• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience எ.க.எ.? (எப்படிக் கதை எழுதுகிறீர்கள்?) - 1 - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் தோழமைகளே...

நிறைய கதைகள் பேசும் இத்தளத்தில் கதைகளைப் பற்றிப் பேசியுள்ளீர்களா?

(நெசமாவே தெரியாமத்தான் கேக்குறேன்! நான் முன்னெடுக்க விரும்புவதைப் போன்ற உரையாடல்கள் இதற்கு முன் இங்கு நிகழ்ந்திருந்தால் அருள்கூர்ந்து எனக்குச் சொல்லுங்கள்... அவற்றையும் படித்துவிட்டுத் தொடர்கிறேன்!)

கதை என்றால் என்ன? அதன் வடிவம் என்ன? எது கதை? எது நல்ல கதை?

இப்படியான வினாக்களை சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா?

(அதிலும் அந்தக் கடைசி கேள்வி ரொம்ப ஆபத்தானது! அதனை ஜாக்கரதையாகக் கையாள வேண்டும்! (நாம் சாதரணமாகக் கையாளும் இந்த ‘ஜாக்ரத்’ என்ற வடமொழிச் சொல் வேதத்திலேயே இருக்கிறது! நான் இப்படித்தான், அடிக்கடி ‘டீவியேட்’ ஆவேன், மன்னிச்சூ...!))

இங்கே பலர் அநாயசமாக (இது சமற்கிருதச் சொல்! ‘ஆயசம்’ பெருமுயற்சி, கடினமாகச் செய்யப்படுவது, அநாயசம் அதன் எதிர்பதம், எளிதாகச் செய்வது! ஆங்கிலத்தில் ‘கேக் வாக்’, ‘சைல்ட்ஸ் பிளே’ என்பார்களே? அது போல!) கதைகளை எழுதிவிடுகிறார்கள்.

அவர்களின் ஜீன்ஸிலேயே சுவாரசியமாகக் கதை சொல்லும் வித்தை ஒளிந்திருக்கிறதோ? (ஜீன்ஸ் - இரண்டு வாரம் துவைக்காமல் அணியும் ஆடை அல்ல, நமது மரபணுக்கள்!)

ஆனால், கதையின் கதையை அலசியிருக்கின்றீர்களா?

மேலை நாடுகளில் இது குறித்த பாடங்கள், பட்டங்கள் கூட உள்ளன!

தமிழில்?

நான் முதன்முதலில் சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்றபோது (2003 என்று நினைக்கிறேன்!) வாங்கிய முதல் மற்றும் ஒரே நூல் ரா. கி. ரங்கராஜன் எழுதிய ‘எ.க.எ.’ (எப்படிக் கதை எழுதுவது) என்ற நூல்தான்!

சுஜாதா ‘எப்படிச் சிறுகதை எழுதுவது’ என்று ஒரு சிறுகதை எழுதியுள்ளார், ஆனால், அதில் சிறுகதை எழுதுவதற்கான பாடம் இல்லை! (ஆனால், அவரும் சில குறிப்புகள், விதிகள் கூறியுள்ளார்! அவரது ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்ற நூல் திரைக்கதை எழுதுவதைப் பற்றியதுதான்!)

ஜெயமோகனின் ‘நாவல் இலக்கணம்’ என்ற நூலை வாங்கி வைத்துள்ளேன் இன்னும் படிக்கவில்லை!

இதெல்லாம் இருக்கட்டும், நாம் நமக்குள் பேசுவோமா?

எழுதுதல், கதை / நாவல் குறித்த வரையறைகள், வடிவங்கள், வகைகள்... இப்படி நாம் நமக்குத் தெரிந்ததை இங்கே அலசுவோமா?

(இடையில் நான் எனக்கு மிகப் பிடித்த வகையான ‘அறிவியல் புனைவு’ பற்றியும் பேச விழைகிறேன்! அவ்வாறே நீங்களும் உங்கள் விருப்ப வகைகளைப் பற்றிப் பேசுங்கள்...)

‘நான் வெறும் வாசகி/கன்’ என்று இங்கு உள்நுழையும் அனைவருக்குள்ளும் கட்டாயம் ஏதோ ஒரு நாள் ஒரு கணத்தில் ’நாமும் ஒரு கதை எழுதிப் பார்த்தால் என்ன?’ என்ற பொறி தட்டும்... அதற்கான உந்துதல் நிச்சயம் நீங்கள்தான்! நான் முன்பு சொன்னதைப் போல ‘அநாயச’மாகக் கதைகள் எழுதும் இத்தளத்தின் கதாசிரியர்கள்தான்!

உந்துதலாய் இருந்து ‘எழுதலாம்’ என்ற பொறியைத் தட்ட வைத்த நீங்களே, அவர்களுக்கு இயல்பாய் எழும் அடுத்த வினாவான ‘எப்படி எழுதுவது’ என்பதற்கும் ஒரு விடையைக் கொடுக்க முயன்று பாருங்களேன்?

எச்சரிக்கை: ’நான் சொல்வதுதான் சரி’, ‘எனது வழிமுறை மட்டுமே நல்ல கதையை எழுத வைக்கும்’, ‘நான் எழுதுபவை / நான் சொன்னபடி எழுதுபவை மட்டுமே நல்ல கதை, அதுவே இலக்கியம்’ என்றெல்லாம் போகும்போதுதான் சிக்கல் தொடங்குகிறது! நம் தளத்தின் எழுத்தாளர்கள் அப்படிச் செல்லமாட்டார் என்று எனக்கு நூறு சதவீதம் உறுதியாகத் தெரியும். இருந்தாலும், ஏதோவொரு கட்டத்தில் யாரோ ஒருவர் சொல்வது வேறு யாரோ ஒருவருக்கு அப்படித் தோன்றிவிடக் கூடாதல்லவா? அதற்குத்தான் இது!

இங்கே அலசப்படுபவை அவரவர் சொந்தக் கருத்துகள், துய்ப்பின் பாடங்கள்... இதில் சரி தவறு என்பதை எடைபோட நமக்கு உரிமையோ அதிகாரமோ இல்லை!

சரி சொல்லுங்கள், எப்படிக் கதை எழுதுகிறீர்கள்...?

(தொடர்வோம்!)​
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Aahaa.. vasaamma maattikitena.. ??

அண்ணா.. நிஜமா எனக்கு தெரியாதுண்ணா.. கமெண்ட் போட்டேன் ரேவியூ போட்டேன்.. நல்லாருக்கு நீ எழுதுன்னு போட்டில தள்ளி விட்டுட்டாங்க.. அப்போ ஆரம்பித்து எழுதிட்டு இருக்கேன்..

நல்லாருக்குன்னு தான் சொல்வாங்க.. நமக்கு தான் நம்ப முடியாது.. எனக்குள்ள இப்படி எழுத்து திறமை இருக்குறது இங்க வந்து தான் தெரியும். என் கதை எழுதுற கதை மோசம்... நீங்க கேட்டதுக்கு பதில் இங்க இல்லை.. ??????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Happa ithulayaavathu vanthene.. enna ilakanam nu ninaichen athu illama puthusaa iruku
‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கண்டு’ என்பது புலவர்கள் வழக்கு.

தொல்காப்பியரே

‘செந்தமிழ் வழக்கு சிவணிய நிலத்து
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி...’

இலக்கணம் வகுத்ததாதான் சொல்லிருக்கார்.

எனவே, நாம் எழுதும் கதைகளே நமது இலக்கணத்திற்கு அடிப்படை!

ஒவ்வொருத்தர் கதையும் எவ்வளவு வேறுபாட்டோட இருக்கோ அப்படித்தான் அவங்களின் எழுதும் முறையும்...

அதைலாம் பகிர்ந்துகொண்டு புதிதாக வருபவர்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளியும், எழுதிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு சுய-அலசலும் ஏற்படுத்தலாம்னு ஒரு நோக்கம், நப்பாசை... பார்ப்போம்...

சரி, நீ ஆரம்பி... சொல்லு, எ.க.எ.?? :):)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
Aahaa.. vasaamma maattikitena.. ??

அண்ணா.. நிஜமா எனக்கு தெரியாதுண்ணா.. கமெண்ட் போட்டேன் ரேவியூ போட்டேன்.. நல்லாருக்கு நீ எழுதுன்னு போட்டில தள்ளி விட்டுட்டாங்க.. அப்போ ஆரம்பித்து எழுதிட்டு இருக்கேன்..

நல்லாருக்குன்னு தான் சொல்வாங்க.. நமக்கு தான் நம்ப முடியாது.. எனக்குள்ள இப்படி எழுத்து திறமை இருக்குறது இங்க வந்து தான் தெரியும். என் கதை எழுதுற கதை மோசம்... நீங்க கேட்டதுக்கு பதில் இங்க இல்லை.. ??????
அதெல்லாம் ஒத்துக்க முடியாது!

சரி, இந்த வினாக்களைக் கவனி (உடனே பதில் சொல்ல வேண்டா, பொறுமையா சொன்னா போதும்!)

ஒரு கதை எழுதுவதற்கான தொடக்கப் புள்ளி எது?

இதுதான் கதை என்று எப்படித் தீர்மானிக்கிறாய்?

தீர்மானிக்கும் நிலையில் கதை எந்த அளவு உருப்பெற்றிருக்கும்? (ஒரு வரி ... மொத்தக் கதையும்)

அப்படித் தீர்மானித்த கதையை / கருவை எப்படி எழுதத் தொடங்குவாய்?

கதையை கதையாக எப்படி வளர்த்தெடுக்கிறாய்?

(எடுத்துக்காட்ட, உன்னோட மழை கதை மதி கீழ விழுறதுலேர்ந்து தொடங்குது. அந்தப் புள்ளியை எப்படி முடிவு செய்தாய்? ஏன்?)
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அதெல்லாம் ஒத்துக்க முடியாது!

சரி, இந்த வினாக்களைக் கவனி (உடனே பதில் சொல்ல வேண்டா, பொறுமையா சொன்னா போதும்!)

ஒரு கதை எழுதுவதற்கான தொடக்கப் புள்ளி எது?

இதுதான் கதை என்று எப்படித் தீர்மானிக்கிறாய்?

தீர்மானிக்கும் நிலையில் கதை எந்த அளவு உருப்பெற்றிருக்கும்? (ஒரு வரி ... மொத்தக் கதையும்)

அப்படித் தீர்மானித்த கதையை / கருவை எப்படி எழுதத் தொடங்குவாய்?

கதையை கதையாக எப்படி வளர்த்தெடுக்கிறாய்?

(எடுத்துக்காட்ட, உன்னோட மழை கதை மதி கீழ விழுறதுலேர்ந்து தொடங்குது. அந்தப் புள்ளியை எப்படி முடிவு செய்தாய்? ஏன்?)
??? Answer teriyalaye.. ??

Aama eppadi atha yosichen.. ???
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
இதில் இனி நடத்தப் போகும் பாடங்களை கூர்ந்து கவனிக்கும் மாணவியின் நிலையிலே நானிருக்கிறேன். பாடம் நடத்தும் அளவு அனுபவம் எனக்கு இல்லையென்று நினைக்கிறேன். அருமையான முயற்சி இது... தொடரட்டும் வாழ்த்துகள்.
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
??? Answer teriyalaye.. ??

Aama eppadi atha yosichen.. ???
யோசி...

நாம் பல விஷயங்களை இப்படித்தான் செய்யுறோம்... நமது மூளை அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது...

எப்படிச் செய்கிறோம் என்பதை உணராமலே அழகாகச் சரியாகச் செய்துவிடுகிறோம்! அடுத்தவர் கேட்டால் நமக்குச் சொல்லத் தெரியாது! (ஆனால், அவர்கள் நாம் சொல்ல விரும்பவில்லை என்று எண்ணி நம் மீது கோவித்துக்கொள்வர்!)

ஆனால், முறையான கேள்விகளோடு அணுகினால் எதற்கும் விடை கிடைக்கும்...
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
இதில் இனி நடத்தப் போகும் பாடங்களை கூர்ந்து கவனிக்கும் மாணவியின் நிலையிலே நானிருக்கிறேன். பாடம் நடத்தும் அளவு அனுபவம் எனக்கு இல்லையென்று நினைக்கிறேன். அருமையான முயற்சி இது... தொடரட்டும் வாழ்த்துகள்.
நன்றி...

நான் இதைப் ‘பாடமா’க நடத்த விரும்பவில்லை, போவதுமில்லை!

இவை விவாதங்களாகவே இருக்கும்...

உரையாடுவோம்...

எப்போதெல்லாம் உங்களுக்கு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அதை எந்தத் தயக்கமுமின்றி இங்கே சொல்லுங்கள்...

சரி தவறுகளைப் பின்னர் அலசிக்கொள்வோம்...

நன்றி... :):)(y)(y)
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
இதில் இனி நடத்தப் போகும் பாடங்களை கூர்ந்து கவனிக்கும் மாணவியின் நிலையிலே நானிருக்கிறேன். பாடம் நடத்தும் அளவு அனுபவம் எனக்கு இல்லையென்று நினைக்கிறேன். அருமையான முயற்சி இது... தொடரட்டும் வாழ்த்துகள்.
தமிழம்மா இப்படி சொல்லலாமா செல்வாம்மா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top