• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ?? 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ஒற்றை சந்திப்பில் ,ஒரே ஒரு பார்வையில்... தன் ஆயுள் மொத்தத்தையும் ஒருவருக்காய் அர்ப்பணிக்க தூண்டுகிறது
காதல் என்னும் மூன்றெழுத்து மந்திரம் ...!!



அத்தியாயம் 9 :

ஏல திடிர்னு இந்த அம்மா எதுக்குல வரசொல்லுச்சி என பின் அமர்ந்திருந்த பன்ரொட்டியிடம் கேட்டவாரே வீடை நோக்கி வண்டியை
ஓட்டினான் பவனஜ்.


காற்றிற்க்கும் அவனின் மேல் ஆசையோ என்னவோ அவனின் முன்னுச்சிமுடியை செல்லமாய் கலைத்து சென்றது .

மாப்பு மொதல்ல இந்த ஹெல்மெட் அ போடுல . இன்னிக்கு அந்த போலீஸ்க்காரன் கூடவே இருப்பான்ல . யாருக்குதெரியும் இப்பவே நம்ப முன்ன வந்து குதிச்சாலும் குதிப்பான் . நீ இந்த ஹெல்மெட் போடாம ஒட்றதை பார்த்தா ஒரு சொற்பொழிவை ஆத்தாம போமாட்டான்ல .

ஆனா மாப்ள என் தம்பிய பத்தி என்கிட்டயே இப்டி பேசுறியே உனக்கு ஏத்தம் கூடிடிச்சில என பன்ரொட்டியை சொன்னாலும் அவனின் கை தானாய் ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டியது .

அக்கா ! அங்க பாரு அது பன்ரொட்டி அண்ணா தான ,அப்போ முன்னாடி உட்கார்ந்துட்டு போறது பவனஜ் அத்தான்னு நினைக்கிறேன் என தங்களை கடந்து சென்றவர்களை பார்த்து சொன்னாள் ப்ரியா .

ஏய் என்னடி புதுசா அத்தானுலாம் சொல்ற.

அது ஒண்ணுமில்லை கா ...ரெண்டு பேர்ல யார் உனக்குன்னு இன்னும் முடிவாகலயே . அதான் முன்னடியே கூப்ட்டுவைப்போம்னு தான்.

அவளை முறைத்த பரியா , எனக்கு கல்யாணம்னா அது நிச்சயம் பத்ரா கூட தான் நடக்கும் ப்ரி . நீ இந்தமாதிரிலாம் பேசுறதா இருந்தா என் கூட வராத என கோபமாய் முன்னே சென்றாள்.

அக்கா நில்லுகா.....அக்க்க்கா .....சரிசரி நான் எதுவும் சொல்லல என... சிறுது நேரம் அமைதியாய் நகர்ந்தது , மீண்டும் அக்கா என்று ஆரம்பித்தாள் .

பரியா என்ன என்பது போல் பார்க்க,

கேக்றேன்னு கோபப்படாத கா ...உன்னோட ஒவ்வொருஆசையா பவன்புத்ரா நிறைவேத்தநிறவேத்த தான் உனக்கு காதல் வந்துச்சின்னு சொல்றல . அது பவன்புத்ரா தான்னு நீ எப்படி சொல்ற .

இவளின் கேள்வியில் பரியா அவளை அடிபட்ட பாவனையுடன் பார்க்க ,

அக்கா ப்ளீஸ் ....நீ பீல் பண்ணணும்னு நான் கேக்கல . சொல்லப்போனா இப்படிலாம் குழப்பம் ஆகும்னு நீ யோசிச்சீர்க்ககூட மாட்ட. யோசிச்சி பாருக்கா அம்மா ஒருவாட்டியாவது பேர் சொல்லிற்பாங்கள ??

இல்ல ப்ரி அம்மா எப்பவும் அண்ணன் மகன்னு தான் சொல்வாங்க , அப்பாவும் பவன் கண்ணானு தான் சொல்வாங்க என தவிப்பாய் சொல்ல ,

ப்ச்சே...இந்த அம்மா இருக்காங்களே ...ஆனாவுனா அண்ணா அண்ணா சொல்வாங்க. ஆன எந்த அண்ணனுனு சொல்லமாட்டாங்க என ப்ரியாவின் சொற்கள் குழப்பத்தில் எரிச்சலாய் வெளிவந்தது .

திடீரென ப்ரியாவின் கைகளை பிடித்து , ஏய் ப்ரி குட்டி அம்மா நிச்சயம் என் பத்ராவ தான் சொல்லிர்க்கணும் என சந்தோஷத்தில் குதித்தாள் .

ஆமா ப்ரி , உனக்கு நியாபகம் இருக்கா அம்மா நம்மளுக்கு என் அண்ணன் மகன் போலீஸ் ஆகிட்டான்னு சொல்லி் அன்னிக்கு பிரட்அல்வா லாம் செஞ்சி குடுத்தாங்களே . அப்போ தான் நானே நெட்ல தேடி முழுபெயர் பவன்புத்ரா னு தெரிஞ்சிகிட்டேன் என குதூகலாமாய் சொன்னாள்.

நீ சொல்றதுலாம் சரிகா ஆனா அந்த பவனஜும் உன்ன உத்து உத்து பார்த்து வைக்கிறாரே என சொல்லிமுடிக்க அவர்கள் அந்த காவல்நிலையம் அருகில் வந்திருந்தனர் .

அட ! நீங்க நம்ப தாத்தய்யா வீட்டுக்கு வந்தவங்க தான ,என கேட்டுகொண்டே உள்ளிருந்து வந்தவரும் காவலதிகாரி உடையில் இருந்தார்.

என்னமா பாக்குறீங்க?
என்ன செய்தி ?


பரியா , இல்ல சார் ...அது பத்ரா..ம்ம்ம் ...அது ஏசிபி சார பாக்கணும் .

ஹாஹா என்னமா சிரிப்பு மூட்றிங்க . நம்ப பவன்புத்ரா சார தான சொல்ரீங்க . தினம் தினம் வீட்லையே பார்க்க கூடியவரை காங்க இத்தனை தொலைவு வந்தீயலா என சிரிப்பாய் கேட்டார்.

ஓஓ அக்கா இவர் காமெடி பண்ணிட்டாராம் சிரிச்சிடு கா இல்லனா புடிச்சி ஜெயில்ல போட்டாலும் போட்றுவாரு என பரியாவினிடம் நக்கலாய் முனங்கினாள் ப்ரியா .

அதே நக்கலுடன் , என்ன சார் ஸ்டேஷன்ல எல்லாம் ஈ ஓட்றாப்ல தெரிது என கேட்க ,

அதையும் காமெடியாக ஏடுத்துக்கொண்டவர் , ஹாஹா ஹாஹா என்று சிரிக்குறேன் பேர்வழி என பயமுறுத்தினார் .

என்னமா பண்றது ....எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பவன்புத்ரா ன்ற பேர கேட்டாலே மிரண்டு ஓடிட்றாங்களே என சலிப்பாய் சொல்வதுபோல் சொன்னாலும் அவரின் குரலில் பெருமையே விஞ்சிருந்தது .

அவரின் பெருமையில் பத்ராவின் இதயமும் தன்னவனிருக்காய் விம்மியது .

அட இந்த அக்கா வந்தவேலைய மறந்து காதல்ல மூழ்கிட்டாங்க போலயே . ஏய் சொட்டமண்ட இப்போ யார்னா உன்கிட்ட அவர் புகழ் பாட சொல்லி கேட்டாங்களா என மனதிற்குல் அவரை அர்ச்சித்த ப்ரியா ,

ஹீஹீ சார் ஏசிபி இருக்காரா இல்லையா என கேட்டாள்.
பரியாவும் அந்த கேள்வியையே விழிகளில் தாங்கியவாரு பார்க்க ,.


பவன்புத்ரா சாரும் , பிரதாப் சாரும் இப்போ தான்மா கிளம்புனாங்க . கொஞ்ச நேரம் முன்னாடி வந்தா பார்த்துர்க்கலாம் என உச்ச்சு கொட்ட ,

இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடினா நாங்க வீட்லையே பார்த்துருப்போமே என மனதினுள் கவுண்டர் கொடுத்த இருவரும் ஏமாற்றமாய் திரும்பி சென்றனர் .

ச்சே என்னக்கா இது ? இதுக்கா இவ்ளோ தூரம் வந்தோம் . ம்ம்ம் வரும்போதாவது அந்த வழியா வந்த வண்டில தொத்திட்டு வந்தாச்சு . இப்போ எப்படி போறது யாரையும் காணோமே என புலம்பிகொண்டே வந்தாள் ப்ரியா.

ஏய் ப்ரி அது அந்த பவனும் , பன்ரொடியும் தான இன்னும் இங்கயே இருக்காங்க என பரியா சொல்ல , அவர்களை பார்த்த ப்ரியாவும் என்ன யாருக்கோ பயந்து போய் உட்கார்ந்துருக்க மாதிரி உட்கார்ந்துருக்காங்க . வா கா போய் கேட்போம் .

அருகில் செல்ல செல்ல ஹெல்மெட்டுடன் இருந்த பவனஜின் கண்கள் மட்டுமே பரியாவிற்கு தெரிய அது ஆழிப்பேரலையாய் மாறி தன்னை உள்ளிழுப்பதாய் உணர்ந்தாள் . அந்த உணர்வில் தோன்றிய எரிச்சலில் ,

என்ன ப்ரி பவுனு எதையோ பார்த்து பதுங்கிற்கு போல என நக்கலாய் கேட்க அவர்கள் அருகில் வந்திருந்ததால் அது பவனஜ் மற்றும் பன்ரொட்டியுன் காதுகளிலும் விழுந்தது .

எங்கையோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறுத்தான்ற மாதிரி அவன் பாக்காம இருந்தாலும் வேணுகா வம்புக்கு நிக்குறாங்களே . இந்த புள்ளைக்கு நம்ப மாப்பு தான்னு எழுதிர்க்கு போல என எண்ணினான் பன்ரொட்டி.

ப்ரியாவோ களைப்பாய் இருக்க இளநீர் எதுவும் இங்கு இருக்குமா என பன்ரொட்டியிடம் விசாரித்தாள் .

பவனஜோ ,திடீரென தன் முன் வந்து நின்றவளை நம்பமுடியாமல் பார்த்தவன் பார்வையாலே அவளை முழுங்க உதடுகளோ , அவளிற்கு நிகரான நக்கலுடன் உன்ர பேர் என்னங்கோ என்றது .

ஏனோ அவன் தன் பெயர் கூட தெரியாமல் இருக்கிறான் என்ற ஆதங்கம் தன்னையுமறியாமல் தோன்ற பற்களை கடித்தவாறு பரியா என்றாள்.

கடைசி வார்த்தையை மட்டும் கேட்ட பன்ரொட்டி ,எம்மாடி என்னமா நானும் பாரத்துட்டே இருக்கேன் என்ற மாப்புக்கு மறுவாதயே குடுக்காம பேசிக்கிட்டிருக்க என கோபமாய் கேட்க ,

அவளோ இவர் எதற்கு இப்போ கோபப்படறாரு என திருதிருவென முழிக்க ,

என்ன ...என்ன... முழிச்சா ஆச்சா . இளநீர் வேணும்னு இப்போ தான இந்த புள்ள கேட்டுச்சு உனக்கும் வேணும்னா பறிச்சிக்குடுங்கனு சொல்லு . மாப்பு ரெண்டு என்ன நாலு கூட பறிச்சித்தருவாப்ல. அதவுட்டுப்புட்டு மறுவாத இல்லாம பறி(ரி) யா -ன்ற என முறைக்க ,

அவளிடம் பவனஜ் பேர் கேட்டது அவனிற்கு கேட்காமல் இளநீர்காய் சொல்வதாய் நினைத்து திட்ட , பவனஜோ கண்களில் நீர் முட்ட சிரித்தான் .

ஏம்ல பன்னு ! உமக்கு என் மேல இம்புட்டு பாசமால என சிரிப்பை நிறுத்தி கேட்டாலும் அவனின் கண்கள்
பரியாவை பார்த்து கேலியாய் சிரித்தது .


இவர் எதுக்கு இப்டி சிரிக்குறாரு அக்கா ஏன் முறைக்குது என புரியாமல் போக ப்ரியா , அத்தான் என்னாச்சி எதுக்கு சிரிக்கிறீங்க என கேட்டாள் .

ஹாஹா ஒண்ணுமில்லமா , ஆமா உன் பேர் என்ன ?

ப்ரியா அத்தான் .

பரியா கோபப்படுகையில் அவளிடம் அவன் ரசிக்கும் அந்த கூர்மூக்கு இன்னும் சிவந்து அழகுற அதை மேலும் ரசிப்பதற்காய் அவளின் கோபத்தை அதிகரிப்பது போல் ,

ஓஒ...பரியாக்கு ப்ரி (free ) இந்த ப்ரி ஆ (ப்ரியா) என நக்கலடித்தான் .

அவர்கள் ஒரே மாதிரி இருப்பதால் பள்ளி , கல்லூரிகளில் இதே போல் பலர் சொல்லிருக்க ப்ரியா அவனின் கிண்டலை விளையாட்டாய் எடுத்துக்கொண்டு சிரித்தாள்.

பரியாவோ கோபத்தில் அங்கிருந்து செல்ல போக அவசரமாய் தடுத்த பவனஜ் , ஏய் அங்கிட்டு போவாத .நில்லு சித்தப்புவ வண்டி கொண்டாரா சொல்லிருக்கேன் என்றான்.

பார்வையில் ஏன் என்ற கேள்வி தூக்கியவாறு அவனை பார்த்து புருவத்தை ஏற்றி இறக்க அவனோ அவ்வேற்ற இறக்கத்தில் அவளுள் சொக்கித்தான் போனான்.

அதை கவனித்த ப்ரியா அதை கலைப்ப , எதுக்கு அத்தான் வண்டி அதுவும் நாங்க வந்தது வேற யாருக்குமே தெரியாது .பேசாம நாங்எ நடந்தே போறோம் என சத்தமாய் சொன்னாள்.

இல்ல ப்ரியா அங்கிட்டு பங்காளிங்களுக்குள்ள வரப்பு தகராராகி அடிச்சிக்கிட்டு இருக்கானுவுக .அதான் நாங்களே இங்கன நிக்கோம் என பவனஜ் சொல்ல ,

பன்ரொட்டியும் , ஆமா அங்கிட்டு போவதிக .எவன் யார் மண்டை உடைபானுகனு தெரியாது என்றான்.

இதெல்லாம் ஒரு விஷயமா என ப்ரியா கேட்டுமுடிக்க அங்கு ஒரு அருவாள் பறந்து வந்து விழுந்தது .



வரப்பு தகராறு பெரிதாகி கைகளில் அடித்தது போய் ஆயுதம் எடுத்திருக்க அங்கு போவோர் வருபவரையுமே தாக்க ஆரம்பித்திருந்தனர் .



டேய் பன்னு , சீக்கிரம் சித்தபுக்கு போன போடுடா என்றவன் , ரெண்டு பேரும் வாங்க கொஞ்சம் தள்ளி போலாம் என பரியா மற்றும் ப்ரியாவை அழைத்தான் .



அவனை மேலிருந்து கிழ்வரை பார்த்த பரியா , அதற்குள் தங்களின் புறம் ஒருவன் அடிக்க வர அசால்ட்டாக அவனின் கைகளை முறித்து உடைத்தாள்.

போனை எடுத்த பன்ரொட்டியும் , பவனஜும் ஆவென வாயை பிளக்க ப்ரியாவோ இது வழமை என்பது அமைதியாயிருந்தாள் .



***************************************************

நீ இன்னும் கிளம்பலையா கண்ணா . சீக்கிரம் கிளம்பு பா என பவித்ரா சொல்லி செல்ல சரி சரி மண்டையை உருட்டிக்கொண்டிருந்தான் பவனஜ் .

மாப்பு! இனிமே நான் இந்த வீட்டுப்பக்கமே வரமாட்டான்ல . எதுவா இருந்தாலும் இன்னியோட முடிச்சிப்போம் என பன்ரொட்டி சொல்ல,

பவனஜ் , ஏம்ல

ஏனா , நீ பார்ததானல அது முறுக்கா? கையால? ஏதோ முறுக்கு புழிறாப்ள புழிறாங்க . அதுகூட பரவலால அடுத்து வந்தவனுக்கு அடிவயதுலயே ஒன்னு விட்டாங்க பாரு... அவன் என்ன ஆனானு தெரில மாப்பு ஆனா எனக்கு வயிறு கலங்கிடிச்சில என அழாகுறையாய் புலம்பி கொண்டிருந்தான் .



மேலே அறையில், இவர்களுக்கு நேர்மாறாய் பரியாவோ கோபத்தில் ப்ரியாவிடம் இவர்களை பொரிந்துகொண்டிருந்தாள்.

சே அந்த இடத்துல மட்டும் என் பத்ரா இருந்திருந்தா எல்லாரையும் ஓட ஓட அடிச்சிருப்பாரு . அவர் பேர கேட்டாலே எல்லோரும் அலறுவாங்க . இவன் என்னனா சண்டைநடக்குதுனு ஒளிய இடம் தேடுவான் போல என பவனஜை வறுத்தெடுத்தாள்.

ப்ரியா ஏதோ பதில் சொல்லப்போக அங்கு ஜானகி வருவதை பார்த்தவள் வாயை மூடி கொண்டாள் .

கண்ணுங்களா இன்னும் கிளம்பளையாடா , பரியா கண்ணு போய் சீலை மாத்திட்டு வா கண்ணு ,அய்த்த உனக்கு ஜட வச்சி தலைய ஜோடிச்சிவிடறேன் . நிச்சயத்துக்கு நேரமாவுத்துல என சொல்ல ,

இருவரும் பவனஜை மறந்து நிச்சயதார்த்த பரபரப்பில் மூழ்கினர் .


***************************************************
 




Last edited:

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
வீடுமுழுக்க அலங்காரத்தில் ஜொலிஜொலிக்க , கப்பீஷ்வர் கம்பீரமாய் மீசையை முறுக்கியவாறு சோபாவில் அமர்ந்திருக்க அவரின் இருபுறமும் ,அவரின் கம்பீரத்திற்கு சிறிதும் குறைவில்லாதவாறு கோதண்டநாகாவும் , வஜ்ரநாகாவும் அமர்ந்திருந்தனர் .

வஜ்ரநாகா நீண்ட நாள் பிறகு முழு சந்தோஷத்துடன் அமர்ந்திருக்க , கோதண்டநாகா பவித்ராவை தன்பக்கம் அழைத்து அனைவரிடமும் பேச வைத்துக்கொண்டிருந்தார் .


சௌந்தரம்மாள் இவர்கள் நால்வரையும் கண்களில் ஆனந்த கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்க, அவரின் அருகில் வந்த பிரபுவும் ஜானகியும் அவர்களை பார்த்து புன்சிரிப்புடன் நிற்க , ஜானகியை தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டார் சௌந்தரம்மாள் .

அய்யா நல்ல நேரம் வந்துடிச்சி பொண்ணு , மாப்பிளையை அழைச்சிட்டு வந்தா நிச்சய தாம்பூலம் வாசிச்சிபுடலாம் என ஒருவர் சொல்ல ,

ப்ரியா பரியாவை அழைத்துக்கொண்டு வர , ஆரஞ்சு வண்ண பட்டுபுடவையில் அதற்க்கு தோதான நகைகளுடன் வானுலக மங்கையோ என என்னும் பேரழகுடன் வந்தவள் அழகிற்க்கு அழகு சேர்பதற்க்காய் தன்னவன் தனக்காய் செய்த ஜடையை வைத்துக்கொண்டு அது கொடுத்த காதல் உணர்வில் முகம் பூரிக்க வந்தாள்.

அவளின் எதிரே பட்டுவேஷ்டி சட்டை அணிந்து ஆண்மையின் முழுவுருவமாய் நின்ருந்தவனின் முன்னுச்சி முடிகளோ சிங்கத்தின் முடிகளாய் , மன்னனின் கிரீடமாய் வீற்றிருந்து ஒரு வித அலட்சியத்துடன் சிலும்பிக்கொண்டிருந்தது .

பரியா அவனை ரசித்து கொண்டிருக்க , பரியா அக்கா நல்லா பார்த்துக்கோ இது உன்னோட பத்ரா தான என அவளின் காதை கடித்தாள் .

இத்தனை நேரம் இருந்த மாயவலை அறுபட குரலில் நடுக்கத்துடன் , ப்ரி என...எனக்கு ...தெரிலடி . எனக்கு நேத்து அம்மாயி மடில அவர் படுத்திட்டிருந்தத பார்த்த போ என்ன மாதிரியான உணர்வுகள் தோணுச்சோ அதே தான் இப்பவும் தோணுது என சொல்ல ,

அப்றம் என்னக்கா ?

ஆனா ப்ரி , இதே உணர்வுகள் தான் இங்க நம்ப வந்த காலைல பவனஜ பார்க்கும் போதும் தோணுச்சு . அப்டினா என்னோட காதல் பொய்யாடி ?? ரெண்டுபேருக்கும் என்னால வித்தியாசமே கண்டுபிடிக்க முடிலயே என்றவள் குரலோ அழுகையிலும் , பயத்திலும் நடுங்க கண்களோ தன் காதல் வழுவற்றதோ என்னும் எண்ணத்தில் கலங்கியது .

நேரமோ இவர்களை கவனிக்க மறக்க , இவர்களின் குழப்பத்துடனே நிச்சய பத்திரிக்கையும் வாசிக்கபட்டது .

அதைகேட்ட பின் பரியா மற்றும் ப்ரியா இருவரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் இறுக்கமாய் பற்றிக்கொண்டு வார்த்தை வராமல் போக எதிரில் நின்றுந்தவனை வெட்டவா குத்தவா என்பது போல் முறைத்தனர் .

நிச்சயபத்திரிகை :

சென்னையை சேர்ந்த கண்ணன் மற்றும் பாரதியின் பேத்தியும் , பிரபு மற்றும் பவித்ரா ஆகியோரின் மூத்த குமாரத்தியுமான " பரியா " - விற்கும்

மன்னவனுரை சேர்ந்த கப்பீஷ்வர் மற்றும் சௌந்தரம்மாளின் பேரனும் , கோதண்டநாகா மற்றும் ஜானகி அவர்களின் குமாரனுமாகிய " பவனஜ் என்கிற பவன்புத்ரா " - விற்கும்
பெரியோர்களால் நிச்சயிக்கபடுகிறது .



- பண்ணிடுவோம் ...
 




Last edited:

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
நெனச்சேன்.... 2பேரு,, ஒருத்தருக்கு.. ??..???..
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,985
Location
madurai
எதிர்பார்த்த twist வெளியே வந்துருர்ச்சு... interesting ud....:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top