• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே, கடிதத்தின் அடுத்த அத்தியாயம் பதிவிட்டிருக்கிறேன். படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் நன்றி...
22B9FBB6-18CA-4499-A598-229F52B8B924.jpeg
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 8

விஸ்வநாதன் குடும்பம் மொத்தமும் திருச்சிக்கு வந்திருந்தார்கள் நெருங்கிய உறவுமுறையில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்காக. விஸ்வநாதன் பெரும்பாலும் இது போன்ற வெளியூர் நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிடுவார் உடல் நிலையைக் காரணமாகக் கூறி. ஆனால் இந்த முறை அவருமே உடன் வந்திருந்தார் லெஷ்மியைப் பார்ப்பதற்காக.

சென்னையில் வைத்து லெக்ஷ்மியின் கண் முன்னரே சம்ரிதியைத் தான் திட்டியது ஏனோ கொஞ்சம் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆண் உடன்பிறப்புகளுடனே பிறந்த மனிதருக்கு அண்ணா என்று வாய்மொழியாக மட்டுமின்றி உளப்பூர்வமாக அழைக்கும் லெக்ஷ்மியை மிகவும் பிடிக்கும்.

ஆனால் அவர் பிடித்தமெல்லாம் தனக்கு என்று வரும்பொழுது மாறிப் போகும். முதலில் தன்னுடைய நலம் அதன் பிறகே அடுத்தவருடைய நலம் குறித்துக் கவலை கொள்ளும் குணம் இவருக்கு. மொத்தத்தில் இவரிடம் யாரும் சென்று உதவி என்றோ அல்லது இவர் எடுத்த முடிவுக்கு எதிராகவோ நிற்காத வரை இவர் நல்ல மனிதரே.

லெக்ஷ்மியின் மனதில் நடந்து முடிந்த பேச்சுக்களால் தான் கீழிறங்கிவிட்டோமோ என்ற ஐயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளவே அவருடைய தற்போதைய திருச்சி வருகை. சம்ரிதி எப்பொழுதும் போல் தான் பேசுகிறாள். தினமும் ஒரு முறையாவது சம்ரிதியின் அழைப்பு வந்துவிடும் இவருடைய தனிப்பட்ட எண்ணிற்கு. அதில் உள்ளுக்குள் கொஞ்சம் பெருமைதான் வெளியே சொல்லிவிடத்தான் மனமில்லை.

இங்கு லெக்ஷ்மியின் கவனிப்பிலோ மரியாதையிலோ எந்தவிதக் குறையும் இல்லை. அவர் எப்பொழுதும் போல் இயல்பாகவே நடந்து கொண்டார். இரவுணவை விரைவாக முடித்துவிட்டு அனைவரும் வீட்டின் முன் உள்ளத் தோட்டத்தில் வந்து விச்ராந்தையாக அமர்ந்திருந்தார்கள். வேப்ப மரக் காற்றும் மல்லிகைப் பந்தலின் மணமும் இரவுப் பொழுதை ஏகாந்தமாக மாற்றிக் கொண்டிருந்தது.

பார்த்திபன் நேஹாவின் மகன் ஆரவ் மட்டும் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தான். நேஹாவும் அவனோடு மல்லுகட்டிக் கொண்டிருந்தாள். பார்த்திபனோ ஒய்யாரமாக அத்தை மடியில் தலை வைத்து அம்மா மடியில் கால் நீட்டிப் படுத்திருந்தான். தலை கோதலும் கால் பிடித்துவிடுதலும் வேறு செவ்வனே நடந்து கொண்டிருந்தது.

பொறுத்துப் பார்த்த நேஹா முடியாமல் ஆரவ்வைத் தூக்கிக் கொண்டு வந்து அவன் வயிற்றின் மேல் உட்கார வைத்துவிட்டு, லெக்ஷ்மியின் மறுபுறம் வந்து மடியில் படுத்துக் கொண்டாள். பொறுக்கவில்லைப் பார்த்திபனுக்கு,

"ஏன்டி எப்பப் பாரு என் கூடவே போட்டிக்கு நிக்கிற? ஒரு மனுஷன் நிம்மதியா படுக்கக் கூட முடியலை இந்த சுதந்திர நாட்டுல. ஹ்ம்ம்ம்..." என்று அலுத்துக் கொள்ள,

"ஆமா எனக்கு வேண்டுதல் உங்களோடப் போட்டிக்கு நிக்கணுமுன்னு... நான் அப்பயிலிருந்து இந்தக் குட்டியோட ஓடிக்கிட்டு இருக்கேன். கொஞ்சமாச்சும் கண்டுக்குறீங்களா? நீங்க மட்டும் அம்மா மடி மாத்தி அத்தை மடின்னு ஜாலியா படுத்துக்கிட்டு இருக்கீங்க" படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டாள் நேஹா.

"எனக்கு இன்னைக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். கல்யாணத்துக்கு முன்ன என் கூட அமைதியே உருவா ஒரு பொண்ணு வேலை பார்த்துக்கிட்டு இருந்தா. அந்த அமைதியைப் பார்த்துதான் நான் அவளைக் காதலிச்சேன், கல்யாணமும் பண்ணினேன். இப்ப அந்தப் பொண்ணு எங்க? அந்தப் பொண்ணு மாதிரியே இருக்குற இந்த வாயாடியை என் தலையில கட்டி என்னை ஏமாத்திட்டாரு உங்க அப்பா" வேண்டுமென்றே பார்த்திபன் வம்பிழுக்க,

நேஹா பதிலளிக்கும்முன் முந்திக் கொண்ட சுஜாதா, "டேய் மகனே அவ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாளோ அப்படித்தான் இப்பவும் இருக்கா. நீதான் நேஹா நேஹான்னு ஜொள்ளு மழை பொழிஞ்சுகிட்டு இருந்த. உன்னோட ஜொள்ளு மழையில அந்த மும்பை மாநகரமே மூழ்கிப் போச்சுங்குறது இந்த உலகறிஞ்ச ரகசியமாச்சே" சிரித்துக் கொண்டே மகனை வாரிவிட்டார் சுஜாதா.

"அப்படிச் சொல்லுங்க அத்தை" என்று ஓடிச்சென்று அவருக்கு ஹைஃபை கொடுத்துவிட்டு அவர் மடியில் படுத்துக் கொண்டாள் நேஹா.

"பெத்து எடுத்தவதான் என்னையும் தத்துக் கொடுத்துப்புட்டா,

பெத்தக் கடனுக்குத்தான் என்னை வித்து வட்டியைக் கட்டிப்புட்டா" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு பார்த்திபன் பாட ஆரம்பிக்க, அரண்டு போன ஆரவ் "பேட் அப்பா" என்று கூறி தன் பிஞ்சுக் கரங்களால் தகப்பனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்துவிட்டு அவன் முகத்திலேயே ஏறி மிதித்துக் கொண்டு லெக்ஷ்மியிடம் சென்று அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

நேஹா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பிக்க, "அடச்சே என்னைப் பெத்ததும் சரியில்ல, நான் பெத்ததும் சரியில்ல, வந்து வாய்ச்சதும் சரியில்ல." என்று புலம்ப ஆரம்பித்தான் பார்த்திபன்.

"ஆமா மொத்தத்துல உங்க குரல் சுத்தமா சரியில்ல" என்று சிரிப்பினூடே கஷ்டப்பட்டு நேஹா கூற, இப்பொழுது அவளுக்கு ஹைஃபை கொடுத்தது சுஜாதா. பார்த்திபன் பதிலுக்கு ஏதோ சொல்ல வர,

"அடடா ரெண்டு பேரும் உங்க சண்டையை நிறுத்துங்கப்பா. அந்த டாம் அன்ட் ஜெர்ரி கூட உங்க ரெண்டு பேர்கிட்டயும் தோத்துப் போயிடும் போல. அம்மாடி நேஹா ஆரவ்வுக்கு நாலு வயசாயிடுச்சுல்ல இன்னோரு பொம்பளைப் பிள்ளை பெத்துக்கோம்மா" என்று கூறினார் லெக்ஷ்மி.

"இன்னோரு பிள்ளையா சித்தி... அதுவும் உங்க மருமகனை நம்பியா? வேற வினையே வேண்டாம். கண்டுக்கக் கூட மாட்டாங்க. ஹ்ம்ம்ம்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நேஹா.

"ஹேய் என்னடி இப்படி சொல்ற? நேத்து நைட்தானே இன்னோரு குழந்தைப் பெத்துக்கலாமுன்னு சொன்ன... இப்ப இப்படி சொல்ற" சற்றும் தாமதமின்றி பார்த்திபன் கேட்டுவிட, வீட்டுப் பெரியவர்கள் முன் பேசும் பேச்சா இது என்று நேஹாவிற்குத்தான் தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

பேச்சை மாற்றுவதற்காக, "சித்தி என்கிட்ட கேட்கறது இருக்கட்டும். முதல்ல சம்ரிதிக்கிட்ட சொல்லுங்க. ரெண்டும் உலகப் பொருளாதாரத்தைத் தலையில தாங்குற மாதிரி ஆஃபீஸே கதின்னு இருக்குதுங்க" நேஹா சிரித்துக் கொண்டே கூற,

"என் தம்பியை யாருன்னு நினைச்ச? அவன் சம்ரிதி மேல வைச்சிருக்குற காதலுக்கு எல்லாரோட வாழ்த்தையும் நிறைவேத்தணுமுன்னு சொல்லிப் பதினாறுக்கு ஒரு புள்ள கூட குறையாம பெத்துக்குவேன்னு சொல்லுவான் பாரு" பார்த்திபன் மிடுக்காகக் கூற,

என்ன பதினாறா என்று நேஹா வாய்பிளக்க, விஸ்வநாதனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே பார்த்திபன் தொடர்ந்தான். "அம்மா சும்மா சொல்லக் கூடாதும்மா நம்ம சம்ரிதியை, நம்மகிட்ட தான் குழந்தைத்தனமா நடந்துக்குறா. ஆனா வேலை விஷயமுன்னு வரும்பொழுது அப்படியே முழுசா மாறிடுறா. மூணு மாசத்துக்குள்ள கம்பெனியோட மொத்த அகௌண்ட்சும் அலசி ஆராய்ஞ்சுட்டா.

எதை எப்படி மாத்தணும், இதுக்கு முன்ன எங்க தப்புப் பண்ணியிருக்கோம், அதை எப்படி மாத்தினா எவ்வளவு லாபம் கூடும் அப்படின்னு ஒரு டீடெயில்ட் ரிப்போர்ட் கொடுத்திருக்கா பாரு, அதைப் படிச்சுட்டு நானும் மித்ரனும் ஆடிப் போயிட்டோம்.

நம்ம ஆடிட்டர் ராமமூர்த்தி சார் இல்ல அவர் அன்னைக்கு ஆபீஸ் வந்திருந்தார். அவருக்கு இவளோட ரிப்போர்ட்ஸ் மெயில் பண்ணியிருந்தேன். அதைப் பார்த்துட்டு வந்து, "என்னப்பா இந்தப் பொண்ணு இந்த போடு போடுறா? வந்து மூணே மாசத்துல என் தலையிலேயே கைய வைச்சுட்டா. மித்ரன் சரியான முடிவு தான் எடுத்திருக்கான். நான் கூட என்னடா சின்னப் பொண்ணை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுக்குறானேன்னு யோசிச்சேன். பரவாயில்ல பய இந்த விஷயத்துலேயும் கெட்டிதான். இனி நான்தான் எனக்கு வேற ஒரு கிளையன்ட்டைப் புடிக்கணும்" அப்படின்னு புகழ்ந்து தள்ளிட்டாரும்மா.

சிட்டில ஒன் ஆஃப் தி லீடிங் ஆடிட்டிங் ஃபர்ம் அவரோடது. அவரே அப்படிப் பாராட்டுறாருன்னா பார்த்துக்கோங்களேன்." புகழ்ந்து தள்ளிவிட்டான் பார்த்திபன் தன் தந்தையின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகவே.

"என்னமோ பார்த்தி, ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா அதுவே போதும். கல்யாணம் பண்ணியும் ரெண்டு பேரும் இங்கயும் அங்கயுமா பிரிஞ்சு இருக்காங்களேன்னு கவலையா இருந்துச்சு. இப்பதான் நிம்மதியா இருக்கு. சம்ரிதிக்கும் உங்க மாமா இறந்ததிலிருந்து முகமே சரியில்லப்பா. இப்பதான் பழைய முகம் அவளுக்குத் திரும்பியிருக்கு" பெருமூச்சுடன் சொல்லி முடித்தார் லெக்ஷ்மி.

"எல்லாம் சம்ரிதி படிச்சு முடிக்கிறதுக்காகத் தானே லெக்ஷ்மி. அதான் அவ ஃபைனல் எக்சாம் முடிஞ்ச மறுநாளே டிக்கெட் போட்டுட்டானே. அதுலயிருந்தே தெரியல உன் மருமகன் லட்சணம். ரொம்ப ஆசை வைச்சிருக்கான் சம்ரிதி மேல. என்ன மனசைத் திறந்து நம்ம யார்கிட்டயும் சொன்னதில்லை அவ்வளவுதான்." என்று முடித்தார் சுஜாதா.

சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தாலும் இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த விஸ்வநாதனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன மித்ரன் சம்ரிதியைக் காதலித்தானா? இது எப்பொழுது? திருமணத்திற்கு முன்பிருந்தேவா அல்லது கணவன் மனைவியாகியப் பின் வந்த காதலா? ஏனோ 'எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா' என்று மித்ரன் அன்று கேட்டது இப்பொழுது அவர் செவிகளில் ரீங்காரமிட்டது.

ᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝᐝ
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மலேசியாவிற்கு வந்திருந்தார்கள் மித்ரனும் சம்ரிதியும் அலுவலக நிமித்தமாக. அங்கிருந்த ரோபோ தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றுடன் கூட்டணி அமைத்திருந்தான் மித்ரன். இப்பொழுது புதிதாக ஒரு வாய்ப்பு அமெரிக்காவிலிருந்து வருவதுபோல் இருக்கவும் அதை ஏற்பது குறித்து முடிவெடுக்கவே இந்தக் கூட்டம். உடன் சம்ரிதியையும் அழைத்து வந்திருந்தான் அந்த நிறுவனத்தார்களிடம் அறிமுகப்படுத்தும் பொருட்டு. இந்தப் அமெரிக்க ஒப்பந்தத்தால் லாபம் என்று எதுவும் பெரிதாக இல்லை அதனால் இதனை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று மலேசிய நிறுவனத்தார் நினைக்க, அதனைத் திட்டவட்டமாக மறுத்துப் பேசிக் கொண்டிருந்தாள் சம்ரிதி.

அவர்கள் முடிவை எடுத்துவிட்டு தகவலைத் தெரிவிக்கும் பொருட்டே மித்ரனை வரவழைத்திருந்தனர். ஆனால் சம்ரிதியோ ஆரம்பத்திலிருந்து அலசி ஆராய்ந்தாள். இந்த ஒப்பந்தத்தை ஏற்பதால் லாபம் வராது என்றாலும் கண்டிப்பாக நஷ்டமும் வராது. வந்திருப்பது மிகப் பெரிய வாய்ப்பு, இப்பொழுது லாபத்தைக் கணக்கிடாமல் நாம் இதனை நல்ல முறையில் செய்து முடித்தால் அமெரிக்காவில் நாம் பலமாகக் காலூன்றுவதற்கு இது மிகவும் உதவும் என்பது சம்ரிதியின் வாதம்.

மித்ரனும் இதைப் பற்றி யோசித்திருந்தான். இவனுடைய தனிப்பட்ட நிறுவனமென்றால் லாபம் முக்கியமில்லை என்று துணிந்து செயலில் இறங்கியிருப்பான். இது கூட்டு நிறுவனம் என்பதால் அனைவரின் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருந்தது.

ஆனால் சம்ரிதி எதைக் குறித்தும் கவலை கொள்ளவில்லை. ஒப்பந்த அழைப்பு வந்திருப்பது அமெரிக்க இராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துடமிருந்து. இப்பொழுது அமெரிக்கா சீனத் தயாரிப்புகளை வாங்குவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தான் அவர்கள் பார்வை சிங்கப்பூர் மற்றும் மலேசியா புறம் திரும்பியுள்ளது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ளா விட்டால் திரும்பவும் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைப்பது கடினம் என்று உறுதியாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

தெளிவானப் பேச்சு, பிசிறில்லாத ஆங்கிலம் கேட்பவர் அனைவரையும் கட்டிப் போட்டதென்னவோ உண்மை. அனைவரும் மித்ரனின் முகத்தைப் பார்க்க அவனோ சம்ரிதியைத் தவிர வேறு யாரையும் திரும்பியும் பார்க்கவில்லை. இறுதியாக டெண்டர் வெளியிடட்டும் முயற்சித்து தான் பார்ப்போமே என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

சூரியதேவன் கடல் மங்கைக்குள் மூழ்கி முத்தெடுக்கும் வேளையில் தான் இவர்கள் இருவரும் மலேசியாவிலிருந்து கிளம்பினார்கள். சம்ரிதிக்கு இந்தப் பயணம் மிகவும் பிடிக்குமென்று எதிர்பார்த்தே காரில் செல்லத் திட்டமிட்டான் மித்ரன். துவாஸ் வழியாக ஜொஹூர் செல்லும் வழி முழுக்க உள்ள ரப்பர் தோட்டங்கள் இயற்கை அன்னையின் கொடை.

வார நாள் என்தலால் ஹைவேசில் அவ்வளவாக வாகனங்களும் இல்லை. காலையில் பறந்ததற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இப்பொழுது சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது அந்த போர்ஷ் 911. கன்வர்ட்டிபிள் ஆதலால் மேற்கூரை திறந்து விடப்பட்டிருக்க, அந்தி சாயும் நேரத்தில் தன் மனம் கவர்ந்தவளுடன் இப்படி ஒரு பயணம். ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

அவனின் ரசனைக்குரியவளோ சற்று முன்பு வரை ஏதேதோ வளவளத்துக் கொண்டிருந்தவள் தன்னையுமறியாமல் துயில் கொண்டிருந்தாள் அவன் தோள் சாய்ந்து. சற்று முன்பு அவள் பேசியதை நினைத்துப் பார்த்தான் முகம் தானாக மலர்ந்தது.

“சமி உனக்குப் பிடிச்சிருக்காடா இந்த கன்வர்ட்டிபிள் மாடல்? உனக்கு தான் தெரியுமே எனக்கு ஸ்போர்ட்ஸ் கார்னா உயிரு. அதான் இதுலேயே ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி கன்வர்ட்டிபிளா வாங்கிட்டேன்” என்று மித்ரன் கூற,

“ரொம்ப பிடிச்சிருக்கு அத்தான். நாம இந்தியாவுல இதே மாதிரி ஒரு கார் வாங்கணும். ஆனா கன்வர்ட்டிபிள் வேண்டாம், பெனரோமிக் சன் வியூ இருக்குற மாதிரி வாங்கிக்கலாம். அதுலயும் லிமோசின் மாதிரி பெரிய காரா வாங்கி அதுல பெனரோமிக் வியூ வைச்சு நம்ம மொத்த பேமிலியும் அதுல போகணும்.

அர்ஜூன் மாமா, அரவிந்த் மாமா, பார்த்தி மாமா எல்லாரும் பேமிலியோட குட்டீஸ் கூட போனா எப்படி இருக்கும்?” சொல்லும்பொழுதே சம்ரிதியின் விழிகள் அழகாய் விரிந்து அபிநயம் பிடித்தன.

“அதுக்கு எதுக்குமா லிமோசின்? மொத்தமா ஒரு லாரி வாங்கிக் கொடுத்துடறேன். மொத்த குடும்பமும் போயிட்டு வாங்க. நல்லாவே காத்தோட்டமா இருக்கும். டிரைவர் கூட வேண்டாம். உங்க பார்த்தி மாமாவையே ஓட்ட வைச்சிடலாம். அவன் ஒரே ஒரு கண்டிஷன் தான் போடுவான். நேஹா க்ளீனரா வந்தா நான் டிரைவரா இருக்கேன்பான். அதை மட்டும் செஞ்சுட்டா போதும்” என்று மித்ரன் கடுப்பாகக் கூற,

“போங்க அத்தான் நீங்க என்னை கிண்டல் பண்றீங்க.”

“பின்ன இவ்வளவு ரொமாண்டிக்கா ஒரு டிரைவ் கூட்டிட்டு வந்து பிடிச்சிருக்கான்னு கேட்டா… பாட்டி மாதிரி பதில் சொல்ற. இதுல மேடம் என்னை கரெக்ட் பண்றதா வேற சொல்லிக்கிட்டு இருக்கீங்க….”

“வர வர நீங்க ரொம்ப மோசம் அத்தான். நான் சொல்ற பேச்சு கேட்க மாட்டேங்குறீங்க. என்னை கெஞ்ச வைக்குறீங்க. இன்னைக்கு கூட நீங்க மீட்டிங்க்ல வாயே திறக்கலை? நானே பேசிகிட்டு இருந்தேன்.”

“அது என் பொண்டாட்டி பேசுற அழகை ரசிச்சுக்கிட்டு இருந்தேன்.” என்று கூறிச் சிரித்தவன், “இல்லடா நாமளே தனியா ஒரு பிரொடக்‌ஷன் யூனிட் மலேசியாவுல தொடங்கிட்டா என்னன்னு யோச்சிச்சுக்கிட்டு இருந்தேன். அதான் மேடம் எனக்கும் சேர்த்தே பேசிட்டீங்களே.”

“அச்சோ முன்னாடியே சொல்லியிருக்கலாமில்ல, இப்ப நானே பேசி நமக்கு ஒரு போட்டி நிறுவனத்தை தயார் பண்ணிட்டு வந்திருக்கேன்.” என்று கூறி முகம் சுளித்தவளிடம்,

“அது இந்த அமெரிக்கன் கான்ட்ரெக்ட்டுக்கு முன்னாடி ஆரம்பிக்க முடியாதுடா. நிறைய ப்ரொசீஜர்ஸ் இருக்கு. ப்யூச்சர்ல பார்க்கலாம்” என்றான் மித்ரன். இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் தன்னையறியாமல் உறங்கியிருந்தாள்.

காரை ஓரமாக வளைத்து நிறுத்தியவன் அவள் முகத்தை தன் தோளிலிருந்து மாற்றி சீட்டில் சாய்த்தான். செவ்வானத்தின் ஒளிபட்டு பொன்னிறத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் பெண். சாதாரணமாக ஒரு ஜீன்ஸ், டாப்ஸ், எந்தவித ஒப்பனையுமில்லாத முகம் மித்ரனை வசியம் பண்ணிக் கொண்டிருந்தது.

ஒப்பனைகளில்லாமல் இவ்வளவு அழகாக ஜொலிக்க முடியுமா? பின் எதற்காக அவ்வளவு காஸ்மெடிக் வகையறாக்களைக் கடைகளில் குவித்து வைத்திருக்கிறார்கள்? வியந்து ஆராய்ந்தான் அந்தக் காதலன்.

மெல்ல பட்டனைத் தட்டி காரின் மேற்கூரையை மூடச் செய்தவன், ஏந்திழையின் முக எழிலில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான். அதுவும் சமீபகாலமாக குழந்தை வேண்டும் என்று இவள் செய்யும் சேட்டைகள் எல்லை மீறிக் கொண்டிருந்தது. ஆனால் அவை அனைத்தும் மித்ரனுக்குக் காதல் வரவைப்பதற்குப் பதிலாக சிரிப்பை வரவைத்ததுதான் அந்தோ பரிதாபம்.

அன்று காரில் நடந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, அலுவலகம் கிளம்புவதற்காக என்று கிளம்பி வந்தவளைப் பார்த்து மூச்சடைத்துப் போனான் மித்ரன். முழங்கால் வரை உள்ள ஒரு ஸ்லீவ்லெஸ் வெள்ளை உடையில் தேவதையாகத் தான் தெரிந்தாள் பெண். ‘மை பேபி டால்’ என்று உதடுகள் முணுமுணுக்க, கைகள் தாமாக அவள் இடையை வளைத்துக் கொண்டன. அவளின் தந்தக் கைகளின் மென்மையை ஆராய்ந்து கொண்டிருந்தவன், “கண்டிப்பா இன்னைக்கு ஆபீசுக்குப் போகணுமா அத்தான்?” என்ற கேள்வியில் தன்னை சுதாரித்துக் கொண்டான். சட்டென்று அவளைத் தள்ளி நிறுத்தியவன், “ஆமா இதிலென்ன சந்தேகம் உனக்கு? கிளம்பு… கிளம்பு” என்று கூறிக் கொண்டே மயக்கத்தை சொரிந்த கண்களை கூலர்சுக்குள் ஒளித்துக் கொண்டான்.

அலுவலகத்திலோ மீட்டிங்கின் பொழுது ஒவ்வொரு முறை சம்ரிதி இவன்புறம் சாய்ந்து சந்தேகம் கேட்கும் பொழுதும் மித்ரனின் உலகம் ஸ்தம்பித்து நின்றது. இவனின் தவிப்பைக் கண்டுகொண்டவள் வேண்டுமென்றே சந்தேகங்களைக் கண்டுபிடித்தாள். வாங் லீ வேறு சம்ரிதி அந்த உடையில் தேவதை போல் இருப்பதாகக் கூறி ஏஞ்சல்… ஏஞ்சல் என்று அழைத்துக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

அலுவலகத்தில் கூட ஒரு மாதிரியாக சமாளித்து விடுபவன் வீட்டில் திணறித்தான் போனான். உருகி உருகிக் காதலித்தப் பெண் நெருங்கி வருகையில் விலகிப் போவது அத்துனை எளிதானக் காரியமாக இருக்கவில்லை. அவளை மொத்தமாக அள்ளிக் கொள்ளச் சொல்லி உடம்பின் ஒவ்வொரு அணுவும் குத்தாட்டம் போட்டது. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான் மித்ரன்.

மற்றொரு நாள், இவள் நெருங்கி அமர்ந்தும் கண்டுகொள்ளாமல் தொலைக்காட்சியில் கவனத்தைப் பதித்திருக்க, முதலில் தயங்கியவள் பின் மித்ரனின் மடியில் ஏறி அமர்ந்துவிட்டாள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு. சுகமாய் அதிர்ந்தவன் அப்பொழுதும் முயன்று தொலைக்காட்சியில் கவனமிருப்பதாக காட்டிக் கொண்டான். உதட்டைச் சுளித்தவள்,

“அத்தான் ரொம்ப பண்றீங்க. ஒரு நாள் பால்ல எதாவது கலந்து கொடுத்து உங்க மேட்டரை முடிக்கலை…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள்.

கைகளால் தன் வாயை மூடிக் கொண்டவன், “ என்ன பேபி வர வர இப்படிக் கிளம்பிட்ட… மேட்டர் எல்லாம் கெட்ட வார்த்தை. சொல்லக் கூடாது” என்க,

“மேட்டர் ஒன்னும் கெட்ட வார்த்தையில்ல, சயின்ஸ் வார்த்தை” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு சொன்னாள் சம்ரிதி.

மித்ரன் சிரிப்பை அடக்கிக் கொண்டு “அதானே பார்த்தேன், சமூகம் திருந்திடுச்சோன்னு நினைச்சேன். முதல்ல உனக்கு மேட்டர்னா என்னன்னு தெரியுமாடி” என்று கேட்க,

“அதெல்லாம் ஒரு ப்ளோவில தானா வரும் அத்தான்” தோளைக் குலுக்கிக் கொண்டு சாதாரணமாகக் கூற, வெடித்து சிரித்துவிட்டான் மித்ரன். இவன் சிரிக்கவும் கோபமாக எழுந்து சென்றவள், அறைக்குள் சென்று தலையை மட்டும் வெளியில் நீட்டி, “ஒருவேளை அவனா நீ” என்று கண்ணடித்துக் கேட்டுவைத்தாள். “அடிங்க…” என்று மித்ரன் எழவும் ஓடியே போயிருந்தாள்.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவன், “ஹேய் பொண்டாட்டி வர வர உன் அட்டகாசம் தாங்க முடியலைடி. நானும் எவ்வளவு நாள்தான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது ஹ்ம்ம்? இன்னையிலிருந்து ஒரு மாசம் உனக்கு டைம். இந்த ஒரு மாசத்துல என்ன நடந்துச்சுன்னு ஒன்னு நீ சொல்லணும் இல்ல நானே கண்டுபுடிக்கிறேன். இந்த ஒரு மாசம் முடிஞ்சு இருக்குடி உனக்கு கச்சேரி… எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு வட்டியும் முதலுமா திருப்பிக் கொடுக்கிறேன் பாரு” அவள் முகவடிவை அளந்து கொண்டே கூறியவன், காரை ஸ்டார்ட் செய்து சிடி பிளேயரை இயக்க அவன் மனமறிந்தோ என்னவோ,

முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்

மின்னல்கள் அவளது விழியாகும்

மௌனங்கள் அவளது மொழியாகும்

மார்கழி மாதத்துப் பனித்துளி அவளது குரலாகும்

மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

என்று பாடத் தொடங்கியது.
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் song ka..

super epi..

அட விச்சு மாமா.. நல்லா verify பண்ணுறீங்கோ..

பார்த்தி நேஹா.. செம pair.. Enjoy moment

மிது அத்தான் control control கெத்த விட்டுறாத.. அப்புறம் சமூகம் காரித்துப்பும்...

என்ன நடந்துதுனு கண்டுபிடி மிரு அத்தான்.. அப்புறம் இந்த சமி பேபிய காலி பண்ணிடலாம்...

செம flow ka
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
nice epi சங்கீத் டியர்(y)(y):love::love: இந்த எபில நீங்க சொன்ன கார்களோட pic போடுங்க மேடம் நாங்க கண்ணார பார்த்து அடையாளம் கண்டுக்குறோம் :p:D சத்தியமா நான் பார்த்ததில்லை:cool::cool:மேட்டருக்கு ஒரு dictionary so nice :p:D
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top