என் இமைக்குள் "பெண்ணியம் பேசாதடி "

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

Author
Author
SM Exclusive Author
Joined
May 24, 2018
Messages
704
Reaction score
1,936
Points
93
Age
30
Location
Sri lanka
என் இமைக்குள்,

"பெண்ணியம் பேசாதடி"
IMG-20200516-WA0030.jpg
தலைப்பென்னவோ பாரதியை நினைவு கூற,தலைப்பினூடே நுழைந்த நான் பார்த்ததென்னவோ அகம் ஓர் நவீன கவிஞனின் அறைக்கூவளாய்.

உடல் இரண்டும் ஒன்றாகிட ஒரு நொடி போதுமே அது எப்போதும் எவருக்கும் சாத்தியமே. உள்ளங்கள் இரண்டும் ஒன்றாகிட யுகங்கள் கடந்தாலும் அங்கே காதல் இல்லையே சாத்தியமில்லையே.

தன்னை விட மூத்தவளாம், தன்னையே விரும்பி கேட்டிட மறுத்தானில்லை.தான் விரும்புவதை விட தன்னை விரும்புவது பெருமையல்லவோ… வாழ்ந்தான் தான் அதில் மகிழ்விருந்தது,உயிர்பிருந்ததா சந்தேகம் தான்.

எழுத்தாளன் அவனே,அவன் வாழ்வை வர்ணமாக்கினான். வர்ணங்கள் என்னவோ அவனை சூழ்ந்தே இருந்திருக்க மாயமாய் அவனுக்கு மட்டும் மறைந்து.

வாழ்வின் பக்குவ நிலை அடைய வாழ்வாய் நினைத்து வாழ்ந்த வாழ்வையே இழக்க அதன் பின் அவனுக்கு வாழ்வேது…

முடிந்துவிட்டதா?

இல்லையில்லை.தன் மனம் உயிர்ப்பாய் இருக்கும் வரை அங்கு காதல் நிரம்பியிருக்க அவன் வாழ்க்கை கவிதை தான்.இதோ வாழ்கிறான்…

தந்தையின் ரசிகனாய் மகன்.அவனே தந்தை ரசிக்கும் ரசிகையை அவருக்கு பரிசளிக்க விரும்பும் அன்பு மகனாய்.

தேடித்திரிந்தவன் தன்னோடு தினந்தோறும் போர் புரியும் தன் அன்பு காஞ்சனையே தன் தந்தையின் ரசிகை என்றுணர்ந்த நொடி அவன் மனம் மிக அழகு.

"ரசித்ததென்னவோ எழுத்தாளனின் வரிகளையே தவிர எழுத்தாளனை அல்ல.காதல் கொண்டதென்னவோ கவிஞனை,என் அக்காவின் கணவனை அல்ல "

பெண்ணோ பெண்ணியம் பேச அவள் பேச வாய்ப்பே தராத எழுத்தாளனின் காதல் மிக மிக அருமை.

அதென்ன பிள்ளைகளுக்காய் வாழ்வது… தான் முதலில் வாழவேண்டுமே.மகனின் பக்குவம் தந்தையின் வாழ்வில் ஒளி விளக்காய்.

அனைத்து கதாப்பபத்திரங்களும் சிறப்பாய்.இருவரிக்கவிதைக்கு ஓரெழுத்தும் எத்தகைய பெறுமதியோ அதையே இங்கு சிறப்பித்த கதை மாந்தர்கள்.

எழுத்தாளரின் மகன் வளவனோ கவி வர்மனாய்.(எழுத்தாளரின் படைப்பில் அவரைக்கொண்டு உருபெற்றவன் தானே.)

வளவனின் நண்பனோ அவனுக்கு உயிரோட்டமாய். இருவரது உரையோடு காஞ்சனையும் சேர்ந்திட அங்குமே கவிதைக்கு இடையே வரும் ராகங்கள்.

ராகங்கள் இசைக்க சில நொடிகள் சற்று சத்தமாகவே நானறியாது வெளிவந்தன என்னிதழ் பிரிந்த சிரிப்புகள்.காஞ்சனையின் சிறு தோழி அவள் சிணுங்கல் பேச்சு எழுத்தாளரின் பாடல்களுக்கு மெட்டென…

முயல் குட்டியாய் வளவனுக்கோர் தங்கை. அருமையிலும் அருமை.

எவன் ஏற்பான் இன்றைய சமூகத்தில் தன் பிள்ளை வயதில் தனக்கோர் தங்கையை.

தேடுகிறேன்,இன்னுமே உலகில் இவனைப்போல் ஒரு விசித்திர அரியப்பிறவியினை.

அருமையான கதை.காதலுக்கேது வயது, வரையறை…

"கவிஞன் கவி படைக்க மூழ்கிட இவ்வுலகும் அதன் அழகும் போதவில்லை என்பான்…
காதல் கொண்ட காதல் காரனுக்கு அதற்கு எல்லையே இல்லை என்பான்."


நானுமே அடிமை சாசனம் தருகிறேன் உன் எழுத்துக்களில் உயிர் பெற்ற வரி வடிவத்திற்கு.

நானுமே ஓர் நாள் வாழ ஆசைகொள்கிறேன் எழுத்தாளரே! உம் அந்தப்புரத்தில் வசித்திட… (காஞ்சனை இடம் தந்தால்😉 )

வாழ்த்துக்கள்... எழுத்தாளர் தனுஜா. இன்னுமாய் உம் படைப்புக்கு அடிமைகள் பெருகட்டும்…

அன்புடன்,
இமையி.
 
Dhanuja

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Aug 9, 2018
Messages
3,477
Reaction score
8,030
Points
113
Age
30
Location
Trichy
அருமையான விமர்சனம் சகோ உயிர் குடுத்த படைப்புக்கு உயரிப்பு கொடுத்த உங்கள் வரிகள் அருமை.தோள் கொடுக்கும் தோழமைகளுக்கு நன்றிகள் பல................
 
Imaiyi

Author
Author
SM Exclusive Author
Joined
May 24, 2018
Messages
704
Reaction score
1,936
Points
93
Age
30
Location
Sri lanka
அருமையான விமர்சனம் சகோ உயிர் குடுத்த படைப்புக்கு உயரிப்பு கொடுத்த உங்கள் வரிகள் அருமை.தோள் கொடுக்கும் தோழமைகளுக்கு நன்றிகள் பல................
Thank u...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top