• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
ஸ்கூல் டீச்சர்னா சைட் அடிக்க கூடாதாமா..?
என்னடா இது வம்பா போச்சு....??
 




seethavelu

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
956
Reaction score
934
Location
vellore
நல்ல ஆரம்பம் (y)வெற்றி பெற வாழ்த்துக்கள் :love:
 




Pikachu

நாட்டாமை
Joined
Nov 7, 2021
Messages
32
Reaction score
28
Location
Salem
'ஆண்டவா! இது என்ன ராதாவிற்கு வந்த சோதனை!' என்று புலம்பிய படி மதரின் ரூமை நோக்கிப் போனாள் ராதா. கதவை லேசாகத் தட்ட அனுமதி கிடைத்தது.

"கம் இன்." எப்போதும் போல அந்தக் குரலில் இருக்கும் ஆளுமை இப்போதும் அவளைக் கவர்ந்தது.
"குட் மார்னிங் மதர்."
"குட் மார்னிங் ராதா. மீட் மிஸ்டர் அபி." கைகாட்டிய திசையில் திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். நீல நிற ஷேர்ட், ப்ளாக் ஆடி. கன கம்பீரமாக அங்கே அமர்ந்திருந்தது. இனம்புரியாத ஆனந்தத்தோடு,
"குட் மார்னிங் சார்." என்றாள்.
"குட் மார்னிங்."
'யப்பா! என்ன குரல் டா சாமி!' ஆழ்ந்த அழுத்தமான அந்தக் குரலில் சொக்கிப் போனாள் ராதா. சாரி சொன்னபோது கவனிக்கத் தவறிய குரல் இப்போது மூளையில் ஒட்டிக் கொண்டது.
'ராதா! ஒரு ஸ்கூல் டீச்சர் மாதிரி கொஞ்சம் பிஹேவ் பண்ணு.' மனச்சாட்சியின் குரலில் நிஜத்திற்கு வந்தாள் பெண்.

"அபி! ராதா இங்க கொஞ்ச நாளாத்தான் வேலை பார்க்கிறாங்க. இருந்தாலும் அவங்களோட பொறுமையை நான் ரொம்பவே பாராட்டுவேன். ஆத்மிகாக்கு இப்போ ராதா மாதிரி ஒருத்தங்க தான் பொருத்தமா இருக்கும்."
"ஆத்மிகா உங்க பொறுப்பு மதர். எனக்கு அதைத் தவிர வேற ஒன்னும் சொல்லத் தோணலை."

இவர்கள் பேச்சில் குழம்பிப் போனாள் ராதா. 'யாரந்த ஆத்மிகா? எதுக்கு இப்போ அந்தப் பொண்ணுக்கு என்னோட பொறுமை தேவைப்படுது?'
"ராதா!"
"சொல்லுங்க மதர்."
"சாரோட பொண்ணு பேரு தான் ஆத்மிகா."
'வாட்!' நாக்கு நுனிவரை வந்த கேள்வியை தொண்டைக்குள்ளேயே புதைத்தாள் ராதா. தனது டபுள் ஓ செவெனைத் திரும்பிப் பார்த்தாள்.

சூடம் அணைத்துச் சத்தியம் பண்ணினாலும் ஆறு வயதுக் குழந்தைக்குத் தகப்பன் என்று நிச்சயம் சொல்ல முடியாது.
நிச்சயமாக ஆறு வயதுதான் குழந்தைக்கு இருக்க வேண்டும். ஏனென்றால் அவள் வகுப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆறு வயதுதானே!

"இன்னைக்கு அட்மிஷனை முடிச்சிரலாம் அபி. நாளைக்கு நீங்க ஆத்மிகாவைக் கூட்டிக்கிட்டு வந்தாப் போதும்."
"ஓகே மதர். நீங்க எவ்வளவு பெரிய உதவி எனக்குப் பண்ணியிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியாது."
"விடு அபி. ஐ நோ எவ்ரி திங். பிஸினஸ்ல கான்ஸன்ட்ரேட் பண்ணு."
"தான்க் யூ மதர்." சொன்னவன் நிற்காமல் கிளம்பி விட்டான். வர்ண ஜாலங்களோடு ஆரம்பித்த அந்த நாள் கறுப்பு வெள்ளை ஆகிப்போனது ராதாவிற்கு.
* * *//////////////////////////////////

இரண்டு சிங்கிள் பெட்களுக்கு நடுவே லாம்ப் ஒளி வீசிக் கொண்டிருக்க ராதாவைப் புருவம் நெளியப் பார்த்திருந்தாள் அர்ச்சனா.
"ஆக... ப்ளாக் ஆடியில வந்திறங்கினதால அவன் உனக்கு ஹீரோ ஆகிட்டானா?"
"அர்ச்சனா! தப்பாப் பேசாத."
"எப்படி... எப்படி? நான் தப்பாப் பேசுறனா? கையில ஆறு வயசுக் குழந்தையோட நிக்குற அங்கிளை நீங்க சைட் அடிப்பீங்க, அது தப்பில்லை. அதையே நாங்க சொன்னா தப்பா?"
"அர்ச்சனா! ப்ளீஸ்... புரிஞ்சுக்கோ."
"எதைப் புரிஞ்சுக்கணும் ராதா? ஆன்ட்டிக்குத் தெரிஞ்சா உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க. என்னைத்தான் வகுந்திருவாங்க."

சொன்னவள் எழுந்து அமர்ந்து கொண்டாள்.‌ ஹாஸ்டலில் வந்து சேர்ந்த நாளிலிருந்தே இரு பெண்களுக்கும் நல்ல புரிதல் இருந்தது.
நட்பு என்பதையும் தாண்டி இரு குடும்பங்களும் கை கோர்த்துக் கொண்டன. அக்கறை, பாசம், அன்பு என அனைத்தும் அங்கு பரிமாறப்பட்டன.

"இதுக்குத்தான் காலா காலத்துல லவ் பண்ணணும், இல்லைன்னா வீட்டுல காட்டுற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டணும்னு சொல்லுறது." புலம்பித் தீர்த்தாள் அர்ச்சனா.

"இல்லை... நான் தெரியாமத்தான் கேக்குறேன்... அவ்வளவு பெரிய சென்னையில உனக்கு ஆளே கிடைக்கலியா? போயும் போயும் ஆறு வயசுக் குழந்தையோட அப்பாவை சைட் அடிச்சிருக்க? அவர் பொண்டாட்டிக்கு இது தெரிஞ்சா... அம்மாடியோவ்! இங்கப்பாரு ராதா... சில நேரங்கள்ல மனசு இப்படி சலனப்படுறது இயற்கை தான். ஆனா... அந்த நினைப்பை மூட்டை கட்டி குப்பையில போட்டுட்டு ஆன்ட்டி அனுப்புற வரன்ல ஒன்னை செலெக்ட் பண்ணு என்ன?"
சொல்லிவிட்டு அர்ச்சனா போர்வையை மூடிக்கொண்டாள். லாம்ப்பை சட்டென்று அணைத்தவள்,
"குட்நைட் ராதா." என்றாள்.
"குட்நைட் அர்ச்சனா." கிணத்துக்குள் இருந்து வந்தது ராதாவின் குரல்.

அர்ச்சனாவின் மனதில் கவலை அப்பிக்கொண்டது. இந்த ஆறு மாதகாலமாக ராதாவை அவளுக்குத் தெரியும். அலைபாயும் சிறு பெண்ணல்ல அவள். பொறுப்பான பெண்.

அவளே இன்று இப்படி ஒரு விஷயத்தைத் தன்வரை கொண்டு வந்திருக்கிறாள் என்றால்... விஷயம் கொஞ்சம் சீரியஸாகத்தான் இருக்க வேண்டும்.

"ஏன் ராதா? அவர் ஃவைப் இன்னைக்கு கூட வரலியா?" போர்வையை விலக்கி மீண்டும் கேட்டாள் அர்ச்சனா.
"இல்லை."
"உங்க ஸ்கூல்ல படிச்சாலே அவங்க ஸ்டேட்டஸ் என்னன்னு நமக்குச் சொல்லாமலே புரியுது. இதுல..."
"அர்ச்சனா! தப்புன்னு நல்லாவே புரியுது..."
"ஆ! புரியுதில்லை? அப்பப் பேசாம தூங்கு."
"சரிப்பா." சட்டென்று சம்மதித்துவிட்டுப் போர்வையை மூடிக் கொண்டாள் ராதா. தனக்கு முதுகு காட்டிப் படுத்திருக்கும் தன் தோழியைப் பாவமாகப் பார்த்தாள் அர்ச்சனா.

அத்தனை தூரம் தன் முடிவுகளை இலகுவில் மாற்றிக் கொள்ளும் ரகமல்ல ராதா. தன் ஆசை தவறென்று அவளுக்கு நிச்சயம் புரியும். ஆனால், அந்தத் தவறைத் திருத்திக் கொள்ளாமல் அதே புள்ளியில் நின்று விட்டால்?
தோழியின் எதிர்காலம் பயமுறுத்த கண்களை இறுக மூடிக்கொண்டாள் அர்ச்சனா.

திரும்பிப் படுத்துக் கொண்ட ராதாவின் விழிகள் கண்ணீரைச் சொரிந்தன. சொல்லத் தெரியாத வேதனை ஒன்று நெஞ்சை இறுக்கிப் பிடிக்க மௌனமாய் அழுதது அவள் மனது.
Ungaluku Black Audi Pudikuma Sis🤔....ella story la um iruku 🤩😊
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top