• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் மனது தாமரை பூ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
அன்று இரவு அவனால் தன் தந்தையை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை. தாய்க்கிழவி இருந்திருந்தால் எகிறி பேசுவான். அவனது தாய்தான் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டாரே? அங்கே மேட்டுப்பாளையம் அருகில் கள்ளிப்பட்டி என்று ஒரு ஊர். அங்கே தன் சொந்த ஊருக்குப் போய் விட வேண்டும் என்று அவருக்கு நெடுநாள் ஆசை.
பொதுவாக பொள்ளாச்சிக்கு வந்தவர்கள் அதை விட்டுச் செல்ல விரும்ப மாட்டர்கள் என்பார்கள். ஆனால் சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப் போல வருமா? எனவே ஆனந்திக்கு கல்யாணத்தை முடித்துவிட்டு இங்கே இருந்த நில புலன்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு அங்கே போய்விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார் அந்த அம்மாள்.

அதற்கு இவர்கள் மூவரும் கை கொட்டி சிரிப்பார்கள். “நாங்களாவது அங்கே வர்றதாவது?” என்று.
“நீ வராட்டி போ ஆனந்தி. நீ உன் வீட்டுக்குப் போய்க்கோ. கஜா.. அங்கதான் நம்ம சொந்தக் காரங்க எல்லாரும் இருக்காங்கப்பா. உங்க அப்பாவுக்கு என்ன? அவரோட சொந்த பந்தம் எல்லாம் வெளியூரில இருக்காங்க. அங்க நமக்கு சொத்து எதுவும் இல்ல. கள்ளிப்பட்டியில நாம நம்ம சொத்து சுகத்தோட நம்ம சொந்த பந்தத்தோட ஜாம் ஜாம்னு இருக்கலாம். “ என்று புலம்புவார். மண் ஆசை பொல்லாதது. பிறந்த மண் ஆசை அதை விடவும் மோசம்.

இப்போது அவரது நிலன்களைப் பார்க்கப் போய் இருக்கிறார். இரண்டு மூன்று நாட்களில் வந்து விடுவார்.
எனவே கஜா பொறுமை காக்க வேண்டியதாயிற்று. தவிர அவனுக்கு அத்தனை நம்மபிக்கை மற்றும் தெனாவெட்டு இருந்தது. இருந்திருந்து அவளுக்கு இத்தனை மெனக்கெட வேண்டியதில்லை எனறு ஒரு சில விசயங்ளை மேம்போக்காக விட்டான்.

அதே நேரம் தன்னைவிட தன்னிடம் வேலைபார்ப்பவன் எதிலும் வென்றுவிடக் கூடாது என்பதில் வெறியும் இருந்தது. சொல்லப் போனால் இதை அவன் சும்மா விட்டிருந்தால் மறந்தே போய் இருப்பான். வேம்புவை வீட்டுச்சிறை வைக்கவும்தான் அவனுக்கு ஆர்வமே வந்தது.

அன்று வேம்புவிடம் வயதுக் கோளாறில் கல்யாணம் பேசிய பின்பு வேலைகளில் அதை மறந்தும் விட்டான். மறுநாள் அவளைப் பார்த்திருந்தால் லேசாக சிரித்துவிட்டுப் போயிருப்பான்.
அவனுக்கு எதை விடவும் அந்தஸ்து முக்கியம். அப்படித்தான் வளர்ந்தான். அதனால் அவனே யோசித்துப் பார்த்து விட்டிருப்பான்.
ஆனால் இவன் குண நலன்களை எல்லோரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லையாதலால் வேம்பு ஊரை விட்டுப் போவது வரை இந்த விசயம் பெரிதாகிவிட்டது

ஆனால் அவளை மறுபடி பூப்பறிக்க வரக் காணோம் எனவும் தான் உறுதியாகத் தேடினான். அவளை தன் இலக்காக நிர்ணயித்தான்.
சரி .. நாளை நெல்லைக்குப் போய் இழுத்து வந்து விடலாம் என்று திட்டமிட்டான். அதற்குள் திருமலையும் அங்கே இருப்பதால் என்னாகுமோ? ஏதாகுமோ? என்றெல்லாம் அவன் கவலைப்படவில்லை. எப்படியும் திருமணம் ஆகாது. சொந்தக்காரர்கள் இல்லாமல் குறைந்தது அவர்கள் கமலாம்மா இல்லாமல் மணமுடிக்க மாட்டார்கள் என்பது திண்ணம். மற்றபடி எதாக இருந்தாலும் இந்த வேம்புவின் கழுத்தில் அவன் செய்த தாலியைக் கட்டி விட்டு அப்புறம் அவளது கணக்கை முறைப்படி நேர் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து வைத்தான்.

மறுநாள் ஊருக்கு வந்த சண்முகமும் ஆனந்தியும் சிரமப் பரிகாரம் செய்து விட்டு அக்கடா என்று அமர்ந்தது அவர்கள் வீட்டு பூஜை அறையில் தான். அங்கேயே அவர்களுக்கு எலுமிச்சை சாறு கொண்டு வந்து கொடுத்திருந்தார் கமலாம்மா.

புத்துணர்சியுடன் கொண்டு வந்திருந்த பிரசாதங்களை பிரித்து ஒழுங்கு படுத்தி விட்டு தங்கள் வீட்டு உணவு மேசையில் அமர்ந்தவர்களுக்கு உளிய உணவாக இட்டிலியும் பாசிப்பயறு சாம்பாரும் பரிமாறினார் கமலாம்மா. உளுந்த வடை இல்லை என்றால் இட்லி கோபித்துக் கொள்ளும் என்பதால் ஆளுக்கொரு உளுந்த வடையும் வழங்கினார்.

“என்ன கமலாம்மா.. முகம் கொஞ்சம் வாடுனாப்ல இருக்கு?” மெதுவாகக் கேட்டுப் பார்த்தான் சண்முகம்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல சாமி. குளிருதான்… முகம் சுருங்கி கிடக்கு. நீங்க மொதல்ல சாப்பிடுங்க சாமி” என்றவர் ஆனந்தியையும் குறைவற கவனித்தார்.

சாப்பிட்டு முடித்து இருவரும் ஓய்வெடுக்கச் சொன்னார் கமலாம்மா.

“அது கிடக்கட்டும் கமலாம்மா. நீங்க எங்கிட்ட ஏதோ சொல்லனும்னு நினைக்கிறீங்க. அது என்னனு மொதல்ல சொல்லுங்க” என்று சண்முகம் சொல்லவும் அழுகை வந்து விட்டது கமலாம்மாவிற்கு
“என்ற ஐயன்தான் என் முகத்தை வச்சே நான் சந்தோஷமா இருக்கேனா, கவலைப் படுறேனான்னு சொல்லிடும். அதுக்கு அப்புறம் நீங்கதான் ஐயா சரியா என்கிட்ட கேட்டிருக்கீங்க ” என்று தழுதழுத்து விட்டார்.

ஒருவரிடமும் விசயத்தைச் சொன்னவர் மேற்கொண்டு என்ன செய்வது என்ற வழி கேட்டார்
விபரம் கேள்விப்பட்ட ஆனந்தி பதறி விட்டாள்.

தன் தம்பி சின்ன வயதிலேயே எவ்வளவு பிடிவாதக்காரன் என்பதையும் தனக்குப் பிடிக்காதவர்களைப் பழி வாங்குவதில் எமகாதகன் என்பதையும் அறிந்து இருந்;த படியினால்தான் ஆனந்திக்கு அத்தனை அதிர்;சியாக இருந்தது.

அதற்கு பெரும் அளவு அவர்களது சிறு வயதில் நடந்த நிகழ்ச்சி ஒன்று காரணமாக அமைந்து இருந்தது.
அப்போது பத்து பதிரெண்டு வயதாக இருந்த கஜா அடாவடியாக பள்ளி ஆசிரியர்களை மரியாதையின்றிப் பேசுவதையும் கண்ட கண்ட பலகாரங்கள் வாங்கித் தின்பதையும் வழக்கமாக வைத்து இருந்தான்.
அத்தோடு அவனது பள்ளிக்குச் செல்லும் வழியில் நிற்கும் ஒரு தெரு நாயை கல்லால் அடித்து விரட்டி விளையாடுவதையும் பொழுது போக்காக வைத்து இருந்தான்.

அப்படித்தான் ஒரு நாள் பெட்டிக் கடையில் நாய்க்குப் போடும்; பொறை சிலவற்றை வாங்கிக் கொண்டு காசு இருந்தால் கூடவே சுற்றும் நண்பர்கள் சிலருடன் அதே தெருநாயிடம் பொறையை போடுவதாக போக்கு காட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.

அதில் கடுப்பான அந்த நாயோ இவன் ஏமாந்த சமயம் இவனைக் கடித்து விட்டது. கோபம் தலைக்கேறிய இவன் அதை தன் பள்ளிக் கூட பையினால் அடித்து துரத்தி விட்டான். ஆக்கம் பக்கத்தினரும் உதவி செய்தனர். ஆனால் கூடவே புத்திமதியும் சொன்னார்கள்.

அதில் கடுப்பான கஜா அதற்கெல்லாம் காரணமான அந்த நாயை உன்ன செய்யலாம் என்று யோசித்தான். கூட வந்திருந்த சிறுவர்கள் தெறித்து ஓடிப் போய் இருந்தனர். ஆதற்கும் அந்த நாய் தான் காரணம் என்று அந்தப்பழியையும் அதன் மீது தூக்கிப் போட்டான்.

வீட்டிற்கு வந்து வைத்தியம் பார்த்து விட்டு நாற்பத்தெட்டு நாட்கள் பத்தியமாக இருந்தவன் அதன்பிறகே பள்ளிக்குச் சென்றான். அதே தெருநாய் அதே இடத்தில் நின்றதைக் கண்டதும் அவன் மனம் கொதித்தது. அதை விரட்டினான்.
பாவப்பட்ட அந்த ஜீவன் இவனைக் கண்டு ஓடியது. கொஞ்சம் நிதானித்த இவன் அதே பெட்டிக் கடையில் பன் வாங்கி அந்த நாய்க்குப் போட்டான். முதலில் அதை முகர்ந்தும் பார்க்காத அந்த நாய் தினமும் அவன் போடவும் நான்காம் நாளில் அவன் போட்ட பன்னை சாப்பிட ஆரம்பித்து இருந்தது.

நாற்பத்தெட்டு நாட்கள் அந்த நாய்க்கு பன் வாங்கிப் போட்டவன் நாற்பத்தொன்பதாவது நாள் அதே பன்னுக்குள் எலி மருந்து வைத்துப் போட்டான்!

பழக்கப்பட்ட அந்த நாய் சந்தேகப்படாமல் அதை தின்று விட்டு மேலுலகம் போய்ச் சேர்ந்தது. அப்படியும் விடாமல் அந்த நாயைத் தூக்கி மரத்தில் தூக்கில் தொங்க விட்டு தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டான் கஜா.
(டியர் ரீடர்ஸ் இது நான் கேள்வி;ப்பட்ட கதை)

விஷயத்தை அறிந்த ஆனந்தியும் இருவரின் பெற்றோரும் ஆடிப் போய்விட்டனர் என்றாலும் இவர்களின் அப்பாவோ ” சின்ன வயசில இதெல்லாம் சகஜம் “ என்று நழுவி விட்டார். அவர் அங்கே கோட்டை விட்டதில் ஆனந்திக்குப் பயம் பிடித்துக்; கொண்டது. அதுவரை சாதாரண அக்கா தம்பி என்ற நிலையில் அவனை சற்றும் மதிக்காமல் இருந்தவள் அதன் பின் தம்பி முழு மனதோடு சரி என்று சொல்பவற்றையே எப்போதும் செய்ய ஆரம்பித்தாள். மீறி எதையாவது செய்து விட்டு அவனது பழி வாங்கல் , கிழி வாங்கலை யார் எதிர் கொள்வது என்று ஒரு பதட்டம் எப்போதும் அவளுக்கு உண்டு.

அவனின் திருவிளையாடல் எப்படி இருக்குமோ என்று பயப்படத் தேவையில்லை அல்லவா?
இப்போப்;பட்ட இவனை நம்பி வேம்புவை ஒப்படைக்க அவர் தயாரில்லை. அதே நேரம் அவன் மனம் வாடுவதும் பொறுக்கவில்லை. என்னதான் இருந்தாலும் தம்பி அல்லவா?

அதனால்தான் வேம்புவை மட்டாகக் கூறி தன் தம்பியின் கவனத்தை அவளிடம் இருந்து திசை திருப்ப எண்ணினாள். ஊடனடியாக தன் தம்பிக்கு ஆள் அனுப்பி வரச் சொன்னாள்.

சுண்முகம் எதுவும் பேசவில்லை. ஆனந்தி இந்தப் பிரச்சனையை முடித்து வைப்பாள் என்று நம்பினான் தவிர இதில் எந்த அளவு தலையிடலாம் என்பது கஜா வந்து அவனது சே;சைப் பொறுத்துதான் முடிவு செய்ய முடியும்.
ஒருவேளை அவனும் வேம்புவும் உறுதியாக இருந்தால் திருமணத்தை முடித்து வைக்கலாம்.
ஆனால் அவன் கேள்விப்பட்டவரை திருமலைக்கு வேம்புவை மணமுடிக்கலாம் என்று தெரிந்தது. யாரும் தங்கள் இதயத்தை வெளியே வைத்திருக்கவில்லையே? அதனால் பொறுமை காக்க தீர்மானித்தான்.

கஜா வந்து அவனிடம் ஆனந்தி பேசிய போது அவன் ஒன்றும் பேசவில்லை.
கமலாம்மா “தம்பி வேம்புவை என் அண்ணன் மகனுக்கு; கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு நினைச்சிருக்கேன். அவங்க ரெண்டு பேருகு;கும் விருப்பம்தான். இல்லன்னா அவனைத் தேடி அவ்வளவு தூரம் தனியாப் போயிருப்பாளா? நீங்க பெரியவங்க. நாங்க உங்களுக்கு சமம் இல்லீங்கய்யா. அதனால இந்த எண்ணத்தை மாத்திக்கிடுங்க” என்றார்.
இதே ரீதியில் ஆனந்தியும் பேச கஜாவின் வீம்பு அதிகரித்தது.

“என்ன மச்சான் சொல்றீங்க?” என்ற சண்முகத்தின் கேள்விக்கு வெறுமனே “ பாப்போம்” என்று முடித்து விட்டான்

ஒரு இருபது முப்பது நாள் போல இவன் கண்ணில் வேம்பு தட்டுப்படா விட்டால் பயல் மறந்து விடுவான் என்று நினைத்த ஆனந்தி கமலாம்மாவிடம் வேம்புவை தான் கூறும் வரை அங்கேயே தங்கச் சொல்லி கடிதம் எழுதச் சொன்னாள். அப்படியே பக்கத்து பெட்டிக் கடையின் தொலை பேசி எண்ணையும் எழுதி அனுப்பச் சொல்லி இருந்தாள்.
இவர்களின் அப்பா “நீ பார்த்து என்ன செய்தாலும் சரி. எதா இருந்தாலும் உன் அம்மாவுக்கு நீயே பதிலை சொல்லிக்கோ” என்று பொறுப்பை துறந்து விட்டார்.

“திருமலைக்கு அங்க ஒரு வேலையும் இல்ல. அவனை வரச் சொல்லுங்க “ என்ற ஆனந்தியைப் பார்த்து மெல்ல சிரித்து விட்டு “வேம்பு அங்க இருக்கற கடை நம்பர் எழுதட்டும். போளை போட்டே சொல்லிடலாம்” என்றான்.
வேம்பு எழுதிய எண்ணுக்கு அழைத்துச் சொன்னதில் அவன் அவன் தங்கை துளசியை மேலே படிக்க வைக்க ஏதோ கல்லூரி தேடி அலைவதாகவும் சீக்கிரம் வருவதாகவும் இன்னும் சில நாள் விடுப்பு வேண்டி அனுமதி கேட்டு முடித்து விட்டான்.

உண்மையில் அவனுக்கு அவளை விட்டு எங்கும் செல்ல விருப்பம்; இல்லை. தனக்காக தான் இருக்குமிடம் தேடி வந்த அவளிடம் பிரியம் பொங்கியது.

கஜாவை அவனுக்கு சில காலமாகத் தெரியும். முசுட்டுப் பிடிவாதக்காரன். ஆனால் தகுதி , தராதரம் என்று உளறும் அவனுக்கு இது ஒரு பொருட்டாக இருக்காது . எனவே சிறிது காலம் கழித்து அவன் மனம் தெளிந்த பின் அவனிடம் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.

துளசி மகிழ்ச்சியில் நடப்பது கூட இப்போதெல்லாம் குதித்து குதித்துதான். அவளது அண்ணனும் அண்ணியும் அவள் வீட்டிற்கு வந்திருக்கிறார்களே? அதுவே அவளுக்கு அத்தனைப் பெருமையாக இருந்தது.

“எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே”
ஆடிக் கொண்டே அலைந்தாள். கடைசி ஆட்டம் .
---------------------------------------------------------------
கஜாவின் தாய்கிழவி ஊரில் இருந்து வந்தார். விஷயத்தைக் கேட்டார்.
“அவ யாரு எவருங்கறது அப்புறம். நாம நெனச்சது நடக்கனும். நம்ம சாதி சனத்துல ரெண்டாவது ஒண்ணை முடிச்சிட்டாப் போச்சு. “ (கஜாவுக்கு எங்கே இருந்து இந்த புத்தி வந்திருக்குன்னு தெரியுதா?)
கஜா அதற்கு சரி என்றும் சொல்லவில்லை , முடியாது என்றும் சொல்லவில்லை.
பெரியவர் பேசவே இல்லை. “என்ன கர்மமோ பண்ணுங்க” என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போய் விட்டார்.

அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாவே கழிந்தது. ஒருவழியாக கஜாவின் மனம் மாறி விட்டது என்று ஊகித்தாள் ஆனந்தி.

“எடுத்துச் சொன்னதும் கேட்டுகிட்டான். முதல்ல அவனுக்கு நல்லப் nhண்ணாப் பார்த்து முடிக்கனும். அப்புறம்தான் அடுத்த வேலை” என்று முடிவு செய்ய ,

அதற்குள் சண்முகமோ “ இவன் மூஞ்சைப் பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு. மொதல்ல திருமலை வேம்பு கல்யாணத்தை முடிச்சிருவோம். அப்புறம நீ உன் தம்பிக்கு ஏத்த சோடியைத் தேடு “ என்றான்.
கஜா மீது தவறு இருக்கிறதோ இல்லையோ எது எப்படி இருந்தாலும் திருமலை திருமணம் பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. பேசாமல் அதை முடித்து விட்டால் நல்லது என்ற முடிவுக்கு வந்து இருந்தான்.

“அதுவும் சரிதான். சரி இவங்க கல்யாணத்தை எங்க எப்ப எப்படி நடத்தறது?” என்றாள்.

“அதையும் நெல்லையில வச்சுக்கலாம். பொண்ணு மாப்பிள்ளை அங்க இருக்கறதால நாம எல்லோரும் அங்க போயிடலாம். குல்யாணத்தை முடிச்ச கையோட கூட்டிட்டு வந்துடலாம்” என்றான்.

ஆனந்தியின் பார்வையை தாங்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு “நாம போயிட்டா இங்க வரவு செலவை உன் தம்பி பார்த்துக்கட்டும் “ என்று தெளிவற்ற முணுமுணுத்தான்.

தன்னை ஒதுக்கிவிட்டு இவர்கள் வேம்புவிற்கும் திருமலைக்கும் மணம் முடித்து வைக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் கஜா நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

ஆனால் அவன் எடுத்த வேலையை முடிக்காமல் விட மாட்டான். அவனுக்கு இனிமேல் வேம்பு வேண்டாம். திருமலையின் அல்லது வேம்புவின் நிம்மதிதான் வேண்டும். அவர்கள் கதறுவதைப் பார்த்துவிட்டால் அப்புறம் ஓரெயடியாக அவன் கள்ளிப்பட்டிக்கு செல்லக் கூடத் தயார்.

அவன் அங்கே திருமணம் முடியும்வரை வந்துவிடக்கூடாது என்று முக்கியமான சில வேலைகளை அவனுக்கு இங்கே கொடுத்துச் சென்றிருந்தான் சண்முகம். எல்லாம் புரிந்தும் கஜா ஒன்றும் சொல்லவில்லை. திருமணம் முடிந்து எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு ஒரு வராம் அங்கேNயு தங்கிவிட்டு வரலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தார்கமலாம்மா. அனைவரும் ஒப்பவும் புற்பட ஆயத்தமானார்கள்.
தொலைபேசி மூலம் திருமலைக்கும் வேம்புவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
வேம்பு கல்யாணக் கனவுகளில் ஆழ்ந்தாள். உதடுகள் உல்லாசமாக பாடியது.


“மல்லிகை முல்லைப் பூப்பந்தல்
மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக?
நமக்கு கல்யாணம் - அதற்காக “
-------------------------------------------





ReplyForward
 




SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
கஜாவின் திட்டம் வேறு. அதற்கு அவன் மெதுவாக நெல்லைக்குப் போனால் போதும்.
திருமணம் நடக்கட்டும். திருமணம் முடிந்த கையுடன் இருவரில் ஒருவரைத் தீர்த்துவிட்டால்…? காலத்திற்கும் ரணமாக இருக்கும். படட்டும்.

இதற்கு ஆள், பேர் எல்லாம் தேவையில்லை. அவனே போதும். ஏதற்கும் சில கையாட்களைஅழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தான்.

கஜா சொன்ன சில அரசு சம்ந்தப்பட்ட வேலைகளை முடித்துவிட்டு ரயிலில் தன் அடி பொடிகளுடன் நெல்லைக்குக் கிளம்பினான்.

நல்ல நாளில் திருமலை வேம்பு திருமணம் சண்முகம் ஆனந்தி முன்னிலையில் சிறப்பாக நடந்து இருந்தது.
அடுத்து வந்த நாட்கள் கோயில் ,குளம், சடங்கு ,சீர் என்று ஓடியது.

திருமணமான ஏழாம் நாள் அன்று சண்முகம் மற்றும் ஆனந்தியுடன் புது மனைவியை அழைத்துக் கொண்டு தாமரை செல்வனை கைகளில் ஏந்திக் கொண்டு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தான். தியேட்டரில் அன்று புதுப்படம் பார்;ப்பதாக திட்டம். எல்லோரும் கும்பலாக நடக்காமல் அவரவர் ஜோடியுடன் நடந்தனர். கற்பகம் படத்திற்கு வரவில்லை என்று சொல்லி விட்டார்.கமலாம்மா கால் வலிப்பதாக கூறிவிட்டார்.

“இந்த துளசியை எங்க காணோம்?” என்று வினவியபடியே நடந்து கொண்டிருந்தான். வெள்ளைவேட்டி வெள்ளை சட்டை அணிந்திருந்தான் திருமலை.

திருமணம் முடிந்து தம்பதிகள் ஏற்கெனவே திருமலை தங்கி இருந்த வீட்டில் தங்கி இருந்தனர். சண்முகம் முன்பு தங்கி இருந்த வீட்டில் மனைவியுடன் தங்கி இருந்தான்.

ரயிலில் இருந்;து இறங்கியதும் தன் பரிவாரங்களுடன் கற்பகத்தின் வீட்டை அடைந்தான் கஜா.
அங்கே அனைவரின் ஆனந்தம் அவனுக்கு பிடிக்கவில்லை.
அவனை ஆச்சரியமாகப் பார்த்த அனைவரும் அதிசயித்து நின்றபோது
அங்கே ஓடி வந்தாள் துளசி.

“அண்ணே.. தம்பியை எங்கிட்ட குடுங்க அண்ணே “ என்று தாமரை செல்வனை வாங்க முயன்றாள். மஞ்சள் நிற பாவாடை ரவிக்கையும் பச்சை நிற தாவணியும் அணிந்திருந்தாள்.
“அண்ணனா?” என்றான் கஜா

“வாப்பா. இது துளசி. திருமலையோட தங்கச்சி” என்று அறிமுகம் செய்து வைத்தாள் ஆனந்தி.
“திருமலை கூடப் nhறந்தவங்க யாரும் இல்லையே?”

“ஆமா. இது அவரோட அம்மாவோட தோழியோட பொண்ணு. கூடப் பொறந்த தங்கச்சிக்கும் மேல”என்று எடுத்துக் கூறினாள் ஆனந்தி.
ஆனந்தி இவ்வளவு சொன்னால் அது சத்தியமான உண்மைதான்.

“அங்க வேலை சோலியைப் போட்டுட்டு இப்ப அவசரமா எதுக்கு இங்க வந்தீங்க மச்சான? மொதல்ல போய் கற்பகத்தம்மா வீட்ல போய் தண்ணியாச்சும் குடிக்கலாம் வாங்க” என்று அவனை அழைத்தான் சண்முகம்.
அவனுக்கு என்னவோ இவன் வந்தது நல்லதாகப் படவில்லை. வேம்புவோ திருமலையோ அவனை பெரிதாக நினைக்கவில்லை. அவர்கள் திருமணம்தான் முடிந்து விட்டதே? வாழ்விலும் சாவிலும் இனி அவர்கள் ஒன்றுதான்.
தாமரை செல்வன் பிஸ்கட் அண்ணனிடம் இருந்து வர மறுத்துக் கொண்டு இருந்த போதுதான் இது நடந்தது. கஜா தெரிந்து செய்தானா? தெரியாமல் செய்தானா? தெரியவில்லை. அவனுக்கான நல்ல காரியம் ..

“தங்கச்சியை விட மேலா.. இருக்கட்டும். இருக்கட்டும். அப்போ உன்னை என்ன செஞ்சாலும் உங்கொண்ணனுக்கு வலிக்கும். வலிக்கட்டும.; என்னை அவன் பொண்டாட்டி ஏமாத்திட்டா. அதனால நான் இப்ப உனக்கு தாலி கட்டறேன்.அப்புறம் நான் யாருன்னு காட்டறேன் ” என்றவன் சட்டைப் பையில் இருந்த தாலியை எடுத்து துளசிக்கு கட்டப் போனான்.

விபரீதம் உணர்;நத துளசி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அங்கிருந்து ஓடினாள். கஜாவிற்கு ஆத்திரம் அதிகரித்தது. “என்கிட்ட இருந்து தப்பிச்சிருவியாடி?” என்று கூக்குரலிட்டவாறே அவளைத் துரத்தினான்.
அவனைப் பிடிக்க திருமலையும் சண்முகமும் ஓட ஆனந்தி தாமரைச் செல்வனை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்று கற்பகத்திடம் கொடுத்துவிட்டு நிலவரத்தை கலவரத்துடன் சொன்னாள்.
அங்கே..

இவனிடம் இருந்து தப்பிக்க ஓடிய துளசி மண் தடுக்கி கீழே விழ அவளை நெருங்கிய கஜாவிற்கு அவள் பெண்ணாகத் தெரியவில்லை. அவன் தோற்ற ஒரு பொருள் - அதை ஜெயிக்க கிடைத்த வாய்ப்பு - என்று தோன்றியது. அந்தப் பொருள் வேம்பு அல்ல. திருமலையின் நிம்மதி. அவளைப் பார்த்ததும் -அவள் திருமலையின் பாசமலர் என்று தெரிந்ததும் அவன் முடிவு செய்து விட்டான். வெட்டு குத்து என்று கோர்ட்டையும ஜெயிலையும் வலம் வருவதை விட சுலபமாக இவளை மணப்பதன் மூலம் திருமலையை பழி வாங்க நினைத்தான்.

கஜாவைத் துரத்திய ஆண்களை கஜாவின் அடியாட்கள் பிடித்து வைத்துக் கொள்ளவே அவர்களிடம் இருந்து விடுபடப் போராடிக் கொண்டு இருந்தார்கள் இருவரும்.

துளசி எழுந்து ஓடுவதற்குள் அவளைப் பிடித்திருந்தான். மேலும் அவள் ஓடாமல் இருக்க தன் வலது ஒற்றைக் காலால் அவளை அசையவிடாமல் நெஞ்சில் மிதித்து தாலியைக் கட்டினான்.(இதுவும் கேள்விப்பட்டதுதான் டியர்ஸ்)
பெண்கள் மூவரும் குழந்தையுடன் வந்து பார்த்து அலறியதும் ஆண்கள் இருவரும் இன்னும் எண்ணி அவமானப் படுவதும் இதை நினைத்துதான்.
(அடுத்த எபில பிளாஸ்பேக்கை முடிச்சிரலாம் டியர்ஸ்)
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe

Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
@ப்ரியசகி @Bharathikannamal1112 @Suman @Ammu Manikandan @Shakthi R @KalaiVishwa @Zainab @Sugaa librarian @shanthinidoss @sandhiya sri @MaryMadras @Shaniff @Ananthi Jayakumar @Guhapriya


Aprm aprm ellaru peru vandhurucha paa aprm onnu vittu pochu rendu vittupochunu nu peche iruka koodadhu solli potten!

Start pannadhavanga start pannugoo

Regular ahh padikuravanga padikalam!

Story ku tom akka guarantee ?????????????
Tom akka orutharam
Tom akka 2 tharam
Tom akka 3 tharam!
vanduten
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
@ப்ரியசகி @Bharathikannamal1112 @Suman @Ammu Manikandan @Shakthi R @KalaiVishwa @Zainab @Sugaa librarian @shanthinidoss @sandhiya sri @MaryMadras @Shaniff @Ananthi Jayakumar @Guhapriya


Aprm aprm ellaru peru vandhurucha paa aprm onnu vittu pochu rendu vittupochunu nu peche iruka koodadhu solli potten!

Start pannadhavanga start pannugoo

Regular ahh padikuravanga padikalam!

Story ku tom akka guarantee ?????????????
Tom akka orutharam
Tom akka 2 tharam
Tom akka 3 tharam!
ஆமாம்..... யாரு மா நீயி??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நந்தலாலா தம்பி
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
@ப்ரியசகி @Bharathikannamal1112 @Suman @Ammu Manikandan @Shakthi R @KalaiVishwa @Zainab @Sugaa librarian @shanthinidoss @sandhiya sri @MaryMadras @Shaniff @Ananthi Jayakumar @Guhapriya


Aprm aprm ellaru peru vandhurucha paa aprm onnu vittu pochu rendu vittupochunu nu peche iruka koodadhu solli potten!

Start pannadhavanga start pannugoo

Regular ahh padikuravanga padikalam!

Story ku tom akka guarantee ?????????????
Tom akka orutharam
Tom akka 2 tharam
Tom akka 3 tharam!
adiyeeeeeeiiiiiiiiiiiiiiiiiiiiii.. ennadi panni vachurukka??????? preethi ku nan guarantee mathiri solli vachurukka???? ennai yendi yelam vittutu irukka?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top