General Audience என் சுவாச காற்றே - என் மன வானில்....

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
என் சுவாசக் காற்றே... என் மன வானில்....
கதிர், ஹீரோனா அதற்குரிய அத்துனை நல்ல குணங்களும் நிரம்பப் பெற்றவன். பொது நோக்கு, சமுதாய நலன் இதுல அக்கறையுள்ள நல்ல உள்ளங்களினால் எத்தகைய நல்ல மாற்றங்களை சமுதாயத்தில் கொண்டு வர இயலும் என்பதை ஆசிரியர், ராகவன், கதிர் போன்ற கதாபாத்திரத்தின் மூலம் அழகாக கூறியிருக்கிறார்.

சிவரஞ்சனி, கதாநாயகி. கடவுள் பக்தை. தாயும் தந்தையும் இல்லாமல் சிற்றன்னையின் மேற்பார்வையில் வளர்ந்த மாசில்லா மாணிக்கம். பயந்தவளானாலும் பக்கத்தில் இருக்கும் நபரைப் பொறுத்து தனது இயல்பை மாற்றிக் கொள்ளும் காரியக்காரி. திறமையானவள்.

பணம் மட்டுமே பிரதானம் என வாழும் பலருக்கு நேரும் முடிவுகளை மறைக்காமல் நம்மோடு அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளார், ஆசிரியர்.

நல்ல குணமும், நற்செயலுமே என்றும் நன்மை பயக்கும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

அழகர் அருமையான தாய்மாமன். தனது தமக்கையின் தவறான முடிவால் தனித்து நின்ற மருமகனுக்காக தனது வாழ்வையே பணயமாக வைத்த பாச பெருங்கடல்.

பிள்ளைகளைப் பற்றிய சிந்தனையில்லாமல், தான் தனது என சுயநலமாய் இருந்த ஒரு தாயினால் உலகுக்கு வந்த குழந்தையின் நிலை, எத்தகைய அபாயகரமானது என்பதற்கு கதிர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ராஜன் போன்ற அப்பாவிகளும் இந்த பூமியில் இன்னும் இருக்கிறார்கள் என்பதை அருமையாக ஆசிரியர் சித்தரித்திருக்கிறார்.

சிக்கலில் சிறுவன் கதிர் இருக்கும் போது, அவனின் செயலுக்கான காரணத்தை சரியாக புரிந்து கொண்டு அவனை நல்வழிப்படுத்த முயற்சி செய்த ராகவன், வாசுகி அருமையான படைப்பு.

வாசுகி மாதிரி ஒரு அற்புதமான வாழ்க்கைத் துணை ஒரு ஆணுக்கு அமையும் போது, அந்த ஆண் சமுதாய முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் செய்ய இயலும் என்பதையும் அருமையா சொல்லியிருக்காங்க.

கடலூர் மாவட்டம் பற்றிய அனைத்து செய்திகளையும் பொதுநோக்கோடு தந்த ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

அற்புதமான ஒரு கதை. அனைவரும் படித்துப் பாருங்கள்.
 
Last edited:

Selva sankari

Major
SM Exclusive Author
#6
மிகவும் நன்றி டியர் சரோஜினி டியர். மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம் இல்லாமல் இந்த நாவலை என்னால் எழுதி முடித்திருக்க முடியாது.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top