• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் மனது தாமரை பூ 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
12
நெல்லைக்கு வர வர கஜாவின் ஆட்கள் அவனுக்கு கற்பகத்தைப் பற்றி துளசியைப் ற்றி ஏன் தாமரை செல்வனைப் பற்றி கூட சொல்லி இருந்தார்கள்.

அப்போதே லேசு பாசாக துளசியைப் பற்றி விசாரித்து வைத்தான். வயசுப் பொண்ணா? எதுக்கும் ‘சீட்டாட்ட ஜோக்கரா வச்சிக்கலாம்’ என்று நினைத்து வைத்திருந்தான்.

இப்போது அவளைப் பார்க்கவும் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டான். வேம்புவை பார்த்து தன் விருப்பம் சொன்னதில் இருந்து அவனுடன் இருந்தது அந்த தாலி. ஒன்று வேம்பு அல்லது திருமலை இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் போடுவது என்று வந்தவன் இப்போதும் சட்டைப்பையில் வைத்திருந்தான்.
அது அவனது தோல்வியின் சின்னம். அவன் வெற்றி பெற்ற பிறகு அதனை தலையை சுற்றி எறிந்து விடலாம் என்று வைத்திருந்தவன் இப்போது தன் வாழ்க்கையில் வழுக்கி விழுந்தான்.

இந்த திருமணம் அவன் வாழ்வை புரட்டிப் போடப் போகிறது என்று தெரியாமல் செய்து விட்டான் பாவம். அவனும் குடும்பம் பிள்ளை குட்டிகள் என்று வாழ கொடுத்து வைத்திருப்பது அந்தத் திருமணத்தால் என்பதை அப்போது மட்டுமல்ல இப்போதும் உணரவில்லை அவன்

இதுவரை யாரையும் மதிக்காத வாழ்க்கை. எதையும் பொருட்படுத்தா வாழ்க்கை. அவன் நினைத்ததை மட்டும் செய்யும் வாழ்க்கை.

தன் அக்கா கணவரிடம் மட்டும் பொண்ணைக் கொடுத்த காரணத்தால் சிறிது விலக்கம் உண்டு. அதுவும் அவனது அப்பா ‘பொண்ணை குடுத்த இடத்துல பார்த்து பதனமா பேசனும்ப்பா’ என்று தலை தலையாக அடித்துக் கொள்வதால்தான். போனால் போகிறதென்று அடக்கி வாசிப்பான்.

------------------------------------------------
தாலியை கட்டிவிட்டு நிமிர்ந்தான் கஜா. துளசியை தன் பிடியில் இருந்து மெல்ல விடுவித்தான். தாலி கட்டி முடித்துவிட்டு கண்களை நிமிர்த்திய போது துளசியின் அழுது சிவந்த குழந்தை முகம் அவன் கண்களில் மட்டும் இல்லாமல் கருத்திலும் பட்டு இம்சித்தது.

கஜாவா? கொக்கா? ‘விட்டுத்தள்ளு விட்டுத்தள்ளு’ என்று அப்போதைக்கு ஒதுக்கினான். அவனுக்கு பைசல் பண்ண வேண்டிய பாக்கி நிறைய இருக்கிறதே? அதை முதலில் முடிக்கலாம். அப்புறம் பார்க்கலாம்.

உடல்வலியும் மன வலியுமாய்த் தவித்தாள் துளசி. வேதனை தாங்க முடியாமல் அவளது வாய் மூச்சுக் காற்றுக்காத் திறந்து திறந்து மூடியது. என்ன நடந்தது என்று ஒரு வழியாக உணர்வு வந்தபோது அவளது கழுத்தில் தங்கத்தாலி இருப்பதைக் கண்டாள்.

“ஐயோ இது எனக்கு வேண்டாம்” என்று அதை கழற்ற முயன்ற அவளை கையைப் பிடித்துத் தடுத்தான் கஜா. “இதைக் கழற்றினா உனக்கு வேற பேர்; கழற்றாம உன் வீட்டுலேயே இருந்தா அதுக்கு ஒரு பேர். ஆனா இதோட இந்த கஜா கூட வந்திட்டன்னா உனக்கு நல்ல பேரு” என்றான் மிரட்டலாக.

இவன்தான் கஜாவா? இவனைப் பற்றி அரசல் புரவலாக அவள் கேள்விப்பட்டதில் தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஏதோ கெடுதல் செய்தவன் என்பது வரை அவளுக்குத் தெரிந்திருந்தது. ஐயய்யோ…இவன் என்ன காரியம் செய்துவிட்டான்? அவள் இனி என்னாவாள்?

“எந்த நொல்ல பேரா இருந்தாலும் பரவாயில்ல. நான் உன்கூட வரவே மாட்டேன்” என்று திமிறினாள் துளசி.
கஜாவின் குணம் ஓரளவு தெரியம் ஆதலால் துளசியின் எதிர்காலம் என்னாகுமோ என்று பயந்தனர் திருமலையும் சண்முகமும். எதுவும் செய்ய முடியாமல் அவர்களை தடுத்த அந்த அடியாட்களைப் போட்டு புரட்டி எடுத்தனர். சிறிதுநேரம் அந்த இடம் ரணகளமாக இருந்தது. கஜா எதிலும் பட்டுக் கொள்ளவில்லை. இவர்கள் அடிப்பதையும் அவர்கள் அடிவாங்குவதையும் பார்த்துக் கொண்டு நின்றான்.

அன்று ஏதோ கோவிலில் விஷேஷம் என்பதால் பெரும்பாலான அண்டை வீட்டார் கோவிலுக்குச் சென்று இருந்தனர். இவர்கள் கோவிலுக்கு முதல் நாளே போய்விட்டு வந்தபடியினால் இன்று வேறு சினிமா செல்வதாக இருந்தனர். வீட்டில் இருந்தது வயசான பெரியவர்களும் அவர்கள் கண்காணிப்பில் இருந்த குழந்தைகளும். ஒரு சில வீடுகளில் வயதுப் பெண்கள் இருந்தனர். எனவே யாரும் வெளியே வரவில்லை. அவர்களுக்குத் தெரியவில்லை.
இந்த சத்ததில் ஒருசில வயதான தலைகள் எட்டிப்ப பார்த்தன. ஆனால் பயத்தில் ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு
.
இந்த அடியாட்களை அடித்து என்ன புண்ணியம்? எலும்புத் துண்டுக்கு வந்தவர்கள் அவர்கள் . அவர்கள் கஜாவிடம் வேலை பார்ப்பவர்கள் . சண்முகத்தைப் பற்றி தெரியும் என்றாலும் சம்பளம் கொடுக்கும் முதலாளியை விட வேறெதுவும் அவர்களுக்குப் பெரிதாகப் படவில்லை.

‘இப்படிபட்ட பொறுக்கியா இந்த அழகுத் தேவதைக்கு கணவனாக வரவேண்டும் ‘ என்று நினைத்த வேம்புவும் கமலாம்மாவும்; விக்கித்து நின்றனர்.

பெற்ற தாய் கற்பகமோ நிலை குலைந்து சரிந்து அமர்ந்து விட்டார். ஏதோ விபரீதம் என்று அவரை ஒண்டிய தாமரை செல்வன் தன் தாயின் முகத்தில் தன் பிஞ்சுக் கரங்களால் தட்டி எழுப்பினான்.

நிலமையின் தீவிரத்தை உணர்ந்த சண்முகம் செய்வதறியாது திகைத்தான்; . அவன் ஆனந்திக்காக பார்ப்பானா? துளசிக்காக பார்ப்பானா? மண வாழ்விழந்து தம் மக்களுக்காக மட்டும் வாழும் மற்ற இரு பெண்களுக்காக பார்ப்பானா?
திருமலை ஏதாவது முடிவு செய்வானா? என்று அவனைப் பார்த்தால் அவனும் கை கால் மரத்த நிலையில் நின்று கொண்டிருந்தான்.

பொறுப்பை தானாக தன் கையில் எடுத்துக் கொண்ட கஜா ,
தான் தாலி கட்டிய துளசியை யார் அனுமதியும் பெறாமல் தனது காரில் ஏற்றப் போனான்ய.
“இதப்பாரு கஜா. அவளுக்கு பதினெட்டு வயசு இன்னும் ஆகலை. அதுக்குள்ள நீ தாலி கட்னது சட்டப்படி தப்பு. “ என்று ஆரம்பித்தார் சண்முகம்.

“அப்படின்னா என்ன பண்ணுவிங்க? அவளுக்கு பதினெட்டு வயசு ஆகிற வரை ஹோம்ல வச்சிருப்பாங்க. என்னை போலிஸ்ல புடிசசுக் குடுப்பிங்க. அவ்வளவுதானே? குடுங்க குடுங்க. நான் எப்படி வெளிய வரணும்னு எனக்குத் தெரியும். ஆனா உங்க பொண்ணு பேரு நாறிப் போயிடும்” என்று முக்கியமான வாhத்தையைக் கூறி அனைவர் வாயையும் அடைத்தான்.

எப்படியோ உணர்விற்கு வந்த கற்பகம் உடனே “ என் கண்ணே” என்று அவளை பார்த்து ஓடி வந்தார்
துளசியும் ஓடிப்போய் தன் தாயை கட்டிக் கொண்டாள். தாமரை செல்வனை கீழே இறக்கி விட்டிருந்தார் அவர். அவன் ஒரு திண்ணையைப் பிடித்துக் கொண்டு நின்று இவர்களை பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.
இப்போது அனைவரின் குற்றம் சாட்டும் பார்வையும் தன் மீது தான் என்பதாக உணர்ந்தாள் ஆனந்தி. இந்த கஜா அவளை இப்படி தலை குனிய வைத்து விட்டானே? அந்த சிறு பெண்ணிற்கு அவளால் எத்தகைய துன்பம் வந்து விட்டது?

“கஜா…” என்று கர்ஜித்தாள் ஆனந்தி. அதை தூசு போல தட்டிவிட்டு அவளை தெனாவெட்டாகப் பார்த்தான் கஜா.
“என்னடா இது? இந்தப் புள்ளை வாழ்க்கையை கிள்ளு கீரைன்னு நினைச்சியா? இல்ல உன் வாழ்க்கையைத்தான் அப்படி நினைச்சியா? போன வாரம் வரைக்கும் ஏதோ சொல்லிட்டு சுத்தி எங்க உயிரை வாங்கின. இப்ப பைத்தியம் மாதிரி என்ன வேலை இது?” என்று அவள் கேட்க கேட்க அதை மதிக்காமல் அவன் திருமலையைப் பார்த்தான் வேம்புவை அவன் பார்க்கவே இல்லை.

“என்ன திருமலை.. இப்ப உன் தங்கச்சிக்கு நான் பருஷன். உனக்கு மச்சான்.. இதுவரை என்னை நீங்க யாரும் மதிக்கலை. இப்ப என் மதிப்பு வேற. இதை ஒத்துக்காம உன் தங்கச்சியை வீட்டோட வச்சிக்கறதோ வேற கல்யாணம் பண்ணிக் குடுக்கறதோ உன் இஷ்டம். ஆனா அவ வாழ்க்கைல நான் இருக்கேன். அப்ப கண்டிப்பா உன் வாழ்க்கைலயும் நான் இருப்பேன். உன் நெஞ்சுல உறுத்திகிட்டே இருப்பேன்” என்று தெளிவாக பேசவும்
வேம்பு பதட்டத்துடன் திருமலை அருகில் வந்து பயத்தில் ஒட்டி நின்றாள்.

“இல்லன்னா இவ என் தங்கச்சியே இல்லன்ன சொல்லிட்டு ஒதுங்கிடு. அதுதான் புத்திசாலித்தனம்.” என்றான்.
ஏனென்றால், இவ்வளவும் செய்த பின் ‘இவள் என் சொந்த தங்கை இல்லை’ என்று திருமலை கவலையின்றி இருந்து விட்டால் அவன் பட்ட பாடு வீண் அல்லவா? அதனால் முன்கூட்டியே அனைவர் முன்னால் திருமலைக்கு செக் வைத்தான்.

திருமலை பக்கத்து திண்ணையில் தலையில் அறைந்து கொண்டு உட்கார்ந்து விட்டான். அவனால் அல்லவா அவன் சின்ன தங்கைக்கு இத்தனை கொடிய தண்டனை?
அவன் அருகில் தரையில் அமர்ந்த வேம்பு தவித்துப் போனாள். இப்படி ஒரு நிலையை யாரும் எதிர்பார்க்காத போது இப்போது உன்னால்தான் எல்லாம் என்ற மற்றவர்… மற்றவரைப் பற்றி அவளுக்கு என்ன வந்தது? அவள் கணவன் நினைத்து விட்டால்?

அவள் யாரையும் வஞ்சிக்க நினைக்கவில்லையே? நினைவு தெரிந்த நாள் முதல் அவள் விரும்பிய அவள் மாமன் மகனை கட்டிக் கொண்டதில் ஏன் பிறர் இத்தனை பிரச்சனை செய்கிறார்கள்?

துளசி பாவம்! எத்தனை சின்னப் ணெ;. இவள் இங்கு வந்த நாள் முதல் ‘மதனி மதனி ‘என்று இவர்கள் திருமணத்திற்கு முன்பே இவளை தன் அண்ணன் மனைவியாக வைத்துப் பேசி இவளுக்கு நம்பிக்கை ஊட்டிய வண்ணத்துப் பூச்சி. இப்படி இந்த பச்சோந்தி கஜாவின் கையில் சிக்கிக் கொண்டதே?

திருமலையின் அருகில் இன்னொரு பக்கம் அமர்ந்த சண்முகம் “இப்ப பொண்ணுக்கு அண்ணனா நீ ஒரு முடிவு சொல்லு. நாங்க கட்டுப்படறோம்” என்றான்.

“ அடேங்கப்பா! இவன் முடிவைக் கேக்கத்தான் நின்னுகிட்டு இருக்கேனா நான்?” என்று ஏளனம் பேசினான் கஜா.
“இவன் முடிவை எதிர்த்து நீ எதுவும் செய்ய நான் விட மாட்டேன். இதுல உங்க அக்கா பாதிக்கப்பட்டாலும் அதுக்கு நான் கவலைப்பட மாட்டேன்.” ஏன்று பொறுப்பை திருமலைக்கு தள்ளி விட்டவன் அவனுக்கு தான் உறுதுணையாக இருப்பதை உறுதி செய்தான்.

ஆனந்திக்கு எதுவென்றாலும் கஜா பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை. என்றே அனைவரும் நம்பினர், ஆனந்தி உட்பட. எனவே தனது ஆற்றாமையை முடிந்த அளவு மறைத்துக் கொண்டு அமைதியாக நின்றாள் ஆனந்தி. அவளஒ; கண்களில் தெரிந்த கலவரத்தை கண்டு கொண்டான் திருமலை. ஆனுந்திக்கும் எந்த பாதகமும் வரக்கூடாது என்பது அவன் முடிவு.

திருமலை கற்பகத்தைப் பார்த்தான். அவர் கண்களில் பயம் கலந்த சம்மதம் தெரியவே சற்று அதிசயித்தான்.
மகள் தன்னை நோக்கி வந்த போது அவள் கழுத்தில் மின்னிய மாங்கல்யம் அவரை வெகுவாகப் பாதித்தது. தன் மகள் தொங்கத் தொங்கத் தாலி கட்டிக் கொண்டு நன்றாக வாழ வேண்டும் என்பது எல்லோரையும் போல அவரது ஆசையும்தான். . ஆனால் அவர் அதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்று நிம்மதியாக இருந்தார். மாப்பிள்ளை தேட வேண்டுமே? தன் தகுதிக்கு இப்போதே ஒரு ஒரு இடமாக மனதில் கணித்துக் கொண்டு இருந்தார். அந்த மாப்பிள்ளைகள் எல்லாம் கூலி வேலை செய்பவர்கள். அதில் ஒருவனுக்கு மகளை கல்யாணம் செய்து கொடுத்து வீட்டோடு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார்.

ஆனால் இந்தத் திருமணத்தை உடைக்க அவருக்கு மனம் வரவில்லை. அதே நேரம் மகள் அவனிடம் துன்பப்பட நேரிடுமோ? என்ற பயம் வேறு அவரை நிலை குலைய வைத்தது.

அவரை கண்களால் கேள்வி கேட்ட திருமலைக்கு தன் மனநிலையைக் கண்களாலேயே கடத்தி இருந்தார்.
முடிவை தான் சொல்வதை விட சண்முகம் சொல்வதுதான் சரி என்று முடிவுக்க வந்தவன் கற்பகம் கடத்திய செயதியை சண்முகத்திற்கு கடத்தினான். ஆதை சரியாக் புரிந்து கொண்ட சண்முகம்

“கஜா , துளசி இனி உன் சம்சாரம்தான். அதுக்கு மாறு சொல்லலை. ஆனா அந்த புள்ளையை நீ எந்தக் கொடுமையும் செய்திரக் கூடாது. எங்களால கூட இருந்து பார்க்கவா முடியும்? துளசிக்கு எந்தக் கெடுதலும் வராதுன்னு செல்லிட்டு நீ அவளை கூப்பிட்டுப் போ. துளசி அதுக்கு சம்மதிக்கலைன்னா அது உன் பாடு.
இது எது நடந்தாலும் சரி நடக்கலைனாலும் சரி. இனி நீ அக்கா மாமான்னு சொல்லிகிட்டு என் வீட்டுப் பக்கம் வந்திராதே.” என்று முடித்தான்.

---------------------------------------------------------

துளசி கீழே தரையில் அமர்ந்து விட்டாள்.
இவன் இந்த முரடன் அவளுக்கு எந்த தீங்கும் செய்துவிடக் கூடாது என்று மனதில் எத்தனை சாமியை வேண்டிக் கொண்டு ஓடினாள்?ஆனால் எல்லா சாமியும் அவளை கைவிட்டு விட்டனவே?
அவளது மெல்லுடல் மட்டும் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தது. கைகள் தன்னைப் போல் அவள் உடம்போடு ஒட்டி இருந்தது. அவன் கட்டிய தாலியினை ஏதோ அசிங்கம் அவள் உடம்பில் பட்டதுபோல் உணர்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுப் புறம் உரைத்தது அவளுக்கு. அவள் பொருட்டு ஏதோ பேச்சு நடக்கிறதே? கஜா பேசிக் கொண்டு இருந்தான்.

“இனி இந்தத் துளசி என் சம்சாரம். அவளை நான் ஏன் கஷ்டப்படுத்தப் போறேன்? என் பொண்டாட்டியை நான் எப்படி வச்சிருக்கேன்னு பார்த்து தெரிஞ்சுக்குங்க.

அப்புறம் என்ன? உங்க வீட்டுக்கு வரக் கூடாதாமா? இல்லனா மட்டும் உங்க வீட்டுக்கு வர துடியாத்தான் இருக்கேனாக்கும்? நீங்க இங்க வந்த இத்தனை நாளும் உங்க தொழிலை அங்க நான் எந்தக் குறைவும் இல்லாம கவனிச்சுகிட்டதுக்கு நல்ல பதிலடிதான் இது. பரவாயில்லை.
 




smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
யாருக்கும் நான் விட்டுக் குடுத்ததாத்தான் இருக்கும். இனி உங்க வீட்டுக்கு என்ன? நீங்க இருக்கற ஊரே வேண்டாம். நான் மேட்டுப் பாளையம் போறேன். அங்கயும் எனக்கு சொத்து சுகம் இருக்கு. இனி தாய் மாமா நாய் மாமான்னு உங்க புள்ளைக்கு உறவு கொண்டாட நீங்க வந்திராதிங்க. திருமலை இத்தனைக்கும் காரணம் நீ. உன்னை விட மாட்டேன்“ என்று நின்று அடித்தான்.

பின் துளசியிடம் திரும்பி “ இந்தா இனி நீயும் இங்க போக்குவரத்து வச்சிக்கக் கூடாது” என்று தன முதல் கட்டளையை அளித்தான்.

அவனது பேச்சில் தன் அக்காவிற்கு குழந்தை பிறக்கும் என்ற அவனது அன்பு வெளிப்படவே ஆனந்தி அழுதுவிட்டாள். இந்தப் பயலுக்கு ஏன் இத்தனை வீராப்பு. இதனால் இழக்கப் போவது வேறு யாரும் அல்ல. அவள் அல்லவா? அவளுக்குப் பிறந்த வீட்டு சொந்தமே அற்று விட்டதே? பார்க்கலாம் காலம் எல்லா புண்களையும் ஆற்றும். அவள் தம்பி அவளிடம் வருவான். அவள் தனக்குத் தானே தேற்றிக் கொண்டாள்.
--------------------------------------------
துளசி சிறு பெண்தான். அதற்காக ஒரே அடியாக சின்னவளும் இல்லை. அவளுக்குத் திருமணமாகிவிட்டது. இனி பிரச்சனை செய்தால் அது அவள் வாழ்வை மட்டும் அல்லாது அனைவர் வாழ்வையும் பாதிக்கும். இந்த கஜா அவளை கஷ்டப்படுத்த மாட்டேன் என்கிறான். அது உண்மையோ? பொய்யோ? அதை நம்பி அவனுடன் செல்வதே சரி என்று பட்டது. பிரச்சனை என்றால் தெய்வமாகி விட்ட அவள் தந்தை அவளைக் காப்பாற்ற மாட்டாரா? இல்லை என்றால் அந்தத் தந்தையிடமே போய்விடுவது என்று முடிவு செய்தாள்.

“நீ என்னம்மா சொல்ற?” என்று சண்முகம் கேட்டபோது சம்மதமாக தலையை மட்டும் அசைத்தாள்.
அது புரிந்த அனைவரும் அதிர்ச்சியும் ஆனந்தமுhக திணறினர். ஆனந்தி ஓடிப்போய் துளசிக்கு தன் கழுத்தில் இருந்த தடிமனான தங்க முல்லை மொட்டு மாலையைப் போட்டாள்.

“இந்தா அதெல்லாம் எதுக்குப் போடறே?” என்று கஜா அதட்டவும் , ஆனந்தி
“ நான் என் தம்பி பொண்டாட்டிக்கு சீர் செய்ய வேண்டாமா?” எனவும் அவன் அமைதியாகிவிட்டான். இதுவே கடைசி சீர்.
கற்பகம் மெல்ல ஆனந்தியிடம் “அவங்களை பால் பழம் சாப்பிட்டுப் போகச் சொல்லுங்க” என்று முணுமுணுத்தார்.
தன்னிலைக்கு வந்த ஆனந்தி “ நீ மேட்டுப் பாளையம் போறது இருக்கட்டும். எனக்கு சீர் செய்யாதது இருக்கட்டும். மொதல்ல வீட்டுக்குள்ள வந்து பால் பழம் சாப்பிட்டுப்போ “ என்றாள்.

ஆயிரம் இருந்தாலும் அவனது ஒரே சகோதரி. இனி பார்க்கவே முடியாது போலத் தெரிகிறது. இருந்தாலும் மற்றதுகளைப் பார்க்கவே பிடிக்கவில்லை அவனுக்கு.

“ஏதா இருந்தாலும் உன் கையால குடு. வீட்டுக்கு உள்ளலாம் வர முடியாது. “ என்றான்.
அவன் இவ்வளவு சொன்னதே சந்தோஷமாகிவிட ஆனந்தி இருவருக்கும் அந்த திண்ணையில் உட்கார வைத்து பால் பழம் கொடுத்து அனுப்பினாள்.

துளசி தன் தம்பியை தூக்கிக் கொண்டாள். இனி இந்தக் குட்டிப் பயலைப் பார்க்க முடியாதா? தன்னை மீறி குழந்தைக்கு கன்னத்தில் முத்தமிட்டாள். அதை யார் பார்த்தார்களோ? இல்லையோ? கஜா பார்த்தான். மெல்ல சிரித்துக் கொண்டான்.

இரண்டு சகோதர உறவுகள் பிரிந்தன அன்று. காரணம் வேம்புவோ ? திருமலையோ ?கஜாவோ ?விதியோ? யாருக்குத் தெரியும்?

குழந்தையை தன் தாயிடம் கொடுத்து விட்டு நெஞ்சில் வலியும் கண்களில் நீருடனும் கஜாவின் காரில் ஏறி அமர்ந்தாள் துளசி.

தங்கள் கண்களை விட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கும் அந்த நான்கு சக்கர வாகனத்தை ஆனந்தியும் கற்கமும் கண்களில் நீர் நிறையப் பார்த்தனர்.
ஏன்ன பிரச்சனை இருந்தாலும் தன் மனைவியை விட்டுக் கொடுக்க மாட்டான் தனது மருமகன் என்றநம்பபிக்கை கற்பகத்திற்கு வந்திருந்தது.

கழுத்தில் தங்கத் தாலியும் தங்கச் சங்கிலியும்மின்ன ஒரு அரசி போல காரில் ஏறி அமர்ந்த தன் மகளைப் பார்த்த போது அவருக்கு; கொஞ்சம் பெருமையாகக் கூட இருந்தது. பெண் குழந்தைகள் பிறந்த போதே அவர்களை அவர்கள் திருமணத்தின் போது பிரிவதற்கு தயாராகி விடுகிற தாய்கள் அல்லவா?

தன் அக்கா தன்னை விட்டு எங்கோ செல்வதை உணர்ந்த தாமரை செல்வன் “சூசி(துளசி) தாத்தா(டாட்டா)”என்றான்.
துன்பத்தில் உழன்ற மற்றவர்களுக்கு அவனது இந்தச் செயல் பெரிதும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது.
---------------------------------------------------------------------

அப்புறம் பொள்ளாச்சியில் எல்லாவற்றையும் குத்தகைகு கொடுத்துவிட்டு சிலவற்றை விற்றுவிட்டு கள்ளிப்பட்டியில் குடி புகுந்தான் கஜா. ஏற்கெனவே வரப் போக இருந்ததால் அங்கே காலூன்றுவதில் சிரமம் இருக்கவில்லை அவனுக்கு.
கஜாவின் தாய்க்கு தன்னுடைய மருமகளை முதலில் அவ்வளவாகப் பிடிக்க வில்லை. ஆனால் மகனிடம் ஓரளவு செல்வாக்கு பெற்றுவிட்ட மருமகளை பெரிதாக கஷ்டப்படுத்தவும் இல்லை.

வந்த இரண்டாம் மாதமே கருவுற்றுவிட்ட தன் மருமகளிடம்; அவர் அதற்கு மேல் பிரச்சனை வைத்துக் கொள்ளவில்லை.

துளசிக்கு ஐந்தாம் மாதம் பழம் போடும் சீரை கஜா வீட்டிலே செய்த போதுதான் அதற்கு வந்திருந்த உறவுக்கார பெண் மூலம் ஆனந்திக்கு ஆண்குழந்தை பிறந்த விசயம் துளசிக்குத் தெரிந்தது.

கஜாவிடம் கேட்டபோது பிறந்த உடனே மருத்துவமனையில் வைத்துப் பிள்ளையைப் பார்த்ததாகச் சொன்னான். ‘அன்றுதான் டல்லாக இருந்திருக்கிறான் போல’ என்று நினைத்துக் கொண்டாள்.

அப்புறம் துளசி காரை வைத்துக் கொண்டு பொள்ளாச்சிக்கு போய் ஆனந்தியையும் கதிரவனையும் பார்த்துவிட்டு அவனுக்கு அத்தை காப்பையும் அணிவித்துவிட்டு வந்து கஜாவிடம் வாங்கி கட்டி அவனை சமாதானமும் செய்துவிட்டாள். “நீங்க சொன்ன மாதிரி நான் என் வீட்டுக்கு; போகலை. ஊங்க அக்கா வீட்டுக்குத்தான் போனேன்” என்று ஒரே அடியாக அடித்து விட்டாள்.

அவர்களுக்கு முதலில் பிந்த ஆண் குழந்தைக்கு ராஜா என்று பேர் வைக்க ஆசைப்பட்ட கஜாவிடம் கூட ஒரு பேர் சேர்த்து ராஜ்கமல் என்று பெயர் வைத்தது துளசிதான்.

அவள் கஜாவை திருமணம் வெய்து கொள்ளக் காரணம் வேம்புதான். அவள் பெயரை வைத்தாள் இவன் போட்டுத்தள்ளி விடுவான். அதனால் அவளைப் பெற்ற மகராசியின் பெயரை மறைமுகமாக வைத்து தான் தன் கணவனுடன் நன்றாக இருப்பதை உணர்த்தினாள் அவள்.

ஒரு சில விசயங்களில் அவள் விட்டுக் கொடுத்திருக்கிறாள். ஆனால் பல விசயங்களில் அவனுக்கே தெரியாமல் அவன்தான் அவளுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறான்.

என்ன இருந்தாலும் கடவுள் நம்பிக்கை மட்டும் போய்விட்டது அவளுக்கு. ஆயிரம் இருந்தாலும் அவள் பிறந்தவீடு அவளுக்கு இல்லாமல் போய்விட்டதே?

திருமலைக்கும் வேம்புவிற்கும் சில வருடங்கள் குழந்தை இல்லை. அதற்கு வேம்பு ஒரு வில விஷேஷங்களுக்குச் செல்ல தனது மாதவிடாயை தள்ளிப் போட சிறு வயதில் எடுத்துக் கொண்ட மாத்திரைகள் ஒரு காரணம் என்றார்கள்.
கல்லைக் கண்ட இடமெல்லாம் கடவுள் என்று கருதி அவள் கும்பிட்ட தெய்வங்களின் சக்தியோ , விடாது எடுத்துக் கொண்ட மருத்துவ சிகிச்சையோ அதன்பின் ஏழு வருடங்கள் கழித்து செந்தாமரை பிறந்தாள்.

தங்கள் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்த அவளுக்கு வசந்தா என்றுதான் முதலில் பெயர் வைத்தனர். சுருக்கமாக ;வது’ . வது என்றால் மணமகள் என்று அர்த்தமாம்.

செந்தாமரை பிறப்பதற்கு ஒரு வருடம் முன்னால் துளசி யுவராணியைப் பெற்று எடுத்தாள்.

தன் பிறந்த வீட்டினரை பிரிந்த ஏக்கமோ என்னவோ ஆனந்தியின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. அவளது இறுதி மூச்சு தன் சகோதரனைக் கண்ட பின்பே அடங்கியது. அந்த நேரம் பேறு காலத்திற்கு வேம்பு தன் தாயுடன் நெல்லைக்குச் சென்று விட்டாள். கஜாவை அழைப்பதாக பேச்சு வந்த போதே பேறுகாலத்தை காரணம் காட்டி அவள் புறப்பட்டு விட்டாள். ஏனோ அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது அவளுக்கு.

திருமலையும் உடன் சென்று இருந்தான். ஆனால் கஜா வந்து பார்த்துவிட்டு போய்விடுவான்,அதன்பின் ஊருக்கு போகலாம் என்றுதான் நினைத்து இருந்தார். அப்படி இல்லாமல் இவர்கள் போவதற்குள் ஆனந்தியின் ஆவி அடங்கி விட்டது. அவளுக்கும் கஜாவிற்கும் கடைசி தகவலாக அவர்கள் மகள் பிறந்த விபரம் தெரிவிக்கப்பட்டது. அதை வைத்து தான் விளையாடிக் கொண்டு இருக்கிறான் கஜா.

“இவ்ளோதான் ப்ரோ எனக்குத் தெரியும் என்று பிளாஸ்பேக்கை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர் கதிரவனும் தாமரை செல்வனும்.

“தென் ஏதோ சாமியார் சொன்னாருன்னு என் ஆளுக்கு பேரை செந்தாமரைன்னு மாத்திட்டாங்க. நான் அவளை வதுன்னுதான் கூப்பிடுவேன். அப்படி கூப்பிடக் கூடாதுன்னு என்னைக் கண்டாலே ஓடுவா.

அந்த சாமியார் இவ இவங்க அப்பாவைப் பார்த்தா அவருக்கு ஆகாதுன்னு சொல்லி இருக்கார். திருமலை மாமாவுக்கும் இவ பிறந்த நாட்கள்ல உடம்பு முடியாம போகவும் சாமியார் சொன்னது சரிதான்னு முடிவு கட்டி அவளோட சின்ன வயசில அவளை நெல்லைக்கு கற்பகத்தம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இதை நான் கமலாம்மா என்கிட்ட சொன்னாங்க. இதுல எனக்கு உடன்பாடு இல்ல. ஆனா என்னால எதுவும் செய்யவும் முடியலை. ஏன்னா நானே அப்ப சின்னப் பையன்தான்.

அங்கதான் ப்ரோ அவ உங்க கூட வளந்திருக்கா. எப்பவாச்சும் பேசும் போது ‘செல்வாண்ணே’ன்னு சொல்லுவா. “ என்று கதிரவன் சொல்லவும் தாமரை செல்வன் மலர்ந்தான்.

“என் தங்கச்சி அவ” என்று உணர்சிபூர்வமாகக் கூறினான் அவன்.

“என் அம்மா இறந்தப்புறம் நாங்க தனியா நின்னோம். அப்ப உங்க ஆளு செந்தாமரையோட அப்பா அதுதான் உங்க மாமானார் வந்து அவளைக் கூட்டிட்டுப் போனாரு. நான் மட்டும் தனியா நிக்கிறதைப் பார்த்த துளசி அக்கா மாமாகிட்ட சண்டை போட்டு என்னை கூடவே கூட்டிட்டு வந்திட்டாங்க.
இங்க வந்து இந்த சில்வண்டு ராணிகிட்ட அல்லு போட வேண்டியதாப் போச்சு”.

கதிரவன் “ஏன்?” என வியந்தான்

“நம்மளை மதிக்கலை ப்ரோ. அப்படியே அப்பன் புத்தி. அப்புறம் ஒருநாள் உட்கார வச்சு பழைய கதையை சொல்லி வேப்பிலை அடிக்கவும் தட்டு தடம் மாறிடுச்சு.”
“என்னவாம்?”
“எனக்கு அம்மா வழியில எந்த சொந்தமும் இல்லை. இப்ப உங்களை விடறதா இல்லை. அதனால கல்யாணம் பண்ணிக்கச் சொல்றா? இதுக்காகல்லாம் கல்யாணம் பண்ண முடியுமா ப்ரோ?”

“உங்க கதையை அப்புறம் பேசலாம். இப்ப நான் இங்க வந்ததுக்கு காரணம் என்ன? உங்களை மட்டும் தனியா தள்ளிகிட்டு வந்ததுக்கு காரணம் என்ன இம்புட்டு கதையும் பேச வேண்டிய காரணம் என்னனு எதாவுது புரியுதா பாஸ்?

“ஒன்னியும் புரியலியே?”

“அவ்வளவு அறிவருந்தாத்தான் நீங்க எப்பவோ சம்சாரியா ஆகி இருப்பிங்களே? “ என்று கண் அடித்தவன் பாயிண்டுக்கு வந்தான்.

“ப்ரோ, எனக்கு யுவராணியை கல்யாணத்துக்குப் பேசறாங்க” என்று நிறுத்தி தாமரை செல்வனின் அப்பட்டமான அதிர்ச்சியை மனதில் பதித்துக் கொண்டான்.

“என் அம்மாவோட ஆசை அது. ஆனா உங்க துளசி அக்கா அதுக்கு என் அம்மா இறக்கும் தறுவாயிலகூட ஒத்துக்கலை. அதனாலதான் அப்பா எனக்கு வேற இடங்கள்ல பொண்ணு பார்த்தார். எல்லாம் தட்டிப் போகவும்..”

“அதுவே தட்டிப் போச்சாக்கும்?”

“அதுவா எப்படிப் போகும்? எல்லாம் ஐயாவோட அதிரடிதான். நமக்கு செந்தாமரை முக்கியம். அதனால் எப்படியோ பாடுபட்டு என் பேர் வராமல் தள்ளி விட்டேன்”

“என்ன ஒரு வில்லத்தனம். இவ்வளவு செஞ்ச ஜித்தனுக்கு என் ராணியை விட்டு தள்ள முடியாதா?”

‘இவர் ராணியாமா? இருக்கட்டும். இருக்கட்டும்’ மனதோடு புன்னகைத்தான் கதிரவன்.

“அதுதான் சண்டை போட்ட ரெண்டு பெரிசுகளும் கல்யாண விசயத்துல காம்ரமைஸ் ஆகிடுச்சுங்க. கஜா மாமா காம்ப்ரமைஸ் ஆனதுக்கு நீதான் காரணம் போல. உன்னை விட நான் பெட்டர்னு நினைச்சிருப்பார். ஆயிரம்தான் இருந்தாலும் நான் அவர் அக்கா மகன் இல்லியா?” என்றபோது தாமரை செல்வன் முகம் சுருங்கினான்.

“பயப்படாதிங்க பாஸ் . இந்தக் கல்யாணத்துக்கு துளுசி அத்தை சம்மதிச்சதாலதான் இத்தனையும் நடக்குது. அவங்க முடியாதுன்னு சொல்லவும்தான் அப்பா வேற இடம் பார்த்தாரு. இல்லன்னா வெயிட் பண்ணி யுவராணியை எனக்கு கல்யாணம் செய்து வச்சிருப்பாங்க. இப்ப உங்க துளசி அக்கா நிலை தடுமாறக் காரணம் என்னனு கேட்டு சொல்லு. அப்படியே உன் ஆளு யுவராணியை கல்யாணம் பண்ணிக்கோ. என் பிராப்ளம் இங்க சால்வ்ட்”; என்று கையை விரித்தான் கதிரவன்.

“இதெல்லாம் இங்க வரும்போதே தெரியுமா?” என்று சந்தேகமாககக் கேட்டான் தாமரை செல்வன்.

“வரும் போது ஐடியா இல்லை. ராணிட்டயும் அத்தைகிட்டயும் பேசி சமாளிச்சு இந்தக் கல்யாணத்தை நிறுத்தத்தான் இத்தனை நாளு இங்க தங்க வந்தேன். ஆனா வந்த அன்னிக்கே ‘மொசப்புடிக்கிற உங்க ரெணடுபேர் முகங்களையும் பார்த்து நிம்மதி ஆகிட்டேன். அது வயசான பார்ட்டிங்க ரெண்டுக்கும் தெரியலைனாலும் அந்த அப்பாவி ராஜ்கமலுக்குத் தெரியலைனாலும் அனுபவமுள்ளவன் எனக்குத் தெரியும் ப்ரோ” என்று சிரித்தான்.
“அது சரி. ஊங்க பிராப்ளம் இங்க சால்வ்ட்னா வேற எங்க இன்னும் தீராம நீளுது பாஸ்?”
“வேற எங்க? என் ‘வது’ கிட்ட தான். ஆயாசமாகச் சொன்னான் கதிரவன்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Sashima logo paartthu 1seccon tension aitten...appuram paartthaa unga story???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top