• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏகாந்த காதலா-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 45

புதிய முகம்
Author
Joined
Nov 4, 2021
Messages
3
Reaction score
9
ஹாய் டியர்ஸ், நான் அனாமிகா 45, இதோ என் கதையின் முதல் அத்தியாயம் பதிப்பித்துவிட்டேன். படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் ❤❤❤. நன்றிகளும் பேரன்புகளும் 💐💐💐

ஏகாந்த காதலா-1

வானத்தில் கருந்திரளாய் திரண்டிருந்த மேகமதில் இருந்து சோ’வென்ற பேரிரைச்சலோடு அடைமழையாய் கொட்டி தீர்த்து, கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் இரவுபாவை.

அந்த இரவு நேரத்தில் எதிரில் நிற்கும் எவையும், எதுவும் தெரிந்து போகாத அளவு மையிருள் சூழும் நள்ளிரவு நேரமது.

காட்டு விலங்குகள் கூட நடைபயில பயம் கொள்ளும் அடர்ந்த காட்டுப்பகுதி.

உயர்ந்து வளர்ந்த மரமும், படர்ந்து விரிந்து கிடந்த செடி, கொடிகளும் தரையில் குமிழ்ந்து கிடந்த சேறும், சகதியும் வெறும் பயத்தை மட்டுமே தந்து கொண்டிருக்க, ராட்சச புயலாய் வீசிய காற்று, மழை, ஆக்ரோஷ பயம் தரும் காடு எவற்றையும் கணக்கில் கொள்ளாமல் தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தாள் அவள்.

எதற்கிந்த ஓட்டம், ஏனிந்த ஓட்டம் என தெரியாத அளவு கீழே விழுந்து எழுந்து கைகால், முட்டி எல்லாம் சிராய்ப்பு வாங்கிக்கொண்டு அவள் ஓடிக் கொண்டே இருக்க, அவள் ஓட்டம் இப்பொழுது முற்று பெறுவதாய் இல்லை.

ஓடிக்கொண்டிருக்கும் அவள் அழகை பற்றி வரையறுக்க வேண்டுமென்றால்,

பசும்பால் நிறத்து நிலவழகி. தங்கசிமிழ் நெற்றியழகி. குமிழம்பூ நாசியழகி. குங்குமப்பூ உதடழகி. சித்திராம்பூ மேனியழகி. அந்திப்பூ அகவழகி. பவளம்பூ பருவழகி.

மங்கை மான்விழியாள். தேன் இதழாள். அவள் அகம், குணம் அனைத்திலும் மென்மை, மென்மை, மென்மை மட்டுமே. சிறு குறு உயிரி கூட தன்னால் எதுவும் அபத்தத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது, தன்னால் எதுவும் ஆபத்து அதற்கு ஆகிவிடக் கூடாது என எண்ணும் அளவு மென்இதயம் கொண்ட மென்மையான மனமழகி.

மென்மையான மனம், குணம் இவை இரண்டும் இருந்தால் போதுமா? சற்றேனும் தைரியமும், தன்னம்பிக்கையும் இப்பொழுது வேண்டும் என்பதை புரிந்து கொண்டவள் எதை எதையோ எண்ணி ஓடிக் கொண்டே இருக்க,

‘உஸ், உஸ்’, என்ற சர்ப்பங்களின் சப்தமும், காதை வண்டாய் குடையும் பூச்சிகளின் ரீங்காரமும் அவளுக்கு மரண பயத்தை கண்முன் தோற்றுவிக்க, எச்சில் கூட்டி மிடறு வாங்கினாள்.

திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணவள் தன்னுடைய அலங்காரம் அனைத்தையும் கலைத்துவிட்டு ஓடிக்கொண்டே இருக்க, அவளின் மருதாணி பூச்சு காலை சறுகுகளும், முட்களும், கட்டைகளும் சரியாய் பதம் பார்த்தது.

பின்னே திரும்பி திரும்பி பார்த்து ஓடிக் கொண்டிருந்தவள் ஒருநிலைக்கு மேல் ஓடவே முடியாது எனும் நிலையில் முட்டியில் கைவைத்து கீழே குனிந்து மூச்சு வாங்க, நின்று நிதானிக்க நேரமில்லை எனும் சுயசிந்தனை அவள் மூளையை அடைய, சுற்றி முற்றி பார்த்துவிட்டு அருகில் தெரிந்த புதருக்குள் தன்னை மறைத்துக் கொண்டாள்.

சோ’வென்று இரைந்த மழை தன் சீற்றத்தை சற்று தணித்து சிறு சிறு வைரதுளியாய் விழுந்து கொண்டிருக்க, ஈரக்காற்று மற்றும் மழையின் குளுமை அவளின் எலும்பு மச்சை வரை ஊடுருவி அவளை நடுங்க வைத்து உடம்பை ஐஸ்கட்டி போல் சில்லிட வைத்தது.

நடுங்கிக் கொண்டே தன் பட்டுசேலை முந்தியை எடுத்து தன் மேனிமீது போர்த்திக் கொண்டவள், தன்னுடைய இரு கரத்தாலும் தந்தியடித்துக் கொண்டிருந்த தன் வாயை மூடிக்கொள்ள, அவளின் மூச்சுக்காற்று மட்டும் விஸ்தானமாய் வந்து கொண்டிருந்தது.

நிலையில்லாமல் வந்து கொண்டிருந்த தன் மூச்சுக்காற்றின் சப்தமே அவளுக்குள் சர்வத்தையும் ஒடுங்க வைக்க, அந்த புதருக்குள்ளே தன்னை கூனி குறுகிக் கொண்டாள்.

அந்த புதருக்குள் தனித்திருந்தவள் கெண்டை காலின் மேல் ஒரு கருநாகம் ஏறிச்செல்ல, ‘முருகா, முருகா’, என்று உச்சரித்தவளுக்கு இதயம் தொண்டை குழிவரை வந்துவிட்ட உணர்வு.

அவளின் முகத்தை நோக்கி திரும்பி பார்த்துவிட்டு என்ன நினைத்ததோ அந்த கருநாகம் அது அவளை தீண்டக்கூட இல்லாமல் வந்த வழியே விலகிச் செல்ல, மைபூசி கலைத்திருந்த, களைந்திருந்த அவள் கெண்டை மீன் விழியின் ஓரத்தில் சரேலென ஒருதுளி உவர்நீர்.

முக்குளித்த ரோஜா மலர் போல் இருந்த அவளின் குவளை மலர் கன்னங்கள் மழை துளியில் சிவந்து போயிருக்க, அவளின் விழி எல்லாம் அப்பட்டமான பயத்தின் பூமத்திய ரேகைகள்.

தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள் கைகாலில் இருந்த சிராய்பை கண்டு வலியில் முகம் சுணங்க,

‘இதெல்லாம் வலியே அல்ல. அவன் கைகளில், அந்த ராட்சசன் கைகளில் சிக்கிக் கொண்டாள் அடுத்து நேரப் போவதுதான் உண்மையான வலி. எப்பாடுபட்டாலும் இந்த வனாந்திரத்தை மட்டும் கடந்து போய்விடு. நீ தப்பி பிழைக்க உனக்கு வழி கிடைத்துவிடும்’, என அவளின் மனசாட்சி அவளிடம் மொழிந்து கொண்டிருக்க,

சுற்றிலும் தென்பட்ட இந்த அடர்ந்த காட்டை தான் எவ்வாறு தாண்டி செல்வது என யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்.

யோசித்துக் கொண்டிருந்தவளின் தோளின் மேல் சொட்டு சொட்டாய் ஏதோ விழுக முதலில் அது மழைத்துளிதான் என சாதாரணமாக நினைத்தவள் அதன் வெப்பத்துளியை உணர்ந்து தன் தலையை மேலே உயர்த்தி பார்க்க, அவளின் கெண்டை காலின் மேல் ஏறிய அதே கருநாகம் அது இறந்து அதன் இரத்த துளிகள் அவள் மேல் சொட்டிக் கொண்டிருந்தது.

“ஆஆஆ...”, என அலறியவள் அந்த புதரிலிருந்து எழுந்து நிற்க, ஒரு மரத்தின் கிளை மீதிருந்து தலைகீழாய் தொங்கிக் கொண்டே தன் கனல்விழி கண்களோடு அவள் முகத்தின் வெகு அருகே தன் குறுந்தாடியை வைத்து குறுகுறுப்பு மூட்டினான் அவன்.

எவனிடமிருந்து தப்பி வரவேண்டும் என்று எண்ணினாளோ அவனே அவள் முகத்தின் அருகில்.

ஒருநொடி ஒற்றை நொடி அவனை மேலிருந்து கீழாக, தலைகீழாக அலசி ஆராய்ந்தவள் அவனையே பார்த்துக் கொண்டு நிற்க,

தன் வலக்கையில் கயிறு போல் சுற்றியிருந்த அந்த கருநாகத்தின் தலையை துண்டாய் பிய்த்து எறிந்தவன், அவளையே தன் கூர்விழி பார்வையால் பார்த்துக் கொண்டே, “அவ்ளோ சீக்கிரம் உன்னை என்கிட்ட இருந்து நான் தப்பிக்க விடுவேனா டெய்ரிமில்க். உன்னை தொடுற உரிமையும் எனக்குத்தான் இருக்கு. உன்னை ஆளுற உரிமையும் எனக்குத்தான் இருக்கு”, அவளின் கழுத்தில் முகம் புதைத்து அவளின் கற்றை கூந்தலில் வாசம் வாங்கிக் கொண்டே கூறியவன் லம்பாய் மேலே இருந்து கீழே குதித்து அவளின் இடைபற்ற,

அவனையே அரண்டு ஒடுங்கி நடுங்கிப் போய் பார்த்தவள் அவனின் ராட்சச செயல் கண்டு மிரண்டு மீண்டும், “ஆஆஆஆஆ...”, என்று அலறி அலறலோடு மயங்கி சரிய, கொழுங்கொம்பை தாங்கும் பற்றுக்கொடி போல அவளை பிண்ணி தன்னுள் புதைத்தவன் தன் அகலவீதிரேகைக் கைகளில் அவளை அள்ளிக் கொண்டான்.

ஒருபக்க தோளில் அவளை அள்ளிக் கொண்டவன், “சீக்கிரம் வர்றேன். கேம் ஸ்டார்ட் நவ்”, என்று கூறியவனின் அழுத்தமான இதழ்கள் தன் பேன்ட் பாக்கெட்டில் இருக்கும் சுவிங்கத்தை தட்டி மெல்ல ஆரம்பித்தது. தன் ஒற்றை கையால் அடங்காமல் ஆடிய சிகையை கோதியவன் அவளை தூக்கிக்கொண்டு காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தான்.

வெட்டி வந்த மின்னல் ஒளியில் அவனின் திண்மை மற்றும் ஆளுமையான தோற்றம் தெரிய, காட்டை ஆளும் சிங்கத்திற்கு ஒரு முகவரி உண்டென்றால் அது இவ்வாறு தான் இருக்குமென அவனை பார்த்தவுடன் அனுமானித்து விடலாம்.

ஆளை அசரடிக்கும் பால்வண்ண தேகம். ஆறடி உயரம். படிக்கட்டு போல் இறுகி இருக்கும் வயிறு. ஆஜானுபாகுவான மூங்கில் கைகள். நீண்ட நெடிய கூர்பார்வை கொண்ட விழிகள். நேர்நாசி. கருத்து சிறுத்து இருக்கும் அளவான மீசை. நான்கு நாட்கள் சவரம் செய்யப்படாத தாடிகள். அதற்குள் சிகரெட் புகைத்தலால் கருப்பேரி சிரிக்கவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் அழுத்தமான உதடுகள். யாருக்கும், எதற்கும், எங்கும் அடங்கியே போகமாட்டேன் எனக் கூறும் அநியாய திமிர் அவன் உடலெல்லாம் ஊறிப்போய் கிடப்பது அவன் விழிமொழியில் அவன் கூறிய செய்தி வைத்து அறிந்து கொள்ளலாம்.

இவன் அவனை படைத்தவனே வந்து எதிரில் நின்றாலும் அவனுக்கு கூட எமன்தான்.

அடுத்தவன் பாஷையில் எமன்.

அவளவன் பாஷையில் ராட்சசன்.

ஆனால் அவன் அவன் பாஷையில் ராவணன். ராவணன். ராவணனனே தான்.

இராவண உருக்கொண்ட ரேயன், ஆத்ரேயன்...

சென்னை...

இரண்டடுக்கு மாளிகை கொண்ட அந்த பங்களாவில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மீடியாவும் குழுமி இருக்க, அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார் முதலமைச்சரின் வலக்கையாக திகழும் கருணை செல்வன்.

“சார் மும்பையில அவ்ளோ கிராண்டா கல்யாணம்னு சொன்ன முதலமைச்சர் திகழறிவன் பொண்ணு ஓடிப்போயிட்டாங்களா? இல்ல காணாம போயிட்டாங்களா?”,

“என்ன காரணத்துனால சார் இந்த கல்யாணம் நின்னு போச்சு. எதிர்கட்சி கூட முதலமைச்சர் சாருக்கு உட்பூசல் இருந்ததாலதான் அவங்க இந்த மாதிரி பண்ணிட்டாங்க, அவங்கதான் முதலமைச்சர் பொண்ண கடத்திட்டாங்கன்னு சில பத்திரிக்கை எழுதி வச்சுருக்குறாங்க அது எந்தளவு உண்மைன்னு சொல்ல முடியுமா? நிஜமாவே அந்த மாதிரிதானா சார்”,

“சார் அப்போ முதலமைச்சர் பொண்ணு மேல்படிப்பு படிக்க அப்ராட் போகலையா? இவங்க எல்லாம் கேட்குறது மாதிரிதானா?”,

“நீங்க இப்டி அமைதியாவே இருக்காதிங்க சார் ஏதாவது சொல்லுங்க. நாங்க நியூஸ் போட வேண்டாம். சொல்லுங்க என்னதான் ஆச்சுனு ஏதாவது சொல்லுங்க”,

அனைத்து ஊடக உலகத்தின் பிரதிநிதியும் ஒரு பெண்ணின் வாழ்வை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற உள்ளுணர்வு ஒரு சிறிதும் இல்லாது தங்கள் நிலையில் விடாப்பிடியாய் நின்று பேச,

“கொஞ்சம் பொறுங்க நீங்க கேட்குற மாதிரியெல்லாம் எதுவும் இல்லை. பாப்பா, பாப்பா, அவங்க...”, என்ன சொல்ல எனத் தெரியாமல் அவர் திணறிக் கொண்டிருக்க,

“அய்யாவோட சொந்த விசயத்துல அவரோட அனுமதி இல்லாம உங்க இஷ்டத்துக்கு இட்டு கட்டிதான் நீங்க ஒவ்வொருத்தரும் பேசுவீங்களா? கேள்வி கேட்பிங்களா?”, முதலமைச்சரின் கட்சி விசுவாசி தன் குரல் உயர்த்தி கத்த,

பங்களா வாசல் முன் திரண்டிருந்த கூட்டம், “என் தங்கதலைவனின் தன்மானத்துக்கு ஒன்றென்றால் தொண்டர்கள் நாங்கள் தீ குளிக்க கூட தயங்கமாட்டோம். தலைவா எதிர்கட்சிக்காரன் உங்கள் காலை வாரிவிடவே இப்படி ஒரு இழிசெயலை செய்து வைத்தான். அவனை, அவனை, அவனை...”, என தொண்டர்கள் கூட்டம் அனைத்தும் கத்த, அவர்களை தள்ளி வைத்து நிறுத்த போராடிக் கொண்டிருந்தது தமிழ்நாடு காவல்படை.

சிறிது சிறிதாய் கிளம்பிக் கொண்டிருந்த கூச்சமும், கேள்வியும் பெரும் புயல் போல் உருவாகி அந்த இடத்தையே ஆக்கிரமிக்க தொடங்க, கலவரம் போல் நிலை கட்டுக்குள் வராமல் போனது.

தன் பிரதான அறையில் நின்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் திகழறிவன், கூட்டத்தையும், தொண்டர்களையும் சமாளிக்கும் பொருட்டு வெளியேறி வந்தார்.

பளிங்கு கற்கள் பதித்த தரையில் தன் வார்செப்பலை பதித்து நடந்து வந்தவர் அனைத்து ஊடகம் மற்றும் தொண்டர்களை பார்த்து அழைத்தவர் தன் உதட்டில் தேம்பி இருந்த புன்னகை ஒரு சிறிதும் குறையாமல், “கல்யாணம் நின்னு எல்லாம் போகல. யாரும் எதுவும் திரிச்சு சொல்ல வேண்டாம். என்னோட பொண்ணு மேல்படிப்பு படிக்க திடீர்னு சேதி வந்துச்சு. கல்யாணம் பின்ன படிக்கலாம்னு நானும், எங்கூட சேர்ந்தவங்களும் சொன்னதுக்கு மாட்டேன்னு சொன்னாங்க பாப்பா. கல்யாணம் பின்ன தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்றதுதான் என்னோட முதல் கொள்கை. அதனால இப்போவே கல்யாணத்த நிறுத்துங்க நான் இப்போவே போயி படிச்சுட்டு திரும்பி வர்றேன்னு சொல்லிட்டு சந்தோஷமாதான் கிளம்பி போனாங்க. என்னோட மாப்பிள்ளைக்கு கூட இதுல உடன்பாடுதான். அவரும் சரின்னு சொல்லித்தான் பாப்பா அப்ராட் போனாங்க. உங்களுக்கு சாட்சி வேணும்னா இதோ என் மாப்ள இங்கதான் நிற்குறாரு அவர கூப்ட்டு உண்மையக் கேளுங்க”,

தன் மாப்பிள்ளையை தன்னருகே அழைத்தவர் அவனை பேச சொல்ல,

“யெஸ். என்னோட பியான்ஷி என்கிட்ட பெர்மிஸன் வாங்கிட்டுதான் அப்ராட் போனாங்க. நீங்க யாரும் தேவையில்லாம எதுவும் பேச, எழுத வேண்டாம். கூடிய சீக்கிரம் அவங்க திரும்பி வந்துடுவாங்க. அவங்க வரவும் நாங்க கல்யாணம் பண்ணிப்போம்”, மணமகனாக இருந்த ஷ்யாம் யாரோ எழுதி குடுத்ததை போல் தன் வாக்கிய வரிகளை பேசி முடிக்க,

மீண்டும் கூட்டத்தில் சிறு சலசலப்பு.

“என்ன உங்களுக்கு இன்னும் எங்க மேல நம்பிக்கை வரலியா. இருங்க..”, என்று கூறிய திகழறிவன், தன்மகள் வெளிநாடு சென்றதற்கான சாட்சியை ஒரு நகலெடுத்து கொண்டு வந்து குடுக்க,

“அதானே முதலமைச்சர் பொண்ண அவ்ளோ சீக்கிரம் யாரும் கடத்திட்டு போக முடியுமா? நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோம். வாங்க எல்லாரும் கலைஞ்சு போகலாம்”, என்று கூட்டம் அனைத்தும் களைய ஆரம்பிக்க,

கூட்டத்தையும், தொண்டர்களையும் பார்த்து இருகை கூப்பி வணங்கிக் கொண்டிருந்த திகழறிவன் தன் வீட்டிற்குள் நகர்ந்துவிட, மாப்பிள்ளையானவனும், கருணை செல்வனும் அவரின் பின்னே ஓடிச் சென்றார்கள்.

தன்னறைக்கு வந்து கோவம் தீர மட்டும் சுவற்றில் எட்டி மிதித்தவர், கருணை செல்வனை அருகில் அழைத்து அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி அப்ப, தன் கன்னத்தை பற்றிக்கொண்டு பொத்தென்று கீழே சரிந்தார் அவர்.

“*****”, கெட்ட வார்த்தை போட்டு அதை நிரப்பிக் கொண்டவர், “அத்தனை பேர் கேள்வி கேட்குறான்கள்ள நான் வர்ற வரை அமைதியாவேதான் இருப்பியா? எதையாவது சொல்லி அந்த மீடியா, தொண்டர் மயிருங்க எல்லாத்தையும் உன்னால வெளிய அனுப்ப முடியாதா? அப்டியே இன்னொரு மிதி மிதிச்சேனா உன்னோட குடல், குந்தானி எல்லாம் வாய் வழியா வெளிய வந்துடும்”.

தன் காலை மேலே தூக்கி மீண்டும் கருணை செல்வனை, திகழறிவன் மிதிக்க போக,

“அய்யா சாமி இன்னொரு மிதி நீங்க மிதிச்சாலும் நான் செத்து போயிடுவேன். போதும் என்னை இதுக்கு மேல மிதிக்காதிங்க. வயசானவே பிபி, சுகர், கொலஸ்ட்ரால்னு எல்லாம் இருக்கு. நீங்க ஒன்னும் சொல்லாம விட்டதாலதான் நான் அந்த கூட்டத்து கிட்ட திணறுற மாதிரி போச்சு. இனி இந்த மாதிரி எங்கேயும், எப்பவும் திணற மாட்டேன். என்னை இந்த ஒருவாட்டி மன்னிச்சு விடுங்க. விட்டுடுங்க”,

திகழறிவன் காலைப்பற்றி கருணை செல்வன் கெஞ்ச,

“***** போய்தொலை. உன்னை விட்டு தொலையுறேன்”, அவரை எட்டி தள்ளியவர் கோபத்தோடு சென்று ஷோபாவில் அமர,

தன் வாயை இருகரம் கொண்டு மூடிக்கொண்டு தரையில் அமர்ந்திருந்தார் கருணை செல்வன்.

ஷோபாவில் அமர்ந்திருந்த திகழறிவன் மனம் அடிபட்ட புலியாய் சீற்றத்தோடு உறுமிக் கொண்டிருந்தது.

“ஐநூறு கோடி செலவுல ஏற்பாடு பண்ண கல்யாணம். கல்யாணத்தையும் நிறுத்தி, பொண்ணையும் கடத்தி.....”,

ஆஆஆஆ... என்று ஆத்திரத்தில் கத்தியவர், “உன்னை விடமாட்டேன்டா”, என்று காட்டு கத்தலாய் அந்த பங்களாவே அதிர மீண்டும் கத்தி உறும,

நடுகாட்டுக்குள் மூங்கில் குடிலில் நவீன மாடல் துப்பாக்கி, புதுவகை தோட்டாக்கள், கன்னிவெடி என தீவிரவாத பொருட்களை கடைபரப்பி இருந்த ஆத்ரேயன் இதழ் சற்றே இகழ்ச்சி கோணலாய் வளைந்தது.

“வாம் வெல்கம்”, என்று...

காதலன் வருவான்...
 




Last edited:

Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சூப்பர் எப்பி.... அதகளமா இருக்கு ஆரம்பமே.... பாப்போமே... இராட்சஷன்கிட்ட சிக்குன பாவை நிலை என்ன ஆகுதுனு...

அடேய் ஆத்ரேயா..... நீ ராவணனா.....பாப்போமே... உன்னோட குணத்தை அடுத்தடுத்து....
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,403
Reaction score
22,049
Location
Tamil Nadu
CollageMaker_20211110102511429.jpgCollageMaker_20211110112543960.jpgCollageMaker_20211110112630370.jpgCollageMaker_20211110112735109.jpgCollageMaker_2021111011292116.jpgCollageMaker_20211110113055493.jpgCollageMaker_20211110113233340.jpgCollageMaker_20211110113349777.jpg
இவ்ளோ படங்களில் எனக்கு ☝ அதுதான் பிடித்தது... உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கோ அதே வச்சிக்கோங்க...!​
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் வோவ் செம்ம செம்ம ஸ்டர்டிங் 🥰🥰🥰
ஆதி செம்மடா நீ, ஆன லைட் ஆ பயந்து வருது😳😳😳, அந்த பாம்பு என்னடா பண்ணுச்சி உன்ன🥺🥺🥺
வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Arambame amarkala iruke dai anda pasmbu ennada pannichi unnai, cm ponnaiye thukitane sema dil dan da unaku, nice update dear all the best.
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
B kaantha kathali yaaro🙄🙄


வாழ்த்துகள் 💐 💐 💐 💐

@ப்ரியசகி @Rainbow Sweety @AkilaMathan
வந்துட்டேன்

இப்படி எல்லாம் பயப்பட வைக்காதீங்க நானே பாவம்🙄🙄🙄 பாம்ப கொன்னுட்டான் படுபாவி 🙄🙄🙄

பிடிக்கலனு சொல்லுற பொண்ண கடத்துறது தப்பு டா

ஏன்மா இப்படி பயபடுறியே🙄🙄🙄🙄🙄 அவன தூக்கி போட்டு மிதி

பாவம் அவ்ளோ காசு செலவு பண்ணி கல்யாணம் நின்னுப்போச்சே

இவ்ளோ கஸ்ட்டபட்டு வந்தும் மாட்டிக்கிட்டாளே 🙄🙄🙄

உண்மையிலே தீவிரவாதியோ🙄🙄🙄🙄🙄 இவன் பயங்கரமான ஆளா இருக்கான்🙄🙄🙄

யாரு மேல கோபம் இவனுக்கு!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top