை காட்டினான் அங்கே ஏதோ வேட்டியில் மறைத்து வைத்திருந்தது போல் இருந்தது.

அதை பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட, அந்த இடத்திற்கு மேல் ரத்தம் உள்ளிருந்து கசிந்தது.

“என்ன ஆதி ரத்தம் வந்துட்டு இருக்கு” என்று காயத்தை பார்த்து பதறியவளிடம் “அதுவா சின்ன காயம். பேக்ல மருந்து இருக்கும் போடுகிறேன்” என்று சொல்ல அவள் முகம் சோகமானது

“இப்போ என்ன பண்றது ஆதி?” நிலா கேட்க “முனி வீட்ல இருந்து கிளம்பிட்டானா இல்ல அவனையும் வீட்ல அடைச்சுட்டாங்களானு தெரில” என்றான்.

“அந்த கருணா” என்று அவள் கேட்க “அவன்” என்று ஆதி சொல்ல ஆரம்பிக்கும் போது முனி அங்கே வந்தான்.

“அண்ணா அக்காவ வீட்ல வெச்சு பூட்டிட்டாங்க. நல்லா வேல நான் இதை முன்னாடியே வீட்ல இருந்து எடுத்துட்டேன்”

“எடுத்துட்டு வரும் போது அக்காவை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டிருந்தாங்க. என்ன தேடினாங்க. நான் மறஞ்சுக்குட்டேன். அக்கா தான் பாவம்” என்று அழ “நீ அழுகாத. நான் கூட்டிட்டு வரேன்” என்றான்.

“நீங்க இதை தானே கேட்டிங்க” என்று அவன் ஒரு பவர் பேங்க்கை காட்டினான். ஆதி நிலாவை பார்த்து சிரித்தான் நிம்மதி பெருமூச்சு விட்டு. “ஆமா டா. இதான்” என்று சொல்லும்போது அங்கே சில பெண்கள் வந்தனர்.

நேற்று காப்பாற்றிய அந்த சிறுவனின் அம்மா அவர்கள் அருகில் வந்து “தம்பி உன்னால தான் என் பையன் இப்போ உயிரோட இருக்கான். நாங்க அவுத்து விடறோம். நீங்க கிளம்புங்க” என்று அந்த பெண்மணி நிலாவிற்கு போடப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்தாள்.

ஆதி கயிற்றை நிலா அவிழ்த்துவிட அவன் "நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. என்கிட்டே இப்போ ஆதாரம் இருக்கு. உங்கள காப்பாத்த" என்று அவன் மறைத்துவைத்திருந்த போனை வெளியே எடுத்தான்.

அதை பவர் பேங்க்குடன் பொருத்தி, அதை உயிர் பெற செய்தான்.

அதில் ஓடிய விடியோவை பார்த்து அதிர்ந்தனர் அங்கிருந்த அனைவரும்.
 
#2
Chapter 31:

அந்த வீடியோவை பார்த்த அவர்கள், "தம்பி உடனே முனீஸ்வரன் கோவிலுக்கு போகணும். அப்போதான் அவங்கள காப்பாத்தமுடியும்" என்று சொல்ல ஆதி நிலா சரி என்பது போல் தலசைத்தனர்.

கோவிலுக்குப்போகும் முன் வள்ளியை விடுவித்து, ஆதியுடைய காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டு சென்றனர்.

போகும்போது ஆதி அவர்களிடம் "இந்த பூஜைல என்ன பண்ணுவாங்க?" என்று கேட்க

அந்த பெண்களில் ஒருவர் “மொதல்ல கடவுளுக்கு, படகுக்கு, வலைக்கெல்லாம் பூஜ பண்ணுவாங்க”

“அது முடுஞ்ச உடனே முனீஸ்வனனுக்கு பூஜ பண்ணுவாங்க. அப்போ ஊர்லருந்து எடுத்துட்டுப்போற சாராயத்தை அவருக்கு படைப்பாங்க”

“அங்கேயே மதியம் இங்கயிருந்து கொண்டுபோற கூட்டு சோறு சாப்டுட்டு படையல் வெச்ச சாராயம் அடுச்சுட்டு சாய்ங்காலமா வருவாங்க ஊருக்கு. அங்க வந்து மாரியம்மன் பூஜைக்கு தயாராவோம் தம்பி” என்று முடித்தார்.

சிறு தூர நடை பயணத்திற்குப்பிறகு அந்த கோவிலை அடைந்தனர்.

அங்கே படகு பூஜை நடந்துகொண்டிருந்தது. இவர்கள் வருவதை பார்த்த அங்கிருந்தவர்கள் "இவங்க எப்படி வந்தாங்க. பொம்பளைங்கள வேற கூட்டிட்டு வந்துருக்காங்க" என்று கோபமாக அவர்களை நோக்கி வந்தனர்.

“உங்கள கட்டி போட்டுட்டு தான வந்தோம்” என்று ஆதியை தாக்க வந்தனர்.

அங்கிருந்த பெண்கள் "மொதல்ல நிறுத்துங்க. இப்படி நீங்க எதையும் யோசிக்காம செய்றதால ஒருத்தன் நம்மள காலி செய்ய உள்ள வந்துருக்கான்"

“இதை பார்த்துட்டு யார அடிக்கணும்னு முடிவு பண்ணுங்க” என்று அந்த பெண்கள் ராமசாமியை பார்த்தனர்.

அந்த வீடியோ ஆரம்பித்தது.

அந்த இடம் ஒரு அறை உள்ள குடிசை போல் இருந்தது. முதல் சில நிமிடங்கள் அந்த வீட்டில் இருந்த கருணா ஏதோ செய்துக்கொண்டிருந்தான்.

அப்போது போன் அடித்தது. கருணை அதை எடுத்து பேச,

"ஹலோ... நாளைக்கி சார்... எல்லாம் ரெடியா இருக்கு. ராமசாமி இன்னும் வரல" ......

வீடியோ பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ராமசாமியை பார்த்தனர். அவன் அங்கே இருந்து மெல்ல தப்ப முயற்சிக்க சில ஆண்கள் அவனை இறுக்கமாக பற்றிக்கொண்டனர்.

மறுபடியும் வீடியோ பக்கம் திரும்பினார்

"நான் நாளைக்கி நம்ம நினச்சசபடி நடந்துச்சுன்னா நாள மறுநாள் கிளம்பிடுவேன்".......

"அந்த பொண்ணுனால ஒன்னும் பண்ண முடியாது. அவளால பேச முடியாது” ......

“5 பசங்க” .......

“என்னால இதுவரைக்கும் 8 பசங்களுக்கு ரெண்டு ரவுண்டு செலுத்த (inject) பண்ணமுடுஞ்சுது. 4 பேருக்கு ஒரு ரவுண்டு inject பண்ணிருக்கேன். பட் அவன் ஊருக்குள்ள வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டு இருக்கான். ஒரு பையன காப்பாத்திருக்கான்” ......

வீடியோ பார்த்துக்கொண்டிருந்தவர்கள் உறைந்து போய் இருந்தனர்.

“அவன் டாக்டரானு தெரில. ஆனா நீங்க அனுப்பினவங்கெல்லாம் வேஸ்ட் சர். அவங்கள ஒன்னும் பண்ண முடியல” ......

“அந்த கோவில் எண்ட்ரன்ஸ் CCTV பாக்கசொன்னேனே பாத்தீங்களா........ அதுவும் சரிதான் இத மொதல்ல முடிப்போம். நான் ராமசாமிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு உங்க லைன்க்கு வரேன்” என்று கட் செய்தான்.

அனைவரும் ராமசாமியை ஏறிட்டனர்.

மறுபடியும் கருணா வேலையில் மூழ்கினான். அவன் அங்கும் இங்கும் நடந்துகொண்டே ஏதோ செய்து கொண்டிருக்க,

ஆதி விடியோவை கொஞ்சம் ஓட்டினான். கதவு தட்டும் சத்தத்திலிந்து ப்லே செய்தான்.

கருணா கதவைத்திறக்க ராமசாமி உள்ளே வந்தான்.

க: வர இவளோ நேரமா

ரா: நாளைக்கி விழா வேலயெல்லாம் இருக்குல்ல. அதான்.

க: சரி அவங்க ரெண்டு பேரும் இன்னும் ஊர்ல தான் சுத்திட்டு இருக்காங்களா?

ரா: ஆமா இன்னிக்கி வேற ஒரு பையன காப்பாத்திருக்கான். அவங்க நாளைக்கி எப்படியும் காலி. வள்ளி புருஷன் வந்துடுவான். அவனை ஏத்திவிட்டுடவேண்டியதுதான். இதோ இவ அப்பா வேற அவங்களோட சுத்திட்டு இருக்கான். ஏதாவது சொல்லிடுவானோனு இருக்கு.

க: இப்ப தான் வந்து பாத்துட்டு போறான். இன்னும் பயத்தோட தான் இருக்கான். அதெல்லாம் சொல்ல மாட்டான். அவன் பொண்ணு இங்க இருக்கற வர. அப்படி ஏதாச்சும் பண்ணான் இவளை முடிச்சிட்ட வேண்டியதுதான்.

ரா: இன்னிக்கி ஏன் சீக்கரம் வந்தான்.

க: விழா வேல இருக்காம் அதான் வந்து பாத்து சாப்பாடு குடுத்துட்டு போனான். சரி. நான் சொன்னது இதுதான். நீ அந்த சாராயத்துல இதை கலக்கிடு.

ரா: நாளைக்கி எல்லாருமே குடிப்பாங்களே (முகத்தில் பதட்டத்துடன்)

க: என்ன இப்போ புதுசா கேக்கற. முன்னாடி அவங்களுக்கு ஊத்தி குடுத்ததுல கொஞ்சமா கலக்கினோம். இப்போ கொஞ்சம் நிறைய. யாரெல்லாம் முன்னாடி குடுச்சாங்களோ அவங்க நாளைக்கி (என்று மயங்கி விழுவது போல் செய்துகாட்டினான்)

வீடியோ பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் ராமசாமியை பார்த்து “அடப்பாவி நீ போனவாரம் மீன் பிடிக்க போனப்ப எங்களுக்கு சாராயம் குடுத்தயே அதுல என்னத்த கலந்த” என்று அடித்தனர்.

“எனக்கு… எனக்கு தெரியாது. ஏதோ போதை மருந்துனு குடுத்தான்” என்று பயந்துகொண்டே சொல்ல “துரோகி உன்னயெல்லாம்” என்று அவனை அடித்தனர்.

“இப்போ சாராயத்துல கலந்துட்டயாடா?” என்று தலைவர் கேட்க ஆம் என்பது போல் தலையசைத்தான். “அது என்னனு தெரிமா?” என்று ஆதி கேட்க “அதப்பத்தி அந்த கருணா ஒன்னும் சொல்லல” என்றான் ராமசாமி.

“முனீஸ்வரா எங்கள மன்னிச்சுடு. இந்த பாவியால எப்படி இப்படி பண்ண முடுஞ்சுதோ” என்று தலைவர் கூப்பாடு போடும் போது அங்கிருந்த மற்றவர்கள் ராமசாமியை அடித்து கொண்டிருந்தனர்.

அதில் ஒருவன் "டேய் யாருடா அவன்? எதுக்கு இப்படி ஒரு காரியம் பண்ண? எதுக்கு எங்களை முடிக்கணும் பாத்த? என்ன சதி பண்ணீங்க சொல்லு சொல்லு?” என்று பலமாக தாக்கினான்.

“என்னால எதுவும் சொல்ல முடியாது. சொன்ன என்ன கொன்னுடுவான்” என்றான் பயத்துடன். “நீ சொல்லல உன்ன நாங்க கொன்னுடுவோம் சொல்லு” என்று மறுபடியும் தாக்கினர்.

“தம்பி எங்களை நல்ல நேரத்துல வந்து காப்பாத்துனீங்க. நீங்க வரலைனா எங்களுக்கு என்ன ஆகியிருக்குமோ. என்ன கலக்கி இருப்பாங்க தம்பி” கேட்டார் தலைவர்.

“என்ன கலக்கிருக்காங்கனு தெரில. லேப்க்கு அனுப்பின தான் தெரியும். இப்போ நீங்க பூஜ பண்ண போறீங்களா” என்று கேட்டான் ஆதி. “என்ன செய்றதுனு தெரில” என்று சொல்லும்போது

“அய்யா நான் முன்னாடியே சொன்ன மாதிரி நிறைய தடங்கல் வந்துருச்சு. உயிர் இழப்பு வேற. இந்த வாட்டி இந்த விழா வேணாமே” என்றார் ஜோசியர்.

“அந்த பாவிய என்ன பண்ணீங்க தம்பி? அவன எங்க கையாள கொல்லனும்” என்று தலைவர் கோபத்துடன் கேட்க

“அவன் இப்போ” என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது

அங்கே கூட்டத்தில் இருந்த ஒருவன் “என் பையன் செத்ததுக்கு நீயும் தானடா காரணம்” என்று படகின் துடுப்பை எடுத்து சரமாரியாக ராமசாமியை அடிக்கத்தொடங்கினான்.

ரத்த வெள்ளத்தில் இருந்த ராமசாமியை பார்த்து “அவன விடுங்க. கேக்கற விதத்துல கேக்கறவங்க கேட்டா பதில் சொல்லுடுவான்” என்று ஆதி சொல்லும்போது

மற்றொவன் “இவனெல்லாம் உயிரோட விட்டா இன்னும் என்னவேனும்னாலும் செய்வான்” என்று படகின் நங்கூரத்தால் அவனை தாக்கினான். ராமசாமி சுருண்டு விழுந்தான்.

Thank you so much for reading :) Do share your feedback and keep supporting please :)

Dulquer-Facebook-650-1.jpg NITHYA MENON IN JANATHA GARAGE.JPEG
 

Attachments

Sponsored

Advertisements

Top