• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் ஜீவன் என்றும் உன்னுடன் _28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,601
Location
Coimbatore
28


சுற்றும் காற்று சுழன்று அடித்தது.

கல்லறைக்கு உரிய அமானுஷ்யத்தை உணர்ந்தாள் ஜீவா.

அவள் இப்போது ஜெஸியின் கல்லறையில் நிற்கிறாள்.

அதோ தூரத்தில் கேட்டுக்கு வெளியே காரில் சாய்ந்தபடி மனோஜ்.

இனி இன்னும் மனதை உளப்பிக் கொள்வாள் அவன் மனைவி என்று நினைக்காமல் இல்லை அவன்.

ஆனால் இதையும் கடந்துதானே ஆக வேண்டும் அவன் ?

ஜெஸிந்தாவின் கல்லறையில் பிறப்பு இறப்பு பதியப்பட்டு இருந்தது.

“ நான் செய்தது சரிதானா பேபி?” ஜீவா குரல் உடையக் கேட்டாள்.

அவளுக்கு எந்த பதிலும் யாரிடமும் இருந்தும் கிடைக்கவில்லை.

கிடைக்காது என்று தெரியும் தானே?

தன் அன்பிற்கு அடிமையாக இருந்த தோழியை நினைத்தாள் ஜீவா.

அது போன்ற தோழமை இனி கிடைக்காது. அதை விட அவள் தோழி கிடைக்க மாட்டாள்.

நண்பனின் மரணத்தை விட நட்பின் மரணம் கொடுமையானது என்பார்கள்.

ஜீவாவின் மீதான அவள் தோழியின் நட்பும் மரணமடைந்து விட்டதா ?




கல்லறை நன்கு பராமரிக்கப் பட்டு வந்தது. தேவாலயம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது போலும்.
ஜெஸியின் கல்லறைக்கு அருகில் அந்தோனியின் கல்லறையும் இருந்தது.

‘ எதற்கு இத்தனை கர்வம்? கடைசியில் இப்படி ஒரு இடத்தில் அடங்கத்தானே? ‘

கழுத்தில் கிடந்த புத்தம் புது தாலி தவிர மனதுக்குப் பிடித்தவனை மணந்த புதிய திருமணப் பெண் என்ற எந்த அறிகுறியும் இன்றி வாடி இருந்தாள் ஜீவா.

“ என்னை மன்னிக்க மாட்டியா ஜெஸி ?”

ஜீவாவின் கேவல் காற்றில் கலந்தது.

ஜீவா கல்லறையை சுற்றி வந்தாள்.

கையில் வைத்து இருந்த பூங்கொத்தை வைப்பதற்காக கல்லறை அருகில் சென்றாள்.


அந்த கருப்பு பளிங்கு கல்லை கைகளால் தடவி ஏற்கனவே இருந்த வாடிய அழகிய பூங்கொத்தை அகற்றிவிட்டு தன் கையில் வைத்து இருந்த வெள்ளை ரோஜா பூங்கொத்து வைத்தவள் கல்லறை மேடையில் கிடந்த சிறிய அட்டையில் எழுதி இருந்த வரிகளைப் பார்த்து அதிர்ந்தாள்.

என் ஜீவன் என்றும் உன்னுடன்

என எழுதி இருந்தது.

அவள் ஜீவன் என்றும் இவளுடனா? அல்லது அவளது மனோஜீவன் என்றும் இவளுடனா?





கணவனிடம் சொன்னால் அதெல்லாம் ஒன்று இல்லை என்பான்.

இத்தனை நாட்கள் அவனை உடன் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்?

ஜெஸி சம்பந்தமாக எது கேட்டாலும் ஏனோ தானோ என்று தான் பதில் வரும் அவனிடம் இருந்து.

அவனுக்கு பிடிப்பதில்லை என அவளும் கொஞ்சம் கொஞ்சமாக ஜெஸி பற்றி பேசுவதை குறைத்து இருந்தாள்.

அவள் மாற்றம் உணர்ந்த போதும் சொன்ன சொல் தவறாமல் இங்கே கூட்டி வந்து விட்டான்.

ஆனாலும் மனம் கேட்காமல் அவனை இழுத்து வந்து இந்த வாசகம் பற்றிக் கேட்டாள் ஜீவா.





“ ஏதாவது கல்லறை வசனமா இருக்கும். விடு” என்றான் மனோஜ்.

“ அப்படின்னா?”

“ நான் செத்த்துட்டா இதே மாதிரி என் கல்லறையிலயும் எழுதுவாங்க. அப்போ பார்த்துக்கோ “ என்று எரிந்து விழ ஜீவா பதறி விட்டாள்.

“ ஏன் இப்படி பேசறீங்க?” தழுதழுத்தாள் ஜீவா.

“ வர வர உங்களுக்கு மேல பாசமே இல்லை “ என்று மூக்கை சிந்தினால்.”

பளிச்சிட்டது மனோஜ் முகம் முழுதும்.

“ இருந்துட்டாலும் “ என நொடித்து விட்டு வந்த புன்னகையை அடக்கிக் கொண்டான். இருக்கும் இடம் அப்படி.

“ இல்லாம?” ஜீவா எதிர் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்த அப்போது




சமாதிகளும் ஏதோ காட்டுச் செடியின் பூக்களும் நிறைந்த அத் தோட்டத்தின் வாயில் கேட்டைத் திறந்து கொண்டு வந்த நபரைப் பார்த்து ஜீவா திடுக்கிட மனோஜ் அதிர்ந்தான்!

அது ஜெகன்!

ஜெகன் ஜெஸி நினைவை மறந்து விட்டதாக நினைத்தானே?

அப்படி இல்லையா?

அதுவும் சரிதான்! எப்படி தன்னால் அசந்து கண் மூடும் வேளையிலும் ஜீவாவை மறக்க முடியவில்லையோ அப்படியே தானே ஜெகனுக்கு இருக்கும்?

மனோஜுக்கு பொட்டில் அடித்தது போல அந்த நினைவு வந்தது.

‘ தனக்காக பார்த்தானே? இவனை மறந்து விட்டானே? அது தான் பிரச்சனையா?'

அப்படி மறந்து விட்டதாக ஒரே அடியாகச் சொல்ல முடியாது. ஒரு சில முறை ஜெகனிடம் திருமணம் குறித்துப் பேசி இருந்தான் தான்.

அவன் அடியோடு மறுத்து விட இவனுக்கும் வேலை மாறுதல் அன்னையின் உடல் நலம் பேணுதல் ஜீவாவை சுற்றுதல் போன்ற வேலைகள் அணை கட்டியதில் ஜெகன் வாழ்வில் மூக்கை நாக்கை நுழைக்க வேண்டாம் என ஒதுங்கிதான் விட்டான். அப்படி விட்டிருக்கக் கூடாதோ?

ஜெகன் இவர்கள் இருவரையும் எதிர்பார்க்கவில்லை. ஏன் ? யாரையுமே எதிர்பார்க்கவில்லை.

மனோஜ் அவனை காப்பாற்றிய பிறகு அவன் பாடுபட்டு திருப்பிக் கொடுத்த உயிரை மறுதலிப்பது அவனுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என நினைத்தான். அத்தோடு தன் தற்கொலை எண்ணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இருந்தான்.

ஆனால் உள்ளம் உலைக் களமாக கொதிக்கும் போது அவனுக்கு இருந்த ஒரே ஆறுதல் ஜெஸியின் கல்லறை தான்.

மேரி ஜெகனை அவன் மருத்துவ மனையில் இருந்து வந்ததும் வந்து பார்த்து விட்டுப் போனார்.

அது வரை யாரிடமும் சொல்லாததை சம்பந்தப் பட்ட அவனிடம் சொன்னார்.

சும்மாவே அவள் இறந்த பின் தற்கொலைக்கு முயன்றவன் நெஞ்சம் தனக்காகத்தான் அவள் தன்னை மாய்த்துக் கொண்டாள் என்ற விபரம் தெரிய வந்த பின் உருகி கரைந்தே விட்டது.

இந்த கதை எல்லாம் அவன் மனோஜிடம் சொல்லிக் கொள்ளவில்லை. அவனிடம் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்து இருந்தான்.

இந்த விசயங்கள் மனோஜுக்கு தேவை இல்லாத மன அழுத்தைதையோ குழப்பங்களையோ தரலாம். அது எதற்கு? என நினைத்தான் ஜெகன்.


“ நல்லா இருக்கீங்களா? “ ஜீவா மெல்லிய புன்னகையுடன் கேட்க அந்த இடத்தில் அவனிடம் அது ஒட்டாத கேள்வி என நன்றாகவே புரிந்தது மூவருக்கும்.

“ என்ன இங்கே?” அதுவும் ஜீவாதான்.

மனோஜ் இருவரையும் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

“ அது இருக்கட்டும். உங்க ரெண்டு பேருக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் கல்யாணம் ஆனதா இப்போதான் கேள்வி பட்டேன்.

அடுத்து உங்களைப் பார்க்கத்தான் வர்றதா இருந்தேன். “ என்றான் ஜெகன்.

“ ஓ. நம்பிட்டோம் “ சிரிக்காமல் சொன்னான் மனோஜ்.”

அதன் பிறகு மற்ற விசயங்கள் பேசாமல் சிறிது பிரார்த்தித்து விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

அப்போதைக்கு வேறு எங்கும் செல்ல யாருக்கும் மனமில்லாததால் அடுத்து மனோஜ் வண்டியை ஒரு உயர் தர சைவ உணவகத்தில் நிறுத்திய போது ஜெகன் _

“ இன்னிக்கு விரதம் “ என்றான்.

“ ஏன்?”

“ சும்மாதான் “

“ ஜுஸாவது சாப்பிடுங்க “

மேலும் மறுக்க கூச்சமாக இருந்ததால் மனோஜ் தரும் ஜுஸ் மகிமை அறியாத ஜெகன் உடன் செல்ல ஆரம்பித்தான்.

அங்கே ஒரு சதுர மேசயைச் சுற்றி அமர்ந்த பின்பு

“ அப்புறம்? கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கவான்னு அம்மா கேட்கிறாங்க “

“ யாருக்கு சார்?”

“ ம்? எனக்குத்தான். இந்தப் பொண்ணுக்கு சாப்பிடத் தெரியலியாம். அதான் “


அவன் சொன்ன மற்ற வசனங்களைக் கண்டு கொள்ளாமல் ஜீவா அவனை முறைத்தாள்.

ஜெகன் சிரித்து விட்டான்.

சிரிக்கும் போது எத்தனை களையாக இருக்கிறான்? _ மனோஜ் வியந்தான்.


அதற்குள் ஆர்டர் எடுக்க வந்து விட

தங்கள் இருவருக்கும் இலகு உணவு ஏதோ ஆர்டர் செய்தவன் ஜெகனுக்கு மாதுளை சாறு கொண்டு வரச் சொன்னான்.


“ இப்போ சொல்லுங்க. கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கவா?”

என்றான் மீண்டும்.

“ ஏன் இந்தக் கொலை வெறி?” ஜெகன் பட்டுக் கொள்ளாமல் பேசினான்.

“ நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படுறேன்? நீங்க எப்படி நிம்மதியா இருக்கலாம்?”

விளையாட்டாக ஆரம்பித்து ஆதங்கமும் கோபமுமாக மனோஜ் சொல்ல ஜீவா எரிச்சலானாள்.

“ நீங்க என்ன பெருசா கஷ்டப்பட்டுட்டீங்க?”

“ அதெல்லாம் உன்கிட்ட சொல்லி அஞ்சாறு ஆச்சு. வந்த வேலையாவாவது பாக்க விடு மா. சாப்பிடறதைச் சொன்னேன் “

மனோஜ் ஜெகன் பக்கம் திரும்பினான்.

“ நீங்க சொல்லுங்க பாஸ். எப்படி இருக்கீங்க? அம்மா எங்க கல்யாணம் முடிச்சதும் வீட்டுக்கு வந்து ஒரே புலம்பல் “ என்று நிறுத்தினான் .

பே’ என பார்த்தாள் ஜீவா.

“ உங்களை இனி விட மாட்டேன் ஜெகன். எப்போ கல்யாணத்தை வச்சுக்கலாம்?”

மனோஜ் மீண்டும் ஆரம்பிக்க ஜீவா தலையில் கை வைத்துக் கொண்டாள்

அந்த சமயம் சர்வர் ஒருவர் வந்து மூன்று டம்பளர்களில் தண்ணீர் ஊற்றி வைத்தார். அவர் லேசாக சிரித்தது போல இருந்தது ஜீவாவுக்கு.

“ பார்க்கிறவங்க ஏதோ நீங்க அவருக்கு லவ் டார்ச்சர் குடுக்கிறதா நினைப்பாங்க “
தர்ம சங்கடமாக நெளிந்தாள் அவள்.

“ இதுலாம் உனக்கு அடுக்குமா? உன்னை பச்சையா லவ் டார்ச்சர் பண்ணேன். 'எப்போ ஐ லவ் யூ சொல்லுவ?'ன்னு கேட்டேன். அதை தூசு மாதிரி உதறிட்டு இது உனக்கு லவ் டார்ச்செராமா? நாலு பிள்ளைங்க பெத்து நல்லா இருப்ப நீ!

ஆமா? மனசுல உள்ளதை சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்றது தப்பா?”

ஜீவா அவன் பேச்சை காற்றில் விட்டு விட்டு

“ நீங்க தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா. அவருக்கு கேக்கத் தெரியலை. எனக்கும் தான். ஆனா நீங்க கல்யாணம் செய்து குடும்பமும் குழந்தையுமா இருக்கனும்னு நான் ரொம்ப ஆசைப்படறேன். உங்க வாழ்க்கைதான். ஆனா அதுல என் பிரென்ட் இருக்கா. அவளால எல்லோரும் சந்தோசமா இருக்கறதைப் பார்த்துதான் எனக்கு பழக்கம்.” ஜீவா பேசப் பேச மனோஜ் முணுமுணு என முகத்தை வைத்துக் கொள்ள ஜெகனோ திடுக்கிட்டான். அவன் முகத்தைப் பார்த்து விட்டு _

“மேரி மா எல்லாம் சொன்னாங்க. தயவு செய்து கல்யாணம் செய்துக்கோங்க. எங்களுக்கும் அது தான் சந்தோசம் “ என்றாள் தண்மையாக.

அர்த்தமில்லாமல் மனோஜ் அவசர அவசரமாக ஜீவாவைக் கிளப்பினான்.

“ இன்னும் ரொம்ப தூரம் போகணும். இப்பவே ரெஸ்ட்ரூம் போய்ட்டு வந்திரு” என துரத்தி விட்டான்.

“ ப் ச்! நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க?” ஜீவா உக்கிரமானால்.

“ எல்லாம் எனக்குத் தெரியும். போடி “ என அனுப்பி விட்டு ஜெகன் முகத்தை அளவிட்டான்.

அது அவனுக்கு கூச்சத்தை தர முகம் லேசாக திருப்பிக் கொண்டான்.

“ ஜெகன். பிளீஸ் நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்புறமா ச்சும் என் வாழ்க்கை ஆரம்பிக்குதா பார்க்கிறேன் “ என்றான் பரிதவிப்புடன்.

ஜெகன் மலைத்து விட்டான்.

“ என்ன சார் சொல்றீங்க?” உண்மையில் அவனுக்குப் புறிந்ததை ஒத்துக் கொள்ளவே முடியவில்லை அவனால்.

“ நீங்க நினைக்கிறது சரிதான். அவளுக்கு ஏதோ ஒரு கில்டினஸ் இருக்கு. அது எங்க லைஃப்பை டிஸ்ட்ரப் பண்ணிட்டு இருக்கு. உங்க கல்யாணம் அதுக்கு தீர்வா அமையும். அதுக்காக உங்களைக் கட்டாயப் படுத்தலை. ஆனா நீங்களும் ஒரு கல்யாணம் செய்துகிட்டா உங்க ஃபியுசர் பத்தி கவலை இல்லாம நாங்க இருப்போம். இல்லைனா அவளுக்கு மட்டும் இல்ல _ எனக்கும் கஷ்டமா இருக்கும். கொஞ்சம் யோசனை பண்ணுங்களேன். உடனே ஒன்னும் செய்ய சொல்லலை. ஆனா கல்யாணம் பண்ணிக்கோங்க பிளீஸ் “

ஜெகன் மறுப்பாக தலை ஆட்டினான்.

“ என்னால் முடியாது. நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ என் மேல அக்கறையா பேசுறத்துக்கு நான் ரொம்ப குடுத்து வச்சி இருக்கணும். ஆனா கல்.. கல்யாணம்லாம்… அதை அப்புறம் பார்ப்போம் சார் “

அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஜீவா வந்து விட்டால். வந்தவள் _

‘ என்ன பேசினீங்களா?’ என மனோஜிடம் கண்ணால் கேட்க அந்த உரிமைப் பார்வையில் சொக்கிப் போனான் அவன்.

இவன் ஜொள் முகத்தைப் பார்த்து சலித்தவள் ஜெகனிடம் திரும்பினாள்.

“ என்னாச்சு அண்ணா? “ என்றாள்.

‘ அண்ணா! ‘ அவனை இத்தனைப் பாசத்துடன் அழைக்கிறாள்? இவள் வாழ்வு தன்னால் மலருமெனில் அதற்காக எனவும் செய்யலாமே? ஆனால் திருமணம்… ‘

ஏகன் சொன்னதை இவளிடம் சொல்ல விரும்பாத மனோஜ் பேச்சை மாற்றினான்.

“ அதெல்லாம் இருக்கட்டும். எங்களை எப்போ வந்து பாக்கிறதா இருந்தீங்க?” என்றான்.

“ இன்னிக்குதான். ஜெஸிமா வைப் பார்த்து ட்டு அடுத்து உங்களைப் பார்க்கலாம்னு நினைச்சேன். நிஜமா” மனோஜ் நம்பிக்கை இல்லாமல் பார்ப்பதை பார்த்து விட்டு


“ நீங்க வேனா ஜமுனா கிட்ட கேட்டு பாருங்க. ஜெஸி மா வுக்கு ஒரு பூச்செண்டு வாங்கிட்டு இருக்கும் போதே ஜமுனா கிட்ட உங்களை பார்க்க வர்றதா சொன்னேன். “

கூடுதல் தகவல் சொல்ல ஆரம்பிக்க

“ யாரு ஜமுனா?” என்றனர் ஒரே குரலில் இவல்கள் இருவரும்.

“ நம்ம கடைக்கு எதிர்ல பூக்கடை போட்டு இருக்கு அந்தப் பொண்ணு. சின்ன பொண்ணு தான். ஏதோ செவ்வாய் தோசமாம். இன்னும் கல்யாணம் ஆகலியாம். வீட்டுக்கு ஒரே பொண்ணு. பொக்கேலாம் செய்து தரும்.

ஜெஸிக்கு எப்பவும் அந்த பொண்ணு கிட்ட தான் பூங்கொத்து வாங்குவேன். அழகா செஞ்சு தரும். பூ வாங்கப் போகும் போது என்ன எதுன்னு ஏதாவது கேட்கும். அப்படித்தான் உங்களைப் பார்க்க வரதையும் சொன்னேன். நம்பர் தாரேன். நீங்க கேளுங்க “ என்று தன் போனை எடுத்தான் ஜெகன்.

அர்த்தமாக பார்த்த மனோஜை 'ஆ' வெனப் பார்த்தாள் ஜீவா.
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
Aiy na than first 🥰🥰🥰
En ஜீவன் என்றும் உன்னுடன் அப்படினா, முதல் அர்த்தம் வரும், அவள் சாகும் போது ஜெகன் தானே அவ மனசில் இருந்தான், அப்படினா அவ எப்படி மனோ வா என் ஜீவன் அப்படினு உரிமையா சொல்ல முடியாது இல்லையா....

ஜெகன்க்கு ஜமுனா தான் ஜோடி போலவே🤩🤩🤩

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,601
Location
Coimbatore
Aiy na than first 🥰🥰🥰
En ஜீவன் என்றும் உன்னுடன் அப்படினா, முதல் அர்த்தம் வரும், அவள் சாகும் போது ஜெகன் தானே அவ மனசில் இருந்தான், அப்படினா அவ எப்படி மனோ வா என் ஜீவன் அப்படினு உரிமையா சொல்ல முடியாது இல்லையா....

ஜெகன்க்கு ஜமுனா தான் ஜோடி போலவே🤩🤩🤩

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நல்ல சொல்லுங்க இந்த ஜீவாவுக்கு 😊

ஆனா என் ஜீவன் என்றும் உன்னுடன் ன்னு கார்டு ல தானே எழுதி இருந்துது🤔

Thank you so much for your lovable comments sahi ma 💕💕💕
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
நல்ல சொல்லுங்க இந்த ஜீவாவுக்கு 😊

ஆனா என் ஜீவன் என்றும் உன்னுடன் ன்னு கார்டு ல தானே எழுதி இருந்துது🤔

Thank you so much for your lovable comments sahi ma 💕💕💕
அப்ப அதா யாரு எழுதி வெச்சி இருப்பா, ஒரு வேலை ஜெஸியே எழுதி இருப்பாளா, இறக்கரதுக்கு முன்னாடி🤔🤔🤔🤔
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,110
Reaction score
4,601
Location
Coimbatore
அப்ப அதா யாரு எழுதி வெச்சி இருப்பா, ஒரு வேலை ஜெஸியே எழுதி இருப்பாளா, இறக்கரதுக்கு முன்னாடி🤔🤔🤔🤔
விரைவில் அடுத்த ud யில் சகி மா💕💕💕
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,782
Reaction score
6,707
Location
Germany
ஜெகன் இவ்வளவு நல்லவனா நீ😃😃😃 பாவம் ஜெஸ்ஸிக்குதான் குடுத்து வைக்கல😩😩😩

அது யாரு ஜமுனா🧐🧐🧐🧐. ஒரு வேளை ஜெகனுக்கு ஜோடியாக்க ஆத்தர் புதுசா கொண்டு வந்திருப்பாங்களோ🤔🤔🤔🤔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top