• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஐஸ்கிரீம் காதலி-9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mylaa

நாட்டாமை
Joined
Jan 12, 2020
Messages
72
Reaction score
96
Age
32
Location
Ethiopia
என் ஐஸ்கிரீம் காதலி-9

நிலவு வானில் மின்னும் நட்சத்திரங்களுடன் தன் கதிரவனின் காதலை ரசனையுடன் மிளிர்ந்து தன் கிரகணங்களுடன் சொல்லிக்கொண்டிருக்க அதனை கண்களை சிமிட்டி கேட்டுக்கொண்டிருந்தன மின் மினி நட்சத்திரங்கள். அந்த ரம்மிய பொழுதில் தியா அவளின் படுக்கையில் அமர்ந்து தன் கைகளில் இருந்த அந்த புகைப்படத்துடன் பேசிக்கொண்டு இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர், ஆனந்த கண்ணீர் அவள் மனதின் போராட்டம் அவள் முகத்தில் அப்பட்டமாய்...

அந்தநேரம் அவளின் கைபேசி குரல்குடுத்து மிளிர்ந்தது. அந்த அழைப்பு அவளின் சிந்தனையை தடை செய்ய தன் கைபேசியை எடுத்து பார்த்தாள், அது லாவண்யா.. அழைப்பை ஏற்று காதில்வைத்ததும் மறுபுறம் இருந்து,

"ஏண்டி.... எத்தனடைம் கூப்டுறது அப்டி என்ன பண்ணிட்டு இருக்க.... ??? அவளது குரல் ஆத்திரத்தில் வெடித்து வந்தது. அங்கு மறுபுறம் தியா என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதி காக்க, அது மேலும் ஆத்திரம்மூட்ட

"ஹலோ....ஹலோ. ஹல்லோ...... லைன்ல இருக்கியா இல்லயா...... என்ன பன்றா....????" இதற்க்குமேலும் தாமதிக்காமல்,

"ஹான்.... அதுவந்து ஏதும் இல்லடி... நான் ஃபோன் பாக்கல ... சாரி... இந்தநேரத்துக்கு கால் பன்னீருக்க சொல்லு என்ன விஷயம்... நீ தூங்கலயா???

"என்னது என்ன விஷயமா ... அடிப்பாவி சிவனேனு இருந்த என்னய்யா பாவாவ பாத்தேன், பாலுவித்த பாமாவ பாத்தேன்னு ..... கொழப்பிவிட்டுட்டு இப்போ தூங்கலயனா கேக்குரே.... வந்து எட்டி மிதிச்சேன்னு வையி.... " அவள் கூறியதை கேட்டு சிரிப்புவந்தாலும் தற்போது சிரித்துவைத்தால் அவள்மேலும் கடுப்பாகக்கூடும் என்று வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு,

"நான் சொல்றது உண்மைனு உனக்கே ஒருநாள் புரியும்..... அப்போ ஆமாடி தியா நீ சொன்னது உண்மைதான் சாரினு வந்து நிக்கும்போது தெரியும்.... இப்போ எதுக்கு கால் பண்ண அத சொல்லு.."

"அடபோடி மெண்டல்சிரிக்கி ...... நான் ஏன் உனக்கு கால் பண்ணிருக்கேன்னு உனக்கு தெரியாத... நான் சொன்ன விசயத்த பத்தி யோசிச்சியா...???? என்ன முடிவு பண்ணி இருக்க....???"

அவளது கேள்வி தியாவிற்க்கு சலிப்பை தர அதே சலிப்புடன் " நான் என்ன சொன்னாலும் நீ நம்பபோறது இல்ல... எனக்கு ஒடம்பும் மனசும் நல்லாதான் இருக்கு டாக்டர் பாக்க வேண்டிய அவசியம் இல்ல... எனக்கு நல்லா தெரியும் அது என் பாவாதான்... உனக்கு நான் எப்டி சொல்லி புரியவைக்குறதுணு எனக்கு தெரில..."

அவளின் பதில் மறுபுறம் இருந்த லாவண்யாவிர்க்கு கோபத்தை தர "நாளைக்கு நீ என்கூட நீ ஹாஸ்பிடல் வர அவ்ளோதான் ... இல்லன நான் அங்கிள் ஆண்ட்டிட பேசவேண்டி வரும்.... ஏற்கனவே ஒருமுறை இப்டி உன்னவிட்டு என்னலாம் நடந்துச்சுனு எனக்கு தெரியும் அதே தப்ப நான் மறுபடியும் செய்யதயாரா இல்ல..... இப்போ நீ போயி தூங்கு... "

அவளுக்கு எந்த பதிலும் கூறவிரும்பாலும் கைபேசியை அணைத்துவிட்டு, மறுபடியும் தன் கைகளில் இருந்த தன்னவனின் அந்த பழுப்பெரிய புகைபடத்தை ஆசையுடன் வருடினாள்.

"நான் என்ன பைத்தியமா பாவா.... ஆமா நான் பைத்தியம்தான் ... இருந்துட்டு போறேன்.... என் மனசுலஆயிரம் குழப்பம் இருக்கலாம் .. ஆனா எனக்கு தெரியுது அது நீங்கதான்..... " புகைபடத்துடன் உரையாடியவள் இரவின் விடிவெள்ளி நிலவை காதல் பார்வை பார்க்கும் சமயமே கண்ணுறங்கினாள். மறுநாள் விடியல் அவளுக்கு தரவிருக்கும் அதிர்ச்சிகள் எதையும் அறியாமல்.

********************************************************************************************

அங்கு ஆதித் தன் அறையில் எதிரில் இருந்த சந்தனமரம் சட்டம் போட்ட ஒரு புகைப்படத்தை வெறித்தவண்ணம் அமர்ந்து இருந்தான். அந்த புகைப்படத்தில் ஒரு வயதான ஒரு ஆண் மெல்லிய நகைப்புடன், ஒரு வித கம்பீரத்துடன் அவனை கண்டு சிரித்தவண்ணம் இருந்தது. அந்த புகைபடத்தில் இருந்த அவன் கண்களில் சொல்லெனமுடியாத வேதனை. அவன் கைகளில் உயர்ரக மதுபானம் ஒரு கண்ணாடி கோப்பையில் ஐஸ்கட்டிகள் மிதந்தவண்ணம் இருந்தது. அவன் மனம் நடந்துமுடிந்த மாற்றமுடியாத சில விஷயங்களை எண்ணி கலங்கின, கலங்கின மறுநொடி அவன் முகம் கடுமையுற்று, அந்த புகைப்படத்தை பார்த்து கர்ஜிக்கும் விதமாக,

"விடமாட்டேன் டாட்.... ஒருத்தரையும் விடமாட்டேன்........ இதுக்கு யாரெல்லாம் காரணமோ அத்தனபேரையும் கத்தரவிடுவேன்.... முக்கியமா அவள.... விடமாட்டேன் ..... என்ன யாருனு நெனச்சா..... என் மனசுல எப்டி நெருப்பா எரியுதோ அதே மாதிரி எரியவைப்பேன்.... நரகம்னா என்னன்னு இனிவோவோருத்தருக்கும் தெரியவைப்பேன்" என்று கர்ஜித்தவன் கையில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து அந்த கண்ணாடி கோப்பையை விட்டெறிந்தான்.. அது அவன் பக்கவாட்டில் இருந்த ஒரு முக்காலியில் பட்டு திசைக்கொன்றாக சிதறி விழுந்தது.

அவனது அறைக்கு அவனை சாப்பிட அழைக்க வந்த சாமி அவனது கர்ஜிப்பை கேட்டு கால்கள் வேரோட அறைவாயிலிலே நின்று விட்டார். அவரது முகம் அதிர்ச்சியில் சமைந்து இருந்தது. அவரது மனமோ ,

"ஐயோ..... சின்னையா பேசுறதாபாத்த யாருக்கோ ஏதோ நடக்கபோகுதே..... யாரு அந்த பொண்ணுனு தெரியலயே ....ஈஸ்வரா.... இது என்னப்பா சோதன.... " என்று புலம்பியபடி அவ்விடம்விட்டு நகர்ந்தார். உள்ளே ஆதித் இன்னும் அந்த புகைப்படத்தை வெறித்தவண்ணம் அமர்ந்து இருந்தான்.

தன் கைபேசியை எடுத்தவன் யாருக்கோ அழைப்புவிடுத்து சில பல கட்டளைகளை விடுத்தவன் அப்படியே தனக்குள்ளும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற முடிவு கிடைத்த நொடி அவன் கண்களில் ஒரு குரூரம் வந்து அமர்ந்துகொண்டது

********************************************************************************************
ஜெய்கணேஷின் இல்லம்...

ஜெய்கணேஷ் அங்கு நடக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்து இருந்தார். மாலினி தன் மகன் ராகவை சமாளிக்க வழிதெரியாமல் திணறிக்கொண்டு இருந்தார். ராகவ் அங்கு பொரிந்து கொண்டு இருந்தான்...... உதவிக்கு தன் கணவரை பார்க்க அவரோ உனக்கு இதுதேவைதான் என்பது போல் அமர்ந்து இருந்தார். கத்தி கத்தி ஒருவழியாக அங்கிருந்த சோபாவில் அமர, அவனை கண்டு ஜெய்கணேஷ்

"கூல் டவுன் ராகவ்..... இப்போ என்ன ஆயிடுச்சு.... நாளைக்கு கண்டிப்பா அந்த டீல் நமக்குத்தான் கிடைக்கும் யு டோன்ட் வொர்ரி...... நாமலா அவனானு பத்துறலாம்..." அவர் கூறியதை கேட்ட ராகவ் அவரை தீயேன பாத்து,

"நீங்க கிழிச்சவரைக்கும் போதும்... இனி நான் பாத்துக்குறேன்.... என்ன ஆனாலும் சேரி அந்த டீல் எனக்கு வேணும்..."

"கண்டிப்பா கிடக்கும் பா...." என்று கூறிய மாலினியை கண்டு முறைத்தான். அவனது முறைப்பில் அவரது வாய் தானாக மூடிக்கொண்டது.

"அவன் நாளைக்கு வந்தாதான அந்த டீல் கைமாறும்... அவன் வரமாட்டான்... வரவிடமாட்டேன்... அதுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு" அவன் அதை கூறியநொடி மாலினி திடிக்கிட்டு,

"ராகவ் என்ன பேசுற.... அவன் உன் அண்ணன்..... " என்று அதிர்ந்து கூறிய அவரை கண்டு, எள்ளளுடன்

"யாருக்கு யாரு அண்ணன்... என்ன பிள்ள பாசம் பொங்குதோ அதன் வேணாம்னு தழமுழுகிட்டு வந்தாச்சுல அப்பறம் என்ன..... பலச நெனச்சி பாருங்க.... அவன் என்ன எங்க அப்பாக்கா பொறந்தான்.... " அவனது கேள்வியில் இருந்த உண்மை அவர் மனதைசுட ஒருவித அவமானத்துடன் தலைகுனிந்து கொண்டார். அவனது அந்த பதில் ஜெய்கணேஷையும் முகம் கருக்கசெய்ய

"ராகவ் பாத்து பேசு.... அவ உன் அம்மா....." என்று கூறியவருக்கு எந்த பதிலும் கூறாமல், அமர்ந்து இருந்த சோபாவில் பின்னே சாய்ந்தவண்ணம், கண்களை மூடி ஜெய்க்க என்ன வழி என்ற யோசித்த வண்ணம் இருந்தான்.

அந்நேரம் அவனது செல்பேசி அழைக்கவும் அதனை இயக்கி காதில் வைத்ததும்தான் தாமதம் மறுபுறம் கூறிய செய்தி அவனை எரிமலையென பொங்கசெய்தது. பேசிமுடித்ததும் கைபேசியை அனைத்து அதனை ஓரிரு நிமிடம் பார்த்தான். அவனது முகம் ஆத்திரத்தில் ஜொலித்தது, மறுநிமிடம் அந்த கைபேசி சுவற்றில் மோதி சுக்குநூறாக உடைந்து சின்னாபின்னமானது.

"ஆதிதித்த்த்த்த்த்...................................." என்ற அவனது கூக்குரல் அந்த வீட்டின் வாயில் வரை எதிர்லொளித்தது.

**********************************************************************************************





"
 




Mylaa

நாட்டாமை
Joined
Jan 12, 2020
Messages
72
Reaction score
96
Age
32
Location
Ethiopia
Hand pain problem dear. Adhan epi eludha mudila mostly 2 days la kudupen. Thanks for supporting.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top