General Audience என் சுவாச காற்றே அறிமுகம்

Selva sankari

Major
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே… என்னை நினைவிருக்கிறதா? குறுநாவல் போட்டியில் கலந்து கொண்ட செல்வ சங்கரி (செல்வா) தான். நமது சைட்டின் ஜாம்பவான்களுடன் போட்டி போட்டு நான் எழுதிய முதல் நாவல் "தொடுவானம் தொடுகின்ற நேரம் " க்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி.

வெற்றி தோல்வி என்பதை விட கலந்து கொண்டதையே நான் பெருமையாகத்தான் நினைக்கிறேன். 92 ஓட்டுகள் வாங்கியிருப்பது என்னைப் பொருத்தவரை சாதனைதான். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி… நன்றி… நன்றி…


இதோ எனது அடுத்த முழுநீள நாவலுக்கான அறிவிப்போடு வந்திருக்கிறேன்.

என் சுவாச காற்றே..!

177766.JPG
Sayyeshaa-Saigal-Latest-Stills-Chinnababu-Success-Meet-1-e1531813122235.jpg
ஹீரோ : கதிரேசன்
ஹீரோயின் : சிவரஞ்சனி


கதிர் கதையின் நாயகன்
முரடன் தான் ஆனால் நியமானவன். நல்லவனுக்கு நல்லவன். ஆனால் கெட்டவனுக்கு கெட்டவனைவிட கெட்டவன். பெண்கள் என்கிற வார்த்தை அவனது அகராதியிலேயே இருக்க விரும்பாதவன். ஆஞ்சநேய பக்தன். இவனின் சுவாச காற்றாய் அவள் வருவாளா?

சிவரஞ்சனி கதையின் நாயகி

அமைதியானவள். ஆனால் கோழை அல்ல. விதி அவளது வாழ்வை சுழற்றி அடித்தாலும் தைரியமான போராளி. பாசத்திற்கு கட்டுப்படுபவள். தன்னம்பிக்கை அவளின் பலம். இவளது போராட்டத்தில் கைகோர்த்து இவளின் சுவாச காற்றாய் அவன் மாறுவானா?
யார் யாரின் சுவாசமாக மாறப் போகிறார்கள்? என்பதை கதையில் காணலாம் வாருங்கள்
220px-Mamooty.jpg ar1584Devayani.jpg 18086490.jpg

இவர்கள் மூவரும் கதையில் பயணிப்பவர்கள். மத்திய அமைச்சர் ராகவன், அவரது மனைவி வாசுகி. மற்றும் அழகர்.
ராகவன் இன்றைய அரசியல் சூழலுக்குச் சற்றும் பொருந்தாத கற்பனைக் கதாபாத்திரம். நேர்மையான அரசியல்வாதி.
வாசுகி அவரது மனைவி. அன்பால் உலகத்தையே ஆளலாம் என்ற எண்ணம் உடையவள்.
கதிர்க்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் அவனுடன் சேர்ந்து இருப்பவர் அழகர். அவனது தாய்மாமா.
மற்ற கதாபாத்திரங்கள் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம் நண்பர்களே.
நாளை முதல் பதிவுடன் வருகிறேன் பா.
வாரம் இருமுறை பதிவுகள் தருகிறேன் டியர்ஸ்.

எனது எழுத்துக்களில் உள்ள நிறைகுறைகளை உங்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மூலமாக தெரியப் படுத்துங்கள் நண்பர்களே.
அத்துடன் ஒவ்வொரு பதிவின் போதும் கடலூர் மாவட்டத்தைப் பற்றிய விபரங்களை ஐந்து வரிகள் தருகிறேன். தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
கதை கடலூர் மாவட்டத்தைச் சுற்றி நடப்பதாக எழுதியுள்ளேன்.
நான் பிறந்து வளர்ந்த ஊருக்கு என்னால் முடிந்த சிறு மரியாதை.

நாளை பதிவுடன் சந்திப்போம். நன்றிகள் பல.
 
Last edited by a moderator:

jeyalakshmigomathi

Major
SM Exclusive Author
#2
ஹாய் செல்வாக்கா

Welcome back... All the best and best wishes...

warning: jodiya சுவாசிக்க விடுங்க போட்டு தள்ளிராதீங்க... அப்புறம் பின் விளைவுகள் பக்க விளைவுகள் பலமா இருக்கும் சொல்லிடேன்
 
#4
Selva dear என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ?????? ஹீரோ ஹீரோயின் செலக்சன் சூப்பர் டியர் ??? அரசியல் கதைக்களமா அதிரடி காதல் கதையா ??? authorji சீக்கிரம் epi குடுங்க??? அப்பாடி நல்லபடியா மொத ஆளா epi கேட்டுட்டோம்????????
 
#6
ஹாய் செல்வாக்கா

Welcome back... All the best and best wishes...

warning: jodiya சுவாசிக்க விடுங்க போட்டு தள்ளிராதீங்க... அப்புறம் பின் விளைவுகள் பக்க விளைவுகள் பலமா இருக்கும் சொல்லிடேன்
ஆமாம் ?அதை மறந்துட்டேன் பாருங்க ??ஹாப்பி எண்டிங் தான் இருக்கணும்?? இல்லனா கண்டிப்பா பின் விளைவுகள் வரும் sis??????????
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top