• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஐஸ்கிரீம் காதலி-5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mylaa

நாட்டாமை
Joined
Jan 12, 2020
Messages
72
Reaction score
96
Age
32
Location
Ethiopia
என் ஐஸ்கிரீம் காதலி-5

அந்த நான்கு இளம் நெஞ்சங்களின் இரவின் புலம்பல்கள் விடியலின் ஆரம்பத்தில் முடிவு பெற்றன. தியாவின் கண்கள் இரவின் தாக்கத்தில் கோவைபழமென சிவந்து எரிந்தது. அன்றைய பொழுது நன்றாக செல்லவேண்டும் என்று தினமும் வேண்டுவதுபோல் வேண்டிக்கொண்டு தன் படுக்கைவிட்டு எழுந்தாள். இன்று தன்னவனின் நினைவு தன்னை பகலிலும் துரத்துவதைபோல் உணர்ந்தாள். தன் தலையை உலுப்பி நிஜத்தை தன் மனதில் பதியசெய்ய முயன்றாள்.

அங்கே நம் ஆதித் விடியலின் துவக்கதில்தான் கண்ணயர்ந்திருந்தான். அந்த சுவர் கடிகாரம் தன் இருப்பை உறுதி செய்வதுபோல் ஓடிக்கொண்டிருந்தது. அவன் கண்விழித்து தன் கைபேசியில் நேரத்தை பார்த்து பதறி எழுந்தமர்ந்தான். இரு கைகளையும் தன் தலையில் வைத்து தன்னை சமன்படுத்தி கொண்டு அவன் எழுந்தான்.

அங்கே அவன் கண்ட காட்சி அந்தநேரத்திலும் அவனை சிரிக்க தூண்டியது. அங்கே அகிலேஷ் ஒரு இருக்கையில் கால்மேல் கால்போட்டுக்கொண்டு ஒரு கையை தன் தாடையில் முட்டுக்கொடுத்துக்கொண்டு அமர்ந்து இவனை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

"இக்கும்.... என்னப்பா ராசா போதை தெழீஞ்சிடுச்சா ????

கேட்ட தன் நண்பனை வெட்டவா குத்தவா என்று முறைத்தான்.

"என்ன மொரப்பு.... இல்ல என்ன மொரப்புனு கேக்குறேன்???? நான் உனக்கு ஃப்ரெண்ட்ஆ இல்ல வெறும் அசிஸ்டண்ட் மட்டும்தானா..???? நீ பண்ற ஒவ்வொரு பிரெச்சனைகளையும் நான் சகிச்சிக்கிட்டு பொறுமையா போறது என்னைக்காது ஒருநாள் நீ சேஞ்ச் ஆவனு நம்பிக்கைலதான்... ஆனா நீ உன் பிசினேஸ்சையும் கெடுத்துக்கிட்டு உன் ஓடம்பையும் கெடுத்துட்டு இருக்க.... நீ உன் மனசுல என்னதான் நெனச்சிட்டு இருக்க????

"இப்போ என்ன ஆய்டுச்சுன்னு காலங்காத்தால காத்திட்டு இருக்க..???? இது என் லைஃப் நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன்... நான் யாரையும் கம்பல் பண்ணி இருக்க வைக்கலயே.... "

"என்னது காத்திட்டு இருக்கென???? என்னைய பாத்தா எப்டி இருக்கு??? இல்ல நான் தெரியாம கேக்குறேன் ... நேத்து அப்டி என்ன ஆய்டுச்சுனு சாரு குடிக்கபோனீங்க???"

"தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினேஸ்...."

"இந்த அதிகாரமயிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல...நேத்து அந்த அகர்வால் கம்பனி மீட்டிங் எவ்ளோ முக்கியம்னு நல்லா தெரிஞ்சும் கேன்ஸல் பண்ணிட்ட அந்த மொண்ணை தலையன் எனக்கு நேத்து ராத்திரி போன் பண்ணி, இனி உங்க கம்பனி காண்ட்ராக்ட் நம்பல்கி வேணாம் ..... நம்பல்கி டைமிங் மிக்கியம்னு அந்த ஆத்து ஆத்துரான் .... நீ நான் கத்துறேன் காதுகுத்துறேன்னு பேசிட்டு இருக்க..."

அவன் கூறியதை கேட்டு சிரிப்பு வந்தாலும் எங்கே தான் நகைத்தாள் அகிலேஷ் இன்னும் கடுப்பாகக்கூடும் என்று அதனை காட்டிக்கொள்ளாமல்.

"இப்போ என்ன அந்த காண்ட்ராக்ட் இல்லன வேற இல்லயா.... சும்மா ஸீன் போடாம கீழ போயி வெயிட் பண்ணு.... இன்னைக்கு நாம அந்த ஜெ‌பி கம்பனிக்கூட லீகல் டிஸ்கஷன் அரேஞ்ச் பண்ணி இருக்கோம்.... அதுக்கான வொர்க்அ பாரு... நௌவ் கோ அண்ட் வெயிட் டவுன்... " என்று கூறியபடி தன் குழியலறையினுள் சென்று கதவை அறைந்து சாத்தினான்.

அவனுக்கு எந்த பதில் கூறினாலும் அதுக்கு அவனிடம் எந்த பதிலும் இனி கிடைக்காது என்று உணர்ந்த அகிலேஷ் ஒரு பெருமூச்சை விட்டபடி கீழே சென்றான். அவன் கீழிறங்கி வருவதை பார்த்த சாமி அவனின் அருகில் சென்றார்.

"என்ன தம்பி.... ஏதும் பிரெச்சனையா ????? நீங்க இவ்ளோ கோவப்பட்டு நான் பாத்ததே இல்லாயே ஐயா.... என்ன பிரெச்சனை நாலும் நம்ம தம்பிய கைவிற்றாதீங்க.... என்று கூறி தன் துண்டினால் வாயை மூடி அழுகையை அடக்கினார். அந்த வயதான நல்ல உள்ளம் வருந்துவது பொறுக்காமல்.

"ஒய் சாமி... நீங்க மொதோ சீரியல் பாக்குரத நிப்பாட்டுங்க.. அவன் கையயும் விடல காலையும் விடல போதுமா.... நீங்க சொன்ன டயலாக் அவன் பொண்டாடிய பாத்து சொல்லவேண்டியது... என்னையா நெனச்சிட்டு இருக்கீங்க... உங்க எசமான்ட வேலபக்குறது எப்டி இருக்கு தெரியுமா தினம் தினம் நாமலே ஒரு அணுகுண்ட பத்தாவச்சிட்டு அதுமேல ட்ரௌசர்ஓட அதுமேல போயி ஜங்க்னு உக்கருறதுக்கு சமம்" அவன் கூறிய விளக்கத்தை கேட்டு அடக்கமாட்டாமல் அவர் சிரிக்க தொடங்கினார்.

"போங்க தம்பி... எப்பையும் தமாசு பண்ணிக்கிட்டு... ஹ.. ஹ... ஹ... நம்ம சின்னவரு பார்க்கதான் முசிட இருக்காரு ஆனா மனசு தங்கம்.. போதாத நேரம் அது இப்போ கோலப்பத்துல சிக்கிட்டு இருக்கு... "

"ஐயா சாமி... நீங்க உங்க நட்புக்காக படத்த நிப்பாட்டிட்டு போயி எனக்கு கொட்டிக்க ஏதாச்சு கொண்டு வாங்க உங்களுக்கு புண்ணியமா போகும்....." என்று கூறியபடி அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து தன் மடிக்கணினியை உயிர்பித்தான். இன்று நடக்க இருக்கும் மீடிங்க்கு தேவையான கூறிப்புகளை வரிசைப்படி அமைத்து ஒரு கோப்பை தயார் செய்து முடித்த தருணம் அவன் அருகில் ஒரு டம்ளர் நிறைய காபியும் பட்டர் பிஸ்கட் சிறிதும் வைக்கபட்டன.

அந்த காலைநேர அழுத்தங்கள் அந்த காபியை பருகியதும் அவனிடம் இருந்து விடைபெற்றன. சிறிது பட்டர் பிஸ்கட்டை தின்றுக்கொண்டே தன் வேலையை செய்து முடித்து தன் மடிக்கணினியை அமர்த்தி வைத்தான்.

'தம்பி பொங்கல் ரெடி ஆய்டுச்சு சப்டவாங்க .....உங்களுக்கு பிடிக்குமேனு முந்திரிபருப்பு நேரயா போட்டு செஞ்சிருக்கேன் .... வந்து சூடா சப்டுங்க" என்று அகிலேஷிடம் கூறினார்.

"ஐய்... பொங்கல்.... இதோ வந்துட்டேன்....."

தன் முன் வைக்கபட்ட பொங்கலை அவன் ஆசையுடன் சாப்பிடுவதை பார்த்து சாமி மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார். அந்நேரம் ஆதித் மாடிபடிகளில் இறங்கி வரும் சத்தம் கேட்டது, ஒவ்வொரு விரல்களில் இருந்த பொங்கலை சப்பிக்கொண்டே திரும்பி மாடிபடிகளை பார்த்துவிட்டு சாமியை பார்த்து

"இதோ வந்துட்டாரு உங்க தொம்பி... தங்க கம்பி... அவனுக்கு இந்த பொங்கல்லாம் குடுக்காதீங்க போயி கொஞ்சம் வடிச்சகஞ்சி இருந்த கொண்டுவந்து குடுங்க இன்னும் கொஞ்சம் வேரப்ப மொரப்பா திரியட்டும்..... "என்று கடுப்புடன் கூறிவிட்டு கையளம்ப எழுந்து சென்றான். அவன் கூறியதை கேட்டு ஆதித் மென்னகை புரிந்துகொண்டு உணவருந்தும் மேஜையில் வந்தமர்ந்தான்.

"கையளம்பிவிட்டு வந்த அகிலேஷை பார்த்து "நான் சொன்ன டாகுமெண்ட்ஸ் ரெடிஆ ???"

"எல்லாம் பண்ணியாச்சு பண்ணியாச்சு" என்று எதிர்திசையில் பார்த்துக்கொண்டே கூறினான்.

"இன்னைக்கு ஜாயின் ஆகுற நியூ ஜாய்னீஸ் பேக்ரவுண்ட் வெறிபிகேசன் முடிச்சாச்ச????"

"முடிச்சாச்சு... முடிச்சாச்சு..."

"ஒரு 11 o கிளாக் மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க....லெட்ஸ் எக்ஸ்ப்ளெய்ன் அவர் நீட்"

"பண்ணிடலாம்.... பண்ணிடலாம்....."

"எந்த ஒரு குழப்பம் இல்லாம செஞ்சிருங்க.....யு காட் இட் ???"

"செஞ்சிரலாம் .... செஞ்சிரலாம் "

மிகுந்த அலட்சியத்துடம் பதில் வந்தன. ஆதித் அவனை நிமிர்ந்து முறைத்து பார்த்தான்.. அவன் முறைப்பை சட்டை செய்யாமல் நின்று இருந்தான். பற்களை கடித்து தன் கோபத்தை அடக்கிக்கொண்டு,

"அகிலேஷ்ஷ்ஷ்ஸ்........."

"சொல்லுங்க..... சார்ர்....."

"என்ன இது..... கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லமுடியாத???... கேட்ட தன் நண்பனை, கடுப்புடன் நோக்கி,

"இங்க பலபேறு அப்டித்தான் ஸார் இருக்காங்க,.... என்ன பண்ணுறது.. சேர்வார் தோஷம் எனக்கும் ஒட்டிக்கிச்சு.... நான் போயி கார் ரெடி ஆ இருக்கானு பாக்குறேன் ஸார்.... " என்று கூறியபடி வெளியில் சென்றான்.

சென்ற தன் நண்பனை ஒருவித வெறுமையான மனநிலையில் நோக்கி கொண்டிருந்த அவனிடம்

"தம்பி.... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க .... நம்ம அகிலேஷ் தம்பி உங்கமேல உள்ள பிரியத்துலதான் அப்டி நடந்துக்குது..... பலச நெஞ்ச்சி இன்னும் எத்தன நாளைக்கு இப்டி ஒடம்ப கெடுத்துக்குறது.... நான் சொல்றது எதும் தப்புனா மன்னிச்சிக்கிருங்க......"

அவர்' கூறுவதில் உள்ள உண்மை சுட அவரிடம்' எந்த பதிலும் கூறாமல் அமைதியாக கைகழுவி வெளியில் சென்றான். செல்லும் அவனை ஒருவித இயலாமையுடன் நோக்கிக்கொண்டு இருந்தார் சாமி. ஆதித் அகிலேஷ் இருவரும் அழுவலகம் நோக்கி சென்றனர்.

**********************************************************************************************
அங்கே தியாவின் வீட்டில்,

"அம்மா..... லஞ்ச் பாக்ஸ் எங்கமா????..... என் புது ஹேண்ட்பேக் எங்க..???"

"கிச்சன்ல இருக்கு பாரு.... இதுக்குத்தான் சொல்றது சீக்கிரம் எந்திரினு... இப்போ என் தலைய உருட்டிட்டு இருக்க..... உன் பொருள் எங்க இருக்குனு இன்னமும் நானே தேடி தந்துட்டு இருக்கேன் நாளைக்கு போற வீட்டுல வேலங்கிரும்...." அவர் கூறியது எதும் தியாவின் காதுகளை சென்றடையவில்லை. முதல் நாள் என்ற பரபரப்பு அவள் முகத்தில் தண்டவாமாடிக்கொண்டிருந்தது. அவளை திட்டிக்கொண்டு இருந்தாலும் அவளுக்கு தேவையானதை செய்ய அவர் தவறவில்லை.

மயில் நிற வண்ணத்தில் சுடிதார் அணிந்து தங்கள் முன் ஆசீர்வாதம் வாங்க் நின்றிருக்கும் தங்கள் மகளின் அழகில் அந்தகனம் பெருமிதம் கொண்டனர். அவளின் சந்தன நிறத்திற்கு அந்த உடை மிகவும் பாந்தமாக பொருந்திருந்தது. அந்நேரம் லாவண்யா வரவே இருவரையும் ஆசீர்வதித்து வாழ்த்தி அனுப்பினர்.

"பை மா... பை பா"

"போயிட்டு வரோம் அங்கிள்... பை ஆண்ட்டி"

வெளியில் வந்து இருசக்கர வாகனத்தை உயிற்பித்து தியாவை நோக்கி"இந்த டிரஸ்ல நச்சு பிகர்டி.... எனக்கே உன்ன கட்டிபுடிச்சி உம்மா குடுக்கணும் போல இருக்கே...." கூறிய தன் தோழியை ஒரு செல்ல அடி குடுத்து அவள் இருசக்கர வாகனத்தில் இருவரும் தம் அழுவலகம் நோக்கி சென்றனர்.

அங்கு அவளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்...

கரையும்....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மைலாராணி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top