• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன கொடுமை சார் இது? 5 (a)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஶ்ரீவிஜய்

மண்டலாதிபதி
Joined
May 13, 2019
Messages
138
Reaction score
685
Location
Chennai
geethagovindamboxoffice-1540384594.jpg'தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' உடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில்.. வேலைகளை செய்து தருபவர்கள், 'Right Choice Interiors'


ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, தங்கள் வேலை முடிந்ததும்.. இன்டீரியரின் வேலைகளை மேற்பார்வையிட வந்திருந்த ஆதவனின் விழிகளில் விழுந்து.. அவனை காதலில் மொத்தமாக வீழச் செய்தவள், வெண்மதி.


முதன்முதலில் அவளைப் பார்த்து, தனக்கானவள் இவள் என முடிவு செய்து விட்டு.. அவள் கண்களில் படும் தூரத்தில் நின்று கொண்டு.. ஆனால், அவளை கவனிக்காதவன் போல இருந்து கொண்டான்.


அந்த பங்களாவில் மாடுலர் கிச்சன் அமைக்க வேலை நடந்து கொண்டிருக்கையில்.. இவள் ஹாலில் கலைப் பொருட்களையும், பெயிண்டிங்ஸையும், எங்கே எப்படி வைக்கவென ஆட்களிடம் கூறிக் கொண்டிருந்தாள். இடையில் வேறு என்ன தேவையெனக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள்.


கிச்சன் வாசலில் நின்று கொண்டிருந்தவன்.. அவள் திரும்பாததைப் பார்த்து கடுப்பாகி, அங்கு இன்னும் பிரிக்கப்படாமல் இருந்த அட்டைப் பெட்டியை வழக்கம் போல் ஓடி வந்து தாண்டி வெளியே சென்று விட்டான்.


அவன் ஓடி வரும் அரவம் கேட்டு இவள் திரும்பும் போது, அட்டை பெட்டியைத் தாண்டி வெளியே சென்று கொண்டிருந்தான்.


சென்று கொண்டிருப்பவனைப் பார்த்து, 'யாருடா இவன்.. ஹை ஜம்ப்ல நமக்கே டஃப் குடுப்பான் போல..?' என்று மனதில் நினைத்தவள்.. ஜன்னலின் வழியே வெளியே கார்டனிங் வேலை நடந்து கொண்டிருந்த இடத்தில் நின்றிருந்தவனைப் பார்வையிட ஆரம்பித்தாள்.


'நல்லா தான் இருக்கான்.. பட், நம்ம கொள்கைக்கு ஒத்து வரணுமே..' என்று யோசித்து விட்டு, 'சட்! என்னத்த யோசிக்கறேன்!!' என்று தன் எண்ணம் போகும் திசையில் திகைத்து.. தலையில் கொட்டிக் கொண்டாள்.


நம் வெண்மதிக்கு தன் பெயரின் மேல் அலாதி ப்ரியம்.. ஆதலால், தன் பெயருக்கேற்றாற் போல் பொருத்தமாய் பெயருள்ளவனையே மணாளனாய் ஏற்றுக் கொள்வது என்ற மேம்பட்டக் கொள்கை வைத்திருக்கிறாள்.


தன் மனதை கட்டுப்படுத்தி.. வேலையில் கவனம் செலுத்தியவள், ஏதோ உள்ளுணர்வில் மீண்டும் அவனைத் திரும்பி பார்த்தாள். அங்கே அந்த மாயக்கண்ணன்.. வேலை செய்யும் பெண்களுடன் 'ஈஈஈ' என அத்தனை பற்களையும் காட்டி, என்னவோ கதை ஜொள்ளிக் கொண்டிருந்தான்.


கடுப்பானவள்.. வெளியே செல்ல எத்தனிக்கையில்.. 'அவன் யாரோ எவனோ.. என்ன செய்தால் உனக்கென்ன?' என்ற மனசாட்சியின் குரலுக்கு மதிப்பளித்து.. அமைதியாக நின்று விட்டாள்.


சிறிது நேரத்தில் உள்ளே வந்தவனை.. வேலை செய்பவர், "ஆதவன் சார்.. இந்த கப்போர்ட் சைஸ் ஓகேவா பாருங்களேன்.." என்றார்.


அங்கே அவனின் பெயரைக் கேட்டு ஃப்ளாட் ஆனவள் தான் நம் வெண்மதி..!


அன்றைய வேலை முடித்து செல்லும் வரைக் கூட பொறுமையில்லாமல்.. நொடியும் தாமதிக்காமல், கிச்சனில் உள்ளே நின்றிருந்தவனிடம்.. "மிஸ்டர் ஆதவன்" அழைத்தாள்.


யாரெனத் திரும்பி பார்த்தவன்.. அழைத்தது தன்னவளெனத் தெரிந்து, விநாடிப் பொழுதில் பிண்ணனியில் இளையராஜா பிஜிஎம் இசைக்க விட்டு.. வெண்ணிற ஆடை அணிந்த தேவதைகள் சகிதம்.. பனிமலை வரை அவளுடன் கைக்கோர்த்து சென்று கொண்டிருந்தவன்.. அவளின் "கேன் வீ கெட் மேரீட்?" என்ற கேள்வியில் அவசர அவசரமாக இளையராஜாவையும், தேவதைகளையும் புறம் தள்ளிவிட்டு… திகைத்துப் போய் "பார்டன்" என்றான், புருவங்கள் சுருங்க..!


வேலை செய்து கொண்டிருந்த அனைவரும்.. வேலையை நிறுத்தி விட்டு, இவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.


அதில் அஜய்க்கும், வெண்மதிக்கும் தோழனான ப்ரதீபன், "மதி.. என்ன விளையாட்டு இது?" என்றான், கண்டிக்கும் பாவனையில்..!


"விளையாடல தீபன்.. நிஜமா தான் கேக்கறேன்.."


"உன்ன… இரு உன்னை வேலை செய்ற பேர்வழினு என் தலைல கட்டின உன் அண்ணங்காரன்ட்ட சொல்றேன்.." என்று அலைபேசியை உயிர்ப்பித்தான்.


அது எதையும் கண்டுகொள்ளாமல்.. ஆதவனைப் பார்த்தாள். அவன் இன்னும் 'என்ன பொண்ணுடா…' என்ற ரீதியில் திகைப்பிலிருந்து வெளியே வராமல்.. கண் தட்டாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.


"பிடிக்கலனாலும் சும்மா சொல்லுங்க.. நோ இஷ்யூ.."


"ச்சேச்சே.. பிடிக்கல எப்ப சொன்னேனாம்..? உங்களப் பார்த்தப்பவே ரொம்ப பிடிச்சது. நீங்க சொல்லுங்க.. இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா?"


பார்த்து கொண்டிருந்த மற்றவர்கள் மானசீகமாக தலையில் அடித்து கொண்டனர்.. அநேகமாக அவர்களின் மைண்ட் வாய்ஸ்.. 'இதுங்க எங்க உருப்பட போகுதுங்க' என்பதாய் இருக்கலாம்.


ப்ரதீபன் அலைபேசியைத் தட்டி கொண்டிருக்கையிலேயே, "ஓ! பண்ணிக்கலாமே.. கல்யாணத்துக்கு எங்கள எல்லாம் கூப்டுவீங்களா எப்டி?" கேட்டு கொண்டே உள்ளே வந்தான், வெண்மதியின் அண்ணன் அஜய்.


அஜய்யின் தங்கை தான்.. வெண்மதியென அறியாத ஆதவன், "ஹலோ அஜய் சர்.. நீங்க இல்லாமலா? வாங்க." என்று கைக் குலுக்கி.. அவன் காதோரம் சென்று, "இந்த பொண்ணு பார்த்ததுமே என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு அஜய் சர்.. என் பர்ஸனாலிட்டிக்கு மேட்ச்சா இருப்பாளா? கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன்.." என்றான்.


இருவரின் அருகில் நின்ற தீபன்.. 'என்ன கொடுமை சார் இது? பொண்ணோட அண்ணன்கிட்டயே போய் மேட்ச்சா இருப்பாளானு கேக்கறான்..!' என்று திருதிருவென முழித்து கொண்டிருந்தான்.


"அதிருக்கட்டும்.. பொண்ணு பேரென்ன கேட்டீங்களா ஆதவன்?"


"ஸ்ஸ்.. இல்லயே.." என்று நுனி நாக்கை கடித்துக் கொண்டவன், வெண்மதியிடம் திரும்பி.. முப்பத்து இரண்டையும் காட்டி, "யுவர் குட் நேம் டார்லிங்?" கேட்டான்.


"வெண்மதி.." என்று பதில் சொன்னான், அஜய்.


"பரவால்ல அஜய் சர்.. உங்க ஸ்டாஃப்ஸ் எல்லார் பேரையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க போல.. ஐ அப்ரிஷியேட் யூ.."


"ஸ்டாஃப்ஸ் பேரு மட்டுமில்ல.. இந்த தங்கச்சி பேரயும் தெரிஞ்சு வச்சிருக்கேன் மிஸ்டர் ஆதவன்" என்ற அஜய், "ரெண்டு பேரும் மாடிக்கு வாங்க.." என்று உறுமி விட்டு விறுவிறுவென மாடியேறி சென்று விட்டான்.


ஆடு திருடும் கள்ளனின் முகத்தை பார்க்காதவரா நீங்கள்? அப்படியானால் இப்போது வந்து ஆதவனின் முகத்தைப் பார்த்து செல்லுங்கள்..


"த.. த.. தங்கச்சியா?"


"ஏன் தந்தியடிக்கறீங்க ஆதவன் சர்?" - தீபன்.


"நீங்க கூட சொல்லவே இல்லயே தீபன்? அதான் தந்தி.. தபால் அடிக்குது.."


"எங்க சொல்ல விட்டீங்க? அதுக்குள்ள தான் ரெண்டு பேரும் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமானு டூயட் வரைப் போயிட்டீங்களே.. போங்க.. உங்க மச்சான் மாடில மசாஜ் பண்ண வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு.. அவர ரொம்ப நேரம் காக்க வைக்காதீங்க.."


அவனை முறைத்து விட்டு, வெண்மதியைத் திரும்பி பார்த்தான்.. அவள் படியேறி சென்று கொண்டிருந்தாள். பெருமூச்சுடன் இவனும் அவளை பின் தொடர்ந்தான்.


அஜய்.. வெண்மதியின் குணத்திற்கு அப்படியே நேர் எதிரானவன்.


இவளிடம் ஒற்றை ரோஜாவைக் கொடுத்தால்.. நாள் முழுதும் கூட பூச்சாடியில் வைத்து ரசித்திருப்பாள். அதை அஜய்யிடம் தந்தால்.. நொடியில் விற்று லாபக்கணக்கை கணித்து விட்டு.. அடுத்த பிஸினஸ் என்னவென்று பார்க்க போய் விடுவான்.


இவளின் குறும்பு தனத்தில் அஜய் கொலை வெறியாவான். வீட்டில் இருவருக்கும் எப்போதும் முட்டுக் கொள்ளும் தருணங்களே அநேகம்..


மொட்டை மாடியில் இருந்த அஜய்யின் முன் ஒன்றுமறியா பச்சை பாலகனைப் போல் நின்றிருந்தான் ஆதவன். அஜய்யின் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியவில்லை.


அஜய்.. ஆதவனின் கண்களுக்கு மொட்டை மாடியில் தனுஷிடம் பேரம் பேசும் பிரகாஷ் ராஜாகவே தெரிந்தான். சிரிக்காமல் இருக்க அரும்பாடுபட்டு மேலே வானத்தையும், கீழே தரையும் பார்க்கும் பாவனையில் மண்டையை மேலும் கீழுமாக உருட்டி கொண்டிருந்தான்.


"என் தங்கச்சிய என்கிட்டயே மேட்ச்சா இருக்காளா கேக்கறீங்களே மிஸ்டர் ஆதவன்.. ஹௌ டேர் யூ ஆர்?"


"அஜய் சர்.. அது.."


"அஜய்.. நான் தான் கல்யாணம் பண்ணிக்கலாமானு அவர்கிட்ட கேட்டேன்"


"ஏன் நாங்களாம் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோம்னு நீயே உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டியா?"


"ஏண்டா இப்டி பேசற? அவர் பேரு தெரிஞ்சதுனால தான் அப்டி கேட்டேன்.." என்றவளின் குரல் ஸ்ருதி இறங்கி ஒலித்தது..


அவளின் பதிலில் அஜய் ருத்ர மூர்த்தியாய் முறைத்துக் கொண்டிருந்தானெனில்.. ஆதவன்.. திகைப்பு, ஆச்சர்யம், கோபம், தன்னை தனக்காக அவள் விரும்பவில்லை என்றதில் கொஞ்சமே கொஞ்சம் அவமானமாய் கூட உணர்ந்தான்.


'ஏன்.. பேரு ராமசாமியா இருந்தா கல்யாணம் பண்ணிக்க மாட்டாளாமா?'


"சென்ஸோட தான் பேசறியா மதி நீ? ஒருத்தவங்க பேர மட்டும் வச்சு உன் லைஃப தூக்கி குடுத்துடுவியா?"


"இங்க பாரு.. என்னோட பாலிஸி உனக்கு தெரியும் தான?"


"பாலிஸி மண்ணாங்கட்டினு பேசினினா.. அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன் வெண்மதி.. இருபத்து மூணு வயசு ஆகிடுச்சு.. இன்னும் குழந்தையாவே பிஹேவ் பண்ணிட்டு இருக்க.. வெக்கமாயில்ல?"


"போடா அஜய்.. நா.."


இருவரிடையேக் குறுக்கிட்ட ஆதவன், "சர் ப்ளீஸ்.. உங்க சிஸ்டர் எதுக்கு அப்டி கேட்டாங்கனு எனக்கு தெரியல.. பட், நிஜமாவே எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு.. உங்களுக்கே என்னைப் பத்தி ஓரளவு தெரிஞ்சிருக்கும்.. இன்னும் விசாரிக்கணும்னா நீங்க ரவி சர்கிட்ட கூட தாராளமா கேட்டுக்கலாம். உங்க தங்கச்சினு தெரியாம.. உங்கக்கிட்டயே நான் அப்டி கேட்ருக்கக் கூடாது தான். ஐ' ம் எக்ஸ்ட்ரீம்லி சாரி.. நான் வரேன் அஜய் சர்" என்று அஜய்யிடம் கூறி விட்டு.. வெண்மதியைத் திரும்பி கூடப் பார்க்காமல் சென்று விட்டான்.


ஒரு பார்வைக் கூட தராமல் போனவன்.. அடுத்து வந்த இரவுகளில்.. வெண்மதியின் தூக்கத்தை மொத்தமாய்க் களவாடிக் கொண்டான்.


ஒரு வாரமாக வேலையில் கவனம் செலுத்தாமல்.. சோர்ந்து போய் இருக்கும் தங்கையைப் பார்த்த அஜய்.. கடுப்பானாலும்.. வேறு வழியில்லாமல் ஆதவனின் எம். டி. ரவீந்திரனிடம் பேசினான்.


விசாரித்த வரையில் விளையாட்டுதனம் மிகுந்தவன் என்பதைத் தவிர, மற்ற விஷயங்கள் தன் மனதிற்கு திருப்தி தரவே.. வெண்மதியிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.


ஒரே நொடியில் மனதைக் கொய்து சென்றவனின் பார்வையை ஒரு முறை மட்டும் பெற்றால் போதுமென ஒரு வாரமாகத் தவித்திருந்தவள்.. வாழ்நாள் முழுதும் அவன் பார்வைக்கான சொந்தம் கிடைக்கப் போவதில் சிட்டுக்குருவியாய் மாறி பறந்து போனாள்.. அவளவன் ஆதவனைக் காண..!
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Parra...???
Nalla kolkai mathima...??
Anna super...???
Nalla pannaringa propose ??????
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
machan masaj pannividuvan
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top