• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் மனது தாமரை பூ- 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
6​

முல்லைப் பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தார் வேம்பு. நேரம் மாலையாகத் தொடங்கி இருந்தது. தாமரை வீட்டிற்கு வந்த நாள் முதல் இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் அவளுடனே இருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக அப்பா இரவில் வீட்டில் தங்குகிறார். அவளிடம் பதினோரு மணி வரை எதைப் பற்றியாவது அல்லது அவளது எதிர்காலம் குறித்தாவது ஏதோ ஒன்று பேசிக் கொண்டு இருக்கிறார். அப்பா அம்மா பாட்டி மூவர் முகங்களிலும் மலர்;சசி தென்படுகிறது. அதுவும் ஏன்? அது அவளுக்கும சந்தோசம்தான் என்றாலும் இதுவரை இருந்த விலகல் ஏன்? இப்போது இந்த மறுகல் ஏன்?

“அம்மா” என்று அழைத்தாள் செந்தாமரை
தினமும் காலையில் மல்லிகையும் மாலையில் முல்லை ஜாதிப்பூ போன்றவையும் தொடுத்து தன் அன்னையால் செந்தாமரைக்கு வழங்கப்படும்.
தலைபின்னி முகம் கழுவி அவற்றை வைத்துக் கொள்வதே அவள் செய்யும் அதிகபட்ச அலங்காரம்.
இப்போது பூ வைத்தபின் தான் அழகாக இருப்பதாக மட்டும்தான் அவளுக்குத் தோன்றியது. ஆனால் மணப்பெண் போல இருப்பதாக் கூறி பக்கத்து வீட்டு அத்தை ‘தெரிந்தவர்களிடம் வரன் பார்க்க சொல்லி வைக்கவா’ என்று கேட்க அவளுக்குக் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.
“சொல்லு தாமரை” கை தன் போக்கில் வேலை செய்ய மகளிடம் வினவினார் வேம்பு.
செந்தாமரை வீட்டுக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. ஆரம்ப குதூகலம் குறைந்து அமைதி வந்திருந்தது. படிக்க வேண்டிய பாடங்களுக்கு கால அட்டவணை போட்டு விட்டாள். ஆனால் மனதில் குடையும் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் படிக்க முடியாது என்பது உறுதி.
கேட்க முடிவெடுத்து விட்டாள். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. கேட்க நினைத்ததைக் கேட்க வேண்டுமே?
கடைசியில் பெரிதாக ஒன்றுமில்லாமல் கூடப் போகக் கூடும். அப்படிப் போனால் சந்தோஷம்தான்.
தாயும் மகளும் இப்போது அவர்களின் வீட்டில் இருந்தனர். வசதியான மாடி வீடுதான். வேம்பு தன் வழக்கம் போல சுற்றிலும் செடி கொடிகள் வைத்திருந்தார். அந்த மதிய நேரத்திலும் ஏ.சி இல்லாமல் வீடு குளுமையாக இருந்ததற்கு அவை தான் காரணம். குமலம்மா பேத்தி வந்தும் கால் நிற்க்காமல் தனது சாமியான சண்முகம் வீட்டில் வீடு பராமரிக்கச் சென்றிருந்தார். ஆனால் முன்பு போல் இல்லாமல் பேத்தியைக காண சீக்கிரம் வீடு; வந்து விடுகிறார்.
நேற்று அப்பா வீட்டுக்கு வரும் போது மகளுக்காக தோப்பில் இருந்த மாமரத்தில் இருந்து பறித்த பங்கனப்பள்ளி மாம்பழங்களைக் கொண்டு வந்திருந்தார்.

அந்த மாம்பழங்கள் அவளுக்குப் பிடிக்கும். எப்போதோ சிறு வயதில் திருநெல்வேலியில் இருக்கும் கற்பகம் பாட்டி வீட்டிலிருந்து ஊருக்கு வரும் போது இதே தென்னந் தோப்பில் அவ்வூரில் இருந்த அவள் வயதை ஒத்த குழந்தைகளோடு சேர்ந்து சுற்றிப் பார்த்து ஆட்டம் போட்டு விட்டு இந்தப் பழங்களையும் சாப்பிட்டு இருக்கிறாள்.
அப்போது அவனுடனும் விளையாடி இருக்கிறாள். அவன்; கதிரவன். இவர்களின் சாமியின் பிள்ளை. இப்போது இவளுக்குத் தொல்லை.

ஆனால் பிற்பாடு விபரம் தெரிந்த வயதில் அதே மாதிரி ஊருக்கு வந்த போது பிறர் பொருள் அது என்று அறிந்த பின் அதை சாப்பிடுவதை விட்டு விட்டாள்.
செந்தாமரை சின்ன வயதிலிருந்து தன் தந்தை வழிப் பாட்டி வள்ளியின் தோழி கற்பகம் வீட்டில்தான் ; வளர்ந்து வந்தாள். அப்புறம் கமலாம்மா?
கமலாம்மாவின் மகள் வேம்பு. மருதனின் மகன் திருமலை. கமலாம்மாவும் மருதனும அண்ணன் தங்கை. சிறு வயதில் இருந்து தன் தாய் வள்ளியை விட தனது அத்தை கமலத்திடம்தான் திருமலைக்கு ஒட்டுதல் அதிகம். வள்ளிக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போகவே தனது மகனை தன் அண்ணிககு வளர்க்கக் கொடுத்து விட்டார்.
மருதன் மறைந்த சில காலங்களுக்குள் வள்ளியும் இறைவனடி சேர்ந்து விட்டார். தாய்க்கு கொள்ளி வைத்த கையோடு தன் அத்தை கமலாம்மாவின் மடியில் படுத்து கதறி விட்டார் திருமலை.

அவரது குமுறலைப் பொறுக்க முடியாமல் கமலாம்மா சொன்னதுதான் ‘ உன்னை பெத்தது மட்டும்தான் திரு உன்ற அம்மா. ராவும் பகலும் உன்னை கண்ணுக்குள்ள வச்சிப் பாத்துகிட்டது நாந்தேன். என் மக வேம்புவை விட உன்னைத்தான் எப்பவும் நான் கவனிப்பேன் . இனி நான்தான் உன்ற அம்மா. ஊர்ல நாட்டுல பொண்டு புள்ளைக மாமியாரை அம்மானு கூப்பிடுதுக. நீ என் ரத்தம்யா. நீ என்னை இனிமே அம்மானுதான் கூப்பிடனும்’ என்று கட்டளையிட்டார். ‘இனிமே அம்மா இறந்துட்டானு நீ விசனப்படக்கூடாது’ என்று தேற்றினார்.
இது நடந்து பல வருடங்கள் ஆவதால் இந்தக் கதை ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.
அன்றிலிருந்து தன் அத்தையை அப்படியே அழைத்துப் பழகி விட்டார். அத்தை மகள் வேம்புவை மணந்த கதை தனி.

கற்பகம் - திருமலையின் தாய் வள்ளியின் தோழி - நெல்லையில் தன் கணவருடன் வசித்து வந்தார். அவர்களுக்கு ஒரு மகளும் மகனும். அந்த மகள் யார் என்பது இன்று வரை செந்தாமரைக்கு விளங்கவில்லை. அவரை அவள் பார்த்ததும் இல்லை. அவரது பெயராக ஏதோ ஒரு செடி பெயர் சொன்னார்கள். அது குறித்து பெரியவர்கள் அதிகம் பேச விரும்பாததால் செந்தாமரை அதை கண்டு கொள்ளவில்லை. ஒரு வேளை இறந்திருக்கலாம். ஆனால் அந்த மகளுக்குப் பின் வெகு காலம் கழித்துப் பிறந்த தாமரைச் செல்வனை நன்கு தெரியும் அவளுக்கு. !.
இவள் தனது எட்டாவது வயதில் திருநெல்வேலிக்குப் போனாள். அப்போது பருவ வயதில் இருந்த தாமரைச் செல்வனை வயதை வைத்து இவள் அங்கிள் எனவும் பொங்கிப் பொஙகி சிரித்தான். அப்புறம் அண்ணன் முறை வைத்து அழைத்தாள். அவளை கோழி அடை காப்பது போல அன்புடன் காத்து நிற்பான். அவன்தான் தன் சொந்த அண்ணன் என்றே சில வருடங்கள் வரை அவள் நம்பி வந்திருக்கிறாள். பின்பும் அந்த அன்பு அவளுக்கு மாறவில்லை. இப்போது அவன் ஏன் தனக்கு அண்ணனாக இல்லை என்ற ஆற்றாமை மட்டுமே மிஞ்சி நிற்கிறது.


செந்தாமரைக்கும் தாமரை செல்வனுக்கும் வெறும் எட்டு அல்லது பத்து வயது வித்தியாசம் தான் இருக்கும். சம்பந்தம் இல்லாத வயதுப் பெண்ணையும் ஆணையும் ஒரே வீட்டில் வைத்து வளர்ப்பது கத்தியில் நடப்பது போலத்தான். அதை வெற்றிகரமாக கையாண்டார் கற்பகம். அபபுறம் விதி வசத்தால் தன் குடும்பத்தை விட்டு இஙகே வாழும் அந்தக் குழந்தைக்கு எந்தக் கெடுதலும் வராதபடி போற்றி வளர்த்தார். தன் தோழி வள்ளியின் பேத்தியை தன் தோழியாகவே பாவித்து அன்பு செலுத்தினார். அதே சமயம் வயதுப் பெண்ணிடம் காட்டும் கண்டிப்பையும் கைவிட்டு விட வில்லை.

இத்தனை போராட்டம் ஏன்? பெற்ற ஒரே மகளைக் கூட தங்களுடன் வைத்து வளர்க்கத் தெரியாத இவர்களால் தானே? என்று செந்தாமரை எரிச்சலடைவாள்
இவள் பனிரெண்டாம் வகுப்பு முடித்த சமயம் கற்பகம் இறந்து விட என்ன நினைத்தார்களோ இவளது பெற்றோர் இவளை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்து விட்டனர். அப்போதும் தங்களுடன் வைத்துக் கொள்ளாமல் கோவையில் படிக்க அனுப்பி விட்டார்கள் என்பது வேறு விஷயம் .
அந்த இறப்பு வீட்டில் இந்த பெரியவர்களின் முகபாவனை இவளுக்குக் குழப்பமாக இருந்தது. ஆனால் யாருக்கோ யாரையோ பிடிக்கவில்லை? அல்லது யாருக்குமே யாரையுமே பிடிக்கவில்லையோ?
அப்புறம் தாமரைச் செல்வனை அவள் பார்க்கவே முடியவில்லை. செல்போன் எண் எல்லாம் வாங்கி வைத்து பேசும் தைரியம் அந்த பதினெட்டு வயது வரை பாட்டியால் வளர்க்கப்ட்ட அவளுக்கு இல்லவும் இல்லை. அப்புறம் அவனை மட்டுமே நினைத்து தேடிக் கொண்டிருக்கும் அளவு அவள் சும்மாவும் இல்லை. அவள் தன்னை தனது அடுத்த அடுத்த பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டாள்.

டாக்டர், இன்சீனியர் போன்ற படிப்புகளில் அவளுக்கும் ஆர்வமில்லை.
தன் குடும்பத்தினரின் நடவடிக்கைகளில் அவர்களும் அப்படி ஆசைப்பட்டதுபோல் அவளுக்குத் தெரியவில்லை. எனவே ஏதாவது கலைக் கல்லூரியில் சேர்ந்து மூன்று வருடங்களை ஓட்டலாம், பின்பு ஏதாவது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம் என்பன போன்ற நினைவுகள்தான் அவளுக்கு.
அப்படித்தான் படித்தாள். இப்போது படிப்பு முடியப் போகிறது எனும் போது இங்கிருந்து மெல்ல விலகலாம் என்று மிகுந்த மன வலியுடன் அவள் நினைததுக் கொண்டு இருக்க அவள் அப்பாவோ இங்கேயே இருந்து தங்கள் ஐயாவின் குடும்பத்திற்கு தொண்டு செய்யச் சொன்ன போது எரிச்சல்தான் வந்தது.
கல்லூரியில் சேர்க்கும் போதே சொன்னார்தான். அப்போது அது பெரிதாகப் படவில்லை. புதிய இடத்தில் தனியாக மேற் கொள்ள வேண்டிய சவால்களை நினைத்தும் மேற்படிப்பு குறித்தும் பயங்களும் குழப்பங்களும் இருந்தபடியினால் அதை அவள் மறந்தே விட்டாள்.
இங்கே கிளம்பி வரும் முன்; அவளை ஒருமுறை நேரடியாகச் சந்தித்து அவளது தகப்பனர் திரும்ப அவளுக்கு நினைவு படுத்தினார். அப்படி என்ன ராம ராஜ்ஜியமோ? தெரியவில்லை!
தான் உண்ணக் காத்திருந்த அந்த மாங்கனிகளை சுவாரசியமே இல்லாமல் பாhத்தாள் செந்தாமரை. அவள் மனம் தன் தந்தையைச் சுற்றி வட்டமிட்டது.
.
முன்பு எல்லாம் அவள் வீட்டில் இருக்கும் நாட்களில் அவள் அப்பா வீட்டில் தங்க மாட்டார். சண்முகம் ஐயாவின் தென்னந்தோப்பில் இருக்கும் குடிசையில் தங்கிக் கொள்வார். ஏதோ கணக்காம் வழக்காம்! அதைப் பார்க்க வேண்டுமாம்! பெரிய இவன் இந்த கவின்! இவனுக்குப் போய் இந்த அப்பா ஏன்தான் இப்படி பல்லாக்கு தூக்குகிறாரோ? தெரியவில்லை.
ஆனால் பகலில் மகளைப் பாசமாகப் பார்த்துக் கொள்வார் அவள் அப்பா. அதற்குத்தான் அவருக்குப் பெரும்பாலும் நேரம் இருப்பதில்லையே?

“என்ன கேட்கனும்னு வந்தியோ அதைக் கேளு” என்று தைரியமாக அனுமதி அளித்தார் வேம்பு. இனி தன் மகளை எதிர்கொள்ள பயப்படத் தேவையில்லை என்ற நினைப்பு அவருக்கு. ஆனால் இனிதான் அவள் தன் விஸ்வரூபத்தைக் காட்டப் போகிறாள் என்பது பாவம் அவருக்குத் தெரியாது.
அதுவரை படித்துக் கொண்டிருந்து தற்போது படித்து முடித்த மகாபாரதம் நூலை மூடி சாமியறையில் உரிய இடத்தில் வைத்தாள் செந்தாமரை
அம்மாவின் எதிரேஅமர்ந்தாள் அவள். அம்மா இந்தப் பேரை சொல்லி வனி என்னை கிண்டல் செய்திட்டே இருக்காம்மா. எதுக்கும்மா இந்தப் பேரு வச்சிங்க?” எனறு புகார் வாசித்தாள். எந்தப் பேர் வைத்தாலும் அவள் கிண்டல் செய்வாள் எனபது இருவருக்குமே தெரியும்.
அவள் கேட்டதற்கு முதலில் பதில் சொல்லாமல் மகளை ஏறெடுத்துப் பார்த்தார் வேம்பு.
“ஆமா உன் வனி உனக்கு ஏதோ கிப்ட் குடுத்தான்னு சொன்னியே? என்ன அது?”
தாங்கள் பேசப் போவது கனமான விசயம் என்ற அளவு புரிந்திருந்த பெண்கள் இருவரும் சுற்றி வளைத்துக் கொண்டு இருந்தார்கள்.
“ அதென்னம்மா? அவ பேரு வந்தனா இல்லியா? அதனால கை கூப்பி ‘வெல்கம்’ சொல்ற சின்ன சிலையை தந்திருக்காம்மா”
“நீ என்ன குடுத்தே?
“நான் என் பெயர் வர்ற மாதிரி சின்ன கிறிஸ்டல் லோட்டஸ் குடுத்தேன்” என்று சொல்லும் போதே அவள் முகம் சுருங்கியது.
அந்தக் கடையில் அந்த கவினையும் பார்த்தாய் நினைவு. ‘ இவள்தான் கண்டு கொள்ளாமல் வந்து விட்டாள், அவனாவது கூப்பிட்டுப் பேசினால் என்னவாம்? பெரிய மிட்டா மிராசுன்னு நினைப்பு’ என்று பல்லைக் கடித்தாள்.
“ம்ம்… அப்புறம் உன் பேர் விசயமா? .. என்று ராகம் இழுத்த வேம்பு மகள் தெரிந்துதான் இதைக் கேட்கிறாள் என்பதை அறிந்தவர் ஆதலால், “செந்தமரை மலர் சேத்துலயும் சகதிலயும்தான் வளருமாம். சின்னப்புள்ளயில நீ சகதியிலேயே கிடப்ப. அதான் உனக்கு அந்தப் பேரு” என்று தன் வாய்க்குள் சிரித்துக் கொண்டார்.
“ மா” என்று சிணுங்கினாள் மகள்.
மகளை அருகே அழைத்து அவளுக்கு தான் பெயர் வைத்த விதத்தைக் கூறினார் வேம்பு.
“ உங்க அப்பா பகவான் கிருஷ்ணன் மேல இருக்கிற அன்புலதான் கண்டிப்பாக அவர் ஆசைப்பட்டா ஆச்சா?. நா ஒத்துக்க வேணாமா? அது பசங்களுக்கு வைக்கிற பேர்னு வைக்கக் கூடாதுனு சொல்லிட்டேன்;. “
“அம்மா…. இது பெண்களும் வைச்சுக்கற பேர்தாம்மா. ஏம்மா என் லைப்ல கும்மி அடிச்சிட்டிங்க?” என்று ஏகத்தற்கும் பரிதாபக் குரலில் கேட்டாள் செந்தாமரை .
அதை மௌனமாகக் கடந்த வேம்பு தன் பழைய சிந்தனைகளில் லயித்தார்.
திருமலை தேர்ந்தெடுத்த பெயரை ஆண்கள் பெயர் என்று முடிவு கட்டி சிவந்த மென்மையான மலர் போன்ற தங்கள் மகளுக்கு செந்தாமரை என்று பெயர் தெரிவு செய்திருந்தாh வேம்பு. அதில் உள் அர்த்தத்துடன் அவர் தன் தாய் கமலத்தின் பெயரையும் கொண்டு வந்ததில் அவருக்கு ஒரு மனதிருப்தி.
பெரிய விநாயகர் கோவிலில் சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்தான் செந்தாமரை திருமலைக்குத்தான் தன் அப்பன் கிருஷ்ணன் இந்த பெயர் வைக்கும் விசயத்தில் ஏன் தன்னை கைவிட்டு விட்டான் என்று இன்னமும் புரியவில்லை. ஆனால் அதில் நிச்சயம் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் என்று நம்பியதால் பெரிதாகக் கவலைப்படவில்லை.
“ஆமா நம்ம வீட்ல எப்பவும் மகாபாரதம் இருக்கே? நீ படிச்சிருக்கியா அம்மா?” என்று தன் நீண்ட நாள் கேள்வியைக் கேட்டாள் செந்தாமரை மலர்.
“இதை நான் படிக்கலடி பாப்பா. உன் அப்பா என் கிட்ட சொன்னதுல என் தலையில ஏறுனதை உனக்குச் சொல்றேன் “என்றவர் தனக்குத் தெரிந்த அளவில் தன் கணவனின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கூறத் தொடங்கினார்.
.”மகாபாரதம்.- மாபெரும் இதிகாசம். பந்த பாசங்களினால் ஒரு மனிதனின் நிலைப்பாடுகள் தடம் மாறுவதையும் எப்பேர்ப்பட்ட மாமுனியும் மாவீரனும் தன் சொந்த பந்தங்களுக்காக சூழ்ச்சியில் சிக்கித் தவிப்பதையும் அதில் பார்க்கலாம். தன்னோட அப்பாவுக்காக ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுத்தவர் பீஷ்மர். உரிமையுள்ள தன் சகோதரர்களுக்குக் கூட அதே ராஜ்ஜியத்தை விட்டுக் கொடுக்காதவன் துரியோதணன்.” என்றவர் நிதானித்து கை வேலையைப் பார்த்தார்.

பெரிய மொட்டுக்களுடன் நடு நடுவே கனகாம்பர மொட்டினையும் சேர்த்து வைத்துக் கட்டி இருந்தார். பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது. கையோடு தொடுத்து வைத்திருந்த அரளிப் பூச்சரத்தையும் வீட்டு பூஜை அறையில் இருந்த சாமி படங்களுக்கு அணிவித்துக் கொண்டே அவளைப் பார்த்துப் புன்னகைத்தாh வேம்பு.
பொதுவாக வீடுகளில் சுந்தர காண்டம்தான் இருக்கும். திருமலை கிருஷ்ணபக்தர். மகாபாரத்தின் சூத்திரதாரி கிருஷ்ணரின் மீது அளவு கடந்த பிரமிப்பு. எனவே .மகாபாரதம் அவர் விரும்பி படிக்கும் நூல் ஆகும். அந்நூல் அவரது வீட்டில் பூஜையறையின் மேல்மாடத்தில் வைத்திருக்கும் கடவுள் பக்தி பாடல்கள் புத்தகங்கள் மற்றும் விபூதி பிரசாதங்களுடன் இருக்கும். அந்த ரேக்கில் கொஞ்சம் மலர்களைத் தூவி அழகு படுத்தினார் வேம்பு.
“ கண்டிப்பா இங்கே மலர்ச்சரம் வைக்கச் சொல்லுவார் அப்பா” என்று சிரித்தார். புத்தகங்களின் மேல் படாமல் அவற்றிற்கு கீழே மாலையாக தூவி அணிவித்திருந்தார்.

மகாபாரதம் படிக்கும் ஒவ்வொரு சமயமும் செந்தாமரைக்கு புதிதாகப் படிப்பது போல சுவாரசியமாக இருக்கும். அதில் நடைபெறும் நிகழ்வுகளை கற்பனை செய்து பாhத்து வியப்பாள். கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் பிறப்பு , அவர்களின் குழந்தைப் பருவம், துரியோதணனின் ராஜ்ஜிய ஆசை இறுதியாக அந்த பதினெட்டு நாள் யுத்தம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மொத்ததில் ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்று நெடுமூச்செறிவாள்.
இந்த வயதில் மகாபாரதம் படிக்கிறாயா? என்று வந்தனா ஆச்சரியப் படுவதுண்டு. ‘படித்துப் பார் நீயும் மெச்சூர்ட் ஆகிவிடுவாய் ‘என்று அவளின் தலையைச் செல்லமாகத் தட்டிச் சொல்லுவாள் செந்தாமரை.
தனது தாயிடம் தான் முக்கியமாக் கேட்க நினைத்ததைக் கேட்க இதை விட்டால் வேறு நல்ல சமயம் வருவது அரிது என்று தோன்றியது செந்தாமரைககு.

அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து அவரை ஒட்டி அமர்ந்தாள் செந்தாமரை. அவ்வளவுதான் அவள் தன் தாயிடம் எடுத்துக் கொள்ளும் உரிமை. அவளது தந்தைவழிப் பாட்டி கற்பகத்திடம் ஒட்டி உறவாடிய அளவுக்குக் கூட செந்தாமரை தன் சொந்தத் தாயிடம் பழகியது இல்லை.;
என்ன ஆனாலும் சரி கேட்டு விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தவள்,
“அம்மா வந்து சின்ன வயசுல என்னை ஏம்மா நீங்க என்னை உங்க கூட வச்சிக்கலை?” என்று கேட்டே விட்டாள்.
ஒரு பெரிய முன்கதையை மகளுக்குச் சொல்லுவதற்கு தன்னைத் தயார் செய்து வைத்திருந்தாலும் தன் குழந்தையின் ஏக்கமான இக்கேள்வியின் முன் அந்தத் தாயின் மனம் கலங்கித் தவித்தது. மகளை இக்கேள்வி எனும் பாணத்தை தன் மீது ஏவுமாறு விட்டு விட்டுத் தப்பித்துக் கொண்ட தன் கணவன் மீது ஆத்திரம் பொங்கியது. ஏன்? இதற்குக் காரணமான அனைவர் மீதும் ஏன் தன் மீதும் கோபம் வந்தது. தன் மீதும்தான்.

உண்மை அறிந்தபின் மகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருந்தது. ஆனால் ஓடம் ஒருநாள் கரை சேரத்தானே வேண்டும்? மனதை திடப்படுத்திக் கொண்டு இறைவனை மனதார வணங்கிக் கொண்டு தங்களின் முன்கதையைச் சொல்லத் துவங்கினார்.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top