என் ஆதியும் அந்தமும் நீயே பகுதி 10

RajiPrema

Author
Author
SM Exclusive Author
#1
IMG_20181102_155404.JPG

மனதில் வருத்தம் இருந்தாலும் எதையும் வெளிக்காட்ட திராணியில்லாமல் இருவரும் எழிலுக்கு பணிவிடை செய்தனர்...

பாலா நான் வேணா ஆபீஸ்க்கு லீவ் போட்டுடவா...அத்தை வந்திருக்காங்கள் ல...

ம்ம்ம் நீ இப்படி யோசிச்சு யோசிச்சு பாக்கிற அவங்க அப்படி நம்மல நினைக்கலயேமா...அவங்கள பொறுத்தவரை அவங்க கெளரவம் தான் பெருசா இருக்கு...நீ இதுல லீவ் வேற போட்டுட்டு அவங்களுக்கு எல்லாம் பண்ணேனு வை...இன்னும் நாளு பூரா எப்படியெல்லாம் குத்துக்காட்ட முடியுமோ அப்படி பண்ணுவாங்க பராவாயில்லையா...ஒழுங்கா ஆபீஸ் போ...ஈவினிங் வந்து பேசிக்கலாம்...நான் டிராப் பண்றேன் சீக்கிரமே சமையலை முடிச்சுட்டு வா...

நான் ஒருத்தி இங்க வந்திருக்கேனு உங்களுக்கு கண்ணு தெரியுதா இல்லையா...நீங்க பாட்டுக்கு என்னய மட்டும் இங்க வச்சிட்டு போனா எப்படி...என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...

அம்மா உனக்கு அங்க செட் ஆகல்னு தானே இங்க வந்த...என்னமோ என் மேல உள்ள பாசத்துல வந்தமாதிரி பேசாத...நான் ஈவினிங் வந்து உன்னய பக்கத்தில எங்கயாச்சும் கூட்டிட்டு போணும்னா போறேன்...இப்போ கிளம்புறேன்...பாத்து பத்திரமா இருந்துக்கோமா...

ஏங்க இப்படிலாம் பண்றீங்க...அவங்க பாவமில்ல...

யாரு எங்க அம்மாவையா பாவம்ங்கிற பேசியே ஊரை வித்துருவா...ஹாஹா அவங்க பாத்துப்பாங்க நீ வா மா...

மாலை நேரம் யாழினியின் ஆபீஸ் முன் வந்து நின்றான் சித்...

ஹேய் என்னப்பா அதிசயமா வந்திருக்கீங்க...எதுவும் முக்கியமான விசயமா...

ஆமா யாழினி நான் அன்னைக்கு ஏதோ விளையாட்டுக்கு சொன்னேன்...இன்னைக்கு அது நிஜமாகிட்டு...

ஹேய் என்னமா உளறற...கொஞ்சம் தெளிவா சொல்லேன்...

ஒண்ணுமில்லடா என் பிரெண்ட் ஒரு டாக்டர சஜ்ஜெஸ்ட் பண்ணிருக்கான்...வாயேன் போயி பாத்துட்டு வரலாம்...அப்பாயிண்ட்மெண்ட் கூட வாங்கிட்டேன்...வீட்டுக்கு போயிட்டு போலாம்னு பாத்தா அம்மா இருக்காங்கனு நியாபகம் வந்துச்சு...அவங்க பின்ன ரொம்ப கேள்வி கேட்டு அப்புறம் அது சண்டை மனவருத்தம்னு ஆயிடும்...அதான் உன் ஆபீஸ்க்கே வந்து பிக் அப் பண்ணிட்டு கூட்டிட்டு போயிடலாமேனு வந்துட்டேன்...

போணுமா...

ஏன் மா இப்படி கேட்கிற...

இல்ல பாலா எத்தன டாக்டரதான் போயி பாக்கிறது...எல்லாரும் எதயாச்சும் சொல்லி வருத்தப்பட வச்சிடுறாங்க...ஒருத்தவங்க நல்லதா சொன்னாங்கனு சந்தோசபடற நேரத்தில சோகமாவும் ஏதும் சொல்லிடறாங்க...எதை நம்புறதுனும் புரியல...கிறுக்கே புடிக்குது...அதான்...

ஹேய் Never Give up,until we achieve what we want...இது எல்லாத்துக்கும் தான் பொருந்தும்...ஒரு தடவ எனக்காக வாயேன்...

ம்ம்ம் சரிமா...
....

ஹெலோ வாங்க சித்தார்த்...வாங்க யாழினி...

டாக்டர் உங்களுக்கு எப்படி எங்க நேம்லாம்...

உங்க பிரெண்ட் அப்போவே கால் பண்ணி உங்கள பத்தி எல்லாம் சொல்லிட்டாப்டி...

சித் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க...நான் யாழினிக்கிட்ட பேசிட்டு உங்கள கூப்பிடுறேன்...

ஓகே டாக்டர்...

ஹெலோ சித் டாக்டர்லாம் வேணாம்...பிரெண்ட்லியா கிரிஷ்னே கூப்பிடுங்க...

ஹாஹா ஓகே கிரிஷ்...

யாழினி உங்களுக்கும் தான் ஜஸ்ட் கால் மீ பை நேம் ஓகே..

ஹான் ஓகே டாக்டர்...சாரி கிரிஷ்...

ம்ம் தாட்ஸ் குட்...யாழினி நல்ல பெயர்...சொல்லுங்க யாழினி உங்கள பத்தி பிபோர் தட்...என்னய ஒரு டாக்டரா பாக்காதீங்க மா...உங்ககூட ரொம்ப நாளு நல்லா பேசின ஒரு பிரெண்டா பாருங்க அப்போ தான் நீங்க என்க்கிட்ட நல்லா பேச முடியும்...

ம்ம்ம் கண்டிப்பா கிரிஷ்...

ரொம்ப நேரம் ஆகியும் யாழினி இன்னும் வெளியே வராதது அறிந்து டென்ஷனில் இருந்த நேரம்...இவன் பெயர் ஒலிக்கவும்...

சித் நீங்க இப்போ இருங்க...யாழினி நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்கமா...

சித்...ம்ம்ம் இந்த 8 வருச வாழ்க்கையில உங்களுக்கு தெரியாத சில விசயங்கள் பத்தி சொல்லபோறேன்...

என்ன அப்படி பாக்கிறீங்க...ஒண்ணும் பீடிகை போடலபா...

அவங்கக்கிட்ட முதலில நல்லா பேசிட்டு அப்புறமாதான் செக்கப் பண்ணேன்...அதுல என்னனா...நல்ல விசயம் சீக்கிரமே நடக்கும் சித் வாழ்த்துக்கள்...

அட போங்க கிரிஷ் சில டாக்டர் இப்படி சொல்றாங்கனு சந்தோசப்படுற நேரத்தில இன்னொரு டாக்டர் உங்களுக்கு குழந்தை பிறக்கிறதே கஷ்டமுனு சொல்லிடறாங்க...என்ன செய்ய...

அவ்வார்த்தைகளின் வலியை உணர்ந்த கிரிஷ்...இப்போது பேச தொடங்கினான்...

சித்...உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லனா நான் வேணா எழுதி கொடுக்கவா...

ஹாஹா...அப்படில்ல கிரிஷ்...நம்புறேன் பாப்போம்...

உங்க வைப் உங்கள பத்தி என்னலாம் சொன்னாங்கனு தெரியுமா...

என்னய பத்தியா என்ன சொன்னா...சொல்ல மாட்டாளே...

ஹாஹா...நீங்க அவங்களுக்கு கிடைச்ச வரமாம்...எத்தனையோ முறை எத்தனையோ அவமானங்கள் அவங்களால பட்டப்புறமும் கூட அவர் எனக்குதான் சப்போர்ட் பண்ணுவாரு...நான் வருத்தப்பட விட்டதேயில்ல...ஆனா என்னால அவருக்கு தான் கஷ்டம்...அந்த கஷ்டத்துக்கெல்லாம் சேர்த்து ஒரு குழந்தை மட்டும் பெத்துக்கொடுத்துறணும்...

அந்த தளிர் மேனியை பாக்கிறப்போ அவர் முகத்தில சந்தோசத்தை பாக்கணும்...எனக்கு அத விட எதுமே வேணாம்னு சொன்னாங்க....


"விழியோடு சேர்த்து மனதும் கலங்கும்...உன் மனம் என் மீதான உன் காதலில் திளைத்து நீ மறந்துப்போய் அன்பின் மிகுதியால் என்னை தேடும் தருணம் குறித்து பகிர்கையில் எல்லாம்...

உன் நேசிப்பின் வார்த்தைகளை காட்டிலும் இவை தரும் மனதின் நெகிழ்ச்சியை வார்த்தைகளில் அடக்கிட தெரியாமல் வார்த்தைகளை தேடி தவிக்கிறது என்னுள்ளம் அதீத காதலோடு❤️ "


அவங்க சொல்லிமுடிக்கிறப்போ எனக்கே ஒரு டாக்டரா இருந்தாலும் நானும் ஒரு பெண்ணிற்கு கணவர் என்ற முறையில மனசு கனத்துப்போச்சு...

நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க சித்...சீக்கிரமே உங்க வாழ்க்கையில ஒரு திருப்பம் வரும்...அன்னைக்கு நீங்க எண்ட்ட வந்து சொல்லுவீங்க...அந்த Day க்காக நீங்க மட்டுமில்ல நானும் வெயிட்டிங்...

கலங்கிய விழிகளுடன்...கண்டிப்பா கிரிஷ்...ஒண்ணே ஒண்ணு கேட்கலாமா...

கேளுங்க சித்...

எப்படி நீங்க மட்டும் இப்படி பிரெண்ட்லியா பேசுறீங்க...ஒரு டாக்டர்ங்கிற பீலே வரல...

வரலல...அதான் எனக்கும் வேணும்...சின்ன வயசில இருந்தே எனக்கு டாக்டர்னா கனவு...நிறைய டாக்டர்ஸ் கூட வொர்க் பண்ணிருக்கேன்...அவங்க சிலர் சிடு சிடுனு விழுங்வாங்க...சிலர் தெரிஞ்சவங்ககிட்ட ஒரு மாதிரி தெரியாதவங்ககிட்ட ஒரு மாதிரியும் பேசுவாங்க...சிலர் என்னடானா அவங்கள பேசவே விடாம என்ன பிரச்சனையோ அதுக்கு மட்டும் மருந்தை குடுத்துட்டு போயிடுவாங்க...அப்போதான் முடிவு பண்ணேன்...நாம இப்படி இருக்கக்கூடாது...நமக்கிட்ட வரவங்களுக்கு பர்ஸ்ட் பேசவிடணும் அப்புறமா அந்த பிரச்சனையோட ஆணிவேர் தெரிஞ்சப்புறம் தான் ட்ரீட்மெண்ட்கே போணும்னு...இது வர அததான் பாலோ பண்றேன்...இப்படி எனக்கு பெரிசா வருமானம் கிடைக்குதானு கேட்டா நிச்சயம் இல்லை...ஆனா மனதிருப்தி இருக்குல அது எவ்ளோ ரூபா கொடுத்தாலும் கிடைக்காது...அது போதும் சித்...வயசானவங்க வாழ்த்திட்டு போறாங்க...அவங்க பேமிலில ஒருத்தரா பாக்கிறாங்க...இத விட வேறென்ன வேணும் சொல்லுங்க...

செம்ம டாக்டர்...ஹேட்ஸ் ஆப்...யூ ஆர் ரியலி கிரேட்...வாழ்க்கை நித்தமும் நமக்கு எதையாச்சும் கத்துக்கொடுத்துட்டே தான் இருக்குலனு மனசிலே நினைச்சுட்டு யாழினியை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான்...

இவர்கள் கையிலிருந்த மற்றொரு சாவியை கொண்டு உள் நுழைய இவர்கள் வருவதற்குள் எழில் உறங்கிப்போயிருந்தாள்...

நாட்கள் கழிந்தன...

மீனாட்சிக்கு பெண் குழந்தை பிறந்தது என தகவல் வர...எழில் விரைவாய் கிளம்பிக்கொண்டே...பொம்பள் பிள்ளையாம்...ஆண் வாரிசு கிடைக்கும்லா எதிர்பாத்தேன்...சே என புலம்புவது இவர்கள் காதிலும் விழ...

சித் பேச முற்ப்பட்டான்...வேணாம் என யாழினி கண்களால் ஜாடை காட்டவும் அமைதியாய் அமர்ந்தான்...

நீங்க கெண்டும் ஆஸ்பத்திரில பிள்ளைய பாக்கவாரேனு வந்திடுதாகீக...அங்க அவுக வீட்டு ஆளுக இருப்பாக..அவுக முன்னால என்னால கேவலப்பட முடியாது...

விழிகள் கலங்கியது யாழினிக்கு...இருப்பினும் அமைதியாய் கணவனின் கையை அழுத்தமாய் பிடித்தப்படி அமர்ந்திருந்தாள்...

ஹேய் நீ ஏண்டி அழுற...அவங்க பேசினதுக்கு அவங்கதான் பீல் பண்ணனும்...நீ இல்ல...பெண் குழந்தைனா இவங்களுக்கு அவ்வளவு கேவலமா போச்சோ...எனக்கு வந்த ஆத்திரத்துக்கு எதும் பேசிருப்பேன்...எல்லாம் உனக்காக அமைதியா இருக்கேன்...சீர் செனத்தி செய்யனும்னே பெண்குழந்தை பிறந்தா வேணாம்னு சொல்றாங்களே...ஒரு குழந்தையும் இல்லாம நிதம் நிதம் செத்துட்டு இருக்கவுங்களுக்குதான் அந்த வலி புரியும்...இவங்களுக்கு எங்க புரிய போகுது...விடு நாம போயி பாக்க வேணாம்...

யாழினிக்கு அக்குழந்தையை பாக்கணும்னு தொணவே...கணவனிடம் சொல்லாமல்...ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள்...அவள் அத்தை அங்கு இல்லையென மகிழ்ச்சிக்கொண்டப்படியே...அக்குழந்தையை பார்த்துவிட்டு வீட்டிற்க்கு சென்றுவிடலாம் என விரைந்தாள்...அங்கு சித்தும் நிற்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்தவள்...

யாழினி நீ எங்க இங்க...நீங்க எதுக்கு வந்தீங்களோ அதுக்கு தான் நானும் வந்தேன்...

சித்து சாரிடா அம்மா தான்...எவ்வளவோ சொன்னேன் கேட்கவேயில்லடா...பிளீஸ் என்னய மன்னிச்சிடுமா...

ஹேய் ரகு அம்மாவை பத்தி எனக்கு தெரியாதா...விடு...

யாழினி பேபி பாரேன்...குட்டி விரல்...முகத்தை பாத்தியா அப்படியே என் அண்ணா தான்...உன் பெரியப்பா டா...செல்லமே...இதோ பாரு யாரு வந்திருக்காங்கனு...

சரி யாழினி வா கிளம்பலாம் அம்மா வந்தா பின்ன எதுவும் கத்த போறாங்க...

ம்ம்ம் சரிமா...

தொடரும் ❤️
 

Advertisements

Latest updates

Top