• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் _ 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
19
தன் வீட்டின் அருகே காரை நிறுத்தினான் மனோஜ்.

காரில் அவனுடன் ஜீவா குடும்பம் இருந்தது.

ஜீவா வீட்டில் சம்மதம் தெரிந்ததும் அவர்களை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்து விட்டான்.

போனிலேயே தன் அன்னைக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லி விட்டான்.


இங்கே ஜீவா குடும்பத்தினர் 'இதையெல்லாம் ஃபோனில் சொல்வதா? 'எனத் தயங்க _

“ எல்லாம் ஆல்ரெடி சொல்லிட்டேன். அம்மாவும் வந்து இருப்பாங்க. பட் உடம்பு முடியிறதில்ல. தவிர அவங்களுக்கு சில சென்டிமென்ட்ஸ். எனக்கும் உறுதியாக தெரியாம அவங்களைக் கூட்டிட்டு வர தயக்கமா இருந்துச்சு.

ஜீவா சம்மதத்தை சொல்லிட்டா சார்கிட்டயும் அத்தைகிட்டயும் பெர்மிஷன் வாங்கிட்டு எல்லோரும் போய் அவங்களைப் பாக்க வருவோம்ன்னு சொல்லி வச்சிருந்தேன்.

சோ அம்மாவுக்கு இது அதிர்ச்சி இல்ல. அவங்க தப்பா நினைக்கவும் மாட்டாங்க “

பாலு சாருக்கு இதில் முழு சம்மதம். அவர் பழகிப் பார்த்த பையன். நல்ல வேலை. எல்லாவற்றையும் விட அவரது சொந்த வீட்டுக்கு அருகில் தன் மகளுக்கு வரன் கிடைத்தது அத்தனை நிம்மதி அவருக்கு.

ஜீவா ஏற்கனவே ஒரு டிகிரி முடித்து இருந்தாள். அடுத்து முதுகலைப் பயிலும் போதுதான் இந்த வரன் தகைந்து இருக்கிறது.

மகள் குறைந்தது ஒரு மாஸ்டர் டிகிரியாவது முடிக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

இப்படியே அவளிடம் சொல்லி சொல்லி அவள் டிகிரி என்று குறிப்பிடுவது அவள் மாஸ்டர் டிகிரியைத்தான்.

இப்போதுதான் முதுகலை சேர்ந்து இருந்தாள். ஜெஸியும் தான்.

இந்த படிப்பு முடித்து கடைசி செமஸ்டர் கடைசி பரிட்சை அன்று கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அவள் சொல்லி இருக்க ‘ கொஞ்சம் முன்ன சொல்லி இருக்கலாமே? ‘ என மனோஜ் முட்டிக் கொண்டு இருந்தான்.
என்ன செய்ய? காலமும் நேரமும் அப்படிப் பறக்கிறது.


ஆனால் இருபத்தொரு வயதில் மணமுடித்துக் கொடுத்து விட வேண்டும் என்பது ஜீவாவின் அம்மாவினுடைய விருப்பம்.

தகுதியான மணமகன் ஒருவனிடம் மகளை ஒப்படைத்து விட்டால் போதும். அவர்களுக்கு என்ன பிரச்சனை? வாத்தியாருக்கு வரும் பென்சனை வைத்துக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்பது அவர் நினைத்தது.
அவளுக்கு வயதாகவில்லை என்று சொல்லிக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் இவர்கள் வயது ஏறிக் கொண்டு அல்லவா இருக்கிறது?

பாலு சார் பணியில் இருக்கும் போதே மகளுக்குக் கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என்பது சௌந்திரம் அடிக்கடி சொல்லி வருவது.

அவ்வப்போது தந்தையும் மகளும் செட் சேர்ந்து கொண்டு இவர் விருப்பத்தைக் கிண்டல் செய்வது அவர்கள் பொழுது போக்காக இருக்கும்.

இப்போது ‘ மாட்டினீர்களா?’ என்பதாக முகம் முழுக்க புன்னகையும் பரபரப்புமாக இருந்தார் சௌந்திரம்

கார் நின்றதும் பெற்றோர் வேகமாக இறங்க _ ஜீவா தயங்கினாள்.

“ உன் வீட்டுக்கு வர என்ன தயக்கம் உனக்கு தரு? கல்யாணம் முடிஞ்சு நமக்கு ஆரத்தி எடுத்ததும் நான் நம்ம வீட்டுக்குள்ள உன்னைத் தூக்கிட்டுப் போவேனாம். இப்போ நீ நீயா நடந்து வருவியாம்” மனோஜ் இவள் காதருகே கிசுகிசுத்தான்.


‘ நல்லா வச்சிப் போச்சு இவனுக்கு ‘ ஜீவாவால் நினைக்கத்தான் முடிந்தது.

அதற்குள் அவன் அம்மா வாசலுக்கு வந்துவிட்டார்.

“ பேபிமா! என்ன? சம்பந்தகாரங்களையும் மருமகளையும் பாக்கனும்னு ஜெட் வேகத்துல ஓடி வந்தீங்க போல”

மனோஜ் கேலி பேச இவர்களுக்கு மெல்லிய அதிர்ச்சிதான்.

சௌந்திரம் வாய் அடங்காமல் கேட்டுவிட்டார்.

“ ஏன் மாப்பிள்ளை? மதனியை பேர் சொல்லித்தான் கூப்பிடுவீங்களா?”
“ உள்ள வாங்க சம்பந்தியம்மா. அண்ணா நீங்களும் வாங்க. ஏன் வெளிய நின்னுக்கிட்டு பேசிக்கிட்டு? “ என்று சந்தோசமாக அழைத்தவர் “வாம்மா” என வாஞ்சையுடன் ஜீவாவை அழைத்தார்.

அவர் வரவேற்ப்பிலேயே அவர் சம்மதம் தெரிந்து விட மகிழ்வுடன் உள்ளே போய் இவள் முதுகலைப் படிப்பு முடிந்ததும் திருமணம் என்று முடிவு செய்தார்கள்.

“ மனோஜ்! மருமகளுக்கு வீட்டை சுத்திக் காட்டு. நாங்க கல்யானம் பத்திப் பேசனும் “ மகனுக்கு கட்டளை இட்டார் அவன் அம்மா.

“ கல்யாணம் பத்தி பேச என்ன இருக்கு? ஜீவா படிப்பை முடிச்சதும் கல்யாணம். வேற? வரதட்சணை ஏதாவது கேக்கப் போறீங்களா? சீனாகிடும் பார்த்துக்கோங்க. சொந்த பையன் கல்யாணத்துக்கு ஒரு துரும்பு கிள்ளி போட்டுருப்பீங்களா? நானே எல்லாம் செய்தா அதையும் கிண்டி விடுவீங்களா?” அவன் லொடலொடக்க பெரியவர்கள் சிரித்து விட்டார்கள்.

“ போடா போக்கிரி. கல்யாணம்ன்னா பேச செய்ய எத்தனை விசயம் இருக்கு? அதை எல்லாம் பேச வேண்டாமா? போய் உணக்குப் பிடிச்ச வேலையைச் செய் “ அவன் அம்மா காதைத் திருகவும் காலை உதைத்துக் கொண்டு இவளையும் தள்ளிக் கொண்டு வீடு சுற்ற கிளம்பினான் மனோஜ்.

அங்கேதான் ஜீவா அவன் அப்பாவின் புகைப் படத்ததைப் பார்த்தாள்.

விழி விரிய நின்றாள். அதானா? அவள் மனம் குறுகுறுப்பும் நிம்மதியும் அடைந்தது.



இவர்கள் வீட்டுக்குத் திரும்ப விட மனோஜ் வந்துவிட்டான்.

“ எங்க? உன் பிரென்ட காணோம்? “ _ மனோஜ் ஜெஸி வீட்டு மாடியைப் பார்த்தான்.

‘ ஒருவேளை மைக்கிரென் தலைவலி வந்திருக்குமா? இல்லை என்றால் இத்தனை சத்தத்துக்கு மாடிக்கு அல்லது வீட்டுக்கு வந்திருப்பாள்.’ ஜீவாவின் மன் மறுபடி இடற ஆரம்பித்தது.

ஜெஸியிடம் ஒன்றும் கேட்காமல் இவன் சொன்னதை நம்பி திருமணம் வரை வந்து விட்டதை நினைத்து குற்ற உணர்வாக இருந்தது.

இதற்குத்தானே அவள் ஒதுங்கி ஒதுங்கிப் போனது?

இந்த ஜெஸியும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறாள். இவன் இல்லை என்கிறான். ஆனால் ஜெஸி மனதில் இவன் இருப்பது உண்மைதானே? அது தெரிந்தும் அவனுடன் திருமணத்திற்கு சம்மதித்தது எப்படிப்பட்ட தவறு?
ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் தனக்குப் பக்கவாட்டில் இருக்கையில் சாய்ந்து முகத்தை மூடிக் கொண்ட ஜீவாவை கோபமாகப் பார்த்தான் மனோஜ்.

‘ ஆரம்பிச்சுட்டா! நீ வாய அடக்க மாட்டியா மனோஜீவா?’ தன்னைத் தானே அவன் திட்டிக் கொண்டே காரை அவர்கள் வீட்டின் வாசலில் நிறுத்தினான்.

“ உள்ள வாங்க மாப்பிள்ளை “ சௌந்திரம் ஆரம்பித்தார்.

“ சுத்தம். இப்படி மாத்தி மாத்தி நம்ம வீடுகளுக்கு போய்கிட்டு இருந்தா அவ்வளவுதான். நீங்க உள்ள போங்க அத்தை. ஜீவாவுக்கு இப்போதான் உடம்பு கொஞ்சம் பெட்டெரா இருக்கு. நான் இப்படியே கிளம்புறேன். கொஞ்சம் வேலை இருக்கு “

சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான் மனோஜ்.

சந்தோசத்தில் வீட்டுக்கு வந்ததும் முதலில் பூஜை அறைக்கு ஓடி விட்டிருந்தார் சௌந்திரம்.

உள்ளே வந்த ஜீவா தாயைக் காணாமல்“ அப்பா நான் கொஞ்சம் தூங்கறேன். அம்மா வந்தா கொஞ்சம் என் ரூமுக்கு வர சொல்லுங்கப்பா “ என பாலசுப்பிரமணியத்திடம் சொல்ல அவர் மகளைக் கூர்ந்து பார்த்தார்.

“ என்னாச்சு? அப்பாவை வாங்க போங்கன்னு சொல்றமா? உடம்பு சரியில்லையா? சாப்பிட்டியாமா?” அவர் பதறிப் போனார்.

பிள்ளைகளின் குரலை வைத்தே மனதை அறிபவர்கள் பெற்றோர் அல்லவா?

அவள் பெற்றோர் ' மனது சரியில்லையா?’ என்று பொதுவாகக் கேட்க மாட்டார்கள். அப்படி மனது சரியில்லாமல் போகக் கூடாது என்ற அவர்களின் விருப்பம் அது.

“ அதுலாம் ஒன்னும் இல்லப்பா. சும்மா டயர்டா இருக்கு. அவ்ளோதான்.”

சொல்லிக் கொண்டே உள்ளே போய் விட்டாள் ஜீவா.

தனது அறையின் கதவைச் சாத்திய ஜீவா கதவில் சாய்ந்து கொண்டாள்.
'ஜெஸி ஏன் இன்னும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை? ‘ யோசனையுடன் அவளுக்கு ஃபோன் செய்தாள் ஜீவா.

“ எங்க இருக்க ஜெஸி?”

“ ஒன்னும் இல்லை. இங்க சொந்தக்காரங்க வீட்ல ஒரு பங்ஷன். உனக்கு ஒரு அதிசயம் சொல்லவா?அப்பா என்னை காலேஜ் வந்து கூட்டிட்டு வந்துட்டாரு. என்னை இங்க விட்டுட்டு அவர் போய்ருவார். ரெண்டு நாள் கழிச்சு தான் வருவேன். உனக்கு ஃபோன் பண்ண நினைச்சேன். பட் டைம் இல்ல. நீ ஹெல்த்த பார்த்துக்கோ பேபி. இதோ வந்துட்டேன் ஆன்டி” அதற்க்குள் யாரோ அழைத்துவிட இவள் மேற்கொண்டு பேச ஆரம்பிப்பதற்கு முன்பே போனை வைத்து விட்டாள் ஜெஸி.

மீண்டும் முயற்சி செய்வதற்குள் அவள் அம்மா வீட்டுக்குள் வந்து விட்டார்.

சௌந்திரம் பூஜை அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக
“ புள்ள கூப்பிட்டா. போய் என்னான்னு பாரு” என்று அவரை இவள் அறைக்கு அனுப்பி வைத்து இருந்தார் பாலு சார்.

அறைக்குள் வந்ததும் முதல் வேலையாக மகளுக்கு திருஷ்டி கழித்தார்.

தாயின் மகிழ்வைப் பார்த்துவிட்டு தன் மனதை அரிக்கும் விடயங்களை கேட்கத் தயக்கமாக இருந்தது.
அவள் முகத்தைப் பார்த்து அன்னை புரிந்து கொண்டார்.

“ என்ன தங்கம்?” மகள் மனதில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்று அத்தை மெனக்கெடல் அவர் குரலில் தெரிந்தது.

“ அம்மா. நான் ஒன்னு சொன்னா நீங்க என்னைத் திட்டக் கூடாது.” நிபந்தனையுடன் ஆரம்பித்தாள் ஜீவா.

அதிலேயே விசயம் கொஞ்சம் பெரிது என்பது புரிந்தது அவருக்கு.

ஆனாலும் இவளை நம்ப முடியாது.

சின்ன வயதில் நர்சரியை விட்டு வெளியே வந்து விட்டாள் ஒரு முறை. வெளியே வந்ததோடு நில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே சிறிது தூரம் கடந்தும் விட்டாள்.



அப்போது அங்கே பெட்டிக் கடையில் நின்று கொண்டு இருந்த ஒருவர்தான் அவளை அவள் சீருடை வைத்து அடையாளம் கண்டு அவளுடைய பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தார்.

வரும் வழியில் அவர் சில மிட்டாய்களை வாங்கிக் கொடுத்து இருக்க பள்ளி வேனில் ஏறாமல் ‘ அந்த மாமா கூடத்தான் போவேன் ‘ என அடம் பிடித்தாள் அந்த கூமுட்டை.

அப்போது இந்த அளவு தொலைத் தொடர்பு இல்லை. விசயம் பாலு சாரின் பள்ளி தொலைபேசிக்கு சொல்லப் பட்டு இருக்க அவர் அப்போது பள்ளி சார்பாக ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள போய் இருந்தார்.

அவரது பள்ளியில் இருந்து அங்கே தொடர்பு கொண்டு பேசி அவர் அங்கே இருந்து மனைவிக்கு பேசி இங்கே வருவதற்குள் இத்தனை நடந்து இருந்தது.

அப்படிப்பட்ட ஆகாவழி தான் இந்த ஜீவாக்குட்டி. நினைக்கும் பொது சிரிப்புதான் வந்தது அன்னைக்கு.

அதன் பின் இவர் போகவும் தாயிடம் தாவிய குழந்தை அந்த மாமாவுக்கு டாட்டா காட்டியது.

அந்த நல்ல மனிதர் சிரித்துக் கொண்டே போய் விட்டார்.

ஜீவா அவரையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் “ அப்படிப் போவியா?” என்று கேட்டு அதட்டி வைக்க மருண்டு விழித்த ஜீவா செய்தது தவறு என்பது புரியாவிட்டாலும் தாய்க்குப் பிடிக்கவில்லை என்பது மட்டும் புரிய _ “ போக மாட்டேன் மா” என்றவாறு சௌந்திரத்தின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

பள்ளியிலும் அதன் பிறகு கூடுதல் ஜாக்கிரதையாக இருந்தார்கள்.

வாத்தியார் மகள் என்பதால் இவள் கொஞ்சம் பொறுப்புடன் இருப்பாள் என நினைத்ததாக பள்ளி நிர்வாகம் சொன்னபோது இப்படிப் பட்ட பள்ளியில் சேர்த்ததற்காக அந்த வாத்தியார் மீதுதான் கோபம் வந்தது.



போராடி மனைவியைச் சமாளித்து அந்த உசந்த பள்ளியை மாற்றி வீட்டுக்கு அருகில் உள்ள பால்வாடியில் மகளைச் சேர்த்தார் பாலசுப்ரமணியம்.

அதன் பின் நிஜமாகவே சௌந்திறதிர்க்கு நிம்மதியாக இருந்தது.

சில வருடங்கள் அங்கே _ இதே வீட்டில் இருந்தார்கள். வாத்தியாருக்கு பணி மாறுதல் ஏற்பட்டு வேறு சில இடங்களைச் சுற்றி வந்து இப்போது சொந்த ஊருக்கு வந்து விட்டார்கள்.

இது சொந்த ஊராக இருந்தாலும் ஜீவாவுக்கு விபரம் தெரிந்து இங்கே வந்து ஐந்து ஆண்டுகள் இருக்கும்.

ஜெஸி பரம்பரையாக இங்கே இருப்பவள்.

சின்ன வயதில் எப்போதாவது பார்க்கும் போது ஏகப்பட்ட பந்தோபஸ்துகளுடன் பள்ளிக்கு செல்லும் அந்தப் பிள்ளையை ஆச்சரியமாக பார்த்து இருப்பார்கள் இவர்கள் வீட்டினர்.



மீண்டும் இங்கு வரவும் ஒத்த வயதில் இருந்த ஜெஸியும் ஜீவாவும் நட்பாகினர்.

இப்போது மகளின் தயக்கத்தின் இடைவெளியில் இத்தனையும் யோசித்து முடித்த சௌந்திரம்

“ என்னாச்சு? என்னாச்சுன்னு எத்தனை தடவை கேட்டா சொல்ல முடியும் பாப்பா?”

நக்கலாக அவர் கேட்க _

“ ம்மா “ என்று சிணுங்கினாள் மகள்.

இப்படியே இழுத்தால் நாம் யோசிப்பதே பயனற்று போய் விடும் என்பதை ஒருவழியாக உணர்ந்தாள் ஜீவா.

“ அம்மா நேரிடையாக சொல்றேன். எனக்கு ஜெஸி மனோஜை லவ் பண்ணுகிறான்னு தெரியும்.” எனவும் அம்மா அதிர்ந்தார்.

“ என்னடி? இதை இப்போ சொல்ற? “ பதறியவர் பின் நிதானித்தார்.

“ அப்புறம்?”

“ இதை மனோஜ் கிட்ட இன்னிக்கு கேட்டுட்டேன். அவர் இல்லைன்னு சொல்றார்.”

“ அவர் சொன்னதும் நம்பிட்ட்?”

“ அவர் ஜெஸி என்னை லவ் பண்றா. சரி நான் அவளை லவ் பண்றேன்னு சொன்னாளா? அப்படின்னு கேட்டார். அப்படி அவ சொல்லலை. “ எனவும் சௌந்திரம் கட்டிலில் கவலையாக உட்கார்ந்து விட்டார்.

இன்றுதான் திருமணம் பேசி முடித்து இருக்கிறார்கள். மனோஜ் வீட்டில் இருந்து இப்போதுதான் வந்து இறங்கினார்கள். அதற்குள் சோதனையா?

“ எப்படி இருந்தா என்ன? ஜெஸி உன் பிரென்ட். இப்படி ஒரு சிக்கலுக்கு நீ மொதால்லயே என்கிட்ட ஏன் சொல்லலை?”

“ சொல்ல பயமா இருந்துது. அவர் கல்யாணத்துக்கு கேட்டப்போ எனக்கு வேற ஒன்னும் யோசிக்க முடியலை. அப்படியும் ஜெஸி பத்தி கேட்டுட்டேன். அவர் அது வேற. அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்டார்”

‘ அட அரை வேக்காடு!’ என்பதாக சௌந்திரம் பார்க்க ஜீவா நெளிந்தாள்.

“ அப்புறம் அவளை லவ் பண்ணல. ஆனா வச்சிருக்கேன் அப்படின்னு அவர் சொன்னா மட்டும் என்ன செய்வ?” என்று சௌந்திரம் கேட்க ஜீவா அதிர்ந்து போனாள்.

“ உன்னை பெத்த வயித்துல பிரண்டயத்தான் வச்சுக் கட்டணும்.” தாயார் அலுக்க ஜீவா உறந்தாள்.

இவள் அசையாமல் இருப்பதைப் பார்த்து எரிச்சல் ஆனார் சௌந்திரம்.

பின் முகம் கனிய _
“ பாப்பா. பதறாதே. மாப்பிள்ளை இங்க என்கிட்ட பேசிட்டுதான் உன்னை வந்து பார்த்தார். அதிலேயே அவர் மதிப்பு தெரியலையா?

அப்பாகிட்ட என்னை சொல்ல சொல்லி இருந்தார். அதே நேரம் அப்பாகிட்ட மாப்பிள்ளையும் உன்னைக் கட்டுகிறது பத்தி பேசி சம்மதம் வாங்கி இருக்கார். இப்போ அவர் அம்மாகிட்ட பேசியாச்சு. எல்லா வகையிலும் எங்களுக்கு திருப்தி.

ஜெஸி சின்ன பொண்ணு. உன்கிட்ட ஏதோ விளையாடி இருப்பா. அப்படி இல்லைனாலும் அதுக்கு நாம என்ன செய்ய முடியும். அவங்க அப்பா பேச்சை அவ மீற மாட்டா. அந்தோணி அண்ணன் அவளுக்கு வீட்டோட மாப்பிளை பாக்கிறதா ஒரு தடவை சர்ச்ல பேசிக்கிட்டாங்க.

ஜெஸி? நீ சொல்றதை பார்த்தா அவ காத்து. அவளை கைக்குள்ள பிடிக்க முடியாது.

இதை எல்லாம் போட்டு குழப்பாம நிம்மதியா ரெஸ்ட் எடுடா”

“ அப்போ கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சது அவளுக்கு செய்ற துரோகம் இல்லையா?”


மகள் இப்படிப் பேசுவது ஜீவாவின் அம்மாவுக்கு பிடிக்கவில்லைதான். ஆனால் இந்த ஒருமுறை இதைப் பேசி விடுவது நல்லது எனக் கொண்டார்.


“ அவரைக் காதலிக்கிறதா ஜெஸிதானே சொன்னா?அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா நீ பார்த்தியா?”

ஆமாம் என்று தலையாட்ட வந்தவள் _ அவள் பார்த்த வரை _ இவளுக்கு இந்த காய்ச்சல் காணும் வரை _ இவர்கள் மூவரும்தான் ஒரு இடத்தில் இது வரை இருந்து இருக்கிறார்கள் என்பதை திடுக்கிடலோடு உணர்ந்தாள்.
“ ஆனா உன்கிட்ட நெருக்கமாத்தான் பேசி இருக்கார் இல்லையா?” தாயார் கேட்

அவன் ‘ ஐ லவ் யூ’ சொல்ல சொன்னது _அப்புறம் மருத்துவமனையில் அவள் அகம் அவன் உளம் உணர்ந்தது _ எல்லாவற்றுக்கும் மேல் இன்று அவன் பேசியது _ எல்லாம் அவள் மீதான அவன் நேசத்தை
ஆணித்தரமாக பறைசாற்ற இன்னும் ஒரு வார்த்தை அவள் நிம்மதி அடையத் தேவையாக இருந்தது.

அதை ஜெஸி சொல்ல வேண்டும்.

மனோஜை அவள் காதலிப்பதாக சொன்னது குறித்த விளக்கம்.

அதை அவள் சொல்வாளா?

தெளிந்து வரும் மகளின் முகத்தைத் திருப்பி கன்னத்தை வழித்தார் அன்னை.

அந்தத் தொடுகையில் தன் மனம் திறந்தாள் ஜீவா.

‘ அம்மா”

“ சொல்லுமா”

“ நான் ஏன் மனோஜ் சொன்னதுக்கு தலை ஆட்டுனேன் தெரியுமா?”

“ தெரியுமே!”

சொன்ன அன்னையை அதிர்ச்சியாக பார்த்தாள் ஜீவா.

“ சின்ன வயசுல ஸ்கூல்ல இருந்து மிஸ்ஸானா உன்னை கூட்டிட்டு வந்தவரோட பையன் அவன்னு தான் அவரை உனக்கு பிடிச்சது “

“ எப்படிக் கண்டு பிடிசீங்க?”

“ அந்த அண்ணாவோட முகத்தை எப்படி என்னால மறக்க முடியும்? என் பொக்கிஷத்தை மீட்டுக் குடுத்தவர் அவர். அந்த ஜாடை மாப்பிள்ளைகிட்ட இருந்தாலும் உறுதியாக தெரியலை. எங்கயோ பார்த்த மாதிரி இருந்தது. அவ்வளவுதான். இன்னிக்கு அவர் வீட்டுல அவங்க அப்பா ஃபோட்டோ பார்த்ததும் தெளிவாயிருச்சு.


ஆனா உனக்கு இன்னும் அந்த முகம் நினைவு இருக்கறது ஆச்சர்யம் தான் “

“ இல்லை. எனக்கும் நினைவுஇல்லை. பட் அந்த கடைசி சிரிப்பு நினைவு இருக்கு. அதே மனோஜோட சிரிப்பு.

பல நாள் யோசிச்சு இருக்கேன். ஏன் அவரை நினைக்கிறேன் அப்படின்அறிமுகம்.

இதனால் எல்லாம் அவரைக் கட்டிக்க நினைக்கலை. இது ஒரு முன் அறிமுகம் அவ்ளோதான்.”
தெளிவாகப் பேசிய மகளை வியந்து பார்த்துவிட்டு ‘ ஏதோ இன மட்டும் அறிவு இருந்தாள் சரி ‘ என்பதாகத் தலை அசைதுச் சென்றார் சௌந்திரம்.

அடுத்து வந்த இரண்டு நாட்கள் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது.

அதில் தரு _ தருக்குட்டி ஆகி இருந்தது.

அனைவரின் மனக் கோட்டையை மணல் கோட்டையாக சிதைக்க மறுநாள் வந்தாள் ஜெஸி.


























































.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
எப்பவுமே எங்கள டென்ஷன் பண்ணி தான் முடிப்பிங்களா ரைட்டர் ஜீ🤧🤧🤧

இந்த உண்மையாவே கூமுட்டை தான், ப்ரெண்ட் பத்தி நினைக்க வேண்டியது தான், அதுக்கு இப்படியா....அவளும் இவ மாதிரி இருந்து இருக்கணும் இல்ல.....

காதல்னு வரும்போதே ஜீவா வா விளக்கி வெச்சவா ஜெஸி, இப்ப கல்யாணத்திற்கு போய் இவளோ யோசிக்கலாம ஜீவா அவளா பத்தி...

ஆக இன்னும் கல்யாணம் நடக்கல, காதலும் சேரலா, என்ன செஞ்சி வெச்சி இருக்காளே தெரியல இந்த ஜீவா🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
எப்பவுமே எங்கள டென்ஷன் பண்ணி தான் முடிப்பிங்களா ரைட்டர் ஜீ🤧🤧🤧

இந்த உண்மையாவே கூமுட்டை தான், ப்ரெண்ட் பத்தி நினைக்க வேண்டியது தான், அதுக்கு இப்படியா....அவளும் இவ மாதிரி இருந்து இருக்கணும் இல்ல.....

காதல்னு வரும்போதே ஜீவா வா விளக்கி வெச்சவா ஜெஸி, இப்ப கல்யாணத்திற்கு போய் இவளோ யோசிக்கலாம ஜீவா அவளா பத்தி...

ஆக இன்னும் கல்யாணம் நடக்கல, காதலும் சேரலா, என்ன செஞ்சி வெச்சி இருக்காளே தெரியல இந்த ஜீவா🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகி மா 💝💝💝💝
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
ஓ ஜீவன் அப்பாக்காக தானா😲😲😲

உண்மையா இப்படி அம்மாகிட்ட எல்லா பொண்ணுங்களும் மனம் விட்டு பேசினா, எந்த பிரச்சனையும் வராதில்லை😌😌😌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top