Latest Episode என் சுவாச காற்றே 10

Selva sankari

Major
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே வணக்கம் :

சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. என் சுவாச காற்றே பத்தாவது அத்தியாயத்தோட வந்திருக்கேன்.
படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே.
177766.JPG Sayyeshaa-Saigal-Latest-Stills-Chinnababu-Success-Meet-1-e1531813122235.jpg

என் சுவாசம்

கடலூர் மாவட்டம் பற்றிய சில வரிகள் :


சிதம்பரம்
சிதம்பர ரகசியம் தெரியாதவர்கள் உண்டா! சிதம்பரம் நடராசர் நாட்டியக் கலையின் கடவுள். இந்த பிரமாண்டக் கோயிலில் உள்ள நடனச் சிலைகள் ஒயிலும் எழிலுமாய் அழகுற அமைந்துள்ளன. தென்னாடுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபையும் இதுதான். இந்த அடைமொழிக்குப் பொருத்தமாக நடராசர் ஆலயத்தின் மேற்கூரையை பொன்னால் வேய்ந்து பொலிவூட்டினான் பராந்தகச் சோழன்.
காட்டு மன்னார்குடி:
சிதம்பரம் வட்டத்திலுள்ள சிறு நகரம். இங்குள்ள பெருமாள் கோயில் மிகப் பழமையானது. வைணவத் துறவிகளான நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோர் பிறந்த இடம். இதுவே காட்டு மன்னார்குடியின் தனிச்சிறப்பு.
பாடலீஸ்வரர் கோயில்
பாடல் பெற்ற ஸ்தலம். கடலூரின் மையத்தில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு அருகே இக்கோயில் உள்ளது. இதன் தல விருட்சம் பாதிரிமரம். ஊரின் பழைய பெயர் புலியூர். இரண்டும் சேர்ந்து திருப்பாதிரிப்புலியூர் என்று மருவியதாகச் சொல்லப்படுகிறது. திருநாவுக்கரசர், ஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப் பெற்ற தலம். இக்கோயிலுக்கு அருகே புகழ்பெற்ற பிடாரிஅம்மன் கோயிலும் அமைந்துள்ளது.

மீதி கோவில் விபரங்கள் அடுத்த பதிவில்.
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#5
சூப்பர் செல்வா(y):love::love::love:

சாரதா போன்றவர்கள் இல்லாமையால் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.
கேசவன் போன்றவர்கள் தந்திரத்தால் வாழ்கிறார்கள்.

ஒரு சிலரே கதிரைப் போல வாழ நினைக்கிறார்கள்.

இனி ரஞ்சனி வாழ்வில் நல்ல திருப்பமாக அமையும் என்ற நம்பிக்கையை, அவளுக்கும், எங்களுக்கும் தந்த இப்பதிவு மிகவும் அருமை.

அடுத்த பதிவிற்காக....:love::love::love:(y)
 
#10
சூப்பர்...அக்கா...😊😊😊😊

நல்ல வேணும் கேசவனுக்கும், சாராதாக்கும்....வெரட்டி வெரட்டி 2 வெச்சு இருக்ககணும்..😈😈

கதிர் வீச்சு செம்ம...😍😍😍
வாசுகி அழகா சொன்னாங்க...😘😘

ரஞ்சுவின் அழகான விடியலுக்கு காத்திருக்கிறோம்... 😇😇😇
 

Advertisements

Latest updates

Top