• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் _ எபி லாக்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,121
Reaction score
4,616
Location
Coimbatore
IMG-20211110-WA0124.jpg

ஹாய் பிரெண்ட்ஸ் 🥰

இந்தக் கதையில் சில பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டி இருப்பேன். அவை பொருத்தமாக அமந்ததா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் ஃப்ரெண்ட்ஸ்💞

ஏனெனில் எனக்கு
பைபிளில் அதிக பரிச்சயம் கிடையாது😊

இந்த கதையின் கவர் பிக் எப்படியோ மிஸ். ஆகி விட்டது. இப்போதான் கண்டு பிடித்தேன்.

இந்த கதைக்கு ஒரு எபிலாக் போட சின்ன சின்ன ஆசை எனக்கு😊


இதோ போட்டியின் கடைசி நாளில் பதிவு செய்து விட்டேன் ஃப்ரெண்ட்ஸ் 💕

இந்தக் கதையை படித்து ஆதரவு தந்த அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி ஃப்ரெண்ட்ஸ்❤

என் ஜீவன் என்றும் உன்னுடன் _ எபி லாக்






உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சைக் கொடி போல் இருப்பாள். உன் பிள்ளைகள் உன் பந்தியச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போல் இருப்பார்கள்._ சங்கீதம் _128:3

சில வருடங்களுக்குப் பின்….

மனோ ஜீவன் தன் வீட்டை நோக்கி காரை ஓட்டிச் சென்று கொண்டு இருந்தான். முகத்தில் மாறாத புன்னகையுடன் சேர்த்து சலுகையாக கோபமும் இருந்தது.
அருகே மகள் தமிழ் அருவி சீட் பெல்ட் போட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தாள். கையில் கடலை மிட்டாயை டிஸ்யூ பேப்பரில் வைத்து கரம்பி கரம்பி தின்று கொண்டு இருந்தாள். சாப்பிட்டு முடித்ததும் கை துடைக்க அவசியம் இன்றி அந்த பேப்பரை தூக்கி போட்டால் போதும். ஆனால் இதில் மிட்டாயை தின்னாமல் பேப்பரை தின்னும் வாய்ப்புகள் அதிகம். எனவே இப்பழக்கம் அந்தக் குழந்தைக்கு ஆரம்பத்தில் இருந்து கொடுக்கப் பட்ட பயிற்சி என்பது புரிந்தது.


“ இப்போ வீட்டுக்குப் போனதும் தரு ஆரம்பிச்சுருவா. இதே வேலையா போச்சு இவளுக்கு. கண்டிக்க ஆள் இல்லைனதும் இஷ்டத்துக்கு நடந்துக்கிறா . இவளை அடக்க ஒருத்தன் வரணும். அப்பதான் அடங்குவா!”. வாய்விட்டு புலம்பியபடி வீட்டு வாசலில் காரை நிறுத்தியவனை நோக்கி நிறை மாத வயிற்றை தாங்கி பிடித்தபடி ஓடி வந்தாள் ஜீவா.

காரை சடன் பிரேக் போட்டு நிறுத்திவிட்டு அதே கையோடு கதவைத் திறந்தவன் அதை மூடாமல் மனைவியை நோக்கி ஓடினான்.

அவள் அடுத்த எட்டு வைப்பதற்குள் எட்டி பிடித்து விட்டான். மூச்சு வாங்க நின்றாலும் தன் உடலின் அசைவு அவளை பாதிக்குமோ என மெது மெதுவாக சிறிய மூச்ச்சுகளாக எடுத்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டான்.

இதற்குத்தான் அவளைத் திட்டிக் கொண்டு வந்தது அவன்.

திருமணமான முதல் வருடம் குழந்தையை தள்ளிப் போட்டு இருந்தான். அவளுக்கும் கொஞ்சம் பிரச்சினைகள் இருந்ததால் அதை பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால் திருமணமான பத்தாம் மாதம் ஜமுனா அழகான பெண் குழந்தையை பெற்று எடுக்கவும் இவளுக்கும் பிள்ளை ஆசை வந்து விட்டது.

அதன் பிறகு கணவனிடம் ஒரே போராட்டம்தான்.

“ அந்த பாப்பா எவ்ளோ அழகு! கண்ணை எடுக்கவே முடியலை. ஆனா தூங்கிற பிள்ளையை பார்க்க கூடாதுன்னு என் அம்மா என்னை திட்டிட்டாங்க. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? எனக்கு என் பாப்பா வேணும்!. அப்போ பார்க்கிறேன். யாராச்சும் அப்போ சொல்லட்டும். நான் பேசிக்கிறேன் “ ஜீவாவுக்கு கோபத்தில் உதடு துடித்தது.

மனோஜ் கடகடவென சிரித்து விட்டான்.

“ அடியேய் என் அறிவு பொண்டாட்டி! உன்னை மட்டும் இல்லை. யாரையும் குழந்தை தூங்கும் போது பார்க்க கூடாதுன்னு தான் சொல்லுவாங்க. ஏன் ? குழந்தையோட அம்மா கூட பார்க்க கூடாதுன்னு தான் சொல்லுவாங்க.

எதுல தான் உனக்கு ரோசம் வரதுன்னு இல்லையடி?”

சிரிப்பு மாறாமல் அவளை இழுத்து கோபத்தில் விடைத்து நின்ற அவள் மூக்கில் முத்தமிட்டான்.

“ அதுலாம் கிடையாது. கிடையாது. அடுத்து நாம பாப்பா பெத்துக்கிறோம். “ என்றாள் முடவாதமாக.

“ உனக்கு அதுக்கு இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டி வரணும்டா “ அவன் சொல்லவும் கோபம் வந்து விட்டது அவளுக்கு.

“ அப்போ என்னை நம்பலை?”

“ ச்சே ச்சே. நான் அப்படி சொல்லலை “

“ வேற எப்படி சொல்றீங்க? பைத்தியக்காரி கூட பெத்த பிள்ளையை நல்லாத்தான் வளர்ப்பா. நான் வளர்க்க மாட்டேனா?'

அவனுக்கு இப்போதே அவன் மனைவியை பிள்ளை பொறுப்பில் தள்ள சம்மதம் இல்லை. சொன்னால் இவளுக்குப் புரிவதும் இல்லை. என்னதான் செய்வது?

“ இல்லை… அப்புறம் நீ எனக்கு இம்பாட்டன்ஸ் தர மாட்டியோன்னு ஒரு பயம்… “

“அவ்வளவுதானா? குடுத்திட்டா போச்சு. இனி நீங்க டெய்லி வரும் போதும் மை பெர்பார்மன்ச பாருங்க. அசந்திருவீங்க “

“ என்னா பெர்பார்மன்சு?”

“ பாப்பா வரட்டும் . மை திறமையை அப்புறம் பாருங்க “

ஆனால் முதல் குழந்தை தமிழ் அருவி பிறந்த பின் அப்படி ஒன்றும் இவனிடம் உருகி வழிந்து விடவில்லை அவள். மாறாக 'பிள்ளை பிள்ளை ' என்று பிள்ளை பின்னாலயே அலைந்தாள்.

“ இப்போலாம் என்னை மதிக்கிறதே இல்லை “ என்று இவன் மூக்கை சிந்திய போது புத்திசாலித்தனமாக இரண்டாவது பிள்ளைக்கு அடி போட்டாள்.

இப்போது மீன் தொட்டிக்கு அழகிய மீன்கள் வாங்க தமிழ் அருவியை அழைத்து வந்திருந்ததால் இவ்வளவு நேரம் பிள்ளையைக் காணாமல் துடித்து ஓடி வந்து இருக்கிறாள் அவன் மனைவி.

காரில் இருந்து டிரைவர் சீட்டின் திறந்திருந்த கதவு வழியாக குதித்து இறங்கினாள் இரண்டரை வயது தமிழ் அருவி.

பிள்ளையைத் தூக்க ஜீவா ஓடப் பார்க்க “ நீ உணர்ச்சி வாசத்தை கட்டுப் படுத்து “ என பல்லைக் கடித்தான் கணவன்.

இப்போது அவள் அவன் நிறுவனத்தில் வேலை செய்வது இல்லை. எம். பி. ஏ நிர்வாக மேலாண்மை குறித்து படிக்கிறாள்.

வாத்தியார் மகள் ஆன அவளுக்கு தந்தையின் பணிக்கும் கணவனின் பணிக்கும் உள்ள வேறுபாடுகள் அதிசயமாக இருந்தாலும் அவளது தேர்வு கற்றுக் கொடுக்கும் பணியாகிப் போனது . ஆனால் நிர்வாகத்தை கற்றுக் கொடுப்பது என ஆசைப்பட்டால் அதற்கு அவள் நிறைய படிக்க வேண்டுமே?

இப்போது சிங்கம் படிப்பு களத்தில் இறங்கி உள்ளது. இனி வால் போல டிகிரிகளை வாங்கிச் சேர்ப்பதுதான் லட்சியம் அவளுக்கு. ஆசிரியராக அல்லது பேராசிரியராக இனி வருங்காலங்களில் அவளை காணலாம்.

அவ்வப்போது மெஜஸ்டிக் மற்றும் பவர் கியார்சில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பெண்கள் முன்னேற்றம் குறித்து கருத்தரங்கம் நடத்துவது உண்டு. அதில் ஜீவாவும் ஒரு விருந்தினராக கலந்து கொள்வதுடன் பொதுவாக பெண்கள் வெளியே சொல்லத் தயங்கும் சில பிரச்சனைகளை நேரில் கேட்டு அதற்குரிய ஆலோசனைகளை தேவைப் பட்டால் பெண் மருத்துவரின் ஒப்புதலின் பேரில் சொல்வதுண்டு.

அல்லது மருத்துவம் சார்ந்த பிரச்சனைகளை நேரில் மருத்துவரிடம் எடுத்துச் சென்று தீர்வு கண்டு கொடுப்பது உண்டு.

முக்கியமாக கழிவறை சுத்தம் இந்த இரு நிறுவனங்களிலும் கை கொள்ளப் படுகிறது.

அதிலும் சானிடரி நாப்கின் டிஸ்போஸ் பற்றி உரிய விழிப்புணர்வு பணிக்கு செல்லும் சில பெண்களுக்கு இல்லாததால் கழிவறை குழாய் அடைத்துக் கொள்கிறது என நிர்வாகம் கருதியது

இதற்காக எரியூட்டும் இயந்திரம் வாங்கப்பட்டது இரண்டு நிறுவனங்களிலும்.

ஆக சும்மா கம்யூட்டரைத் தட்டிக் கொண்டுவிருந்த ஜீவாவை _ பல பணிக்கு செல்லும் பெண்களின் வாழ்வில் நிம்மதியைத் தர வைத்தவன் மனோஜ்.

அவர்கள் அனைவரும் அவளை ‘ தாரா மேம் ‘ என்றே அழைப்பது வழக்கம்.
இவை எல்லாவற்றுக்கும் நடு நடுவே அவளைக் கட்டிக் கொண்டவன் தானும் இருப்பதை உறுதி படுத்தியதில் இப்போது இரண்டாவது குழந்தை வயிற்றில்.

அருவி ஓடி வந்து அன்னையின் கால்களைக் கட்டிக் கொண்டாள்.

ஜீவா குனிந்து பிள்ளையைத் தூக்க முயற்சிக்க மனோஜ் மகளைத் தூக்கிக் கொண்டான்.

பால் பற்களைக் காட்டி சிரித்தாள் குழந்தை.

‘ டிரிங் டிரிங் ‘ என செல்போன் இசைக்க எடுத்துப் பேசினான் மனோஜ்.

எதிர் முனை பேசியதை அமைதியாகக் கேட்டவன் “ தேங்க் யூ “ என்று முடித்து விட்டு போனை வைத்தான்.

என்ன எதென்று ஜீவா துருவவில்லை. சொல்ல வேண்டும் என்றால் சொல்லுவான் என்று எப்போதும் போல விட்டுவிட்டாள்.

“ நீயெல்லாம் என்னதான் பொண்டாட்டியோ? ஒவ்வொருதங்க இதுக்குள்ள ஃபுல் டீடேய்ல் கறந்து இருப்பாங்க. நானே சொல்றேன். “ என்றவன் தனக்கு கிடைத்த இங்கிரிமென்ட் பற்றி சொல்ல

“ அது உங்க குடும்பம் பெரிசாகுதுன்னு போட்டு இருப்பாங்க. நீங்க அலட்டிக்காதீங்க “ என குறும்பாக சொல்லி சிரித்தாள்.

என்ன புரிந்ததோ அருவியும் அருவியாகசச் சிரித்தாள்.



அவன் குடும்பம் மகிழ்ந்து சிரிப்பதை விட அவனுக்கு வேறு என்ன வேண்டும்?

“ வெளிய நின்னு சிரிச்சது போதும். வாங்க வீட்டுக்குள்ள என்ற இவன் அம்மா அவர்களுக்கு அவர்கள் உள்ளே வந்ததும் சிலுவையிட்டு ஆசிர்வதித்தார்.

ஜீவாவின் அப்பா பணியில் இருந்து ஒய்வு பெற்று விட்டார். சௌந்திரம் சந்தோசமாக மகளையும் பேத்தியையும் கவனித்து கொள்கிறார்.


தான் எடுத்த அதிரடி முடிவில் மகள் ஆனந்தமாக இருப்பதில் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு.

இந்தா இப்போது மூன்று குட்டிகளுக்கு தாய். அவை ஜெகன் செட்டில் வளருகின்றன. தாயிடம் இருந்து குட்டிகளைப் பிரிக்கக் கூடாது என்று அவன் அந்த குட்டிகளையும் சேர்த்தே வளர்த்து வருகிறான்.
ஜெகன் தன்னுடைய மகள் ஆரோக்கிய மேரி மற்றும் மனைவி ஜமுனாவுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறான்.

மெக்கானிக் செட் இப்போது விரிவு படுத்தி இருக்கிறான். கூடுதலாக வங்கியில் லோன் வாங்கி வாட்டர் வாஷ் போட்டு இருக்கிறான்.



கையில் பிடிக்க முடியாத அளவு பிஸியாக இருந்தாலும் வீட்டுக்குப் போனதும் அவனைச் சுற்றி கொள்ளும் மனைவியும் மகளும் அவனது வாழ்க்கை ஆகி இருந்தார்கள்.



ஜெஸி!

ஒவ்வொரு கல்லறைத் திருநாளுக்கும் மனோஜ் குடும்பமும் ஜெகன் குடும்பமும் அவள் கல்லறையில் உரிய சடங்குகள் செய்து பிரார்த்தித்து விட்டு வருவார்கள்.

அவள் எப்படிப்பட்டவளக இருந்த போதிலும் தங்கள் வாழ்க்கை மலர அவளும் ஒரு காரணம்தான் என்று நினைத்தார்கள் அனைவரும்.

“ இந்தா! இந்த ஸ்கூட்டிக்கு பஞ்சர் போடணும். “

தன்னை அலட்சியமாக அழைத்த அந்த இளம் பெண்ணை நிதானமாக பார்த்தான் அந்தோணி!

ஜெகன் செட்டில் இப்போது எந்த நிமிடமும் தவிர்க்க முடியாதவன் அவன்!

‘ இந்தா ‘ ஓடி வந்து அந்தோனி யின் காலைச் சுற்றி விட்டு எதிர் நின்ற பெண்ணை முறைத்தது.

“இவங்க பேரு தான் இந்தா.” என்றான் அமைதியாக.

‘ பேரைப் பாரு பேரை. பேர் வைக்கவே தெரியலை. இவன் எங்கே இதுக்கு சோறு வச்சிருப்பான்?'

அந்தப் பெண் முனுமுனுத்த்துக் கொண்டே நிற்க

“ எதே? எனக்கு பேர் வைக்கத் தெரியலையா? இந்தாவுக்கு மூனு குட்டி. அதுகெல்லாம் நான்தான் பேர் வச்சேன். என்ன பேருனு கேக்ரியா?”

“ கேக்கலைனா சொல்லாம விடப் போறியா?”

“ அந்த பயம். கிவி. புவி. லிவி “ என்று அந்தோணி சொல்ல

“ என்னது?” அதிர்ந்தாள் லிவிந்தா!

இந்தக் காரியம் இறைவனால் விளைந்தது!




நீ நீர்ப் பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத ஜீவ நதியாகவும் இருப்பாய் _ ஏசையா 58:13


நன்றி!
 




Last edited by a moderator:

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,721
Location
Germany
வாவ் செம எண்டிங் சகிம்மா 🥰🥰🥰🥰

இந்தாக்கு கூட கருணை காட்டிட்டீங்க. அங்க நிக்கிறீங்க நீங்க 🥱🥱🥱🥱
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,121
Reaction score
4,616
Location
Coimbatore
வாவ் செம எண்டிங் சகிம்மா 🥰🥰🥰🥰

இந்தாக்கு கூட கருணை காட்டிட்டீங்க. அங்க நிக்கிறீங்க நீங்க 🥱🥱🥱🥱
ரொம்ப தேங்க்ஸ் மா ❤❤❤
விடாம கதையை படிச்சு ஒவ்வொரு epi க்கும் கமென்ட்ஸ் போட்டு இன்னிக்கு நாள் இந்த கதைக்காக செலவு செய்ததுக்கு என் மனம் நிறைந்த நன்றி மா💕💕💕💕💕
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,721
Location
Germany
ரொம்ப தேங்க்ஸ் மா ❤❤❤
விடாம கதையை படிச்சு ஒவ்வொரு epi க்கும் கமென்ட்ஸ் போட்டு இன்னிக்கு நாள் இந்த கதைக்காக செலவு செய்ததுக்கு என் மனம் நிறைந்த நன்றி மா💕💕💕💕💕
கதை ரொம்ப நல்லா இருந்துது சகிம்மா 🥰🥰🥰🥰வாழ்த்துக்கள் 👏👏👏👏
போட்டி முடிந்ததும் தங்களின் முந்தைய மற்றும் அடுத்த கதைகளில் சந்திக்கின்றேன் 😍😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top