• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் _26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
26



ஜீவாவின் வீட்டில் அவள் எதிர் பாராத நபர் ஒருவர் அவளுக்காக காத்திருந்தார். அவர் மனோஜின் அம்மா!



உள்ளே நுழைந்ததும் வாசலில் அதிகமாக கிடந்த ஒரு ஜோடி செருப்புகளைப் பார்த்து ஜீவா நெற்றியைச் சுறுக்கினாள்.



“ போதும். கண்ணும் சுருங்கி கண்ணுக்கே தெரியாம போயிடப் போகுது. வந்து இருக்கிறது என் அம்மாதான்.” என மனோஜ் சொல்லவும் ஜீவாவுக்கு அவர் ஜெஸி யிடம் “ என்னை மாதிரி ஒரு பொண்ணை என் மகனுக்கு கட்டி வைக்க மாட்டேன் “ என்று சொன்னது நினைவுக்கு வந்தது.



இதில் புதிதாக நினைவுக்கு வர என்ன இருக்கிறது. எப்போதும் அவள் மனதை அறுப்பதுதான் அது?



ஜீவா முகம் நிச்சலனமாக இருந்தது. ஆனால் உள்ளம் அலை கடலாக ஆர்ப்பரித்தது.
நிச்சலனமாக இருந்தது. ஆனால் உள்ளம் அலை கடலாக ஆர்ப்பரித்தது.

அவனது தாயார் கார் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே கேட்டுக்கு வந்தார். உடன் ஜீவாவின் பெற்றோரும்.

“ அவரைப் பார்த்ததும் தன்னை அறியாமல் ஜீவாவின் முகம் மலர்ந்தது. பார்த்த மற்றவர்களின் மனமும் கனிந்தது.

“ வாங்க ஆன்டி! நல்லா இருக்கீங்களா? உடம்பு பரவாயில்லையா? எதுல வந்தீங்க ஆன்டி? சொல்லி இருந்தா நானே கூப்பிட்டு வந்து இருப்பேனே?” ஜீவா பேசிக் கொண்டே உள்ளே போக மனோஜ் அவள் ஷாலைப் பிடித்துக் கொண்டு பின்னே போனான்.

அது அந்த ஷாலைப் பார்த்து ஏக்கமாக இருந்தது அவனுக்கு. அதுவாவது அவனை அவளுடன் சேர்க்காதா? சிறிது நேரம் அந்த துப்பட்டாவாவது அவன் கைகளுக்குள் இருக்காதா?

தன்னை நெருங்கிய ஜீவாவை மெல்ல அணைத்து நெற்றியில் முத்தமிட்டு கன்னம் தடவினார் அவன் அம்மா.

“ உள்ள வாங்க ஆன்டி “ என்று அவள் சிரிக்க “ இதோ வர்றேன் “ என்றவாறு அவள் கையைப் பிடித்துக் கொண்டவர் விடுவதாக இல்லை.

தாயைப் பார்த்ததும் துப்பட்டாவை விட்டவன் அவரின் இந்த செயலில் குமைந்தான்.

‘ அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இதே வேலை! இவங்க கிட்ட இருந்துதான் இவன் படிச்சு இருப்பான் போல.’ நினைத்த ஜீவா மெல்ல கையை உருவிக் கொண்டாள்.

அதை உணர்ந்தாலும் மறுக்கவில்லை அந்த அம்மாள்.
வீட்டினுள் சென்றதும் முதல் வேலையாக அவர் அவளிடம் கேட்டார் :

“ என் பையனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமாம்மா?” என.

“ ஆன்டி அதுக்கு முன் எனக்கு ஒரு விபரம் சொல்லுவீங்களா?” - ஜீவா.

“ என்னம்மா கேக்கணும்? கேளு. எனக்கு தெரிஞ்சது சொல்றேன் “

“ ஒன்னும் இல்லை. வந்து.. “ ஜீவாவுக்கு இதை அவரிடம் கேட்பது இப்போது சிறுபிள்ளைதனமாக தெரிந்தது.

எத்தனை அன்பாக இருக்கிறார் இந்த ஆன்டி? இவர் எப்படி அப்படி சொல்லி இருப்பார்? ஜீவா யோசித்தாள்.

ஜெஸி கோபமாக பேசுவாள். எடுத்தெறிந்து கூட பேசுவாள். அது அவள் பிறவி குணம். ஒரு சில விசயங்கள் அவள் தெளிவாக பேசும் போது 'என்னடா இது? கொஞ்சம் கூட இரக்கம் இன்றி பேசுகிறாள் இவள் ? ‘ என்று தோன்றி இருக்கிறது ஜீவாவுக்கு.

ஆனால் ஜெஸி பொய் சொல்ல மாட்டாள்.

எனவே மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு கேட்டு விட்டாள்.

“ ஆன்டி நீங்க அன்னிக்கு ஒரு நாள் ‘ என்னை மாதிரி ஒரு பொண்ணை என் பையனுக்கு கட்டி வைக்க மாட்டேன் ‘ அப்படின்னு ஜெஸிகிட்ட ஏன் சொன்னீங்க? என்கிட்ட சொல்லுவீங்களா?”

ஏனையோர் திடுக்கிட _

மனோஜின் தாயார் சிரித்து விட்டார் அவள் கேட்ட விதத்தில்.

“ 'என்னை மாதிரி 'ன்னா? உன்னை மாதிரியா? உன்னை மாதிரி இல்லை _ உன்னைத்தான் என் பையனுக்கு கட்டி வைக்க ஆசை எனக்கு.” என்று அவர் சொல்ல “ ஆன்டி “ என அவர் பதிலுக்கு கோபப்பட்டு இவள் சிணுங்க மனோஜ் மிக ஆனந்தமாக உணர்ந்தான்.

அவள் கன்னத்தில் மீண்டும் தடவி விட்டு பெருமூச்சு விட்டார். பின்பு தொடர்ந்தார்.

“ அப்போ ‘ என்னை மாதிரி ஒரு பொண்ணு ‘ ன்னு நான் சொன்னதுக்கு வேற காரணம்.

எவ்வளவோ பிரியமா இருந்த இவன் அப்பா எப்போதும் என் கூட இருக்க கொடுத்து வைக்கல எனக்கு. அந்தப் பொண்ணு என்ன நினைச்சு கேட்டுச்சோ? எனக்கு முதல்ல இந்த நினைவுதான் வந்துச்சு.

எந்த தாயும் தன் பிள்ளைங்க குடும்பமும் குழந்தையுமா நூறு வயசு வாழனும் அப்படின்னு தான் நினைப்பாங்க. நானும் அதான் நினைச்சேன். அதைத்தான் சொன்னேன் “


இதைத்தான் ஜெஸி தவறாக புரிந்து கொண்டாளா? ஜீவாவின் மனம் நொந்தது.


தாய் சொன்னதைக் கேட்ட மனோஜ் வேதனையில் கண்களை மூடித் திறந்தான். மனசுக்குள் 'சுறுசுறு' என கோபம் கிளர்ந்தது.

காதலித்த பாவத்திற்கு அவன் அவள் பின்னால் 'லோ லோ ' என அலைவான்.

அவனைப் பெற்ற பாவத்திற்கு இவளுக்கு இதை எல்லாம் சொல்ல வேண்டும் என இவன் அன்னைக்கு என்ன தலை எழுத்து?
அவர் மனம் வாடக் கூடாது என ஒவ்வொன்றும் இவன் பார்த்து பார்த்து செய்ய இவள் இப்படிக் கேட்டு விட்டாள்!

பல வருடங்கள் கழித்து வெளிப்படையாக இவன் அப்பாவைப் பற்றி பேசி மனம் கலங்கி விட்டாரே அன்னை?

வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாளா இந்த தரு?


நேற்று முடிவு செய்ததை இன்று முடித்து விட வேண்டியதுதான்.

முன்னரே தாயிடம் அது பற்றி கோடி காட்டி இருந்தான். அப்போதே அது தவறு எனச் சொல்லி இருந்தார்.

தவிர இப்படிப்பட்ட விசயங்கள் அம்மாவுக்கு பிடிக்காது. சமாதானம் தான் அவர் கொள்கை.

எனவே அன்னையை அர்த்தமாக அவன் பார்க்க சற்று பொறுக்குமாறு அவர் விழிகளை மூடித் திறந்தார்.

“ ஜீவாம்மா”அன்பொழுக அழைத்தார் அவளை.

“ சொல்லுங்க ஆன்டி “

“ இப்போ சொல்லுமா? மனோஜை கல்யாணம் கட்டிக்கிறியா?”

“ ஆன்டி! அவரை நான் எவ்வளவு விரும்பறனோ அதே அளவு வெறுத்தேன். இந்த நினைவுகள் என்னை நிம்மதியா அவர் கூட வாழ விடாது “
ஜீவா தன் மனதை சொல்லி விட்டாள்.
‘ வெறுத்தேன் ' - கடந்த காலம்!

தனது முடிவு சரிதான். இவளிடம் 'மயிலே மயிலே உன் தோகை எங்கே ? ' என்றால் பறந்து கொண்டேதான் இருப்பாள்.
மனோஜ் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த பொட்டலத்தை தடவிக் கொண்டான்.

இறுகி இருந்தாலும் மலர்ந்து இருந்த மனோஜ் முகத்தைப் பார்த்து மற்றவர்கள் புரிந்து கொண்டனர்.

இவன் அம்மா மட்டும் மற்றவர் கவனத்தை கவராமல் ‘ இந்த பிள்ளையை ரட்சியும் ஆண்டவரே !’ என வேண்டிக் கொண்டு இருந்தார்.

எந்தப் பிள்ளை என்பது அவருக்கே குழப்பமாகி விட்டது போல.

மீண்டும் இவர்களைத் திரும்பிப் பார்த்து விட்டு

‘ இந்தப் பிள்ளைகளை ரட்சியும் ஆண்டவரே !’ மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

மனோஜ் கண்ணைக் காட்ட சௌந்திரம் அனைவருக்கும் மீண்டும் ஜுஸ் எடுத்து வந்தார். அவர் கைகள் நடுங்கியது அப்பட்டமாகத் தெரிந்தது.

அனைவரும் ஹாலில் சதுரமாக போடப்பட்டு இருந்த சோபாவில அமர்ந்து இருந்தனர்.

மனோஜ் மற்றும் அம்மா ஒரு சோபாவில ஜீவா தனி சோபாவில வாத்தியார் இன்னும் ஒரு பெரிய சோபாவில அமர்ந்து இருந்தனர்.

இவர்கள் வீட்டுக்குள் வந்ததும் மனோஜ் ஜீவா பக்கத்தில் உட்கார போக அவள் அவன் எண்ணத்திற்கு ஒத்து வருவாளா என்ன?

ஜம்மென்று தனியாகப் போய் உட்கார்ந்து விட்டாள்.

அதுவும் நல்லதுதான்.

கடைசி வாய்ப்பாக சௌந்திரம் கேட்டார்.

“ ஏம்பாப்பா ? வந்து இந்த தம்பி கல்யாணம்.. “ அவருக்கு கைகள் மட்டும் இல்லாமல் வாயும் தந்தி அடித்தது. தெம்புக்காக வாத்தியாரை பார்த்துக் கொண்டார்.

பாலசுப்ரமணியம் கண்களால் இவருக்கு ஆதரவு கொடுக்க சௌந்திரம் ஜுஸ் டம்பலர்கள் வைத்து இருந்த ட்ரே யை சோபாக்களுக்கு நடுவில் இருந்த டீபாயில் வைத்தார்.
இதில் எந்த நாடகத்தையும் அறியாத ஜீவா _

“ என்னம்மா நீங்க? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அவருக்கு அவசரமா இருந்தா கல்யாணம் பண்ணிக்கட்டும் “ ஜீவா வெட்டு ஒன்று துண்டு ரெண்டு எனப் பேச _

‘இருடி!’ கறுவிக் கொண்டான் மனோஜ்.

அலைந்ததில் இத்தனை உணர்வு போராட்டங்களில் ஜீவா கலைத்து போயிருந்தால்.

எனவே யாரும் சொல்லாமல் பழரசத்தை எடுத்துக் கொண்டால் பாவை.

அது தானே அவர்களுக்கும் வேண்டும்?

“ எல்லோரும் சாப்பிடுங்க. ஆன்டி ஜுஸ் எடுத்துக்கோங்க. அம்மா அப்பா நீங்களும். “ சொல்லிக் கொண்டே வந்தவள் மனோ ஜைப் பார்த்து “ நீங்களும் எடுத்துக்கோங்க “ என்றால்.

அனைவரும் கையில் எடுக்கவும் தான் எடுத்த பானத்தை அருந்த ஆரம்பித்தாள்.

சுற்றிலும் ஏதோ பரபரப்பு நிலவுவதாக தெரிந்தது அவளுக்கு. ஆனால் ஒன்றும் புரியாததால் விட்டு விட்டு குடிப்பதைத் தொடர்ந்தாள்.

அந்த கண்ணாடி பாத்திரத்தில் பதிந்து இருந்த அவள் பவள உதடுகளைப் எச்சில் விழுங்க பார்த்த மனோஜ் அவள் குடித்து முடிக்கவும் _



“ தாரா! கொஞ்சம் நிமிர்ந்து பாரு !” என்றான் .

கள்ளிருக்கும் பூவிது பூவிது
கையணைக்கும் நாள் எது? நாள் எது?
 




Last edited by a moderator:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
என்னங்கடா நடக்குது?! ஏதோ வில்லங்கமா நடக்கும் போல இருக்கே! மாமனாரும் மாமியாரும் மருமகனுக்கு பயங்கர சப்போர்ட் போல!😲
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
என்னங்கடா நடக்குது?! ஏதோ வில்லங்கமா நடக்கும் போல இருக்கே! மாமனாரும் மாமியாரும் மருமகனுக்கு பயங்கர சப்போர்ட் போல!😲
கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி ❤❤❤❤
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
🤣🤣🤣🤣, பயபுள்ள தாலி கட்டிடான் போல🤭🤭🤭

இருந்தாலும் இன்னும் இவ ஜெஸி ஜெஸினு அவ புராணத்தை பாடிட்டே இருந்தா யாருக்கு தான் கோவம் வராது 😏😏😏😏

அவ அப்பா அம்மாவே சம்மதிச்சி இருக்காங்க🤩🤩🤩

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
🤣🤣🤣🤣, பயபுள்ள தாலி கட்டிடான் போல🤭🤭🤭

இருந்தாலும் இன்னும் இவ ஜெஸி ஜெஸினு அவ புராணத்தை பாடிட்டே இருந்தா யாருக்கு தான் கோவம் வராது 😏😏😏😏

அவ அப்பா அம்மாவே சம்மதிச்சி இருக்காங்க🤩🤩🤩

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Thank you so much for your lovable comments sahi ma 💕💕💕💕
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
என்ன குடும்பமா ப்ளான் பண்றாங்க. தாலி ஏதும் கட்ட போறானா😳😳😳
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,089
Reaction score
4,588
Location
Coimbatore
என்ன குடும்பமா ப்ளான் பண்றாங்க. தாலி ஏதும் கட்ட போறானா😳😳😳
🤭

கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி 💕💕💕💕
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
உண்மையா அவங்க பண்றத....
அவர் காதல் ஆஹ் புரிஞ்சிக்கவே மாற்றங்க....🙄

ஜெஸ்ஸி தான் எப்பவும் முக்கியம்.... அவங்கள பத்தி நெனச்சதுல ஒரு 2 பெர்ஸன்ட் மனோ பத்தி நெனச்சிபிருப்பாங்களா....🤨

ஜெஸ்ஸி பாவம் தான்.... ☹

அப்போ மனோ....😔

இப்போ எண்ண பிளான்....

ஜூஸ் ள எதும் கலந்திருக்கு....

தாலி கட்ட போறாரா....

போ ம்மா.... இந்த ஜீவா.... 😤

பாவம் நம்ம மனோ....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top