Latest Episode என் சுவாச காற்றே 21 (prefinal)

Selva sankari

Major
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே வணக்கம் :

என் சுவாச காற்றே 21வது prefinal எபியோட வந்திருக்கிறேன். படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

IMG-20190719-WA0015.jpg

என் சுவாசம்

கடலூர் மாவட்டம் பற்றிய சில வரிகள் :

முக்கிய ஊர்கள்... சில...


கடலூர் புதுநகர் :

சென்னைக்கு நேர் தெற்கே 100 மைல் தொலைவிலுள்ளது. மஞ்சக் குப்பம்,புதுப்பாளையம், தேவனாம்பட்டணம், வில்வராய நத்தம், வன்னியர் பாளையம் முதலிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டது. கெடிலம் ஆறு கடலூர் நகரைச் சுற்றியும், நகருக்கு நடுவேயும் ஓடுகிறது. நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் நீதிமன்றம், கல்வி, மருத்துவ நிலையங்கள் அரசு அலுவலகங்கள் இங்குள்ளன. வணிகத் தலமாகவும் இது இருந்து வருகிறது.

பண்ணுருட்டி :

பலாப்பழம், முந்திரிபழம், முந்திரிக்கொட்டை, முந்திரிப்பயறு, முந்திரி எண்ணெய் போன்றவைகளுக்கு பண்ணுருட்டி பெயர் பெற்றது. மிக முக்கியமான மொத்த சந்தையுள்ள வணிகத்தலம். வடக்குத்துக் கிராமத்தில் பேப்பர் மில் ஒன்று, கங்கா பேப்பர் மில் என இயங்கி வருகிறது.

நெல்லிக்குப்பம் :

முஸ்லீம்கள் நிறைந்த ஊர். இங்கு ஈ.ஐ.டிபாரி நிறுவனத்தாரால் நடத்தப்படும் சர்க்கரை ஆலை ஒன்றும், மிட்டாய் தொழிற்சாலையும் உள்ளன. கரும்பு உற்பத்தி இவ்வட்டத்தில் அதிகம். அதுபோல வெற்றிலை, அகத்திக்கீரை, அவுரிஎண்ணெய் முதலியவை இங்குப் பெயர் பெற்றவை.

பரூர் :

விருத்தாசலத்திற்கு வடமேற்கில் உள்ளது இவ்வூர். இங்குள்ள சர்சில் மாதாவின் சிலையும், கிறிஸ்துவின் சிலையும் மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்டவை. இவை மரத்தாலானவை. சிறப்பாக வண்ணம் தீட்டப்பெற்றவை, அதில் இந்திய அணிகலன்கள் இருப்பது சிறப்பு.

வடலூர் :

Vadalurகடலூர்-விருத்தாசலம் சாலையில் வடலூர் உள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்கசுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை,தாமரை வடிவில் எண்கோண முடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் 'ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் 'சித்திவளாகம்' என்பது பெயர்.
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#7
vanthutten
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#10
அம்மாடி ஒரு வழியா சிவா கிடைச்சா, இல்லனா எங்க கதிரு நிலம என்னாகறது,

நல்ல பிள்ளைமா நீ, சொன்ன பேச்ச கேக்கணும், இல்லனா இப்டிதான்

இன்னும் வாசுகிக்கு தெரியல, அதுக்கு வேற இனி அர்ச்சனை இருக்கு

அருமையான பதிவு செல்வா :love:(y)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top