• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே, அடுத்த அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன். படித்துவிட்டுக் கருத்துக்களைத் தெரிவியுங்கள். சென்ற பதிவுக்கு லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி...
B9A2ED12-E7A1-421B-A83F-57E84203DD75.jpeg
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 7

மித்ரனிடமிருந்து கோபமாக வார்த்தைகள் வெளிப்படவும் சட்டென மௌனியாகினாள் சம்ரிதி. காரில் அதன் பிறகு எந்தப் பேச்சுக்கும் இடமில்லாமல் போனது. இடைப்பட்ட காலத்தில் மறந்திருந்த ஒரு விஷயம் மறுபடியும் ஞாபகம் வரும் போல் தோன்றியது. அதேதான், அழுகை வரும்போல் இருந்தது. பார்வையை வெளிப்புறம் திருப்பிக் கவனத்தைத் திசைத் திருப்ப முயன்றாள். ஓரளவுக்கு முயற்சி பலன் கொடுத்தது.

வீட்டிற்கு வந்தபின்னும் கூட இருவருக்குமிடையில் இருந்த மௌனச்சுவர் உடையவில்லை. மித்ரன் டிவியைப் போட்டுக் கொண்டு அதன் முன் அமர்ந்துவிட, உள்ளே சென்று சின்னக் குளியல் போட்டு வெளிவந்தவள் கிட்சனுக்குள் புகுந்து கொண்டாள். குளித்த பின் மனம் சற்று அமைதியடைந்தது போல் தோன்றியது. இருவருக்குமாய் சேர்த்து இரவுணவை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

அமர்ந்திருந்த மித்ரனின் முன் தட்டு நீட்டப்பட்டது. அவன் நிமிர்ந்து முகம் பார்க்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோபமாக இருப்பதை பின் எப்படித்தான் வெளிப்படுத்துவதாம்? அதற்குத்தான் இந்த முகத்திருப்பல். பார்த்த மித்ரனுக்குத்தான் கோபம் போய் அந்த இடத்தை சிரிப்பு ஆக்கிரமித்துக் கொண்டது இவளின் சிறுபிள்ளைத்தனமான செயலால்.

எப்பொழுது உண்டாலும் மித்ரன் ஒரு வாயாவது இடையில் சம்ரிதிக்கு ஊட்டாமல் உண்ண மாட்டான். இன்று வேண்டுமென்றெ அவளைச் சீண்டுவதற்காகவே முழுவதுமாக உண்டு முடித்துவிட, பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

'எனக்கு ஊட்டாம சாப்பிட்டுட்டீங்கல்ல' என்று புறுபுறுத்துக் கொண்டே தன் தட்டில் இருந்ததை அரையும் குறையுமாக விழுங்கி வைத்தவள் ஒட்டுமொத்தக் கோபத்தையும் அடுக்களையில் இருந்த பாத்திரங்களில் காட்டிக் கொண்டிருந்தாள். நானும் சளைத்தவனில்லை என்று மித்ரனும் டிவி வால்யூமைக் கூட்டிக் கொண்டு இருந்தான்.

மித்ரன் இவளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே மேலும் மேலும் கோபமேற்றியது பெண்ணுக்கு. 'கோவமா பேசினதைக் கூட விட்டுடலாம். சமாதானமா ஒரு வார்த்தை கூட பேசாம இருந்தா என்ன அர்த்தம்? என்னமோ நான்தான் தப்பு பண்ணின மாதிரி... இப்ப இந்த விஷயத்துல யாரு பிடிவாதம் பிடிக்கிறது? நானா இல்ல அவங்களா? எனக்கு ஊட்டாம சாப்பிட்டீங்கல்ல இப்ப என்ன பண்றீங்க பார்க்கலாம்' மனதிற்குள்ளே அவனை வறுத்தெடுத்தவள் கையில் இரண்டு சிறிய கப்களில் பாலை ஊற்றிக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

அப்பொழுதுதான் வந்து கட்டிலில் அமர்ந்தவனிடம் பால் கோப்பையை நீட்ட 'என்னதிது?' என்பது போல் ஒரு பார்வை பார்த்து வைத்தான். பாலோ டீயோ காபியோ எது அருந்தினாலும் இருவரும் பாதிப் பாதியாக ஒரே கப்பில் அருந்துவதைத்தான் வழக்கமாக வைத்திருந்தனர் இருவரும். இன்று தனக்கு ஊட்டி விடாத கோபத்தில் ஒரு கோப்பையை இரண்டாக்கியிருந்தாள் சம்ரிதி.

தன்னை மிதப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் சென்று அவள் கையிலிருந்த கோப்பையை வாங்கியவன், தன்னுடையதையும் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தான். எப்பொழுதும் இருவரும் ஒன்றாகக் குடிக்கும் பெரிய கப்பில் இருவரின் பாலையும் ஊற்றியவன் அதனைப் பருகிக் கொண்டே வெளிவந்தான். பாதியைக் குடித்துவிட்டு மீதியை அவள் கைகளில் திணித்தவன் வேலை முடிந்ததென சென்று படுத்துவிட்டான்.

கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இவனை முறைத்துக் கொண்டு நின்றவளிடம், "சீக்கிரம் பாலைக் குடிச்சுட்டு வந்து படு சமிம்மா. நாளைக்குக் காலையிலேயே முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு. ரெண்டு பேரும் காலையில சீக்கிரம் கிளம்பணும்" என்று கூறி மேலும் வெறுப்பேற்றினான்.

"முடியாதுத்தான்... நீங்க மட்டும் எனக்கு ஊட்டிவிடாம சாப்பிட்டீங்க, நான் மட்டும் ஒரே கப்புல பால் குடிக்கணுமா?" சிறுபிள்ளையென காலைத் தரையில் உதைத்துக் கொண்டு கூற,

அவளுடைய பாவனைகளில் தன்னைத் தொலைத்தவன் எழுந்து சாய்வாக அமர்ந்து கொண்டு, "ஆக, நான் ஊட்டிவிடாம சாப்பிட்டதுதான் சமி பேபிக்கு கோவமா? அப்படின்னா அத்தான் ரொம்ப சாரிடா. இனிமே எப்ப சாப்பிட்டாலும் உனக்கு ஊட்டிவிட்டுட்டுத்தான் சாப்பிடுவேன். சரியா... வா இப்ப பாலைக் குடிச்சிட்டு வந்து படு வா... நான் கூட வேற என்னமோ கோபமுன்னு நினைச்சேன்" என்று சிறு பிள்ளைக்குக் கூறுவது போல கூறி முடித்தான்.

அவன் சொல்லவும்தான் நாம் எதற்கு அவனிடம் கோபமாக இருந்தோம் இப்பொழுது என்ன பேசி வைத்திருக்கிறொம் என்பது புரிந்தது சம்ரிதிக்கு. தன் தலையில் தானே தட்டிக் கொண்டவள்,

"என்னமோ குழந்தைக்கு சமாதானம் சொல்ற மாதிரி சொல்றீங்க... நான் ஒன்னும் சின்ன புள்ள கிடையாதுத்தான். நீங்க பேச்சை மாத்தாதீங்க."

"யாரு நானா? நானா பேச்சை மாத்தினேன். நீ சொன்னதுக்குதான் பதில் சொன்னேன். சரி இப்ப நேரடியாவே விஷயத்துக்கு வரேன். நீ சொன்னதேதான். நானும் ஒன்னும் சின்னக் குழந்தை கிடையாது. நீ சொல்றதெல்லாம் நம்புறதுக்கு" நிதானமாகவே பதில் கொடுத்தான் மித்ரன்.

"ஐயோ அத்தான்... நான் எத்தனை தடவை தான் சொல்றது, அப்போ அப்பா இறந்த புதுசு... எனக்கு வேற எதுவுமே மனசுல நிக்கலை... அதான்"

"சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதே சம்ரிதி. மாமா இறந்தது உனக்குப் பெரிய துக்கம்தான். நான் இல்லைங்கல. ஆனா நீ தெளிவாகிட்ட... ஓரளவுக்காவது உன்னை நீயே தேத்திக்கிட்ட. அத்தையையும் நீ பார்த்துப்பேங்குற நம்பிக்கை வந்தப்புறம் தான் நானும் அம்மாவும் திருச்சியிலிருந்து கிளம்பினோம். ஞாபகம் இருக்கா இல்லையா உனக்கு?"

"அதெல்லாம் பிரச்சனையில்ல. வேற என்னமோ நடந்திருக்கு. மாமா இறந்து ஆறு மாசம் வரைக்கும் நீ நார்மலா தான் இருந்த. அதுக்கப்புறம் தான் திடீர்ன்னு ஒரு நாள் மாமாவை தகனம் பண்ணின இடத்துக்கே நீ போயிருக்க. அங்க போய் உட்கார்ந்து அழுதிருக்க. அங்க இருந்த ஒரு பெரியவர் உன்னை சமாதானப்படுத்தி, பொண்ணுங்க இங்கெல்லாம் வரக் கூடதும்மான்னு சொல்லி உன்னை வீட்டுக்கு அனுப்பி வைச்சார். உண்மையா இல்லையா சொல்லு?" படபடவென்று மித்ரன் கேட்க அதிர்ந்து விழித்தாள் சம்ரிதி.

இந்த விஷயமெல்லாம் தன் தாயாருக்குக் கூடத் தெரியாதே. இதெல்லாம் எப்படி இவன் கண்டுபிடித்தான் என்று என்ன முயன்றும் சம்ரிதியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

"என்ன பார்க்குற? இதெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியுமுன்னா? மாமா இறந்ததுக்கு அப்புறம் உன்னையும் அத்தையையும் அப்படியே அம்போன்னு விட்டுட்டுப் போனா என் மனசாட்சியே என்னைக் காரித் துப்பும். நான் எவ்வளவோ சொல்லியும் அத்தை திருச்சி வீட்டை விட்டுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு அந்த வீடு முழுக்க மாமாவோட நினைவுகள் நிரம்பி இருக்கு. அதனால ஓரளவுக்கு மேல நான் வற்புறுத்தலை. ஆனா உங்க ரெண்டு பேரோட பாதுகாப்பு? அதுக்குதான் பிரைவேட்ல செக்யூரிட்டி ச்ர்வீஸ் ப்ரொவைடர்ஸ் கிட்ட அக்ரிமென்ட் போட்டு மந்த்லி பேமென்ட் பேசிஸ்ல உங்களுக்கேத் தெரியாம உங்களைப் பாதுகாக்க ஆள் போட்டேன்."

"நீ எங்க போற? என்ன பண்ற? எல்லாத்தையும் என் கண்காணிப்பிலேயே வச்சிருந்தேன். ஆனா என்ன பண்ணி என்ன? எங்கே நான் கோட்டை விட்டேன்னு எனக்கே தெரியலையே. ஒருவேளை உன்னை... உன்னை... யாராவது... அதனால லூசுத்தனமா எதாவது யோசிச்சுகிட்டு என்னை வேண்டாமுன்னு சொன்னியா?" பரிதவிப்புடனே அவள் அருகில் வந்து கன்னம் பற்றிக் கேட்க,

"கொன்னு போட்டிருப்பேன் அத்தான். அப்படி எதாவது நட்ந்திருந்தா அவன் உயிர் என் கையால தான் போயிருக்கும்" ஒரு நொடிகூட இடைவெளியின்றி பட்டென பதில் வந்தது சம்ரிதியிடமிருந்து.

"இதான்... இதுதான் என் சம்ரிதி. சம்ரிதி அமைதியான பொண்ணுதான். ஆனா நிச்சயமா கோழை கிடையாது. அவளை அப்படி கோழையா எங்க மாமா வளர்க்கலை. ஆனா இந்த சம்ரிதி நடுவுல எப்படி காணாம போனா? நான் உன் கழுத்துல தாலி கட்டும்பொழுது கூட உன் கண்ணுல நான் சந்தோஷத்தைப் பார்க்கலை. எனக்கு எப்படி வலிச்சுது தெரியுமா சமிம்மா?

உன்னோட சம்மதமில்லாம உனக்கு நான் தாலி கட்டிட்டேனோன்னு எனக்கு இப்ப வரைக்கும் உறுத்திகிட்டே இருக்கு. கல்யாணம்தான் அப்படி அவசரக் கோலத்துல முடிஞ்சிடுச்சு. இனி ஆரம்பிக்கப் போற வாழ்க்கையாவது உன்னோட முழு சம்மதத்தோட சந்தோஷத்தோட நடக்கணுமுன்னு நான் நினைக்குறதுல என்ன தப்பு இருக்கு சொல்லு" கட்டிலில் அமர்ந்து அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டே கூறினான் மித்ரன்.

"நானேதானே சொல்றேன் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்ன்னு... அப்புறம் என்ன தயக்கம் அத்தான்" முணுமுணுப்பாகவே பதில் தந்தாள் சம்ரிதி.

"என்னால முடியலையே. ஜஸ்ட் லைக் தட் என்னை நீ இன்னோருத்திக்கு விட்டுக் கொடுத்ததை என்னால ஒத்துக்க முடியலையே. சின்ன வயசுலயிருந்து உன்னை மட்டுமே நினைச்சுக்கிட்டு இருந்த மனசு அதை ஒத்துக்க மாட்டேங்குதே. நீ எப்போ எனக்குள்ள வந்த தெரியுமா? என்னோட ஏழாவது வயசுல நீ என் மனசுக்குள்ள வந்த சமிம்மா." அப்பொழுதேவா என்பதுபோல் வியந்து பார்த்தவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே தொடர்ந்தான் மித்ரன்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
"ஆமா எனக்கு அப்போ ஏழு வயசு. உனக்கு ரெண்டு வயசு. என்னை திருச்சியிலிருந்து டெல்லிக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அப்ப ஒருநாள் வீட்டுக்கு யாரோ ரொம்ப முக்கியமான கெஸ்ட் வர்றாங்கன்னு சொல்லி எங்கப்பா என்னை ரூமுக்குள்ளேயே இருக்க சொல்லிட்டாரு. இது அப்பப்ப நடக்குறதுதான்.

வர்றவங்க நம்ம ஸ்டேட்டசுக்கு ஈக்வலானவங்களா இருந்தா நான் எங்க வேணும்னாலும் இருந்துக்கலாம். ஆனா வர்றது ரொம்பப் பெரிய இடமாயிருந்தா என்னை ரூமுக்குள்ளேயே இருக்க சொல்லிடுவாரு எங்கப்பா. ரொம்ப சின்னப் பையனா இருந்ததால, பெரிய பசங்களா வளர்ந்துட்ட அண்ணனுங்க கூட சேர்ந்து என்னைத் தன் பையனா அறிமுகப்படுத்துறதுல அவருக்கு சங்கடம்.

அதனால அப்பப்ப இப்படி என்னை ரூமுக்குள்ள இருக்க சொல்லிடுவாங்க. அம்மாவுக்கு ரொம்ப சங்கடமா இருக்கும் போல வந்தவங்க கிளம்புற வரைக்கும் அடிக்கடி வந்து வந்து என்னைப் பார்த்துட்டுப் போவாங்க. அவங்க வராட்டியும் பார்த்திண்ணா வந்திடுவான்.

அப்படி ஒரு நாள் ரூமுக்குள்ள இருந்தப்ப தான், ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அழுகை அழுகையா வந்துச்சு. நாம ஏன் தான் இந்த வீட்ல பிறந்தோமோன்னு தோணுச்சு. அப்பதான் டக்குன்னு மின்னல் மாதிரி உன் ஞாபகம் வந்துச்சு. உனக்கு முன்னாடி நான் பிறந்தாதானே பெரியவனாகி உன்னைப் பத்திரமா பார்த்துக்க முடியும். வேற எங்காவது பிறந்திருந்தா உன்னை எப்படிப் பார்த்துக்க முடியும்? இதுதான் அப்ப என் குட்டி மூளைக்குள்ள உதிச்ச ஞானோதயம். அப்பயிருந்து எப்ப எந்த கஷ்டம் வந்தாலும் உன்னை நினைச்சு நினைச்சே என்னை நானே தேத்திக்குவேன்.

காதல் அழகைப் பார்த்து வருதுன்னு சொல்றாங்க, மனசைப் பார்த்து வருதுன்னு சொல்றாங்க ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் காதல் உணர்வுப்பூர்வமானது, ஆத்மார்த்தமானது. ஏழு வயசுல எனக்கு வந்த அந்த உணர்வுக்கு என்ன பேர் வைக்க முடியும் சொல்லு.

அதனாலதான் என்னால நீ நடந்துகிட்ட விதத்தை ஏத்துக்க முடியல. உனக்கு அந்த உணர்வு இல்லவே இல்லையா? அப்படி இல்லைங்குற போது ஏதோ கல்யாணம் முடிஞ்சுதுங்குற ஒரே காரணத்துக்காக என்னால உன்னோட குடும்பம் நடத்த முடியாது. அந்த உணர்வு உனக்குள்ளும் இருக்கு அப்படின்னா ஏன் எங்க வீட்ல எனக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணப்போ பேசாம இருந்த? எனக்குக் காரணம் தெரிஞ்சாகணும்" என்று முடித்தான்.

சொன்னவன் என்னவோ இலகுவான மனநிலையில் தான் இருந்தான். கேட்ட சம்ரிதிக்குதான் நினைக்க நினைக்க நெஞ்சு பொறுக்கவில்லை. அந்தப் பிஞ்சு வயதில் எத்தனைத் துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறான் என்று எண்ணியெண்ணி தவித்துப் போனாள். விஸ்வநாதன் மேல் கட்டுங்கடங்காத கோபம் கிளம்பியது.

இப்பொழுது தன் எதிரில் அமர்ந்திருப்பவன் ஏழு வயது பாலகனாகத் தோன்ற அவனை இழுத்துத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் ஒரு தாயைப் போல. அந்த அணைப்பில் காமம் இல்லை காதல்... காதல்... காதல் மட்டுமே. அவள் உடம்பு இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தது.

மித்ரனுக்குமே அந்த அணைப்பு மிகவும் தேவையாக இருந்தது. இடையோடு கட்டிக் கொண்டு இன்னமும் அழுந்த முகத்தைப் புதைத்துக் கொண்டான் அவள் நெஞ்சோடு. பல நாள் பாலைவனத்தில் நடந்துக் களைத்தவனுக்கு ராஜ உபச்சாரம் கிடைத்தது போலிருந்தது. பேசிக் கொண்டிருந்த விஷயம் மறந்தான். தன்னையே மறந்தான். பெண்ணவளின் இதயத் துடிப்பே தாலாட்டாக மாற சுகமாகத் துயில் கொள்ளத் தொடங்கினான் மித்ரன்.

நடுங்கும் விரல்களால் அவன் தலைக் கோதிக் கொடுத்தவள் மெல்லிய குரலில், "எனக்கு உங்களை மாதிரி இந்த வயசுல அந்த வயசுலன்னு சொல்லத் தெரியலை அத்தான். ஆனா எப்போ விவரம் தெரிய ஆரம்பிச்சதோ அப்போதிருந்து என் மனசுக்குள்ள இருக்குற ஒரே முகம் உங்க முகம் மட்டும்தான் அத்தான்.

நீங்க சொல்றமாதிரி காதல் உணர்வுப்பூர்வமானது தான். ஆத்மார்த்தமானது தான். நானும் நம்ம விஷயத்துல அதை நல்லாவே உணர்ந்திருக்கிறேன். நான் அப்போ நானாவே இல்ல அத்தான். மூளை மனசு இரண்டுமே மரத்துப் போன நிலையில இருந்தேன். ஆனா அப்பவும் உங்களைப் பிரியிறது அந்த மரத்துப் போன இதயத்தைக் கூட வலிக்க வலிக்க யாரோ உருவி எடுக்குற மாதிரி இருந்தது.

எங்கேயாவது கண் காணாம போயிடலாமான்னு கூட யோசிச்சிருக்கேன். நீங்க எனக்காக என்னைக் காதலிக்கலையோன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன். ஆனா இப்ப நல்லா புரிஞ்சுக்கிட்டேன் அத்தான். உங்களாலும் என்னை விட்டுக் கொடுக்க முடியாது. என்னாலயும் நீங்க இல்லாம வாழ முடியாது."

சிரித்துக் கொண்டே கூறியவள், புறங்கையால் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள். "நீங்க இனிமே உங்க பழைய சம்ரிதியைப் பார்ப்பீங்க. இங்க வரும்போது இருந்த சம்ரிதிக்கும் இப்ப இருக்குற சம்ரிதிக்குமே ஆயிரம் வித்தியாசம் இருக்கு. கொஞ்ச கொஞ்சமா என்னைப் பழைய சம்ரிதியா மாத்திட்டீங்க. எனக்கே அதை உணர முடியுது. உங்களுக்குத் தெரியலையா? இந்நேரம் கண்டுபுடிச்சிருப்பீங்க.

ஆனாலும் சும்மா பழசையே புடிச்சுத் தொங்கிட்டிருக்கீங்க. போனதெல்லாம் போகட்டும். இப்ப இந்த நிமிஷத்துல இருந்து புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறோம். நாளைக்குப் பாருங்க இந்த சம்ரிதி உங்களை என்னவெல்லாம பண்ணப் போறான்னு.

மவனே பிரம்மச்சாரி விரதமா இருக்க பிரம்மச்சாரி விரதம்? நாளையிலிருந்து உங்களை சம்ரிதி ஜெபம் பண்ண வைக்கலை... நமக்குப் பொறக்கப் போற முதல் பிள்ளையோட பேரை மாத்திக்கிறேன். ஓ... பேரு ஆல்ரெடி இருந்தாதான் மாத்த முடியுமோ? ஹ்ம்ம்ம்... பேசாம விஸ்வநாதன் மாமா பேரை மாத்திடலாம்.

ஆமா அது எப்படி எப்படி? பொசுக் பொசுக்குன்னு கட்டிப் பிடிச்சுப்பாராம். முத்தம் கொடுப்பாராம். கேட்டா வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கலைன்னு சோக கீதம் இசைப்பாராம். இது எந்த ஊரு நியாயம்? நாளையிலிருந்து கட்டிப்புடி வைத்தியம்ன்னு சொல்லிக்கிட்டு பக்கத்துல வாங்க. நல்லா கடிச்சு வைக்கிறேன்." தூங்குபவனுடன் எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தாளோ, களைத்துப் போய் அவன் முகத்தைக் கட்டிக் கொண்டே தானும் உறங்கிப் போனாள்.

சம்ரிதி ஆவலுடன் எதிர்பார்த்த மறுநாள் பொழுது அழகாக விடிந்தது. மித்ரன் கண் விழிக்கும் பொழுது சம்ரிதியைப் பார்த்ததுதான். அதன் பிறகு அவன் கண்ணிலேயே படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள் பெண். அலுவலகத்திற்குக் கிளம்பியவன் தன் கழுத்திலிருந்த டையை சரி செய்தபடியே, "பேபி கிளம்பிட்டியா... டைம் ஆச்சுடா..." என்று குரல் கொடுக்க, அதைக் கேட்டு எதிரில் வந்து நின்றவளைப் பார்த்து தாளம் தப்பித் துடிக்கத் தொடங்கியது மித்ரனின் மனது.
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Vanthuten ka ??...
Ini mithran padu rmba kavalai than...sami vera avan mathiye aganum nu mutivota iruka??...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top