• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ? 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
அடித்து கொள்வோம் ... பிடித்து கொள்வோம் ... இடையில் வருபவரை முறைத்தே கொல்வோம்.......
-அக்கா தங்கை உறவு



அத்தியாயம் 2:

உனக்கு அதிரசம் சுட தெரியுமென்றதே எனக்கு இப்போ தான்மா தெரியும் என அப்பாவியாய் சொல்லிய கணவனை எரித்து விடுவது போல் பார்த்த பவித்ரா ,முதல்ல உங்க செல்ல பொண்ணுங்களுக்கு போன போட்டு எப்ப வராளுங்கனு கேளுங்க . அத விட்டுட்டு வெட்டிபேச்சி பேசிட்டு இருக்கீங்க என அதட்டிவிட்டு மீண்டும் உள்ளே சென்றார்.

இவளாதான ஆரம்பிச்சா நான் சிவனேனு தான இருந்தேன் . ஆனாலும் நம்ம பொண்டாட்டி சரியான கேடி , எப்படி நான் கேட்டது காதுலயே விழாத மாறி பேசிட்டு போறா பாரு என புலம்ப ஆரம்பிக்க என்ன அங்க சத்தம் என்ற மனைவியின் கேள்விக்கு , நம்ப பொண்ணு கிட்ட பேசிட்டி இருக்கேன்மா என சொல்லியவர் அதை உண்மையாக்க போனில் தனது பெரிய மகளின் எண்ணை அழுத்தியவாறு அங்கிருந்து நகர்ந்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஹாலிற்கு வந்த பவித்ரா அங்கு இன்னும் மகளுடன் பேசியவாறு இருந்த கணவனை கண்டு போனை கேட்க அவரோ கவனிக்காததை போல் வேகமாய் பேசி அணைத்தார்.

எதுக்கு இப்போ வேகமா போனை அணைச்சிங்க என ஆரம்பிக்க .

பிரபுவோ , பவி்மா இந்த மாமனையே சந்தேக பட்றியா என அப்பாவியாய் கேட்டார் .

ஓஒ சாருக்கு அப்படி ஒரு நினைப்பு வேற இருக்குதோ ஒழுங்கா பேச்சை மாத்தாம உங்க பொண்ணு எதுக்கு உங்களுக்கு இவ்ளோ நேரம் பவுடர் போட்டானு சொல்லுங்க . ( ஏன் சோப்பு தான் போடணுமா நாம பவுடர் போடுவோம் ).

ஹீஹீ அது ஒண்ணுமில்ல பவிமா , நம்ம பரி்குட்டிக்கும் , பிரி்குட்டிக்கும் போன வேலை இன்னும் முடியலையாம்டா. அதனால நாம முதல கிளம்பி போவோம் சரியாடா.

என்ன பேசுறீங்க அவங்க ரெண்டு பேரும் எப்படி தனியா வருவாங்க ?. என்ன இந்த மாதிரி பேச சொல்லி அந்த பெரிய கழுதை சொல்லி குடுத்துச்சா . அவளுங்க இதுக்கு முன்னாடி விவரம் தெரிஞ்சு எப்ப அந்த ஊரை பார்த்திருக்காளுங்க ? அப்பறம் எப்படி தனியா வருவாங்க ? அவ தான் அறிவு கெட்டதனமா சொன்னா .. அப்பாவா நீங்க எடுத்து சொல்ல வேணாமா என மூச்சி கூட விடாமல் பேசினார் .

பதிலுக்கு எதுவும் பேசாமல் பிரபு விறுவிறுவென உள்ளே செல்ல அவரின் செயலில் கோபமா போறாரோ நானும் இன்னிக்கு ரொம்ப பேசிட்டேன் . எப்பவும் கோவமே பட மாட்டாரு இப்போ கோவமா போறாரு எல்லாம் என்னால என தன்னையே திட்டி கொண்டிருந்தவரின் முன்பு சொம்பு தண்ணியை நீட்டினார் பிரபு .

மூச்சவிடமா பேசுனதுல ரொம்ப தாகமா இருக்கும் இந்தா குடி என சொல்லியவரின் முகம் அமைதியாய் இருக்க , விழிகளோ குறும்பில் மிளிர்ந்தது .

கணவரின் செயலில் சிரித்தவர் , அவரை நெருங்கி தோளில் சாய்ந்தவாறு நான் எப்போவோ எந்த ஜென்மத்திலோ பண்ணிய புண்ணியம் தாங்க நீங்க எனக்கு கிடைச்சிருக்கீங்க . ஆனா நான் உங்கள மதிக்கறதே இல்லல, நானும் ஒவ்வொரு முறையும் மாத்திக்கதாங்க நினைக்கிறேன் . ஆனா அது ஏதோ நடிக்கிற மாதிரி இருக்கு என்னை மன்னிச்சிடுங்க என்றவரின் கண்கள் கலங்கிருந்தது.

அவரின் முகத்தை தன் கையில் தாங்கிய பிரபு அடடா என் பவி்மாக்கு இன்னிக்கு என்னவோ ஆயிடுச்சி . ஒருவேளை அண்ணனைப் பார்க்க போறதால செண்டிமெண்ட் மோட்க்கு தாவுறாங்களோ என கிண்டலாய்க் கேட்டு எனக்கு என் பொண்டாட்டி இப்டி இருக்குறது தான்டா பிடிச்சிருக்கு என அவரின் நெற்றியில் காதலாய் முத்திரை இட்டார் .

ச்சு என சிணுங்கியவர் , சரி சரி அதிரசத்துக்கு தேவையானதுலாம் வாங்கிட்டு வாங்க . நாம நாளைக்கு சாயந்தரம் கிளம்புற மாதிரி டிக்கெட்ட மறக்காம போடுங்க என்றார் .

ரெண்டுபேர்க்கா அப்போ பொண்ணுங்க?
அதான் கூடுகளவாணிங்களா மூணு பேரும் சேர்ந்து எதுனா திட்டம் போட்டுஇருப்பீங்களே .

ஹீஹீ ஒண்ணுமில்லமா பாப்பாங்க வேல முடியல அதுமில்லாம கொஞ்சம் பொருள் வாங்க வேண்டி இருக்காம். அவங்க எப்படியும் உங்க ஊர் வழியா தான் வரணும் அதனால அவங்க நேரா அங்கயே வந்திருவாங்க.

எதுக்குங்க இப்போ என்கிட்ட ஒப்பிச்சிட்டு இருக்கீங்க அதான் முன்னடியே எல்லாம் திட்டம் போட்டு பண்றீங்களே .

அதில்லைமா என பிரபு ஆரம்பிக்க .

மூச்...வேலைக்கு போற எண்ணம் இருக்கா இல்லையா. இன்னும் ஒரு மாசம் கிட்ட வரமாட்டோம் அதுனால போய் வேலைய பாருங்க என்ற பவித்ரா தன் வேலையை பார்க்க சென்றார்.

பிரபு வங்கியில் மேலாளராய் பணிபுரிய , பவித்ரா ஆசிரியராய் பணிபுரிகிறார் .பிரபுவின் வேலை காரணமாய் அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு மாறிக்கொண்டிருக்க அங்கு அருகில் இருக்கும் பள்ளிகளில் வேலை பார்த்து வந்த பவித்ராவிற்கு தனது ஊருக்கு செல்ல இதுவரை வாய்ப்பே அமையவில்லை.

பிரபு - பவித்ரா தம்பதியர்க்கு இரண்டு மகள்கள் - பரியா , ப்ரியா.

இருவருக்கும் இடையில் இரண்டு வருட வித்யாசம் இருந்தாலும், பார்ப்பவர்கள் இரட்டையர்களோ என எண்ணும் அளவிற்கு உருவிலும் செயலிலும் அவ்வித்தியாசம் சிறிதளவே இருக்கும்.

தைரியத்தின் மறுவுருவாய் இருக்கும் பரியா காவல்துறையில் சேர நினைக்க தாயிடம் இருந்து வந்த ஆட்சயபனையில் அதை சிறிதே மாற்றி மாவட்ட ஆட்சியாளர் ஆவதே குறிக்கோளாய் கொண்டு அதற்க்கு தயார் படுத்திக்கொண்டிருக்கிறாள் .

பிரியாவோ பத்திரிக்கைதுறையில் நுழைந்திருந்தாள்.

அவளின் வேலைக்காகவே இருவரும் தேனி மாவட்டம் வரை சென்றுள்ளார்கள் .

.......................................................................................................................................

அக்கா இப்போ எதுக்கு இவ்ளோ கோபமா முகத்தை வச்சிருக்க என கேட்ட பிரியா அன்று மலர்ந்த ரோஜா பூவாய் பூத்திருக்க அவளின் முகத்தில் இருக்கும் பருக்களோ ...ரோஜா இதழ்களில் உறவாடும் பனித்துளிகளை நினைவூட்டியது .

பின்ன , அந்த பனிக்கரடி பரத் பண்ண காரியத்துக்கு என்னை ஈஈனு இளிச்சிட்டு வரசொல்றியா என கடுகடுத்த பரியாவோ தன் இருக்கும் இடம் முழுவதும் வாசம் பரப்பி அனைவரின் மனதையும் வசம் செய்யும் மல்லிகை பூவை ஒத்திருக்க , அவளின் வெள்ளை நிறம் தற்போதைய கோபத்தால் சற்றே சிவந்திருந்தது .

அச்சோ அக்கா அதான் அவனை அங்கயே அந்த அடி அடிச்சிட்டல . இப்போ கொஞ்சம் சிறியேன் இல்லனா உன் முகத்தை பாக்க சகிக்கல என்று அவளின் இடையில் சிறுகுழந்தையை போல் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்தாள்.

கண்களில் கண்ணீர் வழிய அவள் சிரிப்பதை கண்ட பின்பே விட்டவள் , ஆமா அக்கா அந்த பக்கி பரத் பண்ணதுக்காகவா இப்டி அவசர அவசரமா அங்க இருந்து கிளம்புன . சரி கிளம்புனதுதான் கிளம்புன , நம்ப வீட்டுக்கு போறத விட்டுட்டு எதுக்கு இப்போ அம்மாவோட ஊருக்கு கூட்டிட்டு போற.


தங்கையின் கேள்விக்கு இதழ்களில் தோன்றிய கள்ள சிரிப்புடன் , ப்ரி குட்டி இன்னிக்கு வீட்டுக்கு போனா நாளைக்கே திரும்பி இங்க தான எல்லோரும் வரப்போறோம் .எதுக்கு அந்த காவிகாரனுக்கு காச அழணும் .

அக்காவ் .....தயவு பண்ணி உன் திருவாய கொஞ்சம் மூட்ரியா . எதெதுக்குலாம் பேர் வைக்கிறத்துனுயில்ல .

முறைத்த தமக்கையை பார்த்த தங்கையவளோ, எதுக்கு இப்போ அந்த கண்ண போட்டு உருட்ற . பின்ன எந்த லூசாவது ட்ரெயின்க்கு செல்ல பேர் வைக்குமா பக்கி பக்கி அதும் உருப்படியா வச்சிருகியா.

ஏன் நான் வச்ச பேருக்கு என்னடி குறை.

பேரா அது ...காவிகாரனாம் . இப்போ நாடு இருக்க நிலைமையில எவனா இத கேட்டு தொலைச்சா என்ன பண்றது என இன்னும் என்னன்னவோ வார்த்தைகளை கோர்த்து அர்ச்சனை செய்தவள் தான் முதலில் கேட்ட கேள்வியை மறந்திருந்தாள்.

இருவரும் சற்று நேரம் முன்பு தான் மன்னவனூரின் அருகில் இருந்த ஊரில் இறங்கிருந்தனர் . அவர்கள் ஏறிய பேருந்து சற்று முரண்ட அந்த ஊரினிலே அவர்கள் இறங்க வேண்டியதாயிற்று .

தங்கையின் வசவு சொற்களை காதில் வாங்காமல் , முதல் முறையாக கிராமத்தின் வாசம் தன் கண்களையும் ,மனதையும் வசம் செய்ய அதை அனுபவித்தபடி வந்துகொண்டிருந்தாள் பரியா .

அந்த அதிகாலை பொழுதில் இவர்கள் நடந்துகொண்டிருந்த இடம் ஒதுக்குபுறமாக இருக்க அருகில் இருந்த தோப்பினுள் இருந்து வந்த சத்தத்தில் முதன்முறையாக கிராம சூழ்நிலைக்கு வந்திருந்தவர்கள் என்ன என்று அறியாமல் முழித்துக்கொண்டு அங்கயே நின்றிருந்தனர் .

￰சற்றுநேரத்திலயே அது காற்றின் இசையும் , தண்ணீரின் சலசலப்பும் என கண்டு கொண்டவர்கள் முகம் முழுக்கு ஆர்வம் பூச ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வேகமாய் உள்ளே நுழைய , அங்கு இருந்தவர்களை கண்டு சற்றே பின்வாங்கி அருகிலிருந்த மரத்தின் பின் ஒளிந்தனர் .

அக்கா.... இந்த இடத்தோட சொந்தக்காரங்கபோல கா , வந்த முதல் நாளே எதுக்கு வம்பு வா போலாம் என ப்ரியா சொல்ல , தங்கைக்கு இசைவாய் தலையசைத்து பின் செல்ல கால் வைத்தவள் , அவர்கள் பேசியதில் சட்டென்று மீண்டும் அதே இடத்தில் நின்றாள்.

டேய் எருமைங்களா , எவண்டா அவன் பவன்புத்ரா....பெரிய இது மாதிரி போனீங்க இப்போ என்னனா , அவன் வந்துட்டான் அதான் ஒன்னும் பண்ணமுடிலனு வந்து நிக்குறீங்க . அந்த நாய
போட்டித்தள்ளிட்டு சொன்னத செய்ஞ்சிருக்கவேணாமா என தன் முன் நின்றிருந்தவர்களை காய்ச்சிக்கொண்டிருந்தார் பத்மகேசன் , உருவத்தில் பெரும் மலை போல் இருப்பவர் ... அந்த ஊரில் அரசியல் செல்வாக்கு பெற்றவர்.

பரியா மீண்டும் நின்றதை கண்ட ப்ரியா , சத்தம் வாரா வண்ணம் என்னாச்சி என கேட்க.

பரியாவின் இதழ்களோ "பத்ரா " என முனங்கியது.

அவளின் முனங்கல் இவளின் காதில் விழாமல் போக , என்னக்கா இன்னும் என்ன என பரியாவின் கைகளை பற்றி இழுத்தாள் .

அப்பொழுது பத்திரிக்கை துறையில் இருப்பதால் இயல்பாய் இருக்கும் எச்சரிக்கை உணர்வில் தங்களின் பின் எவரோ வரும் ஓசை கேட்க ...தமக்கையை இழுத்து அருகிலே சற்று பெரியதாய் இருந்த மரத்தின் பின் மறைந்தாள் .

பரியாவோ இதை எதையும் கவனிக்காமல்
பதமகேசன் பேசுவதையே உற்று கவனித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் செயலில் ஏன் இப்படி என்ற கேள்வி ப்ரியாவிற்கு தோன்றினாலும் ...தமக்கையை பின்பற்றி அவளும் நடப்பதை கவனித்தாள்.

அனைவரையும் வார்த்தைகளால் விளாசி கொண்டிருந்த பத்மகேசன் முன் வந்து நின்றான் பரமேஷ் , அவரின் வலது கை .

என்ன அண்ணா எதுக்கு இவ்ளோ கோபமா இருக்க என கேட்டான் பரமேஷ்...

என்னடா தெரியாதமாதிரி கேக்க என பதிலுக்கு உறுமினார் பத்மகேசன் .
அவரை ஒரு பார்வை பார்த்தவன் திரும்பி , மற்ற அனைவரையும் போகச்சொல்லி தலையசைக்க அனைவரும் குனிந்த தலையுடன் கலைந்தனர் .

அனைவரும் வருவதை பார்த்து இன்னும் மரத்தோடு ஒன்றிய சகோதரிகள் இவர்கள் இருவரும் பேசுவதை ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர் .

எதேச்சையாக கிடைத்த வாய்ப்பை பத்திரிக்கைகார மூளை விட்டுவிடுமா என்ன என மெதுவாய் கேட்ட ப்ரியா தன் அக்காவை பார்க்க , அவளோ இவள் இருப்பதையே கண்டுகொள்ளாமல் அவர்களையே பார்த்திருந்தாள்.

இவ எதுக்கு இப்போ இப்டி இவங்கள சைட் அடிக்கிற மாதிரி பாத்துட்டிருக்கா என நினைத்துகொண்டே, இவர்கள் பேசுவதை தன் பையில் இருந்த ரெக்கார்டர் மூலம் பதிவு செய்ய ஆரம்பித்தாள் .
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
எல்லோரும் சென்ற பின் பரமேஷ் , அண்ணா உனக்கு நட்டு சங்கர தெரியும் தான.

ம்ம்ம்...யார சொல்ற சமயத்துல சம்பந்தமே இல்லாம பாக்குற எல்லோரையும் நட்டு கழன்றவன் மாதிரி போட்டு தள்ளுவானே அந்த சங்கரா ?

ஆமா அண்ணா ... அவனே தான் என்றவனின் பேச்சில் குறுக்கிட்ட பத்மகேசன் ,

டேய் அவன மறக்க முடியுமாடா ....அதும் அவன் செத்ததை இன்னுமே நம்ப முடில. இவனே பைத்தியம் மாதிரி பாக்குறவனலாம் மூச்சுவிடறதுக்குள்ள போட்டுத்தள்ளுவான் .அவனயே ஒருத்தன் நடுரோட்டுல கொன்னு போட்டுருந்தானே அப்ப்பப்ப்பா என வியந்து போய் சொன்னவர் , அதை அடுத்து பரமேஷ் சொன்னதில் ஒரு நொடி அவரின் இதயமே நின்றது போல் ஆனார் .

பத்மகேசன் மட்டுமல்லாது அவன் சொன்னதை மறைவாய் நின்று கேட்டுக்கொண்டிருந்த சகோதரிகளில் , பரியாவின் உடலும் அதிர்ச்சியில் உறைந்தது .

பத்மகேசன் நட்டு சங்கர் இறந்ததை பற்றி சொல்லிக்கொண்டிருந்த பொழுது இடையில் குறுக்கிட்ட பரமேஷ் , அந்த நட்டு சங்கர போட்டதே இந்த பவன்புத்ரா தான் அண்ணா என சொல்லிருந்தான் .

அவனின் இந்த வார்த்தையிலயே,

அவன் வெறும் போலீஸ் தான என பத்மகேசனும் ,
பத்ராவா ...இது எப்படி உண்மையா இருக்கமுடியும் என பரியாவும் அதிர்ந்திருந்தனர் .



சகோதரியுடன் ஒட்டியவாறு நின்றிருந்ததால் அவளின் அதிர்ச்சியை கண்டுகொண்ட ப்ரியா , இவ கண்ணுமுன்னாடி கொலை நடந்தாலே அசால்ட்டா இருப்பா . இப்போ , எவனோ எவனோட சாவுக்கோ காரணம்னு சொன்னதுக்கு எதுக்கு இம்புட்டு ஷாக் ஆகுறா ??

அவர்கள் அதிர்ச்சியாய் நின்றிருந்த வேளையில் இதை யோசித்துக்கொண்டிருந்த ப்ரியா , தற்பொழுது அந்த இருவரையும் கவனிப்பதை விட்டுவிட்டு , அவர்கள் பேசுவதற்கு தன் தமக்கையின் முகம் காட்டும் வர்ணஜாலங்களை ஆராய முற்பட்டவளின் செவிகளை இம்முறை பலமாய் தீண்டியது , பரியாவின் இதழ்கள் முணுமுணுத்துக்கொண்டிருந்த "பத்ரா " என்னும் சொல்.



-பண்ணிடுவோம்.
 




Last edited:

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super...???
Sister pala mozhi arumai....??
Neeyuma baby.... Kavi karana vambu pannara...??
Pari, pri nalla iruke...???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top