• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன கொடுமை சார் இது? 4(c)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஶ்ரீவிஜய்

மண்டலாதிபதி
Joined
May 13, 2019
Messages
138
Reaction score
685
Location
Chennai
Screenshot_2019-06-19-10-12-47.pngகாதில் இருந்த ப்ளுடூத்தை இடது கையால் பற்றி.. "வெண்மதி.. இங்க நிறைய கடைகள் இருக்கே.. நீங்க எங்க இருக்கீங்க?" என்று கேட்டான்.

"நான் கடைக்கு வெளில மெயின் ரோட் பக்கத்துல தான் நிக்கறேன்.. கொஞ்சம் லெஃப்ட்ல பாருங்க ப்ரியன்.." சொல்லிக் கொண்டே தன் வாழைத்தண்டு கரத்தை உயர்த்தி காட்டினாள்.

அவளைப் பார்த்ததும்.. 'ஹப்பாடா' என முகம் மலர்ந்தவன்.. மொபைலில் அழைப்பை நிறுத்தி விட்டு, தன் வேக நடையுடன் அவளருகில் சென்றான்.

"ஹாய்.."

"என் கூட வாங்க ப்ரியன்.." என்றவள் முன்னால் நடந்தாள்.. நடந்தாள்.. நடந்து கொண்டே இருந்தாள். இடதுபுறம் திரும்பி நீண்ட நடை பாதையிலும், பின் வலது புறம் திரும்பியும் நடந்து போய் கொண்டே இருந்தாள்.

இது போன்ற சின்ன சின்னக் கடைகளை இதுவரை திரும்பிக் கூடப் பார்த்திராத ப்ரியன்.. வியர்த்து வழிந்த படி, அங்கிருந்த கடைகளை மலைத்துப் போய் பார்த்து கொண்டே அவள் பின்னால் நடந்தான்.

'இத தான் லொகேஷன்னு சொன்னாளா? டேய் ஆதவா.. முடியலடா..' மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே.. ஒரு வழியாக அங்கிருந்த ஒரு கடைக்குள் நுழைந்தாள்.

அங்கு நடுத்தர வயதில் இருந்த ஒருவரைப் பார்த்து.. கைகளை கட்டிக் கொண்டு, ஏற்ற இறக்கத்துடன்.. "என்ன அண்ணாத்தே.. என் டீலுக்கு ஒத்து வர்றியா.. இல்லாங்காட்டி சார உன் பேர்ல எஃப்ஐஆர் போட சொல்லவா? சார் என் வீட்டாண்ட தான் இருக்கார்..‌ நான் 'ம்ம்' னு சொன்னா போதும்.. உடனே செஞ்ஞ்..சுடுவார்.. " என்றாள், பக்கா சொர்ணாக்காவைப் போல்..!

ப்ரியன் பேயறைந்தது போன்ற முக பாவத்துடன்.. நேற்று இரவு பௌர்ணமி நிலவொளியில் தன்னை ரட்சிக்க வந்த தேவதையைப் போல் இருந்தவள் இவள் தானா என்று கண்களை மூடித் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"சர்.. சர்.. சர் உங்கள தான்.." அவள் தன்னை உலுக்குவதை உணர்ந்து.. தூக்கத்திலிருந்து விழித்தவனைப் போல, "ஹான்.. சொல்லுங்க வெண்மதி.." என்றான்.

"இவ்ளோ நேரம் சொல்லிட்டு தான இருந்தேன்? என்னனு கேளுங்க சர்"

"என்ன..?"

"ஹய்யோ.. என்கிட்ட இல்ல.. இதோ நிக்கறார் பாருங்க இந்த கடைக்காரர்.. அவர்க்கிட்ட கேளுங்க சொன்னேன்.."

"என்ன சர்..? எனி ப்ராப்ளம்?" என்று கடைக்காரரிடம் கேட்டான்.

வேகமாக அவன் காதருகே சென்று.. "ஸ்ஸ்.. கெடுத்தீங்களே காரியத்தை.. உங்கள போலீஸ்னு சொல்லி வச்சிருக்கேன்.. அவர போய் சாரு மோருன்றீங்க? 'என்னய்யா பொம்பள கைல ராங்கு பண்றியா'னு சவுண்ட் விடுங்க.." என்றாள், சின்னக் குரலில்..!

திருதிருவென முழித்தவனைப் பார்த்து.. "ஹய்யோ.. ஏன் இப்டி அம்மாஞ்சி மாதிரி முழிக்கறீங்க ப்ரியன்..? சரி.. நான் பேசறேன்.. நீங்க அப்டியே என்னை ஃபாலோ பண்ணுங்க.." என்றாள்.

'அம்ம்மா..ஞ்சியா? நம்ம மூஞ்சி என்ன அப்டியா இருக்குது?' யோசித்து கொண்டே.. அவள் பேசுவதை கவனித்தான்.

"இங்க பாருங்க அண்ணே.. இப்ப முடிவா என்ன சொல்றீங்க? இந்த யானை செட்க்கு முப்பது பர்சண்ட் டிஸ்கௌண்ட் தருவீங்களா மாட்டீங்களா..?"

"நீ எத்தன வாட்டி கேட்டாலும் தர முடியாது தான் போம்மா.. ஆள இட்டாந்தா மட்டும் பயந்துடுவோமா நாங்க..? ஓனர் வர்ற நேரமாச்சு.. இடத்த காலி பண்ணி போயிட்டே இரு.."

"அப்ப ஓனர் நீ இல்லயா? கஸ்டமர் சாட்டிஸ்ஃபேக்ஷன் தான் முக்கியம்னு உனக்கு சொல்லி தரலயா? வரட்டும் உங்க ஓனர் கைலயே நான் பேசிக்கறேன்"

அவர் தலையில் அடித்து கொண்டு.. "சரியான சாவுகிராக்கி" என்றார்.

"பாருங்க பாருங்க சர்.. உங்க முன்னாடியே எப்டி பேசறார் பாருங்க.." என்றாள், ப்ரியனிடம்..!

இன்னமும் ப்ரச்சனை என்னவென்று புரியாத ப்ரியன்.. "ஏன்.. என்ன ரேட்க்கு தருவீங்க? இங்க வாங்கற திங்க்ஸ்க்கு டிஸ்கௌண்ட் கிடையாதா?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே.. ஐம்பது வயதில் வட இந்திய முகத்தோடு அந்த மனிதர் உள்ளே வந்தார். இவர் தான் கடை ஓனர் போலும்..

"டிஸ்கௌண்ட் உண்டு சார்.. போர்டு வச்சிருக்கோம் பாருங்க கொஞ்சம்.. அந்த பக்கம் இருக்க பொருளுக்கு முப்பது பர்சண்ட்.. இந்த பக்கம் இருக்க பொருளுக்கெல்லாம்.. பத்து பர்சண்ட் தான் டிஸ்கௌண்ட்.. இந்தம்மா இந்த பக்கம் உள்ள இந்த யானை சிலைங்கள எடுத்துட்டு.. முப்பது பர்சண்ட்க்கு கேக்குது.. நான் வியாபாரம் பண்ணவா வேணாமா? இத்த முப்பது பர்சண்ட்க்கு குடுத்தா.‌. தோ… அந்த ப்ளாட்ஃபார்மாண்ட இருக்கானே.. அவன் பக்கத்துல போய் நானும், எங்க ஓனரும் குந்த வேண்டியது தான்.."

"நான் இத அந்த பக்கம் இருந்து தான் எடுத்தேன்கிறேன்.."

"இல்லங்கறேன்.. அடுக்கி வச்ச எனக்கு தெரியாதா சார்? இந்தம்மா போங்காட்டம் அடிக்குது.."

'ஆதவன் இவளை போங்கு போங்கு என்றழைப்பதன் அர்த்தம் இது தானா?'

"எனக்கு அதெல்லாம் தெரியாது.. இப்ப இந்த யானை சிலைங்கள்லாம் முப்பது பர்சண்ட் டிஸ்கௌண்ட்ல பில் ஆகணும்.. இல்ல.. நீ இங்க பண்ற நம்பர் டூ சேல்ஸ்க்கு எல்லாம் சாருக்கு பதில் சொல்லி ஆகணும்.. அண்ணாத்தேக்கு எப்டி வசதி?"

நம்பர் டூ சேல்ஸ் என்றதும் சற்று திகைத்த அந்த வட இந்திய மனிதர்.. "கிருஷ்ணா.. கஸ்டமர்கிட்ட என்ன ப்ரச்சனை பண்ணிட்டு இருக்க?" கேட்டார்.

"ஜி.. இந்தம்மா.." என்று ஆரம்பித்தவரைக் கையமர்த்தி விட்டு..

"இந்தா பொண்ணு.. உனக்கு இது தர்ட்டி பர்சண்ட்க்கு வேணும்னா.. இதே விலைல உள்ள வேற பொருள் சேர்த்து வாங்கிக்கோ.. சரி தானா? என்று கேட்டு தான் ஒரு தேர்ந்த வியாபாரி என நிரூபித்தார்.

பின்னே.. இருபது வருடங்களாக கலைப் பொருட்களை.. பழையது, புதியது என கிடைக்கும் அனைத்து இடங்களிலிருந்தும் வாங்கி விற்கிறார். அதில் பாதிக்கும் மேல் நம்பர் டூ சேல்ஸ் எனும் பில் இல்லா வியாபாரமே..! அதில் நம் வெண்மதியைப் போல் எத்தனை ஃப்ராடுகளை சந்தித்திருப்பார்!!

சற்றே முகத்தைத் தூக்கி யோசித்தவள்.. "ஓகே சர்.. வாங்கிக்கறேன்.. அந்த பொருளையும் நான் தான் செலக்ட் பண்ணுவேன்.. மோர் ஓவர்.. அதுக்கும் தர்ட்டி பர்சண்ட் டிஸ்கௌண்ட் வேணும்.. டீலா? நோ டீலா?" என்று பெருவிரலை நிமிர்த்தி, கவிழ்த்துக் காண்பித்தாள்.

"சரி பாரும்மா.."

மேலும் அரைமணி நேரம் செலவழித்து.. அந்த வேலை செய்யும் நபரின் பிபியை பரிசோதித்து.. ப்ரியனின் பரிதாபகரமான பெருமூச்சுகளை எண்ணி விட்டு.. கடைக்காரரின் கண்டனப் பார்வைகளைப் புறக்கணித்து விட்டு.. கடைசியாக சீலிங்கில் தொங்க விடும் கெட்டிலைப் போல் வடிவில் உள்ள பீங்கான் ஜாடியைத் தேர்ந்தெடுத்தாள். உள்ளே கேண்டில் ஏற்றும் விதமாய் வடிவமைத்திருந்த பொருள் கண்ணைப் பறித்தது.

அவள் தெரிவின் அழகில் 'விளையாட்டு பெண்ணாக இருந்தாலும் வேலையில் கெட்டிக்காரியாகவே தான் இருக்கிறாள்' என உள்ளுக்குள் வியந்து கொண்டான்.

வாங்கியப் பொருட்களை பில் போட்டப் பின்.. அடுத்த ப்ரச்சனையை செவ்வனே ஆரம்பித்து வைத்தாள் நம் வெண்மதி.

வாங்கியப் பொருட்களை 'ஃப்ரீ டோர் டெலிவரி செய்ய வேண்டும்' என்பது தான் அது.

"வெண்மதி.. இந்த மாதிரி கடைகள்ல அதெல்லாம் செய்ய மாட்டாங்க.. நீங்க வாங்க.. நம்ம ட்ரான்ஸ்போர்ட் அரேன்ச் பண்ணிக்கலாம்."

"சும்மா இருங்க ப்ரியன்.. இவ்ளோ அமௌண்ட்க்கு பர்சேஸ் பண்ணிருக்கோம்.. இது கூட செய்யலனா எப்டி..? நீங்க இருங்க.. நான் பேசிக்கறேன்."

"ஹய்யோ.. சொன்னா கேளுங்க வெண்மதி.." என்றவன்.. கடைக்காரரிடம், "சர், எல்லா திங்க்ஸூம் இங்கயே இருக்கட்டும். நான் அனுப்பற ஆள்கிட்ட பில் குடுத்து அனுப்பறேன். அவர்கிட்ட ஹேண்ட்ஓவர் பண்ணிடுங்க" என்று கிட்டத்தட்ட அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

வெளியே மெயின்ரோட் வரை போன பின் கையை விட்டவன்.. "அட்ரஸ் சொல்லுங்க வெண்மதி.. எனக்கு தெரிஞ்ச ட்ரான்ஸ்போர்ட்ல புக் பண்ணிடுவோம். அவங்க சேஃப்டியா உங்க திங்க்ஸ் கொண்டு வந்துடுவாங்க.." என்றான்.

"ப்ச்.. ஏன் ப்ரியன் இப்டி பண்றீங்க..? நான் இன்னும் கொஞ்சம் பேசிருந்தா அவங்களே டெலிவரி பண்ணிருப்பாங்க.. ச்சு.. போங்க.." அழகாய் கைகளைக் கட்டிக் கொண்டு, முகம் திருப்பினாள்.

அவளை சமாதானப்படுத்த நிமிரும் போது தான் கவனித்தான், அவனவளை..! வெண்மதியின் பின்னால் நின்றிருந்தாள், ப்ரியனின் ப்ரியமானவள் ப்ருந்தா.

நேற்று இதே நேரத்தில் அவன் மனதை நொறுக்கிச் சென்றவளை.. இன்று மீண்டும் சந்திக்கையில் உள்ளுக்குள் ஊற்றாக பெருகும் காதலைத் தடுக்கத் தான் முடியவில்லை. இவள் தன்னவள் என்ற உரிமைப் பார்வையினை மாற்றத் தான் முடியவில்லை. லிப் க்ளாஸில் பளபளக்கும் ரோஜா இதழ்களை தன் வசமாக்கும் எண்ணத்தைத் தவிர்க்கவே முடியவில்லை. அவளில் கிறங்கும் மனதினை இழுத்துப் பிடித்து.. சமரசம் செய்வதில் ஜெயிக்கவே முடியவில்லை.

ஆனால்.. ஆனால்.. அவள் கண்களில் ஏன் இத்தனை வெறுப்பு..! புரியாமலேப் பார்த்திருக்கையில்.. திரும்பி நடந்து விட்டாள், ப்ருந்தா..!

பெருமூச்சுடன் வெண்மதியைப் பார்த்தான். அவள் இன்னும் கோபமாக வாய்க்குள் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவளை சமாதானம் செய்து.. பின் அவளின் ஆலோசனைப் படி, அவள் நிறுவன வாகனத்தையே வரவழைத்து.. வாங்கியப் பொருட்களை பத்திரமாக ஏற்றி விட்டு.. அவளும் விடைபெற்று அவளின் ஸ்கூட்டியில் ஏறிப் பறந்ததைப் பார்த்தப் பின்.. 'உசுரக் காப்பாத்திக்கோடா..' என்ற ஆதவனை அலட்சியப்படுத்தியது எத்தனை தவறு என்று.. தன்னையே நொந்து கொண்டு கிளம்பினான்.

இங்கு வீட்டிற்கு வந்த ஆதவன் .. அம்மாவிடம் சிறிது நேரம் வம்பு வளர்த்து விட்டு.. க்ரிக்கெட் பார்த்து.. 'ஒன் மோர் சிக்ஸ்', 'வாவ்! சூப்பர் கேட்ச்' என்றெல்லாம் உருண்டு புரண்டு கத்தி விட்டு அமர்ந்திருக்கையில்.. ப்ரியன் வந்து சேர்ந்தான்.

அவனைப் பார்த்து நக்கலாக சிரித்த ஆதவன்.. "என்னடா.. பாஸ்தா பீட்சா மாதிரி போன.. இப்ப பழைய சாதம் மாதிரி திரும்பி வந்துருக்க? என்ன.. ஸ்பெஷல் கவனிப்போ..? என்று போலியாக வியந்தான்.

"டேய் ஆதவா.. எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுடா.." என்றான், பாவமான முகத்தோடு..!

"கேளு மச்சி.. கேளு.. நீ கேட்டப் பின்னும் விடைக் கூறாமல் இருப்பேனோ..! உன் கேள்விக் கடலில் மூழ்கி பதிலெனும் முத்தெடுத்து, நண்பனாகிய உன்னிடம் சேர்க்காமல் விடுவேனோ..! உன்னால்.."

அவனை அதற்கு மேல் பேச விடாமல்.. இரு கைகளையும் கூப்பி.. "நானே நொந்து போய் வந்துருக்கேன்.. நீ வேற ஏண்டா என்னை நூடுல்ஸ் ஆக்க ட்ரைப் பண்ற?" அழாக் குறையாக..!

"ஹாஹா.. சரி சரி.. அழாத.. என்ன கேக்கணுமோ கேளு.."

"மச்சி..‌ எப்டிடா இந்த பொண்ண லவ் பண்ணின? உன் லவ் ஸ்டோரிய கொஞ்சம் சொல்லு.."

"என் லவ் ஸ்டோரியா? அது ரொம்ப பெரிய கதை ஆச்சேடா.. கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா?"

ஆமெனத் தலையசைத்த ப்ரியனிடம் தான் வெண்மதியை சந்தித்ததைக் கூற ஆரம்பித்தான், ஆதவன்..!
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
View attachment 13048காதில் இருந்த ப்ளுடூத்தை இடது கையால் பற்றி.. "வெண்மதி.. இங்க நிறைய கடைகள் இருக்கே.. நீங்க எங்க இருக்கீங்க?" என்று கேட்டான்.

“என்னடா.. பாஸ்தா பீட்சா மாதிரி போன.. இப்ப பழைய சாதம் மாதிரி திரும்பி வந்துருக்க? என்ன.. ஸ்பெஷல் கவனிப்போ..?

செம்ம செம்ம.. ஆதவா நீ ரியலி கிரேட் டா... கவி vs மதி கையாள்வதற்கு நீ phd தான் முடித்து இருக்கனும்??

பாவம் பிரியன் ??

அருமையான பதிவு
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top