• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் 23(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,604
Location
Coimbatore
ஹாய் பிரெண்ட்ஸ் 💐

இந்த எபி கொஞ்சம் பெருசா வந்துச்சு. சோ பார்ட் 1 இப்போ போஸ்ட் செய்தது விட்டேன் dears 😍

பார்ட் 2 இன்று இரவு அல்லது நாளை காலை பதிவு செய்து விடுகிறேன் ஃப்ரெண்ட்ஸ்😍

தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் 💐

23(1)

முதல் நாள் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பலர் மிரளுவார்கள். ஒரு சிலர் ஆசையாகப் போவார்கள். மற்றும் சில பிள்ளைகள் கடனே என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு போவார்கள்.





ஜீவா அப்படிப்பட்டவள் அல்ல. அவள்தான் பள்ளியை அதற்கு முன் அடிக்கடி பார்த்து இருக்கிறாள் தானே?

அதனால் 'எப்போது பள்ளிக்கு செல்வோம் ' என காத்திருந்து குதூகலமாக பள்ளிக்கு சென்று வந்திருந்தாள்.

அதேப் போலவோ என்னவோ _ ஏற்கனவே இதேபோல ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கிறாள் அல்லவா? அங்கே நல்ல பெயர் வாங்கி இருக்கிறாள் என்பதால் இங்கே வரும் பொது குதூகலமாகவே வந்தாள். கூடவே கொஞ்சம் படபடப்பு இருந்தது.

‘ நமக்கு பொறுப்பு வந்திடுச்சு. அதான் இப்போ டென்ஷனா இருக்கு ‘ என மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

ரிசப்ஷனில் தன் வேலை உத்தரவு கடித்ததை கொடுத்த போது அவளை ஜி.எம்மை பார்க்கச் சொன்னார்கள்.

ஜீவா 'அப்படியே திரும்பிப் போய் விடலாமா?' என்று
நினைத்தாள்.

எதற்காம்? அவள் இங்கே வந்தது போல அவனும் வேறு எங்கும் சென்று இருக்கலாம்.

அப்படியே இங்கே இருந்தாலும் ஒரு வணக்கத்தை சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போக வேண்டியது தானே?

அவனிடம் தாழ்ந்து போகக் கூடாது என்பது அவள் கொண்ட உறுதிதான் என்பது உறுதி தான்.

இப்போதும் அவனிடம் எதற்கும் தாழ்ந்து போகப் போவதில்லை அவள். அவளுடைய வேலையை செய்யப் போகிறாள். இவனை மதித்தால் தானே இவன் பேச்சுக்கும் செய்கைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்?


புதிதாக வந்த ஞானோதயத்தில் பின் கழுத்து பக்கம் கை விட்டு கூந்தலை கோதிக் கொண்டு வரவேற்பு அறையில் சொல்லிய திசையில் நிமிர்வுடன் நடந்தாள்.

உள்ளே அவள் எதிர்பார்த்து வந்ததை விட பெரிய அதிர்ச்சி இருக்கும் என்று நினைக்கவில்லை அவள்.

உள்ளே அவள் எதிர் பார்த்தது போல மனோஜ் இருந்தான்.

அனுமதிக்காகவோ இல்லை ஒரு நாகரீகம் கருதியோ கூட கதவைத் தட்டாமல் அவள் உள்ளே வந்து விட இப்படி ஒரு நிலையில் இருப்பான் என அவள் நினைக்கவே இல்லை. அடப்பாவி! என்று வலது கை விரல்களால் அதிர்ச்சியில் பிளந்த தன் வாயை பொத்திக் கொண்டாள்.

உன்கூடத்தான் ஃபோட்டோ புட்ச்சேன்
டச்சு போனுல
கட்டிப் புடுச்சு இச்சு குடுப்பேன் ஹனிமூனுல
தள்ளி தள்ளி போகாதம்மா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்தை
எப்ப வச்சுக்கலாம்
சொல்லு சொல்லு

என அவன் தன் மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சரிந்து கொண்டு முகம் முழுக்க புன்னகையுடன் பாடிக் கொண்டு இருந்தான்.

இவள் வந்த சத்தம் கேட்டு நிமிர்ந்தான்

இவளுக்கு வந்த வேலையும் தன் வேலையும் மறந்து விட ‘ என்ன நடந்தாலும் சரி ‘ என்று அவசர அவசரமாக முடிவெடுத்து கொண்டு இடுப்பில் கை ஊன்றி முறைத்தாள் அவனை.

அவனுக்கு அத்தனை சந்தோசம் இவளைப் பார்த்ததில்.

“ வா வா தருக்குட்டி! “ என்று இருக்கையில் இருந்து எழுந்து வந்து இவள் இன்னொரு கையைப் பிடித்துக் கொண்டான்.

பொறாமையாக அவள் இடுப்பில் இருந்த அவளின் இன்னொரு கையைப் பார்த்தான்.

அப்புறம் மனத்தைத் தேற்றிக் கொண்டு இவள் முகத்தைப் பார்த்தான்.

இவள் முகம் 'கடு கடு' என இருந்தது.
“ ஏண்டா டல்லா இருக்க?” என்றவாறு தன்பின்னிரு கையால் அவள் முகத்தில் விழுந்த முன் உச்சி முடியை காதோரம் ஒதுக்கி விட்டான்.

அதுவரை எரிச்சலில் இருந்த ஜீவா திடுக்கிட்டாள்.

இந்த ஸ்பரிசம்! இத்தனை காதலாக அவள் மனதை சுருட்டும் இந்த ஸ்பரிசம்!

இதனால்தான் தான் அப்படிச் செய்யும் போது இவன் நினைவு வந்து தொலைந்ததா?

ஜீவாவின் பெற்றோரிடம் திருமனத்திற்க்கு சம்மதம் வாங்கிய பின்பு அவளை கூட்டிக் கொண்டு இரண்டு நாட்கள் சுற்றினான் அல்லவா?

அப்போதெல்லாம் அடிக்கடி இப்படி செய்வான். காதோரம் கூந்தலை ஒதுக்கிய பின்பும் கையை எடுக்காமல் அப்படியே வைத்துக் கொண்டு இவளையே பார்த்துக் கொண்டு இருப்பான் அப்போதெல்லாம். இவள் அதை பெரிதாக நினைக்க வில்லை. 'முடியை நல்லா செட் பண்றான் போல' என்பதாக நினைத்து விட்டாள்.

இப்போதும் அவன் கை அவள் காதோரம் தான் இருந்தது. அது அவளுக்கு ஒவ்வாமையை தராமல் இனிமையை தருகிறதே?

ஆனால் இதை அவள் விலக்க வேண்டுமே? ஏன்?

நினைவு வந்தது! ஜெஸி!!

தன் காதோரம் இருந்த அவன் கையை இடுப்பில் வைத்து இருந்த தன் இன்னொரு கையால் அவள் எடுக்க முயன்றாள்.

மனோஜ் தன் இன்னொரு கையால் இவளின் அந்தக் கையைப் பற்றிக் கொண்டான்.

இவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

இப்படி ஒரே கை கலப்பாக இருக்க _ மற்றதை பேசப் பிடிக்கவில்லை அவளுக்கு.

முதலில் கண்ணில் பட்ட குற்றத்தை களையும் பொருட்டு _

“ அதென்ன? நான் செல்போன்ல ஒரு மெலோடி சாங் வச்சது பொறு க்காம மீட்டிங் போட்டு தூக்கினிங்க. இப்போ? இதென்ன?”
எனக் கேட்டாள்.

“ என் செல் ல எந்த பாட்டும் இல்லயே? ஒன்லி ட்ரிங்க் ட்ரிங்க் தான் இருக்கும்.”

“ அதைச் சொல்லலை. இப்ப காட்டு கத்தல் கத்துனிங்களே? அதைச் சொன்னேன்.”

இன்னும் இருவரின் கரங்களும் இணைத்து இருக்க ரோசத்தில் இருந்த ஜீவா அதைக் கவனிக்கவே இல்லை.

பிறர் தன்னை தற்செயலாக தொடுவதைக் கூடப் பிடிக்காத ஜீவா. அதை நன்கு அறிந்தவன் அவன். மனோஜீவன்.

அவள் தன் தொடுகையை இன்னும் விலக்கவில்லை என்றால் இன்னும் அவள் மனதில் தன் மீதான காதல்? அன்பு? ஏதாவது இன்னும் பாக்கி இருக்கிறது அல்லவா?

“ அது நாம எடுத்த செல்பிய இப்போ பார்த்துகிட்டு இருந்தேன். உடனே இந்த பாட்டு தோணுச்சு. இங்க யாரும் அப்போ இல்ல. உரிமைப் பட்டவ நீ வந்து என்னை நிக்க வச்சுக் கேட்கிற.”

“ நான் எங்க உங்களை நிக்க வச்சேன்?”

“ இப்போ நின்னுகிட்டு தானே இருக்கோம்? வா. உட்காரலாம். கால் வலிக்கப் போவுது “
என்று கையை விடாமல் அழைத்துச் சென்று தன் இருக்கைக்கு எதிரில் ஒரு சுழல் இருக்கையில் அவளை அமர்த்தியவன் அதற்கு எதிரில் இன்னொரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தான். இவள் கைகள் இன்னும் அவன் கைகளில்.

“ எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்? நான் மட்டும் இல்ல. அம்மாவும் உனக்காக வெயிட்டிங் “

ஜீவாவின் கண்கள் கடந்த காலத்தில் திறந்தன. நிகழ் கால மயக்கம் மறந்தது.

பட்டென கைகளை வலிந்து உதறினாள் அவள்.

அவனோ அவளின் கையைப் பிடித்ததால் உண்டான கிறக்கத்தில் இருந்ததால் 'படக் 'கென விட்டு விட்டு தடுமாறினான்.

இந்தத் தடுமாற்றம் அதிகம் வலித்தது அவனுக்கு.

இத்தனை நேரம் கையில் இருந்த பூங்கொத்தை தவற விட்டவன் கொதித்துப் போனான்.

எத்தனை வருடங்கள் பொறுத்து இருந்தான்?

பொறுத்தார் பூமி ஆள்வாராம்!

அவனுக்கு பூமி எல்லாம் வேண்டாம்.

இந்தப் பூவையை ஆண்டால் போதும் ! என தெவிங்கி தேம்பியது அவன் காதல் உள்ளம்

அது என்ன?

இங்கொருத்தன் கிடந்து புலம்புவது புரியாமல் போய் சேர்ந்தவளை எண்ணி அவனைத் தள்ளி வைப்பாளாமா?

'மூசு மூசு ‘ என்று மூச்சு வாங்கியது அவனுக்கு.

சட்டென ஒரு கையால் அவள் சங்கு கழுத்தைப் பிடித்தான்.

சிங்கம் தன் இரையை வாயில் கவ்வுவதற்கும் தன் குட்டியை வாயில் கவ்வுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா?

பெற்ற பிள்ளையாக இருந்தால் என்ன? வாழ்வின் எல்லாமாக இருக்கும் இணையாக இருந்தால் என்ன?

அன்பு அதுதான் அல்லவா?.

ஜீவாவின் கழுத்தைப் பிடித்து இருந்த மனோஜின் கைகளில் இருந்ததும் அந்த அன்புதான்.

அவளுக்கு வலிக்காமல் பிடித்து தன் கோபத்தை அவள் கழுத்தை பிடித்த தன் விரல்களில் வெளிப்படுத்தினான்.

அதில் ஜீவாவுக்கு தன் வலியும் தெரியவில்லை. அவன் வலியும் புரியவில்லை.

அதுவரை அவள் முகத்தில் தெரிந்த அன்னியோன்யம் தொலைந்து அந்நியனைப் போல இவனைப் பார்க்க பொங்கி விட்டான் மனோஜீவன்

அவள் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன் அப்படியே கொண்டு வந்து உள்ளங்கையால் தன் நெற்றியில் வேகமாக அறைந்து கொண்டான்.

ஜீவாவுக்குப் பதறி விட்டது.

அவனுக்காக என்று இல்லாவிட்டாலும் அவளால் அவன் துன்புறுவதா?

அவளை அறியாமல் அவள் கால்கள் அவன் அருகில் ஒடின்.

அவளை அறியாமல் அவள் கைகள் அவன் நெற்றியில் இருந்த கையை எடுத்து விட்டன.

மனோஜ் வெண்ணெயாக உருகி கரைந்து மணந்தான்.

இவளை மணப்பானா?

மனோஜ் வாயில் ஜொள் ஒழுக இரண்டு கண்களாலும் மாற்றி மாற்றி இவளை சைட் அடிக்க ஜீவா கொஞ்சம் நகர்ந்து போய் தன் பாத்தை நோக்கி குனிந்தாள்.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடமாக அவள் குனிந்து நிற்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தவன்

மெல்ல சொரணை வரப் பெற்று _

“ ஏன் ஜீவா குனிஞ்சு இருக்கே?” என்றான்.

அவன் வார்த்தைகள் அவனுக்கு மேல் வழிந்தது தொலைந்தது அவளிடம்.

“ ம்? நல்லா பாருங்க” பற்களை கடித்தாள் ஜீவா.

“ நல்லாத்தானே பார்க்கறேன் “ என்று இன்னும் பார்த்துக் கொண்டே இருக்க _ ‘ இவன் தேற மாட்டான். அன்னிக்கு செருப்பை ஜாடையா காட்னதுக்கே பஞ்சாயத்தை கூட்டி செல்போனை என்கிட்ட இருந்து அத்து விட்டான். இப்போ இத்தனை செய்யறேன். கொஞ்சமாச்சும் உறைக்குதா பாரு? ‘

'கடு கடு புடு புடு ஜடு ஜடு' என முகத்தை வைத்துக் கொண்டு நிமிர்ந்தாள்.

“ இன்னும் என்னை என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? அதே ஒன்னும் தெரியாத பாப்பான்னா? நீங்க எப்போ கல்யாணம்ன்னு கேட்டதும் உடனே நான் ஒத்துக்கணுமா?”

“ உடனே எல்லாம் வேண்டாம் ஒரு ரெண்டு நாள் கழிச்சு ஒத்துக்கோ. ஏன்னா நீ நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட அப்புறம் ஃப்ரீயா இருக்க முடியாதுடா. அந்த ரெண்டு நாள்ல நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ “

அக்கறையாக அவன் சொல்ல இவளுக்கு வயிறு எரிந்தது.

“ ஏன்ன விளையாடறிங்களா? உங்களால _ நீங்க காதலிச்சு ஏமாத்தினதால என் ஜெஸி உயிரே போயிருக்கு. நீங்க இங்க கல்யாணம் பண்றீங்களா?”

ஆத்திரத்துடன் கேட்டாள் ஜீவா.

“ என்ன? என்னால ஜெஸி இறந்தாளா? நான் அவளை காதலிச்சு ஏமாத்தினேனா? உனக்கு பையத்தியமா புடிச்சிருக்கு?”

மனோஜ் வெகுண்டான்.

“ஆமா. பைத்தியம் தான் புடிச்சிருக்கு. இல்லைன்னா இன்னும் உங்ககிட்ட நின்னு பேசிக்கிட்டு இருப்பேனா நான்?”

“ நீ பைத்தியம் தாண்டி. செத்துப் போனவங்களைப் பத்தி தப்பா பேசக் கூடாதுன்னு நான் ஒன்னும் சொல்லிக்கலை. உன்னை இப்படியே விட்டா நான் சீக்கிரம் செத்துப் போயிருவேன் போல இருக்கே?” என்றவன் ஆழ மூச்சு இழுத்து விட்டான்.

“ கொஞ்சம் உக்கார். “ என்றபடி இவளை அமரச் சொன்னவன் அவளை ஒட்டி சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

இண்டர் காமில் “ இன்னும் அரை மணி நேரம் எந்த அப்பாய்ன்ட்மெண்ட்டும் யாருக்கும் _ அண்டர்லைன் _ யாருக்கும் குடுக்காதீங்க. அர்ஜென்டனா ஏஜிஎம் கிட்ட அனுப்புங்க . அவருக்கு வேற வொர்க் குடுத்து இருக்கேன்
சோ அவரையும் மாக்சிமம் தொந்தரவு பண்ணாதீங்க“ என்றான்.

இவளிடம் பேசுவதற்காக சில வேலைகளை அவரிடம் தள்ளி விட்டிருந்தான்.

பெரும்பாலும் இத்தனை சீக்கிரத்தில் விசிட்டர்ஸ் வர மாட்டார்கள் என்பதால் துணிந்து சொல்லி இருந்தான்.

'மீறிப் போனால் அந்த ஏஜீஎம் பையனுக்கு ஒரு சிக்கன் சமோசாவும் டீயும் வாங்கி கொடுத்து சமாதானப் படுத்தி விடலாம்.'

மனோஜ் மனதில் திட்டமிட்டுக் கொண்டான்.


பின்பு இன்னும் நெருங்கி அவள் இடது கையை எடுத்து தனது கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.

அவள் முகத்தில் அசௌகரியம் காட்டி நெளிந்தாள்.

அதை கவனித்தவன் “ இப்ப நீ சும்மா இருந்தா உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும். ஓகேவா? “ என்று இடைவெளி விட்டு இவள் முகத்தையே பார்க்க அவன் மிரட்டல் தொனியில் அதிர்ந்து ‘ பே’ எனப் பார்த்தாள் ஜீவா.
‘ நல்லது ‘ என நினைத்தவன் அதே குரலில் தொடர்ந்தான்.

“ மவளே! இதே அசைஞ்சே?

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன்.நீ என்னை கல்யாணம் பண்ணிக்கணும். எப்படி வசதி? “ என மிரட்டினான்.

சூது வாது அறியாத ஜீவாவும் மிரண்டு விழித்து தலையாட்டினாள்.

அவளைப் பார்த்து கனிந்து சிரித்தவன் தொடர்ந்து ஜெஸி குறித்து தான் அறிந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஹான் இது நல்ல இல்ல ரைட்டர் ஜீ, என்ன இவளோ குட்டி எபிசோட்☹☹☹

இந்த கதையில் இவங்க பார்ட் கொஞ்சம் தான் இருந்தது, ஐ மீன் இவங்க ரெண்டு பேர் மட்டும், இப்படியா தொடரும் போடுவிங்க, நா ரொம்ப சோகம்.....

ஆனாலும் ஜீவா ஒரு unique பீஸ் இல்ல, சோ ஸ்வீட் 🤩🤩🤩🤩

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ.....
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,604
Location
Coimbatore
ஹான் இது நல்ல இல்ல ரைட்டர் ஜீ, என்ன இவளோ குட்டி எபிசோட்☹☹☹

இந்த கதையில் இவங்க பார்ட் கொஞ்சம் தான் இருந்தது, ஐ மீன் இவங்க ரெண்டு பேர் மட்டும், இப்படியா தொடரும் போடுவிங்க, நா ரொம்ப சோகம்.....

ஆனாலும் ஜீவா ஒரு unique பீஸ் இல்ல, சோ ஸ்வீட் 🤩🤩🤩🤩

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ.....
கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகி மா 💕💕💕

அடுத்த epi உடனே போடறேன் மா😍
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகி மா 💕💕💕

அடுத்த epi உடனே போடறேன் மா😍
Yes waiting ji🤩
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,719
Location
Germany
லவ்வர் போய்க்கு குசும்பு கூடி போச்சு. மிரட்டி எல்லாம் சம்மதம் வாங்குறான்😁😁😁😁
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,604
Location
Coimbatore
லவ்வர் போய்க்கு குசும்பு கூடி போச்சு. மிரட்டி எல்லாம் சம்மதம் வாங்குறான்😁😁😁😁
அந்த பக்கிக்கு அது புரியலையே😂😂😂

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகி மா ❤❤❤❤❤
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அந்த லூச லவ் பண்ணிட்டு தலை தலை ஆஹ் அடிச்சிக்க வேண்டியது தான்.... 🙄

சொல்லுப்பா.... சொல்லு.... உன் point of view ல இருந்து இன்னும் என்ன நடந்துச்சு னு தெரில....
 




Last edited:

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,604
Location
Coimbatore
அந்த லூச லவ் பண்ணிட்டு தலை தலை ஆஹ் அடிச்சிக்க வேண்டியது தான்.... 🙄

சொல்லுப்பா.... சொல்லு.... உன் point of view ல இருந்து இன்னும் எண்ண நடந்துச்சு னு தெரில....
Thank you so much sister, ❤❤❤❤

Keep reading saki ma 💕💕💕
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top