• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என் விழியில் நீ இருந்தாய்_ முன்னோட்டம்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
டீசர்…

வேகத்தைக் காட்டும் முள் அலைபாய்ந்து கொண்டிருக்க, காற்றைக் கிழிக்கும் வேகத்தோடு பாய்ந்து கொண்டிருந்தது அந்த கருப்பு நிற பொலீரோ. சூழ்நிலையும் அந்தகாரமாய் இருக்க, காரின் ஹெட்லைட் வெளிச்சம் மட்டுமே வாகனத்தை அடையாளம் காட்டியது.
அந்த காரின் பின்னே சற்று தூரத்தில் போலீஸ் ஜீப் ஒன்று துரத்தி வர, அதன் தலையிலோ சைரன் அலறிக் கொண்டிருந்தது.

அந்த தேசிய நெடுஞ்சாலை கறுப்பு ரிப்பனாய் நீண்டிருக்க, காரின் உள்ளே ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தவனோ ஒற்றைக் கையால் அதனை லாவகமாக கையாண்டவாறு மறுகையால் சுவிங்க டப்பாவைத் திறந்து சுவிங்கம் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டான்.

“டேய் ஆதி, ஒழுங்கா ரோட்டைப் பார்த்து வண்டிய ஓட்டு. மாட்னோம் தொலைஞ்சோம்.”

ஆதியின் அருகே அமர்ந்திருந்தவனோ, பின்னால் வரும் வாகனத்தை சைடு மிரர் வழியாக பார்த்தவாறே பதட்டமாகக் கூற,

“கூல், கூல் நிதீஷ், சுவிங்கம் வேணுமா?”
மற்றவனுக்கும் நீட்ட,

“எப்படிதான் உன்னால இவ்வளவு கூலா இருக்க முடியுதோ? சரியான நேரத்துக்கு சரக்கைக் கொண்டு போயிட முடியுமா ஆதி? அவனுங்க நம்மை புடிச்சிட்டா…?” நிதீஷ் பதற,

“என்னைப் பிடிக்க இன்னோருத்தன் பொறந்து வரனும்டா.” வெகு திமிராகக் கூறியவனின் கரங்களில் அந்த பொலீரோ பறந்தது.

“இங்க என்ன கார் ரேசா நடக்குது. முன்னாடி போற வண்டி டயரை பார்த்து ஷூட் பண்ணு மேன்.” போலீஸ் ஜீப்பில் இருந்த ஒருவன் கடுப்போடு கூற, மற்றவனோ துப்பாக்கியை எடுத்து முன்னால் செல்லும் கறுப்பு பொலீரோவை நோக்கி சரமாறியாக சுட ஆரம்பித்தான்.

புல்லட்களின் ஓசையில் மேலும் பதட்டமான நிதீஷ், “டேய் ஆதி ஷூட் பண்றானுங்கடா. நாம மட்டும்னா கூட எப்படியாவது சமாளிச்சிடலாம் ஆனா…” என்றபடி திரும்பி வாகனத்தின் பின் இருக்கையைப் பார்க்க, அங்கே இரண்டு இளம் பெண்கள் மயங்கி சுயநினைவின்றிக் கிடந்தனர்.


***


“ரதியக்கா, எப்படியாவது நீங்க தப்பிச்சுப் போயிடுங்க. நாங்க மாட்டினாகூட பரவாயில்ல. ஆனா நீங்க மாட்டிக்கக்கூடாது.” ஏகத்துக்கும் கலவரம் இருந்தது மதுவின் கண்களில்.

“இ… இல்ல மது நீங்களும் வந்துடுங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவனுங்க கையில நீங்க மாட்டினா? அவ்ளோதான்” நடுங்கியபடி ரதி உரைக்க,

“இப்படி பேசிக்கிட்டே இருந்தா நாம நாலு பேருமே மாட்டுவோம். சீக்கிரமா இந்த சுவரைத் தாண்டி அந்தப் பக்கம் குதிங்க.” அப்பாஸ் கூறிய அடுத்த நொடி அவன் கால்களின் பின்புறம் ஒரு உதை உதைத்து அவனை மண்டியிட வைத்தாள் மது.

“அடியே… என்னடி பண்ற அவன?” திவ்யா அலற…

“இவனை வேற எதுக்குதான் கூட்டிட்டு வந்தோம் திவி. இதுக்குதான்.” என்றபடி மண்டியிட்டிருந்த அவன்மீது ஏறி ரதியின் பேக்கை தூக்கி காம்பௌண்டுக்கு மறுபுறம் வீசியவள்,

“ரதியக்கா சட்டுனு இவன் மேல ஏறி அந்தப் பக்கம் குதிங்க.”

மதுவின் கட்டளைக்கேற்ப ரதியும் ஏறி குதிக்க, கீழே மண்டியிட்டிருந்தவனோ,

“அடிப்பாவிகளா, உங்களை நம்பி வந்தேன் பாருங்கடி, எம்புத்திய…” தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தான்.


***



“அவன் ஒரு கொலகாரன். நானே என் ரெண்டு கண்ணால பார்த்தேன். நம்ம பீம் அண்ணாவ கொன்னது அவன்தான். அவனுக்குப் போய் என்னை கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்னு சொல்றீங்களே பெரியம்மா?” கோபமும் ஆற்றாமையும் விரவிக் கிடந்தது மதுவின் குரலில்.

“பீம் நல்லவன் இல்ல மது. சொன்னாப் புரிஞ்சுக்கோ.” தயக்கத்தோடு பிரசாந்த் கூற,

“இருபது வருஷமா நம்ப கூட இருந்த பீம் நல்லவன் இல்ல, அவரைக் கொன்னவன் ரொம்ப நல்லவனா? பீம் நல்லவன் இல்லனு உனக்கு இப்பதான் தெரிஞ்சுதா ண்ணா.”
பதில் கூறா மௌனம் பிரசாந்திடம்.

“நாங்க உனக்கு கெடுதல் செய்வோமா மதும்மா?” பெரியப்பா வினவ,

“எனக்கு யாரை நம்பறதுன்னே புரியல பெரியப்பா. யார் நல்லவங்க, யார் கெட்டவங்க எதுவும் புரியல. என்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல. நான் யாரைதான் நம்பறது பெரியப்பா?” தன்னைமீறி கண்ணீர் வழிந்தது மதுவுக்கு.

“நீ யாரையும் நம்ப வேணாம். எங்களையும் நம்ப வேணாம். நீ பொறந்ததுல இருந்து உனக்கான முடிவுகளை நான்தான் எடுத்திருக்கேன். இனியும் நான்தான் எடுப்பேன். இன்னும் நாலு நாள்ல ஆதித்யனுக்கும் உனக்கும் கல்யாணம்.”

கணீர் குரலில் கட்டளையாகக் கூறிவிட்டு மதுவின் பெரியம்மா மஞ்சுளா விடுவிடுவென்று மாடியேறிப் போக, அதிர்ந்து போய் நின்றிருந்த மதுவைப் பாவமாகப் பார்த்தவாறு அவரைப் பின்தொடர்ந்தனர் பிரசாந்த்தும் அவளது பெரியப்பாவும்.

***

தாடைகளை இறுகப் பற்றியிருந்த அவன் கரங்களில் அழுத்தம் கூடக்கூட அவள் கண்களில் குரோதமும் வலியின் சாயலும் கூடியது. ஆனாலும் வலியை மறைத்து அவனை முறைத்தவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன்,

“நீ அளவுக்கு மீறி பேசிப் பேசிதான் என்னை மிருகமாக்குற மது.”
பலங்கொண்ட மட்டும் அவன் கரங்களைத் தட்டிவிட்டவள்.

“நான் உன்னை மிருகமாக்குறனா? குட்ஜோக். நீ எப்ப மனுஷனா இருந்த ஆதி? நீ ஒரு மோசமான மிருகம். உன்னோட இன்னோரு முகத்தை இந்த ஊருக்கு முன்ன வெளிச்சம் போட்டுக் காட்டல என் பேர் மது இல்ல.”

அவளது சபதம் அவனிதழ்களில் நக்கல் சிரிப்பை நெளியவிட…

“ரொம்ப நல்லது. பேரை மாத்தி வச்சுக்க ரெடியாகு. இங்க பார் மது, என் வழியில குறுக்க வராத வரை உனக்கு ரொம்ப ரொம்ப நல்லது. மீறி வந்த…”
ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவனை எரித்தது அவள் விழிகள்…

***
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஆரம்பமே ஓட்டமா இருக்குது 🙄 வாழ்த்துக்கள் ஆத்தரே ❤
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
Congrats ma💐💐
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top