• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே... இன்னைக்குக் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு... ப்ளஸ் கொஞ்சம் குட்டி யூடிதான்... எல்லாரும் உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு என்னை மன்னிச்சுவிட்றுங்க சரியா.... ப்ளீஸ்...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 9

பௌர்ணமி நிலவின் ஏகாந்தத்தை ரசித்துக்கொண்டே நீரில் மிதந்து கொண்டிருந்தான் மித்ரன். அன்று அலுவலகத்தில் இருந்து நேரத்தோடு வீடு திரும்பிய காரணத்தால் எழுபதாவது மாடியில் இருக்கும் நீச்சல் குளத்திற்கு மித்ரன் கிளம்ப சம்ரிதி தானும் வருவதாகக் கூறி உடன் வந்திருந்தாள்.

அந்தக் குடியிருப்பு வளாகத்தில் இரண்டு நீச்சல் குளங்கள் இருந்தன. ஒன்று கீழே அனைவரின் பயன்பாட்டிற்காகவும் எந்நேரமும் திறந்திருக்கும். மற்றுமொன்று விரும்பியவர்கள் மட்டும் தனியாகப் பணம் கட்டி உபயோகித்துக் கொள்வதற்காக எழுபதாவது மாடியில் அமைத்திருந்தார்கள். மேலே இருந்த நீச்சல் குளத்திற்கு மட்டும் மாலைக்கு மேல் போதை வஸ்துகளுக்குத் தடை விதித்திருந்தார்கள், எதிர்பாராமல் நடக்கும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் பொருட்டு.

சம்ரிதி வந்ததிலிருந்து மித்ரன் தனியாக எங்கேயும் வெளியே செல்வதற்கு முடிவதில்லை. எங்கு சென்றாலும் இவளும் உடன் சென்று கொண்டிருந்தாள். காலையில் அலுவலகத்திற்கு ஒன்றாகக் கிளம்புவது தொடங்கி இரவு இருவரும் ஒன்றாகவே வீட்டிற்கு வரும்வரை.

இப்படித் தன்னுடனே ஒட்டிக் கொண்டுத் திரிபவள் எப்படித் தன்னை விட்டு இத்தனைக் காலம் பிரிந்திருந்தாள் என்று எண்ணிக் கொள்வான் மித்ரன். அலுவலகத்திலிருந்து சில நாட்கள் சம்ரிதியை முதலில் வீட்டிற்குக் கிளம்புமாறு கூறினாலும் மறுத்துவிடுவாள். "ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம் அத்தான் நான் இங்கேயே வெயிட் பண்றேன்" என்று கூறிவிடுவாள்.

இதோ இன்று நீச்சல் குளத்திற்குக் கிளம்பிய போது கூட நானும் வருகிறேன் என்று உடன் கிளம்பி விட்டாள். முதலில் மித்ரனுக்கு ஆச்சரியமே இவள் நீச்சல் குளத்திற்கு வருகிறாளா என்று. அவள் கிளம்பி வந்ததும் அவள் உடையைப் பார்த்து சிரித்துவிட்டான். எப்பொழுதும் போல் ஒரு டீஷர்ட்டும் நைட் பேண்டும் அணிந்து கொண்டு வந்தாள் சம்ரிதி. "இங்க ஸ்விம்மிங் பூலுக்கு எல்லாம் டிரஸ் கோட் இருக்கு சமிம்மா. இப்படி எல்லாம் போகமுடியாது டா" என்று கூறவும் முதலில் திருதிருத்தவள் "நான் தான் ஸ்விம் பண்ணப் போறது இல்லையே அத்தான். சும்மா தானே வந்து உட்கார்ந்து இருக்கப் போறேன், நானும் வரேன்" என்று கூறிக் கிளம்பினாள்.

இன்று ஏனோ அந்த நீச்சல் குளம் வெறிச்சோடிக் காணப்பட்டது. எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் எப்பொழுது வேண்டுமாலும் மணிக்கணக்கில் நீந்திக் கொண்டிருப்பார்கள் இங்குள்ள மக்கள். இப்பொழுது சமீபத்தில்தான் ஆல்கஹாலுக்குத் தடை விதித்திருந்தார்கள். அதனால் கூட கூட்டம் இப்பொழுது குறைந்து இருக்கலாம்.

ஆனால் இப்பொழுதும் தரைத்தளத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அனைவரும் குடும்பத்துடன் வந்து நீச்சலில் இறங்கி விடுவார்கள் கையில் ஆளுக்கொரு மதுபானக் கோப்பையுடன். ஆண் பெண் பேதம் எதுவும் இந்த விஷயத்தில் இங்கே கிடையாது.

சோர்வு நீங்க நீச்சலடித்து முடித்தவன் எட்டி அங்கிருந்த ப்ஃளோட்டரை அருகிழுத்து அதில் படுத்துக்கொண்டே இரவின் வர்ணத்தை ரசிக்கலானான். கோடானுகோடி நட்சத்திரங்கள் தன்னை நோக்கிக் கண் சிமிட்டியதால் வெட்கப்பட்டுப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் நிலா பெண்.

அந்த இரவும், நிலவும், தனிமையும், அது தரும் இனிமையும் மித்ரனை ஏதோ செய்ய சம்ரிதியைப் பார்த்தான். அவள் மும்முரமாக கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்திற்குள் தலையை விட்டுக்கொண்டிருந்தாள். கையில் கொஞ்சம் நீரை எடுத்து இங்கிருந்தே அவள் மீதுத் தெளித்தான்.

"அத்தான் என்ன பண்றீங்க?" சிணுங்கிக் கொண்டே தன்மீது தெளித்திருந்த நீரை கையால் துடைத்துக் கொண்டே கேட்டாள் சம்ரிதி.

"இங்கே வந்து உட்காருடா" என்று கூறி அருகிலிருந்த நீச்சல் குளத்தின் படிக்கட்டுகளைக் காண்பித்தான்.

"அங்கேயா... அங்க எப்படி அத்தான்?"

"இங்க வந்து உட்கார்ந்து காலை மட்டும் தண்ணிக்குள்ள விட்டுக்கோ."

"அந்த செக்யூரிட்டி கார்ட்ஸ் வந்தா இந்த டிரஸ்ல ஸ்விம்மிங் பூலுக்குள்ள இறங்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க."

"அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க. வந்து சொன்னா நான் பேசிக்கிறேன். நீ வா"

"ம்ப்ச்... அத்தான்..." அப்பொழுதும் வராமல் சிணுங்கினாள் பெண்.

"வாடா..." குரல் அத்தனை ஆழமாக, மென்மையாக சற்றுக் கெஞ்சலாகக் கூட ஒலித்தது. அந்தக் குரல் ஊடுருவிச் சென்றது பெண்ணுக்குள். மறுவார்த்தை பேசாமல் அவன் கூறியது போல் பேண்ட்டைத் தூக்கி விட்டவள் காலைத் தண்ணீருக்குள் போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டாள். மிதந்தபடியே அவள் அருகில் வந்தவன் அவள் கைகளைப் பற்றித் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

"ரொம்பக் குளிருதா அத்தான்? கீழ போயிடலாமா?"

"இது குளிர் இல்ல சமி... இது... இது வெப்பம்" என்று கூறிக் கொண்டே அவள் கைகளை தன் உதட்டருகே கொண்டு செல்ல அவனின் மூச்சுக்காற்றில் அந்த வெப்பத்தை உணரமுடிந்தது சம்ரிதிக்கு.

"நீ என்கூட இங்க ஸ்விம் பண்றியா சமிம்மா? உனக்கு ஒரு ஸ்விம் சூட் வாங்கிடலாம்."

"இங்கேயா... இங்கே யாருமே வர மாட்டாங்கன்னு நீங்க உத்தரவாதம் கொடுத்தா எனக்கு உங்க கூட ஸ்விம் பண்றதுல ஒன்னும் பிரச்சனை இல்ல." அழகாகத் தலைசரித்துப் பதில் கூறினாள்.

"அப்போ யாராவது வந்துடுவாங்க அப்படிங்கறது தான் உனக்குத் தயக்கமா? என்கூட ஸ்விம் பண்றது இல்லையா?" ஆழமானக் குரலில் அவள் கண்களை உற்று நோக்கியவாறே கேட்டான் மித்ரன்.

சிறிது நேரத்துக்குப் பின்னரே அந்தக் கேள்வியின் நோக்கம் சரியாக விளங்கியது சம்ரிதிக்கு. தவிப்பாக அவனை ஏறிட்டுப் பார்க்க,

"இன்னும் எத்தனை நாள் தான் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுறது சமிம்மா? உனக்குப் புரியவே இல்லையா?" உதட்டைக் கடித்துக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தவள் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

"நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே. நீங்கதான் பிடிவாதம் பிடிக்கறீங்க அத்தான். நான் என்ன பண்றது?"

"உனக்கு என்னோட தவிப்பும் நான் எதுக்காக கேட்கிறேங்குறதும் புரியுதா இல்லையா?"

"எனக்கு நல்லாவே புரியுது அத்தான். உங்களுக்குத்தான் புரிய மாட்டேங்குது. கல்யாண ஏற்பாடு நடந்தது எனக்கில்லை நான் தடுத்து நிறுத்துறதுக்கு. கல்யாணம் பேசுனது உங்களுக்கு. நான் எப்படிப் போய் தடுத்து நிறுத்த முடியும்? அதுவும் நீங்களும் அங்க இல்லாதப்போ?

நீங்க பாட்டுக்குப் போய் நியூசிலாந்துல குகைக்குள்ளே உட்கார்ந்துக்கிட்டிங்க. நான் எப்படிப் போய் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்த முடியும்? கொஞ்சம் என் நிலைமையில் இருந்தும் யோசிச்சுப் பாருங்க அத்தான் ப்ளீஸ்...

இந்தப் பேச்சை இதோட விட்டுடலாமே. நமக்கு வாழ்க்கை இன்னும் நிறைய இருக்கு. அதை அனுபவிச்சு வாழலாமே. ஏன் நம்மளை நாமே வருத்திக்கணும்? யோசிச்சுப் பாருங்க ப்ளீஸ்..." கிட்டத்தட்ட கெஞ்சினாள் பாவை.

"நம்ம காதலுக்காக நாம தானே போராடணும் சமி... நாமளே செய்யலைன்னா வேற யாரு செய்வா?"

மிகவும் நியாயமான கேள்வி மித்ரனிடமிருந்து. ஆனால் சம்ரிதியிடம் பதில்தான் இல்லை. பதில் பேசத் தோன்றாமல் மௌனம் காத்தவளிடம், "இல்ல நீ என்னைக் காதலிக்கவே இல்லையா? நானாதான் அப்படி நினைச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தேனா?" இந்தக் கேள்வி வந்த நொடி சம்ரிதி அதிர்ந்துபோய் மித்திரனின் முகத்தை ஏறிட்டாள்.

அவ்வளவு சோகம் அப்பிக் கிடந்தது அவனது முகத்தில். சற்று நேரத்திற்கு முன்பு இருந்த இனிமை காணாமல் போயிருந்தது. அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களையே பார்த்தவன், "ஆனால் நான் இந்தக் கண்ணுல பார்த்திருக்கேனே, நான் பார்த்தது பொய்யின்னு என்னால இப்ப வரைக்கும் நம்ப முடியலையே.

"பிஸினஸ்ல எல்லாரையும் ஒரே பார்வையில் எடைபோட்டுருவேனாம். எல்லாரும் சொல்றாங்க. ஆனா யாரை எனக்கு ரொம்பப் புடிக்குமோ அவங்க மனசுல என்ன இருக்குன்னு என்னால தெரிஞ்சுக்க முடியலையே.

இல்ல நீ என்ன எதிர்ப்பார்த்த? எல்லாரையும் மாதிரி லவ் யூ சொல்லி, ப்ரொபோஸ் பண்ணி போன்ல மணிக்கணக்கா பேசி... இப்படியெல்லாம் நான் செய்யலைன்னு இது காதலே இல்லைன்னு முடிவு பண்ணிட்டியா? அப்படியெல்லாம் பண்ணா தான் காதலிக்கிறதா அர்த்தமா? என்னோட மனசை இப்ப வரைக்கும் நீ புரிஞ்சுக்கவே இல்லையேடா"
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
"அத்தான்"

"இரு நான் பேசி முடிச்சிடுறேன். அதுக்கப்புறம் நீ பேசு. எல்லாருக்கும் அவங்கவங்க கல்யாணத்தைப் பத்தி ஆயிரம் கனவுகள் இருக்கும். என்னோட ஒரே கனவு, ஆசை என்ன தெரியுமா? நான் உன் கண்ணைப் பார்த்துகிட்டே உன் கழுத்துல தாலி கட்டணும். அந்தக் கண்ணு ரெண்டும் காதலோட என்னைப் பார்க்கிறதை நான் பார்த்துக்கிட்டே, உன்னை என்னோட சரிபாதியா ஆக்கிக்கிடணும்னு ஆசைப்பட்டேன்.

ஆனா அது நடக்கலை. நான் தாலி கட்டும் போது உன் கண்ணுல தெரிஞ்சது பயம் பயம் பயம் மட்டும் தான். தாலி கட்டுறது நான்தான்னு உனக்குப் புரிஞ்சுதா இல்லையான்னு கூட நான் யோசிச்சிருக்கேன். இப்படி நான் ஆசைப்பட்டது தப்பா? அந்த அளவுக்குக் கூட எனக்குத் தகுதி இல்லையா?

மனசு வலிக்குது டா... ரொம்ப வலிக்குது. என்னால முடியல. இதை உள்ளுக்குள்ளேயே போட்டுப் புழுங்கிப் புழுங்கி எனக்குத் தலையே வெடிச்சுடும் போல இருக்கு. எனக்கு தயவுசெய்து சொல்லுடா... என்ன நடந்துச்சுன்னு." தான் குறித்த ஒரு மாதக் கெடுவின் தொடக்கமாகத் தன்னுடைய ஆட்டத்தை சம்ரிதியிடமிருந்தே தொடங்கினான் மித்ரன்.

“அத்தான் ஏன் தகுதி அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.” அவன் கன்னத்தை தன் இரு கரங்களால் பற்றிக் கொண்டவள், “எனக்குத்தான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க எந்தத் தகுதியும் இல்ல. நான் உங்களோட இந்த வளர்ச்சியைப் பார்த்து, உயரத்தைப் பார்த்து பயந்துட்டேன். எனக்கு உங்க மாமா பொண்ணுங்குறதைத் தவிர வேற என்ன தகுதி இருக்கு?”

பேசிக் கொண்டே நிலவினைப் பார்த்தவள், “நிலா வானத்துல இருந்தா தானே அத்தான் அழகு. அது தரைக்கு வந்தா அதோட தன்மையை அது இழந்துடாதா? என்னோட ஆசைக்காக அதை என் கைக்குள்ள சுருக்குறது தப்புன்னு நினைச்சேன். நாம ஆசைப்பட்டவங்க எந்தக் கஷ்டமும் படாமல் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறதும் காதல்தான்.

நீங்க சந்தோஷமா இருக்குறதைப் பார்த்துக்கிட்டே உலகத்துல எங்காவது ஒரு மூலைல வாழ்ந்துட்டுப் போயிடலாமுன்னு நினைச்சேன். ஆனா உங்க உலகமே நாந்தான்னு இப்பப் புரிஞ்சுக்கிட்டேன். இன்னொரு தடவை நீ என்னைக் காதலிக்கவே இல்லையான்னு கேட்டீங்க கொன்னுடுவேன்… சொல்லிட்டேன்.” காதலாக ஆரம்பித்துக் கோபமாக முடித்தாள் சம்ரிதி.

ஒருவேளை இவள் கூறுவது போலத்தானோ, நாம் தான் தேவையில்லாமல் நடுவில் குழப்பிக் கொண்டோமோ என்றே முதலில் எண்ணத் தோன்றியது மித்ரனுக்கு. ‘அப்படியென்றால் திருமணம் முடிந்ததற்கு அவளுக்கு சந்தோஷமாகத் தானே இருந்திருக்க வேண்டும். ஆனால் இவள் முகத்தில் அப்பொழுது சந்தோஷத்திற்கான அறிகுறி கொஞ்சமும் இல்லையே. இவள் எதையோ மறைக்கிறாள்’ மித்ரனின் மனது நம்ப மறுத்தது. ‘இனி இவளிடம் கேட்பது வீண். வேற என்ன பண்ணலாம் என்று யோசிப்போம்’ யோசனையாக அவளைப் பார்த்துக் கொண்டே கரையேறுவதற்காக ப்ளோட்டரிலிருந்து தண்ணீருக்குள் உடலைத் திருப்பியவாறு இறங்கினான்.

அதைப் பார்த்த சம்ரிதிக்கு ஏனோ அவன் சட்டென்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டதாகத் தோன்றியது. “அத்தான்” என்று அலறியவள் தானும் தண்ணீருக்குள் குதித்திருந்தாள். நாம்தான் நீச்சலில் அரைகுறை, அவன் அனாயாசமாக நீச்சலடிப்பான். சர்பிங், ஸ்கீயிங் போன்ற அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவன் என்பதெல்லாம் மறந்தே போனது பெண்ணுக்கு.

மித்ரனைக் காப்பாற்றுவதாக நினைத்து நீருக்குள் குதித்தவளைக் கடைசியில் அவன் தான் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அவள் மூழ்கும் அளவுக்கு இருந்த தண்ணீரில் காலை கீழே ஊன்ற முடியாமல் தவிக்க மித்ரன் தான் அவளை இடையோடு சேர்த்துத் தூக்கிப் பிடித்திருந்தான்.

அவள் முகத்தைப் பார்க்கப் பார்க்க பொங்கி வந்த சிரிப்பைக் கஷ்டப்பட்டு வாய்க்குள் அடக்கியவன், “இப்ப எதுக்குடி தண்ணிக்குள்ள குதிச்ச? நான் மேல ஏறத்தானே வந்தேன், அதுக்கு எதுக்கு நீ அந்தக் கத்து கத்திட்டு குதிச்ச?”

அவனை சராமாரியாக அடித்துக் கொண்டே, “சொல்லிட்டு செய்ய மாட்டீங்க. நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா” சொல்லிக் கொண்டே அடிப்பதையும் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவள் அடிகளைத் தவிர்ப்பதற்காக அங்குமிங்கும் தன் தோள்களை நகர்த்திக் கொண்டிருந்தவன் சற்று நேரம் கழித்தே உணர்ந்தான் அவன் கைகளுக்குள் அகப்படும் மென்மையை. கைகள் அவளிடையின் மென்மையை வேகமாக ஆராய, கண்களோ அவளை மொத்தமாக மேய்ந்து கொண்டிருந்தது.

தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்தவன் சட்டென்று விளையாட்டை நிறுத்திவிடவும் கேள்வியாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் சம்ரிதி. அந்தக் கண்களிரண்டும் தன் மேனியில் பயணித்த இடங்களைப் பார்த்து உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்ததுப் பெண்ணவளுக்கு. சற்றுத் தாமதமாகவே தன் வெற்றிடையில் அவன் கரத்தின் வெப்பத்தையும் அழுத்தத்தையும் உணர்ந்தாள் அவள்.

அவளை மேலும் தன் மீது மொத்தமாக சாய்த்துக் கொண்டவன் கரகரத்தக் குரலில், “சமி கிஸ் மீ” என்றான். அதிர்ந்து விழித்தவள் “ஹ்ம்ம்” என்க, “பேபி கிஸ் மீ” என்றான் மீண்டுமாக.

அந்தக் குரல் பேதைக்குள் வித்தை காட்ட, மெல்ல அவன் இதழின் மேல் தன் இதழைப் பொருத்தினாள். கண்ணோரம் சிரிப்பில் சுருங்க அவள் இதழ்களைத் தனதாக்கிக் கொண்டான் மித்ரன். நீண்ட இதழ் முத்தம் நீண்டுகொண்டே இருந்தது. யாரோ வருவது போல் அரவம் கேட்கவுமே அவளை விட்டு விலகினான் மித்ரன். இன்னும் மோன நிலையிலேயே இருந்தவளின் காதோரம் குனிந்தவன், “இதுவே தெரியலை… இதுல அன்னைக்கு யாரோ மேட்டரைப் பத்தியெல்லாம் பேசினாங்க. அது யாருன்னு தெரியுமா பேபி உனக்கு?” சிரித்துக் கொண்டே ரகசியக் குரலில் வினவ,

அவன் மார்பில் கைவைத்து அவனைத் தண்ணீருக்குள் தள்ளிவிட்டவள், அங்கிருந்த கைப்பிடியைப் பற்றிக் கொண்டு மேலேறி வெளியே வந்தாள்.

“நான் உங்க டிரெஸ்சைப் போட்டுக்கிட்டு வீட்டுக்குப் போறேன். நீங்க இப்படியே வீடு வந்து சேருங்க. இதுதான் உங்களுக்குப் பனிஷ்மெண்ட்.” சொன்னவள் அவன் உடுப்புகளைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்திருந்தாள்.

அவள் வெளியே வரும்வரைப் பொறுத்தவன், “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லப்பா… நம்ம லிசா இல்ல லிசா, அதான் நீ கூட அவ பார்வையே சரியில்லைன்னு சொல்லுவியே அவ வீடு இந்தப் பக்கம்தான்னு நினைக்கிறேன். நான் வேணா அவ வீட்டுக்குப் போய் வேற டிரெஸ் வாங்கிக்கவா” கண்ணடித்துக் கேட்டான்.

“ஹையடா… அவ வீடு வரைக்கும் கண்டுபுடிச்சு வைச்சாச்சா? போங்க சாமி போங்க… எங்கேயோ போங்க என்னமோ பண்ணுங்க. நான் வீட்டுக்குப் போறேன்” சொன்னவள் நடையைக் கட்டிவிட்டாள்.

“பொண்டாட்டிக்குப் பொறாமை வருமுன்னு பார்த்தா கோவம் வந்திடுச்சு போலயே! ஹேய் பொண்டாட்டி நில்லுடி கன்னிப் பையனை இப்படித் தனியா விட்டுட்டுப் போகலாமா?” இவனும் கத்திக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

இவர்கள் இருவரும் பேச்சு மும்முரத்தில் அங்கிருந்த மித்ரனின் அலைப்பேசி அதிர்ந்ததையோ, அதில் விஸ்வநாதனின் கைப்பேசி எண் ஒளிர்ந்ததையோ கவனிக்கவில்லை.
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
சங்கி பேபி இப்படி எழுதினா எப்படி பேபி..
பச்சை மண்ணுங்களா கண்ணை மூடிகிட்டு படிக்கவும்....

அருமை அருமை... இந்த விஸ்வநாதன் என்ன பிரச்சினையை கொண்டு வராரோ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top