• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ?? 11 ( final )

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
உன் ஓரவிழி பார்வை ஒன்றுபோதும் ...
என் உணர்வுகளை மொத்தமாய் கட்டவிழ்க்க...!!!
உன் இதழ் பூ பூக்கும் ஒற்றை புன்னகை போகும் ...

என்னை முழுதாய் உன்னுள் சுருட்டிகொள்ள ...!!!


அத்தியாயம் 11 :

“மங்கள வடிவமாக திகழும்
பெண்ணே
உன்னுடன் துவங்கும்
இல்லற
வாழ்வு எனக்கு நன்றாக
அமைய வேண்டும்.
என்னுடையனுக்கு ஜீவன
என்று உறுதி கூறி , இந்த
திரு மாங்கல்ய
கயிறை உன் கழுத்தில்
அணிவிக்கிறேன் .
என் இல்லற துணையாக ,
அணைத்து சுக
துக்கங்களிலும்
பங்கேற்று ,
நிறைந்த யோகத்துடன் நீ
என்னுடன்
நூற்றாண்டு காலம்

வாழ்வாயாக !!!!!”

- என
திருமாங்கல்யத்தை தன் கைகளில் வாங்கிய நொடி திருமண மந்திரத்தை தனக்கு தெரிந்த அர்த்தத்தில் தன் கம்பீர குரலை காதலில் குழைத்து பரியாவிடம் சொல்லிய பவனஜ் , மூன்று முடிச்சுகளில்

முதல் முடிச்சியிடும் பொழுது அவள் கண்களை பார்த்தவாரே ,
என் உடல் , பொருள் , ஆவி அனைத்தும் உனக்கு மட்டுமே சொந்தமாய் இருக்குமடி என்றவன் .

இரண்டாம் முடிச்சில் , என் அத்தனை உரிமைகளும் உணர்வுகளும் உன் உரிமையடி என உருதி அளித்து .

என் இறுதி மூச்சு இருக்கும் வரை உன் ஓவ்வொரு ஆசைகளையும் நிறைவேற்றிகொண்டே இருப்பேனடி என பொறுமையாய் ஒவ்வொரு முடிச்சிருக்கும் ஒரு வாக்குறுதி என அவளின் கண்களை பார்த்தாரே மூன்றாம் முடிச்சையும் போட்டான் .

பரியாவோ தன்னவனின் செயலில் , வார்த்தைகளில் கண்கள் கலங்க அதையும் முந்திக்கொண்டு அவனின் காதலை கண்டு அவளின் காதலும் பெருக்கெடுக்க , பவனஜ் என்கிற பவன்புத்ராவை அவளிடம் விழவைத்த விழியோர கண்ணீர்துளிகளுடனான அவளது அச்சிரிப்பை உதிர்த்தாள் .

அன்று அதில் சந்தோசம் கொண்டவனோ இன்று காதல் பெருக்கெடுக்க சுற்றியிருந்தோரை கண்டுகொள்ளாமல் அவளின் சிரிக்கும் இதழ்களை தன் இதழ்களில் புதைத்து கொண்டான் .( அடப்பாவி...இம்புட்டு நாள் நல்லாதானயா இருந்த ) .

நல்லவேளை இவன் செய்த சேட்டையை எவரும்பார்க்க வாய்ப்பின்றி , அருகில் நடக்கும் இன்னொரு திருமணத்திற்க்காய் திரும்பியிருந்தனர் .
( யாருக்கா நீங்களே பாருங்க ).

ரோஜாவண்ண கூரைபுடவையில் ரோஜாவாய் மலர்ந்திருந்த ப்ரியாவின் கழுத்தில் திருமாங்கள்யம் அணிவித்து அந்த ரோஜாப்பூவாய் தன் உரிமையாக்கினான் பவின் .

பவின் வஜ்ரநாகாவின் வளர்ப்பு மகன் , பவன்புத்ராவின் சேட்டைக்கார தம்பி , பன்ரொட்டி( பிரதாப் )யின் அடாவடி ரூல்ஸ் போலீஸ்காரன் . ஆமாங்கோ இவனும் போலீஸ் தான் . ( அவன் அவன் எக்ஸாம்ல பாஸாகாம திரிய இவனுங்க மட்டும் எப்படி பாஸானானுங்க ?? )


தன் அண்ணணை போலவே , முதல் பார்வையிலே... தன்னுயிரில் கலந்தவளின் காதோரமாய் ...

" உன் ப்ரியா என்னும் பெயருக்குறிய பொருளான பிரியங்கள் அனைத்தையும் என்னுடன் கொண்டு என் பெயரின் அர்த்தமாய் என்னை மொத்தமாய் உன்னிடம் அர்ப்பணிக்கிறேன் " என சொல்லியவாரே அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் .

[ பவின் - அர்ப்பணிப்பு ,
ப்ரியா - ப்ரியம் ]


அன்று பவன்புத்ராவிற்கும் - பரியாவிற்கும் நிச்சயம் நடந்த தினம் முழுக்க , அம்மாக்கு ரெண்டு அண்ணா இருக்காங்க . ஒருத்தரோட புள்ள உனக்கு , ஒருத்தர் புள்ள எனக்குன்னு கனவுலாம் கண்டது வீணா போச்சே என விளையாட்டை அழுதவாறு ப்ரியா ப்ரியாவிடம் புலம்ப ,

ஹாஹா ஹாஹா என்ன சொன்ன ரெண்டுப்பையன்ல ஒருத்தன் அவளுக்கு , ஒருத்தன் உனக்கா என கேட்டு பவனஜ் மீண்டும் சிரிக்க ,

ம்ம்ம் ...இந்த புள்ள தலையெழுத்தை இனி யாராலயும் மாத்தமுடியாது என முனங்கிய பன்ரொட்டி , ஏல மாப்பு இன்னும் என்ன இங்கனவே நிக்குறவ. கையோட கையா அதையும் முடிச்சிவிடப்பு என சொன்னான் .

சரிதான் பன்னு , மச்சினிச்சி வருத்தப்பட்டா எந்த மாமனுக்காச்சி பொறுக்குமா என விளையாட்டாய் கண்சிமிட்ட ,

இவர்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் பரியா முழிக்க ,

நம்மளே நம்பளுக்கான ஆப்பு எதையாவது தேடிக்கிட்டோமா என ப்ரியா யோசித்துக்கொண்டிருந்தாள் .


அப்பொழுது அண்ணா என கத்திகொண்டே ஒருவன் கதவை திறக்க , அவன் திறந்த வேகத்தில் அதன் மேல் சாய்ந்திருந்த ப்ரியா விழப்போக அவளை விழாமல் தாங்கிப்பிடிக்க அங்கு ஓர் காதல் உலகின் வாசல் திறந்தது .அதற்க்கு பின் சிறுசிறு குறும்புகளுடன் அவர்களது காதல் உலகத்தில் மகிழ்வாய் உலவினர் .

பவன்புத்ரா - பரியாவிற்கு திருமண தேதி குறிக்கும் நேரத்தில் பவின்-ப்ரியாவின் விஷயம் பவன்புத்ராவால் பெரியவர்களிடம் சென்றது .

பவித்ரா தன் அண்ணண் மகன்களுக்கு தான் தன் பெண்கள் என அவர்களின் சிறுவயது முதலே எண்ணியிருந்ததால் மகிழ்ச்சியாய் தலையசைத்தார் .

பிரபுவோ , மனைவியின் ஆசை புரிந்திருந்தும் தன் மகள்களின் மனத்திற்க்கே முதலிடம் கொடுத்திருக்க , அவரும் ப்ரியாவின் விருப்பம் அறிந்து சரி என்றிருந்தார் .

பவித்ராவின் ஆசைப்படி , பவன்புத்ரா - பரியா மற்றும் பவின் - ப்ரியா இருவரின் திருமணமும் இன்று ஒரே மேடையில் அடுத்தடுத்து நடக்கிறது .


********************************************************

இரண்டு வருடங்களுக்கு பின் :


வயதானவர் என்றும் பார்க்காமல் அவரின் நிலத்திற்காய் அவரை கொன்ற மருதன் என்றவனை கைது செய்ய ஏசிபி பவன்புத்ரா தன் படையுடன் வந்திருந்தான் .

மருதன் சிறு சிறு திருட்டு , வழிப்பறி என ஆரம்பித்து கொலைகளையும் அசால்ட்டாக செய்ய இப்பொழுது அவன் பெயர் போலீசின் என்கவுண்டர் லிஸ்ட்டில் உள்ளது .

அவனும் அவனின் ஆட்களையும் போலீஸ் வளைத்திருக்க , தப்பிக்கும் முயற்சியில் அங்கு ஒரு சிறு போர் நடந்தது .

வழக்கம்போல் சிறிதும் பதறாமல் , தன் பாணியானா பிடித்த படத்தை ரசித்து பார்பதுபோலான உடல்மொழியுடன் தனது பைக்யை நிறுத்தி , அதன் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் பவன்புத்ரா .

அவ்வூரிற்கு வேறொரு பஞ்சாயத்திற்காய் வந்திருந்த பரமேஷ் இதனை கண்டு , " ஆத்தாடி இவனா " என்ற கேள்வியுடன் அன்று போல் இன்றும் மறைந்திருந்து பார்த்தான் .

அவனுடன் வந்திருந்த கைத்தடி ஒருவன் , யாருன்னா இவன் என சத்தமாய் கேட்க ,

அவனின் வாயை மூடியவன் , மெதுவா பேசுடா அவனுக்கு கேற்ற போது என பயத்தில் தந்தியடிக்கும் பற்களை கடித்து , அவன் இருக்கான் பாரு அவனோட நிழல் கூட ஒருத்தன் மேல படாது ஆனா அம்புட்டு பேரையும் அப்படியே போட்ருக்க துணிலயே ***போக வச்சிருவான்டா .

பவன்புத்ரா அன்று போல் இன்றும் தன் அருகில் நின்ருந்தவனிடம் ( பிரதாப் அதுதாங்க நம்ப பன்ரொட்டி ) , ரொம்ப இழுக்குதோ முடிச்சிவிட்ரலாமா என ஒற்றை புருவத்தை தூக்கி கண்காட்டினான் .

பன்ரொட்டி (எ) பிரதாப் தன் பின் சைகை செய்ய ,அடுத்த நொடி அங்கு ஒரு மாருதி வந்து நின்றிருந்தது .

அய்யயோ வந்திடிச்சிடா எமனோடே வாகனம் என அலறிய பரமேஷ் அதற்குமேல் அங்கிருக்காமல் தன் கைத்தடியுடன் மெதுவாய் ஓட , பவனஜ் (எ) பவன்புத்ரா மருதனை தூக்கி வண்டியில் போட்டு கிளப்ப மறுபக்கம் பன்ரொட்டி ஏறிக்கொண்டான் .

சிறிதுநேரம்கழித்து மருதனின் உடல் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருக்க வெறும் சடலமாக அவ்வூரின் முடிவில் எறியப்பட்டது .

********************************************************

"கொடூரமான குற்றவாளியாய் அறிவிக்கப்பட்டு போலிஸாரால் தீவிரமாய் தேடப்பட்ட ரௌடி மருதனை என்கவுண்டர் செய்தார் ஏசிபி பவன்புத்ரா "

- என மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது .
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
அப்பா ...அப்பா என பவன்புத்ராவின் புகைப்படம் பத்திரிக்கையில் வந்திருப்பதை தட்டிf தட்டி பவன்புத்ரா - பரியாவின் இரண்டு வயது மகன் ருத்ரபவன் சிரிக்க ,

அவனின் அருகில் சௌந்தரமாளின் மடியில் இருந்த ஒரு வயது கவினும் எதர்கென்றே தெரியாமல் தன் அண்ணனுடன் சேர்ந்து சிரித்தான் .

அடஅட என்ற மவன் எம்புட்டு அழகா சிரிக்கிறாப்ல என பவன்புத்ரா , ருத்ரபவனை தூக்க அவனோ தந்தையின் அருகிலிருந்த பன்ரொட்டியிடம் தாவினான் .

ஹாஹா என்ற மாப்பு போலவே , சின்ன மாப்புக்கும் என்ற மேல தான் பிரியம் ஜாஸ்த்தி . நீ ஒன்னும் கவலை படாத சௌந்தர்யா, உன்னோட ரசிகர் கூட்டத்துல எப்படி ஆள் சேக்குறன் பார்த்தில என அமைதியாய் இருந்த அப்பத்தாவை வம்பிழுக்க ,

எவண்டா அவன் என்ற சௌ - வ ஓரண்ட இழுக்கிறது என கேட்டுகொண்டே கப்பீஷ்வர் மேசையை நீவியபடி அங்கு வர ,

மாப்பு ! மீசை வந்துடுச்சுடோய் நான் இப்டியே எஸ் ஆவுறன் என்றவன் , அருகில் நின்றிருந்த பரியாவிடம் , ஏந்தாயி ராவுக்கு கருவாட்டுக்குழம்பா வாசம் தூக்குது , பின்பக்கமா வாரேன் கொஞ்ச ஊத்திதாத்தா என்றான் .

அவனை வெளியே செல்லவிடாமல் அவன் முன் வந்த கோதண்டநாகா , அவனையும் பவன்புத்ராவையும் சந்தேகமாய் பார்த்தார் .

அப்பொழுது அங்கு வந்த ப்ரியா , அக்கா....நியூஸ் பாத்தியா நான் தான் எங்க பேப்பர்ல அத்தான பத்திதான் முதல் பக்கத்துல போடணும்னு சொன்னேன் என மகிழ்வாய் அவளை கட்டிக்கொண்டவள் ,

தன் பின் வந்த பவினை பார்த்து , இங்க பாரு கா எப்டியோ நீ பாஸாகி போலீசாகிட்ட . நம்ப அத்தான் மாதிரி அட்டகாசமான போலீசா இருக்கனும் , பவின் மாறி காமெடி போலீசா இருக்க கூடாது என வழக்கமாய் அவனை வம்பிழுக்க சொல்வதை சொல்லி ஓடத்துடங்க , பவின் அவளை விரட்டிக்கொண்டு சென்றான் .
எப்படியும் குறும்பாய் ஆரம்பித்த அவ்விளையாட்டை காதலாய் முடிப்பது பவினிற்க்கு கை வந்த கலை.

கோதண்டநாகா இன்னும் சந்தேகமாய் மகனை பார்த்து பவுனு என்றழைக்க அங்கு
அண்ணா என அழைத்துகொண்டே வந்தார் வஜ்ரநாகா .

தம்பியின் கண்ணசைவில் என்ன கண்டுகொண்டாரோ அதன் பின் ஜானகி என தன் மனைவியை அழைத்தவாறு அங்கிருந்து சென்றார் .

அன்று பவன்புத்ராவிற்கு அடிப்பட்டதில் தனக்கு பிடித்தமான அவனது வேலையையே விடவேண்டும் என கோதண்டநாகா சொல்ல , வஜ்ரநாகா தான் பார்த்துக்கொள்வதாய் சொன்னவர் , பதிலிற்கு இனிமே அதை பற்றி அவர் பேசவோ கேட்கவோ கூடாதென்ற வாக்கை வாங்கியிருந்தார்.


அதை எண்ணியே தற்பொழுது கோதண்டநாகா அமைதியாய் செல்ல , பன்ரொட்டியிடம் இருந்த தன் மகவை வாங்கிக்கொண்டு பரியாவும் , கவினை தூக்கி கொண்டு சௌந்தரம்மாளும்அவரவர் வேலையை பார்க்க சென்றனர் .

இப்பொழுது அங்கு பவன்புத்ரா , பன்ரொட்டி மற்றும் வஜ்ரநாகா மட்டுமே இருக்க ,

பவன்புத்ராவும் , பன்ரொட்டியும் " சித்தப்புஉஉஉஉ " என கத்திகொண்டே வஜ்ரநாகாவை கட்டிக்கொண்டனர் .

அவர்கள் மூவரின் எண்ணங்களும் ஒரே கோட்டில் சென்றது ...


அந்த மாருதி வேனில் மருதனை தூக்கிப்போட்டு பவன்புத்ரா வண்டியை எடுக்க, பின்புறம் இருந்த தடியன்கள் நால்வரும் மருதனின் மேல் பாய , முன் அமர்ந்திருந்த பவன்புத்ராவும் , பன்ரொட்டியும் ,

மாப்ள நம்பளுக்கு இந்த போலீஸ், அதிரடிலாம் சுத்தமா செட்டாவாதுல. இந்தா ஹெட்செட்டே புடி அந்த கும்கி படத்தை போடுல பாப்போம் என்று பவன்புத்ரா சொல்ல ,

மாப்பு ! போன தடவ தான அது பார்த்தோம் இப்போ ராஜாராணி பார்ப்போம் மாப்பு என்றான்.( டேய் நீங்க ரெண்டு பேரும் ***டிவி ரசிகர்களா டா ) .

அன்றைய நியாபகத்தில் , அந்த ஐடியா கொடுத்த வஜ்ரநாகாவை கட்டிக்கொண்ட இருவரும் அவரின் இருகன்னத்திலும் முத்தமிட்டனர் .

அட விடுங்கப்பு ...விடுங்க என இருவரையும் விலக்க ,

அங்கு திரும்ப வந்த கப்பீஷ்வர் இதை கண்டு , ஏலே என்ற மவன என்னல பண்றீங்க என கேட்டுகொண்டே இருவரின் முதுகிலும் தட்டினார் .

ஏன் பவன்புத்ரா கண்ணு , நம்ப பவினுக்கும் நீ செய்றாப்ல இந்த போலீஸ் ஜோலிய செய்ய காதுகுடுக்கண்ணு என அவனை பற்றி அறியாமல் மீசையை நீவியவாறு சொன்னார்.

பன்ரொட்டி , அட மீசை ! அவன் ஒருத்தன் தாம்யா ஒழுங்கா வேலைய பாக்குறவன் . அவனையும் எங்க கூட்டுல சேர்க்கணுமா . இந்த போலீஸ் வேல இவங்க குடும்பத்துல மாட்டிகிட்டு பட்றபாடு இருக்கே ஐயையோ என மனதினுள் நக்கலடித்தான் .

பவனஜ் தாத்தையா சொன்னதை கேட்டு- மாப்ள என்றழைக்க,

பதிலுக்கு பன்ரொட்டி மாப்பு என்றழைக்க ,

இருவரும் வஜ்ரநாகாவின் கையணைப்பில் இருந்தவாறு கோரஸாய் கப்பீஷ்வரிடம் , " எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா " என்றனர் .



- சுபம் .
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
nice ending:love::love:(y)(y)... nalla irukku... perla oru eluthu maarinaalum charactere maaridum adhu oru confuse aagama kondu poitteenga author ji... intha pottiyala win pannrathukku all the best ji (y)(y)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யமுனா டியர்
 




Last edited:

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Nice end dear, comedy ye varathu solli solli full comedy yave kadhai kondu poi erukeenga dear. Peru muthala padikkum pothu confuse ahgura mathiri erunthathu, pera vachu dhan kadhai poga poga dhan purijuthu.
All the best dear
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
nice ending:love::love:(y)(y)... nalla irukku... perla oru eluthu maarinaalum charactere maaridum adhu oru confuse aagama kondu poitteenga author ji... intha pottiyala win pannrathukku all the best ji (y)(y)
??????thanks for ur support ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top