• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே... கடிதத்தைப் படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும். சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி
35A24783-1504-43EA-ABBF-E8AB0C89191B.jpeg
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 13

கண்களைத் திறக்கவே முடியாமல் மிகவும் எரிச்சலாக இருந்தது சம்ரிதிக்கு. ஏன் இப்படி எரிகிறது என்று யோசித்துக் கொண்டே மெல்ல தன் கண்களைத் திறக்க முற்பட்டாள். ஏதோ அந்தரத்தில் படுத்திருப்பது போல் இருந்தது. எப்பொழுது கண் விழிக்கும் பொழுது மித்ரனின் அணைப்பில் இருப்பவளுக்கு இன்று அவ்வாறில்லாமல் தான் மட்டும் தனியே படுத்திருப்பது ஏதோ வெறுமையாகத் தோன்றியது.

தூங்கும் பொழுதும் முகத்தைப் பிடிவாதமாக வைத்துக் கொண்டு உறங்குபவனைக் காலையில் எழும்பொழுதே செல்லம் கொஞ்சிவிட்டுத் தான் எழுந்திருப்பது வழக்கம். இப்படித் தனியாகப் படுத்திருப்பது என்னவோ போல் இருந்தது. மனதிற்குள் ஒரு நெருடல் தோன்றவே ஒரு யோசனையுடனேயே குளிக்கச் சென்றாள்.

இரவு என்ன நடந்தது? மித்ரன் வரவே இல்லையா என்று நினைக்கும் பொழுது பளிச்சென்று மின்னல் வெட்டியது போல், "அத்தான் கிட்ட இருக்கடா... அத்தான் கூட இருந்தா அப்பா கூட இருந்த மாதிரி தானே" என்ற குரல் காதுக்குள் ஒலித்தது. கூடவே மங்கலாய் தெளிவில்லாமல் தான் உளறியதும் அரை குறையாய் நினைவிலாடியது.

சட்டென்று கைகள் வேலை நிறுத்தம் செய்ய, 'எதுக்காக இத்தனை நாள் பயந்தோமோ அது நடந்துடுச்சா? மொத்தமா என்னை விட்டுட்டுப் போயிட்டாங்களா? இதுக்காகத் தானே நான் அவ்வளவு பயந்தேன். தள்ளித் தள்ளிப் போனேனே. விடாம விரட்டி வந்து கல்யாணம் பண்ணி இப்போ...'

நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்கவில்லைப் பேதைக்கு. கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றெடுக்க அசையாமல் அப்படியே ஷவரின் கீழ் நின்றிருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி அசையாமல் நின்றிருந்தாளோ? வெளியே கேட்ட அரவம் அவளை நிஜ உலகிற்கு அழைத்து வந்தது.

'போகவில்லையா? என்னை விட்டு என் அத்தான் போகவில்லையா?' லேசாக நம்பிக்கைத் துளிர்விட வேக வேகமாகக் குளித்து முடித்து உடையணிந்து கொண்டு வந்தாள். வந்தவள் பார்த்ததெல்லாம் இதுவரைக் கனவிலும் பார்த்தேயிராத மித்ரனின் கோப முகத்தைத்தான்.

வெள்ளை நிற பைஜாமா குர்த்தாவில் கால் மேல் கால் போட்ட படி கைகளைக் கட்டிக் கொண்டு தங்கள் பெட்ரூமின் கதவையே கூர்மையாகப் பார்த்தபடி நிமிர்ந்து அமர்ந்திருந்தான் மித்ரன். கண்களிரண்டும் கோவைப் பழம்போல் சிவந்திருந்தது. அவன் அமர்ந்திருந்த தோரணையே அச்சம் தருவதாக இருந்தது.

இதுவரை சம்ரிதி பார்த்தேயிராத அவனுடைய கோப முகம். நெருங்கவே பயமாக இருந்தது பெண்ணவளுக்கு. ஒரே இரவில் மித்ரன் அந்நியமாகிப் போய்விட்டது போல் தோன்றியது. அவனுடைய கூர்மையானப் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்து கொண்டவள்,

"சீக்கிரமே எந்திரிச்சுட்டீங்களா அத்தான்? என்னை எழுப்பியிருக்கலாமே?" முயன்று குரலை சகஜமாக்கிக் கொண்டு வினவினாள்.

"ராத்திரி ஏன் அப்படிச் சொன்ன?" அவளைக் கூர்மையானப் பார்வையால் அளவிட்டபடி நேரடியாகக் கேட்டான் மித்ரன்.

"நான்... நான் ஒன்னும் சொல்லலையே" என்று சம்ரிதி முடிக்கும் முன் அந்த வீடே அதிரும்படி கர்ஜனையாக வந்தது மித்ரனின் குரல்.

"பொய் சொல்லாதே"

அந்தக் குரலில் சம்ரிதியின் சர்வாங்கமும் நடுங்கிப் போனது. வெளிப்படையாகவே கைக்காலெல்லாம் நடுங்கத் தொடங்க செய்வதறியாமல் திகைத்துப் போனாள் சம்ரிதி.

"நீ மனசுல என்னைப் பத்தி என்ன தான் நினைச்சுக்கிட்டிருக்க? எவ்வளவு தைரியமிருந்தா இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட இருந்து மறைச்சிருப்ப? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு? கிறுக்கன் மாதிரி இருக்கா? இதுக்கு மேல எதையாவது மறைக்கணும்னு நினைச்ச நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். சொல்லிட்டேன். எனக்கு இன்னைக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சாகணும்"

இம்முறைக் கத்தவில்லை மிரட்டவுமில்லை ஆனால் அழுத்தமாக வெளிவந்தது வார்த்தைகள். சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற மறைமுக மிரட்டலிருந்தது அவன் தொனியில். குரலில் எப்பொழுதும் வழிந்தோடும் காதலுமில்லை வாஞ்சையுமில்லை. அத்தனை அந்நியமாக ஒலித்தது குரல்.

அவன் காட்டிய அந்நியத் தன்மையில் முற்றிலும் உடைந்து போனவள் தேற்றுவதற்கு ஆளின்றி அப்படியே அந்த சுவரோரம் சரிந்து அமர்ந்து கதறத் தொடங்கினாள். பெண்ணவளின் கதறல் மனதை உலுக்கிய பொழுதும் இருந்த இடத்தை விட்டுக் கிஞ்சிற்றும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான் மித்ரன் அவளை வெறித்துப் பார்த்தபடி.

அழுது ஓய்ந்தவள் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு பேசத் தொடங்கினாள். அவன்பால் காதல் கொண்ட மனது இதுவரை சொல்லாதத் தன் உள்ளத்துக் காதலையெல்லாம் கொட்டத் தொடங்கியது.

ᔤᔤᔤᔤᔤᔤᔤᔤᔤᔤᔤᔤᔤ

தங்களுக்கென்று ஒரு குழந்தைப் பிறந்துவிட்ட பின்னும் கூட மித்ரன் மீது வைத்திருந்த பாசம் துளியளவும் குறைந்ததில்லை ராஜன் தம்பதியருக்கு. வருடம் தவறாமல் கோடை கால விடுமுறையின் பொழுது இவர்கள் குடும்பமாக டெல்லிக்குக் கிளம்பி விடுவார்கள் அல்லது சுஜாதாவையும் பிள்ளைகளையுமாவது இங்கு வரவழைத்து விடுவார் ராஜன்.

தனது குட்டி மகளுக்கு அடிக்கடி பள்ளி மாற்றுவது பிடிக்காத காரணத்தால் வேலையிலிருந்தும் விருப்ப ஓய்வுப் பெற்றுக் கொண்டார் ராஜன். அதனால் இவர்களின் வருடாந்தரப் பயணத்திற்குப் பெரிதாக எந்தத் தடங்கலும் வந்ததில்லை. பிள்ளைகள் வளர வளர இந்தப் போக்குவரத்து சற்றுக் குறைந்திருந்தது அவர்களின் கல்வி நலன் கருதி.

சம்ரிதியின் சடங்கின் பொழுது சுஜாதா குடும்பமாக வந்ததுதான். அதன் பிறகு இப்பொழுது தான் மித்ரன் வந்திருக்கிறான் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து. இடையில் அரவிந்த் அர்ஜூன் திருமணத்திற்கு ராஜன் குடும்பம் இங்கிருந்து டெல்லிக்கு சென்று வந்தார்கள்.

சம்ரிதி இப்பொழுது முதலாமாண்டு பி.காம் படித்துக் கொண்டிருக்க மித்ரன் எம்.டெக் இறுதியாண்டில் இருந்தான். பார்த்திபனுக்கும் நேஹாவிற்கும் திருமணம் நடந்து முடிந்திருந்தபடியால் அவர்களிருவரும் மாமன் வீட்டு விருந்திற்காக திருச்சிக்கு வந்திருந்தார்கள். உடன் மித்ரனும் வந்திருந்தான் தான் இறுதியாண்டு ப்ரொஜெக்ட்டுக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதால் மாமாவிடமும் அத்தையிடமும் ஆசி வாங்குவதற்காக. கூடவே சம்ரிதியையும் பார்த்துச் செல்வதற்காக.

ராஜனுக்கு மித்ரன் ஐஐடியில் படிப்பதே அத்தனை பெருமை. இதில் இந்திய அளவில் அவர்கள் தேர்ந்தெடுத்த சில மாணவர்களில் மித்ரனும் ஒருவன் என்பதை எண்ணி எண்ணிப் பூரித்துப் போயிருந்தார் மனிதர். புதுமணத்தம்பதிகளைக் கவனிப்பதை விட மித்ரனுக்குத்தான் கவனிப்புக் கூடுதலாக இருந்தது.

இது எப்பொழுது நடக்கும் கதையாதலால் பார்த்திபனும் வெளியில் புலம்புவது போல் புலம்பிக் கொண்டு உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தான். நேஹாவும் சித்தி, சித்தப்பா என்றழைத்துக் கொண்டு நன்றாகவே ஒட்டிக் கொண்டாள் இவர்களோடு.

சம்ரிதிதான் மித்ரனிடம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். நான்கு வருடங்களுக்கு முன் மித்ரனிடம் தனியாக 'மிருஅத்தான்' என்று கூறி அந்த ஒற்றைச் சொல்லில் தன் மனதைத் திறந்து காட்டியது தான். அதன் பிறகுப் பெரிதாக எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை இருவருக்கிடையில்.

அன்றே பார்த்திபன் பார்த்துவிட்டுக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைந்ததாலும், அவளுமே சிறு பெண்ணாக இருந்ததாலும் மித்ரன் அதன் பிறகு தன் கவனத்தை முழுக்க முழுக்க படிப்பில் செலுத்தினான். இப்பொழுது நேரில் சந்திக்கையில் மனதில் தேக்கி வைத்தக் காதல் முழுவதையும் அவளிடம் கொட்டி விட வேண்டும் போல் இருந்தது.

ஆனால் பாவையின் தரிசனம் கிடைக்கவே பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது. மித்ரன் இருக்கும் திசைப் பக்கமே வராமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். வந்திருப்பதே வெறும் நான்கு நாள் பயணம். ஒருமுறையாவது அவளைத் தனிமையில் சந்தித்து விடமாட்டோமோ என்று ஏங்கிப் போயிருந்தான் மித்ரன்.

குழந்தை முகம் முற்றிலும் மாறி முழுக்க முழுக்க அழகான குமரிப் பெண்ணாக வலம் வந்தவளை இப்பொழுதே கல்யாணம் கட்டித் தூக்கிக் கொண்டு போய் விட மாட்டோமா என்றிருந்தது மித்ரனுக்கு. கோலிக் குண்டு கண்களும், வில்லென வளைந்த அடர்ந்த புருவமும், செம்பவள இதழ்களும், அளவான நாசியும் கொள்ளைக் கொண்டன மித்ரனை. எத்தனை முறைப் பார்த்தாலும் அவனுக்குப் போதவில்லை.

சம்ரிதிக்கும் ஆசைதான் மித்ரனை ஆசை தீர கண்களால் களவாடிக் கொள்ள வேண்டுமென்று. எங்கே முடிகிறது? எங்கிருந்து மறைந்து நின்றுப் பார்த்தாலும் தான் பார்த்த அடுத்த நொடித் தன்னைத் திரும்பிப் பார்த்துவிடுகிறான். அவனின் ஒற்றைப் பார்வையே பெண்ணவளை சிவக்கச் செய்ய போதுமானதாக இருக்கிறதே.

இதில் பார்த்திபனும் நேஹாவும் வேறு கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இவர்களைத்தான் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் காதலித்த பொழுது மிதரன் செய்ததையெல்லாம் அவர்களும் திருப்பிச் செய்ய வேண்டி இருந்ததே. அந்தக் கவலை அவர்கள் இருவருக்கும்.

ராஜன் எவ்வளவோ சொல்லியும் கல்லூரிக்கு விடுப்பு எடுக்காமல் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சம்ரிதி. கடந்த இரண்டு நாட்களாகவே இந்தக் கதைதான் நடந்துக் கொண்டிருந்தது. மித்ரன் கல்லூரிக்காவது வந்து தன்னை சந்தித்து விட மாட்டானா என்ற நப்பாசைப் பெண்ணுக்கு. ஆனால் மன்னவனுக்கோ இன்னும் அந்த எண்ணம் உதயமானதாகத் தெரியவில்லை.

காலை வேளையில் மித்ரனும் ராஜனும் பின்கட்டில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க, பார்த்திபனும் நேஹாவுமோ இன்னும் தங்கள் அறையிலிருந்தே வெளி வந்திருக்கவில்லை. லெக்ஷ்மி பரபரப்பாக சமையலறையில் சுற்றிக் கொண்டிருக்க, சம்ரிதி தன்னுடைய அறையிலிருந்தவாறே அவரை அழைத்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா... ம்மா... ப்ளீஸ் மா... இந்த ஒரே ஒரு தடவை மட்டும் வந்துட்டுப் போங்களேன். என் செல்ல மம்மியில்ல" சம்ரிதி கத்திக் கொண்டிருப்பது நன்றாகவே கேட்டது மித்ரனுக்கு. எதற்காக இப்பொழுது இப்படிக் கத்திக் கொண்டிருக்கிறாள் என்று யோசனையாக மாமனைப் பார்க்க அவரோ இது வழக்கமாக நடக்குமொன்று தான் என்பது போல சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

"நான் வேலையா இருக்கேன் ரித்தும்மா. நீயே கட்டிக்கோடா" சமையலறையில் இருந்தவாறே பதிலுக்குக் கெஞ்சிக் கொண்டிருந்தார் லெக்ஷ்மி.

"அம்மாமாமா..." என்று வீடே அதிரும்படி சம்ரிதி கத்தி வைக்க,

"இவளோட..." என்று முனங்கியபடியே அடுப்பை அணைத்துவிட்டு கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டே அவளிருந்த அறை நோக்கிச் சென்றார் லெக்ஷ்மி.

"அம்மா வேலையா இருக்கேன்ல, நீயே கட்டிக்கக் கூடாதா ரித்தும்மா" என்று லெக்ஷ்மி குறைபட,

"நான் கட்டினா இது நிற்கவே மாட்டேங்குதும்மா" உதட்டைப் பிதுக்கிக் கொண்டு கைகளில் இருந்த தாவணியைத் தூக்கிக் காட்டினாள் சம்ரிதி.

"எல்லா பொண்ணுங்களும் புடவை கட்டத்தான் அம்மாவைக் கூப்பிடுவாங்க. இங்க இன்னும் தாவணியே கட்டத் தெரியலை. புடவை கட்டும் பொழுது என்னென்ன பாடு படுத்துவியோ? அதது அந்தந்த வயசுல கட்டிப் பழகணும். எல்லாம் உங்க அப்பாவைச் சொல்லணும். நான் சொல்லும் போதெல்லாம் குழந்தைக்குப் புடிச்ச டிரஸ்சைப் போட்டுக்கட்டும் விடுன்னு சப்போர்ட் வேற. ஏழு கழுதை வயசாச்சு இன்னும் குழந்தையாம் குழந்தை" லெக்ஷ்மி புலம்பிக் கொண்டே தாவணியில் மடிப்பெடுக்க,

வெடுக்கென்று அவர் கையிலிருந்த தாவணியைப் பிடுங்கியவள், "எத்தனை வயசானாலும் எங்கப்பாவுக்கு நான் குழந்தைதான். எங்கப்பாவைத் திட்டிக்கிட்டே ஒன்னும் இதை நீங்க கட்டிவிட வேண்டாம். தாங்க நானே கட்டிக்குவேன்" முகத்தை ஏழு முழத்திற்கு நீட்டி வைத்துக் கொண்டு கூறினாள் சம்ரிதி.

"இதை அப்பவே செய்ய வேண்டியதுதானே எருமை மாடே" லெக்ஷ்மி நொடிக்க,
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
"அப்பா அம்மா என்னை எருமைமாடுன்னு சொல்றாங்கப்பா" போட்டுக் கொடுக்கும் வேலையைக் கச்சிதமாக செய்தாள் சம்ரிதி.

"எதுக்காவது என்னைக் கூப்பிடு வைச்சுக்குறேன் உன்னை" சிரித்துக் கொண்டே மிரட்டிவிட்டுச் சென்றார் லெக்ஷ்மி.

எப்பொழுது குரல் கொடுத்தாலும் உடனடியாக அங்கு வந்து சேரும் தந்தை இன்னும் வராததால், 'எங்க போனாங்க இந்த அப்பா' என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க, தோட்டத்தில் ராஜன் இருக்கவில்லை. மித்ரன் மட்டுமே நின்று இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தான் இன்னும் தாவணியை அணிந்து கொள்ளவில்லை என்பதோ, ஜன்னலை மூடாமல் உடை மாற்றியதோ எதுவும் நினைவிலாடவில்லை சம்ரிதிக்கு. பார்த்த விழி பார்த்தபடி அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள். அவன் கண்களிலிருந்து தன்னுடையக் கண்களைப் பிரித்தெடுக்க முடியவில்லை சம்ரிதியால்.

மித்ரனும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் இருந்தான். பழையகாலத்து முறைப்படி கட்டிய வீடு. ஒரே ஜன்னலாக இல்லாமல் கீழ் மேலாகப் பிரித்து இரண்டு கதவுகள் இருந்தன. கீழ் ஜன்னல் மூடி இருக்க மித்ரனுக்குத் தெரிந்ததெல்லாம் அவளின் முகம் மட்டுமே. அந்தக் கண்களிலிருந்து தன் பார்வையை விலக்கிக் கொள்ள விருப்பமில்லாமல் பார்த்திருந்தான் மித்ரன்.

'ஜன்னலின் வழி வந்து விழுந்தது மின்னலின் ஒளி

அதில் தெரிந்தது அழகு தேவதை அதிசய முகமே

எந்தநாள் வரும் உயிர் உருகிய இந்த நாள் சுகம்

அதை நினைக்கையில் இரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்'

"இளநீர் குடிக்கிறியாய்யா" என்ற ராஜனின் குரல்தான் இவர்கள் இருவரின் மோன நிலையையும் கலைத்தது. குப்பென்று மனத்தில் பரவிய சந்தோஷத்துடன் ஒரு கையால் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு, உதட்டில் விரிந்த மந்தகாசப் புன்னகையுடனும், "வேண்டாம் மாமா. ஏற்கனவே ஜில்லுன்னு தான் இருக்கு" என்று பதிலளித்தான் மித்ரன். பங்குனி மாத வெயில் சில்லென்று இருக்கிறதா? என்ன சொல்கிறான் இவன் என்று முழிப்பது இப்பொழுது ராஜனின் முறையாகிப் போனது.

அவரிடம் பதிலளித்துவிட்டு வீட்டைச் சுற்றிக் கொண்டு முன்வாசல் வழியாக வரப் பார்க்க, அடுத்ததாகக் குறுக்கிட்டது நேஹா.

"என்ன மித்ரன் சார், முகம் சும்மா லைட்டுப் போட்டு விட்ட மாதிரி பிரகாசமா மின்னுது. என்ன விஷயம்?" என்று வழிமறித்து நக்கலடித்தாள் நேஹா.

'அய்யோ படுத்துறானுங்களே' என்று தான் முதலில் தோன்றியது மித்ரனுக்கு. இருந்தாலும் அதை வெளிக்க்காட்டிக் கொள்ளாமல், "அண்ணி தூங்கி முழிச்சாச்சா அண்ணி? ஏன் அண்ணி இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிச்சிட்டீங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே அண்ணி" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் மித்ரன்.

"டேய் இருடா... ஏற்கனவே உன் பிரகாசமான மூஞ்சியைப் பார்த்தே லைட்டா நெஞ்சு வலி வர்ற மாதிரி இருந்துச்சு. நீ வேற அண்ணினெல்லாம் கூப்பிட்டு இல்லாத ஹார்ட் அட்டாக்கை வரவழைச்சுடாதே. எனக்கு வேற இப்பதான் கல்யாணமாயிருக்கு" என்று நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே நேஹா கிண்டலடிக்க,

"தெரியுதில்ல இப்பதான் கல்யாணமாச்சுன்னு அப்பப் போங்க போய் முதல்ல உங்க புருஷனைக் கவனிக்கிற வழியைப் பாருங்க. அதை விட்டுட்டு..." என்று சொல்லிக் கொண்டே விலகிச் செல்லப் பார்த்தான் மித்ரன்.

அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய நேஹா, "இரு செல்லம் இந்த பிரகாசத்துக்கு என்ன காரணமுன்னு சொல்லிட்டுப் போ" என்று கிடுக்கிப் பிடி பிடித்தாள் நேஹா.

"நானும் அண்ணியாச்சே கொட்டக் கூடாதுன்னுப் பார்த்தா ஓவரா பண்ற" என்று சொல்லிக் கொண்டே அவள் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தா மித்ரன்.

"ஸ்... ஆ... வலிக்குது பக்கி... இரு உங்க அண்ணாகிட்ட சொல்றேன்."

"செல்ஃப் ஆப்பு வைச்சுக்காத சீனியர். நீ நாளைப்பின்ன அவன்கிட்ட சண்டை போட்டேன்னு வை அவன் என்ன பண்ணுவான் தெரியுமா? டைரக்டா உன் மேல கை வைக்காம எனக்கு லஞ்சம் கொடுத்து உன்னைக் கொட்ட சொல்லுவான். நானும் நல்லா வைச்சு செய்வேன். இதெல்லாம் தேவையா சொல்லு" அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தான் மித்ரன்.

"அப்படிங்குற..." என்று நேஹா யோசிக்கத் தொடங்க அவளுக்குமே 'செஞ்சாலும் செய்வாரு இந்த மனுஷன்' என்றே தோன்றியது. அதை வெளிககாட்டிக் கொள்ளாமல், "ஒருநாள் என்கிட்ட மாட்டாமயா போவ? அன்னைக்கி இருக்கு உனக்கு" என்று கூறிச் சென்றாள்.

"ஊஃப்" என்று அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டு, 'என் காதலுக்கு எதிரி வேற யாரும் வேண்டாம். இதுங்களே போதும். முடியலைடா சாமி' என்று பொருமிக் கொண்டே முன் வாசல் நோக்கி நடந்தான் மித்ரன்.

இங்கு சம்ரிதிக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. 'அச்சோ ரித்து இப்படியா பண்ணுவ? ட்ரெஸ் மாத்தும் போது ஜன்னலை மூட மாட்டியா? ஒருவேளை பார்த்திருப்பாங்களோ? ச்சே ச்சே இருக்காது. கீழ ஜன்னல் மூடி தானே இருந்துச்சு. அதுனால ஒன்னும் தெரிஞ்சிருக்காது. எதுக்கும் அப்புறமா போய் அங்க நின்னு பார்க்கணும், அங்கயிருந்து பார்த்தா எதாவது தெரியுதான்னு' என்று மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டவள் சில பல சேஃப்டி பின்களின் உதவியுடன் தாவணியை அணியத் தொடங்கினாள்.

இளமஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் பாவாடை மற்றும் பிளவுஸ், அதற்குத் தோதாக மெரூன் நிறத்தில் தாவணி அணிந்து வந்தாள் சம்ரிதி. கழுத்தில் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு மெல்லிய செயின், ஒரு கையில் வாட்ச், மற்றொரு கையில் மெல்லிய நான்கைந்து வளையல்கள், நெற்றியில் சின்ன மெரூன் நிற ஸ்டிக்கர் பொட்டு. இடைவரை நீண்டிருந்த கூந்தலில் முல்லைப்பூச்சூடி தேவதையாக வெளியே வந்தாள் சம்ரிதி.

நேராக சமையலறைக்குச் சென்றவள், "ம்மா சரியா இருக்கான்னு பாருங்க" என்று கூறிக் கொண்டே அங்கிருந்த மசாலா பணியாரத்தைக் கையிலெடுக்க, அவள் கையிலிருந்ததைப் பிடுங்கிக் கொண்டே "வாவ் யாரிந்த தேவதை?" என்று அவளிடம் வம்பு வளர்த்தான் பார்த்திபன்.

"ம்ச் கிண்டல் பண்ணாதீங்க மாமா. இன்னைக்கு ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்சுக்கு ஃபேர்வெல் பார்ட்டி. நான் பாட்டுப் பாடணும். அதுக்குத்தான் இந்த காஸ்ட்யூம்" என்று கூறிக் கொண்டே இன்னொரு பணியாரத்தைக் கையிலெடுக்க,

"ம்ச் சம்ரிதி... தட்டெடுத்துக்கிட்டு டைனிங் டேபிளுக்குப் போ. நான் வைக்கிறேன். ஆமா பாட்டு பாடி பிரக்டிஸ் பண்ணியா? ஒன்னுமே பண்ணலை" என்று கேட்டவாறு அவளுக்கு உணவைப் பரிமாறினார் லெக்ஷ்மி.

"ம்மா இவங்க எல்லாம் சினிமா பாட்டுதான்மா கேட்பாங்க. அதெல்லாம் பார்த்துக்கலாம்."

"சரி சரி சீக்கிரம் கிளம்பு. அப்பா வெயிட் பண்றாங்க பாரு" ராஜன்தான் தினமும் காலையில் வண்டியில் அழைத்துச் சென்று அவளைக் காலையில் கல்லூரியில் இறக்கி விடுவார். மாலையில் கல்லூரிப் பேருந்தில் வந்துவிடுவாள்.

"நேத்துப் பால் கொழுக்கட்டை, இன்னைக்கு மசாலா பணியாரம் இதெல்லாம் உங்களுக்கு செய்யத் தெரியுமுன்னே எனக்கு இப்பதான்மா தெரியுது" ஓரக்கண்ணால் வெளியில் நின்றிருந்த மித்ரனைப் பார்த்துக் கொண்டே கூறினாள் சம்ரிதி.

"இதுக்கெல்லாம் பேரே மாப்பிள்ளைப் பலகாரம்தான். பார்த்தி புது மாப்பிள்ளை. அப்புறம் அவனுக்கு இதெல்லாம் செய்ய வேண்டாமா?" கேட்டுக் கொண்டே அவளுக்கு காலேஜுக்கும் பேக் பண்ணிக் கொண்டிருந்தார் லெக்ஷ்மி.

"அத்தை சொல்லவே இல்லை இதெல்லாம் நீங்க எனக்காகவா பண்ணீங்க? நான் வேற யாருக்கோன்னுல்ல நினைச்சேன்" என்று பார்த்திபன் கூற,

"எங்கம்மாவுக்கு செலக்டிவ் அம்னீஷியா மாமோய். பார்க்க வேண்டியவங்களைப் பார்த்தாதான் இந்த ஐட்டமெல்லாம் எங்கம்மாவுக்கு செய்யிறதுக்கு ஞாபகத்துக்கு வரும்" பேசிக் கொண்டு இருந்தவள் மித்ரன் உள்ளே வரவும் வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்குக் கிளம்பினாள்.

"போகலாமாப்பா" என்று கேட்ட சம்ரிதிக்கு "ஹ்ம்ம் போகலாம்டா" என்று இடது கையை உதறிக் கொண்டே பதிலளித்தார் ராஜன்.

"மாமா ஏன் கையை அப்பப்ப உதறிக்கிட்டே இருக்கீங்க? வலிக்குதா? அடிக்கடி நெஞ்சை வேற நீவி விடுறீங்க. என்ன மாமா பண்ணுது? அவரைக் கவனித்துக் கொண்டிருந்த மித்ரன் அக்கறையாகக் கேட்டான். குரலே சற்றுக் கலங்கி இருந்தாற் போல் தோன்றியது.

"ஒன்னுமில்லைய்யா.. ரெண்டு நாளா வெறும் எண்ணெய் பலகாரமா சாப்பிட்டோம் இல்லையா அதான். இதுக்குப் போய் இவ்வளவு வருத்தப்படுற" சிரித்துக் கொண்டே அவன் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டார் ராஜன்.

"நான் இந்த ப்ரொஜெக்ட் முடிஞ்சு வந்தப்புறம் உங்களைக் கூட்டிட்டுப் போய் ஒரு ஃபுல் பாடி செக்கப் பண்ணணும்" என்றான் மித்ரன்.

"உத்தரவு மகாராஜா" என்று இடைவரை குனிந்து ராஜன் பதிலளிக்க, அவரிடமிருந்த வண்டி சாவியை வாங்கியவன், "நான் சம்ரிதியைக் காலேஜ்ல ட்ராப் பண்றேன். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்று கூறி வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டான்.

சம்ரிதி தயக்கமாகத் தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, அவரும் சம்மதமாகத் தலையசைத்துப் போய் வருமாறு கண்களால் ஜாடை காட்டினார். அந்த முப்பது நிமிடப் பயணம் அத்தனை ஏகாந்தமாக இருந்தது இருவருக்கும். பேச்சுகளற்ற மௌனம் வழியெங்கும் நீடித்திருக்க, அந்த ஏகாந்தத்தை ஆழ்ந்து அனுபவித்தனர் இருவரும்.

சம்ரிதி பயிலும் கல்லூரியும் வந்து சேர, கிளம்பவா என்று கண்களால் சம்மதம் கேட்டவனிடம் இறங்கி நின்று அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே, "என் காலேஜுக்கு உங்களுக்கு வழி தெரியுமா மாமா?" என்று கேட்டு வைத்தாள் சம்ரிதி.

அவள் எதற்காகக் கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டவன் விரிந்த புன்னகையுடன், "வழி தெரியாமலா" என்று ஆரம்பிக்கவும் "ஹேய் மிஸ்டர் புன்னகை மன்னன்" என்று ஆர்ப்பாட்டமாக தூரத்தே ஒரு குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

நாக்கைச் சுழற்றி சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன் 'இதோ வருகிறது பார் உன் கேள்விக்கான பதில்' என்பது போல் அந்தக் குரல் வந்த திசையைக் கண்களால் சம்ரிதிக்கு சுட்டிக் காட்டினான். 'அச்சோ மறந்தே போயிட்டேனே' எனும் விதமாக தலை சரித்து, கண்களையும் மூக்கையும் சுருக்கிக் கொண்டு நாக்கைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள் சம்ரிதி.

அவள் முகம் காட்டிய பாவனையை மித்ரன் ரசித்துப் பார்க்கவும், அந்தக் குரலுக்கு சொந்தக்காரி இவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது. அவள் அஸ்வினி தேஜஸ்வினி.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சங்கீதா டியர்
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai song ka..

yappa fb vanthuto..

ஆனா அது முன்ன இருந்த ருத்ர அவதாரத்தைதான் பாக்க தாங்க முடில..

அட யாரு மா புது கேரக்டர் உள்ள வார.. தேஜஸ்வினி
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top