• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஐஸ்கிரீம் காதலி-7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mylaa

நாட்டாமை
Joined
Jan 12, 2020
Messages
72
Reaction score
96
Age
32
Location
Ethiopia
என் ஐஸ்கிரீம் காதலி-7
"யெஸ் கம்மின்..... " என்று அவன் மறுபடியும் சொன்னதும் கனவில் இருந்து விடுப்பட்டவள் போல் திடுக்கிட்டு அவனை நோக்கியபடியே தன் தோழி இருக்குமிடம் சென்று அமர்ந்தாள்.

"எங்கடி போன.... " என்று கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் கூறாமல் அவனது முகத்தில் தான் பார்வையை நிலைக்கவிட்டாள்.

அந்த முகம் அவளது உயிரானவன் முகம் அல்ல ஆனால் அந்த கண்கள் அவளது உயிரானவனது என்று அவள் மனம் அடித்து கூறியது.

"ஓகே காய்ஸ்.... லெட்ஸ் மீட் அப் அனதர் டைம் பிரிப்லி... நவ் யு மே ஆல் கோ டோ யுவர் பிளேஸ்.." என்று கூறியபடி அவ்விடம்விட்டு சென்றான். அவன் சென்றதும் தியாவை அவளது புதிய நண்பர்கள் கேள்விகணைகளை தொடுக்காரம்பித்தனர்.

"எங்க போன.....???? ஏன் இவ்ளோ லேட்.... ??????எதும் ப்ராப்ளம்ஆ....????? ஆர் யு ஓகே????...

"ஆஹ்ன்....... அதுவந்து வழி தெரியாம மாத்தி போயிட்டேன் .. சாரி..." அவளது பதிலில் அவர்கள் சமாதானம் அடைந்து அவர்களது வேலைசெய்யும் பகுதிக்கு சென்றனர்.

லாவண்யாவின் பார்வை தன் தோழியை ஆராய்ச்சியுடன் பதிந்து மீண்டது. அந்த கான்பரன்ஸ் ஹால்லில் இருந்து வெளியேறி தன் இருக்கையை நோக்கி செல்லும்பொழுது தியாவின் பார்வை ஆதித்தின் அறையின் வாயிலில் இருந்த அவனது பெயர் பலகையின்மேல் பதிந்து மீண்டது. ஆதித் வர்மா என்ற அவனது பெயர் அவளது முகத்தில் சிறிய குழப்பரேகயை உற்பத்தி செய்தது.

அவளது மனம் "இது பாவாதான்.... ஆனா அவங்க பேரு ஆதித் வர்மானு இருக்கு.... கடவுளே என் மனசு அடிச்சு சொல்லுது இது என் பாவாதான்னு..... " என்று குழம்பியபடி அவளிடம் சென்று அமர்ந்தாள்.

அவளது ஒவ்வொரு செய்கைகளையும் தன் அறையில் இருக்கும் தன் கணினியின்மூலம் அந்த நெடியவன் ஒரு புருவ சுருக்களுடன் கண்டுகொண்டுஇருந்தான். அவள் தன் பெயற்பலகையை கண்டு குழம்புவதும் ஒரு வித யோசைனையுடன் அவ்விடம் விட்டு செல்லுவதையும் கண்டு அவனது உதட்டில் ஒரு ஏளனசிரிப்பு உற்பத்தி ஆனது. அவனது மனதில் என்ன நினைக்கிறான் என்பது அவனுக்கும் அந்த கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சம்.

அந்த நேரம் அந்த அறையின் கதவை நாசூக்காக தட்டிவிட்டு அகிலேஷ் உள்ளே வந்தான், அவன் கையில் இருந்த கோப்புகளை அவனது மேஜையின் மீது வைத்துவிட்டு,

"சார்ர்..... இதுல ஜாய்னீஸ் டீடெயில்ஸ்... இன்னைக்கு நாம அட்டென்ட் பண்ணபோற டீடெயில்ஸ்.... எல்லாம் இருக்கு ...."

"ஓகே... புது ஜாய்னீஸ் வொர்க் பிரக்ரெஸ்ஸ் கவனமா ஃபாலோ பண்ணுங்க....."

"ஆமா..... நல்லா ஃபாலோ பண்ணனும் அப்போதான் கரெக்ட் பண்ணமுடியும்....." அவன் கூறியதை கேட்டு

"வாட் .... கம் ஆகைன்....." என்று புருவசுளிப்புடன் அவனை நோக்கி கேட்டான்.

"ஐய்யயோ..... மனசுல நெனைக்குறேன்னு வெளிய சொல்லிட்டேனே.... இவன்வேரா இப்போ ரொம்ப காதலா பாக்குறானே. என்ன பண்ணுறது" என்று மனதில் நினைத்துக்கொண்டு .... இல்ல .... சார்ர் நல்லா ஃபாலோ பண்ணுறேன் அப்போதான் அவங்க மிஸ்டேக் பண்ணா கரெக்ட் பண்ணமுடியும்னு சொன்னேன்...." என்று சமாளிப்பாக கூறிமுடித்தான்.

"ஓகே.... யு கேன் கோ... என்று கூறியபடி அவன் முன் இருந்த கோப்புகளில் தன் கவனத்தை பதித்தான்...

"ஊப்ப்.... ஜஸ்ட் மிஸ்சு..... அகிலேஷ் வர வர ரொம்ப ஒளறிக்கொட்டுரடா... அவனுக்கு மட்டும் நீ சொன்னது புரிஞ்சி இருந்தது.... மகனே இன்னைக்கு நீ மர்கயாதான்.... எப்டியோ தப்பிச்சிட்ட" என்று தன் மனதினுள் உரையாடிக்கொண்டே அவ்விடம் விட்டு சென்றான்.

அங்கே அந்த அழுவலகத்தின் ஆண்கள் அன்று சேர்ந்து இருந்த பெண்களை அளவிட்டு கொண்டு இருந்தனர். மாதவியிடம் ப்ராஜக்ட் மேனேஜர் சேகர் அளவுக்கு அதிகமாக வழிந்துகொண்டு இருந்தான்.

"உங்களுக்கு எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்ட நீங்க தயங்கமா கேக்கலாம்..." அவனது வலிசல் மாதவிக்கு ஒருவித கர்வத்தை தன் அழகின் மீது அளித்தது.

"கண்டிப்பா சார்ர்.... உங்கட்ட கேக்கமா வேற யார்ட்ட கேப்பேன்.." என்று தன் மயக்கும் அஸ்திரமான தன் புன்னகையுடன் கூறினாள். அவளது புன்னகையில் சேகரின் முப்பத்திஇரண்டு (இல்ல இல்ல ஒரு நாப்பது பல்லு வச்சிக்கலாம்) தெரிய சிரித்தான்.

அந்த நேரம் அகிலேஷ் அங்கு வரவும்"என்ன மிஸ்டர் சேகர்... இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..."

அவனை அந்தநேரம் அங்கு எதிர்பாக்காததால் தடுமாறி "இல்ல சார்ர் நியூ ஜாய்னீ எதும் ஹெல்ப் வேணும்னா கேக்க சொல்லிட்டு இருந்தேன்"

"ஓஹ் அப்பிடியா.... சேரி போங்க போயி கரெக்ட் பண்ணுற வேலைய பண்ணுங்க"

அவன் கூறியதை கேட்டு திடிக்கிட்டு "சார்ர்......என்ன சொல்றீங்க"என்று கேட்டான்.

"போயி.... உங்க பைல்ஸ் கரெக்ஷன்அ கரெக்ட் பண்ணுங்கணு சொன்னேன்..... ஏன் நீங்க என்ன நினைச்சீங்க...." என்று அவனிடம் பதில் கேள்விகேட்டான். அவனது கேள்விக்கு என்னவென்று பதில் கூறமுடியும் ஒரு வித அசட்டுசிரிப்புடன் கரெக்ட் பண்ண சென்றான் (பைல்ஸ் கரெக்ஷன்குதான்).

அவன் அங்கிருந்து சென்றதும் அகிலேஷ் தன் ஆராய்ச்சி பார்வையை மாதவியை நோக்கி திருப்பினான், ஏனோ அவனுக்கு அவளை கண்ட நொடிமுதல் ஒரு நல்லா எண்ணம் எழவில்லை. அதற்க்கு அவளது உடையும் ஒரு காரணம், நீல வண்ண சேலையில் முன்பக்க, பின்பக்க தாராளங்களுடன் தைக்கபட்ட அந்த சேலைக்கு ஏற்ற நிறத்தில் ஜாக்கெட் அவளது உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது.

"இப்டி தொறந்துபோட்டு என்ன பாரு என் அழக பாருனு வந்தா .... ஆம்பளைங்க வழியதான் செய்வான்..." என்று தன் மனதில் நினைத்தபடி. அவளை நோக்கி,

"மிஸ் மாதவி.... யு கன்டினியூ யுவர் வொர்க் " என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு சென்றான்.

அவன் சென்றது "இவனும் பாக்க நல்லாதான் இருக்கான்.... ஆனா ரொம்ப மொறைக்குறான்... ஆரம்பத்துல இப்பிடி மொறைக்குற ஆள் போக போக என் பின்னாடி நாய்குட்டி மாதிரி சுத்தி வருவாங்க.... "என்று மனதில் நினைத்து போகும் அவன் முதுகை வெறித்தவாறு கேலி புன்னகை சிந்தினாள்.


**********************************************************************************************
அந்த சுவர்கடிகாரம் மாலை ஐந்து மணிக்கு தன் இருப்பை அனைவருக்கும் உணர்த்தியது. லாவன்யா தன் கணினியை அணைத்துவிட்டு தன்தோழியின் இருக்கைநோக்கி சென்றாள். அங்கே தியா தன் முன் இருக்கும் கணினியில் தன் பார்வையை பதித்து இருந்தாலும் அவள் கவனம் அதில் இல்லை என்பது பார்க்கும் எவருக்கும் தெரியும் வண்ணம் அமர்ந்து இருந்தாள். அவள் அருகில் சென்று அவள் தோளில் கைவைத்து,

"தியா..... கிளம்பலாமா????"

அவளது குரலில் திடிக்கிட்டு விழித்து "ஆஹ்ன்..... இதோ.... இப்போ... எங்க... போலாம்.." என்று தடுமாற்றத்துடன் கூறியபடி தன் கணினியை அணைத்துவிட்டு எழுந்தாள். அவளை யோசனையுடன் லாவண்யா பார்த்துக்கொண்டே அவளை அழைத்துகொண்டு தன் இருசக்கரம் நிறுத்தி இருக்கும் இடம் நோக்கி சென்று அவளது வண்டியை எடுத்துகொண்டு அந்த அழுவலாக கட்டிடம் விட்டு வாயில் நோக்கி சென்றனர்.

அங்கிருந்து அவர்கள் தங்கள் இல்லம் சென்றனர். அந்த ஐபாகோ ஐஸ்கிரீம் கடையை கண்ட தியாவின் மனதில் பல எண்ணங்கள் என்றும் போல். அவளது மனம் பலவித எண்ணங்களில் உழன்றுகொண்டு இருந்ததில், அவர்களது வண்டி அந்த சிறுவர் பூங்காவில் வந்து நின்றதைகூட கவனிக்காமல் அமர்ந்து இருந்தாள். அவளை திரும்பிபார்த்த லாவண்யா,

"அம்மா... தாயே... கொஞ்சம் ஏறங்கூறியா...?????"

"இங்க எதுக்குடி வந்து இருக்கோம்.... "

"ஆஹ்ன்.... இந்த பார்க் விலைக்கு வருதாம் அதன் வாங்க வந்து இருக்கோம்.... பேசாம வாடி..." என்று கூறிக்கொண்டே அங்கிருக்கும் இருக்கை நோக்கி சென்று அமர்ந்தாள். அவளை பின்தொடர்ந்துவந்து அவளருகில் அமர்ந்து எதிரில் இருக்கும் காலி இருக்கையை வெறித்தல்.

அவள்புறம் திரும்பி"உனக்கு என்னஆச்சு ஏன் எரும மிதிச்ச மலைக்கோரங்கு மாதிரி பேஹ் பேஹ்னு மூளிச்சிட்டு இருக்க காலையில இருந்து.... சொல்டி என்ன ஆச்சு....??" அவளது கேள்விக்கு எந்த பதிலும் வராமல் போகவே அவளைபிடித்து உலுக்கி

"இப்போ\ சொல்லபோரியா இல்லயா....."

தியாவின் கண்களில் இருந்து கண்ணீர் வலிய ஆரம்பித்தது. அதனை கண்டு அதிர்ந்து "ஹேய்.... என்னடி என்ன ஆச்சு.... இங்கபாரு தியா என்னணு சொல்லுடி.... " என்று பதறிய தன் தோழியை அணைத்துகொண்டு அழாரம்பித்தாள்.

"லாவண்யா.... பாவாடி ... என் பாவா டி.... நான் அழறேன்.... ஹையோ நான் என்ன பன்னபோறேன்..." என்று தொடர்பில்லாமல் பேசும் தன் தோழியை எவ்வாறு சமாதானம் படுத்துவது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள்.

"இங்க பாரு தியா மொதோ.... ஒளுங்கா சொல்லு என்ன ஆச்சு...... என்ன பாவா... கொஞ்சம் புரியரா மாதிரி சொல்லு...."

அவளிடம் இருந்து விலகி தேம்பிகொண்டே "நான் பாவவா பாத்தேன் இன்னைக்கு..... "என்று விசிம்பிக்கொண்டே கூறிய தன் தோழியை புரியாமல் பார்த்து

"என்ன சொல்ற தியா.... அது எப்டி சாத்தியம்..... இங்க பாரு நீ யாரையோ பாத்துட்டு பேசிட்டு இருக்கணு நெனைக்குறேன்..... " என்று கூறிய தன்தோழியை பார்த்து மறுப்பாக தலையசைத்து,

"இல்லடி... அது என் பாவாதான்.... எனக்கு தெரியும்.."

"புரியமா பேசாத தியா..... உனக்கு தெரியும் நம்ம கண்ணுமுன்னாடித்தான் எல்லாம் நடந்துச்சு.... செத்துபோனவங்க திரும்ப வரமாட்டாங்க...." என்று சற்று கோவத்துடன் கூறினாள். அவள் கூறியதை கேட்ட தியா தான் கைகளால் தன் முகத்தில் அறைந்துகொண்டு,

"ஹையோ..... ஹையோ.... நான் உனக்கு எப்டி புரியவைப்பேன்.... அது என் பாவாதான்.... அவங்க சகாலடி உயிரோடதான் இருக்காங்க....நான் பாத்தேன்.. என்ன நம்புடி....."

முகத்தில் அறைந்துகொண்டு அழும் தன் தோழியை சமாதானம் படுத்தக்கூட தோன்றாமல் அதிர்ந்துபோய் லாவண்யா அமர்ந்து இருந்தாள். அவளது மனம் தன் தோழியை நம்பவும் முடியாமல்,நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழம்பிதவித்தது.

"எங்க பாத்த....???

விசிம்பிக்கொண்டே 'நம்ம ஆஃபிஸ்ல.... கான்பரன்ஸ் ஹால்ல..."

அவள் கூறியதைக்கேட்டு புருவசுளிப்புடன் "யாரு.... நம்ம ஆஃபிஸ்ல... பேரு என்ன ...????""""

"நம்ம....."

"சொல்லு .... நம்ம.."

"நம்ம.....

"சொல்லித்தொலடி.... யாரு.... "என்று கடுப்புடன் அவளை பதில்கூரா ஊக்கினாள்.

"நம்ம எம்‌டி...... ஆதித் .. என் பாவா....." என்று தன் தோழி கூறிய பதிலில் லாவண்யா மிகவும் அதிர்ந்து சிலையென அமர்ந்துவிட்டாள்.


கரையும்..........
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மைலாராணி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top