• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே, இந்தத் தடவைக் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. கோவிச்சுக்காதீங்க.
படிச்சிட்டு நிறை குறைகளை சொன்னீங்கன்னா என்னை நான் திருத்திக்குறதுக்கு உதவியா இருக்கும். ஆதரவளித்துவரும் அனைவருக்கும் நன்றி ???7218BBCA-4089-461A-808A-BC27BCFFA643.jpeg
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 19

கடந்த காலக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த இரு ஜீவன்களும் நீந்தி நிகழ்காலத்தில் கரையேறி இருந்தனர். வீடு அமைதியைத் தத்தெடுத்திருந்தது. இருவரும் ஆளுக்கொருத் திசையில் வெறித்தப் பார்வையுடன் அமர்ந்திருந்தார்கள்.

கவலை ஒருபுறம் நிம்மதி ஒருபுறமென இருவேறு உணர்வுகள் சம்ரிதியை ஆட்கொண்டிருந்தன. சிங்கப்பூர் வந்து சேர்ந்த நாளிலிருந்து அவளது கவலைகளைக் கொஞ்ச கொஞ்சமாக மித்ரன் மறக்கடித்திருந்தான். பழைய காயம் இப்பொழுது ஆறியிருந்தாலும் அது கொடுத்த வலியின் தாக்கம் இன்னும் மிச்சமிருந்தது.

ஆணோ பெண்ணோ தாய் அல்லது தந்தையினுடைய திடீர் இழப்பு, படிக்கும் வயதில் அந்தக் குழந்தைக்கு ஒரு அநாதரவான நிலையையே தரும். அந்த நிலை மாறும் முன்னரே தத்துக் குழந்தை என்ற உண்மையும் இடியெனத் தாக்கியதில் மொத்தமாக நிலைகுலைந்துப் போயிருந்தாள் பெண்.

தந்தை இறந்த பின் ஒரு மாதிரியான பாதுகாப்பற்ற உணர்வில் சிக்கித் தவித்தவளுக்கு தத்துக் குழந்தை என்ற விபரம் தெரிந்த பிறகு மொத்தமாக அந்த உணர்விலேயே மூழ்கிப் போனாள். எதிலும் பிடித்தமின்மையும் விரக்தியுமே மிஞ்சியது. தன்னைப் பற்றிய சுயபச்சாதாபமும் தாழ்வு மனப்பான்மையுமே மொத்தமாக அவளை ஆட்கொண்டிருந்தன.

மித்ரனிடம் வந்து சேர்ந்தப் பிறகுதான் அவள் மீண்டும் பாதுகாப்பை உணர்ந்தாள். எந்த ஒரு பெண்ணுமே தன் கணவனிடத்தில் முதலில் எதிர்பார்ப்பது இந்தப் பாதுகாப்பு உணர்வைத்தானே. மற்ற அனைத்து விஷயங்களும் இரண்டாம் பட்சம் தான்.

சம்ரிதியைச் சுற்றியே தன்னுடைய உலகம் சுழலும் என்பதைத்தான் மித்ரன் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயத்திலும் நிரூபித்திருந்தானே. அவனுடைய அன்புக் கடலில் விருப்பத்துடனே மூழ்கிப் போனவள் பாதுகாப்பாக உணர்ந்தாள் அவனுடைய அண்மையில்.

இப்படியே வாழ்க்கையைத் தொடர்ந்துவிடத் துடித்தவளுக்குத் தடையாக இருந்தது தான் தத்துக் குழந்தை என்ற உண்மையை மித்ரனிடம் மறைக்கும் குற்றவுணர்ச்சி. இப்பொழுது அதையும் ஒருவழியாகச் சொல்லியாகி விட்டது. எனவே கொஞ்சம் தெளிந்திருந்தாள் சம்ரிதி. இனி எதுவாக இருந்தாலும் மித்ரன் வாயிலிருந்தே வரட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.

"அத்தான்..." மெல்லிய குரலுக்குப் பதிலாக எந்த அசைவும் இல்லை மித்ரனிடத்தில்.

"இந்த ஒரு விஷயம்தான் நான் உங்ககிட்ட இருந்து தூரமா போனதுக்குக் காரணம். நான் உங்க மாமா பொண்ணுங்கிற காரணத்துக்காகத் தானே என்னை விரும்புனீங்க. அதுவே இல்லைங்கும் பொழுது நான் எப்படி அத்தான் உங்களைக் கல்யாணம் செஞ்சுக்க முடியும்?

நான் உங்க ராஜா மாமாவோட பொண்ணா இல்லாமப் போயிருந்தா நீங்க என்னைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டீங்க. எனக்குத் தெரியும்.

அதனாலதான் தேஜூவோட உங்களுக்குக் கல்யாணப் பேச்சு வந்தப்போ அந்த மாதிரி சொன்னேன். ஆனா நான் அதை மனசார சொல்லலை அத்தான். நம்புங்க ப்ளீஸ். இப்ப... இந்த விஷயம் தெரிஞ்ச அப்புறம் உங்களால என்னை ஏத்துக்க முடியுதா? இல்லையில்ல…
இவ எந்த குப்பைத் தொட்டியோ இல்லை சாக்கடையோன்னு நினைக்கத் தோனுதுதானே?" சொல்லிவிட்டு விரக்தியாக சிரித்துக் கொண்டவள்,


"எனக்கே அப்படித்தான் தோனும். நான் எங்கப்பாவோட பொண்ணு இல்லைங்குறதை நினைக்கும் போதே அப்படியே இந்த உடம்புல ஓடுற ரத்தத்தை எல்லாம் வெளியே எடுத்துடணும் போல தோனும்" சொல்லிவிட்டுப் பரபரவென மாற்றி மாற்றிக் கைகளால் உடலை அழுந்தத் தேய்க்கத் தொடங்கினாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மித்ரன் ஒன்றும் பேசாமல் விருட்டென்று வெளியில் எழுந்து சென்றுவிட்டான். படாரென்றுக் கதவை அறைந்து மூடிய சத்தத்தில் சம்ரிதியின் உடல் தூக்கிப் போடத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். மித்ரன் இல்லாத வெறுமை மனதைப் பிசைந்தது.

அடுத்து என்ன செய்வது என்று விளங்காமல் இருந்தவளுக்கு, 'நம்ம காதலுக்காக நாமதானே போராடணும் சமிம்மா' காதுக்குள் மித்ரனின் குரல் எதிரொலித்தது.

அவர்களின் குடியிருப்பு வளாகத்தோடு அமைந்திருந்த பூங்காவில் சென்று அமர்ந்தான் மித்ரன். மதிய நேரமாதலால் பெரிதாகக் கூட்டமொன்றும் இல்லை அந்த இடத்தில். ஒரு சிலர் மட்டுமே தங்கள் செல்லப் பிராணிகளோடு நடைப் பயின்று கொண்டிருந்தார்கள்.
முழங்காலில் கைகளை ஊன்றிக் கண்களையும் முகத்தையும் அழுந்த மூடியவாறு அமர்ந்திருந்தான் மித்ரன். அவனுக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. சம்ரிதி கூறியதை நம்ப மறுத்தது மனம்.


'என்ன சொல்கிறாள் இந்தப் பெண்? அறியாத பருவமேயானாலும் அத்தை வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவை நானும் மாமாவும் போட்டிப் போட்டுக் கொண்டு கை வைத்தும் காதை வைத்துக் கேட்டும் உணர்ந்திருக்கிறோமே.'

'இப்பொழுதும் கூட அதிகாலை வேளையில் என்றாவது கண் விழிக்க நேர்ந்தால், தூக்கத்தில் படுத்திருக்கும் நிலை ஏடாகூடமாகிப் போயிருக்க, அவள் இதயத்துடிப்பை காதுக்குள் கேட்கும் பொழுது மனம் ஒப்பீடு செய்ததே. அத்தை வயிற்றில் இருக்கும்போதிருந்தே இந்த இதயத்துடிப்பைத் தான் கேட்டதற்காகப் பெருமைப் பட்டுக் கொண்டோமே'

'இவை அனைத்தும் பொய்யா? மாமாவுக்கு பை பாஸ் சர்ஜரியின் பொழுது அனைத்து முக்கிய ஆவணங்களையும் மாமா என்னிடம் தானே கொடுத்து வைத்திருந்தார். அப்பொழுது இந்தப் பத்திரத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே.'

'பண விஷயம் முதற்கொண்டு எல்லா விஷயத்தையும் பகிர்ந்தாரே. இதைப் பற்றி ஏன் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.' யோசிக்க யோசிக்க வினாக்கள் தான் படையெடுத்தனவே ஒழிய விடை கிடைக்கவில்லை. நடந்ததை நம்புவதற்கே மித்ரனுக்குக் கொஞ்சம் அவகாசமும் தனிமையும் தேவைப்பட்டது.

நம்பியபிறகு எப்படி இதிலிருந்து சம்ரிதியை வெளிக் கொணர்வது என்று சிந்திக்கத் தொடங்கினான். அவனளவில் மித்ரன் தெளிவாகவே இருந்தான். ராஜா மாமா மகளாக இருந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி சம்ரிதி எனும் தனி மனுஷி தன்னுடையவள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை மித்ரனுக்கு.

'குப்பைத்தொட்டி, சாக்கடை என்னவெல்லாம் பேசிவிட்டாள்? ஏன் பெற்றால்தான் பிள்ளையா? மாமா அப்படியா வளர்த்தார் இவளை? கண்ணுக்குள் அல்லவா பொத்தி வைத்து வளர்த்தார். வெறும் ஒரு காகிதம் அந்த இருபது வருட பந்தத்தை அறுத்துவிட முடியுமா?' மனம் சம்ரிதிக்காக யோசித்தது.

'மாமா பெண்ணைத் தவிர வேறு பெண்ணைப் பார்க்க மாட்டேன் என்று நான் என்ன சபதமா எடுத்திருக்கிறேன். மாமா பெண் என்பதால் தான் பார்க்கவே செய்தேனாம். இல்லாவிட்டால் பார்த்திருக்கவே மாட்டேனாம். அப்போ ராஜா மாமாவுடனே சேர்ந்து சைட் அடித்ததெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது?' என்று தலையில் தான் அடித்துக் கொள்ளத் தோன்றியது மித்ரனுக்கு.

தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று மனம் பதைத்தாலும் கழிவிரக்கத்தில் உழன்று கொண்டிருப்பவளிடம் ஆறுதல் சொல்லித் தேற்றுவது இயலாத காரியம். இன்னும் கொஞ்சம் கூட்டுக்குள் ஒடுங்கிப் போவாளே தவிர தெளிந்து வர மாட்டாள். கொஞ்சம் விலகி நின்றால் தானாகத் தன்னிடம் வந்து சேர்வாள் என்று மிகச் சரியாகக் கணித்தான் மித்ரன்.

சில மணி நேரங்கள் கடந்திருக்க வீட்டுக்குச் சென்றான் மித்ரன். மீண்டுமாகக் குளித்திருப்பாள் போல, தலையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட சமையலறையில் நின்றிருந்தாள் சம்ரிதி. மித்ரனுக்கு மிகவும் பிடித்த ஹாட் சாக்லேட் தயாராகிக் கொண்டிருந்தது.

ஒன்றும் பேசாமல் ஹேர் ட்ரையர் எடுத்து வந்தவன் அவள் முடியைக் காய வைக்கத் தொடங்கினான் மித்ரன். ஹாட் சாக்லேட் தயாரானதும் இருவரும் ஒன்றாக அருந்தும் பெரிய கப்பையும் சின்னக் கப்புகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றாள் சம்ரிதி.

முடியைக் காய வைத்து முடித்தவன் தனக்கு ஒரு சிறு கப்பில் ஊற்றிக் கொண்டு அவளுக்கும் வேறொரு கப்பில் ஊற்றி வைத்துவிட்டு ஸ்பூனை எடுத்துக் கொண்டு நகர்ந்துவிட்டான். பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு முகம் தொங்கிப் போனது.

அவனுக்கருகில் வந்து அமர்ந்தவள், "உங்களுக்குப் பிடிக்கலைன்னா நான் இங்கேயிருந்து போயிடுறேன் அத்... அத்தான்" திக்கித் திணறிக் கூறி முடித்தாள்.

"இங்கயிருந்து போய்" கேள்வியாகப் புருவத்தை உயர்த்தியவன், "அத்தைக்கு இந்த விஷயம் தெரியுமா?" என்று வினவினான்.

"ம்ஹூம்" மறுப்பாகத் தலையசைத்தவள், "அம்மாகிட்டப் போய் நான் உங்கப் பொண்ணு இல்லையான்னு என்னால கேட்க முடியாது அத்தான். அப்பா இருந்திருந்தாலும் கூட என்னால அவங்ககிட்டயும் கேட்டிருக்க முடியாது. என்னை இங்கேயிருந்து அனுப்பினாலும் அம்மாக்கிட்ட மட்டும் இதைச் சொல்லாதீங்க அத்தான் ப்ளீஸ்" கைக்கூப்பிக் கெஞ்சிக் கேட்டாள் சம்ரிதி.

"நான் கொஞ்சம் யோசிக்கணும் சம்ரிதி. எனக்குக் கொஞ்சம் டைம் வேணும். நான் நெக்ஸ்ட் வீக் ஹாங்காங் போறேன் இல்லையா, போயிட்டு வந்து இதைப் பத்திப் பேசி முடிவு பண்ணலாம்" ஒட்டாத்தன்மையுடன் கூறி முடித்தான் மித்ரன்.

"நான் உங்க மாமா பொண்ணு இல்லைன்ன உடனே என்னை உங்கக் கூட வைச்சுக்கிறதா வேண்டாமான்னு டிசைட் பண்ணவே உங்களுக்குப் பத்து நாள் தேவைப்படுது இல்லையா அத்தான்" விரக்தியாகக் கேட்டாள் சம்ரிதி.

அவள் கேள்விக்குப் பதிலேதும் சொல்லாதவன் "நீங்க சொன்ன அந்த டாக்குமென்ட் நான் பார்க்கலாமா? எனக்குக் காட்ட முடியுமா?" என்று கேட்டான்.

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தவள், "என்கிட்ட தான் இருக்கு" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று அந்தத் தத்துப் பத்திரத்தை எடுத்து வந்து கொடுத்தாள்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அதைக் கையில் வாங்கிக் கொண்டவன் "தேங்க் யூ" என்று கூறிவிட்டு ஹாட் சாக்லேட்டில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டான். மித்ரன் அதைப் பிரித்துப் படித்துப் பார்ப்பான் என்று எதிர்பார்த்து அருகில் நின்றவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மரியாதையாகத் தன்னை விளித்ததையும் தேங்க் யூ சொன்னதையும் உணர்ந்து கொண்டவளின் மனது வெகுவாகக் காயப்பட்டுப் போனது. அவன் எப்பொழுது 'டி' என்று சொன்னாலும் முறுக்கிக் கொள்பவள் முதன்முறையாக அந்த அழைப்புக்காக ஏங்கத் தொடங்கினாள்.

"இப்படி யாரோ மூணாவது மனுஷங்கக் கிட்டப் பேசுற மாதிரிப் பேசாதீங்க அத்தான். மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு" தயக்கம் விலக்கி நேரடியாகவே கூறினாள் சம்ரிதி.

"நீங்க என்னை மூணாவது மனுஷனா தானே நினைச்சிருக்கீங்க. இல்லைன்னா இவ்வளவு பெரிய விஷயம் தெரிஞ்சும் அதை என்கிட்ட மறைச்சிருக்க மாட்டீங்கல்ல. உரிமையானவனா நினைச்சிருந்தா என் தோள் சாயத் தானே வந்திருக்கணும். நீங்க தான் அப்படி நினைக்கலையே" அவள் முகம் பார்ப்பதைத் தவிர்த்து எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான் மித்ரன்.

அவனருகில் வந்து அமர்ந்த சம்ரிதி "அப்படியெல்லாம் இல்லை அத்தான்" என்று மித்ரனின் கைப்பிடித்துப் பேசத் தொடங்க, கையை அவளிடமிருந்து உறுவிக் கொண்டான் மித்ரன்.

"சொல்லித் தெரிவதில்லைக் காதல்" என்று அவள் கண்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தவன், அவளுடைய ஹாட் சாக்லேட்டை எடுத்து அவளுக்கு ஊட்டி விடத் தொடங்கினான்.

கண்களில் நீர் வழிய வழிய அந்த ஹாட் சாக்லேட்டை சாப்பிட்டு முடித்தாள் சம்ரிதி. அவன் கைவளைவில் கைக் கோர்த்துக் கொண்டு தோளில் சாய முற்பட, "நான் ஏற்கனவே சொன்னது தான். பத்து நாள் கழிச்சு முடிவு பண்ணலாம்" என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டான் மித்ரன்.

'நீங்க என்னை உங்களை விட்டுப் போக சொல்ல மாட்டீங்க. சொல்லக் கூடாது' மனதோடு எண்ணிக் கொண்டாள் சம்ரிதி.


அலுவலகத்தில் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மித்ரனின் அறையைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சம்ரிதி. மித்ரன், சம்ரிதி, வாங் லீ மூவருடைய அறைகளும் அடுத்தடுத்து தான் அமைந்திருக்கும். நடுவில் பாதிக்கு மேல் வெறும் கண்ணாடித் தடுப்புகள் தான்.

தன்னுடைய அறையிலும் மித்ரனுடைய இருக்கையைப் போலவே போடப்பட்டிருந்த இருக்கையை எதிர்புறமாக மாற்றிக் கொண்டாள் சம்ரிதி. எப்பொழுது வேண்டுமானாலும் அமர்ந்த நிலையிலேயே மித்ரனைப் பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு. நடுவிலிருக்கும் கண்ணாடித் தடுப்புக்குண்டானத் திரையை எப்பொழுதுமே நீக்கித்தான் வைத்திருப்பாள்.

வாங் லீ கூட அலுத்துக் கொள்வான் 'உங்கள் காதலுக்கு ஒரு அளவே இல்லையா என்று'. எதையும் காதில் வாங்கிக் கொண்டதில்லை சம்ரிதி. எப்பொழுது லேப்டாப்பில் இருந்து கண்ணை எடுத்தாலும் எதிர்த் திசையில் அமர்ந்திருக்கும் மித்ரன் முகம் பார்த்துவிட்டே பின் மீண்டும் திரையைக் காண்பாள்.

வேலையே செய்யாமல் அவனை ரசித்தத் தருணங்களும் உண்டு. மித்ரன் அவனறையில் உள்ளத் திரையை வேண்டுமென்றே மூடி வைத்தாலும் வேலை மெனக்கெட்டு எழுந்து சென்று அதைத் திரும்பவும் திறந்து வைத்துவிட்டு வருவாள்.

எதிரில் யாரும் இருந்து பேசிக் கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் சில பல புன்னகைகள், கண் சிமிட்டல்கள், அரிதாகச் சில ரகசிய முத்தங்கள் கூடக் கிடைத்திருக்கின்றன சம்ரிதிக்கு. அதையெல்லாம் எண்ணிக் கொண்டவளுக்கு இப்பொழுது மித்ரன் இல்லாத அந்த அறையைக் காணவே வெறுமையாக இருந்தது.

தனியாக வீட்டில் இருக்கக் கூடாதென்று வம்படியாக வாங் லீ வீட்டில் விட்டுச் சென்றிருந்தான் ஹாங்காங்கிற்கு அலுவலக வேலை நிமித்தமாக. அது வரையில் ஒரு ஒட்டாதத் தன்மையுடன் இருந்தவன் கிளம்பும் பொழுது மட்டும் நெற்றியில் முத்தமிட்டு, கன்னம் தட்டி "டேக் கேர் டா" என்று சொல்லிவிட்டுச் சென்றிருந்தான்.

முத்தங்களில் பல வகை இருக்க இந்த நெற்றி முத்தம் மட்டும் இத்தனை சந்தோஷத்தையும் கூடுதலாக நிம்மதியையும் நிறைவையும் தருகிறதே ஏன்? வியந்து கொண்டாள் சம்ரிதி. அவளின் மோன நிலையைக் கலைப்பதற்காகவே வந்து சேர்ந்தான் வாங் லீ.

"என்ன பகல் கனவா? கனவுல என் நண்பன் வந்தானா?" சிரித்துக் கொண்டே கேட்டான் வாங் லீ.

"ம்ப்ச்... ப்ரோ போதும். வீட்டுல நீங்களும் லீ ஜிங்கும் சேர்ந்து பண்றது போறாதா. இப்ப வேற ஆரம்பிக்கணுமா? நீங்களும் காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணீங்க. அப்புறம் ஏன் எங்களை மட்டும் இப்படிக் கிண்டல் பண்றீங்க?" செல்லமாக அலுத்துக் கொண்டாள் சம்ரிதி.

"அதையேதான் நானும் சொல்றேன். நாங்களும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணோம். இருந்தாலும் உங்களவுக்கு..." என்று மேலே சொல்லாமல் இழுத்தவனை முறைத்துப் பார்த்தாள் சம்ரிதி.

"ஓகே ஓகே கூல் டவுன். நீ இங்க கனவு காண்றது அங்க உன் ஆளுக்குத் தெரிஞ்சிடுச்சுப் போல. போஃன் பண்ணினான்" என்று கூறி கையிலிருந்த அலைப்பேசியைத் தூக்கிக் காண்பித்தான்.

"என்ன சொன்னாங்க? சீக்கிரமே வர்ற மாதிரி எதுவும் சொன்னாங்களா?" ஆவலாக வினவினாள் சம்ரிதி.

"சொன்ன டேட்ல தான் வர்றானாம். கரெக்டா அன்னைக்குத்தான் நம்ம கம்பெனி அனிவர்சரி பார்ட்டி வருது இல்லையா? நீயும் லீ ஜிங்கும் சீக்கிரமே கிளம்பி நேரா சென்தோஸா (Sentosa Island) போயிடுங்க. நான் மித்ரனை ஏர்போர்ட்ல பிக் அப் பண்ணிட்டு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அங்க வந்துடுவோம்"

"இது ஏற்கனவே பேசினது தானே. இப்ப இதைச் சொல்றதுக்கு எதுக்கு ஒரு போஃன்?" முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டாள் சம்ரிதி.

"இது மட்டுமா பேசினோம்? நாங்க பிரெண்ட்ஸ்குள்ள ஆயிரம் விஷயம் பேசிக்குவோம்மா. அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியுமா?" அலுத்துக் கொண்டான் வாங் லீ.

"உன்கிட்ட கேட்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீ ஏன் ஹான்ட் போஃன் வைச்சுக்க மாட்டேங்குற? இந்தக் காலத்துல இது ரொம்ப அவசியமானது இல்லையா? இது இல்லாம நீ எப்படி சமாளிக்குற?" தொடர்ந்து கேட்டான் வாங் லீ.

"எல்லா கேள்விக்கும் ஒரே ஆன்சர்தான். அப்பாவுக்கு செல்போன் பிடிக்காது." சிரித்துக் கொண்டே பதிலளித்தாள் சம்ரிதி. ஆனாலும் எப்படி எனும் விதமாக வாங்லீ தோள் உயர்த்திப் பார்க்க,

"நானும் ஸ்கூல் டேஸ்லயே அப்பாக்கிட்ட கேட்டிருக்கேன் செல்போன் வாங்கித் தரச் சொல்லி. அதுக்கு அப்பா 'அதை ஷர்ட் பாக்கெட்ல போட்டாலே ஹார்ட் அட்டாக் வருதுன்னு சொல்றாங்க. அது எதுக்குடா நமக்கு. அதான் வீட்டுல போஃன் இருக்குல்ல. உன்னை ஸ்கூலுக்கு நான்தான் கூட்டிட்டுப் போறேன் கூட்டிட்டு வரேன். இப்போதைக்கு வேண்டாம்டா. அவசியம்னா பார்த்துக்கலாம்' அப்படின்னு சொன்னாங்க.

உங்களுக்குத் தெரியுமா ப்ரோ, கடைசியில எங்கப்பா இறந்தது ஹார்ட் அட்டாக்லதான். அதுக்கப்புறம் எப்படி எனக்கு செல் போஃன் யூஸ் பண்ண மனசு வரும். அதான் அப்படியே பழகிட்டேன்.

எனக்கு இதுல ஒன்னும் கஷ்டம் தெரியலை. இப்பவும் உங்க பிரெண்ட் எனக்குப் பேசணுமின்னா இங்க கூப்பிட்டிருப்பாங்க" என்று கூறி அலுவலகத் தொலைப்பேசியை சுட்டிக் காட்டியவள்,

"ஆனா எனக்குத் தெரியாம ரெண்டு பேரும் சேர்ந்து ரகசியமா ஏதோ பேசியிருக்கீங்க. ஹ்ம்ம்.. கண்டுபுடிக்கிறேன்" என்று தீவிர முகப் பாவனையுடன் வாங் லீயிடம் கூறினாள் சம்ரிதி.

"வில்லங்கமா எதையும் யோசிக்காதம்மா. மீ பாவம். சத்தியமா வேற எதையும் நாங்க பேசலை" அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் வாங் லீ.

"இல்லையே நமப முடியலையே. நாம வீட்டுக்குப் போயிட்டு லீ ஜிங்கையும் வைச்சுக்கிட்டு இந்த விஷயத்தைப் பத்திப் பேசலாம்" சிரித்துக் கொண்டே சம்ரிதி கூற, "ஆளை விடுங்கம்மா" என்று கூறி அங்கிருந்து விரைந்து சென்றான் வாங் லீ.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக மனத்தில் அழுத்திக் கொண்டிருந்தப் பாரத்தை இறக்கி வைத்ததில் சம்ரிதி தெளிவாகியிருந்தாள். எதுவாக இருந்தாலும் இனி மித்ரன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்திருந்தது. அந்த நம்பிக்கைக் கொடுத்தத் தைரியத்தில் வாழ்க்கையை எதிர் நோக்கிக் காத்திருந்தாள்.

இவர்களால் ஹாங்காங்கில் இருப்பதாக நம்பப்பட்டவனோ இரண்டே நாட்களில் அங்கு வேலையை முடித்துக் கொண்டு இந்தியாவில், தமிழ் நாட்டில், தென் கோடியில் உள்ள கன்னியாகுமரியில் சுற்றிக் கொண்டிருந்தான் கையில் சம்ரிதி கொடுத்தப் பத்திரத்தோடு.
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அடுத்து sentosa island aah சூப்பர்...

இன்றைய பதிவு ரொம்ப அருமை.. உணர்வுகளை ரொம்ப அழகாக சொல்லி இருந்தீங்க டியர் ... ரொம்ப உணர்ந்து படிச்சேன்.. மித்ரன் வசனம் எல்லாம் சூப்பர் ...செயல் இன்னும் சூப்பர் ... வாய் தான் விலகி இருந்தது ஆன அவன் மனசு சமி பேபி என்று தான் இருக்கு...

Waiting eagerly for Sentosa island epi ... my favourite place in Singapore
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top