• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஐஸ்கிரீம் காதலி-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mylaa

நாட்டாமை
Joined
Jan 12, 2020
Messages
72
Reaction score
96
Age
32
Location
Ethiopia
என் ஐஸ்கிரீம் காதலி-3

அந்த பி‌எம்‌டபில்யு கார் மிக அதிவேகமாக அந்த அலுவலக்கட்டிடத்தினுள் நுழைந்தது. அவன் ஆதித்வர்மா அந்த காரில் இருந்து இறங்கினான். அவன் நடை சொன்னது அவன் எவ்வளவு கோவத்தில் உள்ளான் என்பதை. அந்த க்ரே நிரசூட்டும் அதே நிறத்தில் பாண்ட்உம் அவனது கம்பீரத்தை அதிகபடுத்தி காட்டியது. அவன் உள்ளே நுழையும் தருணம் வரவேற்பில் இருக்கும் செயற்கை பூந்தொட்டி கிலே விழுந்துகிடந்தை பார்த்ததும் அவனது கோவம் இன்னும் அதிகமடைந்தது.

அவனது முகம் பாறையென இறுகியது, அடிதொண்டையிலிருந்து சீரிய குரல்லில் "மாணிக்கம் ......" என்ற இரைந்து அழைத்தான்.

அவனது அழைப்பை கேட்ட மாணிக்கம் அந்த அலுவலக வரவேற்பாளர் திடுக்கிட்டு அங்கு விரைந்துவந்தார்.

"ஸார்ர்...... அவரது முகம் பயத்தில் வெளுத்து இருந்தது.

அவரை பார்த்ததும் " என்ன இது..... இதெல்லாம் பக்கத்தான உங்களுக்கு சம்பளம் குடுக்குறோம்,????? என்று அடிக்குரலில் சீர்ரினான்.

"ஸார்ர்..... சாரி ஸார்ர்.... இதோ இப்போ சரி பண்ணிடுடுறேன்...." என்று பயந்துகொண்டே கூறினார்.

" நீங்க இதுக்கு அப்பறம் பண்ணுவீங்களானு நான் கேக்கல, ஏன் இதுக்குமுன்னாடி பண்ணலனு கேட்டேன்" என்று கேட்டான்.

அவன் கேட்டதுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தலைகுனிந்து நின்றார் மாணிக்கம்.

"ஒன் வீக் டிஸ்மிஸ் பண்றேன் அப்போதான் இனி இப்டி பண்ணனும் தோனாது" என்று கூறியபடி அந்த இடம்விட்டு நகர்ந்தான்.

அவன் கூறியதைகேட்டு திகைத்து மாணிக்கம் என்னக்கூறுவது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.

இங்கே நடந்தவற்றை பார்த்த அழுவலக மக்கள் பயத்துடன் அவ்விடம்விட்டு நகர்ந்தனர்.

ஆதித் தன் அறையினுள் சென்று அமர்ந்தான்.

"ராகவ்....... என்று அக்கவுண்ட் மேனேஜர் ஐ அழைத்தான்"

இவனது அலைப்பை கேட்ட ராகவ் " ஹையையோ.... இவரு எதுக்கு இப்போ நம்மள கூப்புடுறாருனு தெரியலயே.... இன்னைக்கு நாம டோட்டல் டிஸ்மிஸ்தான் போல...இந்த 50 வயசுக்குமேல எங்க போய் நாம வேலதேடுறது' என்று மனதில் நினைத்தபடி அவனது அறைக்குள் சென்றார்.

அவனை பார்த்ததும் "சேல்ஸ் டாக்ஸ் ஃபைல் பண்ண ஃபைல் கேட்டு ரெண்டு நாள் ஆச்சு, இன்னும் ஏன் என் டேபிள்கு வரல" என்று கேட்டான்.

அவனை பயத்துடன் பார்த்து "சாரி ஸார்ர்.... இன்னைக்கு எவேனிங்க்க்குள்ள உங்க டேபிள் ல கொண்டுவந்து வைச்சுடேறேன் ஸார்ர்...."

அவர் கூறியதைகேட்ட ஆதித் "கெட் அவுட்...... என்று இறைந்து கூறினான்.

தப்பித்தோம் பிழைதோம் என்று அவன் அறையிலிருந்து வெளியேறினார்.

அதே நேரம் அந்த அழுவலககட்டிடதின்நுள் தியாவும் லாவண்யாஉம் நுழைந்தனர். அங்கிருந்த காவலாளியிடம் "அண்ணா.... இன்டர்வியூ எங்க நடக்குது " என்று கேட்டுக்கொண்டு அவிடம்நோக்கி சென்றனர்.

அங்கு நேர்முகக்கானல்கு வந்து அமர்ந்து இருந்த மற்றவர்களுடன் சென்று காலியாக இருந்த இருக்கைகளில் அமர்ந்தனர்.

"ஹப்பாடி..... ஒருவழியா டைம் கு வந்துட்டோம்... எங்க அந்த பெருசா தாளிச்சிட்டு வந்ததுல லேட் ஆய்டுமோனு நெனச்சேன்... ஊவ்வ்" என்று கூறி தியா பெருமூச்செறிந்தால். (உள்ள' ஒருத்தன் கோலவெறில இருக்கான், இங்க பீலிங்க்கு....)

" நாம அந்த ஆள அப்டியேவிட்டுட்டு வந்து இருக்ககூடாது, போலீஸ் ல பிடிகிகுடுத்துட்டு வந்து இருக்கணும்," என்று இன்னும் ஆத்திரம் அடங்காமல் பேசினாள்.

"விடு லாவ்ஸ் .... அந்த சின்ன பொண்ணு சேஃப்ஆஹ் காப்பதியாச்சு அது போதும்... இன்னைக்கு இன்டர்வியூ மட்டும் இல்லைனா நீ சொன்னமாதிரி செஞ்ஜீருக்கலாம்..... இந்த விஷயம் நமக்குள்ள இருக்கணும் தப்பிதவறி மேக்கிகு தெரிஞ்சிச்சினு வை.... காது டமாரம் ஆயிடும்..... சும்மா ஒர்ரே அடி.... அப்பறம் மர்கயாதான்...""""" என்று களுத்தை சாய்த்து தியா கூறியதை கேட்ட லாவண்யா நகைக்க ஆரம்பிதாள்.

" இஸ்ஸ்.... சும்மா இருடி .... வெளிய அனுபிற போறாங்க...." என்று தியா பதறி கூறினாள்.

" ஹா... ஹா.. ஹா... இல்ல நீ சொன்னத நெனச்சி பாத்தேன்.... சே.... செம டி..." என்று கூறியவளை வெட்டவா குத்தவா என்று தியா பார்த்தால்.

நேர்முககானல்கு ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். அந்நேரம் அவ்விடம் வந்த அகிலேஷ் அங்கிருந்த அனைவரின்மீதும் ஒரு பொதுவான பார்வையை செலுத்திவிட்டு பேசஆரம்பிதான்.

"குட் மார்னிங் ஃபிரண்ட்ஸ்... இன்னைக்கு நடக்குற' இன்டர்வியூ எதுக்காகனு உங்க எல்லாருக்கும் தெரியும்... மொத்தம் 5 ரவுண்ட் ஒவ்வொரு ரவுண்ட் எண்ட் ல உங்கள்ல இருக்குற சிலபேறு மட்டும் தன் நெக்ஸ்ட் லெவல்கு போகமுடியும் .... சோ ஆல் தி பெஸ்ட்....." என்று கூறி அவர்களுக்கு முதல் ரவுண்ட் நடக்கும் இடத்திருக்கு வழிகாட்டினான்.

அனைவரும் அந்த தளத்திற்கு சென்றனர். நேரம் 12 நெருங்கிகொண்டிருந்த சமயம் அங்கிருந்த பெரும்பான்மையானவர்கள் வெளியேறிருந்தனர். தியாவும் லாவண்யாவும் இன்னும் ஒரு 15 பேருடன் கடைசி சுற்றில் தகுதி பெற்று கான்பரன்ஸ் ஹால்லில் அமர்ந்து இருத்தனர்.

அந்த கான்பரன்ஸ் ஹால்லில் அமர்ந்து இருந்த 15 பேரில் 7 பெண்களும் 8 ஆண்களும் இருந்தனர்.

"தியா.... தியா... என்று லாவண்யா மெல்ல அழைத்தால்.

"என்ன டி.... "

" அந்த யெல்லோ சாரீ ய.. பாத்தியா .... " என்று மெதுவாக அவள் காதருகில் கேட்டாள்.

அவள் கூரிய அந்த மஞ்சள் நிற சேலை அணிந்த பெண்ணை தியாவும் பார்த்தால். அவளின் உடையலங்காரம் பார்பவரை திரும்பி பார்க்கசொல்லும் அளவிற்கு ...லோ ஹிப் சேலை அணிந்து பார்பதற்கு கவர்ச்சியாக
இருந்தாள். தியாவை பொறுத்தவரை உடை என்பது கண்ணியமாக இருத்தல் வேண்டும். முகத்தை சுளித்தபடி திருப்பிக்கொண்டாள்.

அந்நேரம் அவ்விடம் வந்த அகிலேஷ் " ஹாய்... ஆல்... ஐ ஆம் ஹாப்பி டூ வெல்கம் யு ஆல் டூ அவர் கம்பெனி.... உங்க அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர் ஆஹ் நீங்க ஃப்ரண்ட் ஆஃபிஸ்ல கலெக்ட் பண்ணிகங்க....உங்க ஜாயினிங் டேட் அதுலயே இருக்கும். " என்று அனைவரிடமும் கூறிவிட்டு அவிடம்விட்டு சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை கூறி கொண்டு அறிமுகபடுத்திக்கொண்டனர்.

"ஹாய்... ஐ அம் மாதவி.... கிளாட் டூ மீட் யு..... " என்று லாவண்யா,தியாவிடம் அறிமுகபடுத்திக்கொண்டாள். (அதாங்க அந்த யெல்லோ யெல்லோ டெர்டி\ பெல்லோ).

அறிமுகபடலம் முடிந்ததும் அவரவர் அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர் பெறசென்றனர்.

அகிலேஷ் ஆதித் அறையின் வாயிலில் நின்று கதவை தட்டி உள்ளேவர அனுமதிவேண்டி காத்திருந்தான்.

"யெஸ்... கம் இன்."

"சார்.... கேண்டிடேட் சேலெக்சேன் லிஸ்ட் இதுல இருக்கு .... " என்று கூறி அவன் பதிலுக்காக காத்திருந்தான்.

"ஓகே... ஐ வில் ஸீ.... பிஃபோர் தட் அவங்க எல்லோரோட பேக்ரவுண்ட் செக் கிளியர் பண்ணிடுங்க.... தட் ஷுட் பி டன் இம்மீடியட்லி"... என்று கூறி நெற்றியில் கை வைத்து யோசனையில் விழுந்தான்.

அவன் கூறியதுக்கு அகிலேஷ் ஆமோதித்து தலையசைதான். வெளியேற அவன் முகம் பார்த்து நின்று இருந்தான். ( "இப்போ நான் வெளியபோறேன் னு சொல்லலம்னா இத கூட கேகாணுமானு கேபன், இங்கயே இருந்த இங்க என்ன பண்ற இன்னும் னு கேபன், இப்போ நான் என்ன பண்ணனும் னு தெரியலயே???? என்று மனதில் நினைத்தபடி அவன் அனுமதி வேண்டினான்.

" ஸார்ர்..... ஷல் ஐ கோ...???".... என்று கேட்டான்.

அவன் கேட்டதுக்கு ஆதித்திடம் இருந்த எந்த பிரெதிபலிபும் இல்லை. எனவே மறுமுறை "ஸார்ர்...... ஸார்ர்...." என்று கொஞ்சம் சத்தமாக அழைத்தான்.

"ஆஹ்ங்க்..... யெஸ்... என்று கனவில் இருந்து முழித்தவன் போன்று அவன் கேட்டான்.

"ஸார்ர்... ஷல் ஐ கோ...????"

"யெஸ்.... யு மே கோ நௌ..... அண்ட் கேன்ஸல் ஆல் தி மீடிங்க்ஸ் .." என்று கூறியபடி தன் இருகையின் இருந்து எழுந்தான்.

"ஸார்ர்... குப்தா அண்ட் கம்பெனி கூட இன்னைக்கு முக்கியமான மீட்டிங்.. ஆறுமாசம் முன்னாடியே பிக்ஸ் பன்னது... நாம இப்போ கேன்ஸல் பண்ணா .... அவ்ளோவா நல்ல இருக்காது..."

அவன் கூறியதை கேட்டதும் முகம் இரும்பேன இறுக "டூ வாட் ஐ ஸே.... " என்று கூறியபடி அவிடம்விட்டு சென்றான்.

அவன் செல்வதை பார்த்து அகிலேஷ் மனம்வேதனை கொண்டான். அவன் கூறியதை செவ்வனே செய்துமுடித்து அமர்ந்தவேளை அவனது செல்பேசி அழைத்தது. அதில் ஒளிபெற்ற பெயரை கண்டதும் எதிர்பார்த்த அழைப்பு என்பது போல் அதனை இயக்கி காதில் வைத்தான்.

"ஹலோ...... ஹிம்ம் .... ஹிம்ம்... எங்க .... ஓகே.... வரேன்...." என்று கூறியபடி எழுந்து சென்றான்.

அவன் தன் இருசக்கர வாகனநத்தில் சென்ற இடம் வசதிபடைத்தவர்கள் மட்டுமே வரக்கூடிய ஐந்து நட்சத்திர விடுதி ஆகும். அங்கு அவன் தேடி சென்றவனோ ஒரு மூலையில் அங்கிருந்த மேஜையின்மேல் தலைகவிந்து கிடந்தான். அவனை கண்டதும் வேதனை நெஞ்சை அடைத்தாலும் தற்சமயம் வேதனை படுவது எந்தவகையிலும் உபயோகம் இல்லாயென்ற நிதர்சனம் புரியாவும்.... அவனை நோக்கி சென்றான்.

"ஸார்ர்.... ஸார்ர் பிளீஸ் எந்திரிங்க ஸார்ர்....... என்று ஒரு பேரர் அவனிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தான். அவன் அகிலேஷை பார்த்ததும் அவனிடம் விரைந்து வந்து "ஸார்ர்... நான் எவ்ளோவோ சொன்னேன் ஸார்ர்..... ஸார்ர் கேக்கவே இல்ல..... ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு..." என்று தலைகுனிந்தபடி கூறினான்.

அவன் கூறியதை கேட்டு அவனிடம் கோவம்கொள்வதில் எந்தவகையிலும் நியாயம் இல்லை என்று அந்த மேஜையை நோக்கி சென்றான்.

அங்கே அவன் நண்பன் இருந்த கோலம் அவன் மனதைபிசந்தாலும் இடம் பொருள் கருதி அவனை கைதாங்கலாக தூக்கிக்கொண்டு வாகனநிறுத்துமிடதிற்கு சென்றான். அங்கே தனது இருசக்கர வாகனத்தை அந்த தெரிந்த பேரரிடம் பார்துக்கொள்ளசொல்லிவிட்டு ஆதித்தின் காரை நோக்கி சென்றான். அவன் காரை கண்டுபிடித்து அவனை பின்னிருகையில் சாய்த்துபடுக்க வைத்தான். யாரேனும் பார்பதற்கு முன் அவ்விடம் விட்டு சென்றுவிடவேண்டும் என்ற தவிப்பில் விரைவாக காரை செலுத்தினான். அதில் கார் குலுங்கியது,

"ஹூய்..... யால்டா .... அது...... யான் லால் டோரியுமா........ " என்று ஆதித் உளறாரம்பித்தான்.

அவனை கோவத்துடன் திரும்பி பார்த்து "குடிச்சா நீ யார்னு உனக்கே தெரியாது இதுல என்னய யார்னு கேட்டுட்டு இருக்க.... பேசாம வாடா.... மனுசன கடுப்ப கேலபிக்கிடு..." என்று கடுப்புடன் மொழிந்துவிடு வண்டியை செலுத்தினான்.

"மாச்சான்...... யான்...... பாவம் ட...... ஐ அம் சோ ஹாப்பி...... யான் அப்டியே பழகுரேன்ன் .... மேல மேல.....

"யாரு நீயா பாவம் நான்தான்டா பாவம்...... இப்டியே பேசிட்டு வ நெஜமாவே மேல பறக்கவச்சிடுவேன் ......... மனுஷண கொலகாரண மாத்தாம..... மோந்துபாத்தவே சொங்கிபய்யன் மயக்கம் போடு விழுறவன் என்னத்துக்கு குடிக்கணும்....

ஆதித் அவன்பாட்டிற்கு உளறிக்கொண்டுவர அகிலேஷ் காரை நேராக ஆதித்தின் இல்லத்ததில் சென்று நிறுத்தினான். அவனும் சாமி இருவரும் சேர்ந்து அவனை அவனது அறையில் படுக்க செய்தனர். அவன் உளறல்கள் எல்லை இல்லாமல் செல்வது இந்தமுறையும் அவர்கள் இருவரையும் வேதனை கொல்லசெய்தது. எதிர்காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்பதை அனைவரும் அறிந்துகொண்டால் வாழ்கையில் என்ன சுவாரசியம்.

கரையும்..



மைலா ராணி....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மைலா ராணி டியர்
 




Last edited:

Chanmaa

இணை அமைச்சர்
Joined
Dec 26, 2019
Messages
740
Reaction score
684
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top