• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
0C6D0E82-7C3B-478B-ABFD-772443114B8A.jpeg7A7D83A7-16BE-46E5-95CB-B70F6B801DF3.jpegவணக்கம் தோழிகளே... அடுத்தக் கடிதத்துடன் வந்துவிட்டேன். நீங்கள் அனைவரும் அளிக்கும் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி.
முதல் நான்கு வரிகளைப் படித்துவிட்டு யாரும் அடிக்க வரக் கூடாது. இப்பவே சொல்லிட்டேன். காம்பன்சேஷன் கடைசியில் இருக்கு. சோ, பொறுமை ப்ளீஸ் ;););)
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 4

“என்னாச்சு சம்ரிதி” மித்ரன் தன் தோள்களைப் பற்றி உலுக்கவும் தான் சுய நினைவுக்கே வந்தாள் சம்ரிதி. அப்போ மித்ரனைக் கட்டிப்புடிச்சது, முத்தம் கொடுத்தது எல்லாம்…. நிஜமில்லையா…. மானசீகமாக தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள்.

அவன் தன் பதிலுக்காகக் காத்திருப்பதை உணர்ந்து, “ஒன்னும் இல்ல மாமா” என்று முணுமுணுத்துவிட்டு ஹாலில் இருந்த சோபாவில் சுருண்டு அமர்ந்தாள். நேற்று இரவு தூங்காதது, இன்றைய அழுகை எல்லாம் சேர்ந்து அவளை மிகவும் சோர்ந்து போக செய்தது. தலை விண் விண் என்று தெறிப்பது போல் இருந்தது.

மாலை அலுவலக வேலை முடிந்து வரும் பொழுது கடைக்குப் போய் சமையலுக்குத் தேவையானவற்றை வாங்கிவிட்டுப் பிறகு வீட்டுக்கு வரலாம் என்று மித்ரன் கூறியது நினைவுக்கு வந்தது. தான் வீட்டிற்குப் போகலாம் என்றவுடன் மறுபேச்சில்லாமல் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டதும் புரிந்தது. ஆனால் இப்பொழுது சர்வ நிச்சயமாக கடைக்கோ ஹோட்டலுக்கோ செல்லும் மன நிலையில் தான் இல்லை என்பதும் புரிந்தது.

இப்பொழுது என்ன செய்ய?? தானிருக்கும் மன நிலையில் சத்தியமாக உணவு தொண்டைக் குழியில் இறங்கப் போவது இல்லை. ஆனால் மித்ரன்?? அவனையும் பட்டினி போட முடியுமா?? மித்ரனுக்கு இது பிடிக்கும், அது பிடிக்கும் என்று ஏகப்பட்ட பொடி வகைகளையும் இன்ன பிறவற்றையும் தன் தாயும் அத்தையும் போட்டிப் போட்டு கொண்டு தன் பெட்டியில் அடுக்கியது நினைவில் வந்து வருத்தியது. இன்னும் பெட்டியைத் திறக்கக் கூட இல்லையே!!!

மித்ரனுக்கோ அவளின் இந்த ஓய்ந்து போன தோற்றம் மனதை பிசைந்தது. ‘என்ன தான் பிரச்சனை இவளுக்கு?? இவ சந்தோஷத்துக்காக தானே நான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து பண்றேன், ஆனா இவ இப்படி இருக்காளே…. இவளுக்குப் புடிச்ச வேலையைத் தானே இவளுக்குன்னு ஒதுக்கி வைச்சிருந்தேன். அதைப் பார்த்து கொஞ்சம் கூட அவ சந்தோஷப்பட்ட மாதிரி தெரியலையே…’

இப்படி இருவரும் தங்களது மனதிற்குள்ளேயே வினாக்களுடன் விளையாடிக் கொண்டிருக்க, மௌனத்தைக் கலைத்தது மித்ரனின் கைப்பேசி. மித்ரனின் அன்னை சுஜாதா தான் அழைத்திருந்தார்.

“மித்ரா எப்படிப்பா இருக்க? சம்ரிதி பத்திரமா வந்துட்டாளா? புள்ள வந்ததும் ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டியா மித்ரா? இங்க லெக்ஷ்மி தான் தவிச்சுப் போயிட்டா. சம்ரிதி பத்திரமா வந்தாளா இல்லையான்னு தெரியலையேன்னு. நல்லவேளை வாங் லீ உங்க அண்ணன் பார்த்திபனுக்கு போன் பண்ணி சொல்லியிருப்பான் போல."

“அடடா என்னைப் பதிலே பேச விடாம இப்படி நான் ஸ்டாப்பா பேசுனா என்னம்மா அர்த்தம்? என்னையும் பேச விடுங்க தாய்க்குலமே.”

“அதுக்கில்லடா ராஜாவும் லெக்ஷ்யும் கைக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்த்தப் பொண்ணு சம்ரிதி. முதல் தடவை இவ்வளவு தூரம் தனியா வர்றாளேன்னு அந்தப் பயம் தான் எங்களுக்கெல்லாம்.”

“உங்க மருமக ஒன்னும் தனியா எல்லாம் வரலை.”

“ப்ளைட்ல நிறைய பேரு கூட வந்தாங்கன்னு மொக்க ஜோக் சொன்ன கடுப்பாயிடுவேன் சொல்லிட்டேன்.”

“நான் எப்படிம்மா அவளைத் தனியா விடுவேன்? நானே சென்னைக்கு வந்துதான் அவளைக் கூட்டிட்டு வந்தேன்” சொல்லும்பொழுதே குரல் சற்று ஸ்ருதி இறங்கிப் போனது மித்ரனுக்கு.

“இங்க வரைக்கும் வந்துட்டு வீட்டுக்கு வரலையே மித்ரா. எங்களையெல்லாம் பார்க்கணும்னு உனக்குத் தோணலையா மித்ரா?” கிட்டத்தட்ட அழும் நிலைக்கு சென்றுவிட்டார் சுஜாதா.

சட்டென்று மனதில் பாரமேறிப் போனது மித்ரனுக்கு. சென்னைக்குப் பிரயாணம் என்றபொழுதே தாயின் முகம் தான் கண் முன் தோன்றியது. ஆனாலும் வீட்டிற்குச் செல்லவோ அனைவரையும் சந்திக்கவோ இது உகந்த தருணமாகத் தோணவில்லை அவனுக்கு. திரும்பத் திரும்ப வழக்காடி சூழ்நிலையை இன்னுமின்னும் சிக்கலாக்க்கிக் கொள்ள விரும்பவில்லை அவன்.

அனைத்துக் கசப்புகளையும் ஆற்றும் தன்மை காலத்திற்கு உண்டு. எனவே நிகழ்வுகளை சற்று ஒத்திவைக்கவே விரும்பினான். இப்போதைய உடனடித் தேவை சம்ரிதி எந்தவித சிக்கலும் மன உளைச்சலும் இல்லாமல் தன்னிடம் வந்து சேர்வது. இந்த ஒருவருடப் பிரிவே ஒரு யுகமாகத்தான் தோன்றியது. கண்ணருகில் பெண் இருந்தால் போதுமென்றே நினைத்தது காதல் கொண்ட உள்ளம்.

எனவேதான் விமான நிலையத்தில் பார்த்தி மற்றும் நேஹாவைப் பார்த்த பொழுது கூட உடனே அவர்களிடம் விரையத் துடித்த கால்களை முயன்று அடக்கி வைத்தான்.

ஒரு பெருமூச்செறிந்து தன்னைத் தானே நிதானப்படுத்திக் கொண்டவன் தாயின் மன நிலையை மாற்றவே கேலியில் இறங்கினான். “சுசாத்த்தாதா ஆன்னா ஊன்னா கண்ணுல வாட்டர் டேமை ஓபன் பண்ணக் கூடாது. என் செல்ல சுசாத்த்தா, என் கண்ணு சுசாத்த்தா உண்மையைச் சொல்லுங்க வெங்காயம் தானே நறுக்கிக்கிட்டு இருக்கீங்க?” வேண்டுமென்றே அவர் பெயரை எப்படி அழைத்தால் அவருக்குப் பிடிக்காதோ அப்படி அழைத்து வெறுப்பேற்றினான்.

“இன்னொரு தடவை என் பேரைக் கொலை பண்ணின உதைப்படுவ ராஸ்கல். ஏன்டா வீட்டுக்கு வரலை? ஒழுங்கா பதிலைச் சொல்லு ஆமா”.

“இது இது இதுதான் என் அம்மா. வீட்டுக்கு வாடான்னு வந்துடப் போறேன். அத விட்டுட்டு டேமை ஓபன் பண்ணிக்கிட்டு… சரி அதை விடுங்கம்மா அத்தை எப்படி இருக்காங்க? அங்க தான் இருக்காங்களா இல்ல திருச்சிக்கு கிளம்பிட்டாங்களா?

தாயறியாத சூலுண்டா? மகன் பேச்சைத் திசை மாற்றுவதையறிந்து சுஜாதாவும் இயல்பாகவே பதிலளித்தார். “லெக்ஷ்மி இங்க தான்ப்பா இருக்கா. நான் தான் ரெண்டு நாள் கழிச்சுப் போகலாம். நானும் வரேன்னு சொல்லி இருக்க வைச்சேன். சரி நீ சம்ரிதிகிட்ட போனைக் குடு. நான் பேசணும்.”

“அதுவந்தும்மா சம்ரிதி… சம்ரிதி.. தூங்கிட்டாம்மா”

“என்னடா மென்னு முழுங்குற? தூங்கினாலும் பரவாயில்ல எழுப்பிக் குடு”.

இவ்வளவு நேரமும் மித்ரன் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தவள் மித்ரனின் பதிலிலிருந்தே சுஜாதா என்ன சொல்லியிருப்பார் என்று யூகித்திருந்தாள். அவ்வளவு நேரமும் இருந்த குழப்பங்கள் எல்லாம் மறைந்து போக, புன்னகையுடனேயே அலைப்பேசியைத் தருமாறுக் கையை நீட்டினாள்.

மித்ரன் எவ்வளவு லெக்ஷ்மிக்கு நெருக்கமோ அதே அளவு சுஜாதாவிற்கு சம்ரிதி நெருக்கம். இருவரும் பேசினார்கள், பேசினார்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். அலைப்பேசி லெக்ஷ்மி, பார்த்திபன், நேஹா இவர்களின் செல்ல மகன் ஆரவ் என்று ஒவ்வொரு கையாக மாறிக் கொண்டே இருந்தது.

சம்ரிதி இருவரும் பேசுவதற்கு வசதியாக போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டுக் கையில் வைத்திருந்தாள். சென்னையிலோ இவர்கள் அனைவரும் பேச்சு சுவாரசியத்தில் குடும்பத் தலைவர் விஸ்வநாதனின் கார் வந்ததையோ அவர் நடுக்கூடத்திற்குள் நுழைந்து கொண்டிருப்பதையோ யாரும் கவனிக்கவில்லை.

அவர் தன்னுடைய அறைக்குள் நுழைய முற்படுகையில் தான் லெக்ஷ்மி அவரைக் கவனித்து, "சம்ரிதி இதோ பெரிய மாமாவும் வந்துட்டாங்க. பேசுடா" என்று கூறி அலைப்பேசியையும் விஸ்வநாதனிடம் நீட்டியிருந்தார்.

சம்ரிதிக்கோ லெக்ஷ்மிக்கோ மனதில் எந்தவிதமான ஒளிவு மறைவோ, வஞ்சகமோ இல்லாததால் அவர்களால் இயல்பாக விஸ்வநாதனிடம் பேச முடிந்தது. ஆனால் விஸ்வநாதனுக்கோ குற்றமுள்ள நெஞ்சு சற்றே குறுகுறுத்தது.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மனதிற்குள்ளே ஏதோ யோசனையுடன் வந்ததாலோ என்னவோ அவரும் இங்கு நடந்து கொண்டிருந்த களேபரத்தைக் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால் பேசுவதைத் தவிர்த்திருப்பார். இப்பொழுது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. தயக்கத்துடனே அலைப்பேசியைக் காதுக்குக் கொடுத்தார்.

"ம்ஹ்ம்ம்ம்" இவர் இங்கு லேசாகக் குரலைக் கனைக்கவுமே அங்கு பேச்சைத் தொடங்கியிருந்தாள் சம்ரிதி.

"ஹலோ மாமா... எப்படி இருக்கீங்க? உங்க ஃபிரெண்ட் ராதாகிருஷ்ணன் அங்கிள் எப்படி இருக்காங்க? இன்னைக்கு தானே அவங்களுக்கு சர்ஜரின்னு சொன்னீங்க... போய் பார்த்தீங்களா மாமா? இப்போ அங்கயிருந்து தான் வர்றீங்களா?" முந்தாநாள் பார்த்த மாமனிடம் மூவாயிரம் கேள்விகள் கேட்டாள்.

"அப்புறம் மாமா இனிமே உங்க பொதுச்சேவைக்கெல்லாம் நீங்க இந்த நாலு மாமாஸ்கிட்டயும் பணம் கேட்க வேண்டாம். என்னை உங்க பையன் அவங்க கம்பெனியோட சி. எஃப். ஓன்னு சொல்லிட்டாங்க... அப்போ சம்பளமும் கொடுக்கணுமில்ல, என்னோட மொத்த சேலரியும் உங்களுக்குத்தான் மாமா" மகிழ்ச்சியுடனே தகவலைத் தெரிவித்தாள் பெண்.

ஆனால் அதைக் கேட்ட மனிதருக்குத்தான் காதில் விழுந்த விஷயம் அத்தனை உவப்பானதாக இருக்கவில்லை. விஸ்வநாதன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவுடன் டெல்லியிலிருந்து சென்னைக்கு ஜாகையை மாற்றிக் கொண்டனர் விஸ்வநாதனும் சுஜாதாவும்.

மற்ற மகன்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருக்க பார்த்திபனுடன் சென்னையிலேயே ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டு இருந்துவிட்டனர். விஸ்வநாதன் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கொண்டு பொதுச்சேவை சமூகப்பணி என்று கிளம்பிவிடுவார்.

பத்து விஷயங்கள் செய்தார்களென்றால் அதில் இரண்டு தான் உண்மையில் பிறருக்கு உபயோகமாக இருந்தது. மீதி எட்டும் இவர்களின் வீண் பந்தாவிற்கும் பணத்திமிரைப் பறைசாற்றுவதற்குமாய் இருந்தது. அதனால் மகன்கள் யாரும் இவரின் இந்தச் செயலுக்கு ஆதரவு காட்டுவதில்லை.

'இவங்க அம்மா கேட்டா மட்டும் எவ்வளவுன்னாலும் காரணமே கேட்காம தூக்கிக் கொடுக்குறானுங்க. நாம் கேட்டா மட்டும் ஏன் எதுக்குன்னு ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்க வேண்டியது. நாலு பேருமே இப்படித்தான் இருக்கானுங்க' என்று விஸ்வநாதன் புலம்புவது சம்ரிதிக்கு நன்றாகவே தெரியும். இதை மனதில் வைத்தே சம்ரிதி அவ்வாறு கூறியிருந்தாள்.

கேட்ட மனிதர் தான் அதனை சரியான கோணத்தில் புத்திக்கு கொண்டு செல்லவில்லை. இவள் யார் தன் மகனின் பணத்தைத் தனக்குத் தர என்பதாகத்தான் அவரின் எண்ணம் இருந்தது. எனவே வார்த்தைகளும் எந்தவித தடுப்பணைகளும் இன்றி வீரியமாக வந்து விழுந்தது.

"ஜஸ்ட் ஸ்டாப் இட் சம்ரிதி... முதல்ல எதிர்ல பேசுறவங்க என்ன பேசுறாங்கன்னு காது கொடுத்துக் கேளு. நீ பாட்டுக்கு பேசிகிட்டே போற. இந்தச் சின்ன விஷயம் கூட உனக்குத் தெரிய மாட்டேங்குது, நீ கம்பெனியை நிர்வாகம் பண்ணவா? விளங்கின மாதிரி தான்" காரசாரமாகப் பொரிந்து தள்ளினார் விஸ்வநாதன்.

"சாரி மாமா" சட்டென குரல் இறங்கிப் போனது சம்ரிதிக்கு. இத்துடனாவது நிறுத்தியிருக்கலாம், ஆனால் அன்று அவர் நாக்கிற்கு சனீஸ்வர பகவான் மொத்தமாக குடிபெயர்ந்துவிட்டதால் அவரின் பேச்சு தொடர்ந்தது.

"நீ கொஞ்சங்கூட எம் பையனுக்குப் பொருத்தமே கிடையாது. அவன் அழகுக்கும் அந்தஸ்த்துக்கும் ஆயிரம் பேர் போட்டிப் போட்டுக்கிட்டு வந்தாங்க பொண்ணு கொடுக்க. நான் படிச்சுப் படிச்சு சொன்னேனே உன் தகுதிக்குத் தகுந்த பொண்ணா பார்க்கலாமுன்னு... கேட்டாதானே?"

"வளர்த்த பாசம் அது இதுன்னு முட்டாள்தனமா யோசிச்சு இப்ப கஷ்டப்பட்டுக்கிட்டு நிக்கிறான். இனிமேலாவது உன்னை நீ மாத்திக்கிட்டு அவனுக்கேத்த மாதிரி நடந்து பழகு. அவன் மூவ் பண்ற சொசைட்டிக்கு ஏத்த மாதிரி நீ மாறு. பட்டிக்காட்டுத்தனமா நடந்துக்காத. உங்க அப்பா...."

"போதும் நிறுத்துங்க" சிம்மத்தின் கர்ஜனையாக வெளிவந்திருந்தது மித்ரனின் குரல். விஸ்வநாதன் குரல் உயர்த்தவுமே உடல் இறுகிப் போய் அமர்ந்திருந்தவன் இறந்து போன மாமாவைப் பற்றிய பேச்சு வரவும் தன்னை மீறிக் கத்தியிருந்தான்.

"போதும் இதோட நிறுத்திக்கோங்க... இன்னும் ஒரு வார்த்தை என் சம்ரிதியைப் பத்தியோ இல்ல என் மாமாவைப் பத்தியோ வந்துச்சு அப்புறம் நானும் பேச வேண்டியது வரும். பார்த்துக்கோங்க."

"எனக்கு இந்த சம்ரிதிதான் புடிச்சிருக்கு. இவ இப்படி இருக்குறதுதான் புடிச்சிருக்கு. இவளைத்தான் நான் காதலிச்சேன், இப்பவும் காதலிக்கிறேன் என் ஆயுசுக்கும் இவளைத்தான் காதலிப்பேன். முதல்ல எனக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காதுன்னு தெரியுமா உங்களுக்கு? அதெப்படி தெரியும்? என்கிட்ட பேசியிருந்தா தானே தெரியும். நான் சம்பாதிக்க ஆரம்ப்பிச்சதுக்கு அப்புறம் தானே என்கிட்ட நல்லா பேசவே ஆரம்பிச்சீங்க."

அப்புறம் எப்படி என் விருப்பத்தைப் பத்தி எல்லாம் உங்களுக்குத் தெரியப் போகுது? என் கல்யாண விஷயத்துல நடந்ததுக்கே நான் உங்க மேல செம்ம கடுப்புல இருக்கேன். இதுக்கு மேலேயும் எதும் பேசி உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதீங்க. வைங்க ஃபோனை" என்று கூறி அழைப்பைத் துண்டித்திருந்தான் மித்ரன்.

“ச்சே இதுக்குத்தான் இவரோட பேசுறதே கிடையாது" மூணுமுணுத்தவாறே அமர்ந்திருந்த சோஃபாவின் திண்டை ஓங்கிக் குத்தினான். எதிரிலிருந்த டீப்பாயும் காலால் ஒரு உதை வாங்கியது.

'ஏற்கனவே சாயங்காலத்திலிருந்து ஒரே அழுகை. இப்போ மறுபடியும் ஆரம்பிக்கப் போறாளோ... போச்சுடா' சட்டென நினைவு வந்தவனாகத் திரும்பிப் பார்க்க, மித்ரன் நினைப்புக்கு மாறாக இவனை நன்றாக முறைத்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்தாள் சம்ரிதி. ஆச்சரியத்தில் புருவம் உயர்த்த,

"இப்ப எதுக்கு மாமா, மாமாவை அந்த திட்டு திட்டுறீங்க?" முதல் கேள்விக்கணை பாய்ந்து வந்தது சம்ரிதியிடமிருந்து.

"ஆஹான்..." மெச்சிக் கொண்டவன், "என்ன மாமாமா?" என்று வம்பிழுக்க,

"ம்ச்..." தனக்குள்ளே சலித்துக் கொண்டவள், "இப்ப எதுக்கு அத்தான் மாமாகிட்ட அவ்வளவு கோவமா பேசுறீங்க?"

"இந்த வார்த்தையை சொல்ல உனக்கு இத்தனை நாள் தேவைப்பட்டுச்சா சமிம்மா" கண்ணோடு கண் கோர்த்து கேட்க, அந்த காந்தக் கண்களின் ஈர்ப்புவிசை தாங்காமல் மெல்லத் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் பெண்.

"என் கண்ணைப் பார்த்து பதில் சொல்லு சமி... என்னை அத்தான்னு கூப்பிட உனக்கு இத்தனை நாளா? அப்படி நான் என்னடா தப்பு பண்ணினேன்?" இவ்வளவு நேரமும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்தவன் நலிந்த குரலில் கேட்க, பரிதவித்துப் போனாள் சம்ரிதி.

"நீங்க எந்த தப்பும் பண்ணலை அத்தான். நான்தான் எல்லாத்துக்கும் காரணம். என்னை மன்னிச்சு உங்க சமியா என்னை ஏத்துப்பீங்களா அத்தான்?" கேட்கும் பொழுதே குரல் கலங்கிப் போக, இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

"ஏன்டா மன்னிப்பு அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசுற? நீ எப்போதுமே என்னோட செல்ல சமி பேபி தான்" மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொண்டே செல்லம் கொஞ்ச,

"அத்தான் நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்க தானே" வாகாக அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே, சட்டை பட்டனைத் திருகியபடியே நிமிர்ந்து முகம் பார்த்துக் கேள்வி கேட்க, "இப்படி கேட்டா கோவம் வராதுன்னு தான் நினைக்கிறேன்" புன்முறுவலுடனே பதிலளித்தான்.

"ம்ப்ச் விளையாடாதீங்க அத்தான். இனிமே மாமாகிட்ட இவ்வளவு கோவமாவெல்லாம் பேசாதீங்க அத்தான். என்ன இருந்தாலும் உங்களைப் பெத்தவங்க. அவங்க இருக்கும்போது அவங்க அருமை நமக்குத் தெரியாது. இல்லாதபோது தான் தெரியும். எங்கேயாவது பெத்தவங்களே பிள்ளையோட வாழ்க்கை வீணா போகணும்னு நினைப்பாங்களா? இப்ப என்ன மாமா யாரை சொன்னாங்க? என்னைத் தானே? என்னைப் பேசுறதுக்கு அவங்களுக்கு இல்லாத உரிமையா?"

"நான் சின்னப் பிள்ளையிலிருந்தே அவங்க பார்க்க வளர்ந்தவ தானே? அந்த உரிமையில கொஞ்சம் கூட பேசிட்டாங்க. நீங்களே யோசிச்சுப் பாருங்க நேஹா அக்காகிட்டயோ இல்ல மத்த ரெண்டு அக்கா கிட்டயோ மாமா இந்த மாதிரி பேசியிருக்காங்களா? அவங்க கோவமா இருக்கும்போது நாம கொஞ்சம் பொறுமையா போறதுனால நாம ஒன்னும் குறைஞ்சு போயிட மாட்டோம். எனக்காக அத்தான் ப்ளீஸ்..."

"சரி உனக்காக நான் இனிமே அவரை எதிர்த்துப் பேசலை. இன்னைக்கும் நான் பொறுமையா தான் இருந்தேன். ராஜா மாமாவைப் பத்தி பேச ஆரம்பிக்கவும் தான் எனக்குக் கோவம் வந்துடுச்சு. ஆனா இன்னோன்னும் நீ புரிஞ்சுக்கணும். என்னால் யார்கிட்டயும் எதுக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது. அது யாரா இருந்தாலும் சரி." சற்று இலகுவாகவே பதில் வந்தது மிதரனிடமிருந்து.

"என்னை அவ்வளவு புடிக்குமா அத்தான்" மெல்லிய குரலில் கேள்வி எழுந்தது பெண்ணிடமிருந்து.

"அதுல இன்னமும் உனக்கு சந்தேகமா பேபி? நிரூபிக்கட்டுமா அத்தானுக்கு இந்த பேபியை எவ்வளவு பிடிக்குமுன்னு" கண்களில் வருடக் கணக்காய் தேக்கி வைத்தக் காதலை வழியவிட்டு அவள் விழி பார்த்து வினவிய பொழுது செவ்வானமாய் சிவந்து போனது சம்ரிதியின் முகம்.

பெண்ணவளின் கன்னச் சிவப்பும் வெட்கமும் துடிக்கும் இதழ்களும் ஆயிரம் கதைகள் மன்னவனுக்கு உரைக்க, மெல்ல அவள் இதழ் நோக்கிக் குனிந்தான் மித்ரன். சம்ரிதி பட்டென்று கண்களை மூடிக் கொள்ள, அவள் முகத்தைக் கைகளில் ஏந்தியவன்,

"சமிம்மா, கண்ணைத் திறந்து என்னைப் பாரு" காதோரமாய் இரகசியக் குரலில் முணுமுணுக்க, ஒட்டு மொத்த உடலும் கூசிச் சிலிர்த்ததுப் பேதைக்கு. காதின் பின்புறம் கழுத்தினோரம் இருந்த பொன்னிற முடிகள் சிலிர்த்துக் கொண்டு நிற்க, அதைப் பார்க்கப் பார்க்க ஒட்டுமொத்த தாபமும் கட்டுப்பாடின்றிப் பெருக்கெடுத்தது மித்ரனுக்கு.

முத்த ஊர்வலத்தை அவள் நெற்றியிலிருந்து ஆரம்பித்தவன், மூடியிருந்த கண்கள், மூக்கின் நுனி, கன்னங்கள் என்று ஊர்கோலம் போக, அடுத்து இதழில் தான் இளைப்பாறுவான் என்று மங்கை எதிர்பார்த்து இதழ் துடித்துக் காத்திருக்க, அந்தக் கள்வனோ கன்னங்களோடு நிறுத்திவிட்டு விஷமப் புன்னகை புரிந்து காத்திருந்தான்.

எதிர்பார்த்தது கிடைக்காத ஏமாற்றத்தில் பெண்ணவள் கண் திறக்க அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே இதழமுதம் பருகத் தொடங்கினான். அதிர்ச்சியிலோ ஆனந்தத்திலோ இல்லை ஆச்சரியத்திலோ அந்தக் கண்களிரண்டும் இன்னும் பெரிதாக விரிந்து, பின் இதழமுதத்தில் மயங்கிக் கிறங்கிப் பின் மெல்ல மெல்ல மூடிக் கொண்டது.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Haiyaa.. naan vanthuten nae.. ??????????????

அக்கா.. முதல் கனவுன்னு சொன்னதும் ????????

இந்த மாமா தான் ஏதோ விளையாடிருக்கார்.. ???.. என்னாச்சுன்னு தெரியலையே.. ??

அக்கா.. மித்து அண்ட் சமி காதல் ரொம்ப மென்மையா இருக்கு... எதுக்கு இப்படி மாறி மாறி புலம்புறாங்க மனசுக்குள்ள.. ??

அப்புறம் லாஸ்ட்டா கண்ணை மூடி படிக்க வச்சிட்டிங்களே..???

Fb காக waiting கா.. ???
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top