Soniyaravi
இணை அமைச்சர்
Nice
Nirmala vandhachuஇவர்கள் இருவரும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த சனிக்கிழமையும் வந்து சேர்ந்தது. தமிழ் வகுப்பில் இவளால் கவனம் செலுத்தவே முடியவில்லை. கிளாஸ் முடிந்ததும் தன் கண்ணாவைத் தனியாய் சந்திக்கப் போகும் அந்த நிமிடங்களை நினைத்தபடியே நேரத்தைக் கடத்தினாள். வகுப்பு முடிந்து எல்லாரும் கிளம்ப, இவள் மட்டும் ராஜேஷ் சொல்லி இருந்த கடைசி பில்டிங்கில் இருந்த வகுப்பறையைத் தேடிப் போனாள். இதயம் படபடவென மத்தளம் கொட்டியது. கால்களோ நடக்கவே முடியாதபடி பின்னிக் கொண்டன. நெற்றியில் பொடி பொடியாய் வியர்த்தது.
சுகந்தியைப் பார்த்த நொடி, வேகமாய் அவளருகே வந்தான் ராஜேஷ்.
“வா! வா சுகந்தி! இவனுங்கள கழட்டி விட்டுட்டு வரதுக்குள்ள, போதும் போதும்னு ஆய்டுச்சு” என்றவன் அவள் கை பற்றி உள்ளே அழைத்துப் போனான்.
வகுப்பின் ஆகக் கடைசி மேசை நோக்கி அவன் நடக்க, அமைதியாய் பின் தொடர்ந்தாள் சுகா.
“உட்காரு சுகந்தி” என்றவன் பிடித்தக் கையை மட்டும் விடவேயில்லை.
“என்ன உன் கை இவ்ளோ சாஃப்டா இருக்கு பஞ்சு மாதிரி” என்றவன், பூவை ஒத்திருந்த அவள் விரல்களை வருடினான்.
மேனி சிலிர்த்தடங்கியது பெண்ணுக்கு. சட்டெனக் கையை இழுத்துக் கொண்டாள் சுகந்தி. அவளை நிமிர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தான் ராஜேஷ்.
“ஏன் கைய இழுத்துக்கிட்ட?”
“ப..பயமா இருக்கு” என மெல்லியக் குரலில் சொன்னாள் இவள்.
“யப்பா! இன்னிக்குத்தான் உன்னோட குரலையே நல்லா கேக்கறேன்! எப்போவும் நம்ம சுத்தி இருக்கற சத்தத்துல வெறும் காத்துதான் வரும் உன் வாய்ல இருந்து” என அவன் சொல்ல, இவளுக்குச் சிரிப்பு வந்தது.
அவள் சிரிக்கவும் இவனுக்கு உற்சாகமாகிப் போனது.
“சுகா”
“ஹ்ம்ம்”
“கண்ணான்னு கூப்பிடேன்”
“கண்ணா”
“இன்னொரு தடவை!!”
“கண்ணா!”
“என் பேர் உன் வாய்ல இருந்து வரப்போ, அப்படியே சிலிர்க்குது சுகந்தி! உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுது!” எனக் கண் மூடி அனுபவித்துச் சொன்னான் இவன்.
தன்னால் இவன் பாதிக்கப்படுகிறான் எனும் விஷயம் இவளுக்கு அப்படி ஓர் ஆனந்தத்தைக் கொடுத்தது. இன்னும் அவனை என்னவெல்லாம் செய்ய முடியும் இவளால் என அறிந்து கொள்ளும் ஆர்வம் முளைத்தது. பயத்தை உதறி விட்டு, மெல்ல அவன் கை பற்றிக் கொண்டாள். பட்டெனக் கண்ணைத் திறந்து ஆச்சரியமாக அவளைப் பார்த்தான் ராஜேஷ்.
அவன் செய்தது போலவே, அவனது விரல்களை வருடி தந்தாள் இவள்.
“என்னை என்னடி பண்ணற!” என்றவனின் குரல் குழைந்து வந்தது.
“கண்ணா!”
“ஹ்ம்ம்ம்ம்”
“எனக்காக ஒரு பாட்டு பாடுங்களேன்”
“என்ன பாட்டு வேணும் உனக்கு?”
தேன் குழைத்து வந்தது அவன் குரல்!
பள்ளியில் ரௌடி எனப் பெயர் எடுத்தவன், காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு கெத்தாய் திரிபவன், இவளிடம் மட்டும் உருகிக் கிறங்கி நிற்க, இத்தனை வருடங்கள் சரிந்து கிடந்த அவளது தன்னம்பிக்கை நிமிர்ந்து நின்று கொண்டது!!!
அவனைப் பார்த்து இவள் மந்தகாசமாய் புன்னகைக்க, மயங்கி நின்றான் ராஜேஷ். ஒரு கை அவள் கையோடு சிக்கி இருக்க, இன்னொரு கை உயர்ந்து பெண்ணின் கன்னம் வருடியது.
“ஒரு காதல் தேவதை
பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்” என அவன் மயக்கும் குரலில் பாட, இவளுக்குப் பூமியிலேயே சொர்க்கம் தெரிந்தது.
அதற்கடுத்த வாரம் தகப்பனின் முன்னே போய் நின்றாள் சுகந்தி!!!
சொந்தமாவாயா???
(இந்தச் சம்பவங்கள் எல்லாம் நான் பள்ளிப் படிக்கறப்ப பார்த்தது! சனிக்கிழமை லவ்வாங்கி டே!!! டேட்டிங்லாம் செம்மயா போகும்!!! அதை வச்சித்தான் எழுதிருக்கேன்)