• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ?? 10 ( prefinal )

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
அறியாவயதிலே ...
ஒற்றை தருணத்திலே ..
உன் விழியோர கண்ணீரோடான சிரிப்பினிலே ...
உன்னையும் உன் மேலான அன்பையும் ..
என் இதயத்தினுள் சிறைவைத்தேன் ...!!!
யாரும் அறியா வண்ணம் ...!!!

நானும் உணராவண்ணம் ...!!!

அத்தியாயம் 10 :


ஏய் என்ன பண்ற ...வேணாம் டி வலிக்குது என கத்திகொண்டே அவ்வறை முழுவதும் பவனஜ் (பவன்புத்ரா ) ஓட கையில் தலையணையுடன் அவனை துரத்திக்கொண்டிருந்தாள் பரியா .

ஏய் கூர்மூக்கி எதுக்கு டி அடிக்கிற , என்ற அம்மா கூட என்ன அடிச்சதில்லை டி கூர்மூக்கி என கத்தியவாறு ஓட ,

யூ யூ இடியட் முதல் தடவ பார்த்தப்பவே சொல்லிருக்கலாம்ல , எவ்ளோ குழப்பம் பண்ணிர்க்க ஒழுங்கா நில்லுடா என துரத்தியவள் ,
சட்டென்று பவனஜ் நின்று திரும்ப அதை அவள் எதிர்பார்க்கத்தில் அவனின் மேல் மோத பிடிப்பில்லாமல் இருந்த பவனஜும் அவளை அணைத்தவாறு விழுந்தான் .

நல்லவேலை அங்கு கட்டில் இருந்ததில் அடிபடாமல் போக , பரியாவோ அவனை அருகில் கண்ட தவிப்பில் இருக்க ,

பவனஜோ , அப்பாடி கட்டில் இருந்ததுனால தப்பிச்சோம் . நீ என்ன இன்னும் என்னையவே பார்த்துட்டு இருக்க எழுத்துரு . நிச்சயம்னு கவுச்சி சாப்பிட கூடாதுனு சொல்ட்டாங்க அப்பத்தா தான் யாருக்கும் தெரியாம கருவாட்டு குழம்பு ஊத்தியாரேன் சொல்லிற்கு . போய் சாப்பிடுவோம் வா என்றான்.

அட மாங்கமடையா ! சரியான சோத்து சட்டியா இருப்ப போல என சத்தமாய் திட்டியவள் , அவன் மேலையே மொத்தமா சாஞ்சிருக்கேன் அப்போ கூட கருவாட்டுக்குழம்பை தேடி புத்தி போது பார் என மனதினுள் திட்டினாள் .

என்னால என்னைய மனசுக்குள்ளாறவே திட்றாப்ல இருக்கு .

நீ பண்ண வேலைக்கு உன் கண்லயே அந்த கருவாட்டுக்குழம்பை காட்டக்கூடாது என பொறும,

ஏட்டி நானும் பார்த்துட்டே இருக்கேன் அப்போல இருந்து நான் ஏதோ உன்ன குழப்புனேன் சொல்ற , நா இங்க உன்கிட்ட பேசுனதே ரெண்டோ மூணோ வாட்டிதானால என கேட்டான் .

அப்பொழுது அவ்வறையில் பன்ரொட்டியும் , ப்ரியாவும் நுழைந்தனர்.

அத்தான் நீங்க எதுவும் குழப்ல எல்லாம் உங்க பெயர் செஞ்ச வேல என ,

என்னபுள்ள சொல்ற மாப்பு பேருக்கு என்ன குறைச்சல் என கேட்டான் பன்ரொட்டி .

தாங்கள் இங்கு வந்த பொழுது கேட்ட பவன்புத்ராவின் புகழில் ஆரம்பித்து , பன்ரொட்டி அவனை பவனஜ் என்றதில் முழித்து , அவனின் பரியாவின் மேலான காதல் பார்வையில் கடுப்பாகி , இரண்டு மாமன்மார்களும் என் மகன் என சொன்னதில் வேறு வேறு ஆள் என எண்ணி கடைசியாய் நிச்சயம் யாருடன் என குழம்பியதுவரை பரியாவும் , ப்ரியாவும் மாற்றி மாற்றி சொல்லி முடித்தனர் .

ஒருத்தரோட பேராலையா இம்புட்டு குழப்பம் என பன்ரொட்டி வாய் பிளக்க , பவனஜோ சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான் .

சிரிப்பின் நடுவே , அதுக்காண்டி தான் என்ன பார்த்தப்பலாம் புசுபுசுனு கோபமா மூச்சு வுட்டுட்டு நின்னியா . நான் கூட அன்னிக்கு தாத்தைய்யா வீட்ல இருக்கும் போது நினைச்சேன் , என்ன எப்பவும் முறைப்பாவ இன்னிக்கு இப்டி வச்ச கண்ணு வாங்காம பார்க்குறாங்களேன்னு என மறுபடியும் சிரிக்க, பன்ரொட்டியும் உடன் சேர்ந்து சிரித்தான் .

எங்க தவிப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கா என பரியா , ப்ரியா இருவரும் அவர்களை மொத்த ஆரம்பித்தனர் .

இருவரையும் அடித்ததில் இவர்களுக்கு கை வலிக்க ஆமா உங்களுக்கு எதுக்கு ரெண்டு பேர் ?.

இத்தன நாளா பேசாம இருந்த தாத்தய்யாவும் ,பெரியமாமாவும் எப்படி சேர்ந்தாங்க ? என பரியாவும் , ப்ரியாவும் கேட்க பவனஜ் தன் குடும்பக்கதையை சொல்ல ஆரம்பித்தான் .

சில வருடங்களுக்கு முன்பு :

கப்பீஷ்வரின் தந்தை பத்ரதேவ் - விற்கு கடவுள் ஆஞ்சநேயர் மீது பக்தியும் , பிரியமும் அதிகம் . அதன் காரணமாகவே தன் மகனிற்கு கப்பீஷ்வர் என்னும் பெயர் சூட்டினார் . பெயர் வைத்துவிட்டாரே தவிர அவரின் பெயரை சொல்லி மகனை கூப்பிட தயங்கி கண்ணா என்றழைத்து வந்தார்.

கப்பீஷ்வரோ , தன் பேருக்கு பொருத்தமன்றி தன் தந்தை தன்னை கூப்பிடும் பெயருக்கு ஏற்றாற்போல் வளர்ந்தார் .

அவரின் செயலில் தந்தைக்கும் மகனிற்கும் சிறு சிறு பூசல்கள் வந்த வண்ணம் இருந்தது .
மகனின் திருமணம் தன் தங்கை மகளுடன் நடக்கவேண்டும் என பத்ரதேவ் விரும்ப , கப்பீஷ்வரோ தன் நண்பனின் தங்கையான சௌந்தரம்மாளை காதலித்து பலத்த எதிர்ப்பின் பின் கரம்பிடித்தார்.

ஏற்கனவே இருந்த பூசல்கள் மொத்தமாய் வெடித்தது . எத்தனை சண்டை வந்தாலும் மகனை வெளியே அனுப்பாமல் இருந்தார் பத்ரதேவ் .

கப்பீஷ்வர் - சௌந்தரம்மாளிருக்கு கோதண்டநாகா பிறந்த பின்னும் அவரது கோபம் மறையவில்லை . இரண்டு வருடங்களுக்கு பிறகு வஜ்ரநாகா பிறந்தார் .

அந்த நேரத்தில் பத்ரதேவ் தன் மனைவியை இழந்து , மகனிடமும் வீம்பை விட்டு பேசமுடியாமல் தனிமையில் வாட , அப்பொழுது பிறந்த வஜ்ரநாகாவை அந்த ஆஞ்சநேயரே இவரின் தனிமையை போக்குவதற்காய் பிறந்தாய் எண்ணி அக்குழந்தைக்கு "வஜ்ரநாகா " என பெயர் வைத்து கொண்டாடினார் .

கோதண்டநாகா கப்பீஷ்வரின் வளர்ப்பாய் அந்த வயதிற்கேற்ப வளர ,

வஜ்ரநாகாவோ தன் தாத்தாவின் வழிகாட்டலில் அச்சிறுவயதிலே பத்ரதேவுடன் கோவில் , பக்திப்பாடல்கள் என சென்று அவ்வயதிற்குரிய குறும்புத்தனமோ , சேட்டைகளோ ஏதுமின்றி ஆஞ்சநேயர் ஒருவரை மட்டுமே சிந்தையில் வைத்து வளர்ந்தார் .

கோதண்டநாகா வும் , வஜ்ரநாகாவும் உடன் சேர்ந்து அதிகமாய் இருந்ததில்லை என்றாலும் இருவரின் மனதிலும் மற்றவர்கான பாசம் அளப்பரியது .

பல சமயங்களில் வஜ்ரநாகா தன் தாத்தாவுடன் சென்றுவிட விளையாட்டு துணைக்கு ஆளில்லாமல் கோதண்டநாகா வருந்தும் தருணங்களில் அவரிற்கு துணையாய் வந்து சேர்ந்தவள் தான் பவித்ரா .

கோதண்டநாகா வின் சிறுவயது முழுவதும் பவித்ராவுடனே கழிய அவர்களுக்கு இருவருக்கும் நடுவே அழகாய் ஓர் பாசஊற்று உருவாகியது .

நாட்கள் மாதங்களாய் மாற , மாதங்களும் வேகமாய் வருடங்களாக உருண்டோடியது .

கோதண்டநாகாவிற்கு ஜானகியை பார்த்து கப்பீஷ்வரும் - சௌந்தரம்மாளும் மணமுடித்து வைக்க ,

அத்திருமணத்திற்கு உறவுக்காரனாய் வந்த பிரபு , பவித்ராவை விரும்ப ஆரம்பிக்க கோதண்டநாகாவின் தலையீட்டில் அடுத்த சில மாதங்களில் பிரபு - பவித்ராவின் திருமணம் நடைபெற்றது .

அப்பொழுது பிரபு சேலத்தில் வேலை செய்ய அவர்கள் அங்கு தங்களின் வாழ்வை ஆரம்பித்தனர் .

இறுதிருமணங்களையும் மகிழ்வாய் பார்த்த பத்ரதேவ் அடுத்த வருடம் தன் அத்தியாயத்தை இவ்வுலக புத்தகத்தில் முடித்துக்கொண்டார் .

அவர் காலமான இரண்டு மாதங்களுக்கு பிறகு கோதண்டநாகா- ஜானகிக்கு ஆண்குழந்தை பிறந்தது .

என்னதான் பத்ரதேவ் மற்றும் கப்பீஷ்வர் இருவருக்கும் நெருக்கம் அதிகமில்லை என்றாலும் தன் தந்தையின் மேல் இயல்பான பாசம் கப்பீஷ்வருக்கு அதிகம் உண்டு . தன் தந்தையை உரித்து வைத்து பிறந்த தன் பேரனுக்கு தன் தந்தையின் பாதிப்பெயரையும் , அவரின் விருப்ப கடவுளான ஆஞ்சநேயரின் பெயரும் வருமாறு " பவன்புத்ரா " என பெயரிட்டார் .

அதற்கடுத்து தான் ஆரம்பித்தது பிரச்சனை.

தான் திருமணம் முடித்து குழந்தையும் பெற்றிருக்க தன் தம்பி இன்னும் திருமண எண்ணம் இல்லாததுபோல் இருந்ததில் தந்தையிடம் வஜ்ரநாகாவிற்கு பெண்பார்க்கும்படி சொன்னார் .

அவரும் வஜ்ரநாகாவிடம் சம்மதம் கேட்க வஜ்ரநாகாவோ திருமணத்தில் ஈடுபாடில்லை என சொல்லிவிட்டார் .

கப்பீஷ்வர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் , பின்னாளில் தனிமை துயர் தாக்கக்கூடும் என அறிவுறுத்தியும் எனக்கு அண்ணன் மகன் இருக்கிறான், அவனை என் மகனாய் வளர்ப்பேன் என சொல்லிவிட்டார் .

கூடிய சீக்கிரமே உறவுகளை துறந்து அனுமாரின் பக்தியில் தன்னை திளைத்துக்கொள்ளப்போவதாய் தான் எடுத்திருந்த முடிவை பற்றி அவர் தந்தையிடம் மறைத்திருந்தார் .

கோதண்டநாகாவோ அதை அறிந்து தான் இருக்கும் எண்ணத்திலே அவர் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாக எண்ணி , பொய்யாய் தன் தந்தையுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளிவந்தவர் , பெற்றோர்களை பார்ப்பதர்காவாது வஜ்ரநாகா தன் முடிவை மாற்றிக்கொள்வார் என நினைத்தார் .

அவர் நினைத்ததுபோலவே வஜ்ரநாகா , தன் பெற்றோர்களை தனியாய் விடமுடியாமல் , தன் அண்ணனுக்கும் தந்தைக்கும் நேர்ந்த பூசலுக்கு தானே காரணம் என்றெண்ணி அவர்களுடனே இருந்தார் .

பவன்புத்ரா மட்டும் இருவீட்டிற்கும் சென்று வர அவனும் தன் சித்தப்பாவின் வழியில் ஆஞ்சநேயரை தன் மனதில் நிறுத்த , கோதண்டநாகா தன் தம்பியை முறைத்தவாரே அவனின் பெயர் பவன்புத்ரா இல்ல இனிமே நான் என் புள்ளைக்கு புது பேர் வச்சிக்கிறேன் என்றவர்,

சண்டையிட்டு பிரிந்திருப்பதாய் வெளியில் காட்டிக்கொண்டாலும் , மகனும் தந்தையின் உறவு அதே பாசத்துடன் இருந்ததில் முதலில் பெயர் வைகப்பீஷ்வரிடம் கேட்க , அவரோ தன் தந்தை பெயரே வருவதுபோல் இந்த காலத்திற்கு ஏற்ப " பவனஜ் " என்று வைக்க சொல்ல அதுவே வீட்டில் அழைக்கும் பெயரானது .

தேடிதேடி பெயர் வைத்தவர்கள் அதன் பொருளும் அஞ்சனை மைந்தனே என அறியாது போக , அதை அறிந்திருந்த வஜ்ரநாகாவோ இன்னும் இன்னுமாய் பவன்புத்ராவின் மேல் பாசம் கொண்டார் .

***************************************************

ஏய் என்னங்கல இன்னும் மேலயவே பார்த்துட்டு இருக்கீங்க அதுலாம் பிளாஷ்பேக் முடிஞ்சிடுச்சில என பவன்புத்ரா சொல்ல , பரியா , ப்ரியா , பன்ரொட்டி மூவரும் தலை இறக்கி அவனை பார்த்தனர் .

ஏன் மாப்பு ! இதுலாம் ஒரு மேட்டர்னு இத்தனை வருஷம் பேசாம இருக்காங்களாயா என பன்ரொட்டி கேட்க ,

இடையிட்ட ப்ரியா , அண்ணா நீங்க கடைசியா கவனிக்கலையா அதுலாம் பேசமாலாம் இல்லனா . நம்ப அரசியல்வாதிங்க பத்தி தெரியும்ல . வெளிய ஒருத்தனோட ஒருத்தன் அடிச்சிக்கிட்டு தெரிஞ்சாலும் எல்லாம் ஒன்னாதான் இருப்பாங்க . அதே பாலிசி தான் இங்கையும் என சொல்ல ,

ஹாஹா சரியா சொன்னமா அதே தான் . இதுவே எனக்கு நாலு வருஷத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சிது என அவளுடன் ஹைபை அடித்துக்கொண்டான் .

பரியாவோ இவர்கள் பேச்சினுள் கலக்காமல் யோசனையை இருக்க , அவளின் காதோரம் குனிந்த பவனஜ் ,

ஏட்டி கூர்மூக்கி ! இந்த குட்டி மூளைக்குள்ள இன்னும் என்னத்த போட்டு உருட்டராவ என கேட்டான் .
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ப்ரியாவும் , பன்ரொட்டியும் இவர்களின் புறம் திரும்ப ,

பரியா , நீங்க தான் பவன்புத்ரானா காலைல ஏன் அங்க தகராறு நடக்கும்போது தட்டிகேக்கமா பயந்துபோய் விலகினிங்க ?? நீங்க போலீஸ் தான நீங்க பன்ரொட்டி அண்ணாகூட தான இருந்திங்க , ஆனா உங்க கூட வேல பாக்குற ஒருத்தர் நீங்க பிரதாப் னு ஒருத்தரோட போனதா ஏன் சொல்லணும் ?? என கேள்விகளை அடுக்கினாள் .

ப்ரியாவும் அதானே என்பதுபோல் இருவரையும் பார்க்க ,

டேய் மாப்பு என பற்களை கடித்தான் பன்ரொட்டி .
அண்ணா நீங்க எதுக்கு கோபப்படரீங்க , பிரதாப் சார் யாரு அவரும் இன்ஸ்பெக்டர் தான என பரியா கேட்க ,

ஹாஹா அவன் கிட்டயே அவன் யாருனு கேட்டா எப்படி . அதுவும் அவன்ட இப்டி கேக்குறதுல நீ 10,001- வது ஆள் .

என்ன நீங்களும் போலீசா என ப்ரியா அதிர்ச்சியாய் கேட்க ,

மாப்ள சின்னபிள்ளைகூட உன்ன போலிஸ்னு நம்பமாட்டீங்குது டா என சொல்லி சொல்லி சிரித்தான் பவனஜ் .

ஹலோ அவரை நக்கலடிக்றது இருக்கட்டும் , மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ? அப்றம் எப்பவும் எனக்கு என்னென்ன தேவைனு ஒவ்வொரு பரிட்சைக்கு அனுப்புறவரு , நான் யூபிஎஸ்சிக்கு எழுதுறப்போ எனக்கு எதுவுமே அனுப்பல ...வாழ்த்து கூட சொல்லல ஏன் என கேட்டாள் .

பன்ரொட்டி என்கிற பிரதாப்பும் , பவனஜ் என்கிற பவன்புத்ராவும் திருதிருவென முழிக்க இப்போ சொல்ல போறிங்களா இல்லையா என கத்தினாள் .

அதுஒண்ணுமில்லை பரிமா , முதல்முதலா எனக்கு உன்ன எப்போ பிடிக்கும்னுலாம் தெரில . அப்போ உனக்கு எட்டு வயசு இருக்கும்னு நினைக்கிறேன் கொலுசு வேணும்னு நீ அழுத ஆனா அப்போ அத்த உனக்கு அத வாங்கிதரல . எனக்கு நீ அழுத்ததே திரும்ப திரும்ப நியாபகம் வந்து கஷ்டமா இருந்ததா அதான் சித்தப்பு கிட்ட சொல்லி காலையிலயே போய் வாங்கிட்ந்தோம் .

அப்போ நீ கண்ணுல இன்னும் கண்ணீர் இருக்க என்ன பார்த்து ஏதோ ரோஜா மொட்டு மெதுவா மலறுறா்ல சிரிச்சா . அப்போ எனக்கு தோணுச்சு இந்த பாப்பா எப்பவும் இப்டி சிரிச்சிட்டே இருந்தா நல்லா இருக்கும்னு .

அதுக்கப்றம் நாங்க ஊருக்கு வந்துட்டோம் , உன்ன பார்க்கிறதுக்கு வாய்ப்பே கிடைக்கல ஆனா அத்த தினமும் போன் பண்ணி பேசுவாங்க . அப்டி நீ இது கேக்ற அது கேக்ற , சேட்டை பண்றனு நிறைய சொல்லுவாங்க.

அவங்க எதுனா உனக்கு வாங்கித்தர முடிலனா அப்பாகிட்ட அன்னிக்கு முழுக்க புலம்புவாங்க , நான் உடனே அலுதுபுரண்டு அப்பாவை வாங்கித்தர சொல்லிடுவேன் என அவளை பார்த்து கண்ணடித்தான் .

அதில் சி , எங்க அம்மா நல்லா என்
மானத்த வாங்கிட்டாங்கனு சொல்றிங்க என சிரிக்க ,

ஹாஹா ஆனாலும் கொஞ்ச நாள் ல அத்த அதையெல்லாம் நிறுத்திட்டாங்க . அப்றம் நானே துருவித்துருவி கேட்டுத்தான் உன்னோட ஒவ்வொரு ஆசையா நிறவேத்துவன் என சிரித்துகொண்டே சொன்னவன் ,

ஆனா நீ அன்னிக்கு போலீஸ்காக பரிட்சை எழுதுரத்துக்கு முன்னாடி தான் நான் அர்ரெஸ்ட் பண்ண ஒருத்தன் லாரி வச்சி தூக்குனதுல அடிபட்டு ஹாஸ்ப்பிட்டல்ல கிடந்தேன் .

அது சித்தப்புக்கு மட்டும் தான் தெரியும் வீட்ல எல்லோருக்கும் வேலை விஷயமா வெளிய போயிக்கேன் சொல்லிருந்தோம் .

அப்போ தான் விஷயம் கேள்விப்பட்ட அப்பா இனிமே இந்தமாறிலாம் நடக்கக்கூடாது வேலைய விட்றுனு சொன்னாரு . சொல்லப்போன இந்த போலீஸ் வேலையே எனக்கு செட் ஆகாது அவரோட ஆசைக்காகத்தான் இத படிச்சேன் , அவரே வேணாம் சொல்லினப்போ அம்புட்டு சந்தோஷம்.

எனக்கும் தான் மாப்பு ! சும்மா காதுல தேன் வந்து பாயுறாப்ல இருந்தது .

ப்ரியா அவனை விசித்திரமாய் பார்க்க , பரியாவோ தன்னவநிற்கு இப்பொழுது தான் அடிபட்டது போல் அவனை தலை முதல் கால் வரை கண்களால் ஆராய்ந்தாள்.

பவனஜ் அவளின் பார்வையின் பொருளுணர்ந்து தற்பொழுது ஒன்றுமில்லை என விழிமொழி பேசினான்.

பன்ரொட்டி ப்ரியா பார்ப்பதை உணர்ந்து , என்ன புள்ள அப்டி பாக்குற ? இவன் மட்டும் அந்த ஜோலில சேர்ந்ததுமில்லாம என்னையும்ல கூட இஸ்துன்னு போய் சேர்த்து விட்டான் . மாப்பு அவங்க அப்பருக்காக அந்த வேலையே பார்த்தா நான் மாப்புக்காக பார்த்தேன் என்றான் .

இந்த களேபரத்துல நீயும் அந்த பரிட்சையில் தேறாம போக அத்தை அந்த வேல உனக்கும் வேணாம் சொல்லிட்டாங்க .

அப்றம் நான் தான் நீ எவ்ளோ ஆசப்பட்டேனு நினைச்சி அவங்கள பேசி பேசியே ஒதுக்கவச்சு , அவங்கள சமாளிக்க நானும் வேலைய விடாம நான் சொல்லித்தரேனு சொல்லி உங்கள இந்த ஊருக்கு கூட்டியார சொன்னேன் .

அப்டி நான் துருவி துருவி கேட்டதுல தான் அத்த இப்டி வந்த அன்னிக்கே நம்ப நிச்சயத்தை வச்சிட்டாங்க நினைக்கிறேன் என சொல்லி சிரித்தான் .

ப்ரியாவும் , பரியாவும் அதை கேட்டு அப்போ நாங்க ஊருக்கு வரதே உங்க பிளான் தானா ?? அப்றம் எப்டி தெரியாத மாதிரியே நடிச்சீங்க என வியக்க ,


இதுக்கு பதில் சொல்லலாம் மாப்புக்கு நேரம் இல்லமா . மாப்பு நீ போ . அந்த வயசுல இருந்தே இந்த புள்ளைய கட்டிக்கிட தான இம்புட்டு பிளானையும் போட்டிருக்கீரு . போய் கல்யாணம் அடுத்த வாரத்துலையே வைக்கவும் எதுனா பண்ணு என நக்கலடித்தான் .

பவனஜோ அதற்க்கு பதிலாய் " எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா " மாப்ள என சொல்லி சிரித்தான் .


- பண்ணிடுவோம் ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top