• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன கொடுமை சார் இது? 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஶ்ரீவிஜய்

மண்டலாதிபதி
Joined
May 13, 2019
Messages
138
Reaction score
685
Location
Chennai
article_28296638.jpgமறுநாள் கண்விழித்த வெண்மதி.. தன்னருகில் பட்டத்தைக் கட்டி கொண்டு.. சற்றே இதழ் விரிய தூங்கிய தருணின் கலைந்த தலைமுடியை இன்னும் கலைத்து விட்டு ரசித்திருக்கையில்..


"மதி.. நைட் எத்தன மணிக்கு ரெண்டு பேரும் தூங்கினீங்க?" கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார், வெண்மதியின் அம்மா சுமதி.


"சீக்கிரம் தூங்கிட்டோம்மா.."


"இன்னிக்கு ஒரு நாளாவது உண்மைய பேசேன்டி.."


"நான் என்னைக்குமா பொய் பேசிருக்கேன்..?"


"நீ என்னத்தையும் பேசிட்டு போ.. இன்னிக்கு ஊருக்கு கிளம்பணும்.. இவன் கூடவே சுத்திட்டு இருக்காம கொஞ்சம் கூடமாட வந்து வேலையப் பாரு.."


"வேலையெல்லாம் என்னை செய்ய சொல்லாதீங்கம்மா.. சுத்த போர்.."


"உன்னை ஆஃபீஸ்ல வச்சு எப்டி தான் இந்த பய வேலை வாங்கறாங்கனோ தெரியல.. சரியான சோம்பேறி"


சோம்பேறி என்றதில் சிலிர்த்துக் கொண்டு.. அன்னையிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்து விட்டாள், பல்லைக் கூட விளக்காமல்..


வெண்மதி.. ஶ்ரீதர் - சுமதி தம்பதிகளின் தவப் புதல்வி. அஜய்யின் 'தொல்லை' தங்கை. B. Arch., படித்து விட்டு.. அண்ணனின் கம்பெனியில் பணிபுரிகிறாள்.


'Right Choice Interiors' என்ற கம்பெனியின் எம். டி. வெண்மதியின் அண்ணன் அஜய்.. ஆதலால் வேறு வழியில்லாமல் இவள் அங்கு கொட்டும் குப்பைகளை பொறுத்துக் கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.


இரக்க குணம் கொண்ட பாசக்காரி. வால்தனங்கள் மிகுந்த சேட்டைக்காரி. ஆதவனின் சேட்டைக்கு இவளின் சேட்டைகள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல.


ஶ்ரீதர் சென்னையில் சிறுவர்களுக்கான துணிக்கடை வைத்து நடத்தும் சிறு வியாபாரி. சுமதி இனிமையான இல்லத்தரசி.


இப்போது சுமதியின் தங்கை சத்யாவின் வீட்டிற்கு தருணைப் பார்க்கவென்று இரண்டு நாள் பயணமாக வேலூர் வந்துள்ளனர். சுமதியின் சித்தி பெண் சத்யா.. அவரை விட பதினான்கு வயது இளையவர்.


சுமதிக்கு பத்தொன்பது வயதிலேயே திருமணம் முடித்து விட்டதால்.. சத்யாவின் ஆறாம் வயதிலேயே நம் வெண்மதி பூமியை பார்க்க வந்து விட்டாள். சத்யாவிற்கும், வெண்மதிக்கும் இடையேயான நட்பிற்கு.. ஆறு வயது இடைவெளி பெரிதாகத் தோன்றாததால்.. வெண்மதி அவரை சித்தி என்று இதுவரை அழைத்ததே இல்லை. எப்போதும் சத்யா தான்..!


அன்றலர்ந்த மலர் போல்.. குளித்து இளம் பச்சை வண்ண சுடிதாரில்.. ஈரக் கூந்தலை டவலால் துவட்டிக் கொண்டே.. உள்ளே வந்த சத்யா, "வெண்ணி.. காலைலயே எங்கக்காக்கிட்ட வம்பு வளர்க்க ஆரம்பிச்சிட்டியா? குளிச்சிட்டு சாப்ட வா.. தோசை ஊத்தறேன்.. என்ன சட்னி செய்யட்டும்?" கேட்டாள்.


"ஆமா.. அவ கேக்கறத செஞ்சு குடுத்து ஊட்டி விட வேண்டியது தான.. ஏண்டி இப்டி இருக்க? என்ன சட்னி வேணுமோ அவளையே செய்ய சொல்லு.."


"இன்னும் கொஞ்ச நேரம் தான் இங்க இருப்பா.. அப்புறம் எப்ப பார்க்கப் போறோமோ? என் திருப்திக்கு நானே செஞ்சு குடுக்கறேன். உன் வீட்ல போய் அவள வேலை வாங்கிக்கோ.."


"அப்டி சொல்லு சத்யா.. வீட்ல அப்பாவோட சப்போர்ட் எனக்கு எப்பவும் இருக்கும். அங்க என்னை இப்டிலாம் மிரட்ட முடியாதுல.. அதான் இங்க ட்ரைப் பண்ணி பார்க்கறாங்க உன் சிஸ்ஸி.. பாவம் அவங்களுக்கு தெரியல. அவங்க தால் என்கிட்ட எப்பவுமே குக் ஆகாது.."


"அந்த தைரியம் தான் உனக்கு.. உன்னை எதாவது சொன்னா.. அந்த மனுஷன் வந்துடுவார் வரிஞ்சு கட்டிட்டு.."


"பின்ன அவர் பொண்ண வேலை வாங்கினா அவருக்கு கோவம் வராதா?"


"அடியே.. போதும்டி வழக்கடிக்காம போய் குளிச்சிட்டு வா.." என்றாள் சத்யா.


வெண்மதி குளித்து முடித்து.. தருணை எழுப்பி அவனையும் குளிக்க வைத்து.. இருவரும் தங்கள் சேட்டைகளோடு அந்நாளைத் துவங்கினர்.


*********


காலை உணவை முடித்துக் கொண்டு, லேப்டாப்போடு அமர்ந்திருந்தான், ப்ரியன்.


ப்ரியனின் அப்பா கார்த்திகேயன். அம்மா பல்லவி. ஒரே தங்கை பாரதி. ப்ரியன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே கார்த்திகேயன்.. மாரடைப்பில் இறைவனடி சேர்ந்து விட்டார்.


பல்லவி கல்லூரிப் பேராசிரியை.. கணவரின் இழப்பில் மனம் சோர்ந்து தான் போனார். கார்த்திகேயன் கோடீஸ்வரர் இல்லையென்றாலும் ஓரளவு பணக்காரர் கேட்டகிரி தான். சில சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தாலும்.. அதை பல்லவி.. பிள்ளைகளின் பிற்காலத்திற்கென நினைத்து.. வைராக்கியத்துடன் அவரின் வருமானத்தில் பிள்ளைகளை அவர்கள் விரும்பியப் படிப்பில் சேர்த்து படிக்க வைத்து விட்டார்.


ப்ரியனின் தங்கை பாரதி.. ஒரு ஃபேஷன் டிசைனர்.. தற்போது திருமணமாகி மும்பையில் வசிப்பவள், படித்த படிப்பை வீணாக்காமல்.. பொட்டிக் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறாள்.


கல்லூரி செமஸ்டர் லீவு இருப்பதால் சாவகாசமாய் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார் பல்லவி..


"என்னடா.. இந்நேரம் சைட்டுக்கு போகணும்னு கால்ல சக்கரத்த கட்டிட்டு கிளம்பிருப்ப.. இன்னிக்கு இன்னும் லேப்ப நோண்டிட்டே உட்கார்ந்துருக்க?"


"இன்னிக்கு ஆஃபீஸ் தான் போகப் போறேன்.. லேட்டா போய்க்கலாம்.."


"விஷ்வா பார்த்துக்குவான்ற தைரியம் உனக்கு.."


'இத்தன நாளும் அப்டி இருந்தது தான்மா தப்பா போச்சு..'


இன்னும் அம்மாவிடம் தான் விஷ்வாவால் ஏமாற்றப் பட்டதை சொல்லவில்லை. எப்படியும் தன்னதை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை ஆழிப்பேரலையாய் அலைமோதிக் கொண்டிருந்தது.


"பல்லவி ஆன்ட்டிஈஈஈ…" கத்திக் கொண்டே ஓடி வந்தான் தருண், கூடவே வெண்மதியும்..!


"ஹேய் தரூக் குட்டி.. வா வா.. இன்னிக்கு என்ன கேம் விளையாடலாம்? வாம்மா வெண்மதி.."


"ஹாய் ஆன்ட்டி.."


"சாப்ட்டாச்சா ரெண்டு பேரும்? வாங்க.. எங்க வீட்டு சமையல டேஸ்ட் பண்ணிப் பாருங்க.."


"இல்ல ஆன்ட்டி.. தாங்க்ஸ்.. இப்ப தான் சாப்ட்டோம்.."


"ப்ரியன்.. இவ வெண்மதி.. நம்ம சத்யாவோட அக்கா பொண்ணு.. நேத்து கூட உன்கிட்ட சொன்னேனே.."


"தெரியும் ஆன்ட்டி.. ஹாய் மிஸ்டர் ப்ரியன்.."


"தெரியுமா? எப்டிடா?" என்று மகனைக் கேட்டார்.


"அது…"


"நேத்து மொட்டை மாடில பட்டம் விடும் போது ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க.. இல்ல வெம்மதி?"


"ஹ்ம்ம்.. ஆமா ஆன்ட்டி.."


'நல்லவேளை பயபுள்ளைக்கு நைட் எத்தன மணிக்குனு சொல்லத் தெரியல..'


"ஓ! சரி சரி.. இரு நான் சாப்ட்டு வந்துடறேன்.. நம்ம நேத்து மாதிரி ஹைட் & சீக் விளையாடலாம்.."


"விளையாட முடியாது ஆன்ட்டி.. வெம்மதி ஊருக்கு போறாளாம்"


"ஆமாவா வெண்மதி?"


"ஆமா ஆன்ட்டி.. அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.."


"ரெண்டு நாள் நீ இருந்த.. நல்லா கலகலனு இருந்தது.. உன் கூட சேர்ந்து நானே சின்னப் பிள்ளையா மாறிட்ட மாதிரி இருந்தது.. அடுத்து எப்பமா வருவ.."


"இன்னும் ரெண்டு மாசத்துல தருணோட பர்த்டே வருது ஆன்ட்டி.. அதுக்கு கண்டிப்பா வருவேன்.. சரி கிளம்புறேன் ஆன்ட்டி.. பை ப்ரியன்.."


"ஹ்ம்ம்.. பை.." என்ற ப்ரியனின் மூளை ஒரு நிமிடம் தாமதித்து.. எதையோ கைப்பற்றியதை உணர்ந்து.. சென்று கொண்டிருந்தவள் கேட்டைத் தாண்டும் முன்.. வேகமாக வெளியே போய் அழைக்க நினைத்தவன்.. அவள் செய்த செயலில் அசையாமல் நின்று விட்டான்.


போர்டிகோவில் நின்றிருந்த ப்ரியனின் பைக்கை அசால்ட்டாக ஓடிப் போய் தாண்டி சென்று.. அவளைப் பார்த்து கைத் தட்டி குதித்து ஆர்பரித்துக் கொண்டிருந்த தருணிடம் ஹைஃபை கொடுத்தாள், வெண்மதி.


மலைத்து நின்றவன்.. அவள் வெளியே செல்வதை உணர்ந்து.. தலையை உலுக்கிக் கொண்டு, "மிஸ். வெண்மதி.." என்றழைத்தான்.


திரும்பியவள் மாறாத புன்னகையுடன்.. "சொல்லுங்க ப்ரியன்.." என்றாள்.


"வந்து.. ஆதவனோட நம்பர் வேணுமே.. ப்ளீஸ்.. நேத்து வாங்க மறந்துட்டேன்.."


"நம்பரா? நேத்து பத்து, பதினஞ்சு நிமிஷம் பேசிருப்பீங்களா? அதுக்குள்ள அந்த இடியட் உங்கள மெஸ்மரைஸ் பண்ணிடுச்சா?" என்று விழி விரித்தாள்


சிரிப்புடன், "உங்களுக்கு அதுல ரொம்ப பொறாமை போல.." என்றான்.


"பின்ன இல்லயா? எல்லாரையும் பேசியே கவுத்துடுவான் ஃப்ராடு.."


"ஹாஹா.. அவனை ஃப்ராடுனுலாம் சொல்லாதீங்க. நாங்க ரெண்டு பேரும் வாடா போடா சொல்ற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்.."


"ஹாங்.. இது எப்ப?"


"நேத்து தான்.."


"ஓ..!" அவளிடம் ஆதவனின் மொபைல் நம்பரைப் பெற்றுக் கொண்டு விடைக் கொடுத்தான்.


விடைப்பெற்று திரும்பியவள்.. மீண்டும் வந்து, "ப்ரியன்.. உங்க நம்பர் தரலியே..?" கேட்டாள்.


"என் நம்பரா?" என்று இழுத்தான்.


"ஆமா.. எனக்கு வேணும்.. குடுங்க.."


'இந்த பொண்ணுக்கு எதுக்கு நம்ம நம்பர்?' என யோசித்தாலும்.. தன் எண்ணை தரவே செய்தான்.


"ஓகே ப்ரியன்.. நானும் உங்க ஃப்ரெண்ட் தான? எப்ப வேணாலும் கால் பண்ணலாம் தான?"


"தாராளமா மிஸ் வெண்மதி.."


"அந்த மிஸ்ஸ கட் பண்ணுங்க ப்ரியன்.. ஓகே பார்க்கலாம்.. பை.."


வெண்மதி சென்றதும் உள்ளே வந்தவனை.. "ப்ரியன்.. வெண்மதி நல்ல பொண்ணா தெரியறா இல்ல? அவங்க அம்மா கூட நல்லா பழகறாங்கடா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு ஓகேனா நான் சத்யாகிட்ட பேசட்டுமா?" ஆர்வமாய் மகன் முகம் பார்த்துக் கேட்டார்.


சற்றே திகைத்த ப்ரியன், "ம்மா.. லூசு மாதிரி பேசாதீங்க. என்கிட்ட மாதிரி சத்யாக்காகிட்ட உளறி வைக்காதீங்க.. வெண்மதி என்னோட நல்ல ஃப்ரெண்ட்.. தட்'ஸ் இட்" என்றான்.


"ஏண்டா.. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் நினைக்கிறேன். உளருரேன்னு சொல்ற? என்னோட ஒரு பார்வைலயே எங்க காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் எல்லாரும் பத்தடி தள்ளி நிப்பாங்க தெரியுமா? நீ என்னடான்னா என்னை பைத்தியக்காரி ரேஞ்சுக்கு பேசற.. லூசு, உளருறேன்னுட்டு.." ஆற்ற மாட்டாமல் கத்திக் கொண்டிருந்தார்.


"கால்ம் டவுன் மாம்.. வெண்மதிய நான் அப்டிலாம் நினைக்கல. அதான் சொல்றேன்.."


"நேத்து தான் பார்த்துருக்க.. அதனால அப்டி எதுவும் தோணாம இருக்கலாம். கொஞ்ச நாள் ஃப்ரெண்ட்ஸா பழகினப்புறம் பிடிக்கலாம் இல்ல?"


"நோ.. எப்பவும் தோணாது.."


"ஏண்டா.. இப்டி சொல்ற?"


"மாம்.. புரிஞ்சிக்கோங்க.. அவளப் பார்த்தப்ப அழகான பொண்ணா.. தேவதை மாதிரி தான் தோணுச்சு. ஆனா என் லைஃப் இவக்கூடனு தோணவே இல்லம்மா. வெண்மதி விளையாட்டு பொண்ணு. நான் சிரிக்கக் கூட காசு கேக்கறவன்னு நீங்க தான சொல்லுவீங்க? அவளுக்கு அவள மாதிரி ஒருத்தன் தான் லாயக்கு. மோர் ஓவர்.. நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்.."


அவன் சொல்வதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தவர்.. அவனின் கடைசி வரியில், "என்னடா சொல்ற?" என அதிர்ந்தார்.


"பட், ப்ரேக்கப் ஆகிடுச்சு.."


"என்னடா சொல்ற?"


"ஆனா அவள மறந்துட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியும்னு தோணலம்மா.."


"ஹாங்.. என்னடா சொல்ற?'


"ச்சு.. என்னதிது..?"


"சரி வெண்மதி வேணாம்.. நீ லவ் பண்ற பொண்ணு யாருனாவது சொல்லு.. அம்மா போய் பேசறேன்.. என் பையன ஏன் பிடிக்கல கேக்கறேன்.."


"நோ மாம்.. வேணாம்னு விட்டு போனவக்கிட்ட போய் திரும்ப கேக்கற அளவு ஒண்ணும் உங்க பையன் குறைஞ்சிடல.."


"அப்ப என்ன பண்ற ஐடியால இருக்க? காவி கட்டிட்டு போகப் போறியா? நான் பெத்து வச்சிருக்கறது கறிவேப்பிலை கொத்து மாதிரி ஒரே ஒரு பையன்.."


"நான் என்ன வேப்பிலை மாதிரி ரெண்டு பையன்னா சொன்னேன்?"


"டேய்.. என்னப் பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா? எங்க காலேஜ்ல ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் நான் ஒரு பார்வை பார்த்தா…."


"ஷ்ஷ்.. ம்மா.. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்ல.. போதுமா? ஆள விடுங்க"


"இதுக்கு தான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன்.. உனக்கு முடிச்சிட்டு பாரதிக்கு முடிக்கலாம்னு.. அவளுக்கு தான் மொதல்ல முடிக்கணும்னு ஒத்தக் கால்ல நின்ன.. இப்ப அவளுக்கும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுது.. இப்பவும் இஷ்டம் இல்ல சொன்னா என்ன அர்த்தம்..?"


"இஷ்டம் இல்லனு அர்த்தம்.." பேச்சை முடித்துவிட்டு, உள்ளே சென்று விட்டான்.
 




Last edited by a moderator:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top