• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் _ 29 ( Pre final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,117
Reaction score
4,608
Location
Coimbatore
இது எனக்கு ரொம்ப பிடித்த திருமண வாழ்த்து பாடல் ஃப்ரெண்ட்ஸ்😍
29


“ ஜமுனாவைப் பார்க்கணும் ?” என்ற மனோ ஜின் கேள்விக்கு ஜெகன் முகம் வாடினான்.

“ அப்போ என்னை நம்பலியா?”

“ ச்சே. ச்சே. அப்படி இல்ல. உங்களை ரொம்ப நம்பறேன்.
ஆனா பாருங்க உங்க ஜமுனா பொக்கே மட்டும் செய்வாங்களா? கூடவே கார்டும் வச்சி குடுப்பாங்களா? இதை கேக்க வேண்டி இருக்கு. அதான் அவங்களைப் பார்த்து கேட்டுட்டு வரலாம் ன்னு ஜீவா ஆசைப்படறா. உன் அண்ணன் கிட்ட சொல்லு ஜீவா” என இவளையும் உள்ளே இழுத்தான்.

புரிந்தும் புரியாமலும் அறிந்தும் அறியாமலும் அனைத்து பக்கங்களிலும் தலை ஆட்டினாள் அவன் மனைவி.

அதற்குள் ஆர்டர் செய்த உணவு வகைகள் வந்து விட பேசிக் கொண்டே உண்ணலாயினர் மூவரும்.

பேச்சில் ஜமுனாவை அதிகம் கொண்டு வந்த ஜெகனை சந்தோஷமாகப் பார்த்திருந் தான் மனோஜ்.

“ நான் இந்த மெக்கானிக் செட் போடும் முன்னேவே அந்தப் பொண்ணு அங்கே கடை வச்சு இருக்கு. ரொம்ப கறார் ஆளாம். ஆம்பிளைகளை மதிக்கவே செய்யாதாம். என்னவோ என் கிட்ட நல்லாதான் பேசுது “ என்றபோது

'ஆம் ஐ லுக் லைக் பொம்பளை? ' என்ற வசனம் சட்டென தோன்றி விட மனோஜ் தன் புன்னகையை வாயில் உணவினை வைப்பதன் மூலம் மறைத்தான்.

ஜெகன் தொடர்ந்தான்.

“ என்னவோ என்னைப் பார்த்தா தப்பா தோனுறதில்லை ன்னு சொல்லும் “

‘ என்னது? தப்பா தோணறதில்லையா? அவ தப்பாவே தான் உன்னைப் பத்தி நினைக்கிறாயா '

சாப்பிட்டு முடித்ததும் மனோஜ் பில்லை கட்ட வர அவனைத் தடுத்து விட்டு ஜெகன் பில்லை கட்டினான்.

மனோஜ் அதைத் தடுக்கவில்லை. ஜெகன் இன்னும் தங்களுடன் ஒன்ற வேண்டும் என்றால் இதை அவன் ஏற்றுக் கொள்வது தவறில்லை எந்த தோன்றியது .

அங்கே ஜெகன் கடைக்குப் போகவும் ஒரு இருபது வயது பையன் எதிர் பட்டான்.

“ இவர் பேரு அந்தோணி. இங்க ஹெல்பெரா இருக்கார். இங்க வந்ததுக்கு அப்புறம் தான் பேர் தெரிஞ்சுது “ என்றான் ஜெகன்.

‘ ஆண்டவா! என்னே உன் லீலை? ‘ மற்ற இருவரும் மனதுக்குள் அதிசயித்து நின்றனர்.

அந்தோணி வந்தவர்களை பார்த்து புன்னகைத்து விட்டு ஸ்பானர் கொண்டு ஏதோ ஒரு வண்டி இணைப்பை டைட் செய்ய ஆரம்பித்தான்.

“ சாப்ட்டிங்களா தம்பி?” என ஜெகன் அவனைப் பார்த்து கேட்டதும் மலர்ந்து போனவன் “ ஆச்சுன்னா. நீங்க சாப்டிங்களா அண்ணா?” என எதிர் கேள்வி கேட்டான்.



சிரித்துக் கொண்டே தலை அசைத்த ஜெகன் இவர்களுக்கு புதிதாகத் தெரிந்தான். இப்போது அவன் முதலாளி அல்லவா? அதில் இவர்களுக்கு அத்தனை மகிழ்வு.

எங்கிருந்தோ ஒரு பூனை வந்து ஜெகன் காலை சுற்றியது.

“ இந்தா! தள்ளிப் போ !” ஜெகன் சொல்லவும் அது கொஞ்சம் தள்ளி நின்று இவனை முறைத்தது.

“ என்னது?' இந்தா' வா? எப்பா போப்பா மாதிரி இது என்ன பேரு?” ஜீவா வியந்தாள்.

“ அது சும்மா. ஏதோ ஒரு பூனை இங்க வந்து குட்டி போட்டுட்டு கொஞ்ச நாள் விட்டுட்டு போயிருச்சு. சரி இதுவும் நம்மளமாதிரி தானேனு சாப்பாடு போட்டேன். இங்கேயே தங்கிருச்சு. நமக்கு இதுக்கு பேர் வைக்க தெரியலை. அதான் இந்தா இந்தா னு கூப்பிட்டு அதே அது பேர் ஆயிருச்சு “ ஜெகன் வெள்ளந்தியாக சொல்ல ஜீவா ‘ ஒரு வேளை அது 'ஜெஸிந்தா 'ல வர்ற ‘ ந்தா ‘ வா இருக்குமோ? என கிறுக்குத்தனமாக யோசித்தாள்.

அந்த சின்ன இடத்தின் மூலை முடுக்கில் இருந்து எப்படியோ இரண்டு சுமாரான நாற்காலிகளை எடுத்து மனோஜ் மற்றும் ஜீவாவை அமர வைத்தான். தானும் ஒரு டப்பாவை கவிழ்த்து போட்டு அமர்ந்தான். தரையில் அமர்ந்து இருப்பான். இவர்களுடன் பேச வசதியாக அப்படி அமர்ந்தான்.

“ தம்பி! போய் அண்ணாவுக்கும் அண்ணிக்கும் டீ வாங்கிட்டு வாங்க”

“ சரீண்ணா” என்றவாறு அந்த அந்தோணி ஓடி விட்டான்.

“ ஜமுனா எங்க?” மனோஜ் வந்த விசயத்திற்கு வந்தான்.

“ எதிர் கடைதான். கடைக்கு பொருள் எதுவும் வாங்க எங்கயாச்சும் பக்கத்துல போயிருக்கும். இப்போ வந்திரும் “ ஜெகனது பதிலில் அத்தனை ஆச்சர்யம் இவர்கள் இருவருக்கும்.

‘ இத்தனை தூரம் அவளைத் தெரிந்து வைத்து இருக்கிறான்?’

சற்று நேரத்தில் ஜமுனா வந்தாள். எதிர் பாராத விதமாக காலியாகி விட்ட ஒரு சில மலர் அலங்கார பொருட்களை அடுத்த தெருவில் இருக்கும் கடையில் வாங்கப் போயிருந்தால்.

அதுவரை கடைக்கு காவல் வேறு யார்? அந்தோணி தான்.

இது அவ்வப்போது நடப்பது என்பதால் அந்தோணியின் எதிர் கடை மீதான பார்வையை வைத்தே ஜெகன் மனோ ஜிடம் சொல்லி இருந்தான்.

ஜமுனா!

திருத்தமான அழகி!

முகத்தில் அத்தனை தெளிவும் திடமும் போட்டி பொட்டன


அவள் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்து விட்டது.

இவளிடம் எப்படி ‘ நீ ஜெகனை விரும்புகிறாயா? ‘ என கேட்பது?

மனோஜ் மலைத்தான். ஆனால் இப்போதும் அவன் சட்டைப் பை அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

ஜெகன் கடையில் புதிய ஆட்களை அதிலும் ஒரு இளம் பெண்ணைப் பார்த்துவிட்டு ஜமுனா முகத்தை சுறுக்கினால்.

“ அவங்களைப் பார்க்கலாமா?” என்றவாறு மனோஜ் எழுந்துவிட கூடவே ஜீவாவும் எழுந்தாள்.

“ கொஞ்சம் இருங்க. டீ வரட்டும். சாப்பிட்டுட்டு போகலாம் “ விருந்தோம்பிய கடைக்காரனை கொலை வெறியுடன் பார்த்தான் மனோஜ்.

‘ ரொம்ப முக்கியம் ‘ மனோஜ் முணுமுணுத் தது ஜீவாவுக்கு கேட்க அவளுக்கு கோபம் வந்தது.

“ அண்ணா தான் ஆசையா சொல்றாருல? இருங்க டீ குடிச்சிட்டு போகலாம் “ என்றால்.

“ டீ வந்து குடிப்போம். இல்ல ஆனந்த பவன் ல காஃபி வாங்கித் தர்றேன். பேசாம வாடி கூட”
மனோஜ் இவர்களை இழுத்துக் கொண்டு எதிர் கடைக்கு சென்றான்.

இவர்களை முறைத்துக் கொண்டே மலர் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள் ஜமுனா.

மனோஜ் ஓடிப் போய் சுய அறிமுகம் செய்து கொண்டான்.

தன் வேலை விசயம் லேசுபாசாக் சொல்லிவிட்டு

“ உங்க கிட்ட ஒரு சந்தேகம் கேக்கணும்” என்றான்.

ஜெகன் உடன் வந்ததால் இவர்கள் மீது கொஞ்சம் கனிவு காட்டிப் பேசினால் ஜமுனா.

“ என்கிட்ட கேட்க என்ன இருக்கு அண்ணா?”

அவள் பார்வை ஜீவா மீதே இருந்தது.
தலையில் தட்டிக் கொண்டவன் “ இவங்க என் சம்சாரம் “ என்றான்.

ஜமுனா இப்போது ஜீவாவை பார்த்து மலர்ந்து சிரித்தாள்.

ஆரம்பத்தில் இருன் ஹு ஜீவா மீது ஜமுனா வின் பொறாமைப் பார்வை பார்த்தவன் வேண்டும் என்றே தான் ஜீவாவை அறிமுகப் படுத்த தாமதம் செய்தான். சும்மா ஜமுனா வுடன் விளையாடிப் பார்த்ததில் ‘ சக்சஸ் ஆகிடும் ‘ என்பது புலன் ஆனது.

“ ஜெகன் உங்களுக்கு கஸ்டமர் வருவாங்க. நீங்க போங்க. நான் தங்கச்சி கிட்ட பேசிட்டு வர்றேன்” என்று ஜெகனை அனுப்பி விட்டான்.

ஆரம்ப நலன் விசாரிப்புகள் பின் மனோஜ் தன் பாக்கெட்டில் இருந்த கார்டை எடுத்து காட்டி கேட்டான்:

“ இது உன் கையெழுத்து தானே தங்கச்சி? “ என்று.

ஜமுனா பதறிப் போனாள்.

அது ‘ என் ஜீவன் என்றும் உன்னுடன் ‘ என கல்லறையில் கிடைத்த அட்டை. ஜீவா ஜெஸி சமாதி மீது கண்டு எடுத்த அட்டை.

ஜீவாவின் கண்கள் விரிந்தன.
ஜமுனாவின் வெளிறிய முகத்தைப் பார்த்து திருப்தியுடன் “ இல்ல எல்லோருக்கும் இப்படித்தான் எழுதி வைப்பிங்களா உங்க கடையில?” அப்பாவியாக கேட்டு வைத்தான்.

இவன் முகத்தை ஊடுருவி பார்த்த ஜமுனா “ என்ன கேக்கணுமோ அதை நேரே கேளுங்க சார் “ என்றாள்.

அந்த அட்டையை மீண்டும் பாக்கெட் உள்ளே வைத்தான்.

“ கேக்க என்ன இருக்கு? நீயே சொல்லு. “ என்று விட்டு
அவள் கடையில் ஜெகன் இழுத்துப் போட்ட மோடாவில் அமர்ந்தான். ஜீவா அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். வியாபார நிமித்தமாக ஜமுனா நின்று கொண்டு இருந்தாள்.

ஜமுனா வாய் திறந்தாள். தன் மனம் உரைத்தாள்.

“ நீங்க நினைக்கிறது சரி தான். அது நான் அவங்களுக்கு குடுத்தேன். எப்படியும் அதை பாஅடித்ததுகனு நினைச்சேன். அந்த பொக்கே அவர் வாங்கி ஒரு வாரம் ஆச்சு. இன்னும் பார்க்கலியான்னு ஒரே சந்தேகம்.அவர் முகத்தை பாத்திட்டே இருந்தேன். ஆனா அவர் இதைப் பார்க்கவே இல்லை போல. இருக்கட்டும். என் மனசை சொல்ல எவ்வளவோ முயற்சி பண்றேன். அதை அவர் புரிஞ்சுக்கவே மாட்றார். அரை டவுசர் போட்டதுங்க கூட அத்தனை விவரமா இருக்குங்க. இவங்க? ஆனா இதுதான் எனக்கு அவங்ககிட்ட பிடிச்சிருக்கு. பொண்ணு கண்ணை காட்னதும் கரெக்ட் பண்ண நினைக்காம _ அது தெரியாம _ எவ்ளோ நல்லவங்க தெரியுமா அவங்க? என்னைப் பத்தி எதுவும் அவங்க கேக்க மாட்டாங்க. அதுக்காக நான் சும்மா இருக்க முடியுமா அண்ணா? அதான் பேச்சு குடுத்து என்னைப் பத்தி அப்போ அப்போ சொல்வேன். அவங்களுக்கு அதுல என்ன புரிஞ்சுதா? ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

அவங்களை முதல்ல பார்த்தப்ப எல்லோரையும் போல நினைச்சு கண்டுக்கலை. அன்னிக்கு ஒரு நாள் அந்த அக்கா ( அக்காவாம்!) சமாதில வைக்க பூங்கொத்து கேட்டாங்க இவங்க. ஒரு வேலை தெரிஞ்சவங்க போலனு நினைச்சேன். அதுக்கு மேலே நினைக்கலை.

ஆனா தொடர்ந்து இவங்க பூங்கொத்து வாங்கவும் நமக்கு எதும் ரூட் விடுறாரானு சந்தேகமா இருந்துது. தற்செயலாக போற மாதிரி என் ஸ்கூட்டில் அவங்க பின்னாடி போனேன். அப்போ தான் அவங்க சொன்னது உண்மைன்னு தெரிஞ்சுது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சுத்தி இருந்த அத்தனை பேரையும் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன்.

அந்த கதை எப்படி இருந்தாலும் அது எனக்கு தேவை இல்லை அண்ணா. அவங்க அந்த அக்காவை மறந்து என்னை ஏத்துக்குவாங்களா? அதான் மனசைக் குடையுது. “

ஜமுனா பேச பேச ஜீவா எழுந்து போய் அவளை தோளோடு அணைத்துக் கொண்டாள்.

‘ கட்ன புருசன் நான்! எனக்கு ஒரு ஹக் குடுத்திராத!’ என மனோஜ் மனதில் அனல் அடித்தது.

“ ரைட். இந்த விசயம் உங்க வீட்ல பெரியவங்க யார் கிட்ட பேசணும்? “ மனோஜ் கேட்கவும் ஜமுனாவுக்கு மூச்சடைத்தது.

“ அண்ணா?”

“ ஜெகன் கூட உன் கல்யாணத்தை நான் முடிச்சு வைக்கிறேன். அதுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் அவரை நீ நல்லா பார்த்துப்பெனு எனக்கு வாக்கு குடுக்கணும்” விளையாட்டாக மனோஜ் சொன்னதும் எதிர் பாராமல் அவன் காலில் விழுந்து விட்டால் ஜமுனா!

மனோஜ் தடால் என தள்ளிப் போய் விட்டு “ தூக்கி விடு தரு” என ஜீவாவை அவசரமாக அழைத்தான்
அவன் சொல்வதற்கு முன்னமே ஜமுனாவைத் தூக்கி நிறுத்தி இருந்தாள் ஜீவா.

அங்கிருந்து வெளியே வரும் போது ஜீவாவின் காதில் “ உங்க அண்ணன் கிட்ட பேசி சம்மதிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு “ என தெளிவாக சொல்லி விட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.

அதன் பிறகு பலமுறை இது விசயம் குறித்து மனோஜ் ஜீவா மற்றும் அவர்கள் உறவினர்கள் அனைவரும் எடுத்து சொல்லியும் அடங்காத ஜெகனிடம் வந்த ஜீவா _

“ என் மனசுக்கு நிம்மதி குடுங்க அண்ணா. நான் என்ன பாவம் செய்தனு எனக்கு இந்த கஷ்டத்தை தர்றீங்க? ஜமுனா அண்ணி நல்லவங்க. “

என்று அவன் காலில் தடால் என்று விழுந்து விட்டாள்.

அடுத்த முகூர்த்தத்தில் ஜெகன் ஜமுனா திருமணம் நடந்தது.

காலையில் நடந்த அந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஜீவா

அன்று மாலை மனோ ஜுடன் தன் திருமண வரவேற்பில் ஜொலித்தாள்.

கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல
அஞ்சி அஞ்சி வீசி வரும் அலை போல
நெஞ்சில் எங்கும் தங்கும் சங்க கவி போல
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க
வாழ்த்துகிறோம்
பூ தூவுகிறோம்
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் சூப்பர், எப்படியோ ஜெகன் உம் கல்யாணம் செய்துகிடான்🤩🤩🤩

ஜமுனா, காதல் சூப்பர், கண்டிப்பா அவனை நல்ல பார்த்துக்குவா🥰🥰🥰🥰

மனோ நம்மக்கு வாய்ச்சது சரி இல்லடா ம்ச் ☹☹☹
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,117
Reaction score
4,608
Location
Coimbatore
வாவ் சூப்பர், எப்படியோ ஜெகன் உம் கல்யாணம் செய்துகிடான்🤩🤩🤩

ஜமுனா, காதல் சூப்பர், கண்டிப்பா அவனை நல்ல பார்த்துக்குவா🥰🥰🥰🥰

மனோ நம்மக்கு வாய்ச்சது சரி இல்லடா ம்ச் ☹☹☹
Thank you so much for your lovable comments sahi ma 💕💕💕💕
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
ஆத்தி என்னடா இவனுங்க 😲😲😲 ஆ ஊன்னா கால்ல விழுகிறானுங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஜெகனுக்கு ஜமுனாவா செம 🥰🥰🥰

இனி ஹப்பி தானே 😁😁😁
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,117
Reaction score
4,608
Location
Coimbatore
ஆத்தி என்னடா இவனுங்க 😲😲😲 ஆ ஊன்னா கால்ல விழுகிறானுங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஜெகனுக்கு ஜமுனாவா செம 🥰🥰🥰

இனி ஹப்பி தானே 😁😁😁
Yes ma happy ending than💕💕💕

Thank you so much for your lovable comments ma ❤❤❤
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஜமுனா நல்ல பொண்ணா இருகாங்க.... 😊

எப்படியோ ஜெகன் and ஜமுனா க்கு கல்யாணம் ஆகிடுச்சு.... 🥰
ஹாப்பி married லைப் ப்பா.... 💐💞

மனி mind வாய்ஸ்.... 🤭😂
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,117
Reaction score
4,608
Location
Coimbatore
ஜமுனா நல்ல பொண்ணா இருகாங்க.... 😊

எப்படியோ ஜெகன் and ஜமுனா க்கு கல்யாணம் ஆகிடுச்சு.... 🥰
ஹாப்பி married லைப் ப்பா.... 💐💞

மனி mind வாய்ஸ்.... 🤭😂
Thank you so much dear 💕💞💕💕
Ivan mind voice la pesitte irukka vendiyathu thaan😂
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top