என்னோடு நீ உன்னோடு நான் - 40

#1
Chapter 40:

கட்டப்பட்டிருந்தவன் கத்துவதை பார்த்த ஆதி ப்ரித்வியை பார்க்க, அவன் யோசைக்குள்ளானான்.

"மொதல்ல அவன் வாயைக்கட்டிட்டு வரேன்" என்று அதை செய்துவிட்டு ஆதியிடம் வந்தவன் "அவனுக்கு முழுசா கான்ஷியஸ் திரும்பீடுச்சா?” என்று கேட்டான். “இல்ல கொஞ்சம் தான்… பட் எப்போவென்ன முழுசா திரும்ப வாய்ப்பு இருக்கு கௌஷிக் அங்க தான் இருக்கான்” என்றான்

“அந்த ரூம்ல ஒரு செட்டப் வைக்கணும். அங்க நடக்கிறதா எல்லாத்தையும் பதிவு பண்றமாதிரி” என்று ப்ரித்வி சொல்ல “அது பண்ணிடலாம். இங்க கௌஷிக் ஓட கேமரா செட்டப் ட்ரைபாட்லாம் இருக்கு” என்றான் ஆதி.

“சூப்பர். அங்க போய் அதெல்லாம் பொருத்திட்டு சீக்கரம் இங்க வந்துடலாம்” என்று கட்டிப்போட்டிருந்தவனை பார்த்து அனைத்தும் சரியாக இருக்கிறதை உறுதி செய்துகொண்டு ஆதியின் ஹாஸ்பிடலுக்கு புறப்பட்டனர் கேமரா மற்றும் சிலவற்றை எடுத்துக்கொண்டு.

சில நிமிடங்களில் ஹாஸ்பிட்டலை அடைந்தவுடன் கருணா வைக்கப்பட்டிருந்த அறையில் அவனுக்கு எதிரே இருந்த விண்டோ சுகிறீன் மறைவாக கேமரா பொருத்தினான் ப்ரித்வி.

கௌஷிகிடம் திரும்பி "கம்ப்ளீட்டா மானிட்டர் பண்ண சொல்லுடா. நாளைக்கி இவன் கண்டிப்பா உண்மைய பேசிடுவான்” என்று நம்பிக்கையுடன் ப்ரித்வி அவனின் வீட்டிற்கு சென்று சில பொருட்களை எடுத்துக்கொண்டு ஆதி வீட்டுக்கு திரும்பினான்.

********

“ஆதி அப்பறம் உங்கிட்ட இன்னோரு விஷயம் கேக்கணும்னு நினைச்சேன். இந்த டாக்குமெண்ட்ஸ் அவனோட வீட்ல இருந்துச்சு” என்று கருணாவின் வீட்டில் இருந்து எடுத்துவந்த டாக்குமெண்ட்ஸை காட்டினான்.

பார்த்துக்கொண்டிருந்த ஆதியிடம் "ஏதாச்சும் புரியுதா?" கேட்டான் ப்ரித்வி.

“பெருசா ஒன்னும் புரில பட் நிறைய கெமிக்கல் நேம்ஸ் யூஸ் ஆகியிருக்கு. இத டீகோட் பண்ணனுமா?” ஆதி கேட்டான்.

“தெரிமா யாராச்சும்? நாளைக்கே சொல்றமாதிரி?” கேட்டான் ப்ரித்வி.

“ஹ்ம்ம் என் கூட காலேஜ்ல வேல பாக்கற biological chemist இருக்காரு. அவருகிட்ட கேக்கலாம்” என்றவன் “சரி… நாளைக்கி கருணா பேசிடுவான்னு சொன்னாயே எப்படி?” கேட்டான் ஆதி.

“அது அவன இங்க வந்து சேக்கறப்பவே அவனோட ஆதார் டீடெயில்ஸ் எடுக்க முடிவு பண்ணேன். பிளஸ் அவனோட வால்ட்ல இருந்த கிரெடிட் கார்ட்ஸ் அதோட பில்ஸ். அதெல்லாம் பாதப்ப அவனோட ஒரு அட்ரஸ் கிடைச்சுது” என்று சொல்லும்போது

ஆனந்த் கால் செய்ததை பார்த்து “ஒரு நிமிஷம்” என்று அதை அட்டென்ட் செய்தான்.

“சொல்லு ஆனந்த்...... அப்படியா...... நான் சொல்ற அட்ரெஸ்க்கு வந்துடு...... சீக்கரம்...... பை” என்று போனில் அட்ரஸ் ஷேர் செய்துவிட்டு வைத்தான்.

உள்ளே அடைக்கப்பட்டிருந்தவன் அங்கிருந்த பொருட்களை தள்ளிவிடும் சத்தம் கேட்டு இருவரும் உள்ளே சென்றனர். அவன் கட்டியவாயில் இருந்து ஏதோ பேச முயற்சிசெய்துகொண்டு அங்கிருந்தவற்றை உதைத்தான்.

“உன்ன காலைல வரைக்கும் எதுவும் செய்யவேணம்னு யோசிக்கிறேன். அடி வாங்கி போய் சேந்துடாத” என்று அவனை எச்சரித்தான் ப்ரித்வி.

“இவனுக்கு ஏதாச்சும் மயக்க ஊசி போடுடா… முடில” என்று சொல்லுவிட்டு வெளியே வந்தவர்கள். ஆனந்த் வர மூவரும் ஆலோசித்துக்கொண்டிருந்தார்கள்.

---------------

மறுநாள் காலை நிலா ஆதிக்கு போன் செய்து இருவரும் சிலநேரம் பேசினர். ஆதி ப்ரித்வியிடம்

“கௌஷிக் வந்துடுவான்டா. நான் ஹாஸ்பிடல் கிளம்பறேன். அந்த டாக்குமெண்ட்ஸ் எடுத்திருக்கேன்”

“நான் நேத்து சொன்னேனே அந்த ப்ரோபஸ்ஸர்ட்ட இத குடுத்துட்டு, அவர உன்னை காண்டேக்ட் பண்ண சொல்றேன்” என்று சொல்லிவிட்டு ஹாஸ்பிடல் சென்றான்.

---------------

ப்ரித்விக்கு அவனுடைய IG இடம் இருந்து ஒப்புதல் வந்ததால் கடலூரில் இருந்து கூட்டிவந்தவனை விசாரணை செய்ய ஆரம்பித்தான்.

“சொல்லு எதுக்கு என்ன பின்தொடந்த?” என்று கேட்க அவன் பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே உட்கார்திருந்தான். “உனக்கு காட்ட வேண்டிய ஒரு விஷயம் இருக்கு. அது காட்டின தான் பேசுவ” என்ற ப்ரித்வி, கௌஷிக்கிடம் ஏதோ கேட்க,

கௌஷிக் அவன் போனை கொடுத்தான். அதில் கருணாவின் போட்டோ இருந்தது.

“நீ சொல்லலன்னாலும் இதோ இவன் எங்க பிடில தான் இருக்கான். அவன் அட்ரஸ் தெருஞ்சுடுச்சு. அவன் பேமிலிய வெச்சு கேட்டா அவன் உண்மைய சொல்லிடுவான்”

“எதுவுமே பேசாம இரு... நீ எவளோ வருஷம் கம்பி என்ன போறன்னு பாரு” என்று ப்ரித்வி சொல்லும்போது கட்டப்பட்டிருந்தவன் முகத்தில் சற்று சலனம் ஏற்பட்டது.

“உன்மேல ஒரு பெரிய கேஸ் போடலாம். எப்படினு யோசிக்கறயா? உன்னையும் அந்த கருணா ஓட சேர்ந்து தான் பிடிச்சேன். ஆனா நீ எதுவும் சொல்லலனு சொல்லி உனக்கு தண்டனை என்னால வாங்கித்தரமுடியும். நீ ஒன்னும் சொல்ல வேணாம்…” என்று சொல்லிவிட்டு வெளியே செல்லும் போது

“சர்” என்று அவன் தடுத்தான். ப்ரித்வி அவன் அழைப்பை கேட்டு திரும்பினான்.

"நான் சொல்றேன் சர். எனக்கு என்ன விஷயம்லாம் தெரியாது. ஆனா அய்யா தான் அந்த மலை நடுவுல இருந்த வீட்டை தகர்க்க சொன்னாரு. நான் செஞ்சேன் அப்பறம்” என்று தயங்க "மேல சொல்லு யாரந்த அய்யா?" என்று அவன் கழுத்தை அழுத்த

“அங்க யாரு வர்றாங்களோ அவங்கள போட்டோ எடுத்து அனுப்ப சொன்னாரு” என்றான்.

“யாரு அந்த அய்யா?” என்று மறுபடியும் அவன் முகத்தின் அருகே சென்று கேட்க, சேரில் கட்டப்பட்டிருந்தவன், அவன் மண்டையால் ப்ரித்வி மண்டையை வலுவாக தாக்கினான். ப்ரித்வி சற்று நிலைக்குலைந்து தன்னிலைக்கு வர, அடித்தவன் தலை தொங்கியது.

படம் பிடித்துக்கொண்டிருந்த கௌஷிக் உள்ளே வந்தான். “ப்ரித்வி ஆர் யு ஒகே” என்று கேட்க “எனக்கு ஒன்னும் இல்ல. இவனுக்கு என்ன ஆச்சு பாறேன்?” என்றான்.

நாடி பார்த்தவன் “பல்ஸ்லாம் நல்லா தான் இருக்கு. சாப்பிட்டானா ஏதாச்சும்?” என்று கேட்க “அடடா… இந்த பிரச்சனைல நேத்திக்கி நைட்ல இருந்து எதுமே குடுக்கல. ச்ச” என்றான்.

“எப்போ எந்திருப்பான்?” என்று ப்ரித்வி கேட்க "இப்போ பாரு…" என்று கிட்சனுக்குள் சென்ற கௌஷிக் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தான்.

அதே நேரம் ப்ரித்விக்கு கால் வர “இருடா பேசிட்டு வந்துடறேன்” என்று வெளியே சென்று அட்டன்ட் செய்தான் மொபைல் சர்வீஸ் ஆபரேட்டர் போன் அழைப்பை.

"சொல்லுங்க. அந்த மலை ஏரியா ஆன்டென்னால இருந்து எந்த கால்ஸ்லாம் ரௌட்(route) ஆச்சுன்னு பாக்கமுடுஞ்சுதா?... சூப்பர்... ரெண்டு நம்பர்கு நிறைய கால்ஸ் போயிருக்கா?... யாருனுனு தெரிஞ்சுதா?... வாட்?... நிச்சயமா?... டீடைல்ஸ் அனுப்புங்க... தேங்க்ஸ்" என்று போன் வைத்தான்.

“அப்போ இவன் சொன்ன அய்யா அவன் தானா…” என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது IG’யிடம் இருந்து கால் வந்தது.

"சர்... பெரிய க்ளூ கெடச்சுருக்கு. வி ஆர் ஆல்மோசட் நியர்... சர். என்ன சொல்றீங்க?... அப்படிலாம் பாதில கேஸ் விட முடியாது சர்... சர் ப்ளீஸ்..." போன் கட் ஆனது.

“ச்ச” என்று அவன் அங்கிருந்த சுவற்றின் மேல் பலமாக தட்டினான் அவனின் கோவத்தை வெளிப்படுத்தி.

------

ஹாஸ்பிடல் சென்ற ஆதிக்கு நிலவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லு நிலா” என சற்று இறுக்கத்துடன் போன் அட்டென்ட் செய்தான் ஆதி.

N: “ஆதி என்ன ஆச்சு? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு. ஆர் யு ஒகே?”

A: “ஐம் ஒகே. என்ன விஷயம்னு சொல்லு”

N: “ஓஓ… விஷயம் இருந்தா தான் பேசுவ. ஹ்ம்ம் … பரவால்ல”

A: “அப்படிலாம் இல்ல கொஞ்சம் பிஸி அதான். சொல்லு”

N: “மெடிக்கல் யுனிட் இன்னக்கி ஈவினிங் வந்துடும். எங்க அனுப்பறது”

A: “என் ஹாஸ்பிடல்க்கு வர சொல்லிடு”

N: “நாளைக்கி போறோம்ல?”

A: “நான் டவுட் தான். முக்கியமான கேஸ் இருக்கு. நான் யாராச்சும் அனுப்பி வெக்கறேன்”

N: “ஓ. சரி”

A: “வேற”

N: “ஈவினிங் மறந்துடாத வேலைல… வந்துரு. அப்பா வெயிட் பண்ணுவாரு”

A: “ஹ்ம்ம்… பை”

போன் கட் செய்தான் ஆதி இறுகிய முகத்தோடு.

“என்னாச்சு. சரியா பேச மாட்டேங்கறான். காலைல கூட பேசினான்” என்று நிலா யோசைக்குள்ளானாள். “சரி எப்படியும் ஈவினிங் வருவான்ல… என்னனு கேக்கணும்” என்று நினைத்துக்கொண்டாள்.

சாயங்காலம் மெல்ல எட்டிப்பார்க்க, நிலா ஆர்வம் கலந்த பயத்துடன் ஆதியின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

“வருவாரு… அதுக்காக வாசல்லயே இருக்கணுமா? உள்ள வா” என்று கிண்டல் செய்தாள் தங்கை நக்ஷத்திரா. நிலா புன்னைகைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

“எவளோ நாள் ஆச்சு உன்ன இப்படி சந்தோஷமா பாத்து” என்று அவள் அம்மா அவளை பார்த்து திருஷ்டி எடுத்தார்.

நேரம் செல்ல செல்ல நிலாவிற்கு ஏதோ சரியில்லை என்பது போல் உணர்ந்து அறைக்குள் சென்றாள்.

வெளியே சிரித்தாலும் உள்ளே சென்றவுடன் கண்களில் கண்ணீர் கொட்டியது. "எவளோ டைம் கால் பண்ணிட்டேன். ஏன் இந்த ஆதி எடுக்க மாட்டேங்கறான்" என்று கவலை கொண்டாள்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. இரவும் எட்டிப்பார்த்தது. ஆதி வரவில்லை. வாயிலில் காத்திருந்த நிலாவிற்கு ஏமாற்றமும் கண்களில் கண்ணீருமே மிஞ்சியது.

Please see below::
 
#2
கௌஷிக் IG’யிடம் பேசியபின், இறுக்கத்துடன் இருந்தான்.

“என்ன ஆச்சுடா?” என்று கௌஷிக் ப்ரித்வியை கேட்க “அவங்க வேலைய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த கேஸ் இத்தோட நிறுத்த சொல்றாங்க” என்றான்.

“நீ என்ன ஸ்டாப் பண்ணபோறயா?” கௌஷிக் கேட்க “முடியாது. நான் அல்மோஸ்ட் கண்டுபிடிச்சுட்டேன். ஐ வாண்ட் டு ப்ரொசீட்” என்றான் கண்களில் கோபத்துடன்.

“தட்ஸ் பெட்டெர். அவன் முளிச்சுகிட்டான்” என்றான் கௌஷிக்.

“சரிடா. இப்போ அவன் நமக்கு தேவப்படமாட்டான். நமக்கு யாருனு தெருஞ்சுடுச்சே” என்று யோசித்தவன்

ஆனந்தை அழைத்து அவனிடம் ஒரு விடியோவை கொடுத்து, அதை கொஞ்சம் மாற்றி கொடுக்க சொன்னான். அவனும் அதை பெற்றுக்கொண்டான்.

-----------------------

ஆதி இரவு வீடு திரும்பினான் வெளிறிய முகத்துடன். கௌஷிக் அவனிடம் "மச்சா என்ன பொண்ணு வீட்ல கலக்கிட்டயா? எக்ஸாம்ல பாஸ் தானே?" என்று கேட்க

"ஹ்ம்ம்... எனக்கு அடிபட்ட இடம் கொஞ்சம் வலிக்குது. நான் ரெஸ்ட் எடுத்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றான். என்ன ஆச்சு இவனுக்கு என்று நினைத்துக்கொண்டான் கௌஷிக்.

அறைக்குள்ளே சென்றவன் காலை அவன் எவ்வளவு சந்தோஷமாக இருந்தான் நிலாவுடன் பேசும்போது. அனால் இப்போது அவளுடைய அழைப்பைக்கூட எடுக்க முடியவில்லை என்று நொந்துகொண்டான்

--------

“என்னடி யாரோ வருவாங்க அப்படினு சொன்ன? இவனும் அந்த பிரதீப் மாதிரியே பண்ணிட்டானா? உன் வாழ்க மட்டும் ஏன் இப்படி ஆகுது…” என்று நிலாவின் அம்மா அவளை திட்டிக்கொண்டிருந்தார்.

“என்னமா முடிவு பண்ணிருக்க… இந்த பையனும் வரல” என்று அவள் அப்பா கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல்

“நாளைக்கி ஒரு நாள் டைம் குடுங்கபா… நான் போய் அவனைப்பாத்து பேசிட்டு வந்துடறேன்” என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டு அறைக்குள் சென்று கதவை சாய்த்துக்கொண்டாள்.

“என்ன ஏமாத்திட்டயா ஆதி? நீ என்ன லவ் பண்ற மாதிரிதானே இருந்துச்சு. நான் ஏமாந்துட்டேனா? மறுபடியும்?” என்று வேதனையுடன் கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தாள்.

அன்றைய இரவு இருவருக்கும் பெருத்த பாரத்தை ஏற்படுத்தியது.

---------

அதிகாலையில் கௌஷிகிற்கு கால் வந்தது. கௌஷிக் ப்ரித்வியிடம் விரைந்து சென்றான் கருணா முளித்துக்கொண்டான் என்று சொல்வதற்கு.

அதை கேட்டு ஆனந்தை எழுப்பிய ப்ரித்வி “நம்ம கிளம்ப வேண்டிய டைம் வந்துடுச்சு. முடுஞ்சுதா நான் கேட்டது?”

அவனும் முடிந்தது என்பது போல் தலையசைத்தான். மூவரும் புறப்பட தயார் நிலையில் இருந்தனர்.

“கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டே "ஆதியை வரல?" கேட்டான் ப்ரித்வி. “அவன் தான் காலைலயே கிளம்பிட்டான்ல அந்த ஊருக்கு” என்றான் கௌஷிக்.

“ஓ மறந்துட்டேன். சரி. நம்ம கிளம்பலாம்” என்று மூவரும் புறப்படும்போது அங்கே பைரவி வர,

கௌஷிக் "வா பைரவி… ஆதி வீட்ல இல்லையே" என்றான். “ஓ எப்ப வருவான்?” என்று அவள் கேட்க "அவன் வர ஈவினிங் ஆயிடும்" என்றான்.

“சரி அம்மா என்ன ட்ரோப் பண்ணிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்னு சொன்னாங்க. அதுவரைக்கும் நான் இங்க இருக்கேன்” என்றாள்.

“Sure, எனக்கு வேல இருக்கு. நான் கிளம்பறேன். வேலக்காரன் இங்க இருக்கான். உனக்கு ஏதாச்சும் வேணும்னா அவன்கிட்ட கேளு” என்று புறப்பட்டான் கௌஷிக்.

---------

காலை விடிந்ததும் வீட்டிலிருந்து சீக்கரம் புறப்பட்டாள் நிலா. “இன்னிக்கி உனக்கு ஆஃபீஸ் லீவுனு சொன்ன?” அவள் அம்மா கேட்க “புருஷோத்தமன் சர் கூப்டாரு. அதான்” என்றாள்.

“இப்போ இதெல்லாம் வேணாம்னு சொன்னா நீ கேக்க மாட்டல” என்று அவள் அம்மா திட்ட "அம்மா ப்ளீஸ் என்னால வீட்லயே இருக்க முடியாது. நான் வரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்ப முற்படும் போது "சாப்பிட்டு போடி" என்றார் அம்மா.

“வேணாம்மா நான் பாத்துக்கறேன்” என்று புறப்பட்டாள் நிலா.

---------

அங்கே ப்ரித்வி கருணாவிடம் பேச ஆரம்பித்தான்.

“என்ன கொஸ்டின் பண்ண உங்ககிட்ட வாரென்ட் இருக்கா?” என்றான் கருணா. “இதெல்லாம் கரெக்ட்டா கேட்டுடுங்க” என்று அவனுக்கு IG அனுப்பி இருந்த அப்ரூவல் லெட்டர் காட்டினான்.

“எங்கிட்ட இருந்து எடுத்த போன்லாம் எங்க? நான் என் வக்கீல்ட்ட பேசணும்” என்றான் கருணா.

“பார்ரா... சர் குடுங்க சில ஆப்ஸ்’கு பாஸ்வெர்ட் பிரேக் பண்ண முடில. அப்பறம் அந்த ‘Clash of clans’ல இருந்து ஒரே மெசேஜ் பாஸ் உனக்கு” என்று ஆனந்த் சொல்ல ப்ரித்வி அவனை பார்த்து முறைதான்.

“சர். என்ன என் மொறைக்கறீங்க… இவரு பாட்டுக்கு எல்லாத்துக்கும் பாஸ்வெர்ட் வெச்சுட்டாரு. நீங்க வேற டே நைட் என்ன வேலப்பாக்க வெச்சுடீங்க. அதா... நிம்மதியா தூங்க கூட முடில” என்றான் ஆனந்த் சலித்துக்கொண்டு.

“போன்லாம் இருக்கட்டும். நீயும் அந்த MLA’வும் எதுக்காக அந்த ஊர் மக்களை அழிக்கும்னு நினைசீங்க?” என்று கருணாவை கேட்டான் ப்ரித்வி.

“MLA வா? யாரு அது? எனக்கு ஒன்னும் தெரியாது…” என்றான் சட்டென்று. “ஓ தெரியாதா. அப்போ இவனையாவது தெரிமா?” என்று ஒரு வீடியோ ப்லே செய்தான்.

அது ஆதியின் வீட்டில் கட்டப்பட்டிருந்தவனின் வீடியோ. அதை பார்த்தவன் கண்ணில் சிறிய பதட்டத்துடன் “இவன் யாரு? எனக்கு யாருன்னே தெரியாது” என்றான்.

“தெரியாதா... அப்போ இந்த வீடியோ பாரு” என்று மற்றொன்றை காட்டினான். அதில் கோவிலில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“கோவிலுக்கு நிறைய பேரு வருவாங்க. அப்போ என்கிட்ட சும்மா பேசிருப்பான். இதெல்லாம் ஒரு விஷயம்னு என்ன போய் கேட்டுட்டு” என்று நக்கலாக சிரித்தான்.

“என்ன பாத்தா உனக்கென்ன சிரிப்பா இருக்கா…” என்று அவனின் காலரை பிடித்தவாறே

"ஒரு டைம் பேசுனா பரவால்ல. ஆனா நீ போன மூணு வாரத்துல இவன்கிட்ட மினிமம் ஒரு முப்பது வாட்டி பேசியிருக்க. ரொம்ப அறிவாளி மாதிரி பேசறோம்னு நினச்சுக்காத” என்று அவனை விடுவித்தான்.

“உனக்கு இனொரு சர்ப்ரைஸ் தரேன். பாக்கறயா?” என்று ஆனந்த் எடிட் செய்த வீடியோ வை காட்டினான்.

-------

வீட்டிலிருந்து புறப்பட்ட நிலாவின் கார் ஆதியின் ஹாஸ்பிடலை வந்தடைந்தது. “காலை பத்து மணிக்கெல்லாம் ஹாஸ்பிடல் வந்துடுவேன்” என்று ஆதி சொன்னதைவைத்து அங்கே வந்திருந்தாள்.

உள்ளே வந்தவள் ரிசெப்ஷனிஸ்ட்டிடம் "டாக்டர் மீட் பண்ணும்…" என்று கேட்க “டாக்டர் ஆதித்யாவா? இல்ல டாக்டர் கௌஷிக்கா?” கேட்டாள் ரிசெப்ஷனிஸ்ட்.

“ஆதித்யா” என்று நிலா சொல்ல “அவரு இன்னிக்கி அஃப் டியூட்டி (off duty). ஹாஸ்பிடல் வரமாட்டார் மேடம்” என்றாள் அந்த பெண்.

கேஸ் இருக்குனு சொன்னானே என்று நினைத்தவள் "இங்க இல்லாட்டி வேற எங்கயாவது பார்ப்பாரா?" என்று நிலா கேட்க

"இல்ல மேடம். இன்னிக்கி எந்த அப்பாய்ன்ட்மென்ட் வேணாம்னு சொல்லிட்டார். வேணும்னா நீங்க டாக்டர் தீரன் பாக்கறீங்களா?” என்று கேட்டாள். “இல்ல பரவால்ல” என்று அங்கிருந்து புறப்பட்டாள் நிலா.

“ஏதோ கேஸ் இருக்குனு சொன்னான் எங்க இருப்பான்? வீட்டுக்கு போலாமா…” என்று யோசித்தவள் அவனுடைய வீட்டிற்கு புறப்பட்டாள்.

சிறிது நேரத்தில் அவனின் வீட்டை சென்றடைந்தவள் காலிங் பெல் அடிக்க, கதவை திறந்தாள் பைரவி.

Thank you so much for reading. Do give your feedback and keep supporting me please..

BeFunky-collage (22).jpg
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top