• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் சொந்தம் நீ--எபி 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
953
Reaction score
115,778
Location
anywhre
வணக்கம் டியர்ஸ்,

ESN.jpg

காதல் என்பது கண்ணாடி போன்றது! உடைந்து போனால் ஒட்ட வைக்க முடியாது!

“ராஜேஷ்! என்னடா அதிகாலைலயே எழுந்துட்ட?” என அதிசயமாகத் தன் மகனைப் பார்த்தார் கனகு.
“பத்து மணி உனக்கு அதிகாலையாமா?”
“எப்பவும் சனி, ஞாயிறு நான் பதினொன்னுக்கு எழுப்பனா கூட இப்படித்தானேடா சொல்லுவ! அதான் கேட்டேன்”
“சைக்கிள்ல அப்படியே எக்சர்சைஸ் போல ஒரு ரவுண்டு போலாம்னு எழுந்தேன்மா”
“எது!!!! இந்த மொட்டை வெயில்லயா?”
“வெயில்ல போனாத்தான்மா வேர்க்கும்! அப்போத்தான் உடம்பு இளைக்கும்”
“அங்கிருக்கறதே நாலு நல்லி எலும்பு! அதும் இளைச்சிப் போனா பார்க்க நல்லாவே இருக்க மாட்டடா என் செல்லம்”
“போம்மா! உனக்கு என்னைக் கிண்டல் பண்றதே பொழப்பா போச்சி! பசியாற என்ன இருக்கு?”
“உனக்குப் புடிக்குமேனு தேங்காப்பால் அப்பம் போட்டிருக்கேன்டா! இரு காபி கலக்கறேன்! நல்லா சாப்பிட்டு எக்சர்சைசுக்கு போ” எனக் கிண்டலாகச் சொல்லியபடியே மகனுக்கு காபி கலந்தார் கனகு.
வார இறுதிகளில் அவன் வீடு தங்குவதே அபூர்வம்தான். அப்படி வீட்டில் இருக்கிறான் என்றால், நல்ல படங்களின் வீடியோ டேப் வாடகைக்கு எடுத்து வந்திருக்கிறான் என அர்த்தம். ஆண் பிள்ளைகள் என்றால் நண்பர்கள் என நான்கு இடங்களுக்கு செல்வது வழமைத்தான் என இவரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
வயிறு நிறைய சாப்பிட்டு முடித்தவன்,
“ம்மா” என வந்து நின்றான்.
“என்னடா?”
“ரெண்டு வெள்ளி இருந்தா குடுமா”
“அப்பா குடுத்த காசுலாம் என்னடா பண்ண?”
“கேண்டின்ல வாங்கி சாப்பிட்டேன்மா! இப்போ அறவே காசு இல்ல! ப்ளீஸ்மா! என் செல்லம்ல”
“காசுன்னாதான்டா செல்லம், வெல்லம்லாம் இந்த வாய்ல இருந்து வரும்! சைக்கிள போய் எடு! காசு கொண்டாறேன்”
“ம்மா! அந்தக் கடுகு டப்பாலத்தான் காசு போட்டு வச்சிருக்கன்னு தெரியும்! எனக்கு மறைச்சுலாம் ஒன்னும் எடுக்க வேணாம்! காசு வேணும்னா நான் வாயத் தொறந்து கேப்பேன்மா! திருடலாம் மாட்டேன்” எனச் சிலிர்த்துக் கொண்டான் இவன்.
“எப்படித்தான் எங்க வச்சாலும் கண்டுப்புடிப்பியோன்னு தெரில போ!”
“அப்பாட்ட இருந்து நீ பதுக்கி வச்சிருக்கற ரெண்டு நூறு வெள்ளி, நாலு பத்து வெள்ளி, மூனு அஞ்சு வெள்ளியவா கேட்டேன்! ரெண்டே ரெண்டு வெள்ளி! அதுக்கு இந்த முனகு முனகறம்மா நீ”
“அடப்பாவி! மொத்தக் கணக்கையும் சொல்லற! கேடி கேப்மாரிடா நீ! இந்தா ரெண்டு வெள்ளி!” என நீட்டினார் கனகு.
“ரெண்டுனா ரெண்டுத்தானா? அஞ்சா குடுத்தா என்ன?”
“செருப்புப் பிஞ்சிடும்! ஓடிப் போய்டு”
“போறேன்! போறேன்!” என இவன் கிளம்ப,
“நில்லுடா!” என அவன் அருகே வந்து இரண்டு வெள்ளியை வாங்கிக் கொண்டு, ஐந்து வெள்ளியாகக் கொடுத்தார் கனகு.
முகம் அப்படியே மலர்ந்து போனது இவனுக்கு!
“அம்மன் கோயில் எல்லாமே
எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா”(ராஜாவின் பார்வையிலே படப்பாடல்) எனக் கையெடுத்து கும்பிட்டு இவன் பாட, புன்னகை முகத்துடன் மகனை அணைத்துக் கொண்டார் கனகு.
சைக்கிளை எடுத்துக் கொண்டவன் உற்சாகமாக சுகந்தியின் வீட்டை நோக்கி பெடலை மிதிக்க ஆரம்பித்தான்.
மனமோ முந்தைய தினம் நண்பர்களுடன் பேசிய பேச்சினை நினைத்துக் கொண்டது.
“மச்சான்! என்னடா என் ஆளு திரும்பியே பார்க்க மாட்டறா!! நானும் பின்னாடி லோ லோன்னு போறேன்! ஒரு சிக்னலும் இல்லையேடா! எப்படித்தான் நீங்களாம் நாலு அஞ்சு காதல்னு பண்ணிங்களோ போ! ஒன்னே எனக்கு வாயாங்(படம்) காட்டுது” எனச் சலித்துக் கொண்டான் ராஜேஷ்.
“டேய் மாப்பிள்ளை! உன் ஆளு ஏ கிளாஸ் படிக்குதுல்ல, அதான் கொஞ்சம் ரப்பு(பெருமை) புடிச்சு அலையுது” என்றான் இவனோடு தொடக்கப் பள்ளியில் இருந்து ஒன்றாக படிக்கும் சுதாகர்.
“அவள பார்த்து ரப்பு கிப்புன்ன செவுனி அறை விட்டுருவேன் பார்த்துக்கோ!”
“கோபப்படாதடா ராஜேஷூ! இரு நாம என்ன பண்ணலாம்னு யோசிப்போம்” என அவனைச் சமாதானப்படுத்தினான் இடைநிலைப்பள்ளியில் இவர்கள் கேங்கில் வந்து சேர்ந்து கொண்ட பன்னீர்.
மூவரும் பள்ளியின் பின் புறம் இருந்த காட்டில், திருட்டு தம் அடித்தபடி தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“மச்சான்!”
“என்னடா?”
“நீ மீரா படம் பாத்தியா?”
“நாலு வாட்டி பாத்தேன்டா”
“அந்தப் படத்துல ஹீரோ பண்ற மாதிரி, தங்கச்சி காறித் துப்புனா கூட நீ பின்னாலே போறத மட்டும் நிறுத்திடாதே! அப்பப்போ கைய புடிச்சு இழு! உரசிக்கிற மாதிரி கிட்ட போய் நில்லு! கண்ணுலயே லவ்வ புழிஞ்சு ஊத்து”
“வொர்க்கவுட் ஆகுமாடா?”
“எல்லா படத்துலயும் இதைதான்டா காட்டுறான்! காதலன் படத்துல நம்ம பிரபுதேவா நக்மா பின்னாடியே போகல?”
“போனாரு!!!” என்றான் சுதாகர்.
“ஆசை படத்துல அந்தப் புதுப் பையன் அஜித் ஹீரோயின் பின்னாடியே போகல?”
“போனாரு! போனாரு!”
“நம்ம லவ்வுல இருக்கோம்! பின்னாடி வரோம்னு காட்டிட்டே இருக்கனும்டா ராஜேஷூ! அப்போத்தான் நம்மள திரும்பிப் பார்ப்பாங்க! உன் லவ்வு கண்டிப்பா ஜெய்க்கும்டா!” என ஏற்றி விட்டான் பன்னீர்.
அதை செயல் படுத்தத்தான் நமது காதல் கண்ணன் காலையிலேயே சைக்கிள் எடுத்துக் கொண்டு ஊர்வலம் வந்திருந்தான்.
சுகந்தி வீடிருக்கும் முன் பக்கம் சைக்கிளை மிதித்து, அவள் அப்பாவின் கார் இருக்கிறதா என முதலில் அவதானித்தான் ராஜேஷ். அவனது நல்ல நேரம் காரில்லை. அந்த வரிசை வீடுகள் தனித்துத் தெரிய ஒவ்வொரு வீட்டுக்கு நடுவிலும் சுவர் வைத்திருப்பார்கள். அதோடு கார் பார்க் செய்ய கார் போர்ச்சும் இருக்கும். ரோட்டில் இருந்து அவர்களின் கார் போர்ச்சை நன்றாகப் பார்க்க முடியும். கார் நிறுத்துவதற்கு போக மீதி இருக்கும் இடத்தை துணி காயப் போட பயன்படுத்துவார்கள்.
சுகந்தியின் வீட்டிலும் அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளைப் போல துணி துவைக்கும் இயந்திரம் இல்லை. பள்ளி விடுமுறை நாட்களில், வாளியில் துணியை ஊற வைத்து, துவைத்து, அலசி, கொடியில் காயப் போடுவது சுகந்தியின் வேலை. அவர்களின் துணி துவைக்கும் இடம் கார் போர்ச்சின் அருகில்தான் இருந்தது.
தந்தை ஏதோ செமினார் எனப் போயிருக்க, இவள் மெல்லத்தான் எழுந்து கொண்டாள். காலையிலேயே சோப் போட்டு சங்கீதா துணியை ஊறப் போட்டிருக்க, பசியாறி விட்டு, வெயில் ஏறுவதற்குள் வேலையை முடிக்கலாம் என வெளியே வந்தாள் இவள். அவளோடு, பந்தை எடுத்துக் கொண்டு சுரேஷூம் வந்தான். அவன் விளையாட ஆரம்பிக்க, இவள் குத்துக்காலிட்டு அமர்ந்து ப்ரஷ்ஷால் துணியைத் துவைக்க ஆரம்பித்தாள்.
சற்று தூரமாக நின்று அவள் வேலை செய்வதையே பார்த்தபடி நின்றான் ராஜேஷ். குனிந்து நிமிர்ந்து அவள் வேலைப் பார்ப்பதை பார்த்தவனுக்கு ஜிவ்வென உடலெல்லாம் ஏதோ செய்தது. சிலிர்த்துக் கொண்டான். பெரிதாய் மூச்செடுத்து விட்டான்.
“யப்பா! அழகிடா இந்த சுகந்தி! லேட்டா வந்தாலும், கரேக்டான ஆள் கிட்ட எனக்கு லவ் வந்திருக்கு!” என முனகிக் கொண்டான்.
அவள் அங்கிங்கு பார்க்காமல் வேலையில் கவனமாய் இருக்க, தாளவில்லை இவனுக்கு. சைக்கிளின் பெல்லை அழுத்தினான். சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள், அதிர்ந்து போனாள். பார்வை சட்டென வீட்டின் உள்ளே போனது. தம்பி விளையாட்டில் கவனமாக இருக்க, அம்மா சமையலறையில் இருந்தார். பதட்டமாக அவனைப் பார்ப்பதும், துணியைத் துவைப்பதும், மீண்டும் வீட்டின் உள்ளே பார்ப்பதுமாக இருந்தாள் சுகந்தி. அதற்குள் அந்தத் தெருவை இரண்டு முறை இடம் வலமென சைக்கிளில் வலம் வந்து விட்டான் ராஜேஷ்.
அந்த நேரம் பார்த்து மோகனின் கார் வர, நல்ல பிள்ளைப் போல கடைக்குப் போகும் பாதைக்குத் திரும்பி விட்டான் இவன். அவர் ஹோன் அடிக்க, சுரேஷ் வந்து கேட்டை திறந்தான். வேக வேகமாகத் துணியைத் துவைத்துக் காய வைத்து விட்டு, அறைக்குள் தம்பியுடன் புகுந்து கொண்டாள் சுகந்தி.
மதிய உணவை மோகன் சாப்பிட்டு முடிக்க, அதன் பிறகே இவர்கள் மூவரும் போய் சாப்பிட்டார்கள். நன்றாக சாப்பிட்டு விட்டு மதியம் படுத்து விடுவார் மோகன். நான்கு மணி போல இவளது தாயும் அவர்கள் அறைக்குள் போய் படுத்து விடுவார். அன்றும் அப்படித்தான் பெற்றோர்கள் அறையில் இருக்க, சுரேஷ் இவர்கள் அறை கட்டிலில் படுத்துத் தூங்கி விட்டான். இவளும் எப்பொழுதும் அந்த நேரம் தூங்கி விடுவாள். அன்றென்னவோ உறக்கம் வரவில்லை. சைக்கிளில் ஸ்டைலாக சாய்ந்து நின்று இவளை சைட்டடித்த ராஜேஷ்தான் மனதில் வந்து வந்து போனான்.
“என்ன ஒரு தைரியம் இவனுக்கு!” என முனகிக் கொண்டவளுக்கு, வெட்கச் சிரிப்பு வேறு வந்து தொலைத்தது.
புரண்டு புரண்டுப் படுத்தும் தூக்கம் வரவில்லை. மெல்ல வெளியே வந்தவள், ஹாலில் இருக்கும் ரேடியோவை அறைக்கு எடுத்து வந்தாள். வானொலி சேனலில் வரும் பாடல்களை இவளே ரெக்கார்ட் செய்து சில கேசட்கள் வைத்திருந்தாள். மோகனுக்கு இதெல்லாம் பிடிக்காது! ஆகையால் ரகசியமாகத்தான் வைத்திருந்தாள். அதில் அவளுக்குப் பிடித்த ஒரு கேசட்டை போட்டு, மெல்லிய சத்தத்தில் பாடலை ஓட விட்டாள் சுகந்தி.
“குழலூதும் கண்ணனுக்கு” என ஆரம்பிக்க, கண்ணன் எனும் சொல் கேட்டு அப்படி ஒரு வெட்கம் வந்தது இவளுக்கு.
மீண்டும் மீண்டும் அந்தப் பாடலையே ரீவைண்ட் செய்து கேட்டபடி இருந்தாள் சுகந்தி. என்னவோ அப்படி ஒரு சுகமாய் இருந்தது அதை கேட்கும் போது. மணி ஐந்தென காட்ட, அவசரமாக கேசட்டை வெளியே எடுத்தவள், ரேடியோவை கொண்டு போய் ஹாலில் வைத்தாள். அது சூடாய் இருக்க, அப்பா கண்டுப்பிடித்து விடுவாரோ எனக் காற்றாடியைப் போட்டு விட்டாள். அதன் பிறகு தேநீர் கலக்குவது, நெத்திலி குவே(பஜ்ஜி போல) செய்வது என நேரம் பறந்தது. மனம் மட்டும் குழலூதும் கண்ணனைப் பாடியபடியே இருந்தது.
அன்றைய பொழுது எப்பொழுதும் போல போனது. மறுநாள் ஞாயிறாக போய்விட வீட்டில் இருந்த மற்ற மூவரும் ஒரு திகிலோடுத்தான் எழுந்தார்கள். இரவில் மோகன் என்ன கூத்தடிக்கப் போகிறாரோ என பயந்து கொண்டேதான் வேலைகளைப் பார்த்தனர்.
அவர்கள் பயந்த இரவு நேரமும் வந்தது. ஐந்து டின் பீர் உள்ளே போக, சாமியாட ஆரம்பித்து விட்டார் மோகன். பிள்ளைகளிடம் கண்ணைக் காட்டினார் சங்கீதா. அவர்கள் இருவரும் நழுவி அறைக்குள் நுழைந்து கொண்டனர். எப்பொழுதும் போல பழையதெல்லாம் இழுத்து சங்கீதாவை கெட்டக் கெட்ட வார்த்தைகளால் திட்டினார் மோகன்.
 




vanisha

Moderator
SM Exclusive
Joined
Feb 6, 2018
Messages
953
Reaction score
115,778
Location
anywhre
“இப்படி ஊமச்சியாவே இருந்து என் பொழப்புல மண்ணைப் போடப் பார்த்த ஆள்தானடி நீ!! அவனுக்குப் பிறகு இன்னும் எவன் எவன் கூட ஊர் மேஞ்சியோ” எனக் காதே கூசும் அளவுக்குப் பேசினார்.
“இது ரெண்டு கூட எனக்குப் பொறந்ததோ இல்ல எவனுக்குப் பொறந்ததோ?” எனக் கேட்டு விட, கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிந்து விட்டது சங்கீதாவுக்கு.
“நீலி கண்ணீர் வடிக்காதடி!” எனச் சொல்லி நான்கு அப்பு அப்பினார் மோகன்.
சத்தம் போடாமல் அடிகளை வாங்கிக் கொண்டார் சங்கீதா. முரட்டுத்தனமாக மனைவியைப் பிடித்துத் தள்ளி விட, சங்கீதாவின் நெற்றி காபி மேசையில் மோதிக் கொண்டது. அம்மாவென அவர் அலறி விட, என்ன நடந்தாலும் வெளியே வரக் கூடாது என இத்தனை வருடங்களாய் தாய் படித்துப் படித்துச் சொன்னதையும் மீறி வெளியே ஓடி வந்தாள் சுகந்தி. எப்பொழுதும் அழுகை சத்தம் மட்டுமே கேட்கும். இன்று தாய் அலறி விட, தாங்கவில்லை பெண்ணுக்கு.
“அடிக்காதீங்கப்பா! அம்மாவ அடிக்காதீங்க” எனக் கண்ணீர் குரலில் இவள் மன்றாட,
“பொட்டைக் கழுதை! எனக்கே ஆர்டர் போடறியா? உங்கம்மா போலவேத்தானடி இருக்க நீயும்! அவள போல எவன் கூட ஓடப் போறியோ? உனக்குலாம் தெண்டத்துக்குத்தான்டி சோத்த போட்டு வளக்கறேன்!” என மகளையும் போட்டு அடிக்க ஆரம்பித்தார்.
சாதாரணமான ஆணுக்கு ஒரு வலிமை இருக்கும் என்றால், குடி போதையில் இருப்பவனுக்கு இன்னும் அதிக வலிமை இருக்கும். வலி தாங்காமல்,
“அப்பா! விடுங்கப்பா! வலிக்குது!” எனக் கதற ஆரம்பித்தாள் சுகந்தி.
தட்டுத் தடுமாறி எழுந்து வந்து நடுவில் புகுந்தார் சங்கீதா.
“வயசுக்கு வந்த புள்ளைய அடிக்காதீங்க! உங்க காலைப் புடிச்சு கேக்கறேன்!” என அவரும் அழுக, இருவரையும் தள்ளி விட்டு விட்டு அறைக்குள் போய் கட்டிலில் தொப்பென விழுந்தார் மோகன்.
“ஏன்டி வெளிய வந்த? எத்தனை தடவை சொல்லிருக்கேன் வராதன்னு!” என அழுது கொண்டே மகளை அணைத்துக் கொண்டார் சங்கீதா.
இருவரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக் கொண்டு அழ, சின்னவனும் அழுகையுடன் வந்து இவர்களைக் கட்டிக் கொண்டான்.
“உள்ள வாடி முண்டம்!” எனும் சத்தம் கேட்க, பிள்ளைகள் இருவரையும் படுக்க அனுப்பினார் சங்கீதா.
தூக்குத் தண்டனை கைதி போல அவர்கள் அறைக்குள் நகராத காலை எட்டு வைத்து நடந்து போனார் அவர்.
அன்றைய இரவு சுகந்தியால் உறங்கவே முடியவில்லை. உடல் முழுக்க வலித்தது. கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
‘நீயெல்லாம் ஓர் அப்பனாடா? எவன் எவனுக்கோ சாவு வருது! உனக்கு வந்து தொலைக்க மாட்டுதே! கடவுளே! எங்கப்பாவ சீக்கிரம் உன் கிட்ட கூப்டுக்கோ! ப்ளிஸ்!’ என மனதில் வேண்டிக் கொண்டே ஒரு வழியாகத் தூங்கிப் போனாள்.
காலையில் சற்று தாமதமாகத்தான் பள்ளிக்குப் போனாள் சுகந்தி. காதல் கண்ணன் காத்திருந்து பார்த்து விட்டு, இவள் பள்ளிக்கு வரவில்லையென எண்ணிக் கொண்டான்.
பள்ளி இடைவேளையின் போது, பொண்டோக்கில் அமர்ந்து பாட்டில் கோக் குடித்துக் கொண்டிருந்தான் ராஜேஷ் கண்ணன்.
“கண்ணா” எனும் குயில் குரலில் அதிர்ந்து திரும்பிப் பார்த்தான் இவன்.
அவனைப் பார்த்தபடி நின்றிருந்தாள் சுகந்தி.
“ஏய் சுகந்திபொண்ணு! இன்னிக்கு நீ லீவ்னுல நெனைச்சேன்” என எல்லாப் பல்லையும் காட்டினான் இவன்.
“கண்ணா!”
“ஆ……. இன்பத் தேன் வந்து பாயுது என் காதினிலே!!! கூப்புடு கூப்புடு”
“கண்ணா! ஐ லவ் யூ!!!!”
கோக் பாட்டில் கை தவறி கீழே விழ, ஆவென வாயைப் பிளந்தான் ராஜேஷ் கண்ணன்.

சொந்தமாவாயா???
 




Vidhushini

நாட்டாமை
Joined
Jun 25, 2021
Messages
61
Reaction score
575
Location
Madurai
என்ன நினைச்சு இப்போ டக்குன்னு லவ்வ சொல்லிட்டா சுகந்தி?
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top