• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன கொடுமை சார் இது? 5(c)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஶ்ரீவிஜய்

மண்டலாதிபதி
Joined
May 13, 2019
Messages
138
Reaction score
685
Location
Chennai
சீரியல் லைட்டின் உபயத்தால் தன் மேனியெங்கும் வண்ணப் பூத்தூரலாய் தூறிக் கொண்டிருந்த அந்த உயர் ரக ரெஸ்டாரண்ட் அழைத்துச் சென்றான்.

"என்ன ஆர்டர் பண்ணட்டும் வெண்மதி? ஸ்வீட் பிடிக்குமா?"

உர்ரென்று முகத்தை வைத்திருந்தவள்.. "எனக்கு பாவக்கா பக்கோடா தான் புடிக்கும்.." என்றாள்.

முதன்முதலில் ஆசையாக வெளியே அழைத்து வந்திருக்கிறான்.. பாகற்காய் கேட்டால் கோபம் வராதா..?

நிதானமாகப் பார்த்தவன்.. "பாவக்கா தான? போகும் போது அஞ்சு கிலோ வாங்கி தரேன்.. வீட்டுக்கு போய் நல்லா மொக்கு.." கடுப்புடன் கூறி விட்டு.. அவனுக்கு பிடித்த பாஸந்தி ஆர்டர் செய்தான்.

"சொல்லு வெண்மதி.. அஜய் சர் என்ன சொன்னார்..?" என்று ஆவலாக அவள் முகம் பார்த்து கேட்டான்.

"இன்னும் பத்து வருஷம் கழிச்சு ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதா சொன்னார்.."

அவள் பதிலில் எரிச்சலாகி, அவளை நக்கலாக பார்த்து கொண்டே.. "இன்னும் பத்து வருஷம் கழிச்சா? இப்பவே உன் மூஞ்சி பார்க்க சகிக்க மாட்டாம இருக்குது. இதுல இன்னும் பத்து வருஷம் கழிச்சுனா.. டவுட் தான். பேசாம வேற பொண்ணு பார்க்கலாம் நினைக்கறேன். நீ என்ன சொல்ற வெண்மதி? ஜஸ்ட் ஒரு சஜஷன்.." என்றான்.

ஆர்டர் செய்த பாஸந்தி வந்த பின்னும்.. அவள் பதிலேதும் சொல்லாமல்.. அமைதியாக இருப்பதைப் பார்த்தவன், "வெண்மதி.. என்ன ரொம்ப நேரமா யோசிக்கற?" என்று கேட்டான்.

"இல்ல.. ஒரு இன்ஜினியர் காஸ்மெடிக்ஸ் ப்ராண்ட்லாம் கூட தெரிஞ்சு வச்சிருக்காரே.. எப்டினு யோசிச்சிட்டு இருக்கேன்.." என்றாள், டேபிளிலேயேப் பார்வையைப் பதித்து..!

'ஆஹா…இது தான் இந்த அழகுப் புயலின் அமைதிக்கு காரணமா? இது தெரியாம நான் வேற வெறுப்பேத்தி விட்டுட்டேனே.. எல்லாருக்கும் லவ் பண்ணதுக்கு அப்புறம் தான் ப்ரேக் அப் ஆகும்.. நமக்கு ஓகேனு சொல்றதுக்குள்ளயே ப்ரேக் அப் ஆகிடும் போலயே.. என்ன கொடுமை சார் இது?'

"அது.. அது.. இன்ஜினியரா? யாரு? கா.. கா.. காஸ்மெட்டிக்ஸா? அப்டியொரு ஸ்வீட் இருக்கா என்ன?"

"ஆமாமா.. காஸ்மெட்டிக்ஸ்னா சாருக்கு என்னன்னே தெரியாது இல்ல?"

"ஆமா.. இல்ல இல்ல.." என்று உளறிக் கொட்டி தலையில் கை வைத்துக் கொண்டவன்.. "பாருடி வெண்மதி.. பாஸந்தி கூலிங் போய்டுச்சுனா நல்லா இருக்காது.. சாப்டுமா.." என்றான்.

"சாப்பிடவா இல்ல.. தூக்கி உன் தலைல கொட்டவா..?

"எதுக்குடாம்மா இவ்ளோ கோவம்?"

"வேணாம்… கொல காண்டுல இருக்கேன். ஒண்ணுமே தெரியாத மாதிரி மூஞ்சிய வச்சிக்காத.. எப்டி.. எப்டி..? லிப்ஸ்டிக் கலைஞ்சிருக்குதோ? சர் டிஷ்யூ தேடி எடுத்து துடைச்சு விடப் போறீங்களோ? ம்ம்?"

"ச்சேச்சே.. அப்டி இல்ல வெண்மதி.. சும்மா ஒரு ஹெல்ப் பண்ணலாமேனு.."

"ஓஹோ! சர் சமூக சேவை செய்றீங்களோ..?"

"இங்க பாரு.. நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்க வெண்மதி.."

"ஆஹான்? பைக் எதுக்கோ ஒத்த கால்ல நிக்குது சொன்னீங்களே..?"

"அது.. சைட் ஸ்டாண்ட் மட்டும் போட்டா ஒத்தக் கால்ல நிக்காத? அது தான் சொல்லிட்டு இருந்தேன்..."

"அப்ப அங்க அவ்ளோ நேரம் இத தான் சொல்லிட்டு இருந்தீங்க? வேற ஒண்ணுமேயில்ல.. இல்ல?"

"அது.. அது.. ரிசப்ஷனிஸ்ட்கிட்ட வேற என்ன கேப்பாங்க.. எனக்கு போன் கால் எதுவும் வந்ததா என்னனு விசாரிச்சுட்டு இருந்தேன்.. அப்.."

வெண்மதி பல்லைக் கடித்து கொண்டு, கையை உயர்த்தி விரல்களை மடக்கிக் காட்டினாள்.. அதைப் பார்த்தவன் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

"நான் உங்க ஆஃபீஸ்ல எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணேன்னு உங்க ரிசப்ஷனிஸ்ட் சொன்னாங்களா?"

"ஹ்ம்ம்.. ஒன் அவர் வெய்ட் பண்ணியாமே.. சாரி வெண்மதி.. சைட்ல இன்னிக்கு வொர்க் கொஞ்சம் இழுத்துடுச்சு.."

"சைட் வொர்க் பத்தி எனக்கு தெரியாதா? ஆனா, ஒரு மனுஷி ஒரு மணி நேரமா.. நீ வந்துட மாட்டியானு ஆஃபிஸ் வாசலயே பார்த்துட்டு இருக்கேன்.. நீ வந்தது தெரிஞ்சதும்.. எழுந்து வந்து ரூம் வாசல்ல நிக்கறேன்.. திரும்பி கூடப் பார்க்காம அந்த பொண்ணுக்கிட்ட என் கண்ணு முன்னாடியே சைட்டடிக்கற வொர்க்க சின்சியராப் பண்ணிட்டு இருக்க நீ.. உன்னை…" என்று காண்டாகி.. டேபிளில் இருந்த தண்ணீர் க்ளாஸை யாரும் அறியா வண்ணம் அவன் பக்கமாக தட்டி விட்டாள்.

சட்டென நகர்ந்து.. தன் உடையைக் காத்துக் கொண்டவன்.. "நோ.. நோ வயலண்ட் செல்லோ.. உங்க அண்ணாத்த என்ன தான் சொன்னார்? அதைச் சொல்லுடி.. அதுக்கு முந்தி இந்த பாஸந்தி சாப்டு.." என்று அவள் பக்கம் ஒரு பௌலை நகர்த்தி வைத்தான்.

"அண்ணா என்னவோ சொல்லிட்டு போகட்டும். ஆனா, இப்ப நான் யோசிக்கறேன்.. பேர மட்டும் வச்சு தப்பான ஆள செலக்ட் பண்ணிட்டோமோனு.."

"ஏய் ஏய்.. உளராதடி.. நான் அந்த பொண்ணுக்கிட்ட விளையாட்டா தான் பேசிட்டு இருந்தேன்.. அத மட்டும் வச்சு நீ முடிவு எடுக்காத வெண்மதி.." என்றான், அவசர அவசரமாக..!

"இன்னொரு வாட்டி யார்க்கிட்டயாவது இப்டி வழியறதப் பார்த்தேன்..."

"ச்சேச்சே.. இந்த பொண்ணுங்க தான் என்னைப் பார்த்து வழியறாங்க வெண்மதி.. உன்னைத் தவிர நான் யாரயும் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்.. உன்னை பார்த்த நாள்ல இருந்து என் கனவுலக் கூட நீ தான் வர்ற தெரியுமா..? தூக்கத்துல கூட வெண்மதி, வெண்மதினு உன் பேர சொல்லி தான் புலம்பிட்டு இருக்கேன்.."

"ஷ்ஷ்… ஆண்டவா.. நிறுத்தறியா கொஞ்சம்..? அஜய் என்ன சொன்னான் சொல்லவா வேணாமா?"

"சொல்லும்.. சொல்லி தொலையும்.. அதத் தான வந்ததுல இருந்து கேட்டுட்டு இருக்கேன்..?"

"ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ஓகே சொல்லிட்டான்.."

முகம் மலர, "அப்ப கல்யாணம் பண்ணிக்கலாமா.. இப்பவே..?" கண்ணோடு கண் பார்த்துக் கேட்டான்.

பதில் சொல்லாமல் எழுந்தவள்.. ஹேண்ட் பேகை மாட்டிக் கொண்டு.. அமைதியாக எழுந்து நடந்தாள். கதவு வரை சென்றவள்.. தன்னை இமைக்காமல் பார்த்திருந்தவனை, இதழின் ஓரம் உதித்த சின்னப் புன்னகையோடுத் திரும்பி.. சற்றே தலையை இடது புறம் சாய்த்து, அந்த சிப்பி இமைகளை மூடி திறந்தாள்.

'தலை சாய்த்துப் பார்த்தாளே..
தடுமாறிப் போனேனே..'


ஒருத்தியால் கண்களால் ஆறடி உயரத்தையும் மொத்தமாக முத்தமிட முடியுமா? அந்த மயக்கும் அந்தி மாலைப் பொழுதில்.. வெண்மதி ஆதவனைக் கண்களால் முத்தமிட்டுச் சென்றாள். அவளின் கண் முத்தத்தில் நெஞ்சம் முழுதாக நனைந்த ஆதவன்..

'நீ முத்தப் பார்வைப் பார்க்கும் போதும்..
என் முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும்..'
என்று அவளின் தனக்கான ஒவ்வொரு அசைவிற்கும்.. கனவு உலகத்திற்கு சென்று வந்தான்.

அவள் கண்ணை விட்டு சென்றதும்.. சுதாரித்து, பாஸந்திக்கானப் பணத்தை டேபிளில் வைத்து விட்டு.. தனக்கு முன்னிருந்த டேபிளை.. லாங் ஜம்ப் செய்து.. ஓடிப் போய், சென்று கொண்டிருந்த வெண்மதியின் முன் மூச்சு வாங்க நின்றான்.

'பாவி.. ஃபர்ஸ்ட்டே இந்த பார்வையப் பார்த்திருந்தா இவ்வளவு டென்ஷனாகி இருந்திருப்பேனா? இப்படி கோவம் போல போங்காட்டம் ஆடி.. இந்த ஆதவனையே கெஞ்சும் பார்வை பார்க்க வைத்து விட்டாளே..!'


"ஹேய் போங்கு.." தன் முன் மூச்சு வாங்க நின்றவனை அதே புன்னகை மாறாமல் பார்த்திருந்தாள், வெண்மதி.


"சரியான போங்கு நீ.. இவ்ளோ நேரம் கோவம்னு நடிச்சு.. ஏண்டி மனுஷன டென்ஷன் பண்ணி விட்ட?"


"நீ மாங்காவா இருந்தா அதுக்கு நான் போங்கா?"


"யாரு நானா? வெறும் பேருக்காக கல்யாணம் பண்ணலாமா கேட்டது நீதான?"


"அப்டிலாம் இல்ல.. நிஜமாவே பிடிச்சிருக்கு. என்ன தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்ருந்தாலும்.. இதுக்கு முந்தி பேசி பழகாத ஒருத்தன் அத்தன 'டி' போட்டும் நான் அமைதியாவே இருக்கேன்.. அப்பவே புரிஞ்சிருக்க வேணாம்? வேற ஒருத்தனா இருந்தா இந்நேரம் கன்னம் பழுத்துருக்கும்.."


புருவங்களை உயர்த்தி, "ஓ! இதுல இப்டி ஒரு விஷயம் இருக்கா? அப்ப பொண்ணுங்கக்கிட்ட 'டி' சொன்னா நம்மள புடிச்சிருக்கா.. இல்லயா.. தெரிஞ்சுக்கலாம்.. ரைட்?" என்று குறும்பு கண்களை சிமிட்டிக் கேட்டவனைப் பார்த்து பொய்யாய் முறைக்க முயன்று முடியாமல்.. இதழ் மலர்ந்து புன்னகைத்தாள், ஆதவனின் வெண்மதி..!
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Pasanthi sapta kuda ila...
Intha engineer over vai than..??
Ivana meika nee sariyana alu ma??

Song , kavithai super ka...????



Semma policy darling... Di potta kannam paluthurukum...???
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
அருமையான பதிவு டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top