• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் உள்ளம் கொள்ளை கொண்ட அழகியின் "உயிரைக் கேட்காதே ஓவியமே" ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அழகியின் ‘ஆனந்த பைரவி ‘ யில் இருந்து ஆனந்தமாய் அழகியை தொடர்ந்து வரும் பேறு பெற்றவள் நான். அழகியின் முதல்கதையின் முதல் பதிவை படித்து எப்படி நெக்குருகி போய் விழிவிரித்து ஆனந்தத்தின் எல்லையில் நின்றேனோ...அதற்கு சற்றும் குறையாத, ஏன்...அதற்கு ஒருபடி அதிகமாகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன்னைச் செதுக்கி, இன்னும் அதிகமாக என்னை விழிவிரித்து பார்க்க வைக்கிறாள் அழகி...

அழகி, அன்பு எனும் மலர்தொடுத்து அழகிய கதைகள் புனைவதில் வித்தகி அவள். அந்த அன்புமலர் சரத்தில் புதிதாக சேர்ந்த மனதை மயக்கும் வாசமலரே “ உயிரைக் கேட்காதே ஓவியமே”

கண்டவுடன் காதல், காணாமலே காதல் இப்படி நாம் எத்தனையோ வகை காதலை படித்திருப்போம். ஆனால் இங்கே பொறுப்பான ஒரு இளம் மருத்துவரான செழியன் மாதவியை தானாய் தேடி காதல் சொல்லவில்லை. அன்னையவர் உனக்காக நான் பார்த்திருக்கும் பெண் இவள் என்ற கைநீட்டலுக்குப் பின்னே வந்த காதல். ஆனால் அந்த காதல் அவனை ‘காதல் தீவிரவாதி’ ரேன்ஜ் க்கு கொண்டு சென்றதெல்லாம் காதல் செய்த மாயமின்றி வேறேது... அதையெல்லாம் பார்க்கும் போது காதல் நோய் கொண்டு விட்டால் பாமரன் என்ன? படித்தவன் என்ன? அனைவருக்குமே அதன் உணர்வுகள் ஒரே மாதிரி தான் என்று தான் எண்ணத் தோன்றியது. அதனால் தான் நம் முன்னோரும்,

“காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்.” என்று எழுதி வைத்தனரோ!

அதிலும் டாக்டர் சுவரேறிக் குதித்து காதல் பயிர் வளர்த்தது எல்லாம்...ஹைய்யோ! மறக்கவே முடியாத நிகழ்வுகள். கொண்ட காதலில் உறுதியாக இருந்து கடைசிவரை மனைவியாகிப் போன காதலியின் கௌரவம் காக்க தனிக்குடித்தனம் செல்லத் துணிந்த செழியன் ஒரு காதலனாக/ கணவனாக என் மனம் கவர்ந்தவனே...

மாதவி, இப்படி ஒரு பெண்ணைப் பெற்ற அவளின் பெற்றோர், உண்மையிலே மாதவம் செய்தவர்கள் தான். தன் தம்பிக்காக தன் பெற்றோருடன் தானும் கைகோர்த்து அவனுக்கு இன்னொரு தாயாய் மாறி நின்ற மாதவி, செழியனின் அம்மா கற்பகத்தை கவர்ந்ததில் வியப்பேதுமில்லை. திருமணத்திற்கு பின் காதல் நோய் பீடித்த மருத்துவனை, கொண்ட கடமையிலிருந்து வழுவாது வழிநடத்தும் மாதவியின் செயல்களை அழகி ஆங்காங்கே காட்சிபடுத்தியிருந்த விதங்கள் அருமை. நம் கையில் இருக்கும் ஐந்து விரல்களே ஒரே மாதிரி இருப்பதில்லை. அப்படி இருக்கும் போது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் ஒத்த சிந்தனை உடையவர்களாக இருந்து விடுவார்களா என்ன? ஆனால் அவர்கள் அனைவரையும் ஒரே கூட்டுக்குள் சிந்தாமல் சிதறாமல் வைத்து காப்பதே குடும்பம் என்ற அமைப்பு என்று அழகாக தனது கணவனாகிப் போன காதலனுக்கு உணர்த்திய தேவதை, செழியனின் மாதவி.

அழகாக முடிந்திருக்க வேண்டிய திருமணத்தை தங்களுக்குள் கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினையால் முடிந்த மட்டும் குழப்பிவிட்ட நாயகன், நாயகியின் இளவல்களான அருண், அர்ச்சனா கதையின் ஹைலைட் என்று சொன்னால் மிகையில்லை...

அருண்...மாதவியின் தம்பி.
தம்பி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று வாசகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற கதாபாத்திரம். கதையில் அவனின் கோபம் கூட ஓர் அழகு. அதுவும் அந்த கோபம் தனது சகோதரிக்காக இருக்கும் போது அது பேரழகாக உணரப்பட்டது. கதையோட்டத்தில் அருண், அர்ச்சனாவிடம் கோபப்பட்டு விட்டு அவள் அப்பாவிடம் சென்று நேரிடையாக பெண் கேட்பது எல்லாம் சான்ஸே இல்லை. அதே போல கோபம் கொண்ட அர்ச்சனாவை சமாதானம் செய்ய அவன் சொல்லும் சமாதான வார்த்தைகள் நீண்ட நாட்கள் நம் காதுகளில் ரீங்காரமிடும் என்பது மட்டும் நிச்சயம்.

அர்ச்சனா...இந்த கேரக்டரை வளர்ந்த குழந்தைன்னு சொல்லலாம். கொஞ்சம் அடம், நினைத்ததை நினைத்த உடன் பேசும் குணம் எல்லாம் கலந்து செய்த கலவை அவள். ஆனால் தனது தவறு உணர்ந்து சாரி கேட்கும் இடங்களில், உண்மையிலே பெண்ணவளின் மாறுதல் மெச்சத்தக்கதாக இருந்தது. அதிலும் அவளின் குணமாறுதலைக் கூற ‘இப்போது சாரி அவளுக்கு பொருந்தி போயிருந்தது” என்று அழகி கூறியிருந்த இடம் அழகு.

அருண், அர்ச்சனா இருவருமே குணத்தில் அதிரடி. இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் வந்தால் அவர்களின் காதல் வசனங்கள் எவ்வாறு இருக்கும்! ஹஹஹ... உண்மையிலேயே சுவையான வார்த்தையாடல்கள் அவை.

அடுத்து கருணாகரன்...ஹப்பாடி! மனுஷனின் மௌனத்திற்கு பின்தான் எவ்வளவு பெரிய மன வேதனை. ஆனால் அத்தனையும் தன் அன்பு என்னும் மூன்றெழுத்து மந்திரம் கொண்டு நேர்செய்திட்ட மாதவி ஒரு நல்ல மருமகளாகவும் கதையில் மிளிர்ந்திட்டாள் என்றால் அது மிகையல்ல...

வழக்கம் போல அழகி தன் நேர்த்தியான கதைசொல்லும் திறனாலும், தன் தமிழாலும், எழுத்தாலும் நம்மை மயக்கத் தவறவில்லை.

"செழியன்"... அழகியின் நாயகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். அதில் இவன் தனிரகம்...

இன்னும் இன்னும் இதே போல நிறைய கதைகள் கொடுத்து எழுத்துலகில் பல உயரங்கள் தொடவேண்டும் என மனமார வாழ்த்துகிறேன் தோழி.???
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top