• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் _13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,141
Reaction score
4,644
Location
Coimbatore
ஹாய் பிரெண்ட்ஸ் 🤩 இதோ அடுத்த ud ❤ படித்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க பா. நாலு வார்த்தை திட்டுனாலும் ஓகே🤩

13


ஜீவா மனதே இல்லாமல் ஜெஸி வீட்டுக்குக் கிளம்பினாள். ஆனால் அவளுக்கு ஒரு கடமை பாக்கி இருக்கிறதே?

மனோஜ் மனதை அறிந்து ஜெஸிக்கு சொல்வது? ஜீவாவும் ஒரு இளம் பெண். அவள் எப்படி இதை எல்லாம் இன்னோரு ஆடவனிடம் கேட்க முடியும்? இந்த ஜெஸி இப்படி இக்கட்டில் நிறுத்தி விட்டாளே? அதுவும் இவளும் தடுமாறிக் கொண்டு இருக்கும் போது? இனி என்ன தடுமாற்றம் ஜீவா உனக்கு? அதுதான் மனோஜ்க்கு கொடுத்த மானங்கெட்ட மனசு வூ வூ ஆகிவிட்டதே?


சும்மா தலையாச் சீவி இருபுறமும் முடி எடுத்து நடுவில் ஒரு காட்ச் கிளிப்பைக் குத்தினாள் ஜீவா.’ போதும் உன் கூந்தல் அலங்காரம் ‘ என்று சோர்வாக இருந்தது. முகத்தைக் கழுவி துடைத்து பழக்க தோசமாக சந்தனப் பவுடர் பூசிக் கொண்டாள்.

பொட்டு வைக்கத் தோன்றாமல் இறங்கி நடக்க அம்மா பிடித்துக் கொண்டார். “ கருக்கலும் ( மாலை நேரம் ) அதுவுமா போட்டு வைக்காம எங்க கிளம்பிட்ட?”

“ ம்மா! ஜீவா வீட்டுக்கு “

“ நீ தானே ஜீவா?” அம்மா கிண்டலாகக் கேட்டார்.

‘ ஜீவன் இல்லாத _ மனோஜீவன் இல்லாத ஜீவா ‘ ஜீவா சிரித்துக் கொண்டாள்.

‘ ஆனால் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருப்பாள். நிச்சயம் ‘ என்று உறுதியாக நினைத்துக் கொண்டாள்.

“ கடிப்படிக்காதிங்கமா. இன்னிக்கு ஜெஸி வீட்ல பிரெயர் இருக்குல்ல? அதுக்குப் போகனும்னு சொல்லிட்டு தானே இருந்தேன்?”

“ “ இருடி. அப்பா வரட்டும் “

“ அப்பாவுக்கு எப்படித் தெரியும்?”

“ ஃபோன் எதுக்கு இருக்கு? “

' இது மறந்து போச்சே?”

“ இல்ல. இப்போ வர வர புத்திசாலித்தனம் கூடுது. அது பத்தி யோசிச்சி மூளையை டயர்ட் ஆக்காம பொட்டு வச்சிட்டு கிளம்பு”

“ அப்போ இங்கே போறேன்னு கேக்கலியா? பொட்டு வைக்காததுக்குத்தான் ஸ்டாப் பண்ணிங்களா என்னை?”

‘ அப்ப எனக்கு ஐஸ்கிரீம் இல்லையா?’ என்று அதிர்ச்சியில் கேட்ட நான்கு வயது ஜீவாக்குட்டி கண்ணில் வந்து போக _

“ நீ என்னைக்குதான் வளருவியோ? உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு நான் என்ன பண்ண போறேனோ?”
“ ஏதுக்கு என்ன பண்ணனும்?”

“ சுத்தம். நீ கிளம்பு தாயி. அப்பா வந்தா நான் சொல்லிக்கிறேன்”

“ அப்போ நீங்களும் அப்பாவும்?”


“ ஜீவா!” என்று பல்லைக் கடித்த சௌந்திரம் _ “ நாங்க வரப் பாக்கிறோம் “ ஒருவழியாக முடித்து அனுப்பி வைத்தார்.

இதை விட முக்கிய வேலையாக அவருக்குத் துணி துவைப்பது இருந்து விட்டது. இருப்பினும் ஜெஸி கூப்பிட்டதால் மகளை மட்டும் அனுப்பி வைத்தார் அவர். வாத்தியார் ‘ நேரமிருந்தால் வருகிறேன் ‘ என்று சொல்லி விட்டார்.


வாசலிலேயே மனோஜ் நின்று கொண்டு இருந்தான். ‘ இவன் வேற ! இந்த மூஞ்சியைப் பார்த்து மனம் தடுமாறாமல் பேச வேண்டும். அதற்கு கொஞ்சம் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அப்புறமாக இவனைப் பார்க்க வேண்டும் ‘ என இவள் நினைத்து வைத்திருக்க அவனானால் என்னவோ இவளை எதிர்பார்த்து நிற்ப்பது போல நிற்கிறான் வெண்ணெய் வெட்டி!.

ஜீவா அவனைப் பார்த்து மையமாக தலை அசைத்து உள்ளே சென்றாள்.

பார்க்காதது போல போக முடியாது. அதற்காக பல்லைக் காட்டவும் முடியாது.' சாவடிக்கிறாய்ங்க என்னய ‘ ஜீவா புலம்பிக் கொண்டே அவனைக் கடந்து சென்றாள்.

அவனுடன் ஜெகன் வந்திருந்தான். ஸ்வெட்டர் தாண்டி சட்டை தெரிந்தது.

‘ இவனுக்கு எப்போ பாரு மனோஜ் சட்டயப் போட்டுக்கணும் ‘ _ அதையும் அவள் மனம் நினைக்காமல் இல்லை.

பிரார்த்தனை முடிந்து அனைவருக்கும் ஃபப்பே முறையில் உணவு வழங்கப்பட்டது.

தனது பாக்கு மட்டைத் தட்டை எடுத்துக் கொண்டு விழிகளை சுழற்ற ஜெஸி முதலில் கண்ணில் விழுந்தாள்.

‘ இன்னும் பேசலியா?’ என்ற செல்ல மிரட்டல் அதில் இருந்தது. கூடவே ஒரு பரிதவிப்பும் இருந்ததோ? உற்று நோக்கினால் ஒன்றும் இல்லை அந்த முகத்தில்.


மனோஜைத் தேட அவன் அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

சட்டென நெஞ்சு அடைத்து விட்டது ஜீவாவுக்கு. ‘ அடேய் என்னடா பார்வை இது? நான் வேறல்ல பேசப் போறேன்? ‘


அவள் அவனை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு தரையில் ஜாதிப் பூ நட்டு வைத்து இருந்த தோட்டம் அருகே சென்றாள்.

பின்னால் அவன் வருவது புரிந்தது. ‘ எப்படி சொல்றது எல்லாம் புரிஞ்சிக்கறான்?’ என ஆச்சரியமாக இருந்தது.

கிட்டத்தட்ட குறு மரமாக வளர்ந்திருந்த அதன் அருகே நின்று மட்டன் பிரியானி சப்பாத்தி ஆகியவற்றை உரிய தொடுகறிகளுடன் சாப்பிட ஆரம்பிக்க _

“ அப்புறம் ?”

‘ வந்துட்டான் வந்துட்டான் ‘ மனம் பதறியது ஜீவாவுக்கு.

அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனை சலமில்லாத முகத்துடன் மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.

“ சொல்லுங்க?” _ என்னவோ அவன் தான் அவளிடம் பேச அழைத்து வந்தது போல ஜம்பமாக கேட்டாள் ஜீவா.

“ வர சொன்னே ? என்ன பேசணும்?”

“ ஏது? நான் வர சொன்னேனா? பார்த்து பேசுங்க சார் “ ஜீவாவுக்கு பட பட என இருந்தது.

“ ஓஹ் ! அப்போ கூப்பிடலியா? நான் போகட்டுமா?”

“ போகனும்னு நினைச்சா போங்க. “ அதற்கு மேல் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. போய் விட்டால் என்ன செய்ய என்றும் இருந்தது. அப்படி போய் விட்டால் நல்லது என்றும் இருந்தது.

'ஜெஸி ! உனக்கு ஏன்டி இவனைப் பிடிச்சுது? சரி பிடிச்சதுதான் பிடிச்சது. பேசாம கல்யாணத்தைப் பண்ணிகிட்டு போய்த் தொலைய வேண்டியதுதானே? எதுக்கு என்னை காமெடி பீசாக்குற? ‘

மனோஜ் சட்டென அவள் அருகே – மிக அருகே வந்தான்.

“ போகனும்னு தோனவே இல்லை”

ஜீவா மலங்க மலங்க விழித்துவிட்டு _ 'ஜெஸி பத்தி எதும் கேக்க வேண்டி நிக்கிறானோ ? 'என்றும் யோசித்தாள்.

இனி தள்ளிப் போடக் கூடாது.

“ ஜெஸி பத்தி கேக்கணுமா?” எனும் இவள் கேள்வியைப் புரியாமல் பார்த்தவன் _ “ ஏன்?” என்றான்.

“ இல்லை. அவங்க வீட்டுக்குத்தான் வந்திருக்கோம். அதான் அவளைப் பத்திக் கேப்பிங்களோன்னு…”

ஜீவாவைக் கூர்ந்து பார்த்துவிட்டு “ இல்லை “ என்றான்.

“வேற என்ன கேக்கணும் ?” _ ஜீவா.

“ நான் என்ன கேக்கணும்னு நீ நினைக்கிற ?” மனோஜ்.

“ இல்லை இல்லை. ஒன்னும் நினைக்கலை “ ஜீவா தெறித்து ஓடும் நிலையில் இருந்தாள்.

அவளை இன்னும் பக்கத்தில் நெருங்கி வந்து “ ஆனா நான் நினைக்கிறேன். உன்னையே நினைக்கிறேன். எப்போ என்கிட்ட ஐ லவ் யூ சொல்லுவன்னு ஒவ்வொரு நிமிடமும் ஆசையா நினைக்கிறேன். எப்போ சொல்லுவ ஜீவா?”





‘ என்ன இது? இவன் விளையாடறானா என்ன?’

ஜீவா திடுக்கிட்டுப் பார்த்தாள்.

“ இப்படி ஒரு முட்டைக்கண்ணை வச்சு என்னை முழிச்சு முழிச்சு பார்த்து ஒரு வழி ஆக்கிடு.”


'சொல்ல வந்ததை மறந்திடாதே ஜீவா ' - ஜீவா அதையே உருப்போட்டாள்.

“ ஜெஸி.. ஜெஸியைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” கேட்டு விட்டாள்.

“அவ உன்னை மாதிரி இல்ல. நல்ல பொண்ணு “ மனோஜ் சிரித்தான்.


‘ எதெ?’ ஜீவா அதிர்ந்தாள்.


“ எஸ். எதையும் தெளிவா பேசிடுவா. கர்த்தர் மேல எத்தனை அன்பு தெரியுமா? சுத்தி இருக்கிறவங்க மேலயும் தான். பைபில்ல அந்த அதிகாரம் எல்லாம் அவளுக்குத் தலைகீழ் பாடம் “

‘ அடேய் உன்னை கவர் பண்ண சொல்லி இருப்பாடா ‘ ஜீவா ‘பே’ என விழித்தாள்.

“ அவளை விடுடா செல்லம். இங்கே சொல்லு! ஐ … லவ்.. யூ ?”


ஜீவா இன்னும் விலகிப் போக _ நெருங்கி அவள் தோள் தொட்டவன் _

“ நான் உன்னை விட்டு விலகுவதில்லை. நான் உன்னை என்றும் கை விடுவதில்லை “ என்றான்.


ஜெஸி சர்ச்சில் இதைப் பாடுவது நினைவு வந்தது. ஜீவா உறுதி அடைந்தாள்.

“ நீங்க கிறிஸ்டியன். ஜெஸியும் அதான். சோ உங்க ரெண்டு பேருக்கும் தான் செட் ஆகும். தவிர ஜெஸி… அவளுக்கும் உங்களைப் பிடிக்கும் “

பேசித்தான் தீர வேண்டும்? பேசி விட்டாள்.

இன்னும் அவன் அவள் தோள் மீதிருந்து தன் கைகளை விலகியிருக்கவில்லை. அதை அவள் உணரவும் இல்லை. ஆனால் அதை அவன் உணர்ந்து இருந்தான். 'எவ்வளவு மறுத்து பேசுகிறாள் என்பதைப் பார்த்து விடுவோம்’ என நின்று இருப்பது அவன் முக பாவனையில் தெரிந்தது.

“ எல்லாருக்கும் தான் எல்லோரையும் பிடிக்கும். அதுக்காக அதை காதல்னா சொல்ல முடியும்? வேற? ஓஹோ? ஜாதி மதம் பார்த்துதான் மேடம் லவ் பண்ணுவீங்களோ? “

“ அய்யோ அப்படிலாம் இல்ல”

“ லவ் பண்ண ஜாதி மதம் பாக்க மாட்ட?”

“ ம்ஹும். பாக்க மாட்டேன் “

“ அப்போ நான் எந்த மதமா இருந்தாலும் உனக்கு ஓகே தானே?”

“ ம். ஓகே தான் “

“ அப்போ ஐ லவ் யூ சொல்லு “

“ ஐ லவ் ...” என்ற ஜீவா தலையில் தட்டிக் கொண்டாள்.

“ என்னை லூசுன்னு நினைச்சிங்களா?” என்றாள் கோபமாக.

“ இல்லை. முடிவே பண்ணிட்டேன் “ என்று சிரித்து அவள் கன்னத்தைத் தட்டினான்.





எங்கிளி மேல
சங்கிலி போல
சேரத் தோணுதே





“ அடுத்து சீக்கிரம் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் நான் நல்லவனா இருக்க முடியும் “ என வாய்க்குள் முனகிவிட்டுப் போய் விட்டான்.


ஜீவா அசையாமல் நின்று விட்டால். என்னதான் அவளுக்கும் இதில் சந்தோசம் என்றாலும் ஜெஸியின் நிலை? இது மனதிரன் ஓடிக் கொண்டு இருந்ததில் அவன் பேச்சில் முழுதும் ஒட்ட முடியாமல் போனது.


ஜெஸி என்ன சொல்லி அனுப்பினாள்? இங்கே என்ன நடந்தது? இதைப் போய் எப்படி அவளிடம் சொல்வது?

ஜீவா குத்தகைக்கு எடுத்த குழப்பத்தில் இருக்க காபீ டிரம் வந்தது. அதைக் குடிக்க ஆட்கள் வரத் தொடங்கி விட ஜீவா உள்ளே போனாள்.


இந்த நம்பிக்கை துரோகத்தை அவளால் செய்ய முடியாது. ஜெஸி யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளட்டும்.மனோஜும் அப்படித்தான். விதி வசத்தால் இவர்கள் இருவரும் மணந்து கொண்டாலும் சரிதான். ஆனால் ஜீவா இவர்கள் இருவர் வாழ்விவிலும் குறுக்கிட மாட்டாள்.

தோட்டம் பார்க்க அமைக்கப் பட்டு இருந்த அறையின் ஜன்னலில் இருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஜெஸி!


அவர்கள் பேசியது கேட்டிருக்க முடியாது. ஆனால் அவன் அவள் தோள் தொட்டதும் கன்னத்தைத் தட்டியதும் நன்கு தெரிந்தது.



ஜெஸியின் கண்கள் பொறாமையில் மிளிர்ந்தது.

பொறாமையோ எலும்புருக்கி _ ( நீதி 14 : 30 ) பைபிள்
 




Last edited by a moderator:

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ம்ச் இந்த ஜீவா உண்மையாலும் லூசு தான், இவளுக்கு எதுக்கு இந்த புறா வேலை எல்லாம்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

மனோ மனசில் என்ன இருக்குனு முன்னாடியே தெரிஞ்சி இருக்கணும் இல்ல ஜெஸி உனக்கு, நீ விரும்பின மட்டும் போதுமா, அவனும் உன்ன விரும்பனும் இல்ல.....

அட்லீஸ்ட், இத நீயே சொல்லி இருக்கலாம் இல்ல😒😒😒😒

பைபிள் படிச்சி, என்ன சொல்லு, பொறாமை படக்கூடாதுனு போட்டு இருக்கு இல்ல(நீங்க போட்டு இருக்கற வார்த்தைக்கு அர்த்தம் சரியா தெரியல ஜீ, தப்பா இருந்த சாரி...)

இப்ப ஜெஸி என்ன செய்வாள்?????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,141
Reaction score
4,644
Location
Coimbatore
ம்ச் இந்த ஜீவா உண்மையாலும் லூசு தான், இவளுக்கு எதுக்கு இந்த புறா வேலை எல்லாம்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

மனோ மனசில் என்ன இருக்குனு முன்னாடியே தெரிஞ்சி இருக்கணும் இல்ல ஜெஸி உனக்கு, நீ விரும்பின மட்டும் போதுமா, அவனும் உன்ன விரும்பனும் இல்ல.....

அட்லீஸ்ட், இத நீயே சொல்லி இருக்கலாம் இல்ல😒😒😒😒

பைபிள் படிச்சி, என்ன சொல்லு, பொறாமை படக்கூடாதுனு போட்டு இருக்கு இல்ல(நீங்க போட்டு இருக்கற வார்த்தைக்கு அர்த்தம் சரியா தெரியல ஜீ, தப்பா இருந்த சாரி...)

இப்ப ஜெஸி என்ன செய்வாள்?????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
மிக்க நன்றி மா❤❤❤

விரைவில் அடுத்த பதிவு மா😍
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,729
Location
Germany
பைபில் வார்த்தையோட சூப்பர்மா👌👌👌👌

ஆத்தி ஜீவன் மனசில ஜீவா😳😳😳. இனி ஜெஸ்ஸி என்ன பண்ணுவாளோ🧐🧐🧐. சும்மாவே அவளை வம்பில மாட்டி விடுவா, இந்த காண்டு வேற சேர்ந்தா என்ன நடக்குமோ🙄🙄🙄

ஜீவா நீ ஒரு லூசுன்றத அடிக்கடி ப்ரூஃப் பண்றம்மா🥱🥱🥱
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,141
Reaction score
4,644
Location
Coimbatore
பைபில் வார்த்தையோட சூப்பர்மா👌👌👌👌

ஆத்தி ஜீவன் மனசில ஜீவா😳😳😳. இனி ஜெஸ்ஸி என்ன பண்ணுவாளோ🧐🧐🧐. சும்மாவே அவளை வம்பில மாட்டி விடுவா, இந்த காண்டு வேற சேர்ந்தா என்ன நடக்குமோ🙄🙄🙄

ஜீவா நீ ஒரு லூசுன்றத அடிக்கடி ப்ரூஃப் பண்றம்மா🥱🥱🥱
மிக்க நன்றி மா💕💕💕💕

🤣🤣ஜீவா! ஜீவா! இப்டி இருக்கியே ஜீவா🤣🤣🤣
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
மனோ நானும் இதே டயலாக் அஹ் நானும் கமெண்ட் பண்ணினேன் ப்பா....🤭

அவர் லவ் அஹ் சொல்லிட்டாரு....

இதை கேட்காட்டியும் ஜெஸ்ஸி பார்த்துட்டாங்க..... 🙄

பொறாமை....

அப்போ அவங்க தான் வேணுண்டே அவர பத்தி ஏதோ சொல்லிருக்காங்க....🙄

அந்த லூசும் நம்பிடுச்சு....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top