• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் _16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,125
Reaction score
4,625
Location
Coimbatore
16


கல்லூரியில் இருந்து அப்போதுதான் வந்திருந்தாள் ஜீவா. முகம் கழுவி அப்போதே டைட்டான பிங்க் நிற டீ ஷர்ட்டும் பனியன் கிளாத்தில் பச்சை பலேசேவும் போட்டுக் கொண்டு தலை முடியை உயர்த்திக் கொண்டை போட்டு தலையோடு சேர்த்து நுனியில் கேட்ச் கிளிப் மாட்டிவிட அது தலைக்கு கிரீடம் வைத்தது போல இருந்தது.



அவளது டீ ஷர்ட் இறுக்கமாக இருப்பதைப் பார்த்து விட்டு பதறிப் போன தாய்க்குலம் “ பாப்பா டாப்ஸை மாத்திருடா” என்றார்.

“ போங்கம்மா. எப்போ பார் டாப்ஸை மாத்து. டாப்ஸை மாத்துண்ணு வம்பு பண்ணிக்கிட்டு.மாத்தறேன் இருங்க “ என்று வெடுவெடுக்கத் திடுக்கிட்டார் செளந்திரம்.



கதவுக்குப் பின் மனோஜ் நிற்ப்பதைப் பார்த்து 'திக் ' என்று ஆனது அவருக்கு.

‘ இவ போட்டு இருக்கற டாப்ஸ் சரி இல்லையே? இப்போ சொல்லவும் முடியாதே?’ பதை பதைப்பாக இருந்தது அவருக்கு. பெண்ணைப் பெற்றால் அது வரத்தான் செய்யும் போலும்.


அவன் நேராக சௌந்திரத்தை நோக்கினான். “ உங்க கிட்ட தனியா பேசணும் “ என்றான்.

“ என் அம்மா கிட்ட நான் இல்லாம என்ன தனியா பேசப் போறீங்க?” ஜீவா இடையிட்டாள்.


“ அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை. அதுலாம் அறிவு இருக்கிறவங்க பேசறது. நீ போய் டோராவின் பயணங்கள் பாரு “ என்றான்.

அவளுக்குக் கோபம் வந்தாலும் நிஜமாகவே அவள் கார்ட்டூன் பார்க்கும் நேரம் இது. எனவே ஒன்றும் சொல்லாமல் ‘ பெரிய இவரு ‘ என வாய்க்குள் நாக்கை சுழற்றியவாறு டிவி பக்கம் போய் விட்டாள்.

“இவள “ பற்களைக் கடித்துக் கொண்டு சௌந்திரத்தை ஏறிட்டான் மனோஜ்.


இரண்டு பெட்ரூம் ஒரு கிட்சன் ஹால் தவிர தனியாக ஒரு பாத்ரூம் வீட்டுக்குச் சற்று வெளியே இருந்தது. அது விருந்தாளிகள் பயன்படுத்த என்று வைத்து இருந்தார்கள்.


இப்போது எங்கே போய் பேச?


“ உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசணும் ஆன்டி” என்றான்.

ஜீவா கார்ட்டூன் பார்த்துவிட்டு 'கேக்கே பிக்கே' என சிரித்துக் கொண்டு இருந்தாள்.

மகளைப் பார்த்துவிட்டு “ அவ கிடக்கிறா. அதுலாம் ஒன்னும் கவனிக்க மாட்டா”

“ கவனிச்சிட்டாலும்!” அவன் சொன்னதை சரியாகக் கேட்கவில்லை சௌந்திரம்.


“ஹாலில் ஒரு ஓரத்தில் ஜீவாவின் ஸ்டடி டேபிள் அருகே இரண்டு நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர் அவர்கள் இருவரும்.

மனோஜ் பேசப் பேச பாதியில் நிறுத்திய சௌந்திரம் மகளைப் பார்க்க அவள் டிவியில் மூழ்கி இருந்தாள்.

இருந்தாலும் “ பாப்பா. ஜெஸி வீட்ல அம்மா குடுத்த பாத்திரம் ஒன்னு இருக்கு. போய் வாங்கிட்டு வாடா” என்று அனுப்பி வைத்தார்.

தன்னைக் கடந்து போன மகளை மனம் தாங்காமல் கேட்டு விட்டார்.

“ ஏம் பாப்பா? டாப்ஸ் மத்துறதா சொன்னியே? மாத்தலியா?” என்று.


“ பேண்ட் மத்திட்டென். பிங்க் கலர்ல. இப்போ மாட்சா இருக்குல்ல?” என்று கேட்டு கொண்டே ஜீவா போக வெளிப்படையாகவே தலையில் சௌந்திரம் அடித்துக் கொள்ள மனோஜ் வாய் விட்டு சிரித்து விட்டான்.


ஜெஸி வீட்டுக்குப் போன ஜீவா மேரியை பார்த்து ஜெஸி எங்கே என்று கேட்க அவள் அவள் அறையில் இருப்பதாகச் சொன்னார். அவர் கொடுத்த தங்கள் வீட்டு பாத்திரத்தை அப்புறம் எடுத்துக் கொள்வதாக சொல்லிவிட்டு ஜெஸியின் அறையை நோக்கி நடந்தவளுக்கு ஏதோ பத்தட்டமாகவே இருந்தது.


உள்ளே நுழைய ஜெஸி தலையைப் பிடித்துக் கொண்டு படுத்திருந்தாள். அவளுக்கு இது
அடிக்கடி வருவதுதான். மைகிரேன்
தலைவலி.

இது ஒரு பெரிய பிரச்சனை என்று அடிக்கடி புலம்புவாள். திருமணமும் இதனால் பாதிக்கப்படும் என்ற மூட நம்பிக்கை வேறு. சொந்த பந்தங்கள் இதைப் பற்றி விலாவாரியாக பேசியிருக்க இவள் இன்னும் அதை ஊதி பெரிதுபடுத்தி கொண்டு உயிரை வாங்குவாள்.

அப்படிப் பார்த்தால் ஜீவா இங்கே போவது?
இதனாலேயே இவளது காதல் மனம் போல நிறைவேற வேண்டும் என்ற ஆசை ஜீவாவுக்கு.


“ மனோஜ் மேல மட்டும் இத்தனை இன்டர்ஸ்ட் எப்படி பேபி?” என்று கேட்டதற்கு ஜெஸி சொன்ன பதில் வித்தியாசமானது.

“ அவங்க அம்மாவுக்கும் இந்த தலைவலி இருக்கு. சோ என் பிரச்சனை அவங்களுக்கு நல்லா புரியும். அதான். ஆனா அவங்களுக்கு என் மேல அத்தனை பிரியம் இல்லை. பாப்போம். “ என சொல்லி இருந்தாள்.

தலை வலியில் படுத்திருந்த ஜெஸிக்கு அவள் மாத்திரையை எடுத்து தந்துவிட்டு “ இன்னும் வாந்தி வரலியா?” என்றும் கேட்டு வைத்தாள்.

“ இல்ல. இப்போதான் ஆரம்பிச்சது”

“ஏன்?”

“ ஒண்ணா? ரெண்டா? டென்ஷன் எனக்கு? இந்த மனோஜ் ஒரு வழிக்கு வந்துட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்திடும். “


“ ஏன்? இன்னும் அவன்கிட்ட சொல்லலியா?” என்றபோது குரல் பிசிர் தட்டியது ஜீவாவுக்கு.

என்னதான் தோழிகளாக இருந்தாலும் இன்னும் உறுதி யான பின் சொல்லலாம் என்று நினைத்த ஜெஸி “ அவனை விடு “ என்று பேச்சைக் கத்தரித்தாள்.

அதற்கு மேல் தோண்டித் துருவாமல் விட்டு விட்டாள் ஜீவா. என்னவோ நடந்து விட்டுப் போகட்டும். தன்னை இழுக்காமல் இருந்தாள் சரி _ என்பதாக இருந்தது அவள் எண்ணம்.

இருந்தாலும் அந்த முத்தம்? அதை ஒரு விபத்தாக எண்ணி… இல்லையே? அப்படி நினைக்க முடியவில்லையே? பாழாய்ப் போன ஜெஸி சாமர்த்தியம் போதாமல் தான் அல்லாடுவதோடு அல்லாமல் தன்னையும் அல்லவா படுத்துகிறாள்?

ஒன்று அவனை கரெக்ட் செய்திருக்க வேண்டும். அல்லது கட் செய்திருக்க வேண்டும். இரண்டும் அல்லாமல் இது என்ன விளையாட்டு?

பேசாமல் பொட்டியைக் கட்டிக் கொண்டு எங்காவது போய் விடலாம் என்றால் எங்கே போவது? ஜீவாவுக்கு எங்காவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

இது போன்ற எண்ணங்கள் வராமல் எவ்வளவோ அவள் தன் மனதை இறுக்கி கட்டி வைத்துதான் இருக்கிறாள். அதையும் சும்மா விடுவேனா என்று இந்த பக்கம் மனோஜ் அந்தப் பக்கம் ஜெஸி எனப் பந்தாடுகிரார்கள்.

ஜெஸியுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு மேரி கொடுத்த பாத்திரமும் அதில் அவர் போட்டுத் தந்த லட்டையும் எடுத்துக் கொண்டு ஜெஸியின் வீட்டை விட்டு வெளியில் வந்தாள் ஜீவா.

தனது வீட்டுக்குள் நுழைய அதற்க்குள் மனோஜ் போயிருந்தான். 'நல்லது ' என்று நினைத்துக் கொண்டாள்.


ஆனால் அம்மா அவளை ஏன் விநோதமாக _ ஆராய்ச்சியாக _ கொஞ்சம் பயத்துடன் கூடவும்தான் _ பார்த்தார்?

“ அவன் என்ன சொன்னான் மா?”

“ அது உனக்குத் தேவை இல்லை. நீ போய் டிபன் சாப்பிடு “ என்று சொல்லி அவளை விரட்டினார் அம்மா.

'என்னதான் நடக்குது?’ என முணுமுணுத்து விட்டு தாயின் பேச்சை மீறாமல் சாப்பிடப் போனாள் ஜீவா.

“ அம்மா தேங்கா சட்னி மட்டும் தான் வச்சிங்களா? தக்காளி சட்னி வைக்கலியா?” என்று கத்த _
“ரொம்ப முக்கியம்” என்று தோள்பட்டையில் இடித்துக் கொண்டார் சௌந்திரம்

'மனோஜ் என்ன சொன்னான்? ' என்று இன்றும் தெரியாது ஜீவாவுக்கு. தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

இப்படியே சில நாட்கள் போக ஜெஸி மனோஜ் ஜீவா மூவரும் மீண்டும் ஒரு காபி ஷாப்பில் சந்தித்துக் கொண்டனர்.

ஜெகன் இப்போது இவர்களுடன் இல்லை. அவன் ஒர்க் ஷாப் போயிருந்தான்.


காட்டன் டாப்சும் கறுப்பு ஜீன்சும் அணிந்திருந்தாள் ஜெஸி. காலர் வைத்த டாப்சும் லாங் ஸ்கர்ட்டும் அணிந்து போனால் போகிறது என்று கழுத்தைச் சுற்றி மெல்லிய ஷாலும் அணிந்திருந்தாள் ஜீவா.

“ பக்கி. இந்த டாப்சுக்கு எதுக்கு ஷால்? அழகா டிரஸ் பண்ணுனா மட்டும் என் கூட வா? இல்ல? இனி என் கூட வெளிய வந்துறாதே!” ஜெஸி கடித்துத் துப்பிக் கொண்டு வந்து இருந்தாள்.


தற்செயலாக சந்தித்த மூவரும் ஒரே டேபிலில் அமர காஃபி வாங்கி வருவதாகச் சொல்லி ஜீவா கழன்று கொண்டாள்.

‘ இப்பவாச்சும் அவனை கரெக்ட் பண்ணி த் தொலை ஜெஸி. என்னைப் பிடிச்ச பீடை போகட்டும் ‘ என்று நினைத்துக் கொண்டாள்.

இங்கே தனித்து விடப்பட்ட இருவரின் உரையாடல் பின்வருமாறு:

மனோஜ்: ஹாய்
ஜெஸி : ஹாய்
மனோஜ்: ஹாய்
ஜெஸி :ஹாய்

இப்படியே போனால் விளங்கிவிடும் என்று நினைத்த இருவரும் கண்களை சுழற்ற ஜீவா கண்களில் விழுந்தாள்.

“தனியா எப்படி மூணு கப் வாங்கிட்டு வருவா? நானும் போறேன் “ என்று எழுந்து கொண்டான் மனோஜ்.

அதற்குள் சுதாரித்த ஜெஸி “ எதுக்கு டிரைவர் கிட்ட கிஃப்ட் குடுக்கச் சொன்னீங்க?” _ அவசர அவசரமாகக் கேட்டு விட்டாள்.

புருவத்தைச் சுழித்த மனோஜ் “ அவர் ஆசைப்பட்டார். அதான் “ என்று முடித்துக் கொண்டான்.

‘அதை நாம ஏன் கன்சிடர் பண்ணனும்? ‘ அவள் உதட்டுக்குள் சொல்லிக் கொண்டது யாருக்கும் கேட்கவில்லை.

ஜீவா அருகில் போய் இரண்டு கோப்பைகளை வாங்கிக் கொண்டு டேபிள் நோக்கி புன்னகைத்துக் கொண்டே வந்தான் மனோஜ்


காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்

மெல்லிய குரலில் அவன் பாட இவள் திடுக்கிட்டாள்.

“ இதான் உன் காலர் டியூன்? இப்போ மாத்திட்ட?”

“எப்படித் தெரியும்?”

“ இன்னுமா உன் நம்பர் என்கிட்ட இல்லாம இருக்கும்?” என்று கேட்டவன் _



“ அப்புறம்? என்ன முடிவு செய்து இருக்கே?” என்றான்.

‘ என்னை பார்த்தா எப்படி தெரியுது இவனுக்கு? எங்க ரெண்டு பேர் லைஃப்ல விளையாடலாம்ன்னு நினைச்சுகிட்டு இருக்கானா? டபுள்ஸ் பார்ட்டியா இவன்?‘ _ ஜீவா யோசித்துக் கொண்டே வந்தாள்.

அதற்குள் டேபிள் வந்திருக்க ஆளுக்கு ஒரு கப் எடுத்துக் கொண்டு அருந்த ஆரம்பித்தனர்.

அப்போது கடைக்குள் நுழைந்த இளசு ஒன்று ஜெஸி இருந்த நாற்காலியை இடித்து கொண்டு செல்ல அவள் கையில் இருந்த காபி உடையில் கொட்டியது.

வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து இருந்ததால் காபி கறை அழுத்தமாகத் தெரிய ஜெஸி முகம் எரிச்சலைக் காட்டியது.

“ நீ வாஷ் ரூம் போய் க்ளீன் பண்ணிக்கோ ஜெஸி “ என்றவன் அந்தப் பையனை நோக்கிச் சென்றான்.

என்ன பேசினான் என்பது தெரியவில்லை. ஆனால் அந்தப் பையன் வந்து ஜெஸியிடம் “ சாரி சிஸ்டர் “ என்று சொல்லி விட்டு ஜீவாவைப் பார்த்து கை குவித்து வணக்கம் சொல்லிவிட்டு போனான்.

வாஷ் ரூம் போய்விட்டு 'உடையைக் கழுவுகிறேன்' என்று வெள்ளை உடை மீது தண்ணீரைக் கொட்டியிருக்க கொஞ்சம் கவர்ச்சியாகத் தெரிந்த ஜெஸியைப் பார்த்து நெளிந்தாள் ஜீவா. இவர்கள் இருவரும் மட்டும் இருந்தால் வாய் விட்டு சொல்லி இருப்பாள்.

இவன் எதிரில் எப்படி சொல்வது? என்று திருதிருத்தாள் அவள்.

“ உன் ஷாலைக் குடு ஜீவா” என்று கிட்டத்தட்ட அவளிடம் இருந்து பிடுங்கி ஜெஸி கையில் கொடுத்தவன் “ குளிரும். போர்த்திக்கோ “ என்றான்.

“ அப்போ எனக்கு ?” என்ற ஜீவாவை “ அதான் முழு காபியும் குடிச்சியே? இன்னும் குளுருதாக்கும்? அப்படி இருந்தாலும் ஓகே! கிளம்பு “ என்று துரத்த “ என்னடி? உன் மேல அக்கறை பொழியுது?” என்று முறுமுறுத்துக் கொண்டு ஜீவா வர ஜெஸியின் முகத்தில் வெளிச்சப் புன்னகை.

வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசாமல் வந்த ஜீவாவுக்கு மறுநாள் நல்ல காய்ச்சல் கண்டது.
 




Last edited by a moderator:

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அப்பவே அவ அம்மா கிட்ட லவ் பண்ற விசயம் எல்லாம் சொல்லிட்டானா என்ன????இல்லைனா....

இப்ப வரை ஜீவாக்கு தெரியல அப்படினா, அது ஜெஸி விசயமா இருக்குமா????

ஜெகன் தான் தந்து இருக்கான், பட் அதா மனோ மேல சொல்லி தந்து இருக்கான்....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,125
Reaction score
4,625
Location
Coimbatore
அப்பவே அவ அம்மா கிட்ட லவ் பண்ற விசயம் எல்லாம் சொல்லிட்டானா என்ன????இல்லைனா....

இப்ப வரை ஜீவாக்கு தெரியல அப்படினா, அது ஜெஸி விசயமா இருக்குமா????

ஜெகன் தான் தந்து இருக்கான், பட் அதா மனோ மேல சொல்லி தந்து இருக்கான்....

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும் சகி மா ❤❤❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top