• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் மனது தாமரை பூ- 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
7
“என்னோட சொந்த ஊர் இதே பொள்ளாச்சிதான்னு உனக்குத் தெரியும்தானே?” என்று மகளிடம் கேட்டார் வேம்பு.
“ஓ.. தெரியுமே… அதுவும் தெரியும். நீங்களும் திருநெல்வேலில கொஞ்சநாள் இருந்தீங்கன்னும் தெரியும். நான் பிறந்ததும் அங்கதான்னும் தெரியும் “ என்று கேட்காத சில கேள்விகளுக்கும் சேர்த்து பதிலளித்து அவரது பாரத்தை கொஞ்சம் குறைத்த செந்தாமரை ,
“அம்மா நீங்க என்னை ஏன் பாட்டி வீட்டுல விட்டு வளர்த்திங்கனு கேட்டதுக்கு ஏம்மா பழைய தேவையில்லாத கதை எல்லாம் சொல்றிங்க?” என்று சிணுங்கினாள் அவள்.


பூ வேலை , பூஜை வேலை எல்லாம் அதற்குள் முடிந்து இருக்கவே சமையல் வேலையில் இறங்கினார் வேம்பு.
திருமலைக்கு சுகர் இருப்பதால் மனிதர் காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளிலும் மருத்துவர் சொல்படி சப்பாத்திதான் சாப்பிடுவார். அதனால் இப்போது இரவு உணவிற்கு சப்பாத்தி மாவைப் பிசைந்து கொண்டே மகளைப் பார்த்தார் வேம்பு. தனது கணவருக்கும் தனக்கும் சப்பாத்தி சமைப்பதாகவும் வயதுப் பெண்ணான தங்கள் மகளுக்கு பூரி கிழங்கு செயவதாகவும் முடிவு செய்து இருந்தார். பூரிக்கு வைக்கும் மசாலாவையே சிறிது சப்பாத்திக்கும் வைத்துக் கொள்ளலாம் என்று முடித்து விட்டார் வேம்பு. திருமலை வெறும் சப்பாத்தியுடன் மெல்லிதாக அரிந்த தக்காளி வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு மிளகுத்தூள் தூவி சாப்பிட்டுக் கொள்வார். அந்த சமயம் சப்பாத்தி மடடும் சூடாக இருந்தால் போதும் அவருக்கு.


“ இப்போதைக்கு இல்ல . ஆனா நீ கேட்டதுக்கும் இந்த பழைய கதைக்கும் என்ன சம்பந்தம்னு அப்புறமாப் புரியும் உனக்கு. அதனால இந்தக் கதை உனக்கு அவசியம்தான் “ என்றவர் தொடர்ந்தார்.

கதிரவன் தாமரை செல்வனுக்கு சொல்லும் கதையும் வேம்பு செந்தாமரைக்கு சொல்லும் கதையும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தம் உடையது. இதன் மொத்த கதையும் பின்னாட்களில்… ஏன?; நேற்று வரை கூட உரியவர்களால் ஊகித்து அறியப்பட்டது.

-------------------------

முப்பது வருடங்களுக்கு முன் நடந்த கதை அது. பெண்ணைப் பெண்ணென ஏன் மனித ஜென்மமாகவே மதிக்காத மனிதர்கள் எங்கேயும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை மீண்டும் தன் வாழ்வின் வழி கசப்புடன் நினைவு கூர்ந்தார் வேம்பு.

அது சண்முகத்திற்கும் ஆனந்திக்கும் திருமணமான புதிது. ஆனந்தியின் சொந்த ஊர் பொள்ளாச்சிதான். சண்முகம் அப்போதும் பெருந்தனக்காரர்தான். ஆனந்தியின் குடும்பமும் அதற்குக் குறைந்தது அல்ல. சண்முகம் வீட்டிற்கு ஒரே பிள்ளை. ஆனந்தியுடன் பிறந்த ஒரே சகோதரன்தான் கஜேந்திரன்.

திருமணமாகி ஒரு வருடமானதும் இன்னும் பிள்ளைப்பேறு கிடைக்கவில்லையே என கலங்கித் தவித்த ஆனந்தி கோயில் குளங்களுக்குச் செல்வதையும் விரதம் இருப்பதையும் ஆரம்பித்திருந்தார். “ஓரு வருஷம் தானே ஆகுது? அதுக்குள்ள என்ன கொள்ளை போகுதுன்னு பறக்கற?” எனறு அவரை கேலி செய்து ஆறுதல் படுத்தியவர்தான் சண்முகம்.

தங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஆனந்தியின் தாயார் கூற உடனடியாக கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தார். அவர் ஒரு முடிவெடுத்தால் முடிவெடுத்ததுதான். யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். வேண்டுமானால் ஒத்து ஊதுவார்கள்.

ஆனந்தி பொள்ளாச்சியில் சண்முகத்தின் உறவுக்காரப் பெண்தான். எனவே நன்கு பேசிப் பழகிய அவரை சண்முகத்தின் பணியாளர்கள் மகாராணியாவே நடத்துவார்கள். சண்முகம் மட்டும் என்ன? ஆனந்தியின் முகத்தைப் பார்த்தே தனது நிலவரம் என்ன என்று அறிந்து கொள்வார்.

“ நம்ம குலதெய்வத்துக்கு நாப்பதோரு நாள் பதினோரு வித அபிஷேகம் செய்து புருஷனும் பொஞ்சாதியும் சேர்ந்து கும்பிட்டா குழந்தை பாக்கியம் கிடைக்கும்னு சொல்றாங்க மாமா”

“நாப்பத்தோரு நாளா ? ஓரேடியா அங்கேயே தங்கனுமா? அதெல்லாம் சரிவராது. அப்புறம் இங்கே வேலை சோலியை யாரு பார்க்கிறது?” என்று முதலிலேயே தடை போட்டார் சண்முகம்.

இல்லத்து அரசர்கள் தடை சொல்லி விட்டால் கண்டிப்பாக அதை நடத்தி முடிப்பது நம் பெண்களின் மனப் போக்கு. ஆனந்தியும் அதற்கு விதி விலக்கு அல்ல. எப்படியோ போராடி சண்முகத்திடம் சம்மதம் வாங்கி விட்டார்.

“இவ்வளவு ரிஸ்க் எடுக்கறோம் சரியா வருமா?” என்று கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டார் சண்முகம்.

“பொசுக்குனு அப்டிச் சொல்லிப் போடாதீங்க மாமா. எனக்கு நம்பிக்கை இருக்கு மாமா . கண்டிப்பா நமக்கு நல்லது நடக்கும் மாமா ” என்று வாக்கியத்திற்கு ஒரு மாமாவைப் போட்டுத் தாக்கி கண்களில் நீர் மல்கக் கூறினார்.

“இல்ல ஆதிமா. ஒருவேளை தப்பா வந்துட்டா?”

சண்முகம் தன் மனைவியை தனக்குச் சிக்கலான காலகட்டங்களில் கூப்பிடும் வாhத்தைதான் இந்த ஆதி.
கணவரின் அழைப்பிலேயே அவர் பயந்து போய் இருப்பது தெரிந்தது ஆனந்திக்கு.

“தப்பா ஒண்ணும் ஆகாது மாமா. நீங்க தெய்வத்தை நம்புங்க. அதுக்குக் கஷ்டமா இருந்தா உங்க அம்மாவை என் அத்தையை வேண்டிக்கோங்க மாமா. அவங்க நம்ம கூடவே இருந்து நமக்கு நல்லது செய்வாங்க மாமா “ என்று தேற்றினார் ஆனந்தி.

சண்முகத்தின் தாயார் சண்முகம் ஆனந்தியின் திருமணம் முடிந்த மூன்றாம் மாதம் உயிரை விட்டிருந்தார். அதற்கும் ‘புது மருமக வந்த நேரம் சரியில்ல ‘ என்று புரளி பேசிய பொல்லாப்புக்காரர்களை ,
“அவ வந்த நேரம் நாலு வருஷம் முந்தி சீக்குல செத்துப் போன என்ற ஐயனை நினைச்சு மறுகிக்கிட்டு இருந்த என்ற ஆத்தா, பொறுப்பை சரியான இடத்துல குடுத்துட்டோம்னு நிம்மதியா கண்ணை மூடிருச்சு” என்று கூறி வாய் அடைக்க வைத்து விடுவார்.

கிட்டத்தட்ட அது உண்மையும் கூடத்தான்.

சண்முகத்தின் தந்தை இதற்குக் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் தான் உடல் சுகமின்றி இருந்து இவர்களின் அதீத அக்கறையான கவனிப்பிலும் மண்ணைத் தூவி விட்டு இறந்திருந்தார்.

உடல் சுகமின்றி என்றால் , சாதாரண காய்ச்சல்தான் முதலில் வந்தது. அப்புறம் டைப்பாய்டு என்றார்கள் … ஃபுளு காய்ச்சல் …என்றார்கள். நாட்டு வைத்தியர் சொன்ன மருந்தைக் கொடுப்பதா அல்லது ஆங்கில மருத்துவம் பார்ப்பதா என்றுத் தயங்கிய சண்முகம் தன் தாயிடமே கேட்டு விட அவர்தான் சொன்னார்,

“ நாட்டு வைத்தியத்துல கண்டிப்பா சரி பண்ணிடுவாங்க.ஆனா அங்க சொல்லுற பக்குவப் பிரகாரம் இருக்கனும். உன்ற ஐயன் அப்படிப் பக்குவப் பிரகாரம் இருக்க ஒத்துக்காது. வீணா நம்மகிட்ட சண்டை போடறதோட ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா என்னால தாங்க முடியாது சாமி. நீ இங்கிலீசு டாக்டர்கிட்ட கேட்டு இங்கயே ஒரு நர்ஸை தங்க வச்சுனாலும் பாரு அப்பு.” என்று சொல்லி விட்டார்.

அதன் பிறகு சண்முகம் தன் நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு நடுத்தர வயது நர்ஸை வீட்டிலேயே தங்க வைத்துத் தன் தந்தையைக் கவனித்துக் கொண்டார். அவரும் தான் அறிந்த அளவு மிக நல்லபடியாகவே சண்முகத்தின் தந்தையைப் பார்த்துக் கொண்டார்.

இருப்பினும் கிட்டத்தட்ட குணமாகி வரும் சமயம் சண்முகத்தின் தந்தை டாக்டர் , நர்ஸ் மற்றும் அனைவரின் பேச்சையும் மீறி , ஒருவர் துணையும் இல்லாமல் மெல்ல எழுந்து நடந்து நடைப்பயிற்சியை அவர் இருந்த அறைக்கு உள்ளேயே செய்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். உடனடியாக எல்லோரும் போய்ப் பார்த்தும் அது வரை ஓரளவு தயாராகி வந்திருந்த அவரது உடல்நிலை பின்னேற்றத்திற்குச் சென்றது.

அதிலிருந்து பத்தாம் நாள் இறைவனின் திருவடியைச் சரண் அடைந்தார் சண்முகத்தின் தந்தை .

தன்னிடம் கேட்டுத்தான் எல்லாம் நடந்தது என்றாலும் , இதில் யாரையும் யாரும் குற்றம் சொல்ல முடியாது என்றாலும் , தான் அப்படிச் சொல்லி இருக்கா விட்டால் ? … ஒருவேளை தனது கனவரின் முடிவு இவ்வளவு சீக்கிரம் வந்திருக்காது என்ற மனப் புழுக்கம் அவரது தாயாரை வாட்டி வதைத்தது.

சண்முகம் எவ்வளவோ எடுத்துச் சொன்ன போதும் “இதில நீ தலையிடாத அப்பு. நாஞ் சொன்னதுதான் தப்பு” என்று அழுகையுடன் முடித்து விடுவார். அது அவரது அர்த்தம் இல்லாத குற்ற உணர்வு. சண்முகத்தின் தந்தை ஒழுங்காக சொல் பேச்சுக் கேட்டு நடந்திருந்தால்.. அல்லது நடக்காமல் இருந்திருந்தால் இந்தத் தொல்லை இல்லை என்று சொன்னால் ஒத்துக் கொள்ளாமல் தூரத்தை வெறிக்கப் பார்ப்பார் அவரது தாயார் . வெறித்த கண்களில் நீர் நிரம்பி ததும்பி வழியும்.

இப்படியே இரண்டு மூன்று வருடங்களை நெட்டித் தள்ளி இருந்தார்.. ஒருநாள் ஆனந்தியின் பெற்றோர் அவரிடம் நேரடியாக வந்து சம்பந்தம் பேசும் வரை.

எந்த உந்துதலும் இல்லாமல் இயல்பாகவே சண்முகத்திடம் ஏற்பட்ட பிரியத்தின் காரணமாக உறவுக்கார மாப்பிள்ளையான அவரை தங்கள் ஒரே மகளுக்கு மணமுடிக்க விரும்பினர் ஆனந்தியின் பெற்றோர்.

சண்முகத்திற்கு அதில் விருப்பம் இருந்தாலும் அவரது தந்தை மறைந்த சோகத்தில் அவரது தாய் இருக்கும் போது இந்த விசயம் பேசுவது அவருக்கு அவ்வளவு ஒப்புதல் இல்லை.

தனது மகனுக்கு மணமுடிக்கும் வயதாகிவிட்ட விசயம் அவர் அடிக்கடி நினைப்பதுதான். மகனிடம் அதுபற்றிப் பேசினால் தடாலடியாக மறுத்துவிடவே அவரும் ‘அததற்கு காலம் வரும் ‘ என்று தேற்றிக் கொள்வார். மகன் மறுத்ததற்கு காரணம் இப்போதல்லவா புரிகிறது அவருக்கு?

இருவரின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தியவர் அடுத்த மூன்றாம் மாதம் நிம்மதியாக இறைவனடி சேர்ந்தார்.

ஆனந்தியின் சொல் வேத வாக்காக,தனது தாயை நினைத்து வேண்டிக் கொண்டு , தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருநெல்வேலிக்கு பயணம் செய்தார் சண்முகம்.
------------------------------
“அது இருக்கட்டும்மா. நம்ம கதை இதுல எங்க வருது?” என்று பொறுமையின்றி கேட்டாள் செந்தாமரை.

சூடான பூரி மசாலாவை பளிங்காக கழுவித் துடைத்த தட்டில் வைத்து மகளிடம் கொடுத்துவிட்டு குடிப்பதற்கு குவளையில் குடிநீரும் கொண்டு வந்து வைத்தார் வேம்பு.

இதுதான்.. இந்த கவனிப்பு தனக்கு ஏன் பெருமளவு கிடைக்கவில்லை என்பதுதான் செந்தாமரையின் இத்தனைநாள் சோகம். இப்போது மணி இரவு எட்டு. கோவையில் பெரும்பாலும் இந்த சமயத்தில் அவளும் வந்தனாவும் போராடி சமைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இங்கே கையில் அன்புடன் வழங்கப்ட்ட அவளுக்குப் பிடித்தமான உணவு, முக்கியமாக குடிநீருடன். ஏனென்றால் அங்கே பல சமயங்களில் அவசரமாக சாப்பிட உட்காரும்போது குடிக்க தண்ணீர் எடுக்க மறந்துவிடுவாள் செந்தாமரை.

அந்த சமயங்களில் வந்தனா இருந்தால் அவளும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும் ஓடிப்போய் எடுத்துத் தருவாள். அவளது அன்பு அத்தகையது. அரிதான சில நிகழ்வுகளில் அவள் வீட்டில் இல்லை என்றால் இவளுக்கு கண்ணில் தண்ணீரே வந்துவிடும். வந்தனாவும் இல்லையென்றால் இவள் இந்த மூன்று வருடங்களில் என்ன ஆகி இருப்பாளோ?
பூரி சாப்பிட்டுக் கொண்டே கதையைக் மீணடும் கேட்கத் துவங்கினாள் செந்தாமரை.
----------------------------
கமலாம்மா அப்போதும் அங்கே பணி புரிந்து கொண்டுதான் இருந்தார். அவரது வேலை சமையல் மற்றும் வீட்டுப் பராமரிப்பு மட்டுமே. அவரது கணவர் அவர்களுக்கு திருமணமான பத்தாம் வருடம்; மழைக்குப்பின் வரும் புதுவெள்ள ஆற்றில் குளிக்கப் போனவர் திரும்பவே இல்லை. உடல் கிடைக்காததால் கமலம் இன்னும் அவர் உயிருடன் உள்ளதாக எண்ணி வாழ்கிறார். ஊரார் அறிந்த கதை இது என்பதால் எவரும் அவரை வீண்தொல்லை செய்வது இல்லை. தனது ஒரே மகளை அண்ணன் மகனுக்குக் கொடுக்க நினைத்தார். ஆனால்….

அவரது மகள் வேம்பு ஒரு பட்டாம்பூச்சியாக சுற்றிக் கொண்டு இருந்தாள் அப்போது. இந்த இடத்தில் நிறுத்திய செந்தாமரை,
“நீங்களே உங்க கதையை சொல்றதுனால என்ன வேணா சொல்வீங்களா?” என்று துள்ளினாள்.
“அது இருக்கட்டும். இங்கத்தி கதையைக் கேட்டுட்டு இதைத்தான் பரிட்சையில் எழுதப் போறியா என்ன?” என்று மகளை படிபபு குறித்து விசாரித்தார் அந்த அன்னை.

“படிப்பெல்லாம் ஏற்கெனவே முடிச்சாச்சும்மா. இனிமே ரிவைஸ் செய்தா போதும்” என்று அந்தப் பேச்சுக்கு அவசர அவசரமாக முற்றுப் புள்ளி வைத்தாள் செந்தாமரை.

கதையைத் தொடருமாறு கண்களால் கெஞ்சி கைகளால் செல்லமாக இறைஞ்சினாள் அவள். நீட்டிய அவள் கைகளில் குழம்பு கரண்டியை எடுத்து அதைவிட செல்லமாக தட்டிவிட்டு கதையைத் தொடர்ந்தார் வேம்பு…

------------------------------------------------
வேம்பு அப்போது பத்தாவதுவரை படித்துவிட்டு வீட்டில் தையல் தைத்துக் கொண்டு இருந்தார். அந்த காலத்தில் பதினெட்டு வயதிலேயே மணமுடித்து வைத்து விடுவார்கள். இவர் அத்தனை அழகிருந்தும் அந்த காலத்திற்கு என்று பார்த்தல் இத்தனை படிப்பிருந்தும் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டு வந்தார். காரணம் அவரது மாமன் மகன் திருமலைதான்.

திருமலைக்கும் அவருக்கும் ஒரே வயதுதான். ஒருவருக்கொருவர் மணந்து கொள்ள விருப்பமும் கூட . ஆனால் திருமலை வேம்புவை விட ஒருநாள் இளையவர். இந்த வயது வித்தியாசத்தை பூதாகரமாக்கி இரு வீட்டாரும் திருமணப் பேச்சைத் தவிர்த்து வந்தனர். பிடிவாதமான அப்போதைய இளசுகள் இருவரும் வேறு மணம் முடிக்க சம்மதிக்கவில்லை.

கமலாம்மாவின் அண்ணன் மருதன் சண்முகத்தின் பண்ணையில் தோட்டக் காவல் செய்தவர். கடும் உழைப்பாளி. தோப்பில் மட்டுமே அவரது பணி அப்போது. அன்றைய மாதச் சம்பளக்காரர்கள் வாங்கும் தினப்படியை விட மருதன் அப்போது அதிகமாகவே சம்பாதித்தார். ஆனால் தனது அழகான நோஞ்சான் மனைவி வள்ளியை பராமரிப்பதில் அவரது பணம் தீர்ந்துவிடும். அவர் பண்ணையில் பாம்பு கடித்து இறந்த போது திருமலைக்கு வயது இருபத்து ஒன்று. கல்லூரிப் படிப்பை அப்போதுதான் முடித்திருந்தார்.

சண்முகத்தின் தந்தை இறந்த நான்காம் வருடம் அது. இவர் வேலைக்குச் சேர்வதற்கு முன்பே சண்முகம் ஆனந்தி திருமணம் முடிந்திருந்தது.. சண்முகம் கமலாம்மாவை கமலாம்மா என்று கூப்பிடுவதால் அவரது மகள் வேம்புவை சண்முகம் தன் தங்கையாகவே பாவித்து வந்தார்.

இதே கதையை அங்கே கொடிவேரியில் வைத்து கதிரவன் சொல்ல கேட்டுக் கொண்டிருந்த தாமரை செல்வன் “எல்லாம் தெரியும் ப்ரோ. ஏன்னா இதுல நானும் வர்றேன்” என்று புன்னகைத்தான்.

ஆச்சரியமாக பார்த்த கதிரவனுடன் இப்போது தாமரை செல்வனும் இணைந்து கடந்த காலமாக அவனுக்குச் சொல்லப்பட்ட நிகழ்வுகளை பரிமாறிக் கொண்டான்.

இனி அந்த காலத்துக்குள் ……….
****

“ திருநெல்வேலில எங்க தங்குறது மாமா?” என்றாள் ஆனந்தி.
“இங்க நம்ம பரம்பரை வீடு ஒன்று இருக்கு. வசதி கொஞ்சம் குறைவாத்தான் இருக்கும். ஏன்னா நான் அதை இதுவரை கண்டுக்கலை. பங்காளி சண்டை நடந்து கடைசியா பங்குப்பணம் முழுசும் குடுத்து அதை நான் வாங்கினேன். அதுல சந்தோஷமான நிகழ்வுகள் எதுவும் எனக்கு இல்லை. ஆதான் அப்படியே விட்டுட்டேன்” விட்டேற்றியாக சொன்னான் சண்முகம்.

“ஒரு நல்ல விசயமா போறோம். கொஞ்சம் சந்தோஷமாத்தான் வாங்களேன்” என்று அலுத்துக் கொண்டாள் அவள்.

“ஓ. உன் காரியம் நடந்ததும் மாமான்னு கூப்புடறது கூட மறந்திருச்சு? வெவரம்தான்!” என்ற சண்முகத்தின் குற்றச் சாட்டை கண்டு கொள்ளாமல் “
ஊருக்குப் போகும் போது நான் நீலக்கலர்ல சேலை கட்டவா மாமா?” என்றாள் ஆனந்தி.

“வெவரம்தான்” என்று சிரித்தான் சண்முகம்.

சண்முகமும் ஆனந்தியும் நெல்லைக்கு ரயிலில் வந்து இறங்கிய போது அவர்களை அழைத்துச் செல்ல வந்த வெள்ளை நிற அம்பாசிடர் காரில் இருந்து இறங்கினான் திருமலை.

இவர்கள் இருவரும் நெல்லை வருவதாக முடிவானதும் அங்கே அவர்களின் வீட்டை தயார் செய்து குல தெய்வக் கோவிலில் சொல்லி வைத்து அனைத்து ஏற்பாடுகளும் செய்தவன் அவன்தான்.

இவர்கள் இங்கே தங்கி இருக்கும் நாற்பத்தோரு நாட்களும் இவர்களுக்குத் தேவையானவற்றை செய்ய திருமலையும் நெல்லையிலேயே வேறு வீட்டில் வசிப்பதாக முன்னதாக முடிவு செய்திருந்தார்கள் இருவரும்.

“நீ எங்கடா தங்குவே?” எனற சண்முகத்தின் கேள்விக்கு “தெரிஞ்சவங்க வீட்டில்” என்று பதில் சொன்னான் திருமலை.
அங்கே பொள்ளாச்சியில் வீடு வாசல் தோப்பு துரவு அனைத்தும் சண்முகத்தின் மைத்துனன்- ஆனந்தியின் தம்பி – கஜா வசம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது.

கஜா நிர்வாகத்தில் திறமைசாலிதான். அடுத்தவர் காசு பணத்தின் மீது ஆசைப்படாதவன். அவனது இந்த குணநலன்களை அனைவரும் அறிந்தவர்கள் ஆகையால் இந்த ஏற்பாட்டில் ஒருவருக்கும் சங்கடம் இல்லை. சொல்லப் போனால் கஜாவுக்குத்தான் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது.

அவன் ஒரு சுதந்திரப் பறவை. அவனை யாரும் கேள்வி கேட்பது அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. கேள்விகளுக்கு பதில் சொல்லும் சூழ்நிலை வரக்கூடுமானால் அதை தவிர்க்க எதையும் செய்யவும், எதையும் இழக்கவும் அவன் தயார். அதே நேரம் பணத்தின் மீது துளியும் அக்கறையில்லை. அவன் ஊதாரியும் இல்லை. அந்த வகையில் அவனது பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.

இப்போது அக்கா - மாமாவின் சொத்தை பராமரிக்கச் சொன்னதும் அதற்கான கணக்கு வழக்கை சொல்ல வேண்டுமே என்ற எண்ணம்தான் அவனை எரிச்சல்படுத்தியது.

கஜாவின் குடும்பச் சொத்தை அவர்களின் தந்தை கவனித்துக் கொண்டார்.

“நம்ம தோட்டத்தை நான் பாத்துக்கறேன். நீ ஆனந்தி வீட்டுத் தோட்டத்தை நாற்பத்தோரு நாள் பார்” என்றிருந்தார்.

நாற்பத்தோரு நாட்களும் கஜா தோட்டத்தை கவனித்தானோ இல்லையோ, தினமும் தோட்டத்தில் பன்னீர் ரோஜா பறிக்க வந்த வேம்புவை அவளறியாமல் கவனித்தான்.
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,121
Reaction score
4,616
Location
Coimbatore
அப்போ வேம்புவை கஜாவும் லவ் பண்னாரா. அப்புறம் எப்படி திரு உடன் திருமணம் நடந்தது. அருமையான பதிவு.
Thank you ?????
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Parrraaa ahaaaan!!

Thamarai selvan ku edhoo sambandham irukum polaaa


Ipo names konjam puriyudhu author akka!
Kaja vembu love panni irukaaru

Bit vembu vum thiru vum already in love avaru daane mama paiyan right ? Oru naal chinna paiyan okkkkk


Idhu naala kaja and thiru ku idaiyila any problem ahh???

Super epi aduthu eppo taruveenga??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top