• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன கொடுமை சார் இது? 4(a)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஶ்ரீவிஜய்

மண்டலாதிபதி
Joined
May 13, 2019
Messages
138
Reaction score
685
Location
Chennai
article_28296638.jpgப்ரியன்.. அன்று மதிய ஒரு மணியளவில்.. அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் நின்று.. ஆதவனை அழைப்பதற்காக மொபைலை எடுத்தான். திடீரென.. உள்ளிருந்து சேர் உருண்டு விழும் சத்தத்தில் திடுக்கிட்டுப் போய்.. அனிச்சையாய், கதவை தட்டாமலேத் திறந்தான்.

திறந்தவனின் இதழ்கள் அவனின் அனுமதி இல்லாமலேயே.. புன்னகை சிந்தியது. சேர் ஒரு பக்கமும், டீப்பாய் மறுபக்கமும் உருண்டு கிடந்தது. சோஃபாவின் இந்தப் பக்கம் ஆதவனும்.. அந்தப் பக்கம் பிங்க வண்ண சல்வாரில் ப்ரியனின் அம்மாவின் வயதையொத்தப் பெண்மணியும் ஓடிப் பிடித்து விளையாடும் தினுசில் நின்றிருந்தனர்.

"டேய் உன்னைக் கொன்னுடுவேன்டா.. ஒழுங்கா குடுத்துடு.."

"ம்மா.. ம்மா.. ப்ளீஸ்மா.. மேட்ச் இருக்குதுமா.. முடிஞ்சதும் தரேன்மா.." தன் அன்னையிடம் இருந்து.. டிவி ரிமோட்டை கைப்பற்றியிருந்த ஆதவன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

"நானும் தான்டா வ்ரெஸ்ட்லிங் பார்க்கணும்.. இன்னிக்கு என் ராக் வர்றான்டா.. மரியாதையா ரிமோட்டக் குடுத்துடு.. "

"அது அரதப் பழசும்மா.. யூ - ட்யூப்ல இருக்கும்.. நான் உங்க மொபைல்ல டவுன்லோட் பண்ணி தரேன். ப்ளீஸ்ம்மா.. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் ரிமோட் நான் வச்சிக்கறேன்மா.."

"ஏன் நீ உன் மேட்ச்ச மொபைல்ல பார்க்க வேண்டியது தான?"

"அதுல பார்த்தா மேட்ச் நல்லாவே இருக்காதும்மா.. என்ன இருந்தாலும் பெரிய ஸ்க்ரீன்ல பாக்கற மாதிரி இருக்குமா?"

"ஏன் அந்த பெரிய ஸ்க்ரீன்ல நான் மட்டும் என் ராக்-அ பார்க்க மாட்டேனா?"

"தெய்வமே.. அவன் ஜட்டியோட உருண்டு விழறத பார்த்து ஜொள்ளு விடப் போறீங்க.. அத பெருசுலப் பார்த்தா என்ன? சிறுசுலப் பார்த்தா தான் என்ன?"

"ஹாஹாஹா…."

இவ்வளவு நேரம் இருவரின் விளையாட்டைப் பார்த்திருந்த ப்ரியன்.. வாய்விட்டு சிரித்தான்.

'எவ அவ..' வடிவேலு ரேஞ்சில் அன்னையும், மகனும் திரும்பி பார்த்தனர்.

ப்ரியனைப் பார்த்த ஆதவன், "ஹாய்டா.. வா வா.. ம்மா.. திஸ் இஸ் ப்ரியன்.. மை ஃப்ரெண்ட்" என்று தன் அன்னை பார்கவிக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு.. ப்ரியனின் புறம் திரும்பி.. "ப்ரியன்.. இவங்க…."என்று ஆரம்பிக்கும் முன்.. "ஹாய் ப்ரியன்.. என் பேர் கூட உன்னோடது மாதிரி ரொம்ப அழகா இருக்கும் தெரியுமா..?" என்றார்.

என்ன பேசுவதெனப் புரியாமல் புன்னகைத்தவனிடம், "என்ன பேருனு கேக்க மாட்டியா?" என்று முகம் சுருக்கினார்.

"சொல்லுங்கம்மா.. என்ன பேரு..?"

அவன் கேட்டதில் முகம் மலர்ந்தவர், "என் பேர் கவி.. நல்லா இருக்குல?" கேட்டார்.

"ம்மா.. முன்னாடி உள்ள 'பார்' விட்டுட்டீங்களே.." - ஆதவன்.

"போடா.. அது ரொம்ப ஓல்டு நேம்.. அதான் விட்டுட்டேன்.. ஆதார் கார்டுல கூட மாத்தி தர சொன்னேனே ஆதூ.. அதுப் பத்தி விசாரிச்சியா?"

"ஆமா.. ரொம்ப முக்கியம் பாருங்க.."

"ஆமாண்டா.. முக்கியம் தான். கவி னு மாத்தினா தான் யங்கா இருக்கும்.."

"எப்டியோ இருந்துட்டு போகட்டும்.. ப்ரியன் உங்க முழுப் பேரு தெரியாம குழம்பிட்டு இருக்கான். நீங்க சொல்றீங்களா? இல்ல நான் சொல்லட்டுமா?"

"ம்க்கும்.." என்று அழகாய் முகம் சுளித்தவர்.. "பாஆஆர்கவி.. போதுமா?" என்று ராகம் பாடினார்.

அவரின் மனதைப் புரிந்த ப்ரியன், "பார்கவி.. நைஸ் நேம்.. என் காலேஜ்மேட் பேரு கூட பார்கவி தான்ம்மா.." என்றான்.

"ஆமாவா ப்ரியன்? இந்த காலத்துல கூட இந்த ஓல்டு நேம் வைக்கறாங்களா என்ன?" ஆச்சர்யமாகக் கேட்டார்.

"வைக்கறாங்கம்மா.. அழகான பேராச்சே.."

"அப்ப சரி.. டேய் ஆதூ.. எதையும் மாத்த வேணாம். பார்கவியே இருக்கட்டும்.."

"ஹ்ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்.. வீட்டுக்கு வந்தவனுக்கு சாப்ட எதுவும் குடுக்கற ஐடியா இருக்கா இல்லையா?"

"அச்சோ.. மறந்தே போயிட்டேன் பாரு.. ப்ரியன்.. உட்காரு.. தோ வந்துடறேன்.." என்று கிச்சனிற்கு ஓடினார்.

"ஏண்டா.. அம்மாவ துரத்தற? நான் சாப்ட்டு தான் வந்தேன்."

"உன்னை காப்பாத்துனேன்னு சந்தோஷப் பட்டுக்கோடா.. இல்லனா.. 'இந்த சல்வார் நல்லாருக்கா? இந்த குர்தி மேட்சா இருக்கா'னு இப்ப உனக்கு ஃபேஷன் ஷோவே நடத்திக் காட்டிடுவாங்க.. புவர் லேடி.."

"ஆதவ்.. உங்க அப்பா…" என்று இழுத்தான்.

சின்னப் புன்னகையுடன் மேலே விரல் உயர்த்திக் காட்டினான் ஆதவன்.

"ஓ! சாரிடா.. நீயும் என்னை மாதிரி தானா?" என்று தன் தந்தையைப் பற்றி கூறினான்.

கேட்டு கொண்ட ஆதவன், "அப்பா ரெண்டு வருஷம் முன்ன தான் போனார்டா.. கார்டியாக் அரெஸ்ட்.. அம்மாவ பழைய மாதிரி மீட்டு வர தான் கஷ்டமாப் போச்சு.. இப்பக் கூட எனக்காக தான் இப்டி ஏதாவது சேட்டை பண்ணிட்டு இருக்காங்க.." என்றான்.

அதற்குள் கையில் காபி ட்ரேயுடன் வந்த பார்கவி, "என்னைப் பத்தி என்னடா பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..?" கேட்டுக் கொண்டே காபியை எடுத்து ப்ரியனிடம் கொடுத்தார்.

"ஆமா.. நீங்க நேத்து ஐ. நா சபைல ஆணைப் பிறப்பிச்சி, அறிக்கை விட்டுட்டு வந்தீங்க பாருங்க.. அது தான் உங்களப் பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தேன்.."

"ஹ.. ஐ. நா சபைல மட்டுமா? ஐன்ஸ்டீனுக்கேக் கூட நான் ஐடியா குடுப்பேனாக்கும்.." என்று கெத்தாக முகத்தை வைத்துக் கொண்டார்.

"நாசால சாட்டிலைட் அனுப்ப ஆலோசனை குடுத்தீங்களே.. அத விட்டுட்டீங்க?"

"போடா அரட்டை.. ப்ரியன்.. இவ்ளோ நல்ல பையனா இருக்கியே.. எப்டி இவன் கூட சேர்ந்த? உன் நல்லதுக்கு சொல்றேன் கேளுடா.. இவனோட கெட்ட சகவாசம் உனக்கு வேணாம்.. உன்னையும் கெடுத்துடுவான். இப்பவே அவன் ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணு.."

"சொல்லிட்டாங்க நல்லகுடி நாணயம்.. தூத்துக்குடி வெண்கலம்.. கேட்டுக்கோடா.."

இருவரும் ஒருவரையொருவர் வாரிக் கொண்டதைப் பார்த்த ப்ரியனுக்கு குடித்த காபி புரையேறியது. ஆதவனின் குறும்புத் தனங்கள் எங்கிருந்து வந்ததெனப் புரிந்து கொண்டவன் மனம் நிறையப் புன்னகைத்தான்.

பார்கவி காபி மக்கை எடுத்துக் கொண்டு நகர்ந்ததும், "வெண்மதிக்கேத்த மாமியார்.." என்றான்.

"ஹ்ம்ம்.. அவ வந்ததும் ரெண்டையும் கட்டி எப்டி மேய்க்கப் போறேனோ தெரியலடா.." என்று போலியாய் சலித்துக் கொண்டான்.

"கஷ்டம் தான் போல.. காலேஜ் ப்ரொஃபசரா இருக்க எங்கம்மாவயே ஹைட் அண்ட் சீக் விளையாட வச்சிருக்கா உன் ஆளு.."

"ஹாஹா.. அவ அப்டி தான்.. சரி சொல்லுடா.. ஃபோன் பண்ணி மீட் பண்ணனும் சொன்ன..? என்ன விஷயம்? அந்த போங்கு நீ கேட்டதும் நம்பர் குடுத்துடுச்சா?" கேட்டான்.

"ஹ்ம்ம்.. கொஞ்சம் பர்சனலாப் பேசணும் ஆதவ்.."

"அப்ப வா.. நம்ம வெளில எங்கயாவது போலாம்.."

"உனக்கு இன்னிக்கு ஆஃபீஸ் இல்ல?"

"இருக்குது தான்.. மேட்ச் பார்க்கணுமேனு ரவி சர்க்கிட்ட வயித்துவலினு சீன் போட்டேன்.." என்று கண்சிமிட்டியவன்.. "ஆனா பாரு.. இந்தம்மா.. 'ராக்'கப் பார்க்கணும்.. 'பேக்'கப் பார்க்கணும்னு கடுப்படிக்கிறாங்க." என்று எரிச்சலானான்.

"ஹாஹா.. சரி வா வெளியே போய் பேசுவோம்.."

"ஹ்ம்ம்.. ட்டூ மினிட்ஸ்.." சொன்னதைப் போல் இரு நிமிடங்களில் தயாராகி வந்தவனை.. அருகிலிருந்த சிறுவர் பூங்காவிற்கு அழைத்து சென்றான் ப்ரியன்.

"இங்க எதுக்குடா? சீ சா விளையாடவா கூட்டிட்டு வந்துருக்க?"

"ஹ்ம்ம்.. அல்மோஸ்ட் அப்டி தான்.." என்ற ப்ரியனின் முகம் சீரியஸ்னெஸ்ஸை தத்தெடுத்திருந்தது.
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
View attachment 13047ப்ரியன்.. அன்று மதிய ஒரு மணியளவில்.. அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் நின்று.. ஆதவனை அழைப்பதற்காக மொபைலை எடுத்தான். திடீரென.. உள்ளிருந்து சேர் உருண்டு விழும் சத்தத்தில் திடுக்கிட்டுப் போய்.. அனிச்சையாய், கதவை தட்டாமலேத் திறந்தான்.

“சொல்லிட்டாங்க நல்லகுடி நாணயம்.. தூத்துக்குடி வெண்கலம்.. கேட்டுக்கோடா.." ???

பார்கவி நீங்க செம்ம கவி ... நீங்க ராக் விசிறியா ... என்னால சிரிச்சு முடியவில்லை ???

ஜாலியான பதிவு ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top