• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் மனது தாமரை பூ - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
9
துளசி தரையில் அமர்ந்து மதிய சமையலுக்கு காய்கறிகளை அரிவாள்மனையில் வெடடிக் கொண்டு இருந்தாள். அவளைச சுற்றி வெங்காயம், தக்காளி ,பச்சை மிளகாய் ,உருளைக் கிழங்கு ,கத்தரிக்காய் போன்ற காய் வகைகளோடு கறிவேப்பிலை, கொத்துமல்லி தழையும் இருந்தது.

துளசி பத்து படித்து விட்டு இரண்டு வருடம் அம்மாவுக்கு உதவியாக சும்மாதான் இருந்தாள். தம்பி பிறந்த சமயம் மற்றும் அவளது தந்தை தவறியது போன்ற காரணங்களால் மேலே படிக்கவில்லை. ஆனால் அவ்வப்பொழுது குழந்தை என்பதை நிரூபிக்கும் அவள், உடனொத்த தோழிகளுடன் பிள்ளையார் கோவிலுக்குப்; போய் சுற்றியுள்ள இடத்தில் பாண்டி விளையாடாமல் விடுவதில்லை. பெண் குழந்தைகள் நடமாடும் சமயம் ஆண்கள் யாரும் கோவிலுக்குள் வரமாட்டார்கள். அது அங்கே எழுதப்படாத சட்டமாக இருந்தது. “ஆமா சின்னஞ்சிறுக, அதுகளும் எங்க போய்தான் விளையாடும்?” என்று செல்லம் கொஞ்சுவார்கள் பெரியவர்கள்.

விறகு அடுப்பில் அலுமினியப் பானையில் திருமலைக்கும் சேர்த்து பொங்கி வடித்து விட்டார் கற்பகம்.
கொடி அடுப்பில் துவரம்பருப்பை துளி விளக்கெண்ணையுடன் சேர்து வேகவைத்து இறக்கி கடைந்து விட்டார். பெரிய அடுப்பில் பொரியலுக்காக வெட்டிய அவரைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக விட்டார். கொடி அடுப்பில் கொஞ்சம் ரசத்திற்கு தாளித்தார்.

“துளசி…இன்னுமா குழம்புக்கு காய் வெட்டற? காயை வேக வச்சு மசாலைவை சேர்த்து தாளிச்சா சாம்பார் வேலை முடிஞ்சுது. தாளிப்பும் எடுத்து வச்சிட்டேன். கொரங்கு கையில குடல் கழுவ குடுத்த கதையா , உன்கிட்ட ஒரு வேலை குடுத்தா முடிக்கவும் மாட்டே அடுத்தவங்ககிட்ட குடுக்கவும் மாட்டே” என்று புலம்பினார்.
துளசி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் ,

“அண்ணே ஊரில இருந்து என்ன வாங்கிட்டு வந்திருக்க?” என்று சோறு வடித்த கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்த திருமலையிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சுடு சோறு வடித்த கஞ்சியில் சிறிது தேங்காய்ப்பூவும் ஒரு கரண்டி சூடான சாதமும் கொஞ்சம் உப்பும் போட்டுக் குடித்தால்.. அமிர்தமாக இருக்கும். கடித்துக் கொள்ள ஒரு துண்டு கருப்பட்டி இருந்தால் இன்னும் தூக்கலாக இருக்கும். கற்பகம் சோறு வடித்தவுடன் கஞ்சி கேட்டு நச்சரித்து வாங்கிக் குடித்துக் ;கொண்டு இருந்தான் திருமலை. அவன் நச்சரிக்கவே தேவை இல்லாமல் ஆசையாகவே கற்பகம் திருமலைக்கு செய்வார்.

“என் சம்பாத்தியம் பூரா என் தம்பிக்கும் தங்கச்சிககும்தான். இதுல தனியா என்னத்த வாங்கிட்டு வர்றது?” என்று சிரித்தான் திருமலை.

“ உன் சம்பாத்தியத்தை அப்படியே தூக்கி என்கிட்டதான் தரப்போறியாக்கும்? வேம்பு மதனி என்னை சும்மா விட்ருமாக்கும்? சும்மா சலம்பாதண்ணே. பொள்ளாச்சில இருந்து வர்றியே, தங்கச்சிக்கு ஒரு துண்டு துணியுமா வாங்கிட்டு வரக்கூடாது?” என்று நொடித்தாள் அவள்.

“இந்தாலே.. அண்ணன போட்டு ஏன் எலி கொடஞ்சால கொடையுதே? அண்ணன் ஏதோ வேலையா வந்திருக்கு. வந்த வேலையப் பாக்குமா? உனக்கு துண்டையும் துணியையும் பாக்குமா? கோட்டி மாதிரி பேசறத நிறுத்திட்டு காய வெட்டிக் குடு. இல்லன்னா தள்ளு. நானே வெட்டிக்கிடுதேன். புள்ளகளுக்கு பசியாத்த வேண்டாமா?”

துளசி கடைசியாக வெட்டிக் கொண்டிருந்த காயைப் பார்த்தவன் மனக் கணக்குப் போட்டுப் பார்த்தான்திருமலை .கற்பகத்தம்மாவுக்கு எல்லா விசயமும் தெரியும் என்று முடிவு செய்து கொண்டவன் ,

“தங்கச்சிமா ,இப்ப நான கண்ணை மூடிகிட்டு செய்யறதை நீ கண்ணை திறந்துகிட்டு செஞ்சிட்டா உனக்கு ஒரு பொட்டு பாக்கெட் வாங்கித் தர்றேன்.”

“ரெண்டு பேரும் அங்கன தள்ளி உட்காந்து பேசுங்க. நானாவது வேலையை முடிக்கேன்” என்று அரிவாள்மனையை கைப்பற்றினார் கற்பகம்.

குட்டி தாமரை செல்வன் சின்ன கிண்ணத்தில் இருந்த பொடி பிஸ்கட்டுகளை கரம்பி கரம்பி தின்று கொண்டு இருந்தான்.

“அம்மா பாத்து..பாத்து..” என்றான்.
“பாத்தா?” என்று அதிசயித்தான திருமலை.
“பாட்டைத்தான் அப்படி சொல்றான தமபி”
“என்ன பாட்டு?
“சொல்றேன். அதுக்கு முன்ன என்ன பந்தயம்னு சொல்லுண்ணே?” என்று கை கழுவப் போனாள் துளசி.

சுதாரித்துக் கொண்ட திருமலை, “சின்ன விசயம்தான் . நான் என் ரெண்டு கையையும் வச்சி என் முகத்தை கண்ணை மூடிகிட்டு தடவறேன். நீ கண்ணை திறந்து வச்சிகிட்டு உன் கையால உன் முகத்தை தடவு பாக்கலாம். இதுதான் பந்தயம்.” என்றவன் செய்தும் காட்டிவிட “ப்பூ இதுதானா? “ என்றவள் கற்பகம் அதிர்ந்து பார்க்கும் முன் கைகளால் தனது முகத்தை கண்களை திறந்து கொண்டே தடவினாள். அடுத்த நிமிடம் “ஐயோ என்று அலறினாள்.

ஏனெனில் அவள் கடைசியாக வெட்டி இருநத காய் பச்சைமிளகாய்!. ச்சைமிளகாய் முகத்தில் பட்டதில் முகம் எரிந்ததோடு ரோசமும் வர “நீ எல்லாம் ஒரு அண்ணனா? மதனிகிட்ட சொல்லி உன்னை ஒருவழி பண்ணாமவிட மாட்டேன் பாரு” என்று முகத்தை கழுவ ஓடினாள.

பார்த்துக் கொண்டிருந்த கற்பகம் ஒரு பழுத்த தக்காளியை அவளிடம் கொடுத்து இதை புழிஞ்சு நல்லா தேய்ச்சிட்டு முகத்தை கழுவு. எரிச்சல் போயிடும்” என்றார் நிதானமாக. ஆனால் குரலில் கொஞ்சம் சிரிப்பு இருக்கத்தான் செய்தது.
வேறு வழி இன்றி தக்காளிச் சாற்றை தடவியவள் சீக்கிரமே எரிச்சல் குறைவதை உணர்ந்தாள். (சொந்த அனுபவம். நீங்க வேணா டிரை பண்ணிப் பாருங்க டியர்ஸ்..ஹி..ஹி..)

எரிச்சில் முற்றிலும் போனதும் அண்ணனைப் பிடித்துக் கொண்டாள் துளசி. “ தங்கச்சின்னு கொஞ்சமாச்சும் ஒரு பாசம் இருக்கா உனக்கு? நீயெல்லாம் நாளைக்கு எனக்கு என்ன சீர் செய்யப் போறே? “ என்று பொரிய,

“அவன் பேசறதிலேயே உன்னை வம்புக்கு இழுக்கான்னு தெரியுது. பின்ன கவனமா இல்லாதது உன் தப்பு . அதுக்கு என் மகனை ஏன் தப்பு சொல்லுதே?” என்று மகனுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார் துளசியின் தாய் கற்பகம்.

“நீ உன் மகனை விட்டுக் குடுக்க மாட்டியே?” எனற போது துளசியின் எரிச்சில் குறைந்து முகம் குளுமை அடைந்து இருந்தது. ஒரு கஷ்டத்திற்குப் பின் கிடைத்ததால் துளசி அதை மிகவும் ரசித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். அவள் முகம் வழக்கமான துள்ளலுக்குப் போயிருந்தது.

“ஆமா தாமரை செல்வன் ஏதோ பாட்டு கேட்டானே?” எனறு எடுத்துக்; கொடுத்தான் திருமலை. அதற்குள் ‘பாத்து..பாத்து’ என்று பல பாட்டுக்களைப் பாடி இருந்தான் தாமரை செல்வன்.


தாமரைப் பூ குளத்திலே
சாயங்காலப் பொழுதிலே
தாமரைப் பூ குளத்திலே
சாயங்காலப் பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா- அவன்
பேர் சொல்லலாமா
யாரது மாமா- அவன்
பேர் சொல்லலாமா

என்று இனிமையாகப் பாடினார் கற்பகம். பாடலைக் கேட்ட குட்டிப்பயல் குஷியில் ஜங்கு புங்கு என்று குதித்தான்.

“பழைய பாட்டா இருக்கே? இதைக் கேட்டு இவன் ஏன் குதிக்கிறான்?” என்று ஆச்சரியப்பட்டான் திருமலை.

“அதுல அவன் பேரு வருதுல்ல?” என்று பெருமிதமாய் சொன்னாள் துளசி. அது அவள் வைத்த பெயர் அல்லவா?
“அடப் பையா “ என்று தாமரை செல்வனை தூக்கிக் கொண்டான் திருமலை.
----------------------------------------------------------------
திருமலை நெல்லையில் இருந்த நாற்பத்தோரு நாட்களும் காலையில் சண்முகத்தின் குல தெய்வ வழிபாட்டிறகு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதும் அதில் கலந்து கொள்வதுமாக இருப்பான். பிற்பாடு சண்முகமும் ஆனந்தியும் கோயில் குளத்திற்கு செல்வதோ, ஊரை சுற்றுவதோ, ஓய்வு எடுப்பதோ செய்வார்கள். திருமலை தனது கற்பகத்தம்மாவின் வீட்டிற்கு வந்து விட்டால் துளசியுடனும் தாமரை செல்வனுடனும் அவன் பொழுது இனிமையாகக் கழியும். அவனது வயிற்றுப்பாட்டை கற்பகத்தம்மா அன்புடன் கவனித்துக் கொண்டார்.


இதில் அவ்வப்பொழுது தலைகாட்டிய வேம்புவைப் பற்றிய பேச்சுகள் அவனுக்கு அச்சு வெல்லமாக இனிக்கும்.
அப்படித்தான் ஒருமுறை துளசி, “அண்ணே எப்ப எங்க மதனிய கல்யாணம் கட்டப் போறீங்க?” எனவும் “ வயசுக்குத் தகுந்த பேச்சைப் பேசு” என்று அவள் கன்னத்தை வலிக்கக் கிள்ளி விட்டார் கற்பகத்தம்மா.

அதுபற்றி கவலைப்படாத துளசி கனனத்தை தேய்த்துக் கொண்டே “நீ சொல்லுண்ணே” என்று அழுத்திக் கேட்டாள்.
குனிந்தவாறு தாமரை செல்வனுக்கு நடைவண்டி ஓட்டி பழக்கி விட்டுக் கொண்டு இருந்த திருமலை நல்லவேளை என்று எண்ணிக் கொண்டு வெட்கத்தில் மலர்ந்த தன் முகத்தை மறைத்துக் கொண்டான்.

“சொல்லுண்ணே”
“அது ..அவ என்னை விட ஒரு நாளைக்குப் பெரியவ இல்ல? அதான் அவளோட அம்மா கொஞ்சம் யோசிக்கறாங்க”
“அம்மா யோசிக்கறது இருக்கட்டும். நீங்க என்ன சொல்றிங்க?”
“ஒரு நாள் பெரியவளோ? ஓன்பது வயசு பெரியவளோ? எப்டி இருந்தாலும் நான் அவளைத்தான் கட்டுவேன். அவளை மட்டும்தான் கட்டுவேன்” என்று ஒரு வழியாக தன் மனதைச் சொல்லிவிட்டான். அந்த அறுந்த வால் துளசியிடம் நன்றாக மாட்டியும் கொண்டான்.

“ஹை” என்று குதித்த துளசி
எனக்கு எல்லா ‘சீரும் நீயும் மதனியும் இன்னின்ன மாதிரி இப்படி இப்படி செய்ய வேண்டும்’ என்று அறுத்துத் தள்ளி விட்டாள்.

திருமலையும் கொஞ்ச கொஞ்சமாக திருமணக் கனவுகளில் ஆழ்ந்தான். அவன் கனவுகளில் வந்த தேவதை வேம்பு இல்லாமல் வேறு யார்?
வேம்பு… பேரைப் பார் பேரை? கொஞ்சமாவது ரொமாண்டிக்கா வச்சா என்னவாம் இந்த கமலாம்மாவுக்கு? என்று சிடுசிடுத்துக் கொண்டான். சரி கல்யாணத்துக்கு அப்புறம் நாம வேற பேரை வைப்போம் என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.


“ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டிலும் இன்னொரு ரகசியம் சொல்ல
ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்”

திரும்பி பொள்ளாச்சி போகும் வரை அவன் கவலை இல்லாத மனிதனாக இருந்தான்.
------------------------------------------------------
பொள்ளாச்சியில் தனது வீட்டில் தையல் மெஷினில் பட்டு ரவிக்கை ஒன்றை தைத்துக் கொண்டு இருநதாள் வேம்பு. முன்வாசலை அடுத்த தாழ்வாரத்தில் ஓரிடத்தில் தையல் மெஷினின் அமைவிடம் இருந்தது. வெளியே இருந்து வீட்டிற்கு வருவபவர்களை வரவேற்ற மாதிரியும் இருக்கும், அதே சமயம் அவர்களை ரொம்பவும் வீட்டிற்குள் அனுமதிக்காத மாதிரியும் இருக்கும். தாழ்வாரத்தில் ஒரு பித்தளை அண்டாவில் கை ,கால்களைக் கழுவ நீரும் அலுமினிய குவளையும் உண்டு.

ஒரு கல்யாண வீட்டிற்கு கல்யாணப் பெண்ணிற்கான அனைத்து ரவிக்கைகள் மற்றும் புடவைகள் வேம்புவிடம் தைக்க கொடுக்கப்பட்டு இருந்தது. அவளது தையல் நன்றாக இருக்கும் என்பதால் கல்யாணப் பெண்ணுக்கு என்றால் பெரும்பாலும் அவளிடம்தான் துணிகள் வரும்.

புடவைகளுக்கு ஃபால்ஸ் வைத்து தைத்து ஓரம் அடித்து , பட்டு; புடவை என்றால் முந்தியில் குஞ்சலம் வைத்து கொடு;ப்பதுடன் குறித்த காலத்தில் எப்பாடு பட்டாவது முடித்து அவர்கள் கையில் சேர்ப்பித்து விடுவாள்.
ஒருமுறை தீபாவளிக்கு அவளால் தைக்கப்பட்ட துணிமணிகளை ஒரு குடும்பத்தினர் மொத்தமாக அவர்கள் ஊருக்குப் போய் இருந்ததால் முன்கூட்டியே அவர்களால் வாங்கிக் கொள்ள முடியவில்லை. வேறு எதுவும் அவர்கள் சொல்லிவிட்டு சென்று இருக்காததால் குழம்பிய வேம்பு தீபாவளி அன்று ஊருக்கு வந்த அவர்களுக்கு தைத்த புதுத் துணிகளை எடுத்துக் கொடுத்து விட்டுத்தான் அவள் புதுத் துணி போட்டாள். அவளது உண்மையான சந்தோஷத்தை அவளது முகம் பிரதிபலித்ததில் கமலாம்மாவுக்கு சந்தோஷம்தான். தையற் கூலியை அப்புறமாக வாங்கிக் கொள்வதாகவும் முதலில் குளித்து விட்டு புதுத் துணிகளைப் போடுமாறும் இவள் சொன்னதைக் கேட்டு அவர்களுக்கும் அத்தனை நெகிழ்ச்சி.


இலங்கை வானொலியில் இருந்து கசிந்த பாடலை தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே தைத்தாள் வேம்பு.


“ வானப் பறவை வாழ நினைத்தால்
வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
கானப்பறவை பாட நினைத்தால்
கையில் கிடைத்த பருவப்பாடல்
மஞ்சள் மணக்கும்
என் நெற்றி வைத்த பொட்டுக்கொரு
அர்த்தம் இருக்கும் உன்னாலே “

கண்ணுக்குள் நிழலாடிய திருமலையின் உருவத்தை நிஜத்தில் முறைத்துக் கொண்டாள்.

திருமலை தனது தந்தை தாயின் மறைவுக்குப் பின் தனியாகத்தான் இருக்கிறான்.சண்முகம் அண்ணனின் தோட்டத்தில் ஒரு சின்ன வீட்டில் குடி இருக்கிறான். அவர்கள் குடும்பமாக முதலில் இருந்தது வாடகை வீடுதான்.

பேசாம கல்யாணத்தை பண்ணிகிட்டா இங்க வீட்டோட வந்து இருக்கலாம்ல?” என்று மனதினுள் கோபித்துக் கொண்டாள்.

வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்த கமலாம்மா “என்னாத்துக்குடி முறைக்கிறவ?’ என்று அவள் குமட்டில் குத்தினார்

இப்போது சண்முகம் வீட்டில் ஒருவரும் இல்லை என்றாலும் அங்கே நிரந்தரமாக தங்கி வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சமையல், வீட்டுப் பராமரிப்பு எல்லாம் பார்க்க தினப்படி அவர் சண்முகம் வீட்டுக்குச் செல்வார். கஜா அங்கே வருவதில்லை. ஆனால் அவனுக்கு மூன்று வேளை உணவும் வீட்டில் இருந்து அனுப்பப்படும். இடை இடையே அவன் ஏதாவது கேட்டு விட்டால் அந்த பலகாரங்களும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். அதை எல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இரவு உணவு மட்டும் மாலையே ஏற்பாடு செய்து வைத்து விடுவார். வீட்டில் இருக்கும் சொச்ச பணியாளர்கள் இரவு உணவை முழுவதும் சமைத்து கஜாவிற்கு அனுப்பி வைப்பார்கள். இந்த ஏற்பாடு கூட அவனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவனை பொறுத்தவரை அனுசரித்துப் போனான்.

“அம்மா.. உண்மையா சொல்ல போனா நான் உங்களைத்தான் முறைக்கனும்”
கை கால்களை கழுவியவாறே “என்னத்துக்குடி “
“பின்ன என்னம்மா? எங்களை யாரு திருமலை மாமா பிறக்கறதுக்கு ஒரு நாள் முன்னாடி என்னை பெத்துக்கச் சொன்னது?” என்ற குறை கூறியவாறே எழுந்து சென்று தன் அம்மாவிற்கு குடிக்க குவளையில் தண்ணீர் எடுத்துத் தந்தாள்.
அங்கேயே பக்கத்துத் திண்டில் சாய்ந்தவர் கொஞ்சம் நீரைப் பருகினார். பின் மகளைப் பார்த்து புன்னகைத்தார்.

“நான் எங்கடி உன்னை சீக்கிரம் பெத்துக்கிட்டேன்? நீதான் சீக்கிரம் பொறந்தே. குறை பிரவசத்துல எட்டு மாசத்துல பொறந்தவடி நீ. அதான் பயந்து போயி வேப்பமரத்து அம்மனை வேண்டிகிட்டு இந்தப் பேரை உனக்கு வச்சோம். ஒழுங்கா பிறந்திருந்தா திருமலைக்கும் உனக்கும் ஒரு மாசமாவது வித்தியாசம் இருந்திருக்கும். செய்யறதை எல்லாம் நீ செஞ்சிட்டு என்னையா பழி சொல்றே?” எனவும் தன் தலையில் தானே குட்டிக் கொண்டாள் வேம்பு.

மகளது முகச்சுணுக்கத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த வேம்பு

“எனக்கும்தான் யாரு சாமி இருக்கா. அது கிடக்குது ஒரு நாளு. பெரிய ஒரு நாளு. இங்கத்தி பிரச்சனைலாம் ஓயட்டும்னு பார்த்தேன். ஊர்ல இருந்து சண்முகம் சாமியும் அம்மாவும் கூடப் போன தறுதலையும்..”

“அம்மா..” என்று சிணுங்கினாள் வேம்பு

“சரி சரி.. திருமலையும் வரட்டும் . பேசி முடிச்சிரலாம்” எனவும் மகளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“நிஜமாவாம்மா? நிஜமாவாம்மா?” என்று திரும்பத் திரும்பக் கேட்டாள். இது தேறாது என முடிவு செய்தவர்,

“ஆமா..சோறாக்கினியா..இல்ல பாட்ட கேட்டுகிட்டே இருந்திட்டியா?”

“யாரு? நானா பாட்டை மட்டும் கேட்டேன்? சோறு எல்லாம் ஆக்கியாச்சு. அது போக எத்தனை ரவிக்கை தைச்சிருக்கேன் பாருங்க” எனறாள் ரோசத்துடன்

“எத்தனையாம்?” என்று கமலாம்மா பார்க்க ஒரே ஒரு ரவிக்கைக்கு மட்டும் பட்டி அடிக்கப்பட்டுக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. மகளை நிமிர்ந்து பார்க்க, அவளோ நாணியவாறு உள்ளே ஓடி விட்டாள்.
-------------------------------------------------------------------

அதற்கு மறுநாள் தோட்டத்தில் ரோஜா பதியன் எடுக்க வந்தாள் வேம்பு. முன்பென்றால் பரவாயில்லை. இப்போது சண்முகம் அண்ணனும் இல்லை, திருமலையும் இல்லை .யாரோ ஒருவன் இருக்கிறான். உரிமை உள்ளவன் போலப் பேசுகிறான். பார்வை சரியாக இல்லை. பதியனைக் கூட வேறு யாரிடம் சொல்லியோ ஏன் தன் தாயிடம் சொல்லியோ கூட எடுத்துத் தர சொல்லலாம். அல்லது திருமலை வந்த பின்பே எடுக்கலாம். ஆனால் பெரிய பிரச்சனை என்று ஒன்றும் இல்லாத போது இதற்கெல்லாம் ஏன் பயப்பட வேண்டும் என்பதுதான் அவளுக்கு.
முன் தினம் தாய் சொன்ன இனிய செய்தியில் அவளது முகம் இப்போதும் மலர்ந்து காணப்ட்டது.
அவளது உதடுகள் ரோஜாவின் எதிரியான மல்லிகையின் பாடலைப் பாடியது.


“மல்லிகை
என் மன்னன் மயங்கும்
; பொன்னான மலரல்லவோ
எந்நாளுமே
உன் ஆசை போல்
; பெண் பாவை நான்
பூ சூடிக் கொள்ளவோ..”


என்று அவள் பாடியபோது அவ்வளவு அழகாக இருந்தாள். அந்தக் குரலின் இனிமையில் அப்போது அங்கே வந்த கஜா தன்னை மறந்தான் .அந்த நிமிடம் கஜா தடாலடியாக முடிவு செய்தான்.

சட்டென்று அந்தப் பெண்ணைப் பிடித்து நிறுத்தினான்.

“இதப் பாரும்மா . நீ யாருன்னே எனக்குத் தெரியல. ஆனா உன்னைக் கட்டிக்க ஆசைப்படறேன்” என்று அவன் சொல்லிக் கொண்டு இருந்;த போது ஏதோ சந்தேகம் கேட்க அந்தப் பண்ணையின் வேலையாள் ஒருவன் அங்கே வரவும் கிடைத்த இடைவெளியில் கஜாவை தள்ளிவிட்டு ஓடினாள் வேம்பு.

“என்னடா வேணும்?” என்று வேலையாளிடம் எரிந்து விழுந்தான் கஜா.

“உரம் கலக்கறேன். தண்ணீர் திட்டம் பார்த்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்..” என்று இழுத்தான். “ஒண்ணும் தெரியாமத்தான் இத்தனை நாள் இங்க குப்பை கொட்டிகிட்டு இருந்தியா?” என்று அவனை சாடியவன் மேலே யோசிக்க முடியாமல் பணியாளனுடன் தோப்பினுள் உரத்தைப் பார்க்கச் சென்றான்.

வீட்டிற்கு வந்த வேம்பு அங்கு கதவு பூட்டியிருந்ததால் நிலைப்படியில் வைத்திருந்த சாவியை துழாவி எடுத்து வீட்டைத் திறந்தது வரைதான் அவளுக்குத் தெரியும். ஏப்போது கட்டிலில் விழுந்தாள்? எவ்வளவு நேரம் பிரமை பிடித்து நின்றாள் என்பது அவளுக்குத் தெரியாது.

மாலையில் வீட்டிற்கு வந்த கமலாம்மா வீடு வெறிச்சென்று திறந்திருக்கக் கண்டு ஆச்சரியப்பட்டார். வழக்கம் போல கை கால் கழுவி விட்டு உள்ளே சென்று மகளைத் தேடியவர் அவள் அவளது அறையில் எதையோ வெறித்துக் கொண்டு படுத்திருக்கக் கண்டார்.

“ஏ புள்ள வேம்பு..” எனறு உலுக்கி எழுப்பினார்.

சுய நினைவு வந்த வேம்பு நடந்ததைக் கூற கமலாம்மா அதிர்ந்து விட்டார். மகள் அழகி என்று தெரியும். திருமலை முறை மாப்பிள்ளை என்பதாலும் சண்முகம் சாமிக்கு வேண்டியவர்கள் என்தாலும் அவள் மீது தப்பான பார்வைகள் விழ வில்லை. கஜாவைப் பற்றி அவருக்கு ஓரளவு தெரியும். பிறவி பணக்காரன். ஏதோ ஆர்வத்தில் திமிரில் சொல்லி இருப்பான். அது அவனது உறுதியான எண்ணம் இல்லை. ஆனால் இது ஒரு பிரச்சனை ஆகாமல் இருக்க வேண்டுமே? என்பதுதான் அவரது கவலை.

திருமலையுடன் தனது மகளின் திருமணத்தை தள்ளிப் போட்டதற்கு தன்னையே நொந்து கொண்டார்.
மகளுக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்துத் தேற்றியவர்

“ஒண்ணும் பிரச்சனை இல்ல கண்ணு . அந்த ஐயா சும்மா விளையாடி இருப்பாங்க. அதை விடு. நீ இனிமே வெளிய எங்கயும் போகாதே” என்று மகளை பூட்டி வைத்தார்.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
yetheiiiiiiiiiiiiiiiiiiiiii?????????? antha noiya chumma velaiyadurana????????????? ? ? ? ? ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top